திமுக தலைவர் பதவி பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டதுஇன்று திமுக தலைவர் பதவி வழக்கம் போல பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டது...

என்ன இருந்தாலும் திமுக வின் உட்கட்சி சனநாயகம் சும்மா தூள் தான், இதே பாருங்க அதிமுகனா பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமா செல்வி ஜெயலலிதாவுக்கு, பாமக தலைவர் பதவி முதலில் தீரன் அப்புறம் கோ.க.மணி அது யாரா இருந்தாலும் மருத்துவரய்யா கை காண்பிப்பவருக்கு தான், ஆனா பாருங்க திமுக தான் உட்கட்சி சனநாயகத்தை பேணும் ஒரே கட்சி, கலைஞரை எதிர்த்து தலைவர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யலைன்னா கலைஞர் என்னங்க செய்வார்... எப்படியோ உட்கட்சி சனநாயகத்தை காப்பாத்திட்டாங்க...

ஆமாம் மூணு வருசம் முன்னால தலைவர் தேர்தல் அன்னைக்கு அறிவாலயம் பரபரப்பா இருந்ததாமே? சேலம் வீரபாண்டியாரால... இன்னைக்கு ஒன்றுமில்லையா?

படிக்க தட்ஸ்டமில் செய்திகள்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவராக 10வது முறையாக முதல்வர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக அன்பழகனும், புதிய பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக உள்கட்சித் தேர்தல்கள் நடந்து வருகின்ரன. இன்று தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகன், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களில் மட்டும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடியது. கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அதில், தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக அன்பழகன், பொருளாளராக ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மூன்று பேருக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதிக்கும், அமைச்சர் அன்பழகனுக்கும், மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.

பின்னர் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக முன்னணியினர், இயக்குநர் பாக்யராஜ், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று மூன்று தலைவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், அமை‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி ஆ‌கியோ‌ர் கா‌லி‌ல் ‌விழு‌ந்து ஆ‌சி பெ‌ற்றா‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன்.

கலைஞரை நம்பினார் கைவிடப்படார்?

கலைஞரை நம்பினார் கைவிடப்படார்?இன்று

கலைஞர் டிவி சரத் ரெட்டி....நாளை

ஆ.... ராசா??


????என்னது நேற்றா? ஸாரி லிஸ்ட் போட்டு மாளாது.... அவ்ளோ இருக்கு

கலாச்சார பாசிஸ்ட்களின் டிவியில் சாருநிவேதிதா

ஒன்னுமில்லை சாருநிவேதிதா மக்கள் தொலைகாட்சியில் வரும் புத்தாண்டு தினத்தன்று காலை பத்து மணிக்கு சாரு நிவேதிதா, தமிழ்ச் சமூக, கலாச்சார, இலக்கியச் சூழல் பற்றிப் பேசுவார் என்று அவர் தளத்தில் அறிவுப்பு வந்துள்ளது...

பாமக வின் கொள்கைகள் தாலிபான் கொள்கைகள் என்றும் மருத்துவர்.இராமதாசு அவர்களின் குடி பற்றிய எதிர்ப்புக்கும் இன்ன சில கொள்கைகளுக்கும் கலாச்சார பாசிஸ்ட்(மிகசரியாக இந்த வார்த்தையை சாரு பயன்படுத்தினாரா என்று நினைவில்லை ஆனால் அவர் இணையத்தில் நேரமெடுத்து தேடினால் கிடைக்கும் எந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று) என்றும் கூறியவர்களின் இடத்திலேயே சென்று பேசப்போகிறார், என்ன பேசியிருக்கிறார் என்ற ஆவலுடன் பார்க்க உள்ளேன்...

சிங்கையில் மக்கள் தொலைகாட்சி வருவதில்லை எனவே யாராவது அன்பு நண்பர்கள் பதிந்து வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சி

அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை திமுகவினரின் நிலபறிப்பு ரவுடியிசம்

ஒவ்வொரு முறை திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவிற்கு ஆதரவாகவும் வைக்கப்படும் ஒரு முக்கிய விமர்சனம் திமுக வந்தால் ரவுடியிசம் தலைதூக்கிவிடுமென்பது, என்னமோ அதிமுகவிலோ பிற கட்சிகளிலோ ரவுடிகளே இல்லாத மாதிரி, அப்போதெல்லாம் எதிர்வாதமாக வைப்பதென்னவோ திமுக காலத்தில் என்கவுண்டர்கள் செய்யப்பட்ட ரவுடிகளின் எண்ணிக்கை அதிமுக காலத்தில் செய்யப்பட்ட என்கவுண்டர்களை விட அதிகம், என்கவுண்டர்கள் மீதான கடும் விமர்சனமிருந்தாலும் திமுகவினர் காலத்தில் ரவுடியிசம் என்று சொல்வதெல்லாம் பார்ப்பன சதி, எட்செட்ரா எட்செட்ரா என நம்பியிருந்தவர்களில் நானும் ஒருவன்.

முதலில் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மீதான நிலபறிப்பு ஆட்கடத்தல் மோசடி வழக்கு, 50 கோடி சொத்தை ஆட்டைய போட நினைத்த அமைச்சர், தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய எதிர்தரப்பு(தகவல்கள் எல்லாம் அவர்கள் எந்த வம்புதும்புக்கும் போகாதவர்களாகவே தெரிகின்றது)அதை தொடர்ந்து அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்ததாக வீரபாண்டி ஆறுமுகம் மீதான நிலபறிப்பு மோசடி , வழக்கு, அதை எதிர்கொள்ள பேரம்பேசப்பட்டது, இரு அமைச்சர்கள் விசயத்தில் எதிர்தரப்பால் மிரட்டல்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போன வாரம் நக்கீரனில் திமுக எம்.எல்.ஏ வும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருமான செங்குட்டுவன் 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை அடியாட்கள் துணையோடு 23 இலட்சத்திற்கு ஆட்டைய போட்டுள்ளார் என குற்றசாட்டு.


வலைப்பதிவிலும் கூட கோ.ராகவன் சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள் அவரது சொந்தக்காரர்கள் நிலத்தை பெரிய இடத்து பேரன்கள் ஆட்டையை போட்டது பற்றி இப்படி எழுதியுள்ளார்
...
சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.

காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.
...


அமைச்சர்கள் 50 கோடி ரூபாய் நிலத்தை ஆட்டைய போட்டால் எம்.எல்.ஏ 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்துள்ளார்கள், இதெல்லாம் கோடி ரூபாய் விசயங்கள் மேலும் அமைச்சர் எம்.எல்.ஏ க்கள் தொடர்பானவை எனவே பத்திரிக்கையில் வந்துள்ளன.

ஆனால் கவுன்சிலர் தொடங்கி இன்னும் ந.செ., கி.செ, வ.செ என திமுகவின் ஏதோ ஒரு 'செ'வை போட்டுக்கொண்டு நடுத்தரவர்கத்தினர்கள் சிறுக சிறுக சேர்த்து ஒரே சொத்தாக இருக்கும் சில இலட்ச ரூபாய் வீட்டு மனைகளை ஆட்டையை போட ஆரம்பித்துள்ளனர், காவல்துறைக்கு சென்றால் கேஸ் கொடுக்க 5,000 ரூபாயில் ஆரம்பித்து ஒரு 20ஆயிரம் ரூபாய் செலவுக்கு பின் திமுக கவுன்சிலர்கள் முன்னிலையில் ஒரு முப்பது பேருடன் கட்டைப்பஞ்சாயத்து நடக்கும், பிறகென்ன கால்வாசிக்கும் குறைவான சொற்ப விலையில் நிலத்தை பறிகொடுத்து அந்த நடுத்தர வர்கத்தினர் மேலும் தொல்லைகள் வராமல் இருந்தால் போதும் என நொந்து வருவார், இவைகள் எல்லாம் எங்கோ கேள்விப்பட்டோ பத்திரிக்கையில் படித்தோ சொல்லவில்லை, எனக்கு தெரிந்த இடங்களிலேயே நடந்துள்ளது. மேற்கொண்டு வேறு தளங்களில் பிரச்சினையை எடுத்து செல்ல உதவ தயாராக இருந்தும் அவர்கள் போதுங்க இதற்கே ரொம்ப பிரச்சினையாகிவிட்டது சனியன் இதோட போனா போதும் என்று அவர்கள் எதற்கும் தயாராக இல்லை.

அரசியல்வாதிகள் அரசு நிலத்தையும் பொறம்போக்கு நிலத்தையும் தான் ஆக்கிரமிப்பார்கள் என்றிருந்தது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பணக்கார தனியார் நிலங்கள், பிரச்சினைக்குறிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது ஆனால் இப்போது கருணாநிதியின் திமுக ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை எந்த வில்லங்கமும் இல்லாமல் பக்கா டாக்குமெண்ட்டுகளோடு இருக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளனர்.

50கோடி சொத்தை 5 கோடி செலவு செய்தாவது காப்பாற்றிடலாம் என்பவர்கள் வழக்கு பத்திரிக்கை என செல்கிறார்கள், 5 இலட்ச ரூபாய் சொத்துக்கு வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த, அதுவும் சத்தம் போட்டு சாபம் கொடுக்க முடியாமல் வாய்க்குள்ளேயும் வீட்டுக்குள்ளேயும் வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த சாதாரண நடுத்தரவர்கத்தின் சேமிப்பு நிலங்களை பிடுங்கி தின்னும் இந்த பிணம் தின்னும் ஈனத்தொழிலுக்கு
இவர்கள் எல்லாம் ஏதாவது -----(Fill in the blanks).

ஆனாலும் என்ன பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவினரின் இந்த ரவுடித்தனத்தையும் மறைக்கலாம் வாங்க....

அறிவுகெட்ட முண்டம் செந்தழல் ரவி - ரொம்ப நல்லவரால் பால்ய நண்பனுக்கே அந்த கதி...


எத்தனை தடவை ரொம்ப நல்லவருங்க டவுசரை கழட்டுவ, உனக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்கு, நான் சில மாதங்களுக்கு முன்னால ஒரு விசயம் கேட்டிருந்தேனே அதை செய்து தர மட்டும் நேரமில்லையா?

உனக்கு போன் அடிக்கலாம்னு பார்த்தா காலிங் கார்டுலயே 2 வெள்ளிக்கு 5 நிமிசம் தான் பேசமுடியுமாம்!...

ரொம்ப நல்லவர் தன் பால்ய ஸ்நேகிதனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தார், அந்த பால்ய ஸ்நேகிதனும் அதை எல்லோரிடமும் சொல்லுவார், அது மட்டுமல்லாம அந்த பால்ய ஸ்நேகிதர் தனியா தொழில் அப்படி இப்படின்னு நல்ல நிலைக்கு போயிட்டுருக்கார், அவ்வப்போது அந்த பால்ய ஸ்நேகிதர் நம்ம ரொம்ப நல்லவர்கிட்ட தன் தொழில் நல்ல நிலையில் போகுதுன்னு சொல்லிக்கிட்டுருப்பார், ஒரு நாள் நம்ம ரொம்ப நல்லவர் இந்தியா போனப்ப பால்ய ஸ்நேகிதரை பார்க்கனும்னு சொன்னப்ப அந்த பால்ய ஸ்நேகிதர் போன் செஞ்சிட்டு வான்னு சொல்லியிருக்கார், அதுக்காக அந்த பால்ய ஸ்நேகிதரை நன்ற் மறந்தவன், என்னை வெறுப்பேத்தனும்னே அவன் தொழில் வெற்றிகளை சொல்றான் அது இதுன்னு பால்ய ஸ்நேகிதரை வில்லனாக்கி ஒரு கதை எழுதி நம்ம ப்லாக்ல போட்டுட்டார், என்ன கொடுமைன்னா அந்த பால்ய ஸ்நேகிதரும் பதிவு படிக்கிறவர்தான். அந்த பால்ய ஸ்நேகிதர் பதிவு படிப்பாருன்னு தெரிஞ்சே அவரை வில்லனாக்கி இல்லாததை பொல்லாததை எழுதி கதை எழுதுறாருன்னா புரிஞ்சிக்கோ மாம்ஸ்

அப்புறம் இன்னொரு கதையில நம்ம ரொம்ப நல்லவர் ஆபிஸ்ல வேலை செய்யுற நண்பர் மோட்டார் சைக்கிள்ல லிப்ட் கொடுக்கலையோ ஏதோ, அந்த கடுப்புல அந்த மோட்டார் சைக்கிள் நண்பரை வில்லனாக்கி ஒரு கதை, எழவு அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் பதிவெல்லாம் படிக்கிறாரோ என்னமோ தெரியலை.

பால்ய ஸ்நேகிதனுக்கே அந்த ட்ரீட்மெண்ட்ன்னா பதிவு ஸ்நேகிதர்களுக்கு என்னா ட்ரீட்மெண்ட்டு கிடைக்கும்? அப்போ எதிரிகளுக்கு இன்னும் என்னா ட்ரீட்மெண்ட் கிடைக்கும்? யோசிச்சி பாரு...

ரொம்ப நல்லவர்கிட்ட பழகனா பழகிட்டு போகட்டும், நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், அவங்கவங்க பட்டு தெரிஞ்சிகிட்டும் மாம்ஸ்... உனக்கென்ன ஆச்சி?


மாம்ஸ் பழகுறாங்கனா பழகிட்டு போறாங்க, எல்லாம் அனுபவிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டுபோறானுங்க, 'காலம்' எனக்கு புரியவைக்கலையா? அது போல அதே 'காலம்' அவங்களுக்கு புரியவைக்கும்....

மாம்ஸ் உன்னால இன்னைக்கு பலரும் வேலையில் இருக்காங்க, உன்னால பல நல்ல விசயங்கள் நடந்திருக்கு, இன்னும் கேட்டா பதிவுலகின் சாக்கடையில் இறங்கி அதை சுத்தபடுத்தியவர்களின் ஒருவன் நீ, அதனால் உனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உன் குடும்பத்திற்கு ஏற்பட்ட உளைச்சல்கள், பண விரயங்கள், நேர விரயங்கள், கேரியர் செட் பேக் எல்லாவற்றிற்கும் மேலே நீ எதிர்நோக்கிய கொலை மிரட்டல்கள் என பல விசயங்களை தோளில் போட்டு இந்த பதிவுலகின் சாக்கடையை சுத்தம் செய்தவனில் ஒருவன், மற்ற பேசுறவனுங்களுக்கு என்னா மயிரா போச்சி? மிஞ்சி போனா நெட்டுல உக்காந்து வீட்லயும் அலுவலகத்திலும் கிடைக்கும் வெட்டி நேரத்தில் பதிவு போட்டுட்டு போவானுங்க, அவனுங்களுக்கு ஒரு நட்டமும் கிடையாது....

மாம்ஸ் உன்னால வேலை கிடைத்து, உன் உதவியால் தொழில் தொடங்கியவர்கள் என உன் அளவிற்கு உன் வயதிற்கு உன் பண வசதிக்கு நீ பிறருக்கு உன் நேரம், பணம் எல்லாம் செலவு செய்து உதவியது நிச்சயம் பெரிய விசயம். உன் நேரம் பொன்னானது.

ஒரு போலியாக இருப்பதற்கு தேவையான ஓய்வு நேரமும் இணையமும் அதற்கான மனநிலையும் சிலருக்கு இங்கே இருக்கு அதனால் அவனுங்களை அவனுங்க போக்கில் விட்டுவிடு மாம்ஸ், நீ பிறருக்கு உதவுவதை தொடர்ந்து செய்.

இத்தனையும் மீறி நீ டவுசர் கழட்டும் நடவடிக்கையில் தொடர்ந்தால் "அறிவு கெட்ட முண்டம் செந்தழல் ரவி, எவன் எப்படி போன உனக்கென்ன?"

descent AIIMS and indescent Law college


டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களை எப்படி டீசண்ட்டாக வெளியேற்றினார்கள்... ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரின் கதவில் டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்களால் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் பக்கத்தில்

A senior resident doctor, who belongs to the scheduled castes, said: “We are so scared here because the director (P. Venugopal) himself is supporting them (the anti-quota agitators). We have nowhere to go to complain.”

AIIMS rules say a student who fails twice over the five years of study cannot pursue his or her post-graduation.
The students said that for fear of their careers being destroyed they did not want to “get into the bad books of the authorities”.
“The students have no choice but to bear this humiliation quietly and pass out in five years,” said Dr Vikas Bajpai of the Medicos’ Forum for Equal Opportunity, a pro-reservation group.

நம்ம டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் எப்படி சாதி வேற்றுமையின்றி வாழ்கிறார்கள் என்பதை மேலும் படிக்க இங்கே போய் பாருங்கள்
ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் எவ்வளவு இன் டீசண்ட்டாக இருக்கிறார்கள்....

உடலியன் வன்முறையை கட்டாயம் நானும் எதிர்க்கிறேன், சட்டக்கல்லூரி மாணவர்களின் மிக மோசமான செயலை நாம் எதிர்க்கும் இதே நேரத்தில் உடலியல் வன்முறை அல்லாத மற்ற வன்முறைகளுக்கும் இதே அளவு குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை....

இட்லிவடை பதிவில் இடஒதுக்கீடு பற்றி எழுதப்பட்டவை உடலியல் வன்முறையையும் விட மோசமான வன்முறை...

இது தொடர்பான என் முந்தைய பதிவு

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் வன்முறையின் தெறிப்பா?!

descent AIIMS and indescent Law college


டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களை எப்படி டீசண்ட்டாக வெளியேற்றினார்கள்... ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரின் கதவில் டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்களால் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் பக்கத்தில்

A senior resident doctor, who belongs to the scheduled castes, said: “We are so scared here because the director (P. Venugopal) himself is supporting them (the anti-quota agitators). We have nowhere to go to complain.”

AIIMS rules say a student who fails twice over the five years of study cannot pursue his or her post-graduation.
The students said that for fear of their careers being destroyed they did not want to “get into the bad books of the authorities”.
“The students have no choice but to bear this humiliation quietly and pass out in five years,” said Dr Vikas Bajpai of the Medicos’ Forum for Equal Opportunity, a pro-reservation group.

நம்ம டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் எப்படி சாதி வேற்றுமையின்றி வாழ்கிறார்கள் என்பதை மேலும் படிக்க இங்கே போய் பாருங்கள்
ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் எவ்வளவு இன் டீசண்ட்டாக இருக்கிறார்கள்....

உடலியன் வன்முறையை கட்டாயம் நானும் எதிர்க்கிறேன், சட்டக்கல்லூரி மாணவர்களின் மிக மோசமான செயலை நாம் எதிர்க்கும் இதே நேரத்தில் உடலியல் வன்முறை அல்லாத மற்ற வன்முறைகளுக்கும் இதே அளவு குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை....

இட்லிவடை பதிவில் இடஒதுக்கீடு பற்றி எழுதப்பட்டவை உடலியல் வன்முறையையும் விட மோசமான வன்முறை...

இது தொடர்பான என் முந்தைய பதிவு

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் வன்முறையின் தெறிப்பா?!

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.

எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் பார்ப்பன உயர்சாதி கும்பல்கள் இதையும் பயன்படுத்திக்கொண்டுள்ளன...

இட்லிவடை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த சாதிக்கலவரத்தை எழுதும்போது மன்னிக்கவும் வெட்டி ஒட்டும் போது இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தி கொடுத்த குறிப்பு இது...

படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாருக்கும் கெட்ட பெயரையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி வன்முறையை இளமையிலேயே நம்பி வாழும் இவர்கள் நாளைக்குக் கோட்டைக்குப் போவார்கள் என்று நினைத்தால்......


இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானதுபழைய பின்னூட்டங்களுக்கு இங்கே சொடுக்கவும்

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.

எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் பார்ப்பன உயர்சாதி கும்பல்கள் இதையும் பயன்படுத்திக்கொண்டுள்ளன...

இட்லிவடை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த சாதிக்கலவரத்தை எழுதும்போது மன்னிக்கவும் வெட்டி ஒட்டும் போது இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தி கொடுத்த குறிப்பு இது...


படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாருக்கும் கெட்ட பெயரையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி வன்முறையை இளமையிலேயே நம்பி வாழும் இவர்கள் நாளைக்குக் கோட்டைக்குப் போவார்கள் என்று நினைத்தால்......


இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானதுபழைய பின்னூட்டங்களுக்கு இங்கே சொடுக்கவும்

எச்சரிக்கை, சாரு பெயரில் ஏமாற்றியது போன்ற ஏமாற்று மெயில் காசு கொடுத்து ஏமாறாதீர்கள்

சாருநிவேதிதா அவர்கள் பெயரில் ஏமாற்றி மின்மடல் அனுப்பி வெஸ்ட்டர்ன் யூனியன் மூலமாக பணம் பெற்றதை போன்ற ஒரு மெயில் இப்போது உலவுகிறது உஷார்...fromNazeer Ahmed <ahnazeer19@yahoo.co.in>

to mailto:tabdull_83@hotmail.com
dateSat, Nov 8, 2008 at 2:35 PM

subjectEmergency!! I need your helpsigned-byyahoo.co.in


Hello,I am sorry I didn't inform you about my traveling for a program called Empowering Youth to Fight Racism, HIV/AIDS, and Lack of Education. The program took place in three major countries in Africa which are South Africa, Ghana and Nigeria. I am presently in Nigeria. I misplaced my wallet on my way to the hotel where my money, and other valuables were kept. I will like you to assist me with a soft loan urgently.The total sum of money that i would need would be $3,200US Dollars to sort-out my hotel bills and get myself back home. I will appreciate whatever you can afford, i'll pay you back as soon as i return,Let me know if you can assist me so that i can send you the details to use when sending the money through western union.Regard,

Nazeer Ahmed

எங்கே போனது இறையாண்மை? - தகிக்கும் தாமரை!


விகடனில் வெளியான கவிஞர் தாமரையின் செவ்வி...

காசு கொடுத்து படிக்கும் விகடன் பக்கங்களை அப்படியே முழுக்க மீள்பதிவு செய்வது தவறு தான்... இருந்தாலும் இந்த செவ்வி பேசும் பொருளின் முக்கியத்துவம் கருதி பதிப்பிக்கிறேன்... என்ன ஒரு ஆயிரம் பேர் என்பதிவு வழியாக இதை படிப்பதால் விகடனுக்கு எந்தவித நட்டமும் வந்துவிடாது என்றே எண்ணுகிறேன்...

இனி தாமரையின் செவ்வி

நீரலை மேல் பச்சை இலைகள் படர்ந்திருக்க... நீர்ப் பரப்புக்கு மேல் சற்றே தலைநீட்டி இதழ் விரித்துச் சிரிக்கும் தாமரை மலர்கள்... ஆனால், ஒரு தாமரை சீறிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் சீறியிருக்கும் தாமரை, மலரல்ல; திரைப் பாடலாசிரியை தாமரை!

கடந்த 5-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தாமரை, ''ஈழத் தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழக அரசு திரட்டும் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேன்!'' என்று சீறியிருப்பது, பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தாமரையை சந்தித்தோம்.

''நிதி கொடுக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?''

''இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்ற நம்முடைய குரல், எந்த அரசின் செவிக்கும் எட்டவில்லை. ஆனால், போரால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறார்களாம். ஒரு பக்கம் குண்டு... மறு பக்கம் தொண்டா? ஆட்டுக்கிடைக்குள் நுழைந்திருக்கும் ஓநாயிடம் புல்லையும் செடிகொடிகளையும்கொடுத்து ஆடுகளைக் காப்பாற்றச் சொல்வது போலத்தான் இந்த நிதி வசூல்! செஞ்சிலுவைச் சங்கமும் இன்னபிற சேவை நிறுவனங்களும் சிங்கள அரசால் துரத்தி அடிக்கப்பட்டுவிட்ட நிலையில், இங்கே திரட்டப்படும் நிதி யார் மூலம் ஈழத் தமிழர்களைப் போய்ச் சேரும்? (இதற்கிடையில் தமிழக அரசு திரட்டிய நிவாரணப் பொருட்களை தமிழக முதல்வர் மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகி ஆகியோர் பார்வையிட்டு, இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுகின்றன) ராஜபக்ஷே மூலமாகவா? உண்மையாகவே நாம் கொடுக்கிற நிதி, சிங்கள அரசின் அக்கிரம வேலைகளுக்குத்தான் பயன்படப் போகிறது! பாமர மக்களுக்குக் கூட இது தெரிந்திருப்பதால்தான், பெரிய அளவில் நிதி சேரவில்லை. இல்லாவிட்டால், இந்நேரம் எத்தனையோ கோடிகள் குவிந்திருக்கும். நம்முடைய நிதியால் நம்முடைய இனமே அழிந்துவிடக் கூடாது என்பதால்தான் நிதி கொடுக்காதீர்கள் என்கிறேன்.''

[நானு இதே காரணங்களுக்காக இதே முடிவு தான் எடுத்துள்ளேன்]


''ஈழ மக்களுக்காக நம்முடைய அரசு எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறீர்கள்?''

''சில மாதங்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஆயுத வாகனத்தை, புலிகளுடையது என்றெண்ணி போலீஸ் மடக்கிப் பிடித்தது. ஆனால், அந்த வாகனத்தை அனுப்பிவைத்ததே மத்திய அரசுதான் என்பது பிறகே தெரிந்தது. தமிழகம் வழியாகவே சிங்கள அரசுக்கு உதவி செய்யும் மத்திய அரசு, எப்படி தமிழர்களைக் காக்கும்? ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஒவ்வொரு முறையும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிடுவார். அவரும் 'கண்டிப்பாக இலங்கைக்கு உதவ மாட்டோம்' என உறுதி கொடுப்பார். ஆனாலும், நம்முடைய விரலைக் கொண்டே நம் கண்ணைக் குத்துகிற வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டுத் துடிக்கவேண்டிய தமிழக அரசியல்வாதிகள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகக் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் சட்டையைப் பிடித்துத் தமிழக அரசு, சிங்களப் போரைத் தடுக்கச் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு, உண்டியல் குலுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? நம்முடைய குடும்பத்தில் ஒருவர் குண்டடிபட்டால், நாம் என்ன செய்வோமோ... அதைத்தான் ஈழத் தமிழர்கள் விஷயத்திலும் செய்யவேண்டும்!''

''ஈழ விவகாரத்தில் தி.மு.க. அரசின் ஒட்டுமொத்த நிலைப்பாடு பற்றி...''

''தி.மு.க., அ.தி.மு.க. என்ற பேதங்களைத் தூர வீசுங்கள்... எந்தக் கட்சி இங்கே உண்மையான உணர்வோடு செயல்படுகிறது? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் முதன்மையானது, இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பது. இன்றளவும் அப்படி செய்யப்படாத நிலையில், தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே பாக்கி இருக்கும் பதவி யைக்கூட தூக்கியெறிய எந்தக் கட்சியும் தயாராக இல்லையே? முதல்வர் கலைஞரோ, 'எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டால், இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக மேற்கொள்கிற கொஞ்சநஞ்ச உதவிகளையும் செய்ய முடியாமல் போய்விடும்!' என்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றியபோது, இந்த விஷயம் அவருக்குத் தெரியாமல் போனது ஏன்?

நம்முடைய தயவில்தான் மத்திய அரசின் நாற்காலி ஆடாமல் நிற்கிறது. நம் இனத்துக்கு உதவாத அந்த அரசு இருந்தால் என்ன... கவிழ்ந்தால் என்ன? தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் கலந்துகொள்ளாத கட்சிகள்கூட அதனை வரவேற்றன. அந்த ஒருமித்த குரல் இப்போது வலுவிழந்து போய்விட்டது. தமிழக அரசின் மூலம் ஈழத் தமிழனுக்கு விடிவு கிடைத்துவிடும் என எண்ணிய என்னைப் போன்ற சாதாரண மக்களின் நம்பிக்கை இன்று வேரறுந்துவிட்டது.''

'' 'ஈழ விவகாரத்தில் இறையாண்மைக்கு உட்பட்டுதான் தீர்வு காணமுடியும்' எனத் தமிழகத்தைச் சேர்ந்த சிலரே வாத மிடுகிறார்களே?''

''இறையாண்மையைக் காரணம் காட்டி ஈழப் பிரச்னையை வேடிக்கை பார்ப்பவர்கள்- தமிழின துரோகிகள், மன்னிக்க முடியாத அயோக்கியர்கள்! நமது அனுமதி இல்லாமல் கச்சத்தீவை மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததே... மின் தட்டுப்பாட்டால் தமிழகமே வெந்து புழுங்கும் வேளையிலும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு போகும் மின்சாரம் மட்டும் எந்த பாதிப்புமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே... [அதானே!]இது மட்டுமல்லாமல் தண்ணீர் பிரச்னைகளில் கர்நாடகா, கேரள மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தையே மதிக்காமல் தமிழகத்தின் உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருக்கின்றனவே... அப்போதெல்லாம் எங்கே போனது இந்த இறையாண்மை? அப்பாவி மீனவன் குண்டடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியாத நாம், இறையாண்மை பற்றிப் பேசுவது சகிக்க முடியாத கேவலம்! இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொறுப்பு தமிழகத்துக்கு மட்டும்தானா? மற்ற மாநிலங் களுக்குக் கிடையாதா? ஈழப் பிரச்னையில் மட்டும் இறையாண்மையின் பெயரைச் சொல்லி தமிழகத்தின் வாயை அடைப்பது எந்த விதத்தில் நியாயம்''

''இறையாண்மை பாதிக்கப்படுவதாகச் சொல்லி வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடிப் பேச்சுகளின் பலனாக உங்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் பாய்ந்தால்..?''

''அமீரும் சீமானும் கேள்வி கேட்டதால் உள்ளே தள்ளப்பட்டார்கள். ஆனால், அவர்களது கேள்விக்கு இன்று வரை தமிழக அரசு பதில் சொல்லவில்லை! மாறாக, கேள்வி கேட்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப் பார்க்கிறது அரசு. 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதே தவறாகிவிடாது' என உச்ச நீதிமன்றமே பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்டது. அதையும் தாண்டி அடக்குமுறையை மேற்கொண்டு ஒரு தாமரையைக் கைது செய்தால், அதன் பின்னணியில் ஓராயிரம் தாமரைகள் முளைப்பார்கள்.

[அரசியல்வாதிகளை அடித்த கூத்தில் நொந்து போன மனதுக்கு சீமானும், அமீரும், மன்சூர் அலிகானும் இப்போ தாமரையுமே மருந்திட்டுள்ளார்கள்]

நான் சாதாரண குடிமகள்தான். தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யட்டும். ஆனால், என் கேள்விகள் அப்படியேதான் இருக்கும்! தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் டெல்லியின் எடுபிடி களாக இருக்கும்வரை ஈழத்துத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் இருக்கும் எந்த தமிழனுக்கும் விடிவு கிடைக்கப் போவதில்லை!'' [நெத்தியடி]

சகோதர யுத்தம் பற்றி கலைஞரும் அதற்கு ஈழத்தமிழன் பதிலும்

இலங்கை: என்னால் தனித்து ஏதும் செய்ய முடியாது- என்று அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி... நல்லா பாருங்க நல்லா பாருங்க கையாலாகதவர்னு சொல்லலை, தனித்து எதுவும் செய்ய முடியாதுன்னு தான் சொல்லியிருக்கார், அப்புறம் கலைஞரை கையாலாகாதவர்னு சொன்னா கலைஞர் மனைவி துணைவி மகன் மகள் கணக்கெல்லாம் காண்பிக்க வந்துடுவாரு பொன்முடி, நெறைய மனைவிகளும் நிறைய புள்ளைகளும் பெத்துக்கிட்டவங்கதான் கையாலாகவறங்க மத்தவங்க கையாலாகாதவங்கன்னா பொன்முடி கணக்குப்படி பெரியாரும், அறிஞர் அண்ணாதுரையும் எம்ஜியாரும் கையாலாகாதவர்களா?


அந்த அறிக்கையில் புலிகளின் சகோதர யுத்தம் பற்றி இப்படியாக விமர்சித்திருந்தார்...

தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு;
தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.

அதற்கு Eela Thamilan என்பவர் கொடுத்த பின்னூட்டம் பளார் பளார்னு உட்ட மாதிரி இருந்தது, அது உங்கள் பார்வைக்கு இங்கே...

பதிவு செய்தவர்: Eela Thamilan பதிவு செய்தது: 06 Nov 2008 10:55 pm

உனது பிள்ளைக்கும் உற்றார் உறவினருக்க உன் குடும்ப துதிபாடிகளுக்கும் கீழ்சபையில் எம்பி பதவியும் மத்தியில் அமைச்சர் பதவியும் உன்னால் தனித்து நின்று மத்தியரசிடம் வாங்கி கொடுக்கமுடியும் ஆனால் எந்த இனத்தின் பெயாரால் பிழைப்பு நடத்துகிறாயோ அந்த இனத்திற்கு எதாவது நன்மைசெய்யதான் உன்னால் முடியாது.
விடுதலைப்புலிகள் தமிழினபகைவர்களான சிறிலங்கா படையுடன் மோதமால் வாளதிருக்க. 50 000 மேற்ப்பட்ட சிங்களபடை வாந்திபேதி கண்டா தமிழீழமண்ணில் அழிந்தது! 1500 இந்திபடை தமிழீழத்தில் எப்படி மடிந்தது!
தமிழை தாய் மொழியாக பேசிகொண்டு தமிழினத்தை கருவறுப்பவர்களை தமிழின துரோகிகள் என்று சொல்லாது தமிழர்களின் சகோதரர்கள் என்று உங்களைவிட்டால் எந்த முட்டாளாலும் சொல்ல மாட்டான். விடுதலைபுலிகளுடன் டெலோ தமிழரசுகட்சி தமிழ்காங்கிரஸ் ஈபிஆர்எல்எப் ஈரோஸ் என 5கட்சிகள் புலிகளுடன் கூட்டமைத்திருப்பதை தெரிந்து கொண்டும் ஏன்தான் பொய் பேசுகிறீர்கள்.23 வடகிழக்கு தமிழ்நாடளமன்ற உறுப்பினர்களில் 22 பேர் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதை தெரிந்து கொண்டும் ஏன்தான் பொய் பேசுகிறீர்கள்.இது உங்களுக்கு மாபெரும் ஒற்றுமையாக தெரியவில்லையா!
அண்ணா காலத்தில் திமுக வாக இருந்தது உன் காலத்தில் அதிமுக மதிமுக தேதிமுக இதிமுக........ இப்படி சிதறிப்போனாது கூட நீ புலிகளிடம் எதிர்பார்க்கும் ஒற்றுமையால்தானா!.
மகன் ஸ்ராலினிற்கும் அழகிரிக்கும் இடையிலுள்ள உலகமகா ஒற்றுமை தமிழரிடத்தில் இல்லையென்ற சொல்கிறீர். அல்லது மாறன் குடும்பத்திற்கும் கலைஞர் குடும்பத்திற்கும் இடையிலுள்ள இனிய ஒற்றுமையையா புலிகளிடம் எதிர்பார்க்கிறீர்கள்.
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி விழுந்த வீரமறவர்களுக்கு மாவீரர்களிற்கு செய்யும் ஒரு சிறியமரியாதையே கொச்சைபடுத்தும் கேவலம் கெட்ட உன்னை நேற்றுவரை தமிழின தலைவனாக நினைத்தது மதித்தது என் தப்புதான். உயிரோடு இருக்கும் உன்பெயரில் சாலைகளும் கிராமங்களும் (காலனிகளும்) விருதுகளும் உருவச்சிலைகளும் அமைத்து மகிழும் போது அந்த இழிவான சுயதம்பட்டம் உனக்கு உறைக்கவில்லையா? மாவீரர் கல்லறைகளையும் அவர்தன் ஈகத்தையும் இந்த கார்த்திகை மாதத்தில் கொச்சை படுத்திய உனக்கும் சிங்களஇனவெறியர்களிற்கும் இடையே எந்தவொரு வேறுபாட்டையும் என்னால் பார்க்கமுடியவில்லை

கெட்ட வார்த்தையில் வெரைட்டி தேடிய சுகுணா இவ்ளோதானா?

பழைய குப்பைதான் கிளற வேண்டாம் தான் நாறும் தான், வேறு எவனாவதென்றால் கிளறியிருக்க மாட்டேன், சுகுணா மீதான தனிப்பட்ட மதிப்பும் சுகுணாவின் கொள்கை பிடிப்பும் தான் இதை கிளறவைத்துள்ளது....

பதிவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கேவலமாக மிக ஆபாசமாக சில பதிவுகளில் எழுதப்பட்டு இருந்த காலத்தில் அதை எதிர்த்து பரவலாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது சுகுணா திவாகர் உதிர்த்த பொன்மொழிகள் தான் அந்த ஆபாச பதிவுகளை நான் அதாவது சுகுணா தற்போதெல்லாம் படிப்பதில்லை ஏனென்றால் அந்த பதிவுகளில் உள்ள கெட்ட வார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்று உதிர்த்தார்.... மேலும் தான் மிகுந்த வித்தியாசமானவராகவும் பொதுப்புத்தியில் அடங்காதவராகவும் தன்னை காண்பிக்கவோ என்ன எழவோ என் குடும்பத்தாரையோ அல்லது என்னை தேவடியா மகனே என்று எழுதினால் கூட கண்டுகொள்ள மாட்டேன்(அதே வார்த்தைகள் இல்லையென்றாலும் இவர் அப்போது உதிர்த்த பொன்மொழி இது தான்) என்று கூறியவர் இன்று ஏதோ ஒரு பதிவில் (அது என்ன எழவு பதிவு என்றோ அதில் என்ன எழவு எழுதியிருந்தது என்றும் எனக்கு தெரியாது) அவரது மனைவியை அவள் இவள் என்று பின்னூட்டி விட்டார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார்... இதோ அவரின் வார்த்தைகளிலேயே அது கீழே

ஆனால் இந்த சர்ச்சையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம். என் மனைவி ஜெயந்தியை அவள், இவள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்ட ஒரு பதிவு. (ஏற்கனவே திருமணமான புதிதில் வந்த நள்ளிரவு தொலைபேசி மிரட்டல்களுக்கு அடுத்து இது மன உளைச்சலை ஏற்படுத்தியது)


நிச்சயமாக சுகுணாவின் மனைவியை பற்றி எழுத எந்த நாய்க்கும் உரிமையில்லை அதை கண்டிக்கிறோம்...

அவள் இவள் என்று உமது அன்புக்குறியவரை எந்த நாயோ எழுதியதற்கே வருத்தப்படும் உம்மால் கெட்ட வார்த்தையில் வெரைட்டி இல்லை என்று எழுதிய போது ஏற்கனவே மன உலைச்சலில் இருந்தவர்களுக்கு எப்படியிருக்கும்? அந்த அளவிற்கு பேசிய சுகுணாவால் இன்றைக்கு அவள் இவள் என்ற வார்த்தைகளுக்கே எப்படி மனவருத்தமும் உளைச்சலும் ஏற்படுகிறது?

இது சுகுனாவுக்கு மட்டுமில்லை, அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...

காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு மட்டுமல்ல, சுகுணாவை போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

இந்த பதிவுக்கு பொட்டீகடை சத்யா வந்து Piss off kuzhali... What the fuck u really want from others? என்று பின்னூட்டமிட்டாலும் எமக்கு கவலையில்லை ஏனெனில் இந்த பதிவு பொட்டீக்கும் சேர்த்து தான்.என்ன எழவு சுகுணாவுக்கு இப்போ புரிஞ்சதுனா பொட்டீக்கு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி புரியும் அம்புட்டுதான்

கெட்ட வார்த்தையில் வெரைட்டி தேடிய சுகுணா இவ்ளோதானா?

பழைய குப்பைதான் கிளற வேண்டாம் தான் நாறும் தான், வேறு எவனாவதென்றால் கிளறியிருக்க மாட்டேன், சுகுணா மீதான தனிப்பட்ட மதிப்பும் சுகுணாவின் கொள்கை பிடிப்பும் தான் இதை கிளறவைத்துள்ளது....

பதிவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கேவலமாக மிக ஆபாசமாக சில பதிவுகளில் எழுதப்பட்டு இருந்த காலத்தில் அதை எதிர்த்து பரவலாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது சுகுணா திவாகர் உதிர்த்த பொன்மொழிகள் தான் அந்த ஆபாச பதிவுகளை நான் அதாவது சுகுணா தற்போதெல்லாம் படிப்பதில்லை ஏனென்றால் அந்த பதிவுகளில் உள்ள கெட்ட வார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்று உதிர்த்தார்.... மேலும் தான் மிகுந்த வித்தியாசமானவராகவும் பொதுப்புத்தியில் அடங்காதவராகவும் தன்னை காண்பிக்கவோ என்ன எழவோ என் குடும்பத்தாரையோ அல்லது என்னை தேவடியா மகனே என்று எழுதினால் கூட கண்டுகொள்ள மாட்டேன்(அதே வார்த்தைகள் இல்லையென்றாலும் இவர் அப்போது உதிர்த்த பொன்மொழி இது தான்) என்று கூறியவர் இன்று ஏதோ ஒரு பதிவில் (அது என்ன எழவு பதிவு என்றோ அதில் என்ன எழவு எழுதியிருந்தது என்றும் எனக்கு தெரியாது) அவரது மனைவியை அவள் இவள் என்று பின்னூட்டி விட்டார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார்... இதோ அவரின் வார்த்தைகளிலேயே அது கீழே

ஆனால் இந்த சர்ச்சையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம். என் மனைவி ஜெயந்தியை அவள், இவள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்ட ஒரு பதிவு. (ஏற்கனவே திருமணமான புதிதில் வந்த நள்ளிரவு தொலைபேசி மிரட்டல்களுக்கு அடுத்து இது மன உளைச்சலை ஏற்படுத்தியது)


நிச்சயமாக சுகுணாவின் மனைவியை பற்றி எழுத எந்த நாய்க்கும் உரிமையில்லை அதை கண்டிக்கிறோம்...

அவள் இவள் என்று உமது அன்புக்குறியவரை எந்த நாயோ எழுதியதற்கே வருத்தப்படும் உம்மால் கெட்ட வார்த்தையில் வெரைட்டி இல்லை என்று எழுதிய போது ஏற்கனவே மன உலைச்சலில் இருந்தவர்களுக்கு எப்படியிருக்கும்? அந்த அளவிற்கு பேசிய சுகுணாவால் இன்றைக்கு அவள் இவள் என்ற வார்த்தைகளுக்கே எப்படி மனவருத்தமும் உளைச்சலும் ஏற்படுகிறது?

இது சுகுனாவுக்கு மட்டுமில்லை, அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...

காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு மட்டுமல்ல, சுகுணாவை போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

இந்த பதிவுக்கு பொட்டீகடை சத்யா வந்து Piss off kuzhali... What the fuck u really want from others? என்று பின்னூட்டமிட்டாலும் எமக்கு கவலையில்லை ஏனெனில் இந்த பதிவு பொட்டீக்கும் சேர்த்து தான்.என்ன எழவு சுகுணாவுக்கு இப்போ புரிஞ்சதுனா பொட்டீக்கு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி புரியும் அம்புட்டுதான்

தமிழ் ஆயுதத்தை கொண்டு மக்களை இழிவு படுத்தும் தமிழ்கடல் கண்ணன் & குழு


மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.


மேலே குறிப்பிடப்பட்டவைகள் மாலன் அவர்களின் பதிவிலிருந்து....

தமிழ் உணர்வும் தமிழறிவும் தமிழும் அதிகாரத்திற்கெதிரான, மக்களை சிறுமை படுத்துவதற்கெதிரான, ஒரு ஆயுதமாகவே வரலாற்றில் இருந்திருக்கின்றது... இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது, தமிழே பார்ப்பனியத்திற்கு எதிரான கலக குரலாக அடையாளப்படுத்தப்படுகிறது, தமிழே சமத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது...

ஆனால் தமிழ்கடல் கண்ணன் என்ற மனப்பாடப்புகழ் கண்ணன் அவர்கள் நடுவராக இருந்து நடத்தும் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் என்ற சமத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிரான ஆயுதம் மக்களை இழிவுபடுத்துவர்களுக்கு எதிரான இந்த தமிழ் ஆயுதம் மக்களை இழிவு படுத்தவும் சமத்துவத்துக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுகின்றது.

தன்னம்பிக்கையின் பெயர் தமிழ் என்று விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ்பேச்சு எங்கள் மூச்சில் "சுயமரியாதை" என்பது பெயரளவில் கூட இல்லை என்பது சில போட்டியாளர்களை நடுவர்(?) மனப்பாடபுகழ் கண்ணன் அவமானப்படுத்தியதிலே தெரிகின்றது, போட்டியாளர் பிரசன்னாவை அவமானப்படுத்தியதில் ஆரம்பித்து ஒரு கல்லூரி விரிவுரையாளர்(பெயர் நினைவில் இல்லை) அவமானப்படுத்தப்பட்டது வரை நிறைய ஒளிபரப்பானது, ஒளிபரப்பாகாதது எத்தனையோ?

எப்போதெல்லாம் எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இடஒதுக்கீட்டை இழித்தும் பழித்தும் பேசுவதும் தேவையென்றால் ஆவேசமாகவும் சில நேரங்களில் அழுது பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையிலுமான உத்தி பார்ப்பனர்களாலும் உயர்த்தப்பட்ட சாதியினராலும் அரங்கேற்றப்படுகின்றது, இதே விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா வில்
ஒரு பார்ப்பனர் தாம் மருத்துவராக ஆசைப்பட்டதாகவும் "Being a Brahamin" அப்படியென்று கூறி அழுதார், உடனே நிகழ்ச்சி நெறியாளர் கோபியும் உங்கள் வேதனை புரிகிறது என்றார்... என்னே நாடகம் என்னே நாடகம்!!! (மருத்துவர் ஆகவில்லையென்றாலும் ஐந்து மொழியில் பேசுவதாகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் பெருமையடித்துக்கொண்டார்), "Being a Backward, most backward, scedule caste" எத்தனை எத்தனை அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றது, எத்தனை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது, இடஒதுக்கீடின்றி வாய்ப்பு மறுக்கப்பட்டால் அந்த பார்ப்பனர் அடைந்த நிலையை இவர்களால் அடைய முடியுமா? அம்மாதிரியான வாய்ப்புகள் எத்தனை பேருக்கு அமைகிறது? அந்த உணர்வுகளெல்லாம் கோபியால் புரிந்து கொள்ளப்பட்டதா?(இடஒதுக்கீடு பற்றி பல நேரங்களில் பேசியாகிவிட்டது, தொடர்ந்தும் பேசப்பட்டு வருகின்றது இந்த பதிவில் அதை பேசாமல் பதிவு தொடும் விசயத்தை தொடரலாம்)

இம்மாதிரியான ஒரு தளமமைப்பு தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் நடந்து கொண்டுள்ளது, தொடக்க சுற்றில் ஒரு பெண்மணி சாதிஒழிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார், அப்போது மனப்பாட புகழ் கண்ணன் குறுக்கிட்டு சாதியெல்லாம் ஒழியாதும்மா என்று கூறிவிட்டு அதற்கு காரணமாக சாதி சர்ட்டிபிகேட்டையும் இடஒதுக்கீட்டையும் கூறினார்,

BCக்கும் MBCக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? வெறும் 500ரூபாய் தான், 500ரூபாய் கூட கொடுத்தால் MBC சர்ட்டிபிகேட், குறைத்து கொடுத்தால் BC சர்ட்டிபிகேட் என்றார், சொல்லிவிட்டு நான் FC என்றார்,

போட்டியாளர்கள் ஆங்கில சொற்களை கலக்கும் போது கண்ணன் அவர்கள் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு தமிழிலே பேசுங்கள் என்பார், ஆனால் அவர் மட்டும் தான் FC என்று ஆங்கிலத்தில் சொன்னார், இது எப்படித்தெரியுமா? தமிழில் குண்டி என்று சொல்லாமல் "Butt" என்று சொன்னால் அந்த தாக்கம் குறைவாக இருக்குமே, அது போல நான் "உயர்சாதி" என்றும் BC, MBC, SC யை பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட சாதி என்று சொல்லியிருந்தால் பளிச்சென்று பார்வையாளர்கள் மண்டையில் உட்கார்ந்துவிடும் அவரின் நோக்கமும் புரிந்துவிடும், அதனாலேயே தமிழ்கடல் கண்ணன் உயர்சாதி என்று தமிழை பயன்படுத்தாமல் FC என்று ஆங்கிலத்தை பயன்படுத்தினார்.


நான் "FC" என்று சொல்கிறாரே கலர் காம்பினேசன் ஒத்துவரலையே என்றால் பிறகு தான் தெரிய வந்தது தமிழ்கடல் கண்ணன் "சைவப்பிள்ளை"யாம் தமிழ் சமூகத்தில் பார்ப்பனர் இடத்தில் இருக்கும் உயர் சாதி, அப்படி போடு அறுவாளை அதான் தமிழையே சமத்துவத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்.


தமிழ்கடல் மனப்பாட புகழ் கண்ணன் சொன்னது போல BC க்கும் MBCக்கும் மான 500ரூபாய் வித்தியாசம் உலகின் புராதான தொழிலில் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் நிதர்சனத்தில் அதையும் தாண்டியது. அந்த வித்தியாசத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த MBC அறிவுமதி அண்ணனிடம் கேட்டிருந்தாலே சொல்லியிருப்பார்,ஆனால் இதையெல்லாம் அறிவுமதி அண்ணன் கேட்டுக்கொண்டு சும்மாவே உட்கார்ந்திருந்தது மிகவும் வருத்தத்திற்குறியது,

தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து தீண்டாமை என்பதைத் தவிர சமூக, பொருளாதார, கல்வி, விழிப்புணர்வில் பெரிய வேறுபாடில்லாத சமூகங்கள் தான் MBC, சொன்னது நானில்லை தலித் எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா, தமிழ்கடல் கண்ணன் தயாரென்றால் MBC களின் வாழ்க்கை தரத்தையும் இன்ன பலவற்றின் வித்தியாசங்களை நேரடியாக காண்பிக்க தயாராக இருக்கிறோம்.

விஜயன் என்றொரு போட்டியாளர், வைகோவை பிரதியெடுத்து பேசுபவது போல பேசுபவர் ஒரு முறை பேசுகிறார் "உயர் குடியில் பிறந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவது அநியாயம்" என்றார், அடி செருப்பால இடஒதுக்கீட்டுக்கு தகுதியில்லாத பார்ப்பனர்களோ உயர்த்தப்பட்ட சாதிகளோ உயர்குடிகள் என்றால் மற்றோரெல்லாம் தாழ்ந்த குடியா?


இப்படியான மக்களுக்கெதிரான சமத்துவத்துக்கெதிரான பார்ப்பன சிந்தனைகளோடு பேசும் விஜயனைத்தான் கட்டித்தழுவி புகழ்ந்திருக்கிறார் மனப்பாட புகழ் கண்ணன்(என்ன எழவு விஜயன் பேசினாரென்று இந்த வாரம் தான் தெரியும்- இங்கே விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு வாரதாமதத்தில் ஒளிபரப்பப்படும்)

சென்ற வார நிகழ்ச்சியில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒருவரை நிற்கவைத்து சக போட்டியாளர் "அவாள்" பெண் ஒருவர்,சைவப்புள்ளை மனப்பாடப்புகழ் கண்ணன் மற்றும் பட்டிமன்ற ராஜா (இந்த ராஜா சமயம் கிடைக்கும் போதெல்லாம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தகுதி தகுதி என்று உளறுவார், ஏற்கனவே சில பட்டிமன்றங்களில் நகைச்சுவையாக பேசுகிறேன் என்று இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் போது கைதட்டி ஆரவாரித்த சொரனை கெட்ட பிறவிகளாகவே இருந்தனர் அங்கிருந்த பார்வையாளர்கள் அதில் பெரும்பாலும் ராஜா கேவலப்படுத்தும் இடஒதுக்கீட்டின் உரிமையாளர்கள்).

கோபமெல்லாம் வேகமாக என்றொரு கவிதை தமிழ்கடல் கண்ணன் அவர்கள் வலைப்பதிவில்

செஞ் சீனம் ஜப்பான் கொரியா ரஷியா

ஜெர்மனி மேலும் சில நாடுகளே

தஞ்சம் என்று கறுப்பினத்தை நாடி இன்று

தங்கங்கள் குவிக்கவில்லை போட்டியிலே

வஞ்சகர்கள் தம் நாட்டில் அவர்களையே

வதை செய்து வாழ்வொழித்த நாட்டிற்கெல்லாம்

கொஞ்சமல்ல தங்கங்கள் குவிப்ப தெல்லாம்

குன்றாத மனம் கொண்ட கறுப்பினமே

பசித் துன்பம் ஒழியாத கறுப்பர் நாட்டார்

பாய்ந்து ஒடி தங்கங்கள் பெறுகையிலே

வசிப்பதற்கு வழியின்றி வறுமைத் துன்பம்

வாட்டையிலும் வெல்லுகின்ற அவரைப் பார்த்தால்

கசியவில்லை கண்ணிரண்டும் கண்ணீரையே

கார் மழையாய்ப் பொழிகின்றது அவ்வினத்தின்

பசியதனைத் தீர்க்காத இறைவன் மீது

பாய்கிறது கோபமெல்லாம் வேகமாக

ஒடுக்கப்பட்ட கறுப்பர்களுக்காக இறைவன் மீது கோபம் கொண்டு இப்படி உருகி உருகி கவிதை வடித்திருக்கும் தமிழ்கடல் கண்ணன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இதுநாள் வரை(இன்னமும் கூட) பார்ப்பனர்களுக்கும், சைவப்புள்ளைகளுக்கும் இன்னும் உயர்த்தப்பட்ட சாதிகளுக்கும் உழைத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கும் இடஒதுக்கீட்டை தாக்குவதில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்துவதில் தெரிகிறது இவரின் போலித்தனம். கறுப்பர்களுக்காக கண்ணீர் வடிக்கிறாராம்? யாரை ஏமாற்றுகிறார் தமிழ்கடல் கண்ணன்? அவருக்காவது அவர் உண்மையாக இருக்கட்டும்.


மொத்தத்தில் தமிழ் எதன் அடையாளமாக பயன் படுத்தப்படுகிறதோ எதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதோ அதற்கு எதிராகவே தமிழ்பேச்சு எங்கள் மூச்சில் தமிழ் பயண்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த நுண்ணரசியல் தெரியாமலிருக்க அறிவுமதி, சுப.வீ போன்ற தமிழ் ஆர்வலர்களும் இந்த களத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதே வேதனை.

தமிழைக்கொண்டு மக்களை இழிவு படுத்தப்படுமெனில் அந்த தமிழையே தூக்கி எறியவும் தயங்கமாட்டோம்....
தமிழுக்கெதிராக பெரியார் உதிர்த்த கருத்துகள் எந்த சூழலில் உதிர்த்திருப்பார் என்பதை மிக அனுபவப்பூர்வமாக இப்போது உணர்கிறோம்.

தமிழ்கடலாகவே இருந்தாலும் குடிக்க பயனில்லா உப்பாக இருக்குமெனில் அந்த தேவையில்லாத ஒன்று தான், அது போல தமிழ்கடல் கண்ணன் மக்களுக்கு எதிரான, சமத்துவத்துக்கு எதிரான, சாதியத்துக்கு ஆதரவான செயல்களில் இருப்பதால் அவர் தமிழை கடல் போல கற்றிருந்தாலும் அவரின் தமிழறிவு குப்பைக்கு சமம்...

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு - ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதத்தை கொண்டு ஒடுக்கப்பட்டவர்களையே இழிவுபடுத்தும் ஒரு களம்

ஜெயலட்சுமி விகடன், பெரியவாள் சின்னவாள் விகடன்
அய்....

அய்..... அய்...... அய்....
இட்லிவடை மட்டும் தான் ரஜினிவிகடன் போடுவாறா நாங்க போடுறோம் பாருங்க ஜெயலட்சுமி விகடன், 'வாள்' விகடன்....
ம்... 1995-96 அட்டையெல்லாம் விகடனின் இணைய பக்கத்தில் இல்லை, இருந்தால் நம்ம பிரேம்ஸ் எத்தனை முறை விகடன் அட்டையில் வந்திருக்கார் என எடுத்து போடுவோம்....
எலேய்... ரஜினி படத்தை அட்டையில போடுறதால வியாபாரமாகுதுன்னா ஜெயலட்சுமி, பிரேம்ஸ், வாள் பக்தர்களுக்கெல்லாம் கெளம்பிடுவாங்க... இவிங்க படத்தை போடுறதால தான் விக்குதுன்னு...
காத கிட்ட கொண்டுவாங்க ஒரு ரகசியம்...
இந்த விசயத்துக்காக விகடன் 3 வருசத்து அட்டையை பார்த்தப்ப முழுக்க ஜெயலலிதா, கருணாநிதி, மருத்துவர் ராமதாசு தான், ஒரு ஒன்னரை வருசமா விஜயகாந்த் இவங்க படம் தான் அதிகம்...

விகடன் வரவேற்பறையில் குழலி பக்கங்கள்

இந்த குழலி பக்கங்கள் ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது தொடக்கத்தில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தாலும் சில மாதங்களில் சோர்வு சோம்பல் எல்லாம் சேர்ந்து விட்டது அதனால் தொடர்ந்து எழுதவில்லை. நேரம் கிடைத்தால் என் எழுத்துகள் இதிலும் சபால்ட்டர்ன் கதைகள் என்ற இன்னொரு பதிவிலும் தொடரும் தொடரும்.

விகடன் வழியாக அறிந்து இந்த பதிவை காண வந்துள்ளவரென்றால் உங்களுக்கு திரட்டி தமிழ்மணம் தமிழ்வெளி பற்றி தெரியாதென்றால் ஒரு முறை அந்த வலைதளங்களுக்கு சென்று பாருங்கள் ஒரு புது அனுபவம், ஒரு புது வெளி, ஒரு புது பார்வை கிடைக்கலாம்.

தமிழ்வெளி
தமிழ்மணம்
திரட்டி
தேன்கூடு
கீற்று
தமிழ்.நெட்

வெகுசன ஊடகங்களின் பொது கருத்துகளுக்கும் எமக்கும் பெரும்பாலும் ஒத்து வந்ததேயில்லை, பொதுவாகவே எமக்கு கிடைத்த இந்த குழலி பக்கங்களில் வெகுசன ஊடகங்களை பெரும்பாலும் சாடியே வந்துள்ளேன், விகடனின் வரவேற்பரையில் என்பதிவு பற்றி வந்தது கொஞ்சம் வியப்புதான், விகடன் வரவேற்பரையில் என் பதிவை தேர்ந்தெடுத்த அந்த விகடன் அலுவலருக்கும் விகடனுக்கும் நன்றி.

அரசியலில் சாதி - குழப்பமும் உரத்த சிந்தனையும்

பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

அழகிய தமிழ் பெயர் தேவை

நண்பரின் ஆண் குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் தேவை, நல்ல தமிழ் பெயரை பரிந்துரைத்துதவுங்கள்
நன்றி

நவிலன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது, பெயர்கள் பரிந்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி

காமெடி+ செண்ட்டிமெண்ட் கோவி.கண்ணனின் அழுகாச்சி காவியம்(கடிதம்)

சில மாதங்களாக கடுமையான அலுவலக வேலை, என் குட்டி பையனோடு ஆட்டம், எனக்கு உருப்படி என தோன்றும் வேறு சில வேலைகள் அட எல்லாத்துக்கும் மேல பல நேரங்களில் யாருக்கு எழுதறோம்னே தெரியாமா ஜார்ஜ்புஷ்ஷூக்கு ஒரு கேள்வி, பில் கிளிண்டனுக்கு ஒரு சவால்ங்கற அளவுக்கு தி.நகர் முக்குட்டு சந்தில் நின்று கொண்டு ஜார்ஜ்புஷ்ஷீக்கு சவால் விடும் அளவிலேயே பல நேரங்களில் வலைப்பதிவு கட்டுரை எழுதுவதால் எல்லா எழவுக்கும் கருத்து சொல்ல நினைத்தாலும் அப்படியே எழுதாமல் போய்விடுவதுண்டு என்றாலும் பதிவுகளை கொஞ்சம் கொஞ்சம் தொடர்ந்து படித்து வரும் போது பல நேரங்களில் நமுட்டு சிரிப்போடு(எழுதுபவரின் ஹிப்போக்கிரசி எழவு தெரிந்து தொலைவதால்) படித்துவிட்டு கடந்து சென்றாலும் சில நேரம் எழுத தூண்டுகிறது.அப்படியாக எழுத தூண்டிய ஒரு விசயம் தான் விடாது கருப்பு குழுமத்திற்கு அண்ணன் கோவி.கண்ணன் எழுதிய காமெடி+ செண்ட்டிமெண்ட் கலந்த அழுகாச்சி காவியம்(கடிதம்).... ஹா ஹா அதில் கொஞ்சம் ஆக்ஷனும் காதலும் இருந்துவிட்டால் ஒரு மசாலா படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும்....

அண்ணன் கோவியாருக்கு வேண்டுமானால் அது எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியாகத்தான் முடிவடையும் இந்த படம் என்று தெரிந்த கிளைமாக்ஸ் தான்....

அண்ணன் கோவி.கண்ணன் கடிதம் ஆரம்பமே செம காமெடி விடாது கருப்பு பதிவை படிச்சிதான் கோவி அண்ணன் பெரியாரை தெரிஞ்சிக்கிட்டாராம், அய்யோ அய்யோ தாங்கலை (சந்திரமுகி பிரபு ஸ்டைலில் உச்சரிக்கவும்)என்ன கொடுமை கோவியாரே.... நல்ல வேளை இதையெல்லாம் கேட்க பெரியார் உயிரோடு இல்லை.... பெரியாரையும் கருப்பு மூர்த்தியையும் வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.... கோவி அண்ணே கருப்பு பதிவுக்கு இன்னொரு சர்ட்டிபிகேட் கொடுத்து இருக்கார் அது படா காமெடி...அந்த சர்ட்டிபிகேட்டை கீழே தந்திருக்கேன்...

//இன்றைய தேதிகளில் பெரியாரின் கொள்கைகளை, சமுக நீதி, பகுத்தறி, மூடப்பழக்கங்களைச் சாடுபவர்களாகவும், எண்ணற்றோர் எழுதுகிறார்கள். நீங்கள் எழுதிய காலங்களில் அப்படி எழுதுவர்கள் மிகச் சிலரே இருந்தனர். ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக பார்பனியம் குறித்து எழுதினால் தங்களை முத்திரை குத்திவிடுவார்கள் என்று பலர் இலைமறை காயாக தொட்டு எழுதியவற்றை, நீங்கள் உடைத்தே எழுதினீர்கள்//

கோவி அண்ணே விடாது கருப்பு பதிவில் என்னன்னே இருக்கு, ஒரு முறை நன்னா ரீவைண்ட் செய்து பாருங்கன்னே.... விடாது கருப்பு பதிவு பல பதிவர்களின் சாதியை சொல்லியும் அவர்கள் அம்மா குடும்பத்தை திட்டுவதற்குமே பயன்பட்டது, இணையத்தில் கிடைக்கும் விடுதலை, உண்மை, கீற்று தளங்கள், இது தான் உண்மை மற்றும் சில வலைப்பதிவுகளிலிருந்து திராவிட தொடர்பான கட்டுரைகளை காப்பி பேஸ்ட் முறையில் ஒட்டப்பட்டுள்ளது, இதற்கு பின்னாலும் ஒரு அரசியல் ஏற்கனவே என்னோட பதிவில் சொன்னது தான்

//முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணத்திலிருந்து மூர்த்தி நீக்கப்பட்ட போது ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் கேட்க நாதியில்லாமல் வெளியேற்றப்பட்டான் மூர்த்தி, கடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போலி மூர்த்தி பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதும் விடாது கருப்புவாக வலைப்பதிவுலகின் மூர்த்தியின் ரீ-எண்ட்ரி தனது சொந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள பெரியார் பெயரை சொல்லிக்கொண்டும் பெரியாரின் தொண்டனாகவும் நடந்தேறியது.

மிக மேலோட்டமான மொக்கையான விவாதகளங்கள் நடத்தி வரும் காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சரி, அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி வெகுசன ஊடகங்கள் திராவிட, சபால்ட்டர்ன் கதையாடல்களுக்கு எந்த விதமான இடமும் அளிக்காமல், தம் இனத்தின் நலனுக்கான, தம் சாதிக்கான கருத்தாக்கங்களை, வேறு யாரும் ஊடகத்துறையில் வந்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊடக ஒழுக்கத்தை மீற முடியாதவாறு பொதுப்புத்தியாக மக்கள் மனதில் புகுத்திக்கொண்டிருக்கும், இருக்கின்ற இந் நிலையில் இந்த இணைய வெளி ஏற்படுத்தியிருக்கும் சுதந்திரவெளியில் மிகப்பெரிய தொடர் விவாதங்கள், உரையாடல்கள், கதையாடல்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த சூழலில் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஆபாசமாக பேசி வெகுசன ஊடகங்கள் மறுத்திருக்கும் ஒரு விவாத களத்தை

இணையத்தில் சாத்தியமாக்கியிருக்கும் விவாத, உரையாடல் சூழலை நாசமாக்கும் மூர்த்தியின் போலி செயல்பாடுகள் விடாது கருப்பு பதிவில் நடந்தேறியதே....கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இணைய ஊடகத்தில் பெரியார் சிந்தனைகள் மற்றும் வெகுசன ஊடகத்தில் பேசப்படாத விடயங்கள் பலராலும் பேசப்பட ஆரம்பித்த நேரத்தில் கருப்பு என்ற பெயரில் எல்லோரையும் ஆபாசமாக எழுத ஆரம்பித்த மூர்த்தியினால் பார்ப்பன சனாதான வாதிகள் பெரியார் பெயர் சொல்லிக்கொண்டு ஆபாச களஞ்சியமாக திகழ்ந்த மூர்த்தியின் பின்னால் ஒளிய ஆரம்பித்தார்கள், இணைய ஊடகத்தில் வெகுசன ஊடகத்தினால் மறுக்கப்பட்ட மாற்று சிந்தனைகள் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் ஆபாச தாக்குதல்கள் நடத்தி இவர்கள் இப்படித்தான் என்று பலரையும் நினைக்க வைத்து மாற்று கருத்தாளர்களின் மீது ஒரு சந்தேகத்தை விளைவித்தது மூர்த்தியின் ஆபாச கூத்துகள் என்றால் அது மிகையாகாதா..... இப்படிப்பட்ட கருப்பு மூர்த்திக்கு அண்ணன் கோவியார் கொடுத்த சர்ட்டிபிகேட் தான் அது....


அடுத்ததாக கோவி அண்ணன் கடிதத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்
//முன்னாள் பதிவரும் (திரு மூர்த்தி) அதில் உறுப்பினராக இருக்கிறார் என்பதை முன்பே ஒரு பதிவர் சொன்னபோது தெரிந்து கொண்டேன். என்னுடன் விடாது கருப்பு பதிவு சார்பாக பேசியவர் பதிவர் அவர்தான் என்பது பின்பு தான் தெரிந்தது. நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் அவரை நான் சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு அவரும் என்னுடன் சாட்டில் உரையாடி இருக்கிறார்.
//

//போலி விவகாரத்தில் எனது கருத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தேன். //
கோவி அண்ணன் போலிவிவகாரத்தில் வெளிப்படையாக என்ன கருத்து சொல்லியிருந்தாருன்னு ஒரு சின்ன ப்ளாஷ் பேக் போயிடலாமா?

http://govikannan.blogspot.com/2007/09/blog-post.html

பாதிக்கப்பட்ட நண்பர்கள் சிலர், முத்தமிழ்மன்ற மூர்த்தி தான் போலி என்று சொல்கிறார்கள். தம்மீது குற்றம் இல்லையென்று மூர்த்தியோ, அவரை குற்றம் சொல்லும் எனது நண்பர்களோ ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காவல் துறை உதவியை நாடி இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றே விரும்புகிறேன்.

இதில் கோவி அண்ணனுக்கு மூர்த்தி தான் போலி என்று சிலர் சொல்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.... அதற்கு அடுத்தபடியாக செல்லா பதிவில் மூர்த்தியின் 'நாத்த' தமிழ் ஆடியோ வெளியிடப்பட்டது...., நண்பர்களை ஆதாரங்களை எடுத்துக்கொண்டு காவல்துறை உதவியை நாட சொல்லியிருக்கும்(காவல்துறையை நாடுவதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் என கோவி அண்ணனே அந்த பதிவில் சொல்லியிருக்கிறார் என்பது வேறு விசயம்) இந்த ஆடியோ ரிலீஸில் ஆபாச பேச்சு பேசிய மூர்த்தியின் குரலை பலமுறை மூர்த்தியோடு போனில் உரையாடியிருக்கும் கோவி அண்ணனால் கண்டுபிடிக்க இயலவில்லையா?, மூர்த்தியின் குரலை கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை, ஒரே ஒரு முறை கேட்டால் போதும் எப்போதும் மூர்த்தியின் குரலை கண்டு கொள்ள இயலும், மூர்த்தியின் குரல் கொஞ்சம் கீச்சு குரலாக சின்ன பையன் குரலா அல்லது கொஞ்சம் கொஞ்சம் பெண் குரலா என்று கண்டுபிடிக்க இயலாத அளவிற்கான ஒரு குரல் மூர்த்தியின் குரல், மூர்த்தியின் குரலை குறை சொல்ல வேண்டுமென்றோ குறிக்க வேண்டுமென்றோ நான் இதை சொல்லவில்லை, மூர்த்தியின் குரலை ஒரு முறை கேட்டிருந்தாலே போதும் பிறகு எப்போதும் மிக எளிதாக மூர்த்தியின் குரலை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாமென்பதற்காக சொன்னேன்.....

பி(பு)ன்னூட்ட பாலா எப்போது கோவி அண்ணன் பதிவில் பின்னூட்டம் போட்டாலும் "ஜெயராமன்" "ஜெயராமன்" என்று பி(பு)ன்னூட்ட பாலா விளிக்கும் அண்ணன் கோவியாருக்கு அந்த ஆடியோ ரிலீஸ்க்கு பிறகும் மூர்த்தி தான் அதை பேசியது என்று தெரியாமல் போய்விட்டதோ? ஏகப்பட்ட கருத்துகளை சொல்லும் கோவி அண்ணன் ஒரு இடத்தில் கூட போலி மூர்த்தி பற்றி பேசவில்லையே? இப்போது கேட்கிறேன் அந்த ஆடியோவில் இருக்கும் குரலும் உங்களோடு பேசிய விடாதுகருப்பு(எ)சதீஷ்குமார்(எ)போலி மூர்த்தியின் குரலும் ஒன்றா இல்லையா? என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? கோவி அண்ணன் மூர்த்தியின் குரலும் அந்த நாத்த தமிழ் ஆடியோவில் இருக்கும் குரலும் ஒன்று என ஒத்துக்கொள்வாரோ என்னமோ ஆனால் மூர்த்தியின் வீட்டில் அந்த ஆடியோவை சில நிமிடங்கள் மட்டுமே கேட்டு ஆமாம் மூர்த்திதான் அது என்று ஒத்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு மேல் ஆடியோவை கேட்க முடியாமல் நிறுத்தி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்!


http://karuppupaiyan.blogspot.com/2007/07/blog-post_4473.html
என்ற பதிவிலும் மேலும் பல விடாது கருப்புவின் பதிவுகளிலும் தலித்களின் மீது மிக மோசமான சாதி வெறி தாக்குதல் பின்னூட்டங்களில் நடத்தப்பட்டிருக்கும்.... அதில் சில கீழே

வெங்காயம் said...
இத்தனைநாள் தீண்டாத் தகாதவனா பாப்பான் வெச்சிருந்தான்.
நீங்க இந்த அளவுக்கு இறங்கி வந்து இவன்களுக்காக போராடுகிறீர்களே அதுவே பெரிய விஷயம்.நீங்க போங்க சார். அவனுங்க பாப்பானிடம் அடிபட்டு மிதிபட்டு செருப்படி வாங்கினால்தான் திருந்துவானுங்க

அழகரசன் said...
இந்த தலித்து நாதாரிக்காக நீங்க இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்க வேண்டாம். உங்க ஜாதி என்ன இந்த பரதேசியின் ஜாதி என்ன? நீங்க இவனுக்காக போராடினால் இவன் டோண்டுகூட தொடுப்பு

வெச்சிருக்கான்.

சிவா said...
தியாகு என்ற பரபோக்கி நாதாரி

செந்தில் said...
சார்,
உயர்ந்த ஜாதியான நீங்க ஏன் இந்த பர நாய்களுக்காக கஷ்டப்படுறீங்க? அவனுங்க பாப்பானிடம் ....

தனக்கு தானே போட்டுக்கொண்ட பின்னூட்டமோ அல்லது இந்த மாதிரி பின்னூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் மூர்த்தியின் ஆதிக்க சாதி பொறுக்கித்தனம் வெளிப்படையாக தெரிகிறதே இதற்கு அண்ணன் கோவியார் என்ன கருத்து சொல்ல விழைகிறார்? விடாது கருப்பு பதிவில் இதையெல்லாம் படித்து தான் கோவி அண்ணன் பெரியாரை பற்றி தெரிந்து கொண்டார் போலும் "என்ன கொடுமை கோவியாரே"( சந்திரமுகி பிரபு ஸ்டைலில் உச்சரிக்கவும்)


செல்லாவை தலித் கம்ணாட்டி என்று மூர்த்தி திட்டியபோது அவர் வெளியேறுகிறேன் என்று போட்ட பதிவில் நீங்கள் இட்டம் பின்னூட்டம்
ஆகா அற்புதம்...

"ஒருவரை 'பாப்பானே' என்று விளிப்பது கூட இழிவு சொல் ஆகிவிட்டது என்று புரிந்தால் சரி.
நீங்கள் வேண்டுமானால் ஒரு பிராமணரை 'பாப்பான்' என்று சொல்லிப் பாருங்க நிச்சயம் கோவப்படுவாங்க."


இதுக்கு என்னாங்கன்னா அர்த்தம்? தலித் கம்னாட்டி என்பதும் பார்ப்பான் என்பதும் ஒன்றுதான் கண்டுக்காதே போ என்றா? எழவு எனக்கு ஒரு மாதிரி குன்சா புரிஞ்சிருக்கு நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டா நான் புரிஞ்சிக்கிட்டதுல எதும் மாற்றம் இருந்தா மாத்திக்கிடலாம் பாருங்கண்ணே...

அடுத்ததா கோவி அண்ணன் கடிதத்தின் செண்ட்டிமெண்ட் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் பகுதி வருது

//என் பிறப்பை இழிவு செய்யும் படி குறிப்பிட்டு தாறுமாறாக எழுதி இருந்தாலும் நான் வருத்தப்பட்டு இருக்கமாட்டேன். ஆனால் அதில் எனது சாதி இதுவென்று ஊகமாக குறிப்பிட்டு, அதுவும் சில நண்பர்களிடம் நெருக்கமாக பழகுவதால் இந்த சாதியைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான் என்பது போல் எழுதப்பட்டு இருந்தது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.
//
ஏய் என்னாங்கப்பா இது அம்மாவை பத்தி திட்டினா கவலைப்படமாட்டேன் ஆனா என் மேல சாதி முத்திரை குத்தினா மட்டும் காயப்பட்டுடுவேங்கறது என்னாங்கய்யா சீன் மேல சீன் போடுறாங்க இதென்ன புது ட்ரெண்டா?

அட ஆமாம் கோவி அண்ணே இப்போதான் ஒன்று நினைவுக்கு வருது, மேட்டர் என்னனா போலி பிரச்சினை நடக்கும் போது "என் நண்பர்களின் தாயும் என் தாய் போலத்தான் நினைக்கிறேன்னு" சொல்லியிருந்தீங்க.... அட எத்தனையோ மின் மடல் மூர்த்தி என்னை வன்னிய தே. மகனே என்று ஆரம்பித்து தான் எழுதியிருப்பான்(CC யில் நீங்களும் உண்டு என்பதை கடிதத்திலேயே பெயர் குறிப்பிடாமல் சொல்லியிருந்தீரே) அப்போதெல்லாம் நீங்கள் மூர்த்தியை என்ன கடிந்து கொண்டீர்கள் என்றோ ஏன் சமாதானமாக போ என்று சொன்னார் அதுக்கப்பறமும் பேட்ச்சப் வேலை பார்த்தார் ஆனால் இங்கே என்னடான்னா "என் நண்பர்களின் தாயும் என் தாய் போலத்தான் நினைக்கிறேன்னு" வேற டயலாக் விடுறாரே அப்போ ஏன் அவருக்கு ஒன்றும் ஆகலையா என்று நினைத்திருந்தேன்,குழம்பினேன் இப்போ புரிந்துவிட்டது உங்க பிறப்பை இழிவு செய்யும் படி குறிப்பிட்டு தாறுமாறாக எழுதி இருந்தாலே நீங்கள் கவலைப்பட மாட்டீங்கங்கற போது மத்தவன் குடும்பத்தை பற்றி எழுதியதெல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா என்ன?

மாயவரத்தான் மாயவரத்தான்னு ஒரு பதிவர் இருந்தாரே தெரியுமான்னே, அவருக்கும் நமக்கும் பதிவு உலகில் ஏழாம் பொறுத்தம், அப்படியே எல்லாத்துக்குமே எனக்கு ஏட்டிக்குப்போட்டியான கருத்து கொண்டவர் இந்த விடாது கருப்பு தான் மூர்த்தி என்று தெரிவதற்கு முன்னால் விடாது கருப்பு திராவிட தமிழர்கள் குழுமத்தில் இணைந்து பின் ஓரிரு முறை என்னிடம் ஜிடாக்கில் பேசினான், மாயவரத்தானை பற்றி மிக அசிங்கமாக பேசினான், அப்போதே அவனை எச்சரித்துவிட்டு அவனுடைய சாட் ஐடியை ப்ளாக் செய்துவிட்டேன்...

கடைசியாக கிளைமாக்ஸ் படத்துலலாம் ஹீரோ வசனம் பேசுவாரே? அது மாதிரி அண்ணன் கேள்விக்கணைகளால் துளைத்திருப்பார்....

//நானாக இதுவரை எந்த பதிவரிடமும் என் சாதி 'இது' என குறிப்பிட்டது இல்லை. விடாது கருப்பு பதிவில் என்னை சாதி சொல்லி இழிவு படுத்தியது ஏன் ? இன்னும் பல பதிவர்களுடன் பழகுகிறேன். அவர்களில் இருவர் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் நானும் அவர்களின் சாதியை சேர்ந்தவர் என்பீர்களா ?//

//நண்பர் மகேந்திரன் மீது திடீரென்று சாதி வெறி என்று முத்திரை எழுதியது ஏன் ? என்று விளக்கம் கேட்க கருப்பு குழுவை தொடர்பு கொண்டேன். //

இதோ இந்த பதிவில் இந்த இடம் வரை நானும் நீங்களும் பொதுவில் வைத்தவைகளை பற்றி மட்டுமே பேசியிருக்கேன், தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டதையோ நீங்கள் வெளிப்படுத்தாத எதைப்பற்றியும் நான் பேசவில்லை (அப்படி தனிப்பட்ட முறையில் சில சொந்த கதைகளை தவிர பெரிய ரகசியம் எதுவும் பேசவில்லை என்பது வேறு கதை).... எனக்கு தனிப்பட்ட முறையில் கேட்க நினனத்த விசயங்கள் சந்தேகங்கள் என எந்த ஒரு விசயத்தையும் இந்த பதிவில் பேசவில்லை ஆனா இந்த மகேந்திரன் விசயத்துக்கு மட்டும் கொஞ்சம் நாம தனிப்பட்டு பேசிக்கொண்ட ஒரு விசயத்தை சொல்றேன்.....

கோவி அண்ணே உண்மையாவே உங்களுக்கு மகேந்திரன் மேல சாதி வெறி என்று முத்திரை எழுதியது ஏன்னு தெரியலையா? இதுக்கு விடையை சில மாசத்துக்கு முன்ன நாம பேசிக்கிட்டு இருந்த போது

சொன்னேனே..... ஹா ஹா கோவி அண்ணா கொஞ்சம் ப்ளாஷ் பேக் சக்கரத்தை சுற்றிவிடுங்க..... ட்ரொய்ங்ங்ங்ங்ங்

ஹலோ ஸ்டாப் ஸ்டாப்...இடம் வந்தாச்சி.....

"உங்கள் முன்னால் நண்பர் மகேந்திரனை வன்னியனாக பார்க்கவில்லையே"

(கோவி அண்ணனுக்கு எப்பவுமே என்னன மூர்த்தியின் முன்னாள் நண்பர் என்று சொல்வதில் அலாதி பிரியம் ஹா ஹா அதில் என்ன 3 தடவை ஹாய் சொல்லி சில நிமிடங்கள் பேசியிருந்தா நண்பன்னா )நான் சந்தித்தவர்கள் அனைவருமே என் நண்பர்கள் தான்) சரி அதைவிடுவோம் மேட்டருக்கு வருவோம் "உங்கள் முன்னால் நண்பர் மகேந்திரனை வன்னியனாக பார்க்கவில்லையே" என்று நீங்கள் கேட்டதற்கு நான் சொன்ன பதிலை கொஞ்சம் பாருங்க

"me: அதைத்தான் நாணும் சொல்றேன் போலி பிரச்சினையிலும் டோண்டு பிரச்சினையிலும் மூர்க்கமாக நான் எதிர்க்கிறேன் மகியை போலியை திட்டியும் டோண்டுவை போலி பிரச்ச்னைய்ல் ஆதரித்தும் ஒரே ஒரு பதிவு போட சொல்லுங்கள் அப்போதே மகி வன்னிய பொறம்போக்கு என்று வசைபாடப்படுவார்"

என்று மூர்த்திக்கும் மகிக்கும் முட்டிக்குதோ அன்னைக்கு மகி ஜாதிவெறியன் என்று வசைபாடப்படுவார் என்று சொல்லியிருந்தேன் அப்போ நம்பலை நீங்க! இப்போ?

கோவியாரை ஒருமையில் பேசிவிட்டு வைத்துவிட்டானாம்... கோவி அண்ணன் வருத்தப்பட்டு எழுதியிருக்கார் போலும் அண்ணன் கோவியாருக்கு வேண்டுமானால் அது எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியாகத்தான் முடிவடையும் இந்த படம் என்று தெரிந்த கிளைமாக்ஸ் தான்.... மூர்த்தியை பொறுத்தவரை பழகியவன் பழகாதவன் தெரிந்தவன் தெரியாதவன் என்று எந்த கணக்குமில்லை.... முட்டிக்கொண்டால் அம்மாவின் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவான்....


சரி படம்னா ஒரு மெசேஜ் வேணுமில்லையா? கோவி அண்ணன் அதையும் வச்சிருந்தார்


//அந்த நண்பருக்கும் எனக்கும் தனிப்பட்ட பகைமை எதுவும் இல்லை, இருந்தாலும் கருப்பு குழுவுடன் தொடர்பு இருந்ததால் என்னுடன் நட்பு பாராட்ட முடியாது என்று நினைத்திருக்கலாம். அவருக்கு எனது இரட்டை நிலைப்பாடு பிடிக்கவில்லை என்பதால் அவரது செயலில் இருப்பது அவரளவில் ஞாயம் என்றே நினைக்கிறேன். கோவிலில் இருக்கும் கடவுளுக்கு முன்பு நல்லவர் கெட்டவர் சமம் என்பார்கள். அது ஒருபக்க ஞாயம் ? நல்லவனும் கெட்டவனும் உனக்கு ஒன்றா ? என்று எந்த கடவுளையும் யாரும் கேட்பதில்லை. நான் கடவுள் இல்லை. கடவுள் தன்மை என்று கற்பனையாக கூறப்படுவையில் ஓரளவு சாத்வீகமும் இருக்கிறது, அந்த தன்மை எனக்குள்ளும் வளர்த்துக் கொள்ள முயன்று வருகிறேன்.
//

சமமான இரண்டை சமமற்று நடத்துவது எத்தனை அய்யோக்கியத்தனமோ அத்தனை அய்யோக்கியத்தனம் சமமற்ற இரண்டடை சமமாக நடத்துவதும்..... அது கடவுளாகவே இருந்தாலும்.... நீங்கள் எல்லோரையும் சமமாக நடத்தி நன்றாக இருங்கள்?


எழவு இந்த போலி மூர்த்தி பிரச்சினையில் ஏற்கனவே நண்பர் சுகுணாவுக்கு கடிதம் எழுதினேன், இப்போ உங்களுக்கு.... இந்த வேலையில்லாத வெட்டி வேலையில் இன்னும் யாருக்கும் பதிவு,கடிதம் எழுத வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கும் சூழ்நிலை வர வேண்டாமென மிகவும் ஆசைப்படுகிறேன்....

பெரியார் சொன்னதில் முதன்மையானது சுயமரியாதை.... முதலில் சுயமரியாதையோடு இருக்கலாம் பிறகு பார்ப்பனியத்தில் ஆரம்பித்து மற்ற எல்லாவற்றையும் சிக்கு சிக்கு சிக்குன்னு புடுங்கலாம்....


வேலை அதிகம் பின்னூட்டமெல்லாம் உடனே உடனே வெளியிட இயலாது..... பார்ப்போமா!!!!!!! பை..........

'தை' இது கவி'தை' திருவிழா - தை இதழ் இணையத்தில் வெளியீடு'தை' இது கவி'தை' திருவிழா...

உழைப்புக்கவுச்சியற்ற ஒரு சொல்லும்
கவிதை தராது
தமிழ்நெடுக உழைப்புக்கவுச்சி
இன்னும் இன்னும் அது கவிதை தரும், தந்து
கொண்டேயிருக்கும்...


'தை' இது கவி'தை' திருவிழா, பாவலர் அறிவுமதி அவர்களின் 'தை' காலாண்டிதழின் மூன்றாம் இதழ் தமிழ்வெளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது