உள்ளம் கேட்குமே லைலாவும் ராதிகாவும்
ஆகா கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான் என கூவுவதும்,
திரைப்படங்களை விமர்சிப்பவன் எழுதும் பதிவைப்பாரு
என முனகுவதும் நன்றாகவே கேட்கிறதுங்கோ!
திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும், நடிகர்களின் நடிப்புத்திறனை
அலசும் அளவிற்கு நான் இல்லை, திரைப்படங்களில் கதாபாத்திரங்கள்
அழும்போது நானும் அழுது சிரிக்கும் போது நானும் சிரித்து திரையில்
பார்த்ததின் தாக்கத்தில் சில மணி நேரங்களை கடக்கும் சாதாரண ஒரு ரசிகனே.
சரிவிடுங்க ஏதோ எழுதிக்கொண்டு....
கேணையாக நடிப்பதில் சிறந்தவர் யார்? லைலாவா ? ராதிகாவா?
லைலாவிற்கு முன் வரை அப்பாவி கதாபாத்திரத்தில், இல்லை இன்னும்
சரியாக சொல்லப்போனால் கேணைச்சி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு
ராதிகாவை விட்டால் ஆளில்லை என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்
இன்று போய் நாளை வா, பிரதாப்போத்தனுடன் நடித்தாரே ஒரு படம்
ஹப்பி என்று கூறிக்கொண்டு அந்த படங்களெல்லாம் பார்த்தபோது
ராதிகாவை விட சிறப்பாக கேணைச்சி பாத்திரத்தில் பிரகாசிப்பவர்
யாருமில்லை என நான் நினைத்ததை முற்றிலும் பொய்யாக்கியவர் லைலா.
ஆரஞ்சு நிற மாத்திரையை காண்பித்து பச்சை நிறம் என சொல்வதெயெல்லாம்
அப்பாவி அல்லது கேணை கதாபாத்திரத்தில்
பிச்சி உதறவுதாக கணக்கிலெடுப்பதில்லை.
முதன் முதலில் நந்தாவில் ஓரிரு காட்சிகளில் லைலாவின் நடிப்பை கண்டு
அசந்து போனேன், அடுத்ததாக பிரபுதேவாவுடன் நடித்தாரே ஒரு படம்
(என்ன படம்பா அது மறந்துவிட்டேன்) அதில் கேணச்சி கதாபாத்திரத்தில்
அசத்தியிருப்பார்.
அதையெல்லாம் விட உள்ளம் கேட்குமே என்று சமீபத்தில் வெளியான படம்.
என் தற்போதைய கனவுக்கன்னி அசின் இரண்டாம் கனவுக்கன்னி பூஜா இருவரும்
நடித்துள்ளனர் என்ற ஆர்வத்தில்தான் படம் பார்க்க ஆரம்பித்தேன்
என் கனவு கன்னிகள்
ஆனால் படத்தின் ஆரம்பித்திலிருந்தே சதங்கை கட்டி ஆடியவர் லைலாதான்
முதலில் லைலா அல்லாமல் வேறெந்த நடிகையும் இந்த பாத்திரத்தில் நடிக்க
ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே, ஏனெனில் படம் முழுவதும்
ஒரு விதமான கீலாத்தனமான பாத்திரவடிவமைப்பு அது மட்டுமின்றி மற்ற
இரு நாயகிகளும் நல்ல விதமான பாத்திரத்தில் வழக்கமான கதாநாயகிகளின்
பாத்திரத்தில் நடித்திருக்கும்போது ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை வரக்கூடிய
பல்லில் கிளிப் மாட்டிக்கொண்டு கனவுக்கன்னி, கவர்ச்சிக்கன்னி என்ற உருவாக்கத்தை
உடைக்கும் பாத்திர படைப்பில் நடித்துள்ளார்.
இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் நீண்ட நாட்களுக்குப்பிறகு
ஒரு நல்லப்படத்தை பார்த்த திருப்தி எனக்கு.
யாரேனும் படம் பார்த்துவிட்டு வந்து என்னை திட்டாதீர்கள்,
கல்லூரியிலோ அல்லது பள்ளிப்பருவத்திலோ ஒரு குழுவாக,
தரையில் கால்படாமல் ஒரு அரையடி தரைக்கு மேலே
மிதந்தவரா நீங்கள், அப்படியெனில் உங்களுக்கு
பல நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு படம்.
கண்ணை உறுத்தும் கிராபிக்ஸ் இல்லாமல் காதை உறுத்தும்
பாடல்களில்லாமல் பாடல் காட்சிகள், இரண்டு மூன்று முறை
பாடலை கேட்டால் நாள் முழுவதும் முணுமுணுக்க வைக்கும்
பாடல்கள்.
மூன்று இளம் கதாநாயகிகள், கல்லூரி கதைக்களம்
இத்தனையும் இருந்தும் மிக எளிதாக கதைக்களத்தை
சதைக்களமாக்கும் சூழல் இருந்தும் அதிக கவர்ச்சியில்லாமல்
நகைச்சுவையில் ஆபாசத்தை கலக்காமல் எடுத்திருக்கும்
இயக்குனர் பாராட்டுக்குறியவர்.
ஒரு சாதாரண கதைக்கருவை நேர்த்தியான திரைக்கதையாலும்
அளவெடுத்து வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களுடன், மிக சாதாரணமாக்
எதார்த்த வாழ்க்கையில் நாம் பேசும் வசனங்களையும்,
பொறுத்தமான நடிகர்களை வைத்து சிறப்பாக எடுக்கப்பட்ட படம்
அதிலும் லைலாவின் நேர்த்தியான நடிப்பினால்
மொத்தப்படத்தையும் தன் தோளில் தாங்குகின்றார்.
தான் காதலிப்பவன் தன்னிடம் வேறொரு பெண்ணை காதலிப்பதாக
சொல்லும்போது சிரிப்பையும் அழுகையையும் நொடிக்கு நொடிக்கு
மாற்றி மாற்றி காண்பித்த லைலாவின் நடிப்பை அன்னியனில்
அம்பியாகவும் அன்னியனாகவும் மாறி மாறி நடிப்பை காண்பிக்கும்
விக்ரமையும் ஒப்பிடும்போது விக்ரம் வாங்கிய கூலிக்கும் அதிகமாகவே
கூவியது போன்றே தோன்றுகின்றது.
பிளாஷ்பேக் திரைப்படங்களில் முடிவு முடிச்சி முன்பே
அவிழ்ந்துவிடுவதால் ஒரு சிறிய சுவாரசியக்குறைவிருக்கும்
ஆனால் இந்த படத்தில் கடைசியிலும் ஒரு எதிர்பார்ப்பை
உருவாக்கி படத்தை முடித்துள்ளனர்
எல்லாவற்றிற்கும் மேலே இந்த படம் கல்லூரி கனவுலகை மட்டும்
காண்பிக்காமல் அதன் பின்னான நிதர்சனத்தையும் காண்பிக்கின்றது.
ஒரு படத்தை பார்க்கும் போது சில இடங்களில் ஒரு வினாடிக்கும்
குறைவான நேரமே வந்து போகும் காட்சிகளை மீண்டும் மீண்டும்
பார்க்கும் வழக்கமுடையவன், வசூல்ராஜா MBBS ல் "அய்யோ நம்மால முடியாது"
என சினேகா கூறும் போது காட்டும் முகபாவத்தையும், மாயவியில் "யாருடா நீ" என்று
ஜோதிகா சொல்லும் காட்சியும், அலைபாயுதேவில் செப்டம்பர் மாதம் பாடலில்
ஒரு சிறிய முகபாவமும், காதல் பிசாசே பாடலில் சில வினாடிகளே வரும்
மீராவின் நடனமும், ஜித்தனில் "குங்கமப்பூவே" பாடலில் பூஜாவின் நடன அசைவும்
அய்யோ பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது இந்த சில வினாடி காட்சிகளை
மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பவன், அது போல இந்த படத்திலும் மீண்டும் மீண்டும்
பார்க்க முனைந்த போது ஒவ்வொருமுறையும் பாதிப்படம் பார்த்துவிட்டேன்.
மன அழுத்தம், சோர்வு தாக்கும் நேரத்தில் இந்த படத்தை
பார்க்கும்போது ஒரு உற்சாகம் வருகின்றது .
18 பின்னூட்டங்கள்:
enna kuzali lyla kallu vangi kondu varathu..gold fisg parka odurathu...lollypop i shirt ila vachu kadichu kudikrathu..ithellathaium rasikalaya?
//enna kuzali lyla kallu vangi kondu varathu..gold fisg parka odurathu...lollypop i shirt ila vachu kadichu kudikrathu..ithellathaium rasikalaya?//
கள்ளு வாங்க நண்பனோட ஓட்டை டிவிஎஸ் 50 எடுத்துக்கொண்டு காலையில் 5 மணிக்கே சென்றதெல்லாம் ஞாபத்திற்கு வந்ததுதான், இப்படியே ஒவ்வொண்றாக எழுதினால் மொத்த படத்தையும் எழுத வேண்டியிருக்குமே எனத்தான் விட்டுவிட்டேன்...
//இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் நீண்ட நாட்களுக்குப்பிறகு
ஒரு நல்லப்படத்தை பார்த்த திருப்தி எனக்கு.//
எனக்கும் தான்.
இந்த வருடத்தில் வந்த படங்களுள் ஒப்பீட்டளவில் என்னைக் கவர்ந்த படம். (தலைகளை விடவும்).
திரைக்கதையமைப்பு மற்றும் இயக்கம் அருமையாக இருந்தது.
பதிவுக்கு நன்றி.
//என் தற்போதைய கனவுக்கன்னி அசின் இரண்டாம் கனவுக்கன்னி பூஜா இருவரும்....
இத, இந்த நேரம்பாத்து, ஒமக்கு வரப்போர மகராசி படிக்கனும்...
அப்புறம் ஒமக்கு இனி இந்த ஜென்மத்துல கனவு வராது :-)))
//லைலா... ஒரு விதமான கீலாத்தனமான //
இன்னாபா, தமிழ்ல ஒங்க நாட்டு பாஷைய (Gila!) கலந்து வுடுறே!
அப்புறம், தார் பூசுவோம்.. ஜாக்ரத ;-)
- ஞானபீடம்.
//இந்த நேரம்பாத்து, ஒமக்கு வரப்போர மகராசி படிக்கனும்...
அப்புறம் ஒமக்கு இனி இந்த ஜென்மத்துல கனவு வராது :-)))//
ஞானபீடம் அண்ணாத்தே அப்போ இதெல்லாம் படிக்க கொடுக்கக்கூடாது என்கிறீர்கள், அனுபவசாலி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியது தான், மறைச்சிடுவோம்...
////லைலா... ஒரு விதமான கீலாத்தனமான //
இன்னாபா, தமிழ்ல ஒங்க நாட்டு பாஷைய (Gila!) கலந்து வுடுறே!//
அய்யய்யோ கீலா என்பது ஆங்கில வார்த்தையா? என்ன செய்வது தமிழ் எது ஆங்கிலம் எது என்று பிரித்தறியா நிலைமையில் தமிழன் இருப்பது வேதனையாக உள்ளது, ஒரு தமிழ்குடிதாங்கியல்ல ஓராயிரம் தமிழ்குடிதாங்கி வேண்டும்போல உள்ளது...
ஆகா ஆரம்பிச்சிட்டான்யா என்று அடி போட வருபவர்கள் வாங்க வாங்க நான் கிளம்புறேன்...
யோவ், 'கீலா' -ன்னா, இந்த மலேசியா, சிங்கப்பூர்ல 'பைத்தியம்'-னு சொல்றாங்கய்யா! நீரு சிங்கப்புருலதானே இருக்கீரு?!
