தமிழனின் மானம் காத்த ராவணன் திரைப்படத்தை ஆதரிப்போம்

ராவணன் ஆம்... இந்த ஒரு படம் தோற்றுக்கொண்டிருக்கும் தமிழனின் மிக மிக சிறிய வெற்றிக்கு காரணம், இரத்தவெறி இந்திய அரசு வாங்கிக்கொடுத்து சிங்கள இனவெறி அரசு கொழும்பில் நடத்திய இந்திய ஆஸ்கார் எனப்படும் IIFA வின் விருது வழங்கும் விழா சொதப்பியது, ராவணன் படம் மட்டும் தயாரிப்பில் இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை தமிழன் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.
இந்திய சூப்பர்ஸ்டார் அமித்தாப்பச்சனின் மகன் மற்றும் மருமகள் நடித்தப் படம், தமிழகத்தில் அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராய் படம் பிரச்சினைக்குள்ளாகக்கூடாது என்பது மட்டுமின்றி இனி தமிழ்திரையுலகத்தின் கதவு ஐஸ்வர்யாராய்க்கு அடைபட்டுவிட்டு விடக்கூடாது என்பதாலும் அமிதாப்,அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் கொழும்பில் நடைபெற்ற இஃபாவை புறக்கணிக்க அதன் தொடர்சியாக இஃபா விழா சொதப்பலானது...
இந்த வணிக பயம், தமிழர்கள் விரும்பாத எதையும் செய்ய முற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற வணிக பயம் ஏற்படுத்தப்பட வேண்டும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கும் இதை ஏற்படுத்த வேண்டும்...
இதைப்போலவே தமிழனின் நலனுக்கு எதிராக செயல்பட்டு துரோகமிழைக்கும் இனத்துரோகி அரசியல்வாதிகளுக்கும் அதிகார இழப்பு என்ற பயம் ஏற்படுத்தப்படவேண்டும், அதற்க்கு தடைகல்லாக இருக்கும் துரோக தலைமை, அதற்க்கு சப்பை கட்டுகட்டும் துரோகி தொண்டர்களையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும்.
அதே சமயம் பிரியாணிக்காகவும் குவார்ட்டரையும் சில்லறை காசுகளையும் வாங்கிக்கொண்டு தமிழினத்துரோகி கருணாநிதி போன்றவர்களுக்கு ஓட்டு போடும் காசுக்காக தமிழினனின் ஓட்டை விற்க்கும் சில பல நவீன விபச்சார வாக்காளர்களும், இனத்துரோகத்தை மறைத்து குவார்ட்டர் பிரியாணியை ஏற்பாடு செய்து தந்து விபச்சார புரோக்கர்களாக செயல்படும் துரோக அரசியல்கட்சிகளின் தொண்டர்களும் இதை உணரும் நாளில் தமிழன் மீண்டும் தலை நிமிருவான்


