செக்கூலரிசம் - 8 வரி கவிதை
பிராமண எதிர்பென எத்தனை நாள் ஜல்லியடிப்பீர் நீங்கள்
மரம் வெட்டியென எப்போதும் ஜல்லியடிப்போம் நாங்கள்
திருமாவின் சிங்கப்பூர் பயணம் லூஸ்மோகனின் கோயம்பேடுபயணம்
அத்வானியின் பாக்கிஸ்தான் பயணம் மூச்...
அன்புமணியின் அரசியல் பிரவேசம் பேசுவோம்
தினகரனின் அரசியல் பிரவேசம் மூச்...
ஷங்கர் அன்னியனில் கற்பனையாக காண்பித்தால் கலையாக பார் என்போம்
பத்மா பார்த்ததை எழுதினால் கும்பலாக வந்து குதிப்போம்
பின்குறிப்பு
இந்த கவிதை(யா?)! எல்லோரையும் குறிவைத்து எழுதவில்லை
ஒரு குறிப்பிட்ட 5 , 6 பேரின் செக்கூலரிசம் நினைவுக்கு வந்தது எழுதிவிட்டேன்
மற்ற யாரையும் குறிப்பிடுவன இல்லை...
யாரையேனும் புண்படுத்தினால் என்னை மன்னிக்கவும்
20 பின்னூட்டங்கள்:
டிஸ்க்ளெய்மர் விட்டுட்டேன்
முகமூடியின் செக்கூலரிசம் - 8 வரி கவிதை இந்த பதிவிற்கும் என் பதிவிற்கும் எந்த தொடர்புமில்லை என கூறிக்கொள்கின்றேன்
மரியாதைக்குரிய குழலி அவர்களுக்கு,
வந்தனங்கள். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். பார்ப்பான் என்று ஜல்லியடிப்பதாகச் சொல்வார்கள். அதுவே தலித் என்று சொல்லிப் பாருங்கள், எக்காளமிடுவார்கள். தலித் பெண்ணை கிராமத்தில் வன்புணர்ந்ததாகக் கதை எழுதுவார்கள். அதற்கு ஞானபீடம் கிடைக்க வேண்டும் என்று மார் தட்டுவார்கள். எந்த பெண்ணையும் தவறாகச் சொல்லக் கூடாதுதான். கதையில் நாயகியின் தாழ்ந்த சாதியை சொல்லாமலே வொட்டிருக்கலாம் அல்லவா? அங்கேதான் அவாக்களின் வெறு புலப்படுகிறது.
முகமூடியும், மாயவரமும், திருமலையும், டோண்டுவும், அருணும், வெங்கடேசும், கிச்சுவும் என்னதான் வெளிப்பார்வைக்கு நன்றாகப் பேசினாலும் அவர்களின் பதிவுகள் பெரியாரை, அண்ணாவை, எம்ஜிஆரை, இராமதாசை, கருணாநிதியை, திருமாவை, கிருஷ்ணசாமியை, கண்ணப்பனை, தேவர்குலத்தினைத் தாக்கியே வரும். மறந்தும்கூட அவர்களின் பதிவுகள் ஜெயலலிதாவை, இராமகோபாலனை, அத்துவானியை(நன்றி:- முகமூடி) பால்தாக்கரேவை, RSSஐ, விஸ்வ ஹிந்து பரிஷத்தை, சோ ராமசாமியை, குருமூர்த்தியை, நேதாஜியை தாக்கி எழுதாது!
அது தெரிந்த கதைதானே!
பிரபுவின் பின்னூட்டத்தில் ஒரே ஒரு வரி தனிக்கை செய்யப்பட்டுள்ளது சில விவாதங்களை தவிர்ப்பதற்காக
http://www.blogger.com/publish-comment.do?blogID=12213354&postID=112249619194306498&r=ok
அட ! எட்டு வரி கவிதை சங்கிலி பதிவு .. நல்லா இருக்கே இது..
இதோ வந்துட்டேன்.. என் 8 வரி கவிதையோடு!!
வீ எம்
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது...
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது...
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்தது...
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்தது...
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்தது...
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்தது...
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்தது...
இது எனது பங்களிப்பு....
