அரசியலில் சாதி - குழப்பமும் உரத்த சிந்தனையும்
ஒடுக்கிறவர்கள் எப்போதும் வித்தியாசங்களெல்லாம் ஒன்றுமில்லை. நாமெல்லாரும் ஒன்றுதான் என மொழிவதும் ஒடுக்கப்படுகிறவர்கள் இல்லை இல்லை வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைந்த உலகம் இது.நாங்கள் வித்தியாசமானவர்கள் என அரற்றுவதும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகள். அமெரிக்க கறுப்பர்கள் தாங்கள் பேசும் எபோனிக்ஸ் என்பது ஆங்கிலமல்ல தனிமொழி என்று வாதிடுவதும் கிளின்டன் தலையிட்டு எபோனிக்ஸ் எனத் தனிமொழி கிடையாது.அதுவும் ஆங்கிலம்தான் என ஆணையிட்டதும் சமீபத்தில் நடந்த கதை.
ஒடுக்கப்படுகிறவர்கள் தங்கள் வித்தியாசங்களை நிறுவுவதன் மூலமாகவே அதனடிப்படையில் உரிமைகளைக் கோரமுடிகிறது. ஒடுக்குபவர்கள் இந்த வித்தியாசங்களை மறுப்பதன் மூலமாகவே எல்லாருக்குமான மொத்த விடுதலை பற்றிய பெருங்கதையாடலின் மறுபக்கமாக எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரி்மையை ஒடுக்குகிற சக்தி பெற்றுக்கொள்கிறது.
அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையிலிருந்து....
அ.மார்க்ஸ்ன் எழுத்திலிருந்து நாம் புரிந்து கொளவேண்டியது உண்மையில் சமமில்லாத போது எல்லாம் சமம், எல்லாம் ஒன்றுதான் என்று பொதுமை படுத்தும் போது உண்மையில் தாழ் நிலையில் இருப்பவர்களுக்கு துரோகம் இழைக்கிறோம், இது தான் இன்றைய நிலையில் சாதி எங்கேப்பா இருக்கின்றது? எல்லோரும் சமமாகத்தானே இருக்கின்றோம் என்று நாம் பொதுமை படுத்தும்போது உண்மையிலேயே சாதியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துரோகமிழைக்கிறோம்.
சாதி என்பதே அரசாங்கம் கொடுக்கும் சாதிச்சான்றிதழில் தான் வருகின்றது என்று பேசுவதையும் பள்ளிவரை சாதி என்று இருப்பதே தெரியாமல் சாதி சான்றிதழ் வாங்கி ஒருவன் மேல் படிப்பு படிக்க செல்லும் போது தான் சாதி என்று தெரிய வருகின்றது என்று சொல்லும் போதும் இது எத்தனை போலித்தனமானது என்று புரியும்.
கோழியும், ஆடும் சாப்பிடுபவர்கள் மூன்று தெரு தள்ளி இருக்கும் அக்ரகாரத்தில் பிறந்திருந்தால் சைவ உணவுக்காரராகவும் அதே இந்த பக்கம் மூன்று தெரு தள்ளி தலித் சேரியில் பிறந்திருந்தால் கோழியையும் ஆட்டையும் சாப்பிட்டுவிட்டு, சாப்பிடாமல் விலக்கி வைத்திருக்கும் மாட்டையும் சாப்பிட்டிருப்பார்கள், ஒருவன் சோற்றில் இல்லாத மீன் அடுத்தவன் சோற்றில் வருவதெப்படி? ஆடு கோழி சாப்பிட்டு மாட்டை விலக்குவது ஏன்? மாடு சாப்பிட்டால் குடும்பம் விருத்திக்கு வராது என்று பூசி மெழுகி சொல்வதும், தலித் தான் மாட்டுகறி சாப்பிடுவார்கள் என்று (தலித்தென்றெல்லாம் கூட சொல்ல மாட்டார்கள் நேரடியாக சாதிப்பெயரை சொல்லித்தான் சொல்லுவார்கள்)
ஒரே ஊர், ஒரே மதம், ஒரே மொழி தாய் மொழியாக இருக்கும் போது சிலருக்கு ஸ்ரீனிவாஸ் என்றிருக்கும் பெயர் மற்ற சிலருக்கு சீனுவாசன் என்று மாறியதன் மர்மம் என்ன?
ஒரே ஊர், ஒரே மதம், ஒரே மொழி தாய் மொழியாக இருக்கும் போது வீட்டில் பேசுவதற்கும் வெளியில் பேசுவதற்கும் உள்ள வழங்கு மொழி வித்தியாசத்தின் மூலம் என்ன?
ஒரே ஊர், ஒரே மதம், ஒரே மொழியாக இருக்கும் போது வேட்டியும், சேலையும் கட்டும் முறை அகத்துக்கும், வீட்டுக்கும் மாறியிருக்கிறதே அதற்கு காரணம் ஏழை பணக்காரன் என்கிற வர்க்க பேதமா?
எல்லாம் ஒன்றாக இருக்கும் போது ஆவணி அவிட்டத்திற்கு சிலர் மட்டும் விடுமுறை எடுத்து சடங்குகள் செய்வது எந்த வகைக்கு?
இவர் சொந்தகாரங்களாம் கழிவறை கழுபவர்களாகவும், நகரசுத்தி தொழிலாளிகளாகவும், அவர் சொந்தகாரர்கள் எல்லாம் தறி நெய்பவர்களாகவும், இன்னொருவர் சொந்தகாரர்கள் எல்லாம் விவசாயிகளாகவும், அதெப்படி முடிவெட்டுபவர்கள் எல்லாம் அவருக்கு மட்டுமே ஒரு விதத்திலே சொந்தக்காரங்களாக இருக்காங்களே ஏன் இவருக்கு சொந்தகாரங்களாக இல்லை?
கோவிலின் கருவறையில் ஏன் எல்லோராலும் நுழைந்து சாமியை அர்ச்சனை செய்ய முடியவில்லை?(நாத்திகர் கலைஞர் புண்ணியத்தில் இப்போது சட்டப்படி செய்யலாம், ஆனால் சமூகப்படி?), இந்த சாமிக்கு படைக்கும் சாராயமும் ஆடு,கோழி பலியிடலும் ஏன் மற்ற சாமிகளுக்கு செய்யமுடியவில்லை, எல்லோரும் ஒன்றுதான் என்ற போது எல்லோரும் ஆர்ச்சகராகலாம் என்ற உடனே சிலரை உச்ச நீதிமன்றம் நோக்கி ஓட வைத்தது ஏன்?
இங்கே என்ன உணவு பழக்கம் என்ன என்பதை தீர்மானிப்பதே சாதியாக இருக்கும் போது, பெயர்களின் எழுத்துகளை சாதி தீர்மானிக்கின்ற போது, எப்படி சிலருக்கு முக்கியமான பண்டிகையாக சடங்காக இருப்பதில் மற்றவர்களுக்கு தொடர்பேயில்லாததற்கு பிண்ணனியில் சாதி இருக்கும் போது சாதியின் இருப்பையே உணராமல் பள்ளி முடிக்கும் வரை காத்திருந்து விட்டு பின் சாதி சான்றிதழை வைத்து தான் சாதி தெரிந்து கொண்டால் அது அந்த மாணவனின் அறியாமை அல்லது இதெல்லாம் சமூக நடைமுறை, விதி என்று தவறாக நினைத்திருக்க வேண்டும், அந்த நிலையில் அந்த அளவிற்கு யோசிக்கும் அளவிற்கு முதிர்ச்சி இருக்குமா என நினைத்தால் கொஞ்சம் சந்தேகம் தான், ஆனால் மாணவப்பருவத்தை தாண்டிய பிறகும் பல விடயங்கள் பலரால் எடுத்து காட்டிய பிறகும் பல படித்த பிறகும் பலவற்றை நேரடியாக கண்டு அனுபவித்த பிறகும் சாதி எங்கிருக்கு? சே.. இந்த சாதி இருப்பதே அரசாங்கம் தரும் சாதி சான்றிதழால் தான் மேலும் இந்த அரசியல்வாதிகள் தான் சாதியை வாழவைப்பதே இல்லையென்றால் சாதியே இருக்காது (அரசியல்வாதி என்கிற இனம் வந்ததே 1947க்கு பிறகு தானே அதற்கு ஆனால் சாதியின் இருப்பு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றது?) என்று பேசுவதன் காரணம்.
திருமணப்பத்திரிக்கையில் சாதிப்பெயர் இல்லையென்றவுடன் எப்படியாவது சாதிதெரிந்து கொள்ள வேண்டுமென்று
"தம்பி வீட்டில் பார்த்து வைத்த பெண் தானே",
"நீங்க பிள்ளையா? முதலியாரா?"
இந்த கேள்விகளெல்லாம் எதற்கு?
அதான் மணமக்கள் பெயர், அப்பா அம்மா பெயர், இடம், நேரம், தேதி எல்லாம் பத்திரிக்கையில் இருக்கின்றதே, ஏன் அந்த பத்திரிக்கையில் இல்லாத சாதி பற்றிய கேள்வி? காரணம் திருமணத்திற்கு வரலாமா? வந்தாலும் சாப்பிட கை நனைக்கலாமா? நனைத்தாலும் தாம்பூலம் எடுக்கலாமா?
அய்யோ இத்தனை நாள் இவங்க அவங்கனு நினைச்சி பழகினோமே அப்போ அவங்களா இருக்குமோ என்ற பதட்டமும் இந்த கேள்விகள் கேட்க வைத்தன என்பது புரியாமல் அடேடே
இப்போ ஏன் இங்கே இப்படி சாதி இருக்கே சாதி இருக்கேனு பேசறாங்க என்று பேசினால் அதற்கு காரணம்
1) அறியாமை அல்லது இன்னமும் உயர் நிலை மாணவப்பருவத்திலிருந்து வெளிவராமல் இருப்பது!
அல்லது
2)சாதி ஏற்ற தாழ்வுகளே இல்லையென்று பேசுவதன் மூலம் தற்போதுள்ள உண்மை நிலவரத்தினை மறைப்பது, அதன் மூலம் சாதி மறையாமல் இருக்க வைப்பது
அல்லது
3)சாதியின் இருப்பிற்கு காரணத்தை அரசியல்வாதிகளின் மீதும் அரசாங்கத்தின் மீதும் தூக்கி போட்டுவிட்டு அதற்கு காரணமான தான்/நான்/நம்/தம் சமூகம் இதற்கு காரணமில்லையென்று தெரிந்தோ தெரியாமலோ கூறிக்கொண்டே சாதியின் இருப்பிற்கான காரணங்களை மறைப்பது
அல்லது
4)அப்படியெல்லாம் ஒன்றுமில்லைப்பா ஒன்றுமில்லைப்பா என்று கூறுவதன் மூலம் சாதிய ஏற்ற தாழ்வுகளை அப்படியே இருக்கும் நிலையிலேயே இருக்க வைப்பது அதனால் இத்தனை காலமும் அனுபவித்து வந்தது பறி போகாமல் இருக்க வேண்டியதற்கான போர் தந்திரம்.
அல்லது
5)சமூகமும் ஊடகங்களும் உருவாக்கியுள்ள சாதியைப் பற்றி பேசுவதே பாவம் என்ற சமத்துவபுர ஜென்டில் மேன்\உமேன் மனப்பான்மை.
உணவு பழக்கத்திலிருந்து, பெயரில் உள்ள எழுத்துக்களிலிருந்து, செய்யும் தொழிலிலிருந்து, பேச்சு வழக்கிலிருந்து, கோவிலுக்குள் நுழைவதிலிருந்து, செய்யும் தொழிலிலிருந்து திருமணத்தில் கை நனைப்பது வரை தீர்மானிக்கும் சாதியின் தாக்கம் பற்றி எந்தவித குழப்பமும், உரத்த சிந்தனையும், அருவெறுப்பும் இல்லாமல், எந்த வித கோபமும்மில்லாமல் தாண்டிப்போகும் போது அரசியலில் சாதி என்று வரும் போது மட்டும் குழப்பமும் உரத்த சிந்தனையும், அரசியலில் சாதியென்றாலே அருவெறுப்பும் அசூயையும் அடைகிறோமே?
அரசியலில் சாதியிருப்பதால், சாதியின் ஆணி வேர் அரசியல் அல்ல, சாதியின் எத்தனையோ தாக்கங்களின் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று, சமூகத்தின் மற்ற எந்த தாக்கத்தின் வெளிப்பாட்டையும் கேள்விக்குட்படுத்தாமல் அதே சமயத்தில் அரசியலில் உள்ள சாதியின் தாக்கத்தை கேள்விக்குட்படுத்துகிறோம்.... ஏன்? ஏன்? நான் இப்படி கேட்பதாலேயே சமூகத்தில் இத்தனை இடங்களில் உள்ள சாதி அரசியலிலும் இருந்துவிட்டு போகட்டுமே அதை ஏன் கேள்வி கேட்க வேண்டும் என்பதல்ல என் எண்ணம்....
வரும் பதிவுகளில் தொடர்ந்து பேசுவேன்
48 பின்னூட்டங்கள்:
ஒரே ஊர், ஒரே மதம், ஒரே மொழி தாய் மொழியாக இருக்கும் போது சிலருக்கு ஸ்ரீனிவாஸ் என்றிருக்கும் பெயர் மற்ற சிலருக்கு சீனுவாசன் என்று மாறியதன் மர்மம் என்ன?
நச்ன்னு கேட்டீங்க. ரவி ஸ்ரீனிவாஸ் இதற்கு பதில் சொல்வாரா.
ஸ்ரீனிவாஸ் என்பதால் வலைப்பதிவர் ரவிஸ்ரீனிவாசை கேட்டதாக அர்த்தமில்லை ஒரு உதாரணத்திற்காக கையாளப்பட்ட பெயர்.
சரியான ஆரம்பம்.
வரலாற்று பதிவு தொடர் ஆரம்பித்தாயிற்றா?
எங்கே பு.பி. சங்கத்தலைவர்?
நல்ல கட்டுரை.
//அரசியலில் சாதியிருப்பதால், சாதியின் ஆணி வேர் அரசியல் அல்ல, சாதியின் எத்தனையோ தாக்கங்களின் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று,//
ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய கூற்று. இருந்தாலும், சமூகத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள்/வேற்றுமைகளைக் களைய முன்னிலையில் நின்று தலைமை வழங்க வேண்டிய (provide leadership) அரசியல்வாதிகள் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதைப் பார்க்கும் போது வரும் மனச்சோர்வு உண்மையானது. எல்லாரும் செய்வது போல் இவர்களும் செய்வார்களென்றால், இவர்களுக்கு எதற்கு தலைவர் பட்டங்களும், ஆட்சி அதிகாரங்களும்?
//வரலாற்று பதிவு தொடர் ஆரம்பித்தாயிற்றா?
//
இல்லிங்க, அதற்கு இன்னமும் நிறைய உழைப்பும் நேரமும் தேவைப்படுகின்றது, இது ஒரு பகுதியை மட்டும் தொட்டு போகும், அந்த தொடருக்கு இன்னமும் நாளாகும் ஏனென்றால் தகவல்களுக்கும் ஆதாரங்களுக்கும் நான் புத்தகங்களை மட்டும் நம்பவில்லை, மக்களை குறிப்பாக வயதான பெரியவர்களிடம் பேசிக்கொண்டுள்ளேன், வெளிநாட்டில் இருப்பதால் அதை தொடர்ந்து செய்யமுடியவில்லை... சும்மா கேலி பேசிவிட்டு செல்பவர்கள் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள், அது தவிர வேறொன்றும் செய்யமாட்டார்கள்....
நன்றி
//உணவு பழக்கத்திலிருந்து, பெயரில் உள்ள எழுத்துக்களிலிருந்து,
செய்யும் தொழிலிலிருந்து, பேச்சு வழக்கிலிருந்து, கோவிலுக்குள்
நுழைவதிலிருந்து, செய்யும் தொழிலிலிருந்து திருமணத்தில்
கை நனைப்பது வரை //
இடுகாட்ட விட்டுட்டீங்களே..
தமிழ்மணத்திலேயெ ஒரு சாதி திருமண விளம்பரம் வந்தது. இது
குறீத்து ஒரு பதிவு போட்டேன். நாங்க எங்க சாதி இல்லைன்னு
சொன்னோம் என்று பின்னூட்டம் இட்டார்கள். ஆனால் பொருளாதார
அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கும்போது மட்டும் சமத்துவ
சமூகம் நிலவுவதாக நினைத்துக்கொள்ள வேண்டும்.
எல்லா கட்சிகளும் சாதி ஓட்டுகளை நம்புகிறது, மயிலாப்பூரிலிருந்து
திருநெல்வேலி வரை இதே கதைதான். நம்முடைய சாதிகளின்
பூகோள ரீதியான distribution உம் அப்படிதான் இருக்கு.
குழலி வரவேற்கிறேன்..
சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது, ஆண்/பெண் பிரிவினை இருக்கிறது. இதை வைத்து ஒருவரை ஒருவர் சமமாக மதிக்காத போதுதான் பிரச்சினை வருகிறது. நான் சைவம், நீ அசைவம் அதனால் என்ன நாம் சமமானவர்கள் என்று ஒருவரையொருவர் நடத்தினால் என்ன பிரச்சினை. ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லையா. சாதியை அரசியல் வாதிகள் எப்படி கையாள்கிறார்கள் என்பதில்தான் பிரச்சினை வருகிறது.இடதுசாரிகள் சாதி ரீதியாக மக்களை பிரிக்க விரும்பவில்லை. ராமதாஸும், வீரமணியும் விரும்புகிறார்கள். இதுதான் சிக்கல். 100% ஒரே மதத்தவர் இருக்கும் நாடுகளிலும் எத்தனையோ பாகுபாடுகள், குழு மோதல்கள் இருக்கின்றன.
பிராட்டஸ்டன்ட்களும், கத்தோல்லிக்களும் ஒரு புறம், இன்னொருபுறம் ஷியாக்களும், சுன்னிகளுக்கும் இன்னொருபுறம் - இந்தப் பிரிவினைகளால் ஒடிய ரத்த ஆறுகள் எத்தனை.
பிறப்படிப்படையிலான பேதங்கள் மறையட்டும். இன்று நகரங்களில் ஒரே அடுக்குமனை குடியிருப்பில் பல மதம்,சாதிகளைச் சேர்ந்தவர்கள் குடியிருக்கிறார்களே.இது எப்படி சாத்தியமாயிற்று. சாதிப் பிரிவினைகள் மறைய அரசியல்வாதிகள் சாதி ரீதியாக அரசியல்
செய்வதை நிறுத்த வேண்டும். சமூகத்தில் சாதி இருக்கும் வரை நாங்களும் அரசியலில்
அந்தப் பிரிவினையைச் செய்து கொண்டிருப்போம், அதன் மூலம் சாதியை பலப்படுத்துவோம்
என்பது நல்ல கருத்தல்ல. நீங்கள் அதைத்தான் ஆதரிக்கிறீர்கள் என்றால் நான் என்ன
சொல்லட்டும். பொதுவில் சாதி,மத ரீதியான பாகுபாடுகளை களைய முயலுவோம்.
/சாதி என்பதே அரசாங்கம் கொடுக்கும் சாதிச்சான்றிதழில் தான் வருகின்றது என்று பேசுவதையும் பள்ளிவரை சாதி என்று இருப்பதே தெரியாமல் சாதி சான்றிதழ் வாங்கி ஒருவன் மேல் படிப்பு படிக்க செல்லும் போது தான் சாதி என்று தெரிய வருகின்றது என்று சொல்லும் போதும் இது எத்தனை போலித்தனமானது என்று புரியும்./
ஈழத்தில் சாதிச்சான்றிதழ் எங்கும் கேட்கப்படுவதில்லை. சாதி இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் சற்றுக்குறைந்த வீரியத்துடன் நீறு பூத்த நெருப்பாக என்று சொல்லலாம். இடப்பெயர்வுகள், அகதிமுகாம்கள், புலப்பெயர்வுகள் என்று ஈழத்துச்சமுதாயம் உலுக்கிக்குலுக்கப்பட்டும் எண்ணையும் தண்ணீரும் போல ஒன்றிலொன்று கலக்காமல் சாதிக்கட்டமைப்பு தொடர்கின்றது. சான்றிதழ்களால்தான் சாதி இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு இதனை தெரியப்படுத்தும் நோக்கில் பின்னூட்டமிடுகிறேன்.
ஈழத்து சாதியமைப்பில் நான் ஒரு தலித்தாக வகைப்படுத்தப்பட்டிருப்பது மிகச்சமீபத்தில்தான் தமிழ்மணத்தினூடாக அறிந்து ஆச்சரியப்பட்டேன்.மற்றைய தலித்களைப்போல நான் அதிகம் வலிகளை அனுபவிக்கவில்லை( எனது முன்னோர் அவைகளைக் அனுபவித்திருக்கக்கூடும்). பொருளாதாரமும் கல்வியும் வலிகளைக் குறைத்திருக்கின்றன. ஆனாலும் நீக்கவில்லை. மனங்கள் மாறவேண்டும் ஆனால் எப்படி என்றுதான் புரியவில்லை.
//நான் சைவம், நீ அசைவம் அதனால் என்ன//
நான் எப்படி சைவமானேன், நீ எப்படி அசைவமானாய், நான் ஏன் அசைவமில்லை, நீ ஏன் சைவமில்லை, காரணம் என்ன? "அதனால் என்ன" என்று பேசினால் பிரச்சினையை பூசி மெழுக பார்க்கிறோம் என்பதே பொருள்
//இடதுசாரிகள் சாதி ரீதியாக மக்களை பிரிக்க விரும்பவில்லை.//
இது தொடர்பாக அளிக்கப்பட்ட மறுமொழி திராவிட தமிழர் வலைதளத்தில் உள்ளது சுட்டி இங்கே
//ராமதாஸும், வீரமணியும் விரும்புகிறார்கள். இதுதான் சிக்கல். //
அப்படியே கருணாநிதி, அர்ஜீன்சிங், திருமாவளவன், இன்னும் பலரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.... வரும் பதிவுகளில் இதைப்பற்றி பேசலாம்
//100% ஒரே மதத்தவர் இருக்கும் நாடுகளிலும் எத்தனையோ பாகுபாடுகள், குழு மோதல்கள் இருக்கின்றன.
பிராட்டஸ்டன்ட்களும், கத்தோல்லிக்களும் ஒரு புறம், இன்னொருபுறம் ஷியாக்களும், சுன்னிகளுக்கும் இன்னொருபுறம் - இந்தப் பிரிவினைகளால் ஒடிய ரத்த ஆறுகள் எத்தனை.
//
அதனால் இதைப்பற்றி பேசக்கூடாது என்பதல்லவே?
//இன்று நகரங்களில் ஒரே அடுக்குமனை குடியிருப்பில் பல மதம்,சாதிகளைச் சேர்ந்தவர்கள் குடியிருக்கிறார்களே.இது எப்படி சாத்தியமாயிற்று//
குடியிருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை, அடுக்குமனைகளில் குடியிருப்பதாலேயே அவர்களிடத்தில் சாதியில்லை என்று நீங்கள் நினைத்தால் நேரடியாகவே சொல்கிறேன் அது உங்கள் அறியாமை அல்லது உண்மையை மறைக்கின்றீர்
//சாதிப் பிரிவினைகள் மறைய அரசியல்வாதிகள் சாதி ரீதியாக அரசியல்
செய்வதை நிறுத்த வேண்டும். சமூகத்தில் சாதி இருக்கும் வரை நாங்களும் அரசியலில்
அந்தப் பிரிவினையைச் செய்து கொண்டிருப்போம், அதன் மூலம் சாதியை பலப்படுத்துவோம்
என்பது நல்ல கருத்தல்ல. நீங்கள் அதைத்தான் ஆதரிக்கிறீர்கள் என்றால் நான் என்ன
சொல்லட்டும்.//
பதில் பதிவிலேயே இருக்கின்றது உங்கள் பார்வைக்கு மீண்டும்
/*நான் இப்படி கேட்பதாலேயே சமூகத்தில் இத்தனை இடங்களில் உள்ள சாதி அரசியலிலும் இருந்துவிட்டு போகட்டுமே அதை ஏன் கேள்வி கேட்க வேண்டும் என்பதல்ல என் எண்ணம்....
*/
Sathan Vedam Odhukirathu!
Vanniars, Kallars, Maravars, etc., use Caste to promote themselves in Jobs, Politics, Local Business (including illicit arrack, contracts, etc.,) inspit of them being a minority in each constituency. (45% population in any place is also a minority). They would deprive Brahmins and Saiva Velalars of their lands and jobs, Dalits of their livelihood, others of thier peace, etc., but criticise Saivam for all the ills of the society.
In my opinion, only those like Parsis, Anglo Indians, etc., and others like Saiva Velalars who are genuinely less casteist have the right to talk about the bad influence of Caste in Society. People like Kuzhali are beneficiaries of Caste system and i do not think they can question or criticise Saivams if they had used the same advantage earlier.
Tell me honestly, who would not use any advantage that might come their way just because of their birth?
முத்து, அந்த வரலாற்று பதிவு இதுவும் இல்லையாமாம்.
Better luck next time :-)
-பு.பி
அப்பாவித்தமிழனே... உம்மை தெரிஞ்சி யார் என்ன செய்ய போகிறோம்? நீர் யாராயிருந்தால் என்ன? ஏற்கனனவே பல முகமூடிகள் வலைப்பதிவுகளில் உலவுகின்றன, அதில் நீரும் ஒன்று அவ்வளவே.
ஒரே ஊர், ஒரே மதம், ஒரே மொழி தாய் மொழியாக இருக்கும் போது சிலருக்கு ஸ்ரீனிவாஸ் என்றிருக்கும் பெயர் மற்ற சிலருக்கு சீனுவாசன் என்று மாறியதன் மர்மம் என்ன
It is funny that someone with name as Purushothaman is asking this question.Jagatrakshakan,ramadoss,
krishnaswamy,kavita,sowmya,moorthy,
ramachandran,vishnu prasad - are there no vanniyars with these names.are there no vanniyars with names that are typical tamil names like velu,durai,vel murugan. if so
how do you explain this.do you know
that there are brahmins with names
like nambi,azhagar,alwan,manickam,
murugan,ayyadurai,appadurai,andal,
nachiyar,kothai,mangai,chandra.do you know that in many hindu temples the names of the deities are in chaste tamil and brahmins worship them.
Kuzhali aka Pursoththaman try to
think beyond your biased views
or atleast get the facts rights.
ஏன் அசைவமில்லை, நீ ஏன் சைவமில்லை, காரணம் என்ன? "அதனால் என்ன" என்று பேசினால் பிரச்சினையை பூசி மெழுக பார்க்கிறோம் என்பதே பொருள்
People have choices and they choose irrespective of their caste
or religion.People with different
tastes and habits live under a
roof.So is that not a question of personal choice.Is it just a question of caste or religion only.There are vegetarian christians and meat
eating and beer drinking brahmins.If you think that
caste determines everyting we do
and dont do, i pity you.
அப்பாவித்தமிழா,
அதுதான் வெறுமனே பேசமட்டும் செய்வார்கள். விஷயம் இருக்காது என்று பதிவு ஓனர் கூறிவிட்டாரே.
விடுங்க.
பு.பி என்று ஒத்துகொண்டதற்கு(எழுதி கொடுத்ததற்கு நன்றி :))
//அடேங்கப்பா, யாருங்க அது முகமூடியை பத்தி பேசறது? நம்ம குழலிங்களா? சூப்பர்ண்ணா. நம்ம இயற் பெயரே குழலி தானுங்களா?
//
சாருநிவேதிதா, சுஜாதா இவங்ககிட்ட கேட்டு சொல்றேன் கல்கி கூட இப்போது இல்லை இல்லைனா அவரை கூட கேட்டிருக்கலாம், அது சரி நீங்க அப்பாவிதமிழன்னு பேரு வச்சிருக்கிங்களே ஏன்னு கேட்டா எந்த முகமூடியை கேட்டு சொல்லுவிங்க? ஹி ஹி :-)
//People have choices and they choose irrespective of their caste
or religion.People with different
tastes and habits live under a
roof.So is that not a question of personal choice.Is it just a question of caste or religion only.
//
அப்ப சில சாதியினரின் சைவ உணவு பழக்கத்திற்கும் சிலரின் அசைவ உணவுக்கும்(மாடு நீங்கலாக) இன்னும் சிலரின் அசைவ உணவிற்கும்(மாடு உட்பட) இருப்பதற்கு காரணம் சாதியில்லை என்கிறீர்களா? ஆமாம் என்றீர்கள் என்றால் உண்மையை பார்க்க மறுக்கின்றீர் என்பது மட்டுமே நிசம்.
//There are vegetarian christians and meat
eating and beer drinking brahmins.//
விதிவிலக்குகள் பொதுமை அல்ல....
//If you think that
caste determines everyting we do
and dont do, i pity you.
//
பின்னூட்டத்தில் பேச வேண்டுமென்றில்லை, உங்கள் முன் முடிவுகளை ஒதுக்கிவிட்டு எந்த சார்புமில்லாமல் கொஞ்சம் யோசித்து பாருங்கள், இந்திய சமூகத்தில் சின்ன வயதிலிருந்து இந்த மாதிரி இங்கே இருப்பத ஏன் அங்கே இல்லை, அங்கே இருப்பது ஏன் இங்கே இல்லை, காரணமென்ன என்று யோசியுங்கள்.... முன்முடிவுகளை விட்டுவிட்டு யோசியுங்கள்.... ஜென் கதையில் சொலவ்து மாதிரி தேநீர் கோப்பையை காலிசெய்துவிட்டு யோசியுங்கள்...
நன்றி
எனக்கிருந்த கேள்விகள் சிலவற்றிற்குப் பதில் கிடைத்தன. நன்றி.
மேலும் எதிர்பார்க்கிறேன்.
குழலி,
என் பதிவில் நான் அரசியல்தான் ஜாதிக்கு காரணம் என்று சொல்லவில்லை.
ஜாதிப்பிரச்சினைகளை குறைக்க முயற்சி செய்யாமல், தூபம் போட்டு வளர்க்கிறார்கள் அரசியல்வாதிகள் என்றும், இதில் ஜாதிக்கட்சி மீதிக்கட்சி என்று எந்த வித்தியாசமும் கிடையாது என்றும்தான் எழுதியிருந்தேன்.
//சாதியின் இருப்பையே உணராமல் பள்ளி முடிக்கும் வரை காத்திருந்து விட்டு பின் சாதி சான்றிதழை வைத்து தான் சாதி தெரிந்து கொண்டால் அது அந்த மாணவனின் அறியாமை//
இப்படிப்பட்ட அறியாமை வளரவேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்.
//சாதியின் இருப்பையே உணராமல் பள்ளி முடிக்கும் வரை காத்திருந்து விட்டு பின் சாதி சான்றிதழை வைத்து தான் சாதி தெரிந்து கொண்டால் அது அந்த மாணவனின் அறியாமை//
//இப்படிப்பட்ட அறியாமை வளரவேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்.
//
சுரேஷ் பதிவை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்களேன்.... ஏதேனும் புரியலாம், மீண்டும் உங்களுக்கு இதே அறியாமை தொடரவேண்டுமென பிரார்த்திக்க தோன்றினால் மீண்டும் உங்களுக்கு விளக்க தயாராக உள்ளேன், சிலர் இப்படி பேசும்போது புறந்தள்ளிவிட்டு நீங்கள் இப்படி கேட்கும்போது விளக்கம் சொல்ல தயாராக உள்ளேன் என்றால் அது உங்கள் மீதுள்ள நம்பிக்கை.
குழலி,
நான் ஜாதி மத சம்மந்தப்பட்ட பதிவுகள் இடுவதும் இல்லை, கருத்துச் சொல்வதும் இல்லை. இருந்தாலும், நான் எழுதிய பதிவுக்குத் தொடர்புடையதாக நீங்கள் அறிவித்ததால் இதில் எழுதினேன் - ஒருமுறை விதிவிலக்காய்.
இப்படிப்பட்ட அறியாமை எல்லாருக்கும் வளர்ந்து, அதன் மூலம் ஜாதி ஒழிந்தாலும் சரிதான் என்பது என் பார்வை. இட ஒதுக்கீடு ஒழிய ஒரே வழி, எல்லா இடஒதுக்கீட்டுப் பிரிவுகளின் நுழைவுத்தேர்வு கட்-ஆஃப் மார்க் ஒன்றாக ஆகும்போதுதான் (இப்போது இடைவெளி குறையத் தொடங்கியுள்ளது)என்பதுபோன்ற பார்வை. என் வரையில் ஜாதி என்ற கருத்துருவிற்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் இருப்பது மட்டுமே நான் செய்யக்கூடிய ஆக்கபூர்வமான விஷயமாகத்தோன்றுகிறது.
நன்றி.
penathal,
pls read this also...just for information..
http://dravidatamils.blogspot.com/2006/06/blog-post_16.html
//இப்படிப்பட்ட அறியாமை எல்லாருக்கும் வளர்ந்து, அதன் மூலம் ஜாதி ஒழிந்தாலும் சரிதான் என்பது என் பார்வை.
//
நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்
ஒவ்வொரு நோயும் அதற்குரிய காரணத்தாலேயே வருகிறது; அதனைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளித்தே நோயாளிகளைக் குணப்படுத்த முடியும்...
நோயின் காரணத்தை கண்டுபிடிக்காமலேயே நோயை குணப்பட வேண்டுமென்று ஆசைப்படுகின்றீர்.
//நான் ஜாதி மத சம்மந்தப்பட்ட பதிவுகள் இடுவதும் இல்லை, கருத்துச் சொல்வதும் இல்லை. இருந்தாலும், நான் எழுதிய பதிவுக்குத் தொடர்புடையதாக நீங்கள் அறிவித்ததால் இதில் எழுதினேன் - ஒருமுறை விதிவிலக்காய்.
//
உங்களுக்கு வேண்டுமானால் வெறும் சாதி சம்மந்தப்பட்ட பதிவாக இருக்கலாம், எனக்கு இது நம் சமூகம் சம்பந்தப்பட்டது, நம் அரசியல் சம்பந்தப்பட்டது, நம் வாழ்க்கை சம்பந்தப்பட்டது, நம் சூழல் சம்பந்தப்பட்டது.
திரு குழலி அவர்களுக்கு,
அரசியலில் சாதி பற்றி குழப்பமாகவும் சற்றே உரத்தும் சிந்திதிருக்கிறீர்கள்.
சாதி பற்றி பொதுவாகவே எழுதப்படும் எந்த கட்டுரையும் LSS பஸ் ஆக மாறி விடும்...சேரியின் நிலை பற்றி சொல்லிவிட்டு நேராக அதற்குக் காரணம் என்று அக்ரஹாரத்துக்குள் புகுந்து விடும்...நடுவில் எதுவுமே இல்லாதது போல்....
ஆனால் ஜாதி என்பது நம் நாட்டில் பல கட்டமைப்புகளாக உள்ளது(Multi Layer)என்பது கண்கூடு....
இன்றைய தேதியில் ப்ராமணனுக்கு எதிர்ப்பதம் சூத்திரன் என்பது போல் பேசப்படும்/சித்தரிக்கப்படும் நிலை... இது சரியா ?
சமூகத்தில் உள்ள உச்ச கட்ட முரணை விளக்க இந்த உதாரணத்தை நிச்சயம் பயன் படுத்தலாம்...ஆனால் உண்மையில் இது எதிர்பதமா ?...
conflict இந்த இரு சாதியினரிடையே மட்டுமா?எனில் ப்ராமணனை வேரோடழித்து விட்டால் தலித்தின் நிலை மாறி விடுமா?
நடுவில் இருக்கும்...இல்லை இருப்பதாக கொள்ளப்படும் மற்ற சாதிகளுக்கு இந்த சமூக முறண் மற்றும் ஏற்ற தாழ்வில் எந்த பங்களிப்பும் இல்லையா ?
நீங்கள் இணைத்துள்ள புகைப்படத்தில் தண்ணீர் ஊற்றும் பெண் பார்ப்பன வகுப்பா? குடிப்பவர் யாராக வேண்டுமாயின் இருக்கட்டும்.
மலம் அள்ளிக்கொண்டிருக்கும் அந்த சுத்தீகரிப்பு தொழிலாளி பார்ப்பனர் வீட்டில் அல்லது இந்த சமுதாயத்தால் அக்ரஹாரத்தில் மட்டிலுமே அப்பணியை செய்ய வைக்கப் படுகிறாரா?
இரட்டை டம்ளர் முறை உடுப்பி கடை அல்லது ப்ராம்மணாள் ஹோட்டலில் உள்ளதா இல்லை கிராமம் மற்றும் சிறு ஊர்களில் உள்ள டீக்கடை போன்ற இடங்களில் உள்ளதா ?
தென் மாவட்டங்களில் தலித்துக்கள் அல்லது ஹரிஜனங்களுக்கு எதிராக நடக்கும் நடக்கும் ஜாதிக்கலவரங்கள் ப்ராமணர்களால் நடத்தப்படுகிறதா அல்லது அதன் பிண்னணியில் ப்ராமணர்கள் இருந்தனரா ?
இந்த ஜாதிக்கட்டமைப்பில் ஒவ்வொருவனும் தனக்கு கீழாக நினைக்கும் ஜாதியை ஆளத்தலைப் படுகிறான்...தனக்கு மேல் உள்ளதாக நினைக்கும் ஜாதிய செய்கைகளை தனது நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்க தலைப்படுகிறான்.. .உதாரணம் பூணூலை பார்ப்பன குறியீடாக கணிப்பவர்கள் திருமணத்தின் போது சட்டைக்கு மேல் பூணூல் அணிந்து திருமணம் செய்வது...கோவிலில் அனைவரும் அர்சகராக வேண்டும் என்று சொல்லும் அதே வேளையில் தங்கள் வீட்டு சடங்கு/வைபவங்களுக்கு பார்பன பண்டிதனை அழைப்பது ..... போல ..
உண்மையிலேயே சமூக/ஜாதீய கொடுமைகளுக்கு ஆளான தலித் மற்றும் ஹரிஜன மக்கள் விழித்து..உருத்து பார்த்தால்... செளகரியமாக தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரனை கை காட்டி விடுவது...இதையும் மீறி அவர்கள் அவன் வந்து என்னை எங்கே அடக்கியாள்கிறான்... செய்வதெல்லாம் நீதானே என தட்டிக்கேட்டால் ...அந்த இரு சாதிக்கிடையில் கலவரம் வெடிக்கும்/இன்னும் தென் மாவட்டங்களில் வெடிக்கிறது..ஊர் பெயரெல்லாம் வேண்டுமானாலும் தருகிறேன்....அப்போது அங்கு தலித்தை அடிக்கும் அல்லது வெட்டி சாய்க்கும் மேல் சாதிக்காரன் என்று சொல்லிக் கொள்பவன் அவ்வாறு செய்வது அவனது மேலாதிக்கத்தை காப்பாற்றிக் கொள்ளவா அல்லது பார்ப்பனீயம் /ப்ராமணீயத்தை காப்பாற்றவா?
உங்கள் உரத்த சிந்தனையில் இந்த கேள்விகளுக்கும் சில அலசல்கள் வந்து விழும் என நம்புகிறேன்...
என்னை பொருத்தவரை இந்த நடுவில்லுள்லவர்களாக காட்டிக் கொள்பவர்கள்...ஜாதியில் தன் நிலை மற்றவனை விட தாழ்ந்ததாக சொல்லிக் கொண்டு இட ஒதிக்கீடு போன்றவற்றையும் அனுபவிப்பர்... அதே சமயம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனக்கு கீழுள்ளதாக சொல்லப்படும் சாதியை அடிக்கியாண்டு அனுபவிப்பர்...அரசில் இடம் பெறாத போது அரசாங்கம் ப்ராமணர் கையில் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றனர்...அரசாங்கம் கைக்கு வந்ததும் என்ன செய்ய ...ஆளும் வர்கத்தில் அனைவரும் ப்ராமணர்கள் என புள்ளி விவரம் எடுத்து வைத்து... இவர்கள் அரசாங்கம் செயல் படவிடாமல் முடக்குகின்றனர் என குற்றச் சாற்று...அதிலும் இவர்களது எண்ணிக்கை பெருகி விட்டால் பணம் மற்றும் படிப்பாதிக்கத்தால் பார்ப்பனனே மறை முகமாக கோலோச்சுகிறான் என நடிப்பர்....இவர்களது இந்த அரசியல்/ நாடகத்தை தலித்துகள்(உண்மையில் ஒதுக்க/ஒடுக்கப் பட்டவர்கள்) நம்பிக்கொண்டிருக்கிற மட்டும் ஜாதி வெறியோ அல்லது ஜாதி பேதமோ மறையாது...
அதற்கு முன் ஒரு வேளை பார்ப்பனர் அனைவரும் இந்த உலகிலிருந்து வேரோடு அழிக்கப் பட்ட பின்னும் அந்த வேதனைக்குறிய ஒடுக்கப்பட்ட பெண்மணி அதே வேலையைத்தான் செய்து கொண்டிருப்பார்...நிச்சயமாக....அனால் பார்ப்பனர்களை வேரோடழிய இவர்கள் விடமாட்டார்கள் ஏனெனில் தலித்துகளுக்கெதிரான இவர்களது கவசமே அதுதானே...இவர்கள் கவசத்தை இழந்து நிற்க என்றும் துணியமாட்டார்கள்...அரசியலில் இவர்களது இந்த ஜாதி குழப்பம் தெளிவாக நின்று நீடிக்கும்...
இந்த வாதத்திலிருக்கும் நிஜத்தை அலசலாம்..அல்லது பார்த்தாயா பார்ப்பனன் ஆண்டாண்டு காலமாக நம்மை பிரித்தாள்கிறான்..என ஏதாவது ஒரு ஜாதிக்காரன் தோள் மேல் கை போட்டு சொன்னால் அதௌதான் சரி என்று பார்ப்பன துவேஷம் பாடலாம்...
அரசியலில் அனத்துமே சகஜமப்பா...
பின்குறிப்பு : ஸ்ரீனிவாஸ் என்றும் சீனிவாசன் என்றும் எழுதுவதும் வட மொழி கைபர் போலன் கணவாய் வழியாக வந்தது என்றெல்லாம் சொல்லி இவர்கள் தங்களை தமிழ் மொழிக் காப்பாளர்களாய் நியமித்துக் கொண்டு செய்த திருவிளையாடலால் நிகழ்ந்ததுதான்...இதுவரை எந்த தலித்தும் ஸ்ரீனிவாஸ் என்று பெயர் வைத்துக் கொண்டதற்காக எந்த பார்ப்பனனும் ஆட்சேபித்ததாக தெரியவில்லை...தலித்துகள் அப்படி வைத்துக் கொண்டால் என்ன செய்வது...பார்ப்பனர் எதிர்க்காவிட்டால் நமது பாடு திண்டாட்டமாகி விடும் என்பதற்காக இவர்கள் கண்டு பிடித்து வைத்த வட மொழி / தமிழ் மொழி பிரிவினைதான் இதற்கு காரணம் என்பதறிக.....
