பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு



பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு


இன்று காலை சென்னையில் உள்ள பிரபல உள்ளரங்கு படப்பிடிப்பு தளத்தினுள் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
------------------------------------
------------------------------------
--------------------------------
பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு காட்சியில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை, இதனால் இயக்குனருடன் சச்சரவு ஏற்பட்டு படப்பிடிப்பு நடைபெறவில்லை என நமது ஓநாயார் செய்தி தந்தார்.

செய்திக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு? செய்தியை திரிக்கும் ஒரு சோமாறித்தனம், உத்தி என திட்டுபவர்களே ஒரு நிமிடம் சிந்திக்கவும், பதிவு என் பதிவு , தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.மேலும் தலைப்பு, செய்தியின் ஒரு வரி என்பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.

சோ அவர்கள் ஆசிரியராக இருக்கும் துக்ளக் வார இதழில் பதிப்பிக்கப்பட்ட ஒரு செய்தி.

அதன் தலைப்பு

"மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற வேண்டும்" - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...

ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம் புது டெல்லியில் CBSE மற்றும் ICSE என இரண்டு வகை கல்வித்திட்டங்கள் மட்டுமே உள்ளன, ஆதலால் CBSE பாடதிட்டத்தில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

டெல்லி தமிழ்ப் பள்ளி ஆண்,பெண் இரு பாலரும் படிக்கும் பள்ளி, மிகவும் புதிய சூழ்நிலையில் வளரும் பெண் குழந்தைகளை பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து 'மேடர்-டே' என்ற பெண்களி பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம்.

என் மகள்களின் பெயர்,நகராட்சி அலுவலகம்... என்று மெனக்கெட்ட நீங்கள், இன்னும் கொஞ்சம் சிரமம் எடுத்து துருவி துருவி ஆராய்ந்திருந்திருக்கலாம்.

இங்கு பொதுவாக எல்லா பள்ளி கூடத்திலும் முதல் மொழிப் பாடம் ஆங்கிலம், இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி, மூன்றாம் மொழிப்பாடம் ப்ரெஞ்ச் அல்லது சமஸ்கிரதம்.

தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழிப் பாடமாக இருப்பினும் ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் இரா.அன்புமணி ஆவர்கள் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 'மேடர்-டே' பள்ளியின் முதல்வர் சகோதரி டோரினாவாஸ் அவர்கள், சிறப்பு சலுகையாக என் மகள்கள் இருவரும் அவர்களின் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழிப்பாடமாக அனுமதி அளித்தார்கள். இவர்கள் இருவருக்காக மட்டுமே தமிழாசிரியை ஒருவரை நியமிக்க முடியாத காரணத்தினால் லோதி எஸ்டேட்டில் உள்ள டெல்லி தமிழ்ப் பள்ளியில் படிக்க சிறப்பு அனுமதி அளித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிடும் ஏழாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு உரைநடை, செய்யுள் பகுதி கொண்ட பாடபுத்தகங்களைத்தான் இவர்கள் படிக்கிறார்கள். மூன்றாம் மொழித் தேர்வு சமயம் கேள்வித்தாள்கள் தயாரித்து திருத்தி மதிப்பெண்களை 'மேடர்-டே' பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடும்படி ஒரு புது ஏற்பாடு செய்யப்படிருக்கிறது.

இத்தனை சிரமும் எதற்காக? குழந்தைகள் தமிழைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தான், ஏதோ துக்ளக் கேள்வி கேட்டு விட்டது என்பதற்காகவோ, தமிழ் பாதுகாப்பிற்காக போராடுகிறோம் என்பதற்காகவோ அல்ல, குடும்பமே தமிழின் மேல் உள்ள பற்றினால் பாசத்தினால் ஏப்ரல் மாதமே சிறப்பு அனுமதி வாங்கி விட்டோம்.

குழந்தைகள் மற்ற பாடங்களை விட தமிழில் எப்போதுமே எடுத்திருக்கிறார்கள். தாய்மேல் பாசத்தை காட்ட மற்றவர் சொல்லித் தரவேண்டியதில்லை, தமிழ்ப்பற்றை நீங்கள் சொல்லித் தந்து நாங்களோ நாங்களொ எங்கள் பிள்ளைகளோ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

டெல்லியில் ஹிந்தி மொழியை படிக்காமல் ஒருவர் பள்ளி கூட படிப்பைக் கூட முடிக்க முடியாது, ஆனால் தமிழ் மொழியை படிக்காமல் தமிழ்நாட்டில் ஒருவர் பள்ளி,கல்லூரி படிப்பை முடிக்க முடியும்.

எல்லோருக்கும் இருக்கும் தாய் மொழிப்பற்று ஏன் தமிழனுக்கு இருப்பதில்லை? அதை உணர்த்துவதற்குதான் மருத்துவர் ஐயா அவர்கள் தமிழ்ப் பாதுகாப்பு போராட்டங்களை நடத்துகிறார்.

ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தை 12-ஆம் வகுப்புக்குள் ஒரு மொழிப்பாடமாக கற்று மாணவர்கள் ஆங்கில புலமை பெற வேண்டும். அதே சமயம் கட்டாயம் தமிழையும் பிழையின்றி பிற மொழிக் கலப்பில்லாமல் தெளிவாக பேச வேண்டும் என்பதே அவரின் அவா. அந்த உண்மையை புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தங்களுக்கு இல்லையா? அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறீர்களா?

ஒரு பிரபல பத்திரிக்கையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தங்களுடைய பத்திரிக்கையில் தவறான தகவல்களை தந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் அளித்துள்ளது. ஆகவே என்னுடைய இந்த மறுப்பு கடித்தையும் வெளியிடுவீர்கள் என நம்புகின்றோம்.
- சௌமியா அன்புமணி
ஆசிரியர், பசுமை தாயகம் - சுற்று சூழல் சென்னை-34.

என்ன ஒரு அருமையான தலைப்பு, ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
டோண்டு அய்யாவின் ஜோவின் கேள்விக்கான பதில் கீழே
//டோண்டு ஐயா,
உங்களுக்கு பிடித்த துக்ளக்-கின் இந்த வார இதழில் வெளிவந்துள்ள அன்புமணியின் துணைவியாரின் கடிதத்தை படியுங்கள் .அதோடு அதற்கு தலைப்பு கொடுத்திருக்கும் விதத்தில் சோ(மாரி)த்தனத்தை கொஞ்சம் கவனியுங்கள்.நன்றி!
# posted by ஜோ : July 30, 2005 8:57 PM

தலைப்பில் என்ன தவறை கண்டீர்கள் ஜோ அவர்களே?
"மாணவர்கள் ஆங்கிலப் புலமை பெற வேண்டும்" என்று அன்புமணி அவர்களின் மனைவி கூறியது உண்மைதானே? தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.//

துக்ளக் ஆசிரியர் 'சோ' அவர்கள் கீழ் காணும் தலைப்புகளைக் கூட இந்த கடித்திற்கு தேர்ந்தெடுத்திருக்கலாம்.

1.இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி, மூன்றாம் மொழிப்பாடம் ப்ரெஞ்ச் அல்லது சமஸ்கிரதம் - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...

2.ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும் - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...

3.புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தங்களுக்கு இல்லை - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...

இன்னும் என்ன என்ன தலைப்பு வைக்கலாம் என ஒரு போட்டி வைப்போம் எல்லாம் நம் திறமையை காண்பிப்போம்.

டோண்டு அய்யாவின் இந்த பதிவிற்கான சில விளக்கங்கள்

//வலைப்பூ பாவிக்கும் பல அன்புமணி தாங்கிகள் இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்//
மேலே உள்ள தலைப்பு அதற்கு நியாயம் கற்பிக்கும் 'சோ'வின் தாங்கிகள் அன்புமணி தாங்கிகள் என கூறுவது வியப்பொன்றுமில்லை. 'சோ'வின் தாங்கிகள் என நான் குறிப்பிட முக்கிய காரணம் முதலில் அன்புமணி தாங்கி என்பதைப்போல 'சோ' தாங்கி என எழுதினால் 'சோ' விற்கும் 'தாங்கி' இடையில் உள்ள வெற்றிடம் காணமல் போய் வேறு அர்த்தம் கற்பிக்கப் படலாம், மேற்கண்ட தலைப்பிற்கே நியாயம் கற்பிக்கும் போது இது நடக்காது என என்னால் உறுதியாக கூற முடியாததால் எச்சரிக்கையாக 'சோவின்' என மாற்றிவிட்டேன்.

//தமிழ்நாட்டில் இருந்திருந்தால் தன் குழந்தைகளை தமிழ் பள்ளியிலேயே படிக்க வைத்திருப்பாராம். அப்பதிவாளரின் போறாத காலம் தில்லியில் இருபது வருடங்கள் இருந்து தன் பெண்ணை அப்பள்ளிகளில் ஒன்றில் படிக்க வைத்த என்னிடம் போய் அதைக் கூறினார். அவருக்கு அப்போதே தேவையான பதில் கூறினேன்.
//
சிறிது நாட்களுக்கு பிறகு இதற்கு பதிலாக நான் கூறியது தில்லியிலிருக்கும் நண்பருடன் பேசியபோது மேடர் டே பள்ளியின் உள் கட்டமைப்பு,ஆசிரியர்கள், தரம் ஆகியவற்றை பற்றி யும் மற்ற தமிழை ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரும் பள்ளியின் தரம் பற்றி ஒப்பிட்டு பார்த்தால் மேடர் டே சிறந்த பள்ளி என்றார், எனவே வசதியாக தமிழை இரண்டாம் சொல்லித்தரும் பள்ளிகளின் கல்வி கட்டணம் குறைவு என்று கூறிய நீங்கள் தரத்தைப் பற்றி சொல்லவில்லை என்ற போது தான் தமிழ் கற்றுத்தரும் சிறந்த பள்ளிகள் தரமான பள்ளிகள் என்றார் வசதியாக மேட்டர் டே பள்ளியின் தரம் அந்த பள்ளிகளைவிட மேல் என மறுக்காமல், தமிழகத்திலே இருந்தால் நல்ல தமிழ் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்திருப்பார் என கூறிய போது அந்த குழந்தைகளின் தாத்தாவிற்கு(மருத்துவர் இராமதாசு) தமிழ்நாட்டிலே தானே இருக்கின்றார் அவரிடத்திலில்லாத ஆள்,அம்பு படை பலமா அந்த குழந்தைகள் தமிழகத்திலேயே இருக்கலாமே, (அதாவது சிறிய குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்திருக்க வேண்டும் அவர்களின் தந்தை, தாத்தா தமிழ் பற்றி பேசினால் ) இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது, விவாதம் வேறு திசைக்கு சென்றதால் இனி பேசிப் புண்ணியமில்லை என்று அந்த பதிவிலிருந்து ஒதுங்கிவிட்டேன்.

தரம் என்பது ஆளுக்கு ஆள் இடத்திற்கு இடம் மாறுபடும், உதாரணத்திற்கு அரசு ஊழியரின் குழந்தைக்கு நகராட்சிப் பள்ளியை விட கிறுத்துவ திருச்சபைகள் இலவசமாக நடத்தும் பள்ளிகள் தரமானது, பொறியாளருக்கு அதைவிட மேம்பட்ட பள்ளிகள், பொறியாளர் தரம் என்று நம்புவதையும் விட மேம்பட்ட பள்ளிகள் இல்லையா என்ன?

மேடர்-டே பள்ளியின் தரத்திற்கான ஒரு சிறிய உதாரணம்

Mater Dei school
AD-Venture

Beats

Indian Music Competition
roup song(Sr.)


