மசோகிஸ்ட் டோண்டுவை தமிழ்மணத்தை விட்டு நீக்க கோரிக்கை...
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் போலி பிரச்சினை முடியும் தருவாயை ஒவ்வொரு முறை எட்டும் போதும் அதை எப்பாடு பட்டேனும் கலைக்கும் வேலையை டோண்டு செய்து கொண்டிருப்பார், சைக்கோ போலி மூர்த்தியினை பட்டவர்த்தனமாக அடையாளம் காட்டி சில நாட்களாக சேற்றிலே இறங்கி பன்றியை துரத்த போராடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் முயற்சியை வீணடிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார், புண்ணை சொறிந்து சொறிந்து அதை ஆறவிடாத முயற்சியாகவே இதை பார்க்கின்றேன், இது ஆரம்பித்த அன்றே டோண்டு அவர்களின் போலி ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்கி பின்னூட்டம் போட்டு பிரச்சினையை திசை திருப்ப நினைத்த போதே டோண்டுவுக்கு மின் மடல் அனுப்பி உமக்கு என்ன பிரச்சினை முடியவேண்டுமென்ற என்னமில்லையா என்ற கருத்து தொணிக்க மடல் அனுப்பி போலி பற்றி பேசாமல் சற்று அமைதியாக ஒதுங்கி இருங்கள் என்றும் சொன்னேன்... பொதுப்படையாக போலி மூர்த்தியை அடையாளம் காட்டியும் ஆகிவிட்டது, அவன் சைக்கோ பேச்சையும் பொதுவில் காட்டியாகிவிட்டது, இனியும் அந்த சைக்கோ மூர்த்திக்கு உதவி செய்பவர்களுக்கும் அவனது அல்லக்கைகளுக்கும் என்ன மரியாதை கொடுக்கப்பட வேண்டுமோ அதை பதிவுலகம் பார்த்துக்கொள்ளும், மேலும் இதை தொடர்ந்து பொதுவில் பேசாமல் சைக்கோ மூர்த்தி மற்றும் அவன் அல்லக்கைகளுக்கு சட்டப்படியாகவும், மனசாட்சிபடியாகவும் என்ன செய்ய வேண்டுமோ அவைகளை ஆஃப் லைனில் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு பதிவு போட்டு போலி பிரச்சினையை எங்கே முடிந்து விடுமோ என்ற பதட்டத்தில் சொறிந்து விட்டுள்ளார் டோண்டு, போலி டோண்டு மூர்த்திக்கும் ஒரிஜினல் டோண்டு ராகவன் அவர்களுக்கும் என்ன தான் அப்படி ஒரு பந்தமோ, போலி டோண்டு மூர்த்தி இல்லாமல் ஒரிஜினல் டோண்டு வாழவே முடியாது போல.... சே....
தமிழ்மணத்தினால் எழுத ஆரம்பித்தவர்கள் ஏராளம், வெகுசன ஊடகங்கள் திணிப்பது மட்டுமே மக்கள் பார்வை என்றிருந்ததை குறைந்த இணைய பயன்பாட்டாளர்களுக்காவது வெகுசன ஊடகங்களுக்கு மாற்று ஏற்படுத்தியது தமிழ்மணம், அது நீடிக்கவும் மேலும் மேலும் பயனாளர்கள் எழுதும் ஆரோக்கிய சூழலை உருவாக்கவும் போலி மூர்த்திக்கு முடிவு கட்டுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தேவை மசோகிஸ்ட்(pleasure in being abused or dominated : a taste for suffering ) டோண்டு அவர்களையும் தமிழ்மணத்திலிருந்து நீக்குவது, எப்போதோ சில நண்பர்கள் பன்றி துரத்தும் வேலையில் இறங்கியிருக்க வேண்டியது ஆனாலும் அப்போதெல்லாம் போலியை துரத்துவதை விட டோண்டுவுக்கும் வேறு சிலருக்கும் திராவிட சிந்தனையுள்ள பதிவர்கள் மீது பழி போட்டுக்கொண்டே இருந்ததே நண்பர்களையும் என்னையும் இந்த பன்றி துரத்தும் நிலையிலிருந்து ஒதுங்கியே இருக்க செய்தது...
இணைய சுதந்திரம் லொட்டு லொசுக்கு என்பதை தாண்டி, தமிழ்மணம் மீண்டும் மணம் வீச, ஆரோக்கிய சூழல் மீண்டு வர, தமிழ்மணத்திலிருந்து டோண்டுவை நீக்க கோரி தமிழ்மணம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றேன்.... உங்களுக்கும் அதுவே தோன்றினால் ஒரு மின்மடல் தமிழ்மணத்திற்கு அனுப்புங்கள்.... இணைய சுதந்திரத்திற்கும் அராஜகத்திற்கும் வித்தியாசமுள்ளது, தமிழ்மணம் இணைய சுதந்திரம் என நினைக்காமல் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரிஜினல் மற்றும் போலி டோண்டுகளின் தொல்லையிலிருந்து தமிழ்மணத்தை விடுவிக்குமாறு வேண்டுகின்றேன்...