எல்லாமே கணக்குதான்...கூட்டி கழிச்சு பாருங்க .... சரியா வரும்
// ஒடுக்குபவர்கள் இந்த வித்தியாசங்களை மறுப்பதன் மூலமாகவே எல்லாருக்குமான மொத்த விடுதலை பற்றிய பெருங்கதையாடலின் மறுபக்கமாக எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரி்மையை ஒடுக்குகிற சக்தி பெற்றுக்கொள்கிறது.//
சாதி, இடஒதுக்கீடு எதைப்பற்றியும் பேசவேண்டாம்; நாங்கள் இப்படியே இருப்போம்; நீங்கள் அப்படியே இருங்கள், எங்கும் அன்பும், சகோதரத்துவமும் மலரட்டும். எவ்வளவு அழகாக இருக்கிறது இப்படி எழுத குழலி!
ஏடறிந்த வரலாறனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் (இங்கு சாதியடைப்படையில் அமைந்த மக்களின் போராட்டங்கள்) எனும் போது யார் எதை எழுதினாலும் அது சாதிப்பதிவுதான். அது சாதியை காப்பாற்ற விரும்புகிறதா, அல்லது களைய விரும்புகிறதா என்பது தான் வேறுபாடு. எப்படி இருப்பினும் அது ஒரு வரலாற்றைச் சொல்லியபடியேதான் இருக்கிறது.
பதிவுக்கு நன்றி.
விசித்திரகுப்தன்,
கொஞ்சம் சொந்த வேலை இருப்பதால் தற்போதைக்கு சில மட்டும் சொல்லிவிட்டு மீதி இன்றிரவு அல்லது நாளை பதில் எழுதுகிறேன்.
//உங்கள் உரத்த சிந்தனையில் இந்த கேள்விகளுக்கும் சில அலசல்கள் வந்து விழும் என நம்புகிறேன்
//
//சாதி பற்றி பொதுவாகவே எழுதப்படும் எந்த கட்டுரையும் LSS பஸ் ஆக மாறி விடும்...சேரியின் நிலை பற்றி சொல்லிவிட்டு நேராக அதற்குக் காரணம் என்று அக்ரஹாரத்துக்குள் புகுந்து விடும்...நடுவில் எதுவுமே இல்லாதது போல்....//
இந்த கட்டுரையின் பேசு பொருள் சாதிக்கொடுமைக்கு காரணம் யார் என்பதல்ல, சாதி என்பதே சாதிச்சான்றிதழ்களிலும், அரசியலிலும் இருப்பதாலேயே அது இருப்பதாக உருவாக்கப்படும் பூசி மெழுகலை மறைத்தலை உடைப்பது, சாதி சான்றிதழ், அரசியல் தவிர்த்து ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கையிலும் தெரிந்தோ தெரியாமலோ உள்ள சாதியின் தாக்கத்தை சொல்வதன் மூலம் அது தற்போது இல்லை என்பவர்களுக்கு பாருங்கள் இருக்கிறதே என்பது. மேலும் சாதிக்கொடுமைக்கு இந்த சாதி காரணம் மற்ற சாதி காரணமல்ல என்று எழுதவில்லை, அப்படி எழுதுவதென்றால் அந்த தண்ணீர் ஊற்றும் படத்தை பாருங்கள்....
//நீங்கள் இணைத்துள்ள புகைப்படத்தில் தண்ணீர் ஊற்றும் பெண் பார்ப்பன வகுப்பா? குடிப்பவர் யாராக வேண்டுமாயின் இருக்கட்டும்.
//
விசித்திரகுப்தன் உங்களுக்கு இந்த தண்ணீர் ஊற்றும் பெண்ணை தெரியுமா? அவர் அந்த பெண்ணை எப்போதாவது இதற்கு முன் பார்த்துள்ளீர்களா? அந்த பெண் பர்தா போட்டிருந்தால் இசுலாமியர் என்று நினைக்கலாம், தலையில் முக்காடு போட்டு இருந்தால் கிறித்துவர்/இசுலாமியர் என்று கருத வாய்ப்புண்டு, ஆனால் இப்படி எதுவும் குறியீடு இல்லை, பிறகெப்படி அந்த பெண் பிராமனர் அல்ல என்று கண்டுபிடித்தீர்கள்?
அந்த பெண் யாரென்று தெரியாமல், அந்த பெண் பெயர் தெரியாமல், அந்த பெண்ணை பற்றிய எந்த விவரமும் அடையாளமும் தெரியாமல் அந்த பெண் பிராமணர் இல்லை என்று கண்டுபிடிக்கின்றீரே இங்கு தெரிகின்றதே சாதியின் இருப்பு, சாதியின் தாக்கம், இதான் இதைத்தான் இந்த கட்டுரை பேசுகின்றது.
//அந்த பெண் யாரென்று தெரியாமல், அந்த பெண் பெயர் தெரியாமல், அந்த பெண்ணை பற்றிய எந்த விவரமும் அடையாளமும் தெரியாமல் அந்த பெண் பிராமணர் இல்லை என்று கண்டுபிடிக்கின்றீரே இங்கு தெரிகின்றதே சாதியின் இருப்பு, சாதியின் தாக்கம், இதான் இதைத்தான் இந்த கட்டுரை பேசுகின்றது.
kuzali well said
////விசித்திரகுப்தன் உங்களுக்கு இந்த தண்ணீர் ஊற்றும் பெண்ணை தெரியுமா? அவர் அந்த பெண்ணை எப்போதாவது இதற்கு முன் பார்த்துள்ளீர்களா? அந்த பெண் பர்தா போட்டிருந்தால் இசுலாமியர் என்று நினைக்கலாம், தலையில் முக்காடு போட்டு இருந்தால் கிறித்துவர்/இசுலாமியர் என்று கருத வாய்ப்புண்டு, ஆனால் இப்படி எதுவும் குறியீடு இல்லை, பிறகெப்படி அந்த பெண் பிராமனர் அல்ல என்று கண்டுபிடித்தீர்கள்?
அந்த பெண் யாரென்று தெரியாமல், அந்த பெண் பெயர் தெரியாமல், அந்த பெண்ணை பற்றிய எந்த விவரமும் அடையாளமும் தெரியாமல் அந்த பெண் பிராமணர் இல்லை என்று கண்டுபிடிக்கின்றீரே இங்கு தெரிகின்றதே சாதியின் இருப்பு, சாதியின் தாக்கம், இதான் இதைத்தான் இந்த கட்டுரை பேசுகின்றது. /////
குழலி,
அந்தப் பெண் யாரென்று எனக்கு தெரியாது மற்றும் அனுமானிக்கவும் இல்லை....அதே சமயம் சமுதாயத்தில்நான் சாதியின் இருப்பை சான்றிதழில் மட்டும் இருப்பதாக புறந்தள்ளவும் இல்லை...அது சமுதாயத்தில் உடை,உணவு, செய்கை இன்னபிற அனைத்து விஷயங்களிலும் புறையோடி உள்ளது என்பதில் எள்ளளவேனும் மாற்று கருத்தும் இல்லை.
அது ப்ராமண பெண்ணல்ல என நான் கண்டறிந்து கூறவோ அல்லது அறுதியிட்டு எழுதவோ இல்லை...அவர் எந்த ஜாதியை சேர்ந்தவராகவும் இருக்க(தலித் அல்லாத) வாய்ப்புள்ளது என்பதையே "ப்ராமணப் பெண்ணா"என்ற கேள்வியாக வைத்தேன்....அதுவும் ஜாதிப் ப்ரச்சினை என்று வந்தாலே ப்ராமண X தலித் என்று சித்தரிக்கப் படுகிறதே மற்றவர் செய்யும் சாதிப் பாகுபாடுகள் சுட்டப்படுவதில்லையே என நான் எழுப்பிய விவாததிற்கு பக்கத்துணையாக மட்டும்...
மற்றபடி உடை ...கலாசாரம்..இன்ன பிற விஷயங்கள் சாதிக் குறியீடுகளாக மாறி விட்ட நிலைமையை குறிக்க(இவை அவ்வாறாக சமுதாயத்தின் அனைத்து அடுக்குகளிலும் இருப்பது உண்மை) உங்களுக்கு பூணூலும்...மடிசார் / வேட்டி கட்டும் மட்டும் நினைவில் வருவதைதான் நான் சுட்டியுள்ளேன்...
மற்றபடி
/////இந்த கட்டுரையின் பேசு பொருள் சாதிக்கொடுமைக்கு காரணம் யார் என்பதல்ல, சாதி என்பதே சாதிச்சான்றிதழ்களிலும், அரசியலிலும் இருப்பதாலேயே அது இருப்பதாக உருவாக்கப்படும் பூசி மெழுகலை மறைத்தலை உடைப்பது, சாதி சான்றிதழ், அரசியல் தவிர்த்து ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கையிலும் தெரிந்தோ தெரியாமலோ உள்ள சாதியின் தாக்கத்தை சொல்வதன் மூலம் அது தற்போது இல்லை என்பவர்களுக்கு பாருங்கள் இருக்கிறதே என்பது. மேலும் சாதிக்கொடுமைக்கு இந்த சாதி காரணம் மற்ற சாதி காரணமல்ல என்று எழுதவில்லை, அப்படி எழுதுவதென்றால் அந்த தண்ணீர் ஊற்றும் படத்தை பாருங்கள்.... /////
என்று நீங்கள் கூறுவது தெளிவாக உள்ளது ஆனால் அதற்காண உதாரணங்கள் அக்ரஹாரம் மற்றும் சேரியை மட்டும் சுற்றி வருவது போல் உள்ளது என்ற (ஒரு வாசகனின்) என் கருத்தை கூறவே என் மேற்சொன்ன பதிவு.மேலும் உதாரணத்துக்காக ப்ராமணன்...பார்ப்பணன்...பூணூல் என்று தைரியமாக ஒரு சதியை குறித்து எழுதும் நாம் அனைவரும் மற்ற சாதி அல்லது சாதிகளை பற்றி குறிப்பிட பொத்தம் பொதுவாகவோ அல்லது புகைப் படமாகவோ மட்டும் வெளியிடுகிறோமே அது ஏன்? என்பதே என் கேள்வி..
///இந்த கட்டுரையின் பேசு பொருள் சாதிக்கொடுமைக்கு காரணம் யார் என்பதல்ல, சாதி என்பதே சாதிச்சான்றிதழ்களிலும், அரசியலிலும் இருப்பதாலேயே அது இருப்பதாக உருவாக்கப்படும் பூசி மெழுகலை மறைத்தலை உடைப்பது, சாதி சான்றிதழ், அரசியல் தவிர்த்து ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கையிலும் தெரிந்தோ தெரியாமலோ உள்ள சாதியின் தாக்கத்தை சொல்வதன் மூலம் அது தற்போது இல்லை என்பவர்களுக்கு பாருங்கள் இருக்கிறதே என்பது.////
இதற்கு நீங்கள் சுட்டியுள்ல உதாரணங்களை பட்டியலிட்டால்
1.ஸ்ரீன்வாசன் என்ற பெயர் சீனிவாசன் என்றாவது
2.வீட்டில் பேசும் மொழி வெளியில் பேசும் மொழியிலிருந்து வித்தியாசப்படுவது(அவா அத்து பாஷையை தானே சொல்கிறோம்.)
3.வேட்டியும் சேலையும் கட்டும் முறை அகத்துக்கும் வீட்டுக்கும் மாறியிருப்பது
4.சிலர் மட்டும் ஆவணிஅவிட்டத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு சடங்கு செய்வது.
5.கோவிலின் கருவறையில் அனைவரும் அர்ச்சனை செய்யமுடியாதது
6.ஒரு பெண்மணி மற்றவருக்கு தண்ணீர் தரும் / விடும் புகைப்படம்
7.ஏன் நாவிதரின் சொந்தம் நாவிதர்...போன்ற கேள்வி உதாரணங்கள்
8.உண்ணும் முறை...veg..nonveg etc
(எதையேனும் விட்டு விட்டேனா)
இதில் மேல் சொன்ன 5 உதாரணங்கள் ப்ராமணரை specific-ஆக குறிப்பிடவில்லை ...அடக்கும் அனைத்து ஜாதிக்குமான பொதுவான ஜாதிக்குறியீடாக சுட்டியுள்ளதாக நீங்கள் சொன்னால்/எப்படி என்றும் சொன்னால் நான் ஏற்றுக் கொள்கிறேன்..
அடுத்த மூன்று உதாரணங்களும் எந்த ஒரு ஜாதியையும் சுட்டாமல் by default பொத்தம் பொதுவாக ஜாதி ஆளுமைக் குறியீடாக சுட்டியிருப்பது போல் எனக்கு தோன்றுவது தவறா?
ஆமெனில் ஏற்றுக் கொள்கிறேன்.
////மேலும் சாதிக்கொடுமைக்கு இந்த சாதி காரணம் மற்ற சாதி காரணமல்ல என்று எழுதவில்லை, அப்படி எழுதுவதென்றால் அந்த தண்ணீர் ஊற்றும் படத்தை பாருங்கள்.... ////
அப்படி நீங்கள் எழுதியதாகவும் நான் சொல்லவில்லை...பெரும்பாலும் உதாரணங்கள் ஒரே ஜாதியை சுட்டுவது...அல்லது பொத்தம் பொதுவாக மாறிவிடுவது என்ற நிலையைதான் சுட்டியுள்ளேன்.அதுவும் நீங்கள் மட்டும் இப்படி எழுதுகிறீர்கள் அல்லது குறிப்பிட்டஜாதியை வேண்டுமென்றே தாக்குகிறீர்கள் என்றும் சொல்லவில்லை...
பொதுவாக இப்படிப்பட்ட விவாத களங்கள்....என்று சொன்னேன்.
மற்றும் இந்த விவாதத்திற்கு சம்பந்தமில்லாமல் சில விஷயங்கள்....
1.நான் எழுதும் ஏதேனும் எள்ளல்/நையாண்டி நடையில் தோன்றினால் நீக்கும் முழு அதிகாரமும் உங்களுக்கு உள்லது...அப்படி எழுதுவதும் என் நோக்கமல்ல...இதை serious ஆன விவாத களமாகவே நான் பாவிக்கிறேன்.
2.சொல்லும் விஷயங்கள் கோர்வையில்லாமல் repetitive ஆக வந்திருப்பின் அதையும் எடிட் /டெலிட் செய்து கொள்க...(வேலை கொடுப்பதற்கு வருந்துகிறேன்)சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லி assert செய்வதற்காக எழுதப்பட்டதல்ல...எழுத்தில் எனக்கு அனுபவமில்லாத அடிப்படை கோளாறு என அறிக
( எழுத்தில் மட்டும்.. .கருத்தில் அல்ல :) )
நல்ல பதிவு.இன்றைய நமது தேவை அடையாள அரசியல் அல்ல,வித்தியாசங்களின் அரசியல்தான்.மேலும் கார்ல்மார்க்ஸ் சொல்வார்"ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றது"என்று.இங்கு ஒவ்வொன்றுக்கும் பின்னால் சாதி...
நல்ல பதிவு
//மற்றபடி உடை ...கலாசாரம்..இன்ன பிற விஷயங்கள் சாதிக் குறியீடுகளாக மாறி விட்ட நிலைமையை குறிக்க(இவை அவ்வாறாக சமுதாயத்தின் அனைத்து அடுக்குகளிலும் இருப்பது உண்மை) உங்களுக்கு பூணூலும்...மடிசார் / வேட்டி கட்டும் மட்டும் நினைவில் வருவதைதான் நான் சுட்டியுள்ளேன்...//
அய்யோ, சூத்திரன் வேதம் ஓதுகிறானே என்று ஒப்பாரி வைப்பது யார் என்று சொல்லுங்கள் விசித்திர குப்தரே.மற்ற சாதியினரா?
இங்கே தமிழ்மணத்திலேயே நீங்களும் அர்ச்சகர் என்று குரூரமாக தலைப்பு வைத்து பதிவு போட்டார்களே? அப்போது நீர் எங்கே போனீர்?
//உதாரணங்கள் அக்ரஹாரம் மற்றும் சேரியை மட்டும் சுற்றி வருவது போல் உள்ளது என்ற (ஒரு வாசகனின்) என் கருத்தை கூறவே என் மேற்சொன்ன பதிவு.மேலும் உதாரணத்துக்காக ப்ராமணன்...பார்ப்பணன்...பூணூல் என்று தைரியமாக ஒரு சதியை குறித்து //
பிராமணர்களின் சாதிவெறிக்கு சாஸ்திர அடிப்படை உள்ளது. பிராமணர்களால் கேள்விக்குட்படுத்த தயங்கும் விஷயமாகவும் இந்த சாஸ்திரங்கள் தான் உள்ளன.மற்ற சாதிகளில் தீண்டாமை இந்த அடிப்படையில் இல்லை என்று தோன்றுகிறது.
சாதியின் அடிப்படையில் கல்வி உள்பட பல உரிமைகள் மறுக்கப்பட்டவர்களை பற்றி பேசினாலும் அதை எதிர்ப்பது அவர்கள்தானே? மற்ற சாதியினர் அதை எதிர்ப்பதில்லையே?
என் கருத்துக்கு கருத்து சொன்ன சந்திர குப்த மெளரியர் என்பவருக்கு நன்றி.
////அய்யோ, சூத்திரன் வேதம் ஓதுகிறானே என்று ஒப்பாரி வைப்பது யார் என்று சொல்லுங்கள் விசித்திர குப்தரே.மற்ற சாதியினரா?////
" அந்த தொழில் செய்யும் அனைவரும் என்பது என் கருத்து-அதாவது இன்றைக்கு வேதம் ஓதும் அனைவரும்..அனைத்து கோவில்களிலும் ஓதுவார்கள் ப்ராமணர்களல்லர்...அர்ச்சகர் பற்றி சொன்னால் அதுவும் அப்படியே "
////இங்கே தமிழ்மணத்திலேயே நீங்களும் அர்ச்சகர் என்று குரூரமாக தலைப்பு வைத்து பதிவு போட்டார்களே? அப்போது நீர் எங்கே போனீர்?////
" எப்போது...மூன்று மாதங்களுக்கு முன்னால் என்றால் அப்போது நான் தமிழ் மணம் அவ்வளவாக வந்ததில்லை.நான் தொடர்ந்து தமிழ் மணத்தில் அனைத்து பதிவுகளும் படிக்க சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. கணினி சில நேரமே கிடைக்கும். சுட்டி இருந்தால் தரவும் ..படித்து விட்டு கருத்தை கண்டிப்பாக சொல்கிறேன் "
"My comment..Start
//உதாரணங்கள் அக்ரஹாரம் மற்றும் சேரியை மட்டும் சுற்றி வருவது போல் உள்ளது என்ற (ஒரு வாசகனின்) என் கருத்தை கூறவே என் மேற்சொன்ன பதிவு.மேலும் உதாரணத்துக்காக ப்ராமணன்...பார்ப்பணன்...பூணூல் என்று தைரியமாக ஒரு சதியை குறித்து //
My comment..End
சந்திர குப்த மெளரியர்..comment start
/////பிராமணர்களின் சாதிவெறிக்கு சாஸ்திர அடிப்படை உள்ளது. பிராமணர்களால் கேள்விக்குட்படுத்த தயங்கும் விஷயமாகவும் இந்த சாஸ்திரங்கள் தான் உள்ளன..///////
சந்திர குப்த மெளரியர் comment...end
" இருக்கலாம்...அதனால்தான் நான் ஜாதிக்கொடுமையை+தீண்டாமையை ப்ராமணர் Vs தலித்துகள் என்பதாக பிரதானப்படுத்தி பார்க்கிறேன்" என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்தா என்பதே எனது கேள்வி.
////மற்ற சாதிகளில் தீண்டாமை இந்த அடிப்படையில் இல்லை என்று தோன்றுகிறது////
1.எனில் வேறு என்ன அடிப்படையில் ?
2.அதனால்தான் ஜாதிக்கொடுமை + தீண்டாமை பற்றி பேசும் போது மற்ற ஜாதிகளின் பெயர்களையோ அல்லது பழக்கங்களையோ குறிப்பிடுவதில்லை என்று (நீங்கள் மேற்சொன்ன கருத்தையே)குழலி அவர்களும் குறிப்பிட்டால் இதில் பார்ப்பனரல்லாத தலித் அல்லாத மற்ற ஜாதியினர் பற்றி அவர் கருத்து பற்றி அறியலாம்.
/////சாதியின் அடிப்படையில் கல்வி உள்பட பல உரிமைகள் மறுக்கப்பட்டவர்களை பற்றி பேசினாலும் அதை எதிர்ப்பது அவர்கள்தானே? மற்ற சாதியினர் அதை எதிர்ப்பதில்லையே?/////
இது சரியா....ப்ராமணர் மட்டும் எதிர்க்கின்றனரா அல்லது முற்படுத்தப்பட்ட வகையில் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் எதிர்க்கின்றனரா ? ( எதிர்ப்பு சரி அல்லது தவறு என்ற கருத்துக்குள் இங்கு நான் செல்லவில்லை)
//" அந்த தொழில் செய்யும் அனைவரும் என்பது என் கருத்து-அதாவது இன்றைக்கு வேதம் ஓதும் அனைவரும்..அனைத்து கோவில்களிலும் ஓதுவார்கள் ப்ராமணர்களல்லர்...அர்ச்சகர் பற்றி சொன்னால் அதுவும் அப்படியே "//
நகைச்சுவையாகவும் எள்ளலாகவும் பேசுவதாக உங்கள் முதுகை நீங்களே தட்டிக்கொள்வது இதனால்தானா?நல்ல நகைச்சுவை.ரசித்து சிரித்தேன். மற்றவர்களும் ரசித்து சிரிப்பார்கள்.
// எப்போது...மூன்று மாதங்களுக்கு முன்னால் என்றால் அப்போது நான் தமிழ் மணம் அவ்வளவாக வந்ததில்லை.நான் தொடர்ந்து தமிழ் மணத்தில் அனைத்து பதிவுகளும் படிக்க சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. கணினி சில நேரமே கிடைக்கும். சுட்டி இருந்தால் தரவும் ..படித்து விட்டு கருத்தை கண்டிப்பாக சொல்கிறேன் //
இது என் வேலை அல்ல. பார்ப்பனர்களை தாக்கி எழுதுவது மட்டும் கண்ணில் படுகிறது.அவர்கள் செய்யும் தவறு கண்ணில் பட வில்லையா விசித்தரகுப்தரே? மரம்வெட்டி என்று சொல்லும்போது அடுத்தவருக்கு எப்படி இருக்கும்? பூணூல் பற்றி தைரியமாக பேசுகிறார்களே என்று வருந்தும்போது இதைப்பற்றியும் பேசுங்கள்.
இன்னொரு கேள்வி.பூணூல் பற்றி பேசக்கூடாதா என்ன? இந்த மிரட்டல் யுக்தியை என்று விடபோகிறீர்கள்?
// இருக்கலாம்...அதனால்தான் நான் ஜாதிக்கொடுமையை+தீண்டாமையை ப்ராமணர் Vs தலித்துகள் என்பதாக பிரதானப்படுத்தி பார்க்கிறேன்" என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்தா என்பதே எனது கேள்வி.//
உருவாக்கியவன் அவன்.கட்டி காக்க நினைப்பவன் அவன். எரிவதை எடுத்தால் கொதிப்பது அடங்கும். அர்ச்சகர் சட்டம் என்பதெல்லாம் அதில் ஒரு படி என்பது விசித்திரகுப்தரின் கண்ணுக்கு தெரியாது. ஏனென்றால் அவர் தமிழ்நாட்டுக்கே புதுசு கண்ணா புதுசு.
//அதனால்தான் ஜாதிக்கொடுமை + தீண்டாமை பற்றி பேசும் போது மற்ற ஜாதிகளின் பெயர்களையோ அல்லது பழக்கங்களையோ குறிப்பிடுவதில்லை என்று (நீங்கள் மேற்சொன்ன கருத்தையே)குழலி அவர்களும் குறிப்பிட்டால் இதில் பார்ப்பனரல்லாத தலித் அல்லாத மற்ற ஜாதியினர் பற்றி அவர் கருத்து பற்றி அறியலாம். //
அவர் சொல்லவில்லை.நீங்கள் சொல்லுங்கள்.அந்த பழக்கங்களை நானும் தெரிந்துகொள்கிறேன்.
//இது சரியா....ப்ராமணர் மட்டும் எதிர்க்கின்றனரா அல்லது முற்படுத்தப்பட்ட வகையில் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் எதிர்க்கின்றனரா ?//
முதல் கருத்து இங்கு பொருந்தும்.எல்லோரும் சிரிக்கலாம்.
பதிவின் கருத்து என்ன என்பதைப்ற்றி அவர் கூறியதை நான் படித்தேன். சாதியே இல்லை என்று கூறும் சமத்துவபுர ஜென்டில் மேன்களுக்கு என்று அவர் சரியாகத்தான் கூறினார். அதைப்பற்றி பேசாமல் திசை திருப்பி பேசுவது உங்களின் திறமை.ஆனால் அதற்கு அவர் பலியாகமாட்டார்.
குழலி சாதீய வேறுபாடுகள் ஒழிய வேண்டும் என நினைப்பது மிகச் சரி. அதற்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நல்ல பலனைத் தர விரும்புவோம்.
ஆனால் எல்லாரும் ஒரே பேச்சைப் பேசிக் கொண்டும், ஒரே உணவை உண்டு கொண்டும் இருந்தால் மட்டும் சாதீய உணர்வுகளும் நடப்புகளும் மறந்து விடாது.
வடமொழி, ஆங்கில, அரபுப் பெயர்கள் பல தமிழர்களுடைய பெயர்கள் என்பதே இன்றைய நிதர்சனம். அதை வெளிச்சொல்லிக்கொள்ள முடியாமலோ என்னவோ பலர் பேர் போட்டுக்கொள்ளாமல் எழுதுகிறார்கள். சரி. அது அவர்களது விருப்பம் என்றுதான் நாம் சொல்ல முடியும். குழலி என்கிற பேருக்கு பதில் உங்கள் பேரைத்தான் நீங்கள் போட வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? அது போலத்தான் ஸ்ரீநிவாஸ்களும், அப்துலும், ஜானும். இவர்கள் அனைவருக்கும் தாய் மொழி ஒன்றுதானே.
இத்தனை வெளி அடையாளங்கள் இருந்தாலும் நாமெல்லாம் அரவணைத்துக் கொண்டு செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும்.
சாதீய உணர்வுகள் பலருக்கு இருக்கிறது. வலைப்பூவிலேயே யாரோ வீரவன்னியன் என்று போட்டுக் கொண்டு எழுதினார்களே. இந்த நிலை மாற வேண்டும். இந்தச் சாதீய உணர்வுகள் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். முன்னதைக் குறைத்துப் பின்னதைப் பெருக்க ஆக்கப்பூர்வமாக எதாவது செய்ய வேண்டும்.
இன்னொன்று சொல்கிறேன். சாதீய வேறுபாடுகள் என்பது மத வேறுபாடுகளில் இருந்து வந்தது. இனியும் வரும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வணங்கி வர...அப்படியே பிரிவினைகள் வந்தன. சில கூட்டணிகளும் வந்தன. இன்றைக்கு அனைத்தும் இந்து மதம் என்ற ஒன்றுக்குள் இருப்பதால் சாதீயப் பிரிவினையாகத் தெரிகிறது. ஒருவேளை இந்து மதம் என்று சொல்கிறவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி ஆகிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் (அதாவது சாதி வேறுபாடு...அல்லது எந்த வேறுபாடும் இல்லாமல்)....அதற்குப் பிறகும் வேறுபாடுகள் தொடரும். மதங்களில் பெயரால். மதத்தைக் காரணம் காட்டி ஒவ்வொருவரும் மற்றவரைக் கீழானவன் மேலானவன் என்று காரணம் சொல்வார்கள்.
இதற்கெல்லாம் அடிப்படை என்று பார்த்தால் அது ஆதிக்க மனப்பாங்குதான். அடுத்தவரை ஆள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை, உலகம் முழுவதுமே வேறுபாடுகள் ஏதாவது ஒரு பெயரில் இருந்து கொண்டேயிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
//வடமொழி, ஆங்கில, அரபுப் பெயர்கள் பல தமிழர்களுடைய பெயர்கள் என்பதே இன்றைய நிதர்சனம். அதை வெளிச்சொல்லிக்கொள்ள முடியாமலோ என்னவோ பலர் பேர் போட்டுக்கொள்ளாமல் எழுதுகிறார்கள். //
ராகவன் மற்றும் ஸ்றீனிவாஸ் என்ற பெயர் கையாளப்பட்ட விதம் பற்றி இங்கே ஒரு விடயம் கூற விரும்புகிறேன், இங்கே வடமொழி பெயர்கள் என்பது பற்றி சொல்ல வரவில்லை, ரமேஷ்,மகேஷ் என்பது வடமொழி பெயர்கள் ஆனால் யார் பெயர்வைத்தாலும் அது ரமேஷ் தான், மகேஷ் தான், ஆனால் சீனுவாசன் என்பது ஸ்றீனிவாசாக ஆனது எதனால்.... உடனே ஸ்றீனிவாஸ் என்று பெயரை யார் வேண்டுமானால் வைத்து கொள்ளுங்கள் யார் தடுப்பது செய்யலாம் தான், கட்டுரையின் பேசு பொருள் சாதிப்பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதோ, யார் மீதான குற்றம் சாட்டுவதோ அல்ல, சாதியில்லையே இந்த சாதியே அரசியல்வாதிகளாலும், அரசாங்கத்தாலும் இருக்கிறது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதியின் தாக்கம் நம்மையும் அறியாமல் எங்கெல்லாம் ஊடுறுவி இருக்கின்றது என்பதற்கான சில உதாரணங்கள் மட்டுமே அது, மேலும் சில பேசவேண்டியுள்ளது, அடுத்த பகுதியில் பேசலாம்.
////நகைச்சுவையாகவும் எள்ளலாகவும் பேசுவதாக உங்கள் முதுகை நீங்களே தட்டிக்கொள்வது இதனால்தானா?நல்ல நகைச்சுவை.ரசித்து சிரித்தேன். மற்றவர்களும் ரசித்து சிரிப்பார்கள்./////
சந்தரகுப்த மெளரியர் என்பவருக்கு,
முதலிலேயே குறிப்பிட்டது போல் நான் நகைச்சுவையாகவோ...எள்ளலாகவோ எந்த வாதத்தையும் முன் வைக்கவில்லை...எழுதவும் முனையவில்லை....அப்படி தோன்றினால் அது என் எழுது திறனில் உள்ள குறைபாடே....அதற்காக மன்னிக்கவும்... ஜாதிப் பிரச்சனையை நகைப்பிற்குறிய விஷயமாக நான் கருதவில்லை.
/////இது என் வேலை அல்ல. பார்ப்பனர்களை தாக்கி எழுதுவது மட்டும் கண்ணில் படுகிறது.அவர்கள் செய்யும் தவறு கண்ணில் பட வில்லையா விசித்தரகுப்தரே? மரம்வெட்டி என்று சொல்லும்போது அடுத்தவருக்கு எப்படி இருக்கும்? பூணூல் பற்றி தைரியமாக பேசுகிறார்களே என்று வருந்தும்போது இதைப்பற்றியும் பேசுங்கள்.
இன்னொரு கேள்வி.பூணூல் பற்றி பேசக்கூடாதா என்ன? இந்த மிரட்டல் யுக்தியை என்று விடபோகிறீர்கள்?/////
நாம் இருவரும் வெவ்வேறு தளத்திலிருந்து வாதம் செய்கிறோம்...நான் ப்ராமணரை ஞாயப்படுத்துகிறேன்....அல்லது அவர்களது பக்கம் சார்ந்து பேசுகிறேன் என்ற உங்களது புரிதலினால் (தவறான) ஏற்பட்ட உங்களது கோபமே இது....எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது கூட உங்கள் வேலையில்லை...ஆனால் நான் எதிர்தரப்பிலிருந்து வதம் செய்கிறேன் என்ற (தவறான) புரிதலில் நேரம் செலவழித்து பதில் அளிக்கும் அதே வேளையில் ...என் வேலையல்ல.. எங்கே போயிருந்தாய் என சாடுகிறீர்கள்...மரம் வெட்டி என்று சொவது தவறுதான்...ஜாதியை குறிப்பதாயின்)....பூணுலை பற்றி தாராளமாக பேசலாம்...அது அவரவர் விருப்பம் மற்றும் மனநிலை பொருத்தது....மிரட்டும் தொனியில் நான் எதுவும் எழுதவும் இல்லை..
////உருவாக்கியவன் அவன்.கட்டி காக்க நினைப்பவன் அவன். எரிவதை எடுத்தால் கொதிப்பது அடங்கும். அர்ச்சகர் சட்டம் என்பதெல்லாம் அதில் ஒரு படி என்பது விசித்திரகுப்தரின் கண்ணுக்கு தெரியாது. ஏனென்றால் அவர் தமிழ்நாட்டுக்கே புதுசு கண்ணா புதுசு.//////
/////அவர் சொல்லவில்லை.நீங்கள் சொல்லுங்கள்.அந்த பழக்கங்களை நானும் தெரிந்துகொள்கிறேன்.//////
இருக்கிறது...அதை எடுத்துரைக்கலாம் என எழுதியும் வைத்திருந்தேன்... ஆனால் மேற்சொன்னது போல தவறான புரிதலுடன் எதிரெதிர் திசையில் நின்று விவாதம் செய்வது எள்ளல்,கிண்டல் சேர்த்து எழுத செய்து மற்றும் மனக்கசப்பை மேலும் வளர்க்கும் ..எனவே நான் விவாதத்தை மேலும் தொடரவில்லை.இத்துடன் விட்டு விட்டேன்.
/////முதல் கருத்து இங்கு பொருந்தும்.எல்லோரும் சிரிக்கலாம்./////
/////பதிவின் கருத்து என்ன என்பதைப்ற்றி அவர் கூறியதை நான் படித்தேன். சாதியே இல்லை என்று கூறும் சமத்துவபுர ஜென்டில் மேன்களுக்கு என்று அவர் சரியாகத்தான் கூறினார். அதைப்பற்றி பேசாமல் திசை திருப்பி பேசுவது உங்களின் திறமை.ஆனால் அதற்கு அவர் பலியாகமாட்டார்.////////
திசை திருப்புவதாக பதிவருக்கு தோன்றினால் தாராளமாக என் பின்னூட்டங்களை அவர் எடுத்துவிடலாம்.
பொறுமை காத்ததற்கு நன்றி.... குழலி அவர்களே....இதில் நான் நகைச்சுவையாகவும் எள்ளலாகவும் எழுதியிருப்பதாக சந்தரகுப்த மெளரியர் என்பவர் குறிப்பிட்டுள்ளது சரிதான் என நீங்களும் நினைக்கிறீர்கள் என்பதாயின் மன்னிக்கவும்..மற்றும் ஒரு பின்னூட்டத்தின் வாயிலாக தெரியப் படுத்தவும். பின் எப்பொழுதும் உங்களது எந்தப்பதிவிலும் பினூட்டம் இட மாட்டேன்...
அப்பாவி(?!)தமிழன், அது எப்படிங்க இந்த தொடரின் அடுத்த பதிவிற்கு இப்போதே பின்னூட்டம் இடுகின்றீர், கொஞ்சம் பொறுங்கள், அடுத்த பதிவில் உங்கள் பின்னூட்டத்தை வெளியிடுகிறேன், சாதி பற்றி எழுதும் பதிவுகள் பிராமணர் X பிராமணர் அல்லாதோர் என்று திரிக்கப்படுவது போலவே இந்த பதிவும் போவதால் சில பின்னூட்டங்கள் தாமதப்படுத்த படுகின்றன, இல்லை இல்லை இப்போதே வெளியிடவேண்டுமென்றால் உங்கள் பதிவுகளில் உங்களுக்கு உகந்த பதிவுகளில்(அதை சொல்லனுமா என்ன நான்) போட்டுகொள்ளுங்கள்
// ராகவன் மற்றும் ஸ்றீனிவாஸ் என்ற பெயர் கையாளப்பட்ட விதம் பற்றி இங்கே ஒரு விடயம் கூற விரும்புகிறேன், இங்கே வடமொழி பெயர்கள் என்பது பற்றி சொல்ல வரவில்லை, ரமேஷ்,மகேஷ் என்பது வடமொழி பெயர்கள் ஆனால் யார் பெயர்வைத்தாலும் அது ரமேஷ் தான், மகேஷ் தான், ஆனால் சீனுவாசன் என்பது ஸ்றீனிவாசாக ஆனது எதனால்.... உடனே ஸ்றீனிவாஸ் என்று பெயரை யார் வேண்டுமானால் வைத்து கொள்ளுங்கள் யார் தடுப்பது செய்யலாம் தான், //
ஸ்ரீநிவாஸ் என்ற பெயரை யாரும் வைப்பதற்குத் தடை இருக்கிறதா என்ன? என்னுடைய தமிழ் அறிவுக்கு எட்டியவரை சீனிவாசன் என்பது முறையான தமிழ்ப் பெயரே அல்ல. தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிப் பெயர். ஸ்ரீநிவாஸ் என்றால் திருத்தங்கல். திரு என்ற செல்வம் (அல்லது திருமகள்) தங்குமிடமே ஸ்ரீநிவாஸ். அதைத்தான் நாம் மாற்றி சீனிவாசன், சீனிச்சாமி, சீனியம்மா என்று வைத்திருக்கிறோம்.
// கட்டுரையின் பேசு பொருள் சாதிப்பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதோ, யார் மீதான குற்றம் சாட்டுவதோ அல்ல, சாதியில்லையே இந்த சாதியே அரசியல்வாதிகளாலும், அரசாங்கத்தாலும் இருக்கிறது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதியின் தாக்கம் நம்மையும் அறியாமல் எங்கெல்லாம் ஊடுறுவி இருக்கின்றது என்பதற்கான சில உதாரணங்கள் மட்டுமே அது, மேலும் சில பேசவேண்டியுள்ளது, அடுத்த பகுதியில் பேசலாம். //
இதுதான் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்றால் நீங்கள் சொல்ல வந்ததைச் செறிவாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுமைப் படுத்துவதை விட்டு விட்டு சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்வதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. கருத்துச் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
//So your understanding is totally
flawed and your argument is illogical.
//
நன்றி
பெரும்பாலான பின்னூட்டங்கள் ஸ்றீனிவாஸ் என்று நான் குறிப்பிட்ட பெயரையே சுற்றி சுற்றி வருவதால் கடைசிமுறையாக இது தொடர்பான என் விளக்கத்தை கொடுக்க முயல்கிறேன்.
//இந்தப்பெயர் ரோசாவின் பதிவுகளைப் படிக்கும் சில புதியவர்களின் மனதில் சில முன்முடிவுகளை ஏற்படுத்தக்கூடும், அது அவர் பதிவின் தாக்கத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யும் என்று நான் நினைக்கிறேன்//
இதை எழுதியது பெனாத்தல் சுரேஷ், அவர்களின் இந்த பதிவிலிருந்து எடுக்கப்பட்டது... பெயர் வெறும் பெயரென்றால் அது ஏன் முன் முடிவுகளை ஏற்படுத்த வேண்டும்? மீண்டும் நினவூட்டுகிறேன் இதை எழுதியது பெனாத்தல் சுரேஷ் அவர்கள்.
தற்போதுள்ள நிலையில் பெயர்களையும் பெயர்களின் எழுத்துகளையும் வைத்து மிகச்சரியாக சாதி கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் குத்து மதிப்பாக எந்த பிரிவில் வருகிறார்கள் என கண்டுபிடிக்க இயலும்(பேராசிரியர் தருமியிடம் இதைப்பற்றி ஒருவர் தொடர்ந்து கேட்டு வருகிறார், தொடர்ந்து தருமியிடம் கேட்பதை விட அந்த கேள்வியை தம் மனசாட்சியிடம் கேட்டால் விடை கிடைக்கலாம்) என கருதுகிறேன், தயவு செய்து இதை இல்லை என்பவர்கள் அவரவர்கள் மனசாட்சியை கேட்டு பார்க்கவும், அது என்ன சொல்கிறதே அதை உங்கள் முடிவாக வைத்துகொள்ளுங்கள்.
நன்றி
தற்போதுள்ள நிலையில் பெயர்களையும் பெயர்களின் எழுத்துகளையும் வைத்து மிகச்சரியாக சாதி கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் குத்து மதிப்பாக எந்த பிரிவில் வருகிறார்கள் என கண்டுபிடிக்க இயலும்.
Who is interested in that and
for what.What is the need.
You are so obessed with caste
that you see it everywhere right
from names.Caste is there but
society cannot be reduced to just
a collection of
castes as you assume.
Well said Raghavan!
But neo-dravidians like Kuzhali will not accept your logic. It does not suit them. They need the bogey of Brahmins, forwards, centuries of reservation, etc., to establish their right to reservation everywhere.
Though i hate Vijayakanth's entry into politics, i am glad he has the guts to contest in Virudhachalam and get a brahmin lady elected as a Chairman in Karaikal.
He has shown that even vanniyars, those who are really poor, are willing to back anyone along with Dalits and others, who can promise a better future.
But Kuzhali and his ilk would keep Vanniyar Sangham, PMK, anit-brahmin, anti-xyz, etc., alive anyway!
They can talk about caste in everything; if someone else even hints it, they would call him names, cast aspersions on their integrity.
Height of double standards! But you can't expect anything different from them now. History shows that Brahmins and Velaalars allied at some point Chozha era to establish their hegemoney; and i am sure Kuzhali and his group will sing paens to other tamil forwards soon after their level is upgraded in the society.
i am aasath
To Anonymous
You have prooved as a anti-reservation fellow by your words.
Change of naming is one of the protect symo\bol against Barbana Snskrit. But it hasn't essence to fight aganist Varnaashramadharmaa ...
One request
We need not reservation ...
But do you ready to give 9due to feudal) a bride from your upper community to the groom of Lower community like servicing castes.
We can't hide our caste title..But still My opinion whatever the caste you belong to respect fellow human being....Unless until your caste being harmful others there is no wrong in using that.....
Respect Human apart from caste or religion....
Your postings imply that only Brahmins are the root cause and beneficiaries of the evil system of caste system. If you analyse without bias, you may conclude that all the non-dalit castes fall under this (dominating)category - It varies in degrees or area to area- that's all.
All these conceptions and misconceptions are based on the following factor: If the primary motive of your "anti-caste" stand is to defend Reservation, your concept is flawed. Defending Reservation is justified only if it is the logical outcome of your motive and struggle towards CASTLESS SOCIETY. Yes... defending the system of Reservation cannot be a primary cause neglecting the greater and noble cause of progress towards castless society. So, refine your stand and uphold your struggle towards castless society and let the concept of Reservation
subject to it... Then see the support you get...
(I could not post in tamil, though I have Ekalappai... can you give tips?)
Post a Comment