மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - 4
இதுவரை இந்த தலைப்பில் இதற்கு முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்
மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1
மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2
மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 3
நடிகர்களின் மீதான விமர்சனங்கள்
மற்ற சி(ப)ல அரசியல்வாதிகளைப்போல் குளிரூட்டப்பட்ட அறையிலே அமர்ந்து கொண்டு, பெரிய பணக்காரர்களோடும், தொழிலதிபர்கள், பண்ணையாளர்களின் ஆதரவோடும் அரசியல் செய்பவரல்ல மருத்துவர். செல்போனை தட்டினால் தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொண்டு வந்து கொட்டப்படும் நிலையும் இல்லை, நீரிழிவு மற்றும் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய அளவிலும் கிராமங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருபவர்தான் மருத்துவர்.
அப்படி சுற்றுப்பயணங்கள் சென்றபோது தமிழர்கள் முக்கியமாக இன்றைய இளைஞர்கள் திரைப்படம் என்ற மாயையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது, ஒரே ஒரு படிப்பகம் கூட இல்லாத குக்கிராமங்களில் கூட அரிதாரம் பூசும் பல நடிகர்களுக்கு ஆரத்தி எடுக்க ரசிகர்மன்றங்கள் இருந்தன, ஒவ்வொரு ஊரிலும் ரஜினி,விஜயகாந்த,கமல்,அஜீத்,விஜய் தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர் மன்றங்கள் என குறைந்த பட்சம் 7 ரசிகர்மன்றங்கள் இருக்கும், அருண்குமார் மற்றும் இன்னும் பல நடிகர்களின் மன்றங்களை கணக்கில் சேர்க்கவில்லை.
இளைஞர்களின் வாழ்க்கை,பலம் இப்படி வீணாவதை எண்ணித்தான் திரைப்படங்களின் பெயரால் நடிகர்கள் நிசத்தில் போடும் வேடங்களை கலைக்க குரல் கொடுத்தார், அது மாதிரியே திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதாவே தொடப்பயந்த ரஜினி என்ற மாயையை உடைத்து அவரின் உண்மை பலத்தை நாட்டுக்கும் புரியவைத்தார்.
ரஜினிகாந்த் பற்றிய சுந்தரமூர்த்தியின் பதிவையும், விஜயகாந்த் பற்றிய எனது பதிவையும் கீழ்கண்ட சுட்டிகளில் படியுங்கள்
நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?
இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்
இந்த மூன்று பதிவுகளும் இவர்களின் முகமூடியை கிழித்தெரியும்...
இதற்குமேல் இந்த இருவரைப்பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை
மற்ற எந்த ஊடகத்தையும் விட திரைப்பட ஊடகம் அதிக வலிமை வாய்ந்தது, குழந்தைகளைக்கூட பாதிக்ககூடிய ஊடகம், அப்படிபோடு போடு பாடலை முழுவதுமாக பாடிக்காட்டும் குழந்தையையும், சித்தப்பா விஜய் அங்கிள் சவால் சொல்றாரு என 3 வயது குழந்தையும் கூறும் பொழுது இந்த திரைப்படங்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என புரியவில்லையா? அந்த திரைப்படத்திலே சமூக பொறுப்போடும் தமிழ்ப்பற்றோடும் எடுங்கள் என கூறுவதில் என்ன தவறு?
கச்சத்தீவை ஏதேதோ காரணம் கூறி இலங்கையிடம் தாரைவார்த்தது இந்தியா, அதனால் இன்றும் மீனவர்கள் படும் துயரங்கள் எத்தனை எத்தனை, அந்த கச்சத்தீவை மீட்கப்போராடி கைதானவர்தான் மருத்துவர், ஈழத்தைப்பற்றி பேசினாலே ஏதோ தேசத்துரோக குற்றம் செய்தது போல விமர்சிக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் இன்றுவரை ஈழப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளிப்பவர், புலிகளை ஆதரித்து பேசியதற்காக பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டபோதும் கூட, புலித்தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டுவரவேண்டும் என தீர்மானம் சட்டசபையிலே கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க திமுக கூட பயந்து பின் வாங்கி நடுநிலை எனக்கூறியது, அப்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து தீர்மானத்தை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கான தார்மீக ஆதரவை தெரிவித்தனர், தமிழ் பெயரைச்சொல்லி யாரும் தமிழகத்திலே அரசியல் செய்யமுடியாது, தமிழ்ப்பெயரைச்சொல்லி யாராலும் ஒரு வாக்குகூட கூடுதலாகப்பெறமுடியாது, அந்த காலம் மலையேறிவிட்டது, மருத்துவரின் போராட்டம் தமிழின்,தமிழினத்தின் மீதான பற்றுதலாலொழிய அரசியலால் அல்ல, ஆனால் அவரது தமிழ் போராட்டங்களை கொச்சை படுத்திக்கொண்டுள்ளனர் பலர், இதில் பலருக்கு கர்னாடகவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வருபவர்கள் தமிழர்களை இரட்சிக்கப்போவதாக கனவு வேறு.
மருத்துவர் இராமதாசு மற்ற அரசியல்வாதிகளைப்போல அன்போடு ஆரத்தழுவுவதுபோல முதுகிலே கத்தியை இறக்குபவர் அல்லர், அடுக்கு மொழியிலே அழகுத்தமிழிலே நயமாக பேசும் அரசியல்வாதியல்ல, கேமராவின் முன்னால் மட்டுமல்லாமல் எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் நடிக்கும் மனிதர்களுக்கிடையில் மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லும் குணம் படைத்தவர், ஆதரித்தால் பலமாக ஆதரிப்பதும் எதிர்த்தால் பலமாக எதிர்ப்பதும் இவரது இயல்பு, நாளை இவரோடு கூட்டணி வைத்தால் என்ன செய்வது, இவரை ஆதரித்தால் என்ன செய்வது என எண்ணி பசப்பு மொழிகள் பேசி கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுபவர் அல்ல, இவருடைய பேச்சும்,செயல்களும் அதிரடியாக இருக்கும், இதுதான் இவருடைய மிகப்பெரிய பலம், மிகப்பெரிய பலவீனமும் கூட, இவருடைய இந்த அதிரடிப்பேச்சினால் தான் செல்வி.ஜெயலலிதாவும், திரு.கருணாநிதியும் மோதிப்பார்க்க பயந்த ரஜினியுடன் மோதி ரஜினிக்கு இருந்த மாய பலத்தினை உடைத்தெறிந்தவர், இது தமிழினம் மறுமொரு நடிகரால், வேற்று மாநிலத்தவரால் ஆளப்படாமல் தப்பித்தது, இது மருத்துவர் இராமதாசினால் அடைந்த மிகப்பெரிய பலன். அதிமுகவோடு கூட்டணியைப்பற்றி மருத்துவர் கூறிய கருத்துகள் எமக்கு மிக அதிர்ச்சியை தந்தன.இந்த பேச்சுதான் அவருடைய பலவீனம், ஒரு தேர்ந்த அரசியல்வதிக்கான அரசியல் தந்திரம் (நயவஞ்சகம்?) அவரிடமில்லை, மனதில் பட்டதை நேரம் காலம் தெரியாமல் பேசுவது அவருடைய பலவீனம்.
முக்கியமான கேள்விக்கு வருவோம்,
ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?
பத்தாம் வகுப்பு(மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே, இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும், இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி... இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப்போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.. இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.
இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.... வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன.... ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்...
ஆனால் சிறிது சிறிதாக இந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது, எப்போதும் பா.ம.கவையும் மருத்துவரையும் கடுமையாக தாக்கிக்கொண்டுவந்த குமுதமும் விகடனும் தற்போது கண்மூடித்தனமான போக்கை சிறிது மட்டுப்படுத்தியுள்ளன... ஆனால் தினமலர் இன்னும் கண்மூடித்தனமான தாக்குதலை பாமகவின் மீது தொடர்கின்றன...
மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை.... பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது...
பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம்
எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை....
ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்
1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும்
கடும் வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...
குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...
எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றோம்...
பொதுவாக சொல்லப்போனால் பா.ம.கவின் மீதும் இராமதாசுவின் மீதுமான மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போல விமர்சிக்காமல் கண்மூடித்தனமாக மிகக்கடுமையான விமர்சனம் செய்வதற்கு காரணம் பொறாமை, இயலாமை, அறியாமை ஆகிய மூன்று ஆமைகள் தான்....
உதிரம் சிந்தி
உயிர் கொடுத்து
பெற்றதிந்த
பாதுகாப்பு
சொந்த நாட்டிலும்
சொந்த ஊரிலும்
சூறாவளியில்
மாட்டிய
வைக்கோல் போராய்
சுற்றி சுற்றி
அடிக்கப்பட்டபோது
சுதந்திரமும் இல்லை
இங்கே
மனித உரிமையும்
மாய்ந்து விட்டன
இங்கே
வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்
இன்று
வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்
அன்று
பதறித்துடித்தபோது
பதுங்கிவிட்டன
பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு
பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு
எப்போதடா வாய்ப்பு
கிடைக்கும்
வாய்ப்பூட்ட போடலாம்
என காத்திருக்கும்
கழுகுகளே
உம் வாயில் மொத்தமும்
மண் தான்...
பார்வைகள் மாறுகின்றன...
பார்ப்பவர்களும் மாறுகின்றனர்...
காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...
பார்வைகள் மாறி
பாராளும் காலம்
போய்...
பாராளும் காலத்தில்
பார்வைகள் மாறுகின்றன...
ஒரே இரவில்
உயர்வு தேட
நாங்கள் ஒன்றும்
அது... அல்ல
ஒரே இரவில்
காட்சி மாற
இது ஒன்றும்
கனவு தொழிற்சாலை
அல்ல
காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...
மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்
அதுவரை வரும்
தீய்ந்த
வாசனைகளுக்கு
பதில் தர
அலுத்துப்போய்...
மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்
உயிர் ஈந்து எங்களை வாழ வைத்த தியாகிகளின் பாதம் தொட்டு இந்த பதிவுகளை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்...
44 பின்னூட்டங்கள்:
மெட்டி ஒலி சீரியல் இத்தோட முடியுதாம்.
கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமல் பா.ம.க. மட்டும் நின்றிருந்தாலும், அல்லது ஜெ.வின் மீது எதிர்ப்பலைகள் இல்லமல் போயிருந்தாலும் ரஜினியின் மீதான பா.ம.கவின் நிலைப்பாடை தமிழக மக்கள் இன்னும் ஓ.கோ.வென ஆதரித்திருப்பார்கள், இல்லையா குழலி சார்?!
அரசியலில் வெட்கம் கெட்டு கட்சி மாறிய்வர்கள் பலருண்டு ..'நிரந்தர பகைவர், நண்பர்....' மொழி பேசி தாவும் ஜெ, நேருவின் மகளிடமும், இத்தாலிய மருமகளிடமும், பூசாரிகளிடமும் தாவும் கருணாநிதியும், கம்னியூஸ்ட், காங்கிரஸ், மற்ற திராவிட மற்றும் ஜாதி கட்சிகள் என எல்லாமே விதி விலக்கற்று அந்த தாவுதலை செய்துள்ளன ..
ஆனால் இவர்களுக்கும் ராமதாசுக்கும் உள்ள வேறுபாடு.. ' அ தி மு க வுடன் இனி எந்த காலத்திலும் உடன்பாடு கொள்ளமாட்டேன்..' என கூறியபோது அவர் கூறிய உதாரணம் எந்த நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் சொல்ல கூசும் வசனம் . பின்னர் '(தன் தாயையே கேவலப்படுத்தும் விதமாக) ஜெயுடன் கூட்டணி வைத்தது மகா மகா கேவலம் என்பதை ..நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
எங்கள் கேள்விகளுக்கு பதில் எப்போது வரும்??
