ஆயா செஞ்ச பாயா - கவிஞன் கோந்துவாயன்
சில ஆண்டுகளுக்கு முன் தினம் ஒரு கவிதை குழுமத்தில் வெளியான கவிதைக்கு எதிர்வினையாக இதை எழுதி நட்பு வட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கவிஞர் கோந்துவாயனின் ஒரு படைப்பு உங்கள் பார்வைக்காக....
ஆயா செஞ்ச
பாயா இல்ல
ஆத்தா செஞ்ச
ஆப்பம் இல்லை
என
அழுது புலம்பும்
சாப்ட்வேர் செல்வா
இனப்போராட்டத்திலே
உயிர்வாழுதலே
பிரச்சினையாகி
புலம்பெயர்ந்தாயா?
ஆயிரங்களிலே
அதிருப்தி அடைந்து
லட்சங்களிலே
லட்சியம்
கொண்டுதானே
புலம்பெயர்ந்தாய்
பின் ஏனிந்த
புலம்பல்?
குடிக்க கூழின்றி
கும்பி காய்ந்து
வாழ வழி தேடி
கைக்காசை
ஏஜென்டிடம் அழுது
சோற்றுக்காக வா
புலம் பெயர்ந்தாய்?
சொந்த
சுகத்துக்காகவும்
சொந்தங்களின்
சுகத்துக்காகவும்தானே
புலம் பெயர்ந்தாய்
பின் ஏனிந்த
புலம்பல்?
எவரெஸ்ட்டின்
உச்சியிலே
சூடாண உணவைக்கூட
சாப்பிடமுடியாமல்
நாடுகாக்கும்
திருமகனைப்போல
எதைகாக்க
புலம்பெயர்ந்தாய்?
நீதான் போகவேண்டுமென
உன்னை கட்டாயபடுத்தியா
ஆன்சைட் அனுப்பினர்?
நீ இல்லையென்றால்
ஆயிரம் பேர்
ஆன்சைட் போகத்தயார்
ஆனாலும்
என்.ஆர்.ஐ என்ற
பெருமைக்காக தானே
புலம் பெயர்ந்தாய்
பின் ஏனிந்த
புலம்பல்?
படித்ததற்கு
வேலையில்லையென
கூறிய காலம்
மலையேறி
மாமாங்கம்
ஆகிவிட்டதடா
சாப்ட்வேர் செல்வா
உன்கையை யாரும்
பிடித்திழுக்கவில்லையே
அங்கேயே இருமென
அங்கேபோகத்தான்
உனக்கு விசாவேண்டும்
திரும்பிவர அல்லவே...
இப்போதும்
காலம்
கெட்டுவிடவில்லை
ஆயா செஞ்ச
பாயாவும்
ஆத்தா செஞ்ச
ஆப்பமும்
உடனே கிடைக்குமடா
சாப்ட்வேர் செல்வா
நீ மனது வைத்தