காமெடி+ செண்ட்டிமெண்ட் கோவி.கண்ணனின் அழுகாச்சி காவியம்(கடிதம்)

சில மாதங்களாக கடுமையான அலுவலக வேலை, என் குட்டி பையனோடு ஆட்டம், எனக்கு உருப்படி என தோன்றும் வேறு சில வேலைகள் அட எல்லாத்துக்கும் மேல பல நேரங்களில் யாருக்கு எழுதறோம்னே தெரியாமா ஜார்ஜ்புஷ்ஷூக்கு ஒரு கேள்வி, பில் கிளிண்டனுக்கு ஒரு சவால்ங்கற அளவுக்கு தி.நகர் முக்குட்டு சந்தில் நின்று கொண்டு ஜார்ஜ்புஷ்ஷீக்கு சவால் விடும் அளவிலேயே பல நேரங்களில் வலைப்பதிவு கட்டுரை எழுதுவதால் எல்லா எழவுக்கும் கருத்து சொல்ல நினைத்தாலும் அப்படியே எழுதாமல் போய்விடுவதுண்டு என்றாலும் பதிவுகளை கொஞ்சம் கொஞ்சம் தொடர்ந்து படித்து வரும் போது பல நேரங்களில் நமுட்டு சிரிப்போடு(எழுதுபவரின் ஹிப்போக்கிரசி எழவு தெரிந்து தொலைவதால்) படித்துவிட்டு கடந்து சென்றாலும் சில நேரம் எழுத தூண்டுகிறது.அப்படியாக எழுத தூண்டிய ஒரு விசயம் தான் விடாது கருப்பு குழுமத்திற்கு அண்ணன் கோவி.கண்ணன் எழுதிய காமெடி+ செண்ட்டிமெண்ட் கலந்த அழுகாச்சி காவியம்(கடிதம்).... ஹா ஹா அதில் கொஞ்சம் ஆக்ஷனும் காதலும் இருந்துவிட்டால் ஒரு மசாலா படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும்....

அண்ணன் கோவியாருக்கு வேண்டுமானால் அது எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியாகத்தான் முடிவடையும் இந்த படம் என்று தெரிந்த கிளைமாக்ஸ் தான்....

அண்ணன் கோவி.கண்ணன் கடிதம் ஆரம்பமே செம காமெடி விடாது கருப்பு பதிவை படிச்சிதான் கோவி அண்ணன் பெரியாரை தெரிஞ்சிக்கிட்டாராம், அய்யோ அய்யோ தாங்கலை (சந்திரமுகி பிரபு ஸ்டைலில் உச்சரிக்கவும்)என்ன கொடுமை கோவியாரே.... நல்ல வேளை இதையெல்லாம் கேட்க பெரியார் உயிரோடு இல்லை.... பெரியாரையும் கருப்பு மூர்த்தியையும் வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.... கோவி அண்ணே கருப்பு பதிவுக்கு இன்னொரு சர்ட்டிபிகேட் கொடுத்து இருக்கார் அது படா காமெடி...அந்த சர்ட்டிபிகேட்டை கீழே தந்திருக்கேன்...

//இன்றைய தேதிகளில் பெரியாரின் கொள்கைகளை, சமுக நீதி, பகுத்தறி, மூடப்பழக்கங்களைச் சாடுபவர்களாகவும், எண்ணற்றோர் எழுதுகிறார்கள். நீங்கள் எழுதிய காலங்களில் அப்படி எழுதுவர்கள் மிகச் சிலரே இருந்தனர். ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக பார்பனியம் குறித்து எழுதினால் தங்களை முத்திரை குத்திவிடுவார்கள் என்று பலர் இலைமறை காயாக தொட்டு எழுதியவற்றை, நீங்கள் உடைத்தே எழுதினீர்கள்//

கோவி அண்ணே விடாது கருப்பு பதிவில் என்னன்னே இருக்கு, ஒரு முறை நன்னா ரீவைண்ட் செய்து பாருங்கன்னே.... விடாது கருப்பு பதிவு பல பதிவர்களின் சாதியை சொல்லியும் அவர்கள் அம்மா குடும்பத்தை திட்டுவதற்குமே பயன்பட்டது, இணையத்தில் கிடைக்கும் விடுதலை, உண்மை, கீற்று தளங்கள், இது தான் உண்மை மற்றும் சில வலைப்பதிவுகளிலிருந்து திராவிட தொடர்பான கட்டுரைகளை காப்பி பேஸ்ட் முறையில் ஒட்டப்பட்டுள்ளது, இதற்கு பின்னாலும் ஒரு அரசியல் ஏற்கனவே என்னோட பதிவில் சொன்னது தான்

//முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணத்திலிருந்து மூர்த்தி நீக்கப்பட்ட போது ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் கேட்க நாதியில்லாமல் வெளியேற்றப்பட்டான் மூர்த்தி, கடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போலி மூர்த்தி பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதும் விடாது கருப்புவாக வலைப்பதிவுலகின் மூர்த்தியின் ரீ-எண்ட்ரி தனது சொந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள பெரியார் பெயரை சொல்லிக்கொண்டும் பெரியாரின் தொண்டனாகவும் நடந்தேறியது.

மிக மேலோட்டமான மொக்கையான விவாதகளங்கள் நடத்தி வரும் காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சரி, அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி வெகுசன ஊடகங்கள் திராவிட, சபால்ட்டர்ன் கதையாடல்களுக்கு எந்த விதமான இடமும் அளிக்காமல், தம் இனத்தின் நலனுக்கான, தம் சாதிக்கான கருத்தாக்கங்களை, வேறு யாரும் ஊடகத்துறையில் வந்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊடக ஒழுக்கத்தை மீற முடியாதவாறு பொதுப்புத்தியாக மக்கள் மனதில் புகுத்திக்கொண்டிருக்கும், இருக்கின்ற இந் நிலையில் இந்த இணைய வெளி ஏற்படுத்தியிருக்கும் சுதந்திரவெளியில் மிகப்பெரிய தொடர் விவாதங்கள், உரையாடல்கள், கதையாடல்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த சூழலில் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஆபாசமாக பேசி வெகுசன ஊடகங்கள் மறுத்திருக்கும் ஒரு விவாத களத்தை

இணையத்தில் சாத்தியமாக்கியிருக்கும் விவாத, உரையாடல் சூழலை நாசமாக்கும் மூர்த்தியின் போலி செயல்பாடுகள் விடாது கருப்பு பதிவில் நடந்தேறியதே....கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இணைய ஊடகத்தில் பெரியார் சிந்தனைகள் மற்றும் வெகுசன ஊடகத்தில் பேசப்படாத விடயங்கள் பலராலும் பேசப்பட ஆரம்பித்த நேரத்தில் கருப்பு என்ற பெயரில் எல்லோரையும் ஆபாசமாக எழுத ஆரம்பித்த மூர்த்தியினால் பார்ப்பன சனாதான வாதிகள் பெரியார் பெயர் சொல்லிக்கொண்டு ஆபாச களஞ்சியமாக திகழ்ந்த மூர்த்தியின் பின்னால் ஒளிய ஆரம்பித்தார்கள், இணைய ஊடகத்தில் வெகுசன ஊடகத்தினால் மறுக்கப்பட்ட மாற்று சிந்தனைகள் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் ஆபாச தாக்குதல்கள் நடத்தி இவர்கள் இப்படித்தான் என்று பலரையும் நினைக்க வைத்து மாற்று கருத்தாளர்களின் மீது ஒரு சந்தேகத்தை விளைவித்தது மூர்த்தியின் ஆபாச கூத்துகள் என்றால் அது மிகையாகாதா..... இப்படிப்பட்ட கருப்பு மூர்த்திக்கு அண்ணன் கோவியார் கொடுத்த சர்ட்டிபிகேட் தான் அது....


அடுத்ததாக கோவி அண்ணன் கடிதத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்
//முன்னாள் பதிவரும் (திரு மூர்த்தி) அதில் உறுப்பினராக இருக்கிறார் என்பதை முன்பே ஒரு பதிவர் சொன்னபோது தெரிந்து கொண்டேன். என்னுடன் விடாது கருப்பு பதிவு சார்பாக பேசியவர் பதிவர் அவர்தான் என்பது பின்பு தான் தெரிந்தது. நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் அவரை நான் சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு அவரும் என்னுடன் சாட்டில் உரையாடி இருக்கிறார்.
//

//போலி விவகாரத்தில் எனது கருத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தேன். //
கோவி அண்ணன் போலிவிவகாரத்தில் வெளிப்படையாக என்ன கருத்து சொல்லியிருந்தாருன்னு ஒரு சின்ன ப்ளாஷ் பேக் போயிடலாமா?

http://govikannan.blogspot.com/2007/09/blog-post.html

பாதிக்கப்பட்ட நண்பர்கள் சிலர், முத்தமிழ்மன்ற மூர்த்தி தான் போலி என்று சொல்கிறார்கள். தம்மீது குற்றம் இல்லையென்று மூர்த்தியோ, அவரை குற்றம் சொல்லும் எனது நண்பர்களோ ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காவல் துறை உதவியை நாடி இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றே விரும்புகிறேன்.

இதில் கோவி அண்ணனுக்கு மூர்த்தி தான் போலி என்று சிலர் சொல்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.... அதற்கு அடுத்தபடியாக செல்லா பதிவில் மூர்த்தியின் 'நாத்த' தமிழ் ஆடியோ வெளியிடப்பட்டது...., நண்பர்களை ஆதாரங்களை எடுத்துக்கொண்டு காவல்துறை உதவியை நாட சொல்லியிருக்கும்(காவல்துறையை நாடுவதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் என கோவி அண்ணனே அந்த பதிவில் சொல்லியிருக்கிறார் என்பது வேறு விசயம்) இந்த ஆடியோ ரிலீஸில் ஆபாச பேச்சு பேசிய மூர்த்தியின் குரலை பலமுறை மூர்த்தியோடு போனில் உரையாடியிருக்கும் கோவி அண்ணனால் கண்டுபிடிக்க இயலவில்லையா?, மூர்த்தியின் குரலை கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை, ஒரே ஒரு முறை கேட்டால் போதும் எப்போதும் மூர்த்தியின் குரலை கண்டு கொள்ள இயலும், மூர்த்தியின் குரல் கொஞ்சம் கீச்சு குரலாக சின்ன பையன் குரலா அல்லது கொஞ்சம் கொஞ்சம் பெண் குரலா என்று கண்டுபிடிக்க இயலாத அளவிற்கான ஒரு குரல் மூர்த்தியின் குரல், மூர்த்தியின் குரலை குறை சொல்ல வேண்டுமென்றோ குறிக்க வேண்டுமென்றோ நான் இதை சொல்லவில்லை, மூர்த்தியின் குரலை ஒரு முறை கேட்டிருந்தாலே போதும் பிறகு எப்போதும் மிக எளிதாக மூர்த்தியின் குரலை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாமென்பதற்காக சொன்னேன்.....

பி(பு)ன்னூட்ட பாலா எப்போது கோவி அண்ணன் பதிவில் பின்னூட்டம் போட்டாலும் "ஜெயராமன்" "ஜெயராமன்" என்று பி(பு)ன்னூட்ட பாலா விளிக்கும் அண்ணன் கோவியாருக்கு அந்த ஆடியோ ரிலீஸ்க்கு பிறகும் மூர்த்தி தான் அதை பேசியது என்று தெரியாமல் போய்விட்டதோ? ஏகப்பட்ட கருத்துகளை சொல்லும் கோவி அண்ணன் ஒரு இடத்தில் கூட போலி மூர்த்தி பற்றி பேசவில்லையே? இப்போது கேட்கிறேன் அந்த ஆடியோவில் இருக்கும் குரலும் உங்களோடு பேசிய விடாதுகருப்பு(எ)சதீஷ்குமார்(எ)போலி மூர்த்தியின் குரலும் ஒன்றா இல்லையா? என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? கோவி அண்ணன் மூர்த்தியின் குரலும் அந்த நாத்த தமிழ் ஆடியோவில் இருக்கும் குரலும் ஒன்று என ஒத்துக்கொள்வாரோ என்னமோ ஆனால் மூர்த்தியின் வீட்டில் அந்த ஆடியோவை சில நிமிடங்கள் மட்டுமே கேட்டு ஆமாம் மூர்த்திதான் அது என்று ஒத்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு மேல் ஆடியோவை கேட்க முடியாமல் நிறுத்தி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்!


http://karuppupaiyan.blogspot.com/2007/07/blog-post_4473.html
என்ற பதிவிலும் மேலும் பல விடாது கருப்புவின் பதிவுகளிலும் தலித்களின் மீது மிக மோசமான சாதி வெறி தாக்குதல் பின்னூட்டங்களில் நடத்தப்பட்டிருக்கும்.... அதில் சில கீழே

வெங்காயம் said...
இத்தனைநாள் தீண்டாத் தகாதவனா பாப்பான் வெச்சிருந்தான்.
நீங்க இந்த அளவுக்கு இறங்கி வந்து இவன்களுக்காக போராடுகிறீர்களே அதுவே பெரிய விஷயம்.நீங்க போங்க சார். அவனுங்க பாப்பானிடம் அடிபட்டு மிதிபட்டு செருப்படி வாங்கினால்தான் திருந்துவானுங்க

அழகரசன் said...
இந்த தலித்து நாதாரிக்காக நீங்க இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்க வேண்டாம். உங்க ஜாதி என்ன இந்த பரதேசியின் ஜாதி என்ன? நீங்க இவனுக்காக போராடினால் இவன் டோண்டுகூட தொடுப்பு

வெச்சிருக்கான்.

சிவா said...
தியாகு என்ற பரபோக்கி நாதாரி

செந்தில் said...
சார்,
உயர்ந்த ஜாதியான நீங்க ஏன் இந்த பர நாய்களுக்காக கஷ்டப்படுறீங்க? அவனுங்க பாப்பானிடம் ....

தனக்கு தானே போட்டுக்கொண்ட பின்னூட்டமோ அல்லது இந்த மாதிரி பின்னூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் மூர்த்தியின் ஆதிக்க சாதி பொறுக்கித்தனம் வெளிப்படையாக தெரிகிறதே இதற்கு அண்ணன் கோவியார் என்ன கருத்து சொல்ல விழைகிறார்? விடாது கருப்பு பதிவில் இதையெல்லாம் படித்து தான் கோவி அண்ணன் பெரியாரை பற்றி தெரிந்து கொண்டார் போலும் "என்ன கொடுமை கோவியாரே"( சந்திரமுகி பிரபு ஸ்டைலில் உச்சரிக்கவும்)


செல்லாவை தலித் கம்ணாட்டி என்று மூர்த்தி திட்டியபோது அவர் வெளியேறுகிறேன் என்று போட்ட பதிவில் நீங்கள் இட்டம் பின்னூட்டம்
ஆகா அற்புதம்...

"ஒருவரை 'பாப்பானே' என்று விளிப்பது கூட இழிவு சொல் ஆகிவிட்டது என்று புரிந்தால் சரி.
நீங்கள் வேண்டுமானால் ஒரு பிராமணரை 'பாப்பான்' என்று சொல்லிப் பாருங்க நிச்சயம் கோவப்படுவாங்க."


இதுக்கு என்னாங்கன்னா அர்த்தம்? தலித் கம்னாட்டி என்பதும் பார்ப்பான் என்பதும் ஒன்றுதான் கண்டுக்காதே போ என்றா? எழவு எனக்கு ஒரு மாதிரி குன்சா புரிஞ்சிருக்கு நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டா நான் புரிஞ்சிக்கிட்டதுல எதும் மாற்றம் இருந்தா மாத்திக்கிடலாம் பாருங்கண்ணே...

அடுத்ததா கோவி அண்ணன் கடிதத்தின் செண்ட்டிமெண்ட் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் பகுதி வருது

//என் பிறப்பை இழிவு செய்யும் படி குறிப்பிட்டு தாறுமாறாக எழுதி இருந்தாலும் நான் வருத்தப்பட்டு இருக்கமாட்டேன். ஆனால் அதில் எனது சாதி இதுவென்று ஊகமாக குறிப்பிட்டு, அதுவும் சில நண்பர்களிடம் நெருக்கமாக பழகுவதால் இந்த சாதியைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான் என்பது போல் எழுதப்பட்டு இருந்தது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.
//
ஏய் என்னாங்கப்பா இது அம்மாவை பத்தி திட்டினா கவலைப்படமாட்டேன் ஆனா என் மேல சாதி முத்திரை குத்தினா மட்டும் காயப்பட்டுடுவேங்கறது என்னாங்கய்யா சீன் மேல சீன் போடுறாங்க இதென்ன புது ட்ரெண்டா?

அட ஆமாம் கோவி அண்ணே இப்போதான் ஒன்று நினைவுக்கு வருது, மேட்டர் என்னனா போலி பிரச்சினை நடக்கும் போது "என் நண்பர்களின் தாயும் என் தாய் போலத்தான் நினைக்கிறேன்னு" சொல்லியிருந்தீங்க.... அட எத்தனையோ மின் மடல் மூர்த்தி என்னை வன்னிய தே. மகனே என்று ஆரம்பித்து தான் எழுதியிருப்பான்(CC யில் நீங்களும் உண்டு என்பதை கடிதத்திலேயே பெயர் குறிப்பிடாமல் சொல்லியிருந்தீரே) அப்போதெல்லாம் நீங்கள் மூர்த்தியை என்ன கடிந்து கொண்டீர்கள் என்றோ ஏன் சமாதானமாக போ என்று சொன்னார் அதுக்கப்பறமும் பேட்ச்சப் வேலை பார்த்தார் ஆனால் இங்கே என்னடான்னா "என் நண்பர்களின் தாயும் என் தாய் போலத்தான் நினைக்கிறேன்னு" வேற டயலாக் விடுறாரே அப்போ ஏன் அவருக்கு ஒன்றும் ஆகலையா என்று நினைத்திருந்தேன்,குழம்பினேன் இப்போ புரிந்துவிட்டது உங்க பிறப்பை இழிவு செய்யும் படி குறிப்பிட்டு தாறுமாறாக எழுதி இருந்தாலே நீங்கள் கவலைப்பட மாட்டீங்கங்கற போது மத்தவன் குடும்பத்தை பற்றி எழுதியதெல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா என்ன?

மாயவரத்தான் மாயவரத்தான்னு ஒரு பதிவர் இருந்தாரே தெரியுமான்னே, அவருக்கும் நமக்கும் பதிவு உலகில் ஏழாம் பொறுத்தம், அப்படியே எல்லாத்துக்குமே எனக்கு ஏட்டிக்குப்போட்டியான கருத்து கொண்டவர் இந்த விடாது கருப்பு தான் மூர்த்தி என்று தெரிவதற்கு முன்னால் விடாது கருப்பு திராவிட தமிழர்கள் குழுமத்தில் இணைந்து பின் ஓரிரு முறை என்னிடம் ஜிடாக்கில் பேசினான், மாயவரத்தானை பற்றி மிக அசிங்கமாக பேசினான், அப்போதே அவனை எச்சரித்துவிட்டு அவனுடைய சாட் ஐடியை ப்ளாக் செய்துவிட்டேன்...

கடைசியாக கிளைமாக்ஸ் படத்துலலாம் ஹீரோ வசனம் பேசுவாரே? அது மாதிரி அண்ணன் கேள்விக்கணைகளால் துளைத்திருப்பார்....

//நானாக இதுவரை எந்த பதிவரிடமும் என் சாதி 'இது' என குறிப்பிட்டது இல்லை. விடாது கருப்பு பதிவில் என்னை சாதி சொல்லி இழிவு படுத்தியது ஏன் ? இன்னும் பல பதிவர்களுடன் பழகுகிறேன். அவர்களில் இருவர் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் நானும் அவர்களின் சாதியை சேர்ந்தவர் என்பீர்களா ?//

//நண்பர் மகேந்திரன் மீது திடீரென்று சாதி வெறி என்று முத்திரை எழுதியது ஏன் ? என்று விளக்கம் கேட்க கருப்பு குழுவை தொடர்பு கொண்டேன். //

இதோ இந்த பதிவில் இந்த இடம் வரை நானும் நீங்களும் பொதுவில் வைத்தவைகளை பற்றி மட்டுமே பேசியிருக்கேன், தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டதையோ நீங்கள் வெளிப்படுத்தாத எதைப்பற்றியும் நான் பேசவில்லை (அப்படி தனிப்பட்ட முறையில் சில சொந்த கதைகளை தவிர பெரிய ரகசியம் எதுவும் பேசவில்லை என்பது வேறு கதை).... எனக்கு தனிப்பட்ட முறையில் கேட்க நினனத்த விசயங்கள் சந்தேகங்கள் என எந்த ஒரு விசயத்தையும் இந்த பதிவில் பேசவில்லை ஆனா இந்த மகேந்திரன் விசயத்துக்கு மட்டும் கொஞ்சம் நாம தனிப்பட்டு பேசிக்கொண்ட ஒரு விசயத்தை சொல்றேன்.....

கோவி அண்ணே உண்மையாவே உங்களுக்கு மகேந்திரன் மேல சாதி வெறி என்று முத்திரை எழுதியது ஏன்னு தெரியலையா? இதுக்கு விடையை சில மாசத்துக்கு முன்ன நாம பேசிக்கிட்டு இருந்த போது

சொன்னேனே..... ஹா ஹா கோவி அண்ணா கொஞ்சம் ப்ளாஷ் பேக் சக்கரத்தை சுற்றிவிடுங்க..... ட்ரொய்ங்ங்ங்ங்ங்

ஹலோ ஸ்டாப் ஸ்டாப்...இடம் வந்தாச்சி.....

"உங்கள் முன்னால் நண்பர் மகேந்திரனை வன்னியனாக பார்க்கவில்லையே"

(கோவி அண்ணனுக்கு எப்பவுமே என்னன மூர்த்தியின் முன்னாள் நண்பர் என்று சொல்வதில் அலாதி பிரியம் ஹா ஹா அதில் என்ன 3 தடவை ஹாய் சொல்லி சில நிமிடங்கள் பேசியிருந்தா நண்பன்னா )நான் சந்தித்தவர்கள் அனைவருமே என் நண்பர்கள் தான்) சரி அதைவிடுவோம் மேட்டருக்கு வருவோம் "உங்கள் முன்னால் நண்பர் மகேந்திரனை வன்னியனாக பார்க்கவில்லையே" என்று நீங்கள் கேட்டதற்கு நான் சொன்ன பதிலை கொஞ்சம் பாருங்க

"me: அதைத்தான் நாணும் சொல்றேன் போலி பிரச்சினையிலும் டோண்டு பிரச்சினையிலும் மூர்க்கமாக நான் எதிர்க்கிறேன் மகியை போலியை திட்டியும் டோண்டுவை போலி பிரச்ச்னைய்ல் ஆதரித்தும் ஒரே ஒரு பதிவு போட சொல்லுங்கள் அப்போதே மகி வன்னிய பொறம்போக்கு என்று வசைபாடப்படுவார்"

என்று மூர்த்திக்கும் மகிக்கும் முட்டிக்குதோ அன்னைக்கு மகி ஜாதிவெறியன் என்று வசைபாடப்படுவார் என்று சொல்லியிருந்தேன் அப்போ நம்பலை நீங்க! இப்போ?