குழலி, சமீபத்தில் என்னையும் மிக பாதித்த திரைப்படம் இது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆனால் எல்லோருக்கும் பிடித்த படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பார்த்த அனைத்து நண்பர்களும், ரொம்ப ரசித்ததாகவே தெரிகிறது. உன்னைப்போலவே எனக்கும் லைலாவின் நடிப்பு ரொம்ப பிடித்திருந்தது.
-----FYI------
ராதிகா, பிரதாப் வுடன் நடித்த அந்த படம்..."மீண்டும் ஒரு காதல் கதை". அதில் வருகிற - இளையராஜாவின் "அதிகாலை நேரமே...இனிதான ராகமே..." பாடலை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன?
லைலா, பிரபுதேவாவுடன் நடித்த படம்... "அள்ளித்தந்த வானம்".
குழலி படத்தின் பெயரைக் கூறுங்கள். பார்க்க வேண்டும் போல் உள்ளது.
//குழலி படத்தின் பெயரைக் கூறுங்கள். பார்க்க வேண்டும் போல் உள்ளது. //
படத்தின் பெயர் "உள்ளம் கேட்குமே", நடிகர்கள் ஷாம்,லைலா,அசின்,பூஜா மற்றும் பலர்
//யோவ், 'கீலா' -ன்னா, இந்த மலேசியா, சிங்கப்பூர்ல 'பைத்தியம்'-னு சொல்றாங்கய்யா! நீரு சிங்கப்புருலதானே இருக்கீரு?! //
அதே அதே, ஆனா கடலூரிலும் கீலானா பைத்தியம்னு சொல்வாங்கோ
முற்றிலும் வித்தியாசமான தளத்தில் உங்களை பார்த்ததும் சந்தோசம் தலீவா. கொஞ்ச நாளைக்கு மாறுப்பட்ட தளத்தில் களமிறங்கு கலக்குங்க. 1 வாரம் லீவு போராடிக்காமா போச்சா?
அப்புறம் 'கேணச்சி' லைலாவின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடித்து போனது பிதாமகன் படத்தில். பிரபுதேவா படத்தில் கேணச்சி நடிப்புக்கு ட்ரெயினிங்க் பீரியடில் இருந்திருப்பார் என நினைக்கிறேன். அங்கு நடிப்பு அவ்வளவாக கவரவில்லை. இப்போ உள்ளம் கேட்குமே இன்னும் பார்க்கவில்லை. லைலாவுக்காகவும் இயக்குநருக்காகவும் பார்க்கவேண்டுமென உள்ளேன்.
'மீண்டும் ஒரு காதல் கதை' ராதிகாவையும் பிரதாப் போத்தனையும் மறக்கமுடியுமா? கேணையன் நடிப்பு என்றால் முதலில் மனதில் வந்து நிற்பது பிரதாப் போத்தன் தான்.
மனநோயாளிகளுக்கு ஆசிரியராக வரும் சாருஹாசன் சொல்லி தரும் பாடம் "லட்டு உருண்டை. பூமியும் உருண்டை" இந்த படத்தின் பாதிப்பு இன்னும் மனதில் மலருகிறது.
நல்ல பதிவு.
//இந்த வருடத்தில் வந்த படங்களுள் ஒப்பீட்டளவில் என்னைக் கவர்ந்த படம்.//
உண்மை
பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி
//1 வாரம் லீவு போராடிக்காமா போச்சா?
//
ஒரு வாரமா? 15 நாள் அண்ணாச்சி, 15 நாள்...
//தண்ணியின் தாக்கத்தை
தன்னுள்ளே வாங்கி
தள்ளாடினும் வாந்தியின்றி
எழுதிய பின்னூட்டம் வாழ்க//
இங்கே வலைப்பூக்களின் என்னமோ நான் மயக்கத்தில் எழுதுவதாக பின்னூட்டிக்கொண்டிருக்கும் என் தலைவர் முகமூடி அவர்களே என் சார்பு விளக்கத்தை கேளும்
அட மக்கா, நமக்கு அந்த பயக்கமில்லை மக்கா, என் பதிவின் பின்னூட்டத்திலே கள்ளு வாங்கப்போனதை எழுதினேனே அதை வைத்தா எழுதினீர், தப்பு மக்கா தப்பு, கள்ளு வாங்க கூடப்போனேன், ஏனென்றால் அந்த ஓட்டை டிவிஎஸ் 50 ய என்னாலும் என் நன்பனாலும் மட்டும் தான் ஓட்டமுடியும், அதனால நான் ஓட்டுனராக போனேன் அந்த டிவிஎஸ்50க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போடவேண்டுமென்ற நிபந்தனையோடு...
இது மாதிரி பின்னூட்டினால் ஏற்கனவே ஒரு முறை புதிய பமக என உடைந்த கட்சியை நான் புரட்சி பமக என்றோ மறுமலர்ச்சி பமக என்றோ மீண்டும் உடைக்க நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்...
// கள்ளு வாங்கப்போனதை எழுதினேனே அதை வைத்தா எழுதினீர் // -->> எளிதாக புரியும் படி பதிவிட்டுள்ளார் <<- என்று ஞானபீடத்தின் ஒரு பதிவை நீங்கள் புகழ்ந்திருக்கிறீர்கள்... ஞானபீடத்தின் எந்த பதிவையும் போதை இல்லாத நிலையில் புகழ்ந்து எழுத சுயநினைவில் யாராலும் முடியாது என்பதே மானமுள்ள 80 கோடி தமிழரின் கருத்து...
புதிய பமக (தொண்டர் பற்றாக்குறை காரணமாக) எப்போதோ தாய்க்கழகத்துடன் சேர்ந்துவிட்டது... அதன் தலைவரும் உபிசவும் போட்ட ஒரே கண்டிசன் : இணைந்ததை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்த கூடாது (அப்பதான் விஜய டிஆர் மாதிரி உதார் உடலாம்) என்பதே... நீங்களும் சொல்லிடாதீங்க
என் ரகசிய தொண்டர் Anand வழிமொழிய இருப்பது
தலைவர் முகமூடி அவர்களே :: நாங்கள் சொன்னது கண்ணிர் விட்டு... தனியே வச்சுகிற டீலிங்க எல்லாம் சபைல சொல்றீங்க...
ஏதாச்சும் போதை ஒன்னு
எப்போதும் தேவை கண்ணா
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே
தாய்ப்பாலும் போதை தரும்
சாராயம் போதை தரும்
ரெண்டையும் பிரித்தரிய புத்தி இல்லே
தாய்ப்பாலு போதை, சில மாதம் மட்டும்
சாராய போதை, நாம் வாழும் மட்டும்
போதை மாறலாம், உன் புத்தி மாறுமா
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா?
- 'அன்பே சிவம்' திரைப்படப் பாடலிலிருந்து.
- ஞானபீடம்
An advertisement:!
*** *** ***
ஒரு கச்சியும் வேணாம்...
ஒரு கொடியும் வேணாம்...
ஏ டாங்கு டக்கர.. டக்கர.. டக்கர
*** *** ***
குலுவாலிலே....
கச்சியெல்லாம்... நமக்கெதுக்கு...
காலத்தின் கையில் அது இருக்கு...
*** *** ***
காலத்தின் கட்டளையை நான் தள்ள மாட்டேன்!
இங்கே தான் இருப்பேன்.. ஓடிவிட மாட்டேன்!
*** *** ***
any problem? just one call!
saravana will appear!
*** *** ***
நல்ல பதிவு. நானும் படம் பார்த்தேன். நீண்ட தாமதத்துக்கு பின் வந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தது.
//கேணையாக நடிப்பதில் சிறந்தவர் யார்? லைலாவா ? ராதிகாவா?//
லைலாவே தான்..
Post a Comment