Best Team
Over-all Best School

1st Position

http://www.dpsrkp.net/links/activity.htm

அய்யா கூறிய பள்ளி மேற்கண்ட சுட்டியில் எங்கே உள்ளது என எனக்கு தெரியாமல்.

(ஹைய்யா இனி மேடர்-டே பள்ளியின் இணைய கொ.ப.ச. குழலில் தான் என கேள்விகேட்கலாம் என நினைப்பவர்களே நான் ஓடிவிட்டேன்)

நான் பள்ளிகளின் தரம் பற்றி கூறியது கூட நண்பருடன் பேசியதின் அடிப்படையில் அமைச்சர் அன்புமணியுடன் பேசியதின் அடிப்படை என கூறவில்லை.

//இல்லாவிட்டால் தொண்டன் அடிபட்டு சாவான், அன்புமணிகள் மந்திரிகளாவார்கள்.//
தலைவன் கல்லடியும் சொல்லடியும் தலைமறைவு வாழ்க்கையயும் நடத்தி உயிரையும் பணயம் வைத்து தொண்டர்களை மட்டுமல்ல என் போன்ற சாதாரணரையும் வாழ வைத்ததால் தான் இன்று அன்புமணி அமைச்சராக உள்ளார், தலைவனுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அன்புமணி தந்தை இல்லாத பிள்ளையாகத் தான் வளர்ந்திருப்பார், எனவே அமைச்சராக அன்புமணியிருப்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

இந்த விடயத்தில் பத்திரிக்கைகளின் பங்கு
பத்திரிக்கைகள் மிக சாதுரியமாக இந்த விடயத்தில் நடந்து கொண்டன, தினமலரும், குமுதமும் செய்தியாகவோ கட்டுரையாகவோ மேடர்-டே அன்புமணி குழந்தைகள் பற்றி குறிப்பிடவில்லை, வாசகர் கடிதம், இது உங்கள் இடம், அந்துமணி வாசகர் கேள்வி பதில்கள் என வாசகர்கள் பெயரை சொல்லிதான் எழுதின, ஏனென்றால் நாளை இந்த செய்தி பொய் என தெரிந்தால் எச்சரிக்கையாக வாசகர்கள் எழுதியது இது பத்திரிக்கை செய்தி இல்லையே இது என கூறிவிடலாம், வழக்கு என்று போனால் கூட தப்பிவிடலாம்.

எத்தனை முறை இந்த கடிதங்களை பிரசுரித்தனர் (உதவி ஆசிரியர்களே வாசகர்களின் பெயரில் கடிதம் எழுதியிருக்கலாம்), ஒரே ஒரு முறையாவது அன்புமணியிடம் செய்தியை உறுதி செய்து கொண்டனரா? எத்தனை முறை இந்த பிரச்சினைக்கு பிறகு அன்புமணியும் மருத்துவர் இராம்தாசுவிம் பேட்டியளித்தனர், ஒரே ஒரு முறையாவது இதைப் பற்றி கேள்விகேட்டனரா? (நமது எம்ஜியாரிலிருந்தும் முரசொலியிலிருந்தும் வரும் செய்திகளை தயவு செய்து உதாரணத்திற்கு காட்டாதீர்கள்), ஏன் அன்புமணியோ, மருத்துவர் இராமதாசுவோ சொல்லியிருக்கலாமே என கேள்வி கேட்பார்கள் உடனே, இப்படி வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் மத்திய அமைச்சர் அன்புமணி , மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்வது மட்டுமே முழு நேர வேலையாக இருக்கும், இங்கே இணையத்திலே நான் சொல்லிக்கொண்டிருப்பது போல.

தின மலரும், குமுதமும் துக்ளக்கும் அமைச்சர் அன்புமணியின் மனைவியின் கடிதத்திற்கு பிறகு தங்களின் தவறான செய்தி மற்றும் பிரச்சாரத்திற்கு மன்னிப்பு கேட்பார்களா அவர்களின் பத்திரிக்கையில், இது பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான்.

பத்திரிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன அவர்களுக்கு பாமக மீதும் அமைச்சர் அன்புமணி மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதுமான காழ்ப்புணர்ச்சியை.

நான் வலைப்பதிய வந்ததன் முக்கிய நோக்கம் பாமகவைப்பற்றி எழுத அல்ல, ஆனால் பாமக மீதான நச்சு பிரச்சாரம் வலைப்பூக்களில் ஓங்கியிருந்த போது அதைப்பார்த்தும் எனக்கு தெரிந்த உண்மைகளை கருத்துகளை சொல்லாமல் இருந்தால் அது நான் செய்யும் துரோகம். அது மட்டுமின்றி prejudice மனப்பான்மையுள்ளவர்களிடம் எத்தனை எடுத்துக் கூறினாலும் மாற்ற முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும், பத்திரிக்கைகள் சில வலைப்பதிவர்களின் பாமக விரோத மனப்பாண்மை போக்கினால் பரப்பட்ட விடயங்கள் நடுநிலையாளர்களிடத்தில் படிந்திருக்கும், அவர்களுக்கு பாமக வின் மற்றொரு பக்கத்தையும் கோணத்தையும் காண்பிப்பது தான் என் நோக்கம், நடுநிலையாளர்கள் தான் என்னுடைய டார்கெட் ஆடியன்ஸ், அதில் பெருமளவு வெற்றியும் பெற்றேன் சிலருக்கு இதெல்லாம் எனக்கு தெரியாதே இப்போது தான் புரிந்தது என்றனர், தனி மடல்கள் நேரடி பேச்சுகள் மூலமாக எனக்கு இதெல்லாம் தெரியவந்தது. என் நோக்கமும் நிறைவேறியது.

பாமக வோ, மருத்துவர் இராமதாசுவோ, மத்திய அமைச்சர் அன்புமணியோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எங்கேயும் நான் குறிப்பிடவுமில்லை, நடுநிலையான எல்லோருக்கும் கடைபிடிக்கும் அளவுகோலோடு விமர்சனம் செய்யுங்கள், சோவின் தாங்கிகளாகவோ, வேறு எவரின் தாங்கிகளாகவோ இருந்து கொண்டு அன்புமணி தாங்கிகளை கேள்வி கேட்கும்முன் ஒரு நிமிடம் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள் அது சொல்லும்.

நான் வலைப்பதிய வந்ததன் முக்கிய நோக்கம் பாமகவைப்பற்றி எழுத அல்ல, என் எழுத்துக்கள் இதுவரை ஒரு 20 என்ற எண்ணிக்கையிலான நட்பு வட்டாரத்தில் இருந்தது அதை 200, 500 என விரிவாக்கிக் கொள்ளத்தான் இங்கே வந்தேன், இந்த பதிவிற்கு இத்தனை பெரிய விளக்க பதிவு எழுத வேண்டுமென்ற எண்ணமில்லை, ஆனால் என்னிடம் பதிலில்லாததால் தான் விளக்கம் தரவில்லை என்று குறிப்பிடப் படலாம் என்பதால் தான் எழுதினேன்.

இப்படி பதில் சொல்லிக்கொண்டே போக வேண்டியது தான், முடிவில்லா விவாதம் என் மற்ற எழுத்துக் களையும் பாதிக்குமென்பதால் இத்துடன் பாமக தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலையை நிறுத்துகின்றேன்.

பாமக பற்றி மீண்டும் அதே செட் கேள்விகளுடன் வந்தால் என் முந்தைய பதிவுகளில் இருக்கும் அதற்கான விடைகள், புதிய கேள்விகள் வந்தால் நேரம் கிடைத்தால் பதிலிறுக்கின்றேன்.

நன்றி : துக்ளக்
நன்றி : டோண்டு ராகவன் அய்யா
நன்றி : இத்தனை பொறுமையாக படித்த உங்களுக்கும்

எழுத்து பிழையிருப்பின் மன்னிக்கவும் இரண்டு மணி நேரங்கள் தட்டச்சு செய்தேன், நள்ளிரவிற்கு மேலாகிவிட்டதாலும் நாளை வேலைநாள் என்பதாலும் மீண்டும் படித்து பார்த்து சரி செய்ய முடியவில்லை

நன்றி

55 பின்னூட்டங்கள்:

said...

நான் ஏற்கனவே கூறி விட்டேன். அன்புமணி செய்தது தவறே இல்லை. ஒரு தந்தை என்ற முறையில் அவர் செய்தது நியாயமே. அதே போல தொண்டர்களையும் ப்ராக்டிகலாக இருங்கள் என்றுதான் கூறினேன்.

குழலி அவர்களே, நீங்களே ப்ராக்டிகலாக இருந்துதானே வருகிறீர்கள். இருப்பது வெளிநாட்டில், அவ்வப்போது பா.ம.க.வுக்கு நன்றி நவிலல். அவ்வளவுதானே. நான் கூறுவது நாள் முழுக்க இந்த அரசியல் தலைவர்களின் வார்த்தை ஜாலத்தில் மயங்கி தன் வாழ்க்கையைத் தொலைத்து கொள்ளும் சாதாரண தொண்டனைப் பற்றியே.

தலைவர் சொன்னார் என்று ஒரு தலை முறையே ஹிந்தியைத் தவிர்த்தது. அவர் பேரன் அதே ஹிந்தியை படித்து மந்திரியாகிவிட்டான். இதற்கு அப்பெரியவர் பெருமை வேறு அடைகிறார்.

அது சரி அன்புமணி அவர்களே ஆங்கிலப் பள்ளியில்தான் படித்தாராமே, அதற்கு என்ன சப்பைகட்டு வைத்திருக்கிறீர்கள்?

சோ என்ன தலைப்பு வைக்க வேண்டும் என்பது அவருக்கு கூற நாம் யார். அவர் அனுபவமே அவரை நடத்திச் செல்லும். 35 ஆண்டுகளுக்கு மேலாக தரம் குறையாமல் பத்திரிகை நடத்துபவர் அவர். அவர் ரேஞ்சுக்கு இங்கு யாரும் இல்லை. அவர் தாங்கியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

"எனவே வசதியாக தமிழை இரண்டாம் சொல்லித்தரும் பள்ளிகளின் கல்வி கட்டணம் குறைவு என்று கூறிய நீங்கள் தரத்தைப் பற்றி சொல்லவில்லை என்ற போது தான் தமிழ் கற்றுத்தரும் சிறந்த பள்ளிகள் தரமான பள்ளிகள் என்றார் வசதியாக"

மறுபடியும் கூறுவேன், D.T.E.A. பள்ளிகளின் தரத்துக்கு குறைவு ஒன்றுமில்லை. அதன் மாணவ மாணவிகள் பள்ளியிறுதித் தேர்வுகளில் நல்ல ரேங்குகள் பெறுகின்றனர்.

அன்புமணி அவர்கள் அப்பள்ளிகளில் தன் குழந்தைகளை சேர்க்காததற்கு snobbism தான் காரணம். முதல் ஐந்து வகுப்புகளில் சேலத்தை சேர்ந்த வேலைக்காரர்களின் குழந்தைகள் அப்பள்ளியில் படிப்பதாலேயே பலரும் அப்பள்ளியில் ஆறாவது வகுப்பிலிருந்துதான் த்ங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதையும் நான் அப்போதே இது சம்பந்தமான என் பதிவில் கூறியிருந்தேன். அதை வசதியாக நீங்கள்தான் பதிலளிக்காமல் விட்டு விட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வணக்கம்

மூன்றாவது மொழிப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொல்லும் இயக்கத்தினர்குடும்பத்தை சேர்ந்த அன்பு மணி ஏன் எற்காடு மாண்போர்டு பள்ளியில் படித்தார?
2)புற்றீசல் போல தமிழ் நாட்டில் சுமார் 70000 த்துக்கு மேற்பட்ட ஆங்கில பள்ளிகள் வந்து விட்ட நிலையில், பீகாரைப்போல, உத்தர பிரதேசத்தைப் போல, மேற்கு வங்கத்தைப்போல ஆரம்மப் பள்ளியில் குறைந்த பட்ச்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது தாய் மொழி கல்வி கேட்டு போராடலாமே? இவர்களும் இவர்களுடைய பெரிய அண்ணன் கட்ச்சியும் தீவீர தமிழ் பற்றாளர்கள் எனில் செய்ய வேண்டியது இதுதானே?

பெரியண்ணனும், அவர்களுடைய பழைய பங்காளிகளும் தானே கடந்த 35 ஆண்டுகாலமாக ஆட்ச்சியில் இருக்கிறார்கள்? பின் ஏன் தாய் மொழிக் கல்வியை வழியுருத்தவில்லை, தனியாரிடம் கல்வியை தாரை வார்த்தார்கள்?

3)நீதிமன்ற மொழியாக, அரசின் ஆட்சி மொழியாக தமிழைக் கொண்டு வர பாடு படாமல், தமிழ் செம்மொழியாகி என்ன பயன்.? போராட வேண்டியது இவ்வளவு இருக்கையில் சினிமா பெயரை மாற்றச் சொல்லும் போராட்டம் வெரும் தாதா தனமான விளம்பரம் தானே?
பெரும் பணம் புழங்கும் சினிமா துறையை மிரட்டல் விடுத்தும், சினிமாவில் சிகரெட்டுக்கு தடை விதிக்கும் இவர்கள் ஏன் நேரடியாகவே சிகரெட்டுக்கு தடை விதிக்க வேண்டியாது தானே?[ மிரட்டினால் தனே கிடைப்பது கிடைக்கும்!, தடை செய்தால் ஒன்றும் தேராதே! }
இவர்கள் மிரட்டல், போராட்டமெல்லாம் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
நான் அரசியலில் எந்த பதவிக்கும் வரமாட்டேன் என்றவர்கள், தங்கள் வாரிசுகளுக்கு மட்டும் அமைச்சர் பதவியை தேடிப்போவதேன்?
போராட்டத்தை திசை திருப்பி முனைமழுங்கி சிதைக்காமல் இவர்கள் உண்மையான காரணிகளோடு போராடட்டும்.நாமும் இணைந்து போராடுவோம்.

said...

சோவிடமிருந்து வேறு என்ன எதிர்ப்பார்க்கமுடியும்? தமிழின விரோத கருத்துக்களை மேலோட்டமான புத்திசாலித்தனம் தொனிக்கும் வாதங்களின் மூலம் பார்பனீய நோக்கங்களை பாதுகாக்கும் பொருட்டு எழுதிவரும் சேவையை செய்வது அவர் கடன் என்று செயல்பட்டு வருபவர். அன்புமணியோ தமிழ் காக்க போராடுவர்களோ நிச்சயம் தவறிருக்கவாய்ப்புண்டு. ஆனால் அதைப் பற்றி பேச சோவுக்கு எந்தத்தகுதியுமில்லை. இப்போது அன்புமணி குழந்தைகள் கல்வி பற்றிய பதிலைத் தந்தவுடன் அடுத்து அன்புமணி எங்கு படித்தார் என்பதை கேள்வி கேட்பார்கள். ஓநாயும் ஆட்டிக்குட்டி கதை தெரியும் தானே? நீ என்னை திட்டியிருக்காவிட்டால் உன் அம்மா திட்டியிருக்கும் என்று ஆட்டுக்குட்டியை கொன்ற ஓநாய்தான் சோவைப் பற்றியும், அவரின் ஆதரவாளர்களைப் பற்றியும் படிக்கும் போது நினைவுக்கு வருகிறார்கள்! சோவைப்பற்றிய எனது பழைய பதிவும் அதன் போது நடந்த விவாதங்களும் இங்கே.
உங்கள் பதிவுக்கு நன்றி.
http://bhaarathi.net/ntmani/?p=91

said...

அன்புள்ள குழலி,

எப்படி அய்யா இவ்வளவு அருமையாக எழுதுகிறீர்! 8மணிக்குப்பின் வீடு சென்று 10மணிக்குள் இப்படி ஒரு ஆழமான பதிவா?! போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். உம் கடன் எழுதிக் கிடப்பதே!

வாழ்த்துக்கள் குழலி.

said...

//மேலே உள்ள தலைப்பு அதற்கு நியாயம் கற்பிக்கும் 'சோ'வின் தாங்கிகள் அன்புமணி தாங்கிகள் என கூறுவது வியப்பொன்றுமில்லை. 'சோ'வின் தாங்கிகள் என நான் குறிப்பிட முக்கிய காரணம் முதலில் அன்புமணி தாங்கி என்பதைப்போல 'சோ' தாங்கி என எழுதினால் 'சோ' விற்கும் 'தாங்கி' இடையில் உள்ள வெற்றிடம் காணமல் போய் வேறு அர்த்தம் கற்பிக்கப் படலாம், மேற்கண்ட தலைப்பிற்கே நியாயம் கற்பிக்கும் போது இது நடக்காது என என்னால் உறுதியாக கூற முடியாததால் எச்சரிக்கையாக 'சோவின்' என மாற்றிவிட்டேன்.//

சோதங்கி, சோவின்தாங்கி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்காதீர். பார்ப்பன அடிவருடிகள் என்று எழுதுங்கள். மற்றபடி நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

said...

'சோ' தானப்பா 35 வருடமாக தரமாக வேண்டுமென்பவரைகளை தூக்கி, வேண்டாதவர்களை தாக்கி., பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நையாண்டி பண்ணி பத்திரிக்கை சேவையாற்றி வருகிறார். அவருக்கு தோதான தலைப்பு போட அவருக்கு உரிமையிருக்கிறது. என்ன குழலி...இது கூட உங்களுக்கு தெரியலையே?. ஒரு ஆளை எதிர்ப்பதென்பதே உன்பாடு, என்பாடா இருக்கு., (அவருக்கிட்ட இருந்து பிரிஞ்சதுக வேற?) இதுல ஆளாளுக்கு முன்னேறிட்டுப் போனா என்னதான் பண்ணுறது?. அட இப்ப பழைய ஆளே தேவலாம் போலப்பா., உங்க ஆளுக தார் அப்புறம் தார் குச்சியல்ல ஆ...ஊ...ன்னா தூக்குறாங்க?. வளர்ந்தா எப்பிடித்தான் சமாளிக்கிறது?. வாசகர் கடித்த வாசகர்கள்தான் எழுதுவாங்கன்னு பத்திரிக்கைகளை நேத்து படிக்க ஆரம்பிச்ச சின்னப்புள்ளகூட நம்பாது. நீங்க இதுக்கு விளக்கம் வேற குடுத்துக்கிட்டு., குப்பானுருல இருந்து குனியம்மா 'சுயமரியாதை திருமணத்த' எதிர்த்து நல்லு, நறுக்குன்னு கேள்வி கேட்டு இது உங்கள் இடத்துல வந்தா., அது அவுக இடத்த அவுகளா அப்ப வேலையில்லாம உக்காந்திருக்க வெட்டிய விட்டு, பட்டைய கிளப்பி வேடிக்கை பாக்குதுகன்னு அர்த்தம். இதையெல்லாம் ஒரு 'விதயமாக' நினைத்து பதில் எழுதின குழலி... போய்த் தூங்குங்கப்பு!!

said...

பதிவின் நோக்கம் டோண்டு அவர்கள் தொண்டர்களுக்கு (மட்டும்) அறிவுரைத் தருகிறேன் என்று தவறான பொருள் படும் கருத்தை பாமக மீது தந்ததற்கு விளக்கம் சொல்லவும், அன்புமணிதாங்கிகளை கேள்வி கேட்பவர்கள் எல்லாம் யாரின் தாங்கிகளாக இருந்து கேள்வி கேட்கிறார்கள் என்பதை விளக்கவும், நான் அடிக்கடி கூறும் பாமக மீது நடத்தப்படும் ஊடக வன்முறை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது.

தமிழ் மொழியே படிக்கவைக்காமல் அவர்கள் அன்புமணி அவர்களின் பிள்ளைகள் படிக்கின்றன என்ற கேள்விக்கான பதில் தான் இது, மற்ற துணை,இணை கேள்விகள் துணை துணை கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால் முக்கிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மறக்கடிக்கப்பட்டுவிடும், இது ஒரு அருமையான தந்திரம், இந்த தந்திரம் மிக சமீபத்தில் தான் எனக்கு புரிந்தது, எனவே இணை துணை கேள்விகளை வேறு இடங்களில் கேட்டுக்கொள்ளலாம்.

//குழந்தைகளை சேர்க்காததற்கு snobbism தான் காரணம். முதல் ஐந்து வகுப்புகளில் சேலத்தை சேர்ந்த வேலைக்காரர்களின் குழந்தைகள் அப்பள்ளியில் படிப்பதாலேயே பலரும் அப்பள்ளியில் ஆறாவது வகுப்பிலிருந்துதான் த்ங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர்.//
தொண்டர்களுக்கு(மட்டும்) அறிவுரை கூறுகிறேன் என முதலில் கொடுத்த தவறான பொருள்படும் படியான கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு வாருங்கள், அதன் பிறகு snobbism பற்றி பேசலாம்,
பிறகு அதற்கும் தனியாக வருத்தம் தெரிவிக்க வேண்டி வரலாம்.

//தலைவர் சொன்னார் என்று ஒரு தலை முறையே ஹிந்தியைத் தவிர்த்தது. அவர் பேரன் அதே ஹிந்தியை படித்து மந்திரியாகிவிட்டான்//
அறிவாலயத்திற்கு போக வேண்டிய கேள்வி, துணை கேள்வியாக வந்ததால் பிறகு பார்க்கலாம், நான் திமுக இணைய கொ.ப.செ. அல்ல :-)

சேகு ஏகபட்ட இணை துணை கேள்விகள் கேட்டுளீர்கள் ஆனால் அன்புமணி குழந்தைகளின் தமிழ் கல்வி பற்றி தவறாக பரப்பப்பட்ட கருத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன ஏனென்றால் பதிவே அதைப்பற்றியது, சைட் டிஷ் சைட் டிஷ் ஆக மட்டுமே இருக்க வேண்டும் அது மெயின் டிஷ் ஆக மாறினால்??

said...

//ஓநாயும் ஆட்டிக்குட்டி கதை தெரியும் தானே? நீ என்னை திட்டியிருக்காவிட்டால் உன் அம்மா திட்டியிருக்கும்//
ஹி ஹி கொஞ்சம் தாமதமாக புரிந்த கதை...

//அட இப்ப பழைய ஆளே தேவலாம் போலப்பா., உங்க ஆளுக தார் அப்புறம் தார் குச்சியல்ல ஆ...ஊ...ன்னா தூக்குறாங்க?. வளர்ந்தா எப்பிடித்தான் சமாளிக்கிறது?. வாசகர் கடித்த வாசகர்கள்தான் எழுதுவாங்கன்னு பத்திரிக்கைகளை நேத்து படிக்க ஆரம்பிச்ச சின்னப்புள்ளகூட நம்பாது. நீங்க இதுக்கு விளக்கம் வேற குடுத்துக்கிட்டு., //

இது இது தான் விடயமே... இதை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என எண்ணுகின்றேன்.

said...