இதனை ஒத்த மற்ற பதிவுகள்..
http://lldasu.blogspot.com/2005/05/part-i.html
http://lldasu.blogspot.com/2005/06/blog-post_09.html
//கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமல் பா.ம.க. மட்டும் நின்றிருந்தாலும், அல்லது ஜெ.வின் மீது எதிர்ப்பலைகள் இல்லமல் போயிருந்தாலும் ரஜினியின் மீதான பா.ம.கவின் நிலைப்பாடை தமிழக மக்கள் இன்னும் ஓ.கோ.வென ஆதரித்திருப்பார்கள், இல்லையா குழலி சார்?!
//
கூட்டணிப்பற்றி பின் வரும் சுட்டியில் கூறியுள்ளேன்... மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2
இதற்கு மேலும் பதில் தரும் நிலையில் நானில்லை....
//அதிமுகவோடு கூட்டணியைப்பற்றி மருத்துவர் கூறிய கருத்துகள் எமக்கு மிக அதிர்ச்சியை தந்தன.
இந்த பேச்சுதான் அவருடைய பலவீனம்//
தாஸீ பதிவில் படிக்கவில்லையா மேலே உள்ள வரிகளை
பின்னூட்டமிடுபவர்கள் தயவு செய்து உங்கள் பெயரையும் எழுதுங்கள் இங்கே ????? ஆக பெயர்கள் எல்லாம் தெரிகின்றன... ஒவ்வ்வொருமுறையும் புரஃபைல் சென்று பார்க்க வேண்டியுள்ளது
பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில் நீஙளும் 'மேற்படி' பாயிண்ட்டில் தான் கை வைக்கிறீர்கள் குழலி. பா.ம.க.என்ன விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட கட்சியா என்ன? அப்படி விமரிசித்தால் உடனே மருத்துவரை பார்த்து பார்ப்பனர்கள் வயிறெரிகிறார்கள் என்று உலக மகா ஜோக்கை உதிர்க்கிறீர்கள். அரசியல்வாந்திகளில் படித்தவர் என்பதினால் ராமதாஸின் மீது மதிப்பு வந்தது எல்லாருக்கும் தான். ஜாதிக்கட்சி என்பதை விட அவரின் மேலே தனியாக எல்லாரும் கவனம் வைத்தது இந்த காரணத்திற்காகத் தான். உங்கள் பதிவில் நீங்கள் தொடாமல் விட்ட விஷயங்கள் பல. நன்கு செயல் பட்ட பழைய ரயில்வே துறை அமைச்சருக்கு இப்போது சீட் வழங்காதது முதற்கொண்டு, எங்கள் குடும்பத்தில் யாரும் பதவிக்கு வந்தால்______ என்று வீர வசனம் பேசியதிலிருந்து, எங்கள் மக்கள் உறுப்பினர்கள் தவறு செய்தால் சாட்டையால் அடிக்கலாம் என்று உளறியது வரை!!! பா.ம.க.வின் ஓட்டு வங்கி, ஓட்டு வங்கி என்று கூறிக் கொண்டிருக்கிறீர்களே.. அது என்னவென்ற புள்ளி விபரத்தை நீங்கள் தர இயலுமா?! கூட்டணிக் கட்சியினரின் ஓட்டுகளையும், ஆள்பவர்களின் மீதான வெறுப்புக்களையும் வைத்து மக்கள் ஓட்டு போட்டதை வைத்து ஓட்டு வங்கி என்று கூறுவது நியாயமா?! அப்படிப்பட்ட ஓட்டு வங்கியினால் தான் உங்களது சின்னம் ஒரு முறை பறி போனதோ?!
//இதனை ஒத்த மற்ற பதிவுகள்..//
தாஸீ உம்ம குசும்புக்கு அளவேயில்லையா எவ்வளவு கடினப்பட்டு எழுதுகிறேன்...
நக்கல் செய்து கொண்டு...
வாருமைய்யா நேரில் அப்போது வைத்துக்கொள்கிறேன் கச்சேரியை :-)
//இதனை ஒத்த மற்ற பதிவுகள்..//
தாஸீ உம்ம குசும்புக்கு அளவேயில்லையா எவ்வளவு கடினப்பட்டு எழுதுகிறேன்...
நக்கல் செய்து கொண்டு...
வாருமைய்யா நேரில் அப்போது வைத்துக்கொள்கிறேன் கச்சேரியை :-)
பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
சரி குழலியாரே... இவ்வளவு கொள்கைப்பிடிப்புடன் இருக்கும் மருத்துவரை 'அருகிலிருந்து' பார்க்கும் நீங்கள் ஒன்றை அறுதியிட்டு கூறுங்களேன்... பா.ம.க. வரும் சட்டசபைத் தேர்தலிலும், அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் எந்தக் கூட்டணியில் என்ன கொள்கையுடன் இருப்பார்?!
- மாயவரத்தான்.. (இனிமே டோண்டு சார் மாதிரி எல்லாரும் பின்னாடியே பேரு, வெலாசமெல்லாம் எழுதணும் போல!)
//பா.ம.க.என்ன விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட கட்சியா என்ன? //
யார் அப்படி சொன்னது....?
நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், மற்ற கட்சிகளையும் கட்சித்தலைவர்களயும் விமர்சிப்பது போலவா பா.ம.க. வையும் இராமதாசுவையும் விமர்சிக்கின்றனர், இல்லையே மிகக்கடுமையாகவும் கண்மூடித்தனமாகவும் அல்லவா விமர்சிக்கின்றனர்....
அதுவுமின்றி "ஆஃப் த ரெக்கார்ட்" என தலைவர்கள் நிருபர்களிடம் பேசுவது ஒரு சாதாரணமான வழமையான ஒன்று... பத்திரிக்கை தர்மப்படி "ஆஃப் த ரெக்கார்ட்" ஆக பேசப்படுபவைகள் வெளியிடப்படமாட்டாது...
அந்த நேரத்தில் சொந்த தலைவர்களையே கிண்டலடித்தெல்லாம் கூட பேசிக்கொள்வார்கள்... ஆனால் "ஆஃப் த ரெக்கார்ட்" ஆக கூறிய கருத்தை பத்திரிக்கையில் வெளியிட்டதன் நோக்கமென்ன... பாமகவின் மீதும் மருத்துவரின் மீதுமான காழ்ப்புணர்ச்சி என்பதைத்தவிர வேறொன்றும் எமக்குத்தெரியவில்லை...
பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
//பா.ம.க. வரும் சட்டசபைத் தேர்தலிலும், அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் எந்தக் கூட்டணியில் என்ன கொள்கையுடன் இருப்பார்?!
//
எந்த கூட்டணி என்பதை எம்மால் சொல்லமுடியாது... அது சரி இதே கேள்வியை மற்ற கட்சிகளிடம் கேட்டால் தெரிந்துவிடுமா என்ன??
ஒன்று மட்டும் சொல்வேன் திமுகவும் அதிமுகவும் மாநிலத்திலும் காங்கிரசும் பாஜகவும் மத்தியிலேயும் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்பதைத்தவிர ஏதேனும் கூட்டணிப்பற்றி யாரேனும் உறுதிமொழித்தரமுடியாமா?
எமக்கு தெரிந்தவரை கொள்கைகள்
பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம், ஏற்றத்தாழ்வில்லா சமூகம் அமைத்தல், தமிழ் மொழி வளர்ச்சி... மீதியை வேண்டுமானால் தேர்தல் அறிக்கையை வாங்கிப்படித்து சொல்கின்றேன்
பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
பத்திரிகைகள் அவரை விமரிசிப்பது இருக்கட்டும். அவர் பத்திரிகைகளை பொது மேடையிலேயே எப்படி தரம் தாழ்ந்து விமரிசிக்கிறார்?! தமிழ்நாட்டுக்குள்ளேயே பத்திரிகைக்கார பயலுங்களை விடக்கூடாது என்று பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக பேசியவராயிற்றே அவர். எனவே பத்திரிகைகள் அவரை கடுமையாக சாடுவதில் தப்பில்லை. பத்திரிகைகள் அப்படி எழுதுவதால் தான் அவர் அப்படி செய்கிறார் என்று நொண்டிச்சாக்கு வேண்டாம். அப்படியென்றால் அவரும் ஒரு சராசரி 'அரசியல்வாந்தி' தான் என்று ஒத்துக் கொள்ளுங்கள். அது சரி.. வன்னியர் சங்க போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினரின் இன்றைய நிலை என்னவென்று கொஞ்சம் சொல்ல முடியுமா குழலி சார்?!
- மாயவரத்தான்...
//பா.ம.க.வின் ஓட்டு வங்கி, ஓட்டு வங்கி என்று கூறிக் கொண்டிருக்கிறீர்களே.. அது என்னவென்ற புள்ளி விபரத்தை நீங்கள் தர இயலுமா?!//
முதல் பதிவில் பாருங்கள் தனித்து நின்றபோது பெற்ற வாக்குகளைப்பற்றி சொல்லியிருக்கின்றேன்...
//ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என உதயசூரியனுக்கு ஓட்டே போடாதா வன்னிய இனப்பெண்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்தனர். இது பாமக வை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது மாநிலகட்சி என்கின்ற தகுதி இழப்பும் யானைசின்ன இழப்பும் நடந்தது.
//
//எமக்கு தெரிந்தவரை கொள்கைகள்
பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம், ஏற்றத்தாழ்வில்லா சமூகம் அமைத்தல், தமிழ் மொழி வளர்ச்சி//
ஆகா... இதுவரை இந்தப் பதிவுகள் நிஜமாகவே நீங்கள் சீரியஸாக எழுதுகிறீர்கள் என்று எண்ணியிருந்தேன். இப்போது தான் தெரிகிறது எல்.எல்.தாஸ் எழுதியதை உங்களுக்கு மின்னஞ்சல் செய்து நீங்கள் எடுத்து போட்டிருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. (யோவ்.. எனக்கு அப்படி எழுதத் தெரியாதுன்னு சொல்றியா அப்படீன்னு குழலி பல்லை நற நறன்னு கடிப்பது தெரிகிறது!)
- மாயவரத்தான்...
// பத்திரிகைகள் அப்படி எழுதுவதால் தான் அவர் அப்படி செய்கிறார் என்று நொண்டிச்சாக்கு வேண்டாம்//
அது நொண்டிச்சாக்கு அல்ல... உண்மையே அது தான்....
//வன்னியர் சங்க போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினரின் இன்றைய நிலை என்னவென்று கொஞ்சம் சொல்ல முடியுமா குழலி சார்?!
//
எல்லா குடும்பங்களும் ஏற்கனவே பாமகவினால் தத்தெடுக்கப்பட்டுள்ளன... உயிரிழந்தவர்களின் இழப்பை எதனாலும் சரி செய்ய முடியாது....
பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
தொகுதிப்பங்கீடும் ஒரு முக்கிய காரணி... ஆனால் தொகுதிப்பங்கீட்டிற்காக பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம், ஏற்றத்தாழ்வில்லா சமூகம் அமைத்தல், தமிழ் மொழி வளர்ச்சி என்பதில் பாமக சமரசம் செய்யாது.... என்பதை நான் உறுதியாகக்கூறுகின்றேன்...
பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
உயிரிழந்தவர்களின் இழப்பை எதனாலும் சரி செய்ய இயலாது என்பது உண்மை தான். ஆனால் ததெடுத்துள்ளார்கால் என்று பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி? ரஜினி தனது திருமண மண்டபத்தை அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருக்கீறார் என்பதற்கு அதில் யார் யார் இருக்கிறார்கள், இவ்வளவு நாள் வந்த வருமானமெல்லாம் எங்கே போயிற்று என்றெல்லாம் கேள்விக்கணைகளால் வறுத்தெடுத்த நீங்கள், மேற்படி தியாகிகளின் குடும்பத்தினரை எந்த விதத்தில் தத்தெடுத்தார்கள், என்னென்ன கைமாறு செய்ய்திருகிறீர்கள் என்றெல்லாம் 'ஆதாரத்துடன்' பட்டியலிட முடியுமா குழலி சார்?! (அது சரி.. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போதெல்லாம் மேற்படி குடும்பத்தினர் யாருக்காவது சீட் ஒதுக்கலாமே... தனக்கு அடுத்த வாரிசாக தியாகிகளின் குடும்பத்தில் யாருமே இல்லையா?! அவர்களும் உங்கள் கூற்றுப்படி முதுகில் குத்துவார்களோ?!)
- மாயவரத்தான்...
// ஆனால் தொகுதிப்பங்கீட்டிற்காக பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம், ஏற்றத்தாழ்வில்லா சமூகம் அமைத்தல், தமிழ் மொழி வளர்ச்சி என்பதில் பாமக சமரசம் செய்யாது.... என்பதை நான் உறுதியாகக்கூறுகின்றேன்...//
இந்த மேட்டரில் மீண்டும் மீண்டும் ஜோக்கடிக்க வேன்டாம் குழலி.. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விலிருந்து ஒரே நாளில் அ.தி.மு.க. கூட்டணிக்கு தாவினாரே.. அப்போது மேற்படி என்ன காரணத்துக்காக தாவினார் என்று கூற இயலுமா?! (நான் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நிதானமிழக்காமல் பதில் அளிப்பதற்கு (பதில் கப்ஸாவாக இருந்தாலும்!)நன்றி குழலி சார்!)
//அது சரி.. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போதெல்லாம் மேற்படி குடும்பத்தினர் யாருக்காவது சீட் ஒதுக்கலாமே...//
எமக்கு தெரிந்து ஒரு குடும்பத்தின் உறுப்பினர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார், உங்களுக்கு மேலதிக தகவல் வேண்டுமெனில் ஊருக்கு சென்று வரும்போது கேட்டு சொல்கின்றேன்....
தனி மடலில் அனுப்புகின்றேன்... இதைப்பற்றி மேலும் விவரங்கள் சொல்வது அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவது போன்றது... என நான் கருதுகின்றேன்
//சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விலிருந்து ஒரே நாளில் அ.தி.மு.க. கூட்டணிக்கு தாவினாரே.. //
இதில் என்ன தவறு இருக்கின்றது என மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள் எனப்புரியவில்லை... அதிமுக அதிக தொகுதி கொடுத்தது உண்மை அதற்கு விலையாக பாமக நான் கூறிய எந்த கொள்கையில் விட்டுக்கொடுத்தது....
பின்னூட்டமிட்டவர் - குழலி
ஓ...குழலி... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. இப்படி அவர்களுக்கு செய்யப்பட்ட பதில் மரியாதைக்கு தேடிப்பிடித்து ஏதும் செய்ய வேண்டியிருக்கீறதே.. இதை கூற நீங்கள் யோசிக்கும் போது உங்களுக்கு மனதின் ஓரத்தில் எதுவும் ரணம் தெரியவில்லையா?! அவர்களது இப்போதைய நிலையைப் பற்றி இப்போது கூற என்ன தயக்கம்?! அதில் என்ன தவறு இருக்கிறது?! ஒரு ஜாதி சங்க போராட்டத்தில் தெரியாமல் தங்கள் இன்னுயிரை நீத்த அவர்கள் உண்மையிலேயே தியாகிகள் தான். இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு உங்கள் கட்சியிலும் எந்த விதமான மரியாதையும் செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காவது ஆங்காங்கே மண்டபங்களுக்கும், மேம்பாலங்களுக்கும், கட்டடங்களுக்கும் பெயரை வைத்து மரியாதை செய்தார்கள்.
ஆனால், இங்கு?!
//அதற்கு விலையாக பாமக நான் கூறிய எந்த கொள்கையில் விட்டுக்கொடுத்தது//
அது சரி.. உண்மையிலேயே கொள்கைப்பிடிப்போடு தான் கூட்டணியில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறார் மருத்துவர். அடப்போங்க குழலி சார்.. தமாசு... தமாசு..!!
//ஆனால் அவர்களுக்கு உங்கள் கட்சியிலும் எந்த விதமான மரியாதையும் செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
//
எதை வைத்து இப்படி கூறுகின்றீர்கள்... எனக்கு இதுவரை தெரிந்த தகவல்களை தனியாக மின்னஞ்சலில் வேண்டுமானால் சொல்கின்றேன்... இங்கே அல்ல... அதை சொல்ல நான் விரும்பவும் அல்ல...
//இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காவது ஆங்காங்கே மண்டபங்களுக்கும், மேம்பாலங்களுக்கும், கட்டடங்களுக்கும் பெயரை வைத்து மரியாதை செய்தார்கள். //
தாங்கள் மாயவரம் தானே ... சென்னையிலிருந்து மாயவரம் செல்லும் வழியில் ஆலப்பாக்கத்திலும் ஆங்காங்கேயும் போராட்ட தியாகிகளின் நினைவுத்தூண்களை பார்த்ததில்லையா நீங்கள்?
மேலும் தியாகிகளின் உயிர் பிரிந்த அதே இடத்தில் தூண்களை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் வன்னிய சமுதாயம் அந்த தியாகிகளின் தியாகத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது,
பாமகவின் பயிலரங்குகளின் பெயர்களில் தியாகிகள் உள்ளனர்...
ஜிப்மர் மருத்துவமனைக்கு பெயர் மாற்றினால் விட்டுவிடுவீர்களா??
இனி இது சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை...
மேலும் இந்த பதிவுகளே அலசி ஆராய்ந்து எல்லா உண்மைகளும் தெரிந்தாலும் ஒரு விதமான prejudice மனப்பாண்மையிலிருப்பவர்களுக்கானது அல்ல...
பத்திரிக்கைகளின் காழ்ப்புணர்ச்சியால் ஊடகங்களின் வன்முறையினால் மாறுபட்ட கருத்துக்கொண்ட நடுநிலைமையாளர்களுக்கு எங்கள் கருத்தை சொல்லும் ஒரு தளம்....
அவ்வளவே...
குழலி.. இது தப்பித்து போகப்பார்க்கும் மனப்பாங்கு.
இருந்தாலும் பரவாயில்லை. நானும் இதை மேலும் வளர்க்க விரும்பவில்லை. நீங்கள் இந்தப் பதிவுகளின் மூலம் 'பா.ம.க.வும் மற்ற் கட்சிகளைப் போல சராசரி கட்சி தான்' என்று சொல்ல முன் வருவீர்களானால், நான் கேட்ட அத்தனை கேள்விகளையும் வாபஸ் வாங்கிக் கோல்கிறேன். அப்படியில்லாமல், 'மற்ற கட்சிகளைப் போல பா.ம.க. அல்ல. இது ஒரு கொள்கைப்பிடிப்புள்ள கட்சி' என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வீர்களேயானால் அனைத்து கேள்விகளுக்கும் வெளிப்படையாக நீங்கள் எதிர் கொள்ளத்தான் வேண்டும்.
உயிரிழந்த தியாகிகளின் பெயர்களை வைத்து நினைவுத்தூன் வைத்ததோடு அவர்களுக்கான மரியாதை போதும் என்று நினைக்கிறிர்களா? அவர்களது வாரிசுகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற பதவிகளை தரலாமே என்று கேட்டேன். பதில்லில்லை.
பா.ம.க. மீது எனக்கு தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி எதுவுமில்லை. தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். ரஜினி மீது கடும் தாக்குதல் தொடர ஆரம்பத்தில் இருந்து தான் மருத்துவர் மீது நானும் பார்வை செலுத்த ஆரம்பித்தேன். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் தேர்தலுக்கு முன்னால், "சூப்பர் ஸ்டாருடன் பேசியாகி விட்டது.. சமாதானம் பண்ணியாச்சு" என்றெல்லாம் வெளிப்படையாக பேட்டியெல்லாம் கொடுத்தாரே அன்புமணி. அதையெல்லாம் என்னவென்று சொல்வீர்கள்?!
இப்படி கேள்விகள் ஆயிரம் நாங்களும் கேட்க முடியும். ஆனாலும் போதும் என்று இத்துடன் நானும் நிறுத்திக் கொள்கிறேன். வேறு விஷயங்களில் நம் கவனத்தை திசை திருப்புவோமா?!
மக்களோட லொள்ளுக்கு அளவேயில்லாம போய்டிச்சி பாருங்க.. இப்போ 'பெயர் வெளியிட விரும்பாத' ஒரு வலைப்பதிவரிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் ஒண்ணு வந்திருக்கு... 'குழலி பதிவுக்கு மட்டும் 25 பின்னோட்டமா? என்னோட பதிவுக்கும் வந்து சண்டை போட்டு குறைந்தபட்சம் 50 பின்னோட்டமாவது தரவும்.. வேண்டுமானால் நான் ரஜினியையோ, பிராமணர்களையோ திட்டி ஒரு பதிவு போடட்டுமா?' - எப்படி இருக்கு பாருங்க இந்தக் கொடுமை! யோவ்... நக்கலா?!
//மக்களோட லொள்ளுக்கு அளவேயில்லாம போய்டிச்சி பாருங்க.. இப்போ 'பெயர் வெளியிட விரும்பாத' ஒரு வலைப்பதிவரிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் ஒண்ணு வந்திருக்கு... 'குழலி பதிவுக்கு மட்டும் 25 பின்னோட்டமா? என்னோட பதிவுக்கும் வந்து சண்டை போட்டு குறைந்தபட்சம் 50 பின்னோட்டமாவது தரவும்.. வேண்டுமானால் நான் ரஜினியையோ, பிராமணர்களையோ திட்டி ஒரு பதிவு போடட்டுமா?' - எப்படி இருக்கு பாருங்க இந்தக் கொடுமை! யோவ்... நக்கலா?!//
இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.... யார் அவரு இட்லிக்கு பின்னூட்டம் போட்ட மாதிரி போட்டு தாக்கிடுவோம்...
- குழலி
எச்சரிக்கை ...
மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் .. தொடரை இதனுடன் முடிக்கவேண்டும்... இன்னும் தொடர்ந்தால், ஓ.பன்னீர்செல்வமும் ஊடக வன்முறைகளும், பகுதி-2யை பதிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்
தாசு.. பரவாயில்லை.. இதையே 4 தொடர் வரை படித்திருக்கிறோம். எனவே இதற்கு முன்னால் உம்முடைய தொடரெல்லாம் ஜுஜுபி என்று தெரியும். தைரியமிருந்தால், உங்க ஆளுடைய மாபெரும் சாதனைகளை இப்படி 4 தொடர் வரை இழுத்து வாருங்களேன் பார்ப்போம். (குறிப்பு : சாதனைகள் என்றால் எப்படி என்ற கேள்வி எழுந்தால், மேலே உள்ள 4 தொடரையும் மீண்டுமொருமுறை படித்து பார்க்கவும்!)
- மாயவரத்தான்...
//ஆனால் அவருடைய அற்பனிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்
//
ஒப்புக் கொள்கிறேன் !!!
//உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...
//
இது வன்முறை நோக்குடைய கூற்று போல் தோன்றுகிறது. வன்னியர் என்ன, இது எல்லா சாதிகளுக்கும் பொருந்தும் தானே ? தேவர் மீதோ நாடார் மீதோ வன்முறையை கட்டவிழ்த்து விட்டால், அவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன ? பொங்கியெழ மாட்டார்களா ?
//ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கு இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...
//
அது அல்ல காரணம் என்றால் நீங்கள் எப்படியும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை ;-)
//பாமகவின் மீதும் மருத்துவரின் மீதுமான காழ்ப்புணர்ச்சி என்பதைத்தவிர வேறொன்றும் எமக்குத்தெரியவில்லை...
//
அப்பாடா நிம்மதி, உங்களுக்கு வேறேதாவது தோன்றினால் தான் பிரச்சினையே !!! உங்களை பா.ம.க வின் வலையுலக கொ.ப.செ-வாக நினைப்பதை விட ஐயாவின் PRO மற்றும் பெர்சனல் செகரட்டரி ஆகவும் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் !! இப்படிப்பட்ட "லாயல்டி" பாமக-வின் தீவிர தொண்டனிடம் கூட இருக்காது. நன்றி.
//பா.ம.க வின் வலையுலக கொ.ப.செ-வாக நினைப்பதை விட ஐயாவின் PRO மற்றும் பெர்சனல் செகரட்டரி ஆகவும் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் !! //
இதை எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள் எனப்புரியவில்லை? நகைச்சுவைக்காக நட்பு ரீதியில் சொல்லியிருப்பீர் என எண்ணுகின்றேன்...
