போதை

ஆளில்லா மைதானத்திலே
கோல் போட்டு
அலுத்துவிட்டேன்

இன்பம் கூட
வேண்டாம்
துன்பமாவது தா!

இரு கைகளிலும்
வாளேந்தி ஆவேசமாக
சுழற்றிவிட்டேன்

என் வாளில்
வெட்டுபடவும்
என்னை
வெட்டவும் தான்
ஆளில்லை

வெற்றி கூட
வேண்டாம்
தோல்வியாவது தா!

சதுரங்க ஆட்டத்திலே
வெள்ளை காயையும்
கறுப்பு காயையும்
மாற்றி மாற்றி
நகர்த்தி
பிளவாளுமையோ வென
மகிழ்ந்தேன்

மயிராளுமை யென
மட்டுப்படுத்தியது
மனது

என்னை நானே
கீறினேன்

குருதி வழிந்து
வலித்தது
குதூகலித்தேன்

மேலும் மேலும்
கீறினேன்
வலியோ
பழகிவிட்டது

விரல்களை
வெட்டியெறிந்தேன்

விரல்களின்றி
வாழ்ந்தபோது
விரல்களே
வீண்தானோ
என்றேன்

தற்போதொரு
கையில்லா
வாழ்க்கையும்
பழகிவிட்டது

அதனாலென்ன
வெட்டியெறியத்தான்
இன்னமும்
இரு கால்களும்
இரு காதுகளும்
இரு கண்களும்
ஒரு மூக்கும்
மிச்சமுள்ளதே

4 பின்னூட்டங்கள்:

said...

u r back..welcome back

said...

நன்றி சினேகிதி ஆனால் முன்பு போல உலவ முடியுமா என்பது சந்தேகமே, நேர நெருக்கடி உள்ளது, வலைப்பூக்கள் நல்ல சூழ்நிலைக்கு திரும்பி உள்ளதும் மகிழ்ச்சியளிக்கின்றது.

said...

//...முன்பு போல உலவ முடியுமா என்பது சந்தேகமே, நேர நெருக்கடி உள்ளது, வலைப்பூக்கள் நல்ல சூழ்நிலைக்கு திரும்பி உள்ளதும் மகிழ்ச்சியளிக்கின்றது.//


வாய்யா... வா.
வர்ரப்பவே... ரொம்பத்தாய்யா ஒரு 'இது' ஒமக்கு. எதோ போனாப் போவுதுன்னு வந்து blog பண்ற மாதிரி உதாரெல்லாம் ரொம்பப் பெர்சா இருக்கு. இங்க நாங்கல்லாம், வேல வெட்டி இல்லாம, ஒரு நாளக்கி 92 மணி நேரத்த வெச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம அல்லாடுறோம்; இவரு ஒருத்தருக்குத்தாங்... வேல இருக்காம் வேல.
என்னமோ சொல்வாய்ங்க ஊர்க்காட்டுல...
ம்ம்... ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது! ன்னு சும்மாவா சொன்னாய்ங்க. :-)))

- ஞானபீடம்.

said...

ஞானபீடம் அண்ணாச்சி கோவிக்காதிங்க, சீக்கிரமே இன்றைக்கு வீட்டிற்கு வந்துவிட்டேன், அண்ணாச்சி உங்க பதிவெல்லாம் கலக்கல், சூப்பர், ரொம்ப நல்லா இருக்கு, அப்பாடி ஒரு ஆளு வாயை மூடியாச்சி...

//ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது!//
சரிதான் போல