முந்தைய பின்னூட்டத்தில் வரும்
//தொண்டர்களுக்கு(மட்டும்) அறிவுரை கூறுகிறேன் என முதலில் கொடுத்த தவறான பொருள்படும் படியான கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு வாருங்கள்//
என்பதை கீழ்கண்டவாறு மாற்றி படியுங்கள்

தொண்டர்களுக்கு(மட்டும்) அறிவுரை கூறுகிறேன் என அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்காதது போல தவறான பொருள்படும் படியான கருத்துகளுடைய பதிவெழுதியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு வாருங்கள்.

said...

குழலி,
டோண்டு ஐயாவிடம் எதை நான் பொறுமையாக விளக்க முடியாமல் தெறித்து ஓடினேனோ அதை உங்களைத்தவிர யாரும் இவ்வளவு சிறப்பாக நெற்றி பொட்டில் அடித்தாற்போல் சொல்ல முடியாது..கலக்கிபுட்டீங்க!

அடிப்படையில் நான் ராமதாஸ் எதிர்ப்பாளன் .ஆனால் உங்கள் ராமதாஸ் ஆதரவு கருத்துக்களை விட ,டோண்டு ஐயா மற்றும் சில முழுநேர ராமதாஸ் எதிர்ப்பாளர்களின் கண்மூடித்தனமான ஒருதலைப்பட்ச கருத்துக்கள் என்னுடைய ராமதாஸ் எதிர்ப்பின் அளவை வெகுவாக குறைத்திருக்கிறன .அவர்களுக்கு நன்றி!

said...

"தொண்டர்களுக்கு(மட்டும்) அறிவுரை கூறுகிறேன் என அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்காதது போல தவறான பொருள்படும் படியான கருத்துகளுடைய பதிவெழுதியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு வாருங்கள்."

இதற்கு ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? அக்குழந்தைகள் தமிழ் படிக்கின்றனர் என்னும் செய்தியே இப்போதுதானே வருகிறது? உங்களுக்கே அது தெரியாததால்தானே உங்கள் சப்பைகட்டில் அது இடம் பெறவில்;லை? ஆனால் ஸ்னாப்பிசம் பற்றி நான் எப்போதே எழுதி விட்டேன். அதை புறக்கணித்துதானே நீங்களும் எழுதி வந்திருக்கிறீர்கள்? அதற்கு வேண்டுமானால் நீங்கள் வருத்தம் தெரிவித்து பதில் கூறவும்.

அன்புமணி செய்தது ஒரு தந்தை என்ற முறையில் தவறு இல்லை என்று நான் முதலிலேயே கூறி விட்டுத்தானே அவர்கள் தொண்டர்களுக்கும் இம்மாதிரியே செயல்படுமாறு ஆலோசனை (அறிவுரை அல்ல) கூறினேன்? இதில் என்ன தவறு கண்டீர்கள்?

உங்கள் நிலைப்பாடு இப்படியிருக்குமோ? அதாவது அன்புமணி, குழலி ஆகியோர் ப்ராக்டிகலாக இருந்து விடுவார்கள். தொண்டர்கள் மட்டும் அடிபட்டு, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை தொலைத்து தரம் கெட்டப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அப்போதுதானே அறிவு மழுங்கின எதிர்காலத் தொண்டர்கள் கிடைப்பார்கள்?

உங்கள் அஜெண்டா ரொம்ப எதிர்காலத்தை நோக்கியுள்ளது போலிருக்கிறதே?

நான் ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டேன். தொண்டர்கள் புத்தியிருந்தால் பிழைத்து கொள்ளட்டும்.

இப்போது ஒன்று கூறுவேன். இம்மாதிரி தொண்டர்களை அடிமுட்டாளாக்கும் முயற்சி எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. ஆகவே கருணானிதி அவர்களின் பேரனைப் பற்றிக் கூறினேன். நீங்கள் என்னவென்றால் அன்புமணி அவர்கள் செய்யும் முட்டாள்தனத்தை பற்றி மட்டும்தான் பேசுவேன் என்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//"தொண்டர்களுக்கு(மட்டும்) அறிவுரை கூறுகிறேன் என அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்காதது போல தவறான பொருள்படும் படியான கருத்துகளுடைய பதிவெழுதியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு வாருங்கள்."

இதற்கு ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? அக்குழந்தைகள் தமிழ் படிக்கின்றனர் என்னும் செய்தியே இப்போதுதானே வருகிறது? //

மிக்க நன்றி, இந்த மாதிரியான கண்ணோட்டத்தில் இருக்கும் போது இதற்கு மேல் இதைப் பற்றி பேசுவது என்னைப் பொறுத்த வரை வீண் வேலை என நான் எண்ணுகின்றேன்.

நன்றி

said...
This comment has been removed by a blog administrator.
said...

//
//"தொண்டர்களுக்கு(மட்டும்) அறிவுரை கூறுகிறேன் என அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்காதது போல தவறான பொருள்படும் படியான கருத்துகளுடைய பதிவெழுதியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு வாருங்கள்."

இதற்கு ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? அக்குழந்தைகள் தமிழ் படிக்கின்றனர் என்னும் செய்தியே இப்போதுதானே வருகிறது? //

மிக்க நன்றி, இந்த மாதிரியான கண்ணோட்டத்தில் இருக்கும் போது இதற்கு மேல் இதைப் பற்றி பேசுவது என்னைப் பொறுத்த வரை வீண் வேலை என நான் எண்ணுகின்றேன்.
//

உங்கள் பதிவையும் டோண்டு சாரின் பதிலையும் படித்த பிறகு அப்படி தான் தோன்றுகிறது.

said...

மீண்டும் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றேன்.

//குழலி அவர்களே, நீங்களே ப்ராக்டிகலாக இருந்துதானே வருகிறீர்கள். இருப்பது வெளிநாட்டில்,//


முன்பே பதிலளிக்க நினைத்தது ஆனால் நிதானமாக வீட்டிற்கு வந்து பதிலளிக்கலாமே என்றுதான் இப்போது இடுகின்றேன்.

இப்படி டபக் கென்று என் சொந்த விடயம் (கருத்து விடயத்தை அல்ல) இழுக்கப்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை, இதை படிப்பவர்கள் ஆமாம் இதில் லாஜிக் இருக்கின்றதே என்று கூட எண்ணுவார்கள்,

நான் இஸ்ரேலிய ஆதரவாளன் என்று கூறியவர்கள் இஸ்ரேலிலா இருக்கின்றார்? இஸ்ரேலுக்குக் ஆதராவாக போர் களத்திலா இருக்கின்றார், இதில் எல்லாம் பிராக்டிகல் இல்லாமல் இருப்பது நான் வெளிநாட்டில் இருப்பதில் மட்டும் பிராக்டிலாக இருக்கின்றார் குழலி என்பது. இணையத்தில் எழுதும் ஈழத்து ஆதரவாளர்கள் என்ன களத்திலா இருக்கின்றார்கள் அல்லது இயக்கத்தில் இருக்கின்றனரா? (ஒரு தர்க்கத்திற்காக கேட்கவேண்டுமே என்பதற்காகத்தான் குறிப்பிட்டேன்)இத்தனைக்கும் நான் பாமக தொண்டனோ உறுப்பினரோ அல்ல அதே சமயம் என் எழுத்துக்களில் பாமக தான் சிறந்த கட்சியென்றோ புகழ் பாடுவதோ இல்லை, ஆங்காங்கே தரப்படும் சொல்லடிகளுக்கு விளக்கமும் மறுப்பும் தந்தேன் அவ்வளவே, அதற்குள் பாமகவின் இணைய கொ.ப.செ. ஆகவே ஆகிவிட்டேன்(ஆக்கப்பட்டேன்)


//அன்புமணி, குழலி ஆகியோர் ப்ராக்டிகலாக இருந்து விடுவார்கள்//

தமிழ் பற்று வேண்டுமென சொல்வது கூட பிராக்டிக்கல் இல்லை என்ற அளவிற்கு சமூகத்தின் போக்கு உள்ளது வாழ்க நம் தமிழ் சமுதாயம்!. அது சரி என்னைப் போய் அன்புமணி வரிசையில் சேர்த்துவிட்டீரே... பெருமையாக இருக்கின்றது ஆனால் எனக்கு அந்த தகுதிதான் இல்லை.

//தொண்டர்களுக்கு(மட்டும்) அறிவுரை கூறுகிறேன் என //

இதை நான் குறிப்பிட்டு சொல்லக் காரணமே பதிவுகளில் அரசியல் தொண்டர்களுக்கு மட்டும் தானே அறிவுரை சொல்லப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் உள்ளே போன, ஊருக்கு ஒரு மடம் வைத்துக்கொண்டு இந்த சாதி அந்த சாதி என்றில்லாமல் எல்லா சாதியிலும் போலிச் சாமியாராக ஊரை ஏமாற்றும் சாமியார்கள் உள்ளே போய் வந்த பிறகும் (படக்காட்சிகளே ஆதாரத்துடன் ஒளிபரப்பட்ட பிறகும்) வரிசையில் நம்பி ஏமாறும் பக்தர்கள் பற்றி ஒரு அக்கறையும் இல்லையே!

படத்துக்கு பல கோடிகள் வாங்கும் நடிகர்களின் படத்திற்கு அனுமதி சீட்டு கிடைக்காததற்கு தற்கொலை செய்து கொண்டும் இவர்கள் படத்திலே விடும் சவால்களுக்கு வெளியிலே அடித்துக் கொண்டு சாகும், நடிகரின் சொந்த ஈகோவிற்காக உள்ளே போய் ஜாமீனுக்கு வழியில்லாமல் இருக்கும் ரசிகர்கள் பற்றிய அக்கறை இல்லையே!

கருத்துகளைத் தாண்டி சொந்த விடயங்களை இழுக்கும் போது இப்படி உங்கள் பதிவுகளிலிருந்தே என்னால் பல விடயங்கள் எடுக்க முடியும், இப்படியே போனால் பேசிக்கொண்டே தான் போகலாம்,

இது வரை கருத்து மோதலாக இருந்தது இப்போது சொந்த செயல்களைப் பற்றியதாக இறங்கிவிட்டது, எனவே இதற்கு மேல் நான் இதை வளர்க்க விரும்பவில்லை....

யாரையும் புண்படுத்த வேண்டுமென்று எழுதவில்லை, புரிந்து கொள்ளவேண்டுமென்று தான் எழுதினேன், தெரிந்தோ தெரியாமலோ என் வார்த்தைகளில் கடுமையிருந்திருந்தால் என்னை மன்னிக்கவும்.

வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான புது கருத்துகளில் கருத்து வேறுபாடிருந்தால் கருத்து சண்டை மட்டுமே போடலாம்

நன்றி

said...

வெங்காயம், Aarokkiyam உள்ளவன் அவர்களுக்கு பதிவிற்கு தொடர்பாக பேசுங்கள் பிராமண விவாதத்தை இங்கே இழுக்க வேண்டாம், அது இங்கே தேவையும் இல்லை, அதில் விருப்பமும் இல்லை. தயவு செய்து பதிவிற்கு தொடர்பாக பேச முடிந்தால் பேசுங்கள், யாரோடாவது சண்டை போட வேண்டுமென்ற எண்ணமிருந்தால் அவர்களின் இடத்திலோ உங்கள் இடத்திலோ வைத்துக் கொள்ளுங்கள் இங்கே வேண்டாம். ஆரோக்கியமான விவாதங்கள் இல்லையென்றால் தனி மனித நட்பு தான் பாதிக்கப்படும்.

நட்பிற்கும் கருத்துவேறுபாட்டிற்கும் தொடர்பில்லை, எனவே தயவு செய்தி இங்கே உங்கள் விளையாட்டு வேண்டாம்.

நன்றி

said...

குழலி...

துக்ளக் தலைப்பு கட்டுரையின் பொருளுக்கு எதிராக இருக்கிறது .. இதை எல்லா பத்திரிகைகளும் செய்து வருகின்றன.. துக்ளக் மற்ற பத்திரிகைகளை விட முற்றிலும் வித்தியாசமானது இல்லை என்பது உறுதியாகிகொண்டு வருகிறது. உங்களுடைய கோபத்தில் நியாயமுள்ளது ..

திரு. அன்புமணியின் பிள்ளைகள் ஏன் மேடர்டே பள்ளியில் படிக்கவேண்டிய சூழ்நிலை வந்தது என்பது தெரியவந்தது... தவறில்லை.. ஆனால் அதே மாதிரியான சூழ்நிலை ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொருவரிடமும் உள்ளது.. அடாவடியாக ராமதாஸ் போன்றோர்கள் செய்யும் அபத்தங்களை மக்கள் செய்வத்றியாது பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .

said...

Bale bale....... Pora pokkai parthaal Anbumanii periya thalaivar aakiduveenga pola, by writing about him and his so called Philosophies, I wonder how many in Tamil Nadu know him!!

said...

//I wonder how many in Tamil Nadu know him!! //

are you a Rajini fan?

said...

இப்போது துக்ளக்கில் வெளியிட்டுள்ள செய்தியைப் பார்ப்போம். தில்லி தமிழ் கழகப் பள்ளி ஆண், பெண் இருபாலரும் படிக்கும் பள்ளி, ஆகவே அவர்களை பெண்கள் பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம் என்கிறார் அன்புமணி அவர்களின் மனைவி.

ஆனாலும் தமிழ் படிக்க விசேஷ அனுமதி பெற்றார்களாம். லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ்பள்ளியில் தமிழ் வகுப்புக்கு மட்டும் செல்வார்களாம். இப்போது மட்டும் அதே பள்ளிக்கு செல்லலாமா?

இதில் பல விஷயங்கள் புலப்படுகின்றன. தான் மந்திரி என்ற சிறப்பு அந்தஸ்தை வைத்து தன் குழந்தைகளுக்கு சலுகை பெற்றிருக்கிறார் மந்திரி. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இது கூட ஒரு கண் துடைப்பே என்றுதான் படுகிறது. சர்ச்சை கிளம்பி இவ்வளவு நாட்களுக்கு பிறகு இந்த செய்தி வருவது அதன் நம்பகத்தன்மையை குலைக்கிறது.

ஜயா டி.வி.யில் வெளியான பேட்டியில் மேட்டர் டே பள்ளியில் தமிழ் கற்று தருகிறார்கள் என்று சான்றிதழ் பெற்று தரட்டுமா என்று எரிச்சலுடன் நிருபரைக் கேட்டார் அன்புமணி அவர்கள். உடனே ஜயா டி.வி. நிருபர் அதே பள்ளியில் இருந்த மற்ற குழந்தைகளை பேட்டியெடுக்க, தமிழ் அப்பள்ளியில் கிடையாது என்று அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டனர்.

இதுதான் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறுவதோ?

ஆகவே கட்சித் தொண்டர்களே, அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள். ஓட்டு அரசியல் பண்ணும் தலைவர்களின் கோமாளித்தனத்தை ரசிப்பதோடு விட்டு விடுங்கள். இது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//தான் மந்திரி என்ற சிறப்பு அந்தஸ்தை வைத்து தன் குழந்தைகளுக்கு சலுகை பெற்றிருக்கிறார் மந்திரி. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.//

இதைப் பற்றி அன்புமணியின் துணைவியார் கூறியுள்ளார், அன்புமணி கடிதம் எழுதியதற்கு இனங்க என்று, ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அந்த பள்ளி நிர்வாகத்தின் விருப்பம், மந்திரி என்ற சிறப்பு அந்தஸ்தை கண்டீர், ஒரு கிறித்துவ மிஷினரி பள்ளியில் கடலூரில் நான் படிக்கும் போது இந்தி பாடம் மொழி வகுப்பாக இல்லை, சில மாணவர்கள் தமிழுக்கு பதில் இந்தி படிக்க வேண்டுமென கூறிய போது இந்திக்காக தனியாக ஆசிரியர் அமர்த்த இயலாது, வேண்டுமென்றால் இந்தி படிக்க விரும்பும் மாணவர்கள் இந்தி ஆசிரியருக்கான பாதி செலவை ஏற்றுக்கொண்டால் அனுமதிக்கின்றோம் என்றனர்(சில ஆண்டுகளுக்கு முன்), அதை ஏற்றுக்கொண்ட சில பெற்றோர்களின் ஏற்பாட்டில் இந்தி ஒரு மொழிப்பாடமாக சிலரால் படிக்கப்பட்டு வருகின்றது. இது என் வீட்டருகில் இருக்கும் மாணவன்(சிறுவன்) ஒருவனால் தெரியவந்தது ஏனெனில் அவனும் அங்கே இந்தி தான் படித்தான், இது மாதிரியான சில அனுமதிகள் மந்திரிக்கு மட்டுமல்ல நிர்வாகம் அனுமதிதால் அனைவருக்கும் கிடைக்கும்....

மற்றுமொரு உதாரணம், எங்கள் கல்லூரி இறுதியாண்டில் விருப்ப பாடமாக AI (Artificial Intelligence) படிக்க எலெக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் சிலர் விரும்பினர் அதற்கு ஆசிரியர் இல்லை என்பதால் நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்று அனுமதியளித்தனர், இதே கதைதான் mechatronics விருப்ப பாடமாக படிக்க விரும்பிய சில இயந்திரவியல் துறை மாணவர்களுக்கும் அனுமதியளித்தது என் கல்லூரி நிர்வாகம்.

இவர்களெல்லாம் மந்திரியின் மகன்களா?

மற்ற பிரபலங்களின் குழந்தைகள் DTEA பள்ளியில் படித்தால் அன்புமணி குழந்தைகளும் அங்கே படிக்க வேண்டும் என்பதன் நியாயமென்ன?

said...

ஆக்கப்பூர்வமான எத்தனையோ எழுத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம், 'வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது எப்படி' என்பதெல்லாம் எல்லோராலும் எழுத முடிந்த விடயமல்ல அந்த துறையில் கை தேர்ந்த அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே எழுத முடியும், தினம் தினம் செய்தி படிக்கும் என்னை போன்றவர்களால் அனுபவக்குறைவுள்ளவர்களால் அதெல்லாம் எழுத முடியாது, தினம் செய்தித்தாள் படித்தாலே அரசியல் எழுத முடியும். எனவே இதற்கெல்லாம் நேரத்தை வீணடிக்காமல் மற்றவர்களால் எழுத முடியாத நல்ல எழுத்துக் களை தாருங்கள்,

நீங்கள் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் படிப்பிலும் மிக உயரத்தில் இருப்பவர், நீங்கள் என்ன எழுத வேண்டும் எழுதக் கூடாது என்று சொல்லும் தகுதியும்,உரிமையும்,பொறுப்பும் எனக்கு எள்ளவும் இல்லை, எனவே நான் கூறியதை என் தாழ்மையான வேண்டுகோளாகத் தான் கூறுகின்றேன்,

அதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம்,உரிமை.

என் போன்ற கத்து குட்டிகளுக்கெல்லாம் பதில் சொல்ல மெனக்கெடும் டோண்டு அய்யாவிற்கு மீண்டும் நன்றி

நன்றி

said...

"மற்ற பிரபலங்களின் குழந்தைகள் DTEA பள்ளியில் படித்தால் அன்புமணி குழந்தைகளும் அங்கே படிக்க வேண்டும் என்பதன் நியாயமென்ன?"

DTEA பள்ளியில் தரக்குறைவு என்று கூறியதற்கானதுக்கான பதில்தான் இது. இப்பள்ளிகளில் முதல் நான்கு வகுப்புகளுக்கு தமிழிலேயே எல்லா பாடங்களும். ஆகவே நலிந்த வகுப்பினரின் குழந்தைகள் அங்கு படிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். ஒரு சிலர் மேலே படிக்கிறார்கள்.

அதனாலேயே இப்பள்ளியின் தரம் குறைந்ததென்று கூறி சில ஸ்னாப்பிஸ்டுகள் தங்கள் குழந்தைகளை ஐந்தாம் வகுப்பு வரை வேறு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அதுவே உண்மை. குழலி அவர்களே, உங்களிடம் அப்பள்ளிகளின் தரத்தைக் குறை கூறிய நண்பர் கூட இதைத்தான் உங்களிடம் காரணமாகக் கூரியிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் தமிழ் சூழலில் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.

அச்சூழலில் தன் குழந்தைகளை படிக்க வைக்காத மந்திரியோ அவர் தந்தையோ தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஜல்லியடிப்பது பற்றித்தான் என் பதிவு.

அதில் கூட நான் தெளிவாகத்தான் எழுதினேன். ஜல்லியடிக்காதீர்கள் என்று நான் அன்புமணி அவர்களிடமோ அல்லது அவர் தந்தையிடமோ கேட்கவில்லை. ஜல்லியடிக்காவிட்டால் அவர்கள் பிழைப்பு அரோஹரா என்பது தெரிந்ததுதானே.

அந்த ஜல்லியடிப்பில் மயங்காதீர்கள் என்று தொண்டர்களுக்கு எடுத்துரைதேன். இப்போதும் எடுத்துரைப்பேன்.

அன்பு மணி அவர்கள் போன்று ஒரு நல்ல தந்தையாக இருங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் கேட்டாலும் அது எனக்கு போதும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//ஏதேனும் திசை திருப்பல் இருப்பதாக நீங்கள் நினைத்தால் "தாராளமாக" எமது பிண்ணூட்டங்களை நீக்கி விடலாம். //

நீங்கள் பின்னூட்டியதில் பார்ப்பன என்ற வார்த்தை இருந்ததால் அதைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து இங்கே ஒரு அடிதடி நடக்க கூடிய வாய்ப்பிருந்ததால் தான் அப்படி குறிப்பிட்டேன், உங்களது பின்னூட்டத்தில் பதிவிற்கு தொடர்பான விடயங்கள் இருந்த்தால் தான் அழிக்கவில்லை,

வார்த்தைகளில் கடுமையிருந்தால் அந்த வார்த்தையை பிடித்துக் கொண்டு தொங்கிவிடுவார்கள் மொத்தமும் வேறு திசைக்கு சென்றுவிடும் அதனால் நாம் சொல்ல வந்த கருத்தும் தவறு என்பது போலாகிவிடும் என்பது எனது நம்பிக்கை.

தற்போது தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் பல விடயங்கள் எழுதியுள்ளீர் (மன்னிக்கவும் இன்னும் படிக்கவில்லை) .

நன்றி

said...

காரணங்களால்.. சப்பைக்கட்டும் ஆட்கள் இருப்பதைக்காட்டிலும்.. அதை நடுநிலமை.. என்று கூறுவதுதான்.. வேதனை தருகின்றது..

அவர்கள் பல நல்ல காரியங்களையே செய்து இருக்கட்டும், அது தெரியாமல்.. பலரால் அதிகம் விமர்சிக்கபடுவதனால் கோபப்படுங்கள் , ஆனால்.. அவர்கள் செய்வதையெல்லாம்.. சரி என்று நியாயம் கற்ப்பிக்காதீர்கள்...

said...
This comment has been removed by a blog administrator.
said...

செந்தில்,
தினமலர் மற்றும் துக்ளக் பற்றிய தங்கள் கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன்.

said...

வாசகர் கடிதங்களுக்கும் இது உங்கள் இடத்திற்கும் டீ கடை பெஞ்சிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் சொல்லிக்கொண்டே போக வேண்டியது தான்,

மந்திரி பதவியை வைத்து சலுகை வாங்கினார் என்று குற்றம் சாட்டினீர் தகுந்த பதில் கொடுத்தவுடன் அதை விட்டு விட்டு வேறு கேள்வி

அது சரி நீங்க ஒரு முடிவோடு இருக்கும் போது நான் என்ன செய்ய முடியும்

said...

முதலில் நீங்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று தவறான பொருள்படும் படியான பதிவெழுதியதிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு பிறகு தார்மீக உரிமையோடு கேள்வி கேட்கலாம் அது வரை இது ஒரு ஜல்லியடிப்பு தான்.

said...

/

said...

குழலி,
டிஸ்கிளெய்மருடன் தொடங்குகிறேன். நான் சோ அபிமானி கிடையாது. அவரை பெரிய நடுநிலையாளர் என்றும் கருதவில்லை.

அன்புமணி அவர்களின் குழந்தைகளை தில்லியில் தமிழ் படிக்க கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்தது குறித்து மகிழ்ச்சியே. அதே நேரத்தில், என் போன்ற பொதுமக்களின் பிள்ளைகளை எப்படி படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுரை (ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் கட்டாயப் பாடம் போன்ற etc etc...) கூறுவதற்கு "எந்த அரசியல்வாதிக்கும்" உரிமை கிடையாது என்பது தான் அடிப்படையான கருத்து. தன் குழந்தைக்கு எது சிறந்தது என்று தீர்மானிக்க வேண்டியது அதன் பெற்றோர்கள் தாம் !!!!

ஒரு கேள்வி எழுப்புகிறேன். இங்கு வலைபதியும் நண்பர்கள் யாராவது தங்கள் பிள்ளைகளை (கட்டாயப்படுத்தி!) தமிழ்
மீடியத்தில் படிக்க வைக்க ஒப்புவார்களா ? இதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. தமிழை கட்டாயப்பாடம் ஆக்க வேண்டும் என்று த.பா.இ முழங்குவதற்கு முன்பே, பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழை இரண்டாம் பாடமாக (CBSE
பள்ளிகளிலும்) படிக்க வைத்து தான் வருகின்றனர் !!!! மாநில அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் ஒரு பாடமாக கற்று தரப்பட்டு தான் வருகிறது. த.பா.இ அலறுவது போல், தமிழ் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் தோன்றவில்லை !!!!

தமிழ் மேல் இத்தனை பற்றுள்ளவர்கள் உருப்படியாக ஒன்று செய்யலாம். மாநிலம் முழுதும் தமிழ் (கற்றுத் தர) மையங்கள் ஏற்பட ஆவன செய்து, அதன் வாயிலாக மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் கற்றுக் கொடுத்து, தமிழார்வத்தை ஊக்கப்படுத்துவதோடு, தமிழ் மொழியையும் வளர்க்கலாம். ஏனெனில், ஆங்கிலம் மேல் தார் பூசி தமிழ் வளர்ப்பது என்பது
மிகக் கடினமே !!!!

பி.கு: snobbism என்பது snobbery அல்லது snobbishness என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் :)
--- எ.அ.பாலா

said...

பாலா,
தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இல்லாத பள்ளிகள் இல்லை என்கிறீர்களா?
தில்லி-ல் உள்ள தமிழ் பள்ளியில் கூட இந்தி படித்தாக வேண்டும் .மற்ற மாநிலங்களில் அங்குள்ள மொழியை கண்ண்டிப்பாக ஒரு பாடமாகவேனும் படிக்க வேண்டும் .தெரியாதா உங்களுக்கு?

உங்களை தமிழ் வழி கல்வி படிக்க சொல்லவில்லை .தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகவாவது படிக்க வேண்டும் என்று சொல்வது கூட தவறா? சொல்பவரின் யோக்கியதையை பொறுத்துத்தான் உங்கள் தாய்மொழி அவசியம் பற்றிய கருத்துருவாக்கம் இருக்குமா?..இந்த கருத்து ராமதாசுக்கோ அல்லது வேறு எந்த தனி மனிதருக்கோ சொந்தமல்ல .என்னைப் பொறுத்தவரை நான் ஆதரிப்பது என்னுடைய அறிவை வைத்துத்தான். வேறு யாருக்காகவும் அல்ல ..இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

said...

ஜோ,

karuththukku nanRi !
I am repeating my earlier comment on the same subject here !!!!

**********
தன்னால் பின்பற்றமுடியாத ஒன்றை ஒருவர் மற்றவர் மேல் திணிக்க முற்பட்டால், அது கேலிக்கூத்தாகி விடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்வினையை ஏற்படுத்துவதால், நட்டத்திலும், தோல்வியிலும் முடியும். எதிர் விளைவுகள் அதிகம் உண்டாகும் ! தமிழார்வம் உள்ளவர்களையும் வெறுப்பேற்றுவதில் முடியும். உண்மையிலேயே அக்கறை இருப்பவர்கள், தமிழ்ப்பற்றும், தமிழறிவும் கொண்ட அறிஞர்களை அழைத்து தமிழ் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்தால் நிச்சயம் பாராட்டலாம். அவற்றை நடைமுறைக்கு கொண்டு வர ஆவன செய்யலாம்.

நல்லதை யார் கூறினாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறைக்கு ஒவ்வாது. சொல்பவரின் தகுதியை வைத்து தான், அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும் / படாது. இதில் தனிமனித வெறுப்பு என்று ஒன்றுமில்லை.

--- BALA

said...

"முதலில் நீங்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று தவறான பொருள்படும் படியான பதிவெழுதியதிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு பிறகு தார்மீக உரிமையோடு கேள்வி கேட்கலாம் அது வரை இது ஒரு ஜல்லியடிப்பு தான்."

மேலே நீங்கள் கூறியதுதான் மிகப் பெரிய ஜல்லியடிப்பு. அன்புமணியின் குழந்தைகள் தமிழ் படிப்பது, படிக்காதது பற்றி வந்த விஷயங்களை முடிந்த அளவு கீழே கொடுத்துள்ளேன்.

மே மாதத்திலேயே செய்தி குமுதம் ரிப்போர்டரில் வந்து விட்டது. இரண்டு மாதங்கள் கழித்து துக்ளக்கில் அதே செய்தி வந்ததும் சாவகாசமாக எதிர்வினை கொடுக்கின்றனர் அன்புமணி, அவர் மனைவி மற்றும் ராமதாசு அவர்கள்.

அன்புமணி கூறுகிறார், தில்லியில் மேட்டர் டே பள்ளியை விடுத்து எங்குமே தமிழ் கற்று தரவில்லை என்று.

அவர் மனைவியோ தமிழ் பாடம் மட்டும் குழந்தைகள் தில்லி தமிழ் கழகத்தைச் சேர்ந்த லோதி எஸ்டேட் பள்ளியில் படிக்கின்றனர் என்றும் இதற்காக மேட்டர் டே பள்ளியிடம் தனி அனுமதி வாங்கப்பட்டதென்றும் கூறுகிறார்.

ராமதாசு அவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்ட்டம் தானை இது சம்பந்தமாகக் கேள்வி கேட்ட நிருபரை மிரட்டுகிறார்.

ஆகக்கூடி நான் கொண்டுள்ள கருத்து இதுதான். விஷயம் கைமீறிப் போவதை உணர்ந்து தமிழ் பாடம் படிப்பதற்கான "தனி அனுமதி" என்பது உட்லாங்கடியாகத்தான் தோன்றுகிறது. ஆகவே வருத்தம் எல்லாம் தெரிவிப்பதற்கில்லை.

இன்னும் ஒரு விஷயம். அரசியல்வாதிகள் வெறும் தமிழ் பாடம் படிப்பதை மட்டும் கூறவில்லை. அவர்கள் கூறுவது தமிழில் எல்லா பாடங்களையும் படிப்பதாகும்.

தில்லி தமிழ் கழகப் பள்ளிகளில் மட்டுமே நான்காம் வகுப்பு வரை தமிழ் மீடியம். அங்கு தன் குழந்தைகளை சேர்க்காத அன்புமணி அவர்களோ அவர் தந்தையோ மற்றவர்களுக்கு இது சம்பந்தமாக மிரட்டல் ஆலோசனைகளை கொடுப்பது வெறும் ஜல்லியடிப்பே.

சரி இப்போது கூறுங்கள், அன்புமணி அவர்களே ஆங்கிலக் கல்விதான் படித்தாராமே. இது பற்றி உங்கள் சமாளிப்பு ஏதாவது உண்டா?

ஆகவே மறுபடியும் கூறுவேன். கட்சித் தொண்டர்களே, உங்கள் தலைவர்களைப் போல ப்ராக்டிகலாக இருங்கள். அன்புமணி அவர்களைப் போல நல்ல தந்தையாகுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

பாலா,
உங்கள் ராமதாஸ் எதிர்ப்புக்கு பதில் சொல்ல நான் ஒன்றும் ராமதாஸ் ஆதரவாளன் அல்ல .ராமதாஸ் தான் உங்கள் சொந்த கொள்கைகளையும் தீர்மானிப்பது போலிருக்கிறது .எனக்கு அப்படி அல்ல .என்னுடைய கேள்விகளுக்கு நேரடியாக உங்கள் கருத்தை சொல்லாமல் ராமதாஸ் பற்றியே பேசுவதிலிருந்தே உங்கள் மனநிலை புரிகிறது ..நாளைக்கு ராமதாஸ் 'எல்லோரும் அவரவர் தாயை நேசிக்க வேண்டும் ' என்று அறிக்கை விட்டால் ,யோக்கியமில்லாத இவர் சொல்லிவிட்டார் என்பதற்காக தாயை நேசிக்காமல் இருப்பீர்களா?

என்னுடைய கேள்விகளுக்கு (தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இல்லாத பள்ளிகள் இல்லை என்கிறீர்களா?
தில்லி-ல் உள்ள தமிழ் பள்ளியில் கூட இந்தி படித்தாக வேண்டும் .மற்ற மாநிலங்களில் அங்குள்ள மொழியை கண்ண்டிப்பாக ஒரு பாடமாகவேனும் படிக்க வேண்டும் .தெரியாதா உங்களுக்கு?உங்களை தமிழ் வழி கல்வி படிக்க சொல்லவில்லை .தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகவாவது படிக்க வேண்டும் என்று சொல்வது கூட தவறா? சொல்பவரின் யோக்கியதையை பொறுத்துத்தான் உங்கள் தாய்மொழி அவசியம் பற்றிய கருத்துருவாக்கம் இருக்குமா?..) உங்கள் தனிப்பட்ட கருத்து இருந்தால் கூறுங்கள் ராமதாஸ் பின்னால் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட வேண்டாம் .

//அதே நேரத்தில், என் போன்ற பொதுமக்களின் பிள்ளைகளை எப்படி படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுரை (ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் கட்டாயப் பாடம் போன்ற etc etc...) கூறுவதற்கு "எந்த அரசியல்வாதிக்கும்" உரிமை கிடையாது என்பது தான் அடிப்படையான கருத்து. தன் குழந்தைக்கு எது சிறந்தது என்று தீர்மானிக்க வேண்டியது அதன் பெற்றோர்கள் தாம் !!!!//

தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக கூட படிக்க உங்கள் பிள்ளைகள் படிக்க தேவையில்லை என்ற சுதந்திரத்தை பெற்றுள்ள நீங்கள் ,தில்லியின் எனது பிள்ளைகள் இந்தியை ஒரு பாடமாக கூட படிக்க தேவையில்லை என்ற சுதந்திரம் ,உரிமை எனக்கு உண்டா என்பதை தெளிவு படுத்துவீர்களா? (just for information)


உங்களிடமிருந்து நேரடியாக பதில் பெற முடியவில்லையென்றால் உங்களோடுடனான விவாதங்களிலிருந்து விலகுவது எனக்கு நல்லது எனப்ப்டுகிறது..நன்றி.

said...

பாலா,
உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

said...

ஜோ,
சிலவற்றை தெளிவுபடுத்தி விட்டு விவாதத்திலிருந்து விலகுகிறேன்.

1. நீங்கள் ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர் என்று நான் எப்போதும் நினைக்கவில்லை. அதனால், நீங்கள் அதை stress செய்ய வேண்டிய அவசியமில்லை.
2. என் கருத்துருவாக்கம் யாரை முன்வைத்தும் ஏற்படுவதில்லை. தமிழ்ப்பற்றை ஊக்கப்படுத்த எந்த 'அரசியல்வாதியின்' உதவியும் தேவையில்லை என்பதே என் அடிப்படைக் கருத்து. குழந்தைகள் தமிழ் படிக்கவே வேண்டாம் என்பது அல்ல.
3. மேலும், த.பா.இ 5-ஆம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் தமிழில் படிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. நீங்கள் சொல்வது போல் தமிழை ஒரு பாடமாக அல்ல.
4. த.பா.இ-யின் செயல்களுக்கு கூட்டணித் தலைவர்கள் (கலைஞர் உட்பட) மத்தியிலேயே பெரிய ஆதரவு இல்லை என்பதிலிருந்து தமிழ் பெரிய ஆபத்தில் இல்லை என்பது தெரிகிறது.
5. தாய்மொழியே ஆனாலும், அதை இம்மாதிரி திணிக்க முயற்சிப்பதால் எதிர்மறை விளைவுகள் தான் அதிகமாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து. திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதால் மட்டும், தமிழ் எப்படி வளரும் என்றும் புரியவில்லை.
6. தில்லிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமா என்பது குறித்து I have no information (டோண்டு அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்)! அப்படி இருந்தால் அதையும் எதிர்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
7. தமிழ் வளர்ச்சிக்கு (தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் துணையோடு) நல்ல பல திட்டங்கள் வகுக்க வகை செய்தால், அது ஒரு மக்கள் சார்ந்த இயக்கமாக மாறி, நற்பலன்கள் விளையும்.

நன்றி.
----எ.அ.பாலா

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

//1. நீங்கள் ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர் என்று நான் எப்போதும் நினைக்கவில்லை. அதனால், நீங்கள் அதை stress செய்ய வேண்டிய அவசியமில்லை.//
புரிதலுக்கு நன்றி.
//3. மேலும், த.பா.இ 5-ஆம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் தமிழில் படிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. நீங்கள் சொல்வது போல் தமிழை ஒரு பாடமாக அல்ல.//
நான் த.பா.க பிரதிநிதி அல்ல .முதலில் தமிழை ஒரு பாடமாகவேனும் படிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்ப்டுத்துவோம்..முதலில் கூரை ஏறி கோழி பிடிப்போம் .அப்புறம் வானம் ஏறி வைகுண்டம் போகலாம்.

//4. த.பா.இ-யின் செயல்களுக்கு கூட்டணித் தலைவர்கள் (கலைஞர் உட்பட) மத்தியிலேயே பெரிய ஆதரவு இல்லை என்பதிலிருந்து தமிழ் பெரிய ஆபத்தில் இல்லை என்பது தெரிகிறது.//
தன்னுடைய குடும்ப செல்வாக்குக்கு ஆபத்து இல்லாதவரை ,தமிழுக்கான ஆபத்து பற்றி சிந்திக்க முடியாத பரிதாபத்துக்குரிய நிலைக்கு கலைஞர் வந்தாகிவிட்டது.

//5. தாய்மொழியே ஆனாலும், அதை இம்மாதிரி திணிக்க முயற்சிப்பதால் எதிர்மறை விளைவுகள் தான் அதிகமாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து. //
ஒரு பாடமாகவாவது படிக்க வேண்டும் என்பது திணிப்பென்று நீங்கள் சொன்னால் ,நான் அதை எதிர்க்கிறேன் .வட மாநிலங்களில் இந்தி கண்டிப்பாக ஒரு பாடமாக படிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன் .தமிழ் நாட்டிலும் அவ்வாறு தமிழை ஒரு பாடமாக படித்தாக வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்.

//திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதால் மட்டும், தமிழ் எப்படி வளரும் என்றும் புரியவில்லை.//
இதனால் 'மட்டும்' தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் சொல்லவில்லை . இது வெறும் திரிப்பு மட்டுமே . இப்போது வளர்வது பற்றியே பேச்சு அல்ல .கீழிறங்காமல் பார்த்துக்கொள்வதே பெரிய வேலை .தமிழ் படிக்கச் சொன்னாலும் அதனால் மட்டும் வளர்ந்து விடுமா என்ற கேள்வி .தமிழில் பெயர் வையுங்கள் என்று சொன்னாலும் இதே கேள்வி . எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் வேண்டும் .எதைப்பற்றி பேசினாலும் 'இதனால் மட்டு இந்தியா முன்னேறி விடுமா?" என்று கேட்பவர்களை நான் எரிச்சலுடனே பார்க்கிறேன். ஒட்டு மொத்த வழிமுறைகளையும் ஒரே நேரத்தில் launch பண்ண இது ஒன்றும் செயற்கைக்கோள் அல்ல.

தமிழ் திரைபடங்களுக்கு முடிந்த அளவுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன் .ஆனால் அதை நிர்ப்பந்திக்க முடியாது ..இது தார்மீக அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் .இதற்காக வேண்டுமென்றே தமிழில் பெயர் வைக்காமல் விளம்பரம் தேடுபவர்கள் நாசமாய் போக என்று சாபம் கொடுக்க மட்டுமே என்னால் முடியும்.

//6. தில்லிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமா என்பது குறித்து I have no information (டோண்டு அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்)! அப்படி இருந்தால் அதையும் எதிர்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.//

மேலே பதில் சொல்லி விட்டேன்.

//7. தமிழ் வளர்ச்சிக்கு (தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் துணையோடு) நல்ல பல திட்டங்கள் வகுக்க வகை செய்தால், அது ஒரு மக்கள் சார்ந்த இயக்கமாக மாறி, நற்பலன்கள் விளையும்.//

என்ன மாதிரி திட்டங்கள் என்று விளக்கினால் நலமாக இருக்கும்.

நன்றி!

said...
This comment has been removed by a blog administrator.
said...

பாலா,
தமிழ்மணத்தில் இணைந்துள்ள வலைப்பதிவுகளில் முடிந்தவரை தமிழில் எழுதுங்கள் என்று வலியுறுத்தினால் கூட ,"இதனால் , மட்டும் , தமிழ் வளர்ந்து விடுமா என்ன?" என்று குதர்க்கம் பேச மாட்டீர்கள் என நம்புகிறேன்

said...

"தில்லிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமா என்பது குறித்து I have no information (டோண்டு அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்)! அப்படி இருந்தால் அதையும் எதிர்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு."

தில்லியில் ஹிந்தி கட்டாயப் பாடமே. ஆனால் அதற்கெல்லாம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. ஏனெனில் அது நம்முடைய தேசீய மொழி. அதை நம் பிள்ளைகள் படிக்காவிட்டால் நமக்குத்தான் நஷ்டம். அது தெரிந்தே தலைவர் பேரன்கள் மற்றும் பேத்திகள் ஹிந்தி படிக்கின்ற்னர். மந்திரி ஆயினர் மற்றும் ஆவார்கள்.

இதையெல்லா விவாதம் புரியும் நாம்தான் ஏமாளிகள்.

தலைவர் எவ்வழி, அவ்வழியே தொண்டனுக்கும், குழந்தைகள் பள்ளி படிப்பு விஷயத்தில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//தில்லியில் ஹிந்தி கட்டாயப் பாடமே. ஆனால் அதற்கெல்லாம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. ஏனெனில் அது நம்முடைய தேசீய மொழி. அதை நம் பிள்ளைகள் படிக்காவிட்டால் நமக்குத்தான் நஷ்டம்.//

இதை உண்மையிலயே டோண்டு அவர்கள் எழுதியிருந்தால் ...வெட்கமாக இல்லை?..சீ!..தில்லியில் மட்டும் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதாம் ..தமிழ் நாட்டில் தமிழ் ஒரு பாடமாகவேனும் இல்லாதது பற்றி ஆட்சேபிக்க முடியாதாம் .. தேசிய மொழியாம் .. என் தாய் மொழிக்கு பிறகுதான் எந்த மொழியும்.

said...

"இதை உண்மையிலயே டோண்டு அவர்கள் எழுதியிருந்தால் ...வெட்கமாக இல்லை?..சீ!..தில்லியில் மட்டும் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதாம் ..தமிழ் நாட்டில் தமிழ் ஒரு பாடமாகவேனும் இல்லாதது பற்றி ஆட்சேபிக்க முடியாதாம் .. தேசிய மொழியாம் .. என் தாய் மொழிக்கு பிறகுதான் எந்த மொழியும்."

கூறியது டோண்டுதான். ஜோ அவர்களே தேவையின்றி உணர்ச்சிவசப்படாதீர்கள். நான் யதார்த்தத்தையே கூறினேன். தமிழகத்தில் உங்களால் ஹிந்தியேயில்லாமல் தமிழ் மீடியத்தில் படிக்க இயலும். அதே மாதிரி தமிழே இல்லாமலும் படிக்க இயலும். ஹிந்தியைத் தவிர மற்ற எல்லா தேசீய மொழிகளுக்கும் இதே நிலைதான். பங்களூரில் கன்னடம் இல்லாமல் படிக்க இயலும், ஆந்திராவில் தெலுங்கு இல்லாமல், ... இப்படியெல்லாம் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் தில்லியில் மட்டும் ஹிந்தியை உங்களால் தவிர்க்க முடியாது. ஏன்? அது அப்படித்தான். தில்லி தமிழ் கழகப் பள்ளிகளில் கூட ஹிந்தி படிக்கத்தான் வேண்டும். இதை அங்கு இருக்கும் தமிழர்கள் கூட யாரும் எதிர்க்கவில்லை என்பதே நிலை.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் பிள்ளைகளுக்கு எது நல்லக் கல்வியோ அதையே அளிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அய்யா டோண்டு அவர்களே, ஒரு வாதத்திற்காகவே வைத்துக்கொள்வோம், உங்கள் வார்த்தையில் சொல்வதானால் அவர்கள் தான் அரசியல்வாதிகள் ஏதோ பிழைப்புக்காக தமிழ் தமிழ் என கூறுகின்றனர், சரி நீங்கள் என்ன சொல்கின்றீர்?? தமிழே வேண்டாம் என்கின்றீரா?, மேலும் இந்தி படித்தே ஆக வேண்டும் என என்ன கட்டாயம்?? எதற்காக கட்டாயம்,தேசிய மொழி என்பது எத்தனை ஒரு தலைபட்சமாக ஆக்கப்பட்டது, சிங்கப்பூரில் கூட சீனர்கள் மிகப்பெரும்பான்மையினர் அவர்கள் என்ன அனைவரையும் சீன மொழியா படிக்க சொல்கின்றனர், கட்டாயத்தினால் இந்தி படிப்பதென்பது இந்தி பேசுபவர்களின் மேலாதிக்கத்தை ஏற்று தம் சுயத்தை இழப்பதற்கு சமம், இந்தியை யாரும் எதிர்க்கவில்லை, இந்தி தினிப்பைத்தான் எதிர்க்கின்றனர், எமக்கு தேவையெனில் இந்தியென்ன 10 பேர் கூட பேசாத எந்த மொழியையும் கற்றுக்கொள்வோம், ஏன் தில்லியில் இந்தியில்லாமல் படிக்க முடியாது? ஆனால் தமிழகத்திலும் இன்ன பிற மாநிலங்களிலும் அந்தந்த வட்டார மொழியில்லாமல் படிக்கலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்?? அப்படியெனில் இந்தி பேசாத மக்களெல்லாம் இந்தியை ஏற்று இந்தியாவில் இரண்டாம் நிலை குடிமகனாக இருக்க வேண்டுமென்பதா?