////பா.ம.க வின் வலையுலக கொ.ப.செ-வாக நினைப்பதை விட ஐயாவின் PRO மற்றும் பெர்சனல் செகரட்டரி ஆகவும் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் !! //
இதை எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள் எனப்புரியவில்லை? நகைச்சுவைக்காக நட்பு ரீதியில் சொல்லியிருப்பீர் என எண்ணுகின்றேன்...
//
ungkaLai pArAtti allavA irukkiRen ;-)
தீய்ந்த வாசனையை தேடி மெதுவாக ஊர்ந்து செல்லும் விளம்பர ஆமை சொல்கிறது :: இன்று முதல் தமிழகத்தை மாற்ற உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி
பாமக என்பது மற்ற கட்சிகளைப் போல ஒரு கட்சிதான். அவ்வளவே. குழலிக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் அதைப் பாராட்டுகிறார். அதை எதிர்ப்பவர்களை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார். ( எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்களோ )
குழலி உங்கள் கருத்தை மதிக்கிறோம். அவ்வளவே!
//பாமக என்பது மற்ற கட்சிகளைப் போல ஒரு கட்சிதான். அவ்வளவே. குழலிக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் அதைப் பாராட்டுகிறார். அதை எதிர்ப்பவர்களை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார். ( எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்களோ )
//
கண்மூடித்தனமாக நான் பாமகவை எங்கும் பாராட்டவில்லை, பாமகவின் மீதான் காழ்ப்புணர்வான விமர்சனங்களைத்தான் எதிர்க்கின்றேன்....
பத்திரிக்கைகள் உருவாக்கிய எதிர்மறை எண்ணங்களை கொண்டுள்ளோர்களிடம் என் கருத்தை சொல்கின்றேன்...
பாமகவை தீண்டத்தகாத கட்சி மாதிரியும் பாமக வை காழ்ப்புணர்ச்சியோடு திட்டிக்கொண்டு திரிந்தவர்களுக்கு மறுப்பு கொடுத்துள்ளேன்....
அவ்வளவே... எங்கேயாவது எல்லோரும் பாமகவை பின்பற்றுங்கள், பாமக தான் உலகிலேயே சிறந்த கட்சி என்று கூறியுள்ளேனா?
பாமக தரப்பு நியாயங்களை எடுத்துரைத்துள்ளேன்.... அதுவும் கடுமையான விமர்சனமின்றி.... கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல்....
நான் தமிழ்மணத்தில் உலவுவதற்கு முன் வந்த பல பதிவுகளை படித்துக்கொண்டுள்ளேன், அதில் எத்தனை எத்தனை பதிவுகளில் பாமகவின் மீதான காழ்ப்புணர்வை பார்த்தேன், ஆனால் ஆமாம் சாமி போடத்தான் ஆளிருந்ததே தவிர பதில் சொல்ல ஆளில்லை....
இப்படியாக ஆளில்லாத மைதானத்தில் மருத்துவரை தாக்கி கோலடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது கடினமாகிவிட்டது, அந்த எரிச்சல் முகமூடி களாக வெளிவருகின்றது...
//எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்களோ //
நல்லவேளை ராகவன் சார் நீங்களாவது பாமகவை கண்மூடித்தனமாக சிலர் எதிர்க்கிறார்கள் என ஒத்துக்கொண்டீரே நன்றி
ராகவன் : எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்களோ
குழலி : நல்லவேளை ராகவன் சார் நீங்களாவது பாமகவை கண்மூடித்தனமாக சிலர் எதிர்க்கிறார்கள் என ஒத்துக்கொண்டீரே நன்றி
ராகவன் : குழலி பாமகவை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் சொன்னதைத்தான் நான் சொல்லியிருந்தேன். அது என் கருத்தல்ல. என் விஷயத்தில் பாமக என்பது சராசரி அரசியல் கட்சிதான். மற்ற கட்சிகளைப் போல. அவர்களது சில செயல்பாடுகளில் எனக்கும் உடன்பாடு கிடையாது. பாமகவை ஆதரிப்பது உங்கள் கருத்து. அதை நான் கண்டிப்பாக மதிக்கிறேன்.
உங்களது விளக்கத்திற்கும் புரிதலுக்கும் நன்றி ராகவன் சார்
//குழலி அண்ணாச்சி நீங்க என்ன சொல்லியும் யாரும் (குறிப்பா மாயவரத்தான் அவர்கள்?) கேக்கமாட்டக்காங்க போல?//
அல்வாசிட்டி சம்மி, எத்தனையோ பேர் பின்னூட்டமிடாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் சில மின்னஞ்சல்கள் நான் முதன்முதலில் மருத்துவரைப்பற்றி எழுதும்போது தங்கள் பார்வை மாறியதாக எழுதியுள்ளனர், அதற்கு அவர்கள் பாமக ஆதரவு நிலை எடுத்துள்ளனர் என அர்த்தம் அல்ல, அவர்களுக்கு பாமகவின் மீதான பார்வை மாறியுள்ளது, இதை படித்த சில நண்பர்களும் இதையே கூறினர்,
மாயவரத்தான் போன்றோருக்காக நான் இதை எழுதவில்லை, அதனால் அவர் பார்வை மாறவேண்டும் என நான் எதிர்பார்க்கவுமில்லை, நடுநிலையாளர்களின் பார்வை மாறினால் போதுமானது, இதை சில பின்னூட்டங்களிலும் காணலாம், இது தான் நான் எதிர்பார்த்தது இந்த அளவில் நான் சரியாக பாமக தரப்பு செய்திகளை எடுத்து வைத்ததாக கருதுகின்றேன், மாயவரத்தானோ அல்லது முகமூடி பெயரில் ஒளிந்திருப்பவரோ எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, என் கடமையாக நான் செய்ய வேண்டியதை செய்துவிட்டேன் அவ்வளவே...
அல்வாசிட்டி சம்மி தாங்கள்
"இட ஒதுக்கீடு அப்படினா என்ன? ஏத்தமா தாழ்வா?" என கேட்டிருந்தீர், அப்போதே பதில் தர எண்ணினேன், பின்னூட்டம் நீளமாக சென்றதால் தனிப்பதிவாக பதிந்துள்ளேன், உங்கள் கேள்விக்கு பதில் சொல்லப்ப்டிருக்கு என எண்ணுகிண்றேன்
சுட்டி இதோ சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா?
மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் பற்று இருக்கறதாலதான் அவர் படத்துக்கு தமிழ்ல பெயர் வைக்க சொல்றார்னு சொல்றது அபத்தமான ஒன்று. படத்துக்கு தமிழ்ல பேர் வைச்சா தமிழ்நாடு முன்னேறிவிடுமா?
சினிமா மட்டும் தான் மக்களை அறியாமைல இருக்க வைக்குதா?
இன்னைக்கு எல்லார் வீட்லயும் சின்ன பசங்க மாயாஜால சீரியலை பாக்கறாங்க.
அது அறியாமையை ஏற்படுத்தலயா?
Sun TVya எதிர்க்க வேண்டியதுதான?
Sun TV தமிழ் பேரா?
மொழி நம்ம எண்ணத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவி (Just A Tool). அதை வெச்சி பிரச்சனை பண்றது முட்டாள்தனம்.
அன்புமணிக்குனா பதவி தருவோம்னு MK சொன்னதாக சொல்வது காதுல காளி பிளவர் வைக்கற மாதிரி இருக்குது. MK என்னைக்கும் அடுத்தகட்ட தலைவர்கள் உருவாவதைவிட மாட்டார். அவர் குடும்பம்னா அது வேறு மாதிரி.
வாய்ல வரத எல்லாம் பேசரவன் தலைவன் இல்லை. நிதானமாக யோசிச்சி பேசறது ஒரு தலைவனோட அடிப்படை குணம்.
மரத்தை வெட்டினோம் ஆனால் அதற்கு பதில் செடி வைத்தோம் என்பது "அவள் புருஷனை கொன்னொம் உண்மை தான் அதற்கு பதிலாக அவளை கல்யாணம் பண்ணிக்கிடோம்னு" சொல்ற மாதிரி இருக்கு.
குழலி அவர்களே உங்களுக்காக போராடினால் உங்கள் தலைவராக வைத்து கொண்டாடுங்கள். அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பார்க்கும் ஒருவர் தான் மக்களை ஆள வேண்டும்.
-பாலாஜி
மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் பற்று இருக்கறதாலதான் அவர் படத்துக்கு தமிழ்ல பெயர் வைக்க சொல்றார்னு சொல்றது அபத்தமான ஒன்று. படத்துக்கு தமிழ்ல பேர் வைச்சா தமிழ்நாடு முன்னேறிவிடுமா?
சினிமா மட்டும் தான் மக்களை அறியாமைல இருக்க வைக்குதா?
இன்னைக்கு எல்லார் வீட்லயும் சின்ன பசங்க மாயாஜால சீரியலை பாக்கறாங்க.
அது அறியாமையை ஏற்படுத்தலயா?
Sun TVya எதிர்க்க வேண்டியதுதான?
Sun TV தமிழ் பேரா?
மொழி நம்ம எண்ணத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவி (Just A Tool). அதை வெச்சி பிரச்சனை பண்றது முட்டாள்தனம்.
அன்புமணிக்குனா பதவி தருவோம்னு MK சொன்னதாக சொல்வது காதுல காளி பிளவர் வைக்கற மாதிரி இருக்குது. MK என்னைக்கும் அடுத்தகட்ட தலைவர்கள் உருவாவதைவிட மாட்டார். அவர் குடும்பம்னா அது வேறு மாதிரி.
வாய்ல வரத எல்லாம் பேசரவன் தலைவன் இல்லை. நிதானமாக யோசிச்சி பேசறது ஒரு தலைவனோட அடிப்படை குணம்.
மரத்தை வெட்டினோம் ஆனால் அதற்கு பதில் செடி வைத்தோம் என்பது "அவள் புருஷனை கொன்னொம் உண்மை தான் அதற்கு பதிலாக அவளை கல்யாணம் பண்ணிக்கிடோம்னு" சொல்ற மாதிரி இருக்கு.
குழலி அவர்களே உங்களுக்காக போராடினால் உங்கள் தலைவராக வைத்து கொண்டாடுங்கள். அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பார்க்கும் ஒருவர் தான் மக்களை ஆள வேண்டும்.
-பாலாஜி
Nanri. Ithu Naal varai naan , PMK patri thavaraana oru kannottathil paarthu vanthen. Ippothu purinthathu Maruthuvar ayyavin thiyagamum, ilappum ethannai enru. Valarattum avarathu iyakkam.
Nanri Kuzhali avargalae,
Ithu Naal varai Pa.Ma.Ka. vai patri thavaraana oru kannottathil parthu vanthean. Ippothu purinthathu Maruthuvar ayya seitha thiyagamum, katchi valarntha vithamum. Valarattum Pa.Ma.Ka.
Vazhthukkal.
Kuzhali,
First of all, you have guts to do this analysis and you did it with aplomb. Hats of to you! I didn't pass my judgement until I completed your four parts.
I am from Chennai, middle class family and with 10th passed parents. when all the agitation and resistance happenned, I was doing my 9th standard and didn't realize why there was a big fuss regarding the 20% reservation. I was really naive in beleiving that if you study well and get good marks, you will be good in life. But I realized how much of a great effect our martyrs has accomplished by helping the future generation like me and my brother.
I am doing fantastic in my life now but would have ended in Pachiayappas college.
Next accomplishment from my opinion which Dr. Ramadoss did was to separate the Cine actors from youngsters, whoever that may be - Rajinikanth or Vijaykanth or Vijay, all money making machines. Rajini is just an actor nothing more nothing else but these young idiots make him as if he is a great person, leader with anecdotes etc..
All said and done,
1. Are there any details regarding the martyrs family?
2. Is someone taking care of their families?
3. Is there any help we can do for those families?
can you please send me those information.
Vazthukkal
Ramanan
aramanan2yahoo.com
Post a Comment