கோவியாரை ஒருமையில் பேசிவிட்டு வைத்துவிட்டானாம்... கோவி அண்ணன் வருத்தப்பட்டு எழுதியிருக்கார் போலும் அண்ணன் கோவியாருக்கு வேண்டுமானால் அது எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியாகத்தான் முடிவடையும் இந்த படம் என்று தெரிந்த கிளைமாக்ஸ் தான்.... மூர்த்தியை பொறுத்தவரை பழகியவன் பழகாதவன் தெரிந்தவன் தெரியாதவன் என்று எந்த கணக்குமில்லை.... முட்டிக்கொண்டால் அம்மாவின் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவான்....


சரி படம்னா ஒரு மெசேஜ் வேணுமில்லையா? கோவி அண்ணன் அதையும் வச்சிருந்தார்


//அந்த நண்பருக்கும் எனக்கும் தனிப்பட்ட பகைமை எதுவும் இல்லை, இருந்தாலும் கருப்பு குழுவுடன் தொடர்பு இருந்ததால் என்னுடன் நட்பு பாராட்ட முடியாது என்று நினைத்திருக்கலாம். அவருக்கு எனது இரட்டை நிலைப்பாடு பிடிக்கவில்லை என்பதால் அவரது செயலில் இருப்பது அவரளவில் ஞாயம் என்றே நினைக்கிறேன். கோவிலில் இருக்கும் கடவுளுக்கு முன்பு நல்லவர் கெட்டவர் சமம் என்பார்கள். அது ஒருபக்க ஞாயம் ? நல்லவனும் கெட்டவனும் உனக்கு ஒன்றா ? என்று எந்த கடவுளையும் யாரும் கேட்பதில்லை. நான் கடவுள் இல்லை. கடவுள் தன்மை என்று கற்பனையாக கூறப்படுவையில் ஓரளவு சாத்வீகமும் இருக்கிறது, அந்த தன்மை எனக்குள்ளும் வளர்த்துக் கொள்ள முயன்று வருகிறேன்.
//

சமமான இரண்டை சமமற்று நடத்துவது எத்தனை அய்யோக்கியத்தனமோ அத்தனை அய்யோக்கியத்தனம் சமமற்ற இரண்டடை சமமாக நடத்துவதும்..... அது கடவுளாகவே இருந்தாலும்.... நீங்கள் எல்லோரையும் சமமாக நடத்தி நன்றாக இருங்கள்?


எழவு இந்த போலி மூர்த்தி பிரச்சினையில் ஏற்கனவே நண்பர் சுகுணாவுக்கு கடிதம் எழுதினேன், இப்போ உங்களுக்கு.... இந்த வேலையில்லாத வெட்டி வேலையில் இன்னும் யாருக்கும் பதிவு,கடிதம் எழுத வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கும் சூழ்நிலை வர வேண்டாமென மிகவும் ஆசைப்படுகிறேன்....

பெரியார் சொன்னதில் முதன்மையானது சுயமரியாதை.... முதலில் சுயமரியாதையோடு இருக்கலாம் பிறகு பார்ப்பனியத்தில் ஆரம்பித்து மற்ற எல்லாவற்றையும் சிக்கு சிக்கு சிக்குன்னு புடுங்கலாம்....


வேலை அதிகம் பின்னூட்டமெல்லாம் உடனே உடனே வெளியிட இயலாது..... பார்ப்போமா!!!!!!! பை..........

'தை' இது கவி'தை' திருவிழா - தை இதழ் இணையத்தில் வெளியீடு'தை' இது கவி'தை' திருவிழா...

உழைப்புக்கவுச்சியற்ற ஒரு சொல்லும்
கவிதை தராது
தமிழ்நெடுக உழைப்புக்கவுச்சி
இன்னும் இன்னும் அது கவிதை தரும், தந்து
கொண்டேயிருக்கும்...


'தை' இது கவி'தை' திருவிழா, பாவலர் அறிவுமதி அவர்களின் 'தை' காலாண்டிதழின் மூன்றாம் இதழ் தமிழ்வெளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது