இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பகுதி - 2

பகுதி -1

முன்குறிப்பு:

இந்த படைப்பு முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல, வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே சில பேச்சு நடைகளை இங்கே பயன்படுத்தியுள்ளேன், தவறிருந்தால் மன்னிக்கவும்

காஜா:
மயிர்நீப்பின் உயிர் வாழா கவரிமான் போல நீதி வழுவா பாண்டிய மன்னனாகிய நடுவரே
சா.பா.
அய்யா காஜா கொஞ்சம் நிறுத்திருங்களா, நம்ம மண்டைய பாத்து மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான், என்னய்யா இது?
ரவுசு பண்ணனும்னே வந்திருக்கிங்களான்னேன்

காஜா :
தமாசா பேசிகினு பூட்டாரு புள்ளிராஜா, ஆனா எல்லாம் டகுலு, ரசிகருங்க யெல்லாம் சொந்த துட்ட போட்டு கட்-அவுட் கட்றாங்களாம், நைனா துட்ட போட்டு கொடி கட்றாங்களாம், எந்தூரு ராஜா நீ. என் குப்பத்துல ஒரு ரசிகர்மன்றம் கீது, ஆருது தெரியுமா? அந்த ஆக்டரோட பேரு "குமார்" ல தான் முடியுது. அவுரு நைனாவும் "குமார" ஆக்டருதான் அவுரு குடும்பமே ஆக்டிங்தான், அவரு நைனா,தங்காச்சி எல்லாத்துக்கும் அப்ப அப்ப படம் வரும், ஆனா இவுருக்கு வருசத்துக்கு ஒரு தபா கூட படம் ரிலீஸ் ஆகாது, அந்த மன்ற தலீவரகிட்டால கேட்டான் ஏன் நயினா இவுருக்குலாம் மன்றம் வச்சிக்கினுகீரிய யின்னா ரொம்ப புடிக்குமா ஒனக்கு, யின்னா மேட்டருனு, அந்த தலீவரு சொன்னாரு அந்த ஆக்டருக்கிட்டருந்து வருசத்துக்கு ஒரு தபா 15,000 மன்ற செலவுக்கு வருமாம், அதுல ஒரு 1000 மன்ற போர்டுக்கு பெயிண்ட் அடிக்க, ஆக்டர் பர்த் டேக்கு போஸ்டர் அடிக்க எப்போனா வர்ற படத்துக்கு கொடி கட்-அவுட்டுக்கு ஒரு 2000 போவ மீதி 12000 நம்ம பாக்கெட்டுக்குதான் நான் என்ன இனா வானாவா மன்றம் வக்க, ஆனா கரீக்டா கட்-அவுட்,போஸ்டரு,போர்டு இதெல்லாம் போட்டோ புடிச்சி அனுப்பிடனும் இல்லன அடுத்த தபா பணம் வராது...

சா.பா.
அப்படி போடுன்னேன், ஆகா ஏதோ ராஜா சொன்னத வச்சி சொந்த காசுலதான் கட்-அவுட் வைக்கறாங்கனு ஏமாந்துட்டேன்
இப்பதானே தெரியுது விசயமே, இவங்களும் லேசு பட்டவங்க இல்லனு

காஜா:
எனிக்கு ஒரே டவுட் ஏன் நையினா உன்து ஒன்னுமட்டும்தான் இப்பிடியா இல்ல எல்லாமே இப்டியான்னேன்
யெல்லாம் இப்பிடிதான் இன்னா மேட்டருனா மன்றத்தை கரீக்டா ரீஸ்ட்டு பண்ணிடனும், ரீஸ்ட்டு பண்ணிட்டு அப்போ அப்போ துட்டு தருவாங்க, மாநில தலீவர்கிட்டயிருந்து துட்டு மாவட்ட தலீவருக்கு வரும் அவுரு அப்பாலிக்கா ஒரு ஒரு ரீஜனுக்கு துட்ட பிரிச்சி குடுப்பாரு, வருசத்துக்கு ஒரு மன்றத்துக்கு 15,000 நம்ம இஸ்டாரு குடுத்தா லாஸ்டு மன்றத்துக்கு 10,000 தான் வரும், இதுலங்காட்டி அப்ப அப்ப கரைச்சலாயிடும், ஆனா எல்லா மன்றம் கரீக்டா பேனரு, கட்-அவுட் எல்லாத்தையும் கலர் போட்டு எடுத்த மாநில தலீவருக்கு அனுப்பிடனும் அப்டினு சொன்னாரு பேஜாராயிட்டேன் பா

சா.பா.
அது சரி, கலர் போட்டா அனுப்பினாத்தானே குடுத்த பணம் கொஞ்சமாவது செலவு பண்ணது தெரியும்

காஜா:

நம்ம பேட்டையாண்ட இப்பாலிக்கா ஒரு மன்றம் அவரு பெரிய இஸ்டாரு, அவுரு பொறந்தநாளிக்கு கபடி,கிரிக்கெட்டு போட்டினு ஒரே குஜால்தான், மன்றத்து தலீவருக்கிட்ட கேட்டேன் யாருப்பா இதுக்குலாம் துட்டு தர்றது, ஆக்டரானு கேட்டேன், அட போ அண்ணாத்தே அவரு படத்துக்குலாம் இப்போ ரசிகர்மன்ற ஷோ கூட ஃப்ரியா இல்ல, அதனால கடையில, அப்புறம் பப்ளிக்கிட்ட கலெக்ட் பண்ணிக்குவோம், பர்ஸ்ட் பிரைஸ் ஸ்பான்சர் நம்ம எம்மெல்ஏ செகண்டு நம்ம கவுன்ஜிலரு தேர்ட் பிரைஸ் நம்ம பால்காரரு இஸ்பான்சர் பண்ணுவாங்க, அப்பாலிக்கா கலக்ட் பண்ண துட்டு யாருக்குப்பான்னேன் அது ஆர்கனைசிங் கமிட்டிக்கு, அது ஆரு ஆர்கனைசிங் கமிட்டின்னேன், நாங்கதேன் அது அப்டின்னாரு பாருங்க பேஜாராயிட்டேன்

சா.பா.

அட அட பசங்க வெவரமாதானுங்கய்யா இருக்காங்க

கா.ஜா.

ஆனா இந்த தொண்டருங்க இன்னா பண்றாங்க, என் ரத்தத்தின் ரத்த்மே, உடன்பிறப்பே, பாட்டாளி தோழர்களே னு சொன்னாங்காட்டியும் உருகிடுறானுங்க, அது இன்னானே தெர்ல், இந்த தலீவருங்கலாம் கரீக்டா தீவாளீக்கு முத நாளுதான் எதுனா ஸ்டிரைக் வப்பாங்க, இந்த தொண்டருங்களும் இளிச்சவாய்த்தனமா போயி இஸ்டிரைக் பண்ணி உள்ளாற தீவாளியன்னிக்கு களி துன்னுவாங்கே, அப்பாலிக்கா இவுங்கோயின்னா பண்ணுவாங்கனா தலீவரு, அம்மா எலிக்சன்ல கெலிக்கனும்னு சுண்டு வெரல வெட்டிப்பானுங்க, நம்ம ஃபேனுங்கயின்னா வலிக்கிற வளராத சுண்டு வெரலயா வெட்டிப்பாங்க, அவுங்க ஆக்டரு படம் சோக்கா ஒடனும்னு வெட்டுனா வலிக்காத, அப்பாலிக்கா வளர்ற மசிரத்தான் மொட்டையடிச்சிப்பாங்க இத்தோட என் பேச்சை முடிச்சிக்கினு குந்திக்கிறேன்

சா.பா

ஆகா ஆகா நம்ம காஜா இப்பாலிக்கா ஒரே கன்பியூசன் பண்ணிட்டாரு, ராஜா முடிக்க சொல்ல அந்த சைட் கெலிக்கிற மேரி இருந்துச்சி, இப்போ இந்த பக்கிட்டு கெலிக்கிற மாதிரிகீது, ஒன்னியும் புரியலே,

அடுத்ததாக சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களே என்று பேச அம்புஜம் மாமி அவர்களை பேச அழைக்கின்றேன். வாங்கோ அம்புஜம் மாமி

அம்புஜம் மாமி:

நடுவருக்கும் இங்குள்ள அனைவருக்கும் நமஸ்காரம், காஜா அம்பி நன்னா சிரிக்க சிரிக்க பேசினா, ஆனா அவா பேச்சு முழுசும் காமெடிதான் விஷயம் ஒன்னுமேயில்ல.

சா.பா.

என்னங்க விரல் வெட்டுறதலாம் பேசினாரு நீங்க இப்படி சொல்றீங்க

அ.மா.
காஜா அம்பி நன்னா கத விட்டுண்டு போயிட்டாரு, அய்யோ அவாளாம் பாவப்பட்ட ஆத்மா அவா வெரல் வெட்டிக்கிறா, ஜெயிலுக்கு போறானு, இந்த வெரல் வெட்டுறதுல ஒரு சூட்சமமே இருக்கு, இப்போ அவா தலைவரோ அம்மாவோ ஜெய்க்கனும் னு வெரல் வெட்டிண்டாளா அதை என்ன சீக்ரட்டா வா வெட்டுவா இல்லையே லோக்கல் ரிப்போர்ட்டர எல்லாம் கூப்பிட்டு சொல்லிட்டு தானே வெட்டுவா, இவாளே வெட்டின வெரல் ஐஸ்ல வச்சிண்டிருப்பா, உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயி ஜாயின் போட்டுடுவா, அதை அடுத்த நாளே நியூஸ்ல வந்துடும்னோ, உடனே அவா தலைவரு வந்து பார்ப்பாரோனா? ஆஸ்பத்திரி செலவுக்கு அப்புறமா ஒரு பெரிய அமவுண்ட் குடுப்பாளா அத வச்சிந்து இந்த வெரல் வெட்டிண்டவர் அமோகமா செட்டில் ஆயிடுவா.

சா.பா.

சாதாரண சுண்டு விரல்ல இத்தனை விஷயமிருக்கா, அஃகா ஆகா

அ.மா.

பக்கத்தாத்துல ஒரு கொழந்த மன்றத்தலைவராயிருந்தா, அவா அம்மா எப்போ பார்த்தாலும் அந்த கொழந்த்தைய திட்டின்டேயிருந்தா, நான் அவா கிட்ட கேட்டேன் ஏங்க எப்போ பார்த்தாலும் கொழந்தையை திட்டின்டே இருக்கறேள் னு , அவா சொன்னா இவன் மன்றம் மன்றம்னு அலையிறதுக்கு எதுனா கட்சியில சேர்ந்து அலைஞ்சிருந்தா ஒரு கவுன்சிலராயி லைப்ல நன்னா செட்டிலாயிர்க்கலாம், நான் சொன்னேன் அதனால என்ன மாமி இப்போ அவா ஆக்டர் நாளைக்கு பாலிடிக்ஸ் வந்தா உங்காத்து பையன்தானே கவுன்சிலரு அப்படின்னேன், ஆமா இதையேதான் அவனும் சொல்றான் ஆனா அவன் ஆக்டரு லேட்டா வருவேன்,லேட்டஸ்டா வருவேன்னு சொல்லின்டே இருக்காரே தவிர வர மாட்டேங்கறாளே அப்படினு பொலம்புறா.

சா.பா.

அஃகா அஃகா லேட்டா வரது லேட்டஸ்டா வரதுல இவ்வளவு பிரச்சினையிருக்கா

அ.மா.

இப்போ இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்கோ, இவங்க ஆட்சிக்கு வந்த உடனே இந்த அரசு ஊழியருக்கெல்லாம் டிரான்ஸ்பருக்கு நேர்காணல் வச்சி ஒரு பைசா செலவில்லாம நன்னா பண்ணாளா? அப்புறமா கட்சி காரங்க சம்பாதிக்கனும்னு இப்போ டிரான்ஸ்பருக்கு இருவதாயிரம் முப்பதாயிரம் ஆகுதா? வேண்டியவாளுக்கு டிரான்ஸ்பர் போட முடியுதா, அதனால தொண்டர்கள் இளிச்சவாயர்களா ரசிகர்கள் இளிச்சவாயர்களானு நீங்களே நன்னா ஒரு தீர்ப்பு சொல்லுங்கோ.

சா.பா.

ஆகா அம்புஜம் மாமி நல்லாத்தான் சொன்னாங்க, இப்போ இந்த பக்கிட்டு கை ஓங்கிடுச்சி, சரி பார்வையாளர்கள் நீங்க கைதட்டுறதை வச்சி முடிவு பண்ணலாம்னா நீங்க இந்த பக்கிட்டுக்கும் கைதட்றீங்க, அந்த பக்கிட்டுக்கும் கை தட்டுறிங்க, கண்ண கட்டுதே வடிவேலா கண்ண கட்டுதே.

அடுத்ததாக சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களே என கடைசிப்பேச்சாளர் திரைப்பட நடிகை (தற்போது மெகா சீரியல் நடிகை ) யாவ தேனி அவர்களை பேச அழைக்கின்றேன்

யாவ தேனி அவர்களின் பேச்சும் பட்டிமன்ற முடிவும் அடுத்த பதிவில் தொடரும்...

சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பகுதி -3

4 பின்னூட்டங்கள்:

said...

ரசிகர்கள் பக்கமிருந்தும் தொன்டர்கள் பக்கமிருந்தும் உம்மைத்தேடி ஆட்டோ வரப்போவது உறுதி

said...

இரண்டு பேரு ஒண்ணுனுதான் அய்யா தீர்ப்பு சொல்லுவாரு., சரிதானே?

said...

தலைவா,

மறைக்காம சொல்லனும்.... "குழலிக்கு இன்னொரு பேர் தானே "காஜா" ?? :)


வீ .எம்

said...

//மறைக்காம சொல்லனும்.... "குழலிக்கு இன்னொரு பேர் தானே "காஜா" ?? :)
//

ஹி ஹி காஜா அளவுக்கு நான் ஒன்சைட் இல்லப்பா, ஆனா நானும் மன்றத்துல இருந்திருக்கிறேன், சம்சார சங்கீதம் படம் வரை (விஜய)டி.ராஜேந்தர் மன்றத்துலயும் (மன்ற பலகையில பேரு போட்டா நைனா பிண்ணிடுவாருனு பேர் போடாம இருந்தேன்), அப்பாலிக்கா ஒரு "காந்த்" மன்றத்துல துணைத்தலைவராவும் இருந்திருக்கேன், கலர் போட்டோ மேட்டர்ல இருந்து மன்றத்து மேட்டரு எல்லாம் நமக்கு அத்துபடி தலீவா, பொலிட்டிக்கல் பார்ட்டிங்க கெட்டுச்சி தலீவா மன்றத்து மேட்டருங்களை வெளில சொன்னாக்கா,அப்பாலிக்கா நம்ம மன்ற பொது வாழ்க்கையை பத்தி தனியா பதிவு போடுறேன்