அப்ப உங்களுக்கும் புரியுதுங்கறீங்க :-)
குழலி உங்கள் பார்வையில் செக்கூலரிஸ்ட் என்றால் என்ன என்று சொல்லியிருக்கிறீர்கள்... நன்றி... அதற்கான உங்கள் அலசல் குறித்து என் கருத்துக்கள் சில... (என்ன சொல்லி என்ன, குழலி ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்து மனச மூடிட்டார்... அவர்கிட்ட சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு நான் உங்கள பத்தி ஏற்கனவே முடிவுக்கு வரமாட்டேன்...)
பிராமண எதிர்ப்பு... அத எழுதிய சூழ்நிலை குறித்து அதிலேயே சொல்லி இருக்கேன்... ஜாதியை தூக்கிக்கொண்டு அலையும் சிலர் (அதாவது நீங்க 'அவங்க'ன்னு குற்றம் சொல்றீங்களே அவங்கள சொல்லல நான்... 'அவங்கள எதிர்க்கறோம்'ன்னு சொல்லிகிட்டு திரியும் ஜாதியை சேர்ந்தவர்கள்... உங்க பார்வையில் செக்கூலரிஸ்ட் (அ) சமுதாய முன்னேற்றவாதிகள்) பதிவுக்கு சம்பந்தமே இல்லாத நிலையிலும், என் பதிவில் வந்து ஒரே பாட்ட பாடிகிட்டு இருந்தாங்க... அந்த சலிப்பில் எழுதுன கட்டுரை அது... சரி பார்ப்பன எதிர்ப்புக்கும் மரம் வெட்டிக்கும் என்ன சம்பந்தம் நான் பாமக மரம் வெட்டியதைத்தானே சொன்னேன். ஒரு குறிப்பிட்ட ஜாதி மரம்வெட்டினார்கள் என்றா சொன்னேன்... பாமக தான் பாட்டாளிகளின் கட்சி... ஒரு குறிப்பிட்ட ஜாதி வர்ணம் பூசுற வேலை வேணாம்னு அய்யா சொல்லியிருக்காரே...
முப்பது வருசமா செக்கு மாடு மாதிரி சுத்தி வந்ததுக்கு கா¨ளை மாடு மாதிரி பாய்ச்சல் காட்டியிருந்தா தமிழகம் எங்கியோ போயிருக்கும்னு கலியன பத்தின என் ஆதங்கத்த சொன்னா, இவன திட்டினியா அவன திட்டினியா ஏன் இவர மட்டும் திட்டணும்னு ஒரு கேள்வி... கலைஞரை விமர்சனம் செய்யும் போதெல்லாம் அத்வானியையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று என்ன குழந்தைத்தனமான சிந்தனை... மேலும் திமுக பாஜக கூட்டணியில் இருந்த போது திமுக மதவாதிகளின் கூட்டணி கட்சி இல்லையா... என்ன குழலி உங்களுக்கும் மூளைச்சலவையா....
அத்வானி பாகிஸ்தான் போறாராம் அவர்கிட்ட நேத்துதான் பேசினேன் என்று யாராவது பதிவு எழுதும்போது அதை பற்றி நான் பதிவு எழுதலாம்... திருமா வெளிநாடு செல்கிறார் என்ற ஒரு பதிவு வந்தபோது, நிறைய பதிவுகளை கிண்டலடித்து நிறைய பதிவுகள் வருவதை போலவே, லூஸ்மோகன் கோயம்பேடு செல்கிறார் என்று பதிந்தேன்... அதில் திருமாவை கேவலப்படுத்தும் நோக்கம் எள்ளளவும் இல்லை. திருமாவை பற்றிய பதிவை கிண்டல் என்றவுடன் பக்தர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது... லூஸ் மோகன் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பெயர்.. அந்த பெயர் கொண்டவரை எழுதினால் அது என்ன அவ்வளவு கேவலமா...
