மங்கையர்க்கரசி
மங்கையர்க்கரசி
உறவுகள் எல்லாம்
முறை சொல்லியே
அழைக்கும் அம்மாவை
பெயர் சொல்லியழைக்க
அலுவலக நண்பருமில்லை
அடுக்களை தாண்டாத அவளுக்கு
அப்பா பெயருக்கு கடிதமெழுதி
அம்மாவை விசாரிக்கும்
பிறந்தவீடு தவிர
கடிதம் எழுதவும்
ஆளில்லை அவளுக்கு
அசைகின்ற சொத்துக்கள்
அம்மாவை அலங்கரித்தாலும்
பெயர் சொல்லும் அசையாத
சொத்துக்கள்
அப்பாவின் பெயர்தாங்கியே
அவசர மளிகைக்கு
பாத்திரம் நீட்டும்
அடுத்தாத்து மாமியும்
'குமார் அம்மா' என
என் பெயர் இழுப்பாள்
அம்மாவை அழைக்க
திடீரென யாரேனும் கேட்டால்
சற்று யோசித்துதான்
சொல்லவேண்டியிருக்கிறது
பல வருடங்களாய்
பயன்படுத்தப்படாத
அம்மாவின் பெயரை
- அருள் குமார்
அருள் குமார் என்ற என் தோழன் எழுதிய கவிதை
மனதைப்பிசைந்தது, இங்கே உங்களுக்காக.
மற்றைய படைப்புகளை கான இங்கே சுட்டுங்கள்
திருக்குறள்.நெட்
மனிதன்
சிங்கம் என்றீர்
சிறுத்தை என்றீர்
நான் யானையல்ல
குதிரை என்றீர்
எப்போதய்யா
நான் மனிதன்
என்பீர்?
- குழலி
எய்ட்ஸ்
விலை கொடுத்து
சுகம் பெறும்போது
கிடைக்கும்
இலவச
இணைப்பு
- குழலி
அடகுக்கடை
அன்பே நீ என்ன
மார்வாடி கடைக்காரியா?
உன்னிடம் இதயத்தை
அடகுவைக்க
பலர் அலைகின்றனர்
- குழலி
இனிப்பு
இனிப்பு
வாங்க சென்று
கசப்போடு திரும்பினேன்
விலையை கேட்டு
- நன்றி சங்கர்
காதல்
பேசுவதை எல்லாம்
தத்துவம் என்றான்
எழுதுவதை எல்லாம்
கவிதை என்றான்
ஓ!
அவன்
காதலிக்கின்றான்!
மழை!!!
என்னவள் வரும்போதெல்லாம் மழை பெய்கிறதே ஏன் ???
ஓ...
வானமும் ஜொள்ளு விடுகிறதோ!!!
- நன்றி கார்த்திக்
4 பின்னூட்டங்கள்:
காசியாண்டவா காப்பாத்து, பதிவு போட்டு தமிழ்மணம் பக்கத்தை திறந்தால் என் பதிவு மூன்றாமிடத்தில் இப்படியே சென்றால் பதிவு போட்ட பத்து நிமிடங்களில் தமிழ்மணத்தின் முதல் பக்கத்திலிருந்து காணாமல் போய்விடும் போலுள்ளது.
ஆனாலும் மிக்க மகிழ்ச்சிதான் தொடர்ந்து பல பதிவுகள் ஆர்வமாக பதிக்கப்பட்டு வருவதால்
அம்மாவின் பெயர்.......
அருமை... குழலி......
எங்கம்மாவுக்கு ஒரு கொப்பி அனுப்பி வைக்கப் போறேன்.
//அம்மாவின் பெயர்.......
அருமை... குழலி...... //
எல்லாப்புகழும் அருள் குமாருக்கே...
அவர் விரைவில் வலைப்பூ எழுத உள்ளார்
//அம்மா என்பதை விட நெகிழ்ச்சியான, அழகான சொல் இருக்கிறதா என்ன குழலி//
உண்மைதான் புலிக்குட்டி, ஆனாலும் இந்த கவிதையும் உண்மை என்பதை மறுக்க முடியாது
//அரசியல் கலப்படம் இதில் கிடையாது -:)) //
குசும்பு? ஹி ஹி
இதற்கு பிராயசித்தமாக தான் ஆசை மகளுக்கு அம்மா பெயரிடுவதே..
Post a Comment