இந்தியை மொழிப்பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்பவர்கள் ஏன் தாய் மொழியை ஒரு மொழிப்பாடமாக கட்டாயம் படிக்க வேண்டுமென்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பது ஒரு வாதமாக வைப்பர், இந்தியை பேசும் மொழியாக கொண்டவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைத்துவிட்டதா? அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டமில்லையா?

இந்தி மேலாண்மையை ஏற்ற குஜராத்தி மற்றும் இன்ன பிற வட்டார மொழிகளுக்கு நடந்த கதி என்ன? இப்போது அந்த மொழிகளின் நிலை என்ன?

said...

//ஆனால் தில்லியில் மட்டும் ஹிந்தியை உங்களால் தவிர்க்க முடியாது. ஏன்? அது அப்படித்தான். //
சரிங்க! உங்கள யாரு தவிர்க்க சொன்னது .தாராளமா படிக்கலாமே..அதே போல தமிழகத்தில் தமிழ் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.

//இதை அங்கு இருக்கும் தமிழர்கள் கூட யாரும் எதிர்க்கவில்லை என்பதே நிலை.//
அடேங்கப்பா!நானும் கூட எதிர்க்கவில்லை..ஆனால் தமிழகத்தில் தமிழை தவிர்க்க முடியாமல் செய்தால் மட்டும் எதிர்க்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் ..நாசமா போக.!

said...

//ஆனால் தமிழகத்தில் தமிழை தவிர்க்க முடியாமல் செய்தால் மட்டும் எதிர்க்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் ..நாசமா போக.!
//

அது சரி... நாமெல்லாம் நம் சுயத்தை இழந்து இந்தியை ஏற்று நல்ல இந்தியனாய் இருப்போம்...

என்ன சரிதானுங்களே?

said...

"சரி நீங்கள் என்ன சொல்கின்றீர்?? தமிழே வேண்டாம் என்கின்றீரா?,"

நான் அவ்வாறு சொல்வேனா? உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்பதே என் நிலை. இங்கு வலைப்பூக்களில் கூட பலர் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடும் போது அவர்களை தமிழில் எழுதுமாறு கேட்டுக்கொண்டவன் நான்.

ஆறாம் வகுப்பில் என்னை சிறப்புத் தமிழ் எடுத்துக் கொள்கிறாயா அல்லது வடமொழி எடுத்துக் கொள்கிறாயா என்று கேட்டபோது என் தந்தையின் அறிவுறை ஏற்று சிறப்புத் தமிழ் எடுத்தவன் நான். பிறகு அதற்காக எப்போதும் வருந்தியதில்லை. என் பெண்ணையும் தில்லியில் தமிழ்ப் பள்ளியில்தானே சேர்த்தேன்.

இப்போது நிலை என்ன தெரியுமா? தில்லியில் உள்ள பல தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இதற்காக நான் வருத்தப்பட்ட அளவுக்கு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் வருந்தவில்லை என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//தில்லியில் உள்ள பல தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இதற்காக நான் வருத்தப்பட்ட அளவுக்கு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் வருந்தவில்லை என்பதே நிஜம்.//

டோண்டு ஐயா!
உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லியா? தில்லி தமிழர்களைப்பற்றி ரொம்பத்தான் அக்கரை ..இங்கே தமிழகத்தில் தமிழே படிக்காமலிருக்க முடிகிறது .அதைப் பற்றி முதலில் கவலைப்படுவோம் ..முதல்ல கூரை ஏறி கோழி பிடிச்சிட்டு அப்புறம் வானம் ஏறி வைகுண்டம் போகலாம்.

said...

ஜோ,
விவாதத்திலிருந்து விலகுகிறேன் என்பவரை மீண்டும் அழைத்து வந்த உங்கள் சூட்சமத்தை பாராட்டுகிறேன் !!!

//தமிழ்மணத்தில் இணைந்துள்ள வலைப்பதிவுகளில் முடிந்தவரை தமிழில் எழுதுங்கள் என்று வலியுறுத்தினால் கூட ,"இதனால் , மட்டும் , தமிழ் வளர்ந்து விடுமா என்ன?" என்று குதர்க்கம் பேச மாட்டீர்கள் என நம்புகிறேன்
//
எதற்காக திடீரென்று இதைச் சொல்கிறீர்கள் என்று சுத்தமாக விளங்கவில்லை. இந்த விவாதத்திற்கும், நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்மந்தம் ? இவ்வாறு என்னை எள்ளுவதில் உங்களுக்கு குதூகலம் என்றால் எனக்கும் மகிழ்ச்சியே !!!

//எதிர்க்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் ..நாசமா போக.!
//
ஆணித்தரமாக உங்கள் கருத்துக்களை முன் வைக்கும்போது கூட, சொற்பிரயோகங்களை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

**********
//3. மேலும், த.பா.இ 5-ஆம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் தமிழில் படிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. நீங்கள் சொல்வது போல் தமிழை ஒரு பாடமாக அல்ல.//
நான் த.பா.க பிரதிநிதி அல்ல .
*****************
சற்று நிதானமாக நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளுங்கள். த.பா.இ வலியுறுத்தி வருவதற்கும், நீங்கள் எடுத்துக் கூறியிருந்ததற்கும் (//உங்களை தமிழ் வழி கல்வி படிக்க சொல்லவில்லை .தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகவாவது படிக்க வேண்டும் என்று சொல்வது கூட தவறா? //) உள்ள முரண்பாட்டை நான் சுட்டினேன். எதற்கு "நான் த.பா.க பிரதிநிதி அல்ல" என்ற பகிரங்க அறிவிப்பெல்லாம் ????

**************
//திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதால் மட்டும், தமிழ் எப்படி வளரும் என்றும் புரியவில்லை.//
இதனால் 'மட்டும்' தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் சொல்லவில்லை . இது வெறும் திரிப்பு மட்டுமே .
*****************
எதற்காக இப்படிக் கூறினேன் என்பது உங்களுக்கு உண்மையாகவே புரியவில்லையா என்ன? ஏற்கனவே நான் கூறிய, "தன்னால் பின்பற்றமுடியாத ஒன்றை ஒருவர் மற்றவர் மேல் திணிக்க முற்பட்டால், அது கேலிக்கூத்தாகி விடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்வினையை ஏற்படுத்துவதால், நட்டத்திலும், தோல்வியிலும் முடியும். எதிர் விளைவுகள் அதிகம் உண்டாகும் ! " என்ற கருத்தை நான் நம்புவதற்கும், அதை முன் வைப்பதற்கும் எனக்கு நிச்சயம் உரிமை உண்டு என்று நினைக்கிறேன் !!!!!!

//எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் வேண்டும் .எதைப்பற்றி பேசினாலும் 'இதனால் மட்டு இந்தியா முன்னேறி விடுமா?" என்று கேட்பவர்களை நான் எரிச்சலுடனே பார்க்கிறேன்
//
இந்த உங்கள் கருத்தை முழுமனதோடு ஆதரிக்கிறேன்.

//என்ன மாதிரி திட்டங்கள் என்று விளக்கினால் நலமாக இருக்கும்.
//
இது, பொதுவில், தமிழ் மேல் அக்கறையுள்ள பலரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு முயற்சி !!! தமிழ் மையங்கள் ஏற்படுத்தலாம் என்ற கருத்தை ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்.

நீங்கள் எடுத்துரைத்த கருத்துக்களின் 'சாராம்சத்தை' புரிந்து கொண்டேன், மதிக்கிறேன். அதே போல், என் தரப்பையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோடு இவ்விதாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நன்றி !

--- எ.அ.பாலா

பி.கு: http://lldasu.blogspot.com/2005/07/blog-post_30.html பார்க்கவும்.

said...

"இங்கே தமிழகத்தில் தமிழே படிக்காமலிருக்க முடிகிறது .அதைப் பற்றி முதலில் கவலைப்படுவோம்."

உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது.

இங்கு சென்னையில் நான் இருமுறை ஆங்கிலம்-தமிழ் துபாஷியாக சென்றேன் கடந்த 4 வருடங்களில். ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளுக்காக சென்றதை இதில் சேர்க்கவில்லை. இது எதைக் குறிக்கிறது? தமிழகத்திலும் நிலைமை மோசம் என்றுதானே. எழுதும் தமிழில் பிழைகள், ஆங்கிலமோ கொலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

பாலா,
மீண்டும் மீண்டும் நீங்கள் த.பா.இ சார்பாக என்னை பதில் சொல்ல நிர்பந்திப்பது புரியவில்லை .அவர்கள் சொல்லும் நோக்கங்கள் எனக்கு ஏற்புடையதே தவிர ,அவர்களின் வழிமுறைகளை முழுவதுமாக நான் ஏற்கவில்லை .அதற்காக ராமதாஸ் எனக்கு பிடிக்காது என்பதற்காக தமிழின் இருப்பு பற்றி அக்கரை இல்லாமல் என்னால் இருக்க முடியாது .இனிமேலாவது என்னுடைய கருத்துக்களுக்கு மட்டும் என்னிடம் விளக்கம் கேளுங்கள் .

////எதிர்க்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் ..நாசமா போக.!
//
ஆணித்தரமாக உங்கள் கருத்துக்களை முன் வைக்கும்போது கூட, சொற்பிரயோகங்களை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
நாசமா போக என்பது யாரையும் குறிப்பிட்டல்ல . 'கலிகாலம்!' -னு சொல்லுற அர்த்ததுல எங்க ஊருல 'நாசமா போக!' என்று சொல்லுவார்கள் ..மற்றபடி நான் சாபம் விட்டு பலிக்கிற அளவுக்கு பெரிய மனிதன் அல்ல.


//நீங்கள் எடுத்துரைத்த கருத்துக்களின் 'சாராம்சத்தை' புரிந்து கொண்டேன், மதிக்கிறேன். அதே போல், என் தரப்பையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோடு இவ்விதாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நன்றி !//
முழுமையாக இல்லாவிடினும் ,பெரும்பான்மையான உங்கள் கருத்துக்களின் சாராம்சத்தை புரிந்து கொண்டேன் .மதிக்கிறேன் .நன்றி!


டோண்டு ஐயா,
//உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது.//
நீங்கள் இதற்கு எதிர்மாறாக கருத்து சொல்லும் வரை நம்பித்தான் ஆகவேண்டும்.