மேலும் தினகரனின் கும்பல் பண்ணும் விஷயத்தை சொல்லாமல் டாக்டரின் வாரிசு அரசியலை விமர்சிக்கிறோம் என்கிறீர்கள்... உபிசவின் (ஒரே) கொள்கையை நாடறியும்... ஆனால் நானோ என் குடும்பமோ பதவிக்கு ஆசைப்பட்டால் என்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று டாக்டர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டு ஒரு உயரத்துக்கு போனவுடன் வசதியாக ப்ளேட்டை மாற்றுவதுதான் இங்கே விமர்சனம்... சவுக்கு இருக்கு இங்கே, டாக்டர் அய்யா எங்கே... உங்கள் அய்யாவை மீடியா விமர்சனம் செய்வதற்கு ஒரே காரணம் அவர் உளறல்கள் மட்டுமே அவர் பாட்டுக்கு தன் மனம் போன படி அரசியல் செய்யட்டும் எவனும் கேக்கப்போவதில்லை... மீடியாவை கண்ட இடம் எல்லாம் சாவுக்கோழி மாதிரி கத்திவிட்டு அப்புறம் தன்னிஷ்டத்துக்கு பொதுக்குழுல அழுதாங்க அதான் இப்படி பண்ணிணோம்னு சர்க்கஸ் பண்றது... முதல்ல நாவடக்க அரசியல் செய்ய சொல்லுங்க...
மேலும் கூவம் நாறுது, அதனாலதான் கொசு உற்பத்தி ஆகுது இதுக்கு எதுனா பண்ணுங்கன்னு சொன்னா, உடனே காவேரில தண்ணி வரமாட்டேங்குதே அத பத்தி எழுதினியா, அதுக்கு காரணம் இதுவா இல்ல அதுவான்னு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சி என் மேல பாயறதுக்கு பதிலா அத நீங்க செய்யலாமே... யாருக்கும் அதில் எந்த ஆட்சேபணை இல்லை...
மேலே இட்ட என் பின்னூட்டம் என் பதிவில் குழலி இட்ட கருத்துக்கான பதில்... அது இங்கேயும் பொருத்தமாக இருக்கும் போலவே உள்ளது
மேலும் என் பதிவின் தலைப்பில் எந்த வித மாறுதலும் செய்யாமல் அப்படியே உங்கள் பதிவிலும் பயன்படுத்துவது காப்பிரைட் சட்டப்படியும் மனசுபுராணம் படியும் தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...
எனக்கு இதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லையெனினும் உங்களுக்கு பெரிய அளவில் கஷ்டம் இல்லையெனில் நீங்கள் வேறு தலைப்பில் மீள்பதிவு செய்வீர்கள் என்றும் ஒரு பட்சி கூவுகிறது
சுதர்சன் ,
ஒன்னு புரியுது, நிச்சயமா, நீங்க சென்னைவாசி இல்லைனு... 8 குடம் தண்ணியா?? எப்ப்ப்ப்பாஆஆஆஆ
வீ எம்
// பிரபுவின் பின்னூட்டத்தில் ஒரே ஒரு வரி தனிக்கை செய்யப்பட்டுள்ளது சில விவாதங்களை தவிர்ப்பதற்காக // அது எப்படீங்க மத்தவங்க பின்னூட்டத்துல தணிக்கை செய்வது/ அழித்து அதே பெயரில் திருப்பி எழுதுவது
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ::
பினாமியா இருந்தா நாமளே திருப்பி எழுதலாம்
நண்பனா இருந்தா நாம சொன்னத திருப்பியும் எழுத சொல்லலாம்..
அனானிமஸ் கருத்துதானேன்னு மாத்தி எழுதனா, அது அவ்வளவு சரியில்லையே...
சொந்த வலைப்பதிவா இருந்தா அட்டுமினிஸ்டர்ங்கற முறையில செய்யலாம்... ஆனா இது ப்ளாகராச்சேன்னு... உண்மையிலேயே ப்ளாக்கரில் அப்படி செய்ய முடியும்னா ஏதோ அறியாமைல கேட்டுபுட்டேன். மன்னிச்சிடுங்க
முகமூடி முதலில் உங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி
//திமுக பாஜக கூட்டணியில் இருந்த போது திமுக மதவாதிகளின் கூட்டணி கட்சி இல்லையா... //
நான் சொன்னதில்லை மதவாத கூட்டணி இல்லையென்று, இந்த கட்சி அந்த கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளும் கூட்டணி மாறுகின்றன, என்னமோ பாமக மட்டுமே கூட்டணி மாறுகின்ற மாதிரி பேசுவது தான் எனக்கு புரியவில்லை, கேட்டால் மருத்துவர் அப்படி சொன்னாரே இப்படி சொன்னாரே (ஆக மொத்தத்துல அவரே இத்தனை விளக்கம் கொடுத்திருக்க மாட்டார்...) என பேச்சு, அரசியல்வாதிகளிலிருந்து நடிகர்கள் வரை எல்லோருமே வேண்டுமென்றால் ஒரு மாதிரியும் வேண்டாமென்றால் இன்னொரு மாதிரியும் தான் பேசுகின்றனர்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் பாஜகவின் தீவிர ஆதரவாளனாக இருந்தேன் என்னமோ பாஜக தான் இந்திய தேசத்தையே காக்க வந்த மாதிரி, சோனியா அரசியலில் வந்த போது கடுமையான கோபம் எனக்கு, தற்போது என் சிந்தனைகள் மாறவில்லையா! ஐந்து ஆண்டுகளுக்கு முன் சரியென்ற கோட்பாடெல்லாம் தற்போது எனக்கு தவறாக தெரிகின்றது, தவறு என்று நினைத்ததெல்லாம் தற்போது சரியாக தெரிகின்றது. நான் என்ன பாமகவும் மருத்துவரும் தான் உலகின் தலைசிறந்த கட்சி மற்றும் தலைவர் என்றா சொல்கின்றேன், மற்றவர்களுக்கு கடைபிடிக்கும் அதே அளவுகோள் ஏன் இவர்களுக்கு இல்லை என்பது தான் என் ஆதங்கம்...
//திருமாவை பற்றிய பதிவை கிண்டல் என்றவுடன் பக்தர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது... லூஸ் மோகன் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பெயர்.. அந்த பெயர் கொண்டவரை எழுதினால் அது என்ன அவ்வளவு கேவலமா...
//
உங்கள் வாதத் திறமை நன்றாக தெரிகின்றது, எப்படி எழுதப்பட்ட பதிவு என்று படித்த அனைவருக்கும் (உங்களையும் சேர்த்து தான் சொல்கின்றேன்) தெரியும்.
//ஆனால் நானோ என் குடும்பமோ பதவிக்கு ஆசைப்பட்டால் என்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று டாக்டர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டு ஒரு உயரத்துக்கு போனவுடன் வசதியாக ப்ளேட்டை மாற்றுவதுதான் இங்கே விமர்சனம்... //
நல்லா தான் பேசுகின்றீர், இதே அளவுகோல்தான் மற்றவர்களுக்கும் கடைபிடிக்கின்றீரா?? ஊடகங்களும் கடைபிடிக்கின்றதா? இல்லையே
//மீடியாவை கண்ட இடம் எல்லாம் சாவுக்கோழி மாதிரி கத்திவிட்டு //
ஊடகங்கள் என்ன நடுநிலையாகவா நடக்கின்றன, ஒரு நடிக்கரைப்பற்றி ஆஃப் த ரெக்கார்டாக பேசியதை (எல்லா அரசியல்வாதிகளும்,நடிகர்களும் ஆஃப் த ரெக்கார்டாக பேசுவது சாதரணமான ஒன்று, பத்திரிக்கை தர்மப்படி அது பத்திரிக்கையில் வெளிவராது) பதிப்பித்தது தான் தினமலரின் பத்திரிக்கை தர்மம், அது மட்டுமின்றி பொய் தகவல்களை காழ்ப்புணர்ச்சியோடு அள்ளிவிட்டுக்கொண்டு திரியும் ஊடகங்களை அள்ளி அணைக்க சொல்கிண்றீரா??
//மேலும் கூவம் நாறுது, அதனாலதான் கொசு உற்பத்தி ஆகுது இதுக்கு எதுனா பண்ணுங்கன்னு சொன்னா, உடனே காவேரில தண்ணி வரமாட்டேங்குதே அத பத்தி எழுதினியா,//
நல்லாதான் உதாரணம் தரீங்க, ஆனா தப்பான உதாரணம் தருகின்றீரே, கூவம் நாறுதுனு நூறு தடவை புலம்புபவர்கள் ஒரே ஒரு தடவையாவது பக்கத்தில் ஓடுகின்ற அடையாறும் நாறுகின்றதே என்றீரா, பக்கத்தில் ஓடுகின்ற சாக்கடை நாறுகின்றதே என்றீரா? இல்லையே, என்னமோ கொசு உற்பத்திக்கு காரணமே கூவம் மட்டும்தான் மற்றதெல்லாம் பன்னீர் ஓடுவது போலத்தான் எழுதுகின்றனர்...
//அதுவான்னு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சி என் மேல பாயறதுக்கு பதிலா அத நீங்க செய்யலாமே... யாருக்கும் அதில் எந்த ஆட்சேபணை இல்லை...
//
தினமலர் மீது பாய காரணமே அது நடு நிலை நாளிதழ் என்று சொல்லிக்கொண்டு திமுக வையும் பாமகவையும் மதிமுக வையும் திராவிட கொள்கைகளையும் கம்யூனிஸ்ட்களையும் தாக்கி எழுதுவது தான் அதே போலதான் நடுநிலைமையாக எழுதுவது போலவும் செக்கியூலரிஸ்ட் என்று புலம்பிக்கொண்டும் ஒரு குறிப்பிட்ட சில விடயங்களை தாக்கிக் கொண்டும் எழுதும்போது தான் எதிர்வினை தரவேண்டியதுள்ளது, நான் பாமக,திமுக கட்சிகளையும் சில கருத்துகளயும் சில இயம்களையும் எதிர்த்து எழுதுவேன், நீங்கள் நம்பும் மற்றதையெல்லாம் எழுதமாட்டேன்சொல்லிவிடுங்கள் பிறகு ஏன் உங்களுக்கு எதிர்வினை தரப்போகின்றோம், நமது எம்ஜியார்,முரசொலி, சங்கொலி பத்திரிக்கைகள் போன்று என படித்து ரசித்துவிட்டி போய் கொண்டே இருப்போம்
//// பிரபுவின் பின்னூட்டத்தில் ஒரே ஒரு வரி தனிக்கை செய்யப்பட்டுள்ளது சில விவாதங்களை தவிர்ப்பதற்காக // அது எப்படீங்க மத்தவங்க பின்னூட்டத்துல தணிக்கை செய்வது/ அழித்து அதே பெயரில் திருப்பி எழுதுவது
//
தற்போது தான் அல்வாசிட்டி விஜயிடம் இது பற்றி பேசினேன், அவரும் கேட்டார் நீங்களும் கேட்டுவிட்டீர், அழித்து அதே பெயரில் திரும்பவும் தான் எழுதினேன்
//பினாமியா இருந்தா நாமளே திருப்பி எழுதலாம்//
மன்னிக்கவும் பினாமி பேரில் எழுதும் அளவிற்கு எனக்கு இன்னும் கோழைத்தனம் வரவில்லை, எனக்கென்ன பயம் சொல்லுங்கள், பெயரை போட்டுதானே எத்தனையோ கருத்துகளை என் பெயரிலேயே போடுகின்றேன் கும்பலாக வந்து குதித்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்கின்றேன் பிறகென்ன பயம் எனக்கு... எனக்கு எந்த முகமூடியும் தேவையில்லை, அதில் ஒரே ஒரு வரி பதிவின் போக்கை திசை திருப்பிவிடும் ஆபாசமான வார்த்தைகள் அதில் இல்லை ஆனால் அந்த வரியில் உடன்பாடில்லை அதைப்பற்றி விவாதிப்பதும் தேவையில்லாதது என்பதால் தான் தூக்கிவிட்டேன்...
தற்போது இந்த செயலுக்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது இனி அப்படி செய்ய மாட்டேன்
//நண்பனா இருந்தா நாம சொன்னத திருப்பியும் எழுத சொல்லலாம்..//
யாருனே தெரியலை...
//அனானிமஸ் கருத்துதானேன்னு மாத்தி எழுதனா, அது அவ்வளவு சரியில்லையே...//
தணிக்கை செய்யப்பட்டுள்ளது என அதனால் தான் அப்படி ஒரு பின்னூட்டம் விட்டேன்
ஆர்வ கோளாறு 30 என ஒரு பதிவிட்டேன் தமிழ்மணம் திரட்டமாட்டேன் என்கின்றது, ஒரே ஒரு முறை தமிழ்மணத்தில் காண்பித்து விட்டு காணமல் போய்விட்டது
குழலி,
உங்கள் பதிலிற்கு ஒரு விளக்கம் இங்கே
அப்புறம் உங்க தணிக்கை முறை பத்தி தெரிஞ்சிக்கவும் கிண்டலாகவும்தான் கேட்டேன், கண்டுக்காதீங்க..
ஆனா என் தலைப்பு பற்றிய கேள்விக்கு ஒன்னும் பதில் சொல்லலியே நீங்க... கொ.ப.ச தலைப்ப மாத்து
முகமூடி உங்கள் பதிலை படித்தேன் இருவரும் இணைய முடியாத முனைகளில் நிற்கின்றோம் என்பது மட்டும் புரிகின்றது.... உங்கள் கருத்துகள் என் எண்ணத்தையோ என் கருத்துகள் உங்கள் எண்ணத்தையோ மாற்றப்போவதில்லை என்பது உண்மை, உங்கள் செக்கியூலரிசத்தை தொடருங்கள்... உங்கள் செக்கியூலரிசத்தை பற்றியதான விவாதம் மீண்டும் பாமகவைப் பற்றிய விவாதமாக தொடங்கிவிட்டது, ஆனால் ஒன்று உங்கள் செக்கியூலரிசம் புரியவைக்கப்பட்டுவிட்டது அதுதான் நான் எதிர்பார்த்ததும் கூட.
ஆனால் ஒன்று நமது எம்ஜியார்,முரசொலி, துக்ளக்கெல்லாம் நான் படிப்பது உண்டு ஆனால் அதில் சொல்லப்பட்ட கருத்துகளை கண்டுகொள்ள மாட்டேன்... ஏனென்றால் அதெல்லாம் எப்படி எழுதப்படுவது என்று எல்லோருக்கும் தெரியும்...
// உங்கள் செக்கியூலரிசத்தை பற்றியதான விவாதம் மீண்டும் பாமகவைப் பற்றிய விவாதமாக தொடங்கிவிட்டது // என் செக்கூலரிசத்தினை கேள்வி கேட்டபொழுது பாமகவை மேற்கோள் காட்டி பேசியது நீங்கள்... அதற்கு பதில் சொல்லும்போது பாமகவை பற்றி எழுதினால் - கேட்கப்பட்ட மற்ற விஷயங்களை / கேள்விகளையும் தவிர்த்துவிட்டு பாமகவை பற்றி விவாதம் செல்கிறது என்று முடித்துக்கொண்டீர்கள்... நன்று...
உங்களுக்கு தெரிந்த செக்கூலரிச கோட்பாட்டில் எழுத எனக்கு தெரியவில்லை... வருந்துகிறேன்...
// ஆனால் ஒன்று நமது எம்ஜியார்,முரசொலி, துக்ளக்கெல்லாம் நான் படிப்பது உண்டு ஆனால் அதில் சொல்லப்பட்ட கருத்துகளை கண்டுகொள்ள மாட்டேன்... ஏனென்றால் அதெல்லாம் எப்படி எழுதப்படுவது என்று எல்லோருக்கும் தெரியும்..// இது எனக்கு முழுவதுமாக புரியவில்லை... உங்கள் நோக்கத்தை நானாக யூகம் செய்ய விரும்பவில்லை... என் சிற்றறிவுக்கு புரிந்த வரையில் "முத்திரை" குத்த முயற்சிக்கிறீர்கள் என்பது புரிகிறது. யாரும் செய்யாததை நீங்கள் செய்யவில்லைதான்... ஆனால் நீங்கள் மற்றவரிடமிருந்து மாறுபட்டவர் என்று நானாகவே நினைத்தக்கொண்டது எனது தவறுதான்...
//உங்களுக்கு தெரிந்த செக்கூலரிச கோட்பாட்டில் எழுத எனக்கு தெரியவில்லை... வருந்துகிறேன்...
//
நடுநிலைவாதிகள் எல்லாரையும் ஒரே மாதிரி பாருங்க அப்படிபார்த்தான் நடுநிலை இல்லையென்றால் அது நடுநிலையில்லை அப்படின்றது தப்பா? தப்பா?
//"முத்திரை" குத்த முயற்சிக்கிறீர்கள் என்பது புரிகிறது. //
மன்னிக்கவும் என் நோக்கம் அதுவல்ல, எனது கருத்தை சொன்னேன் அவ்வளவே
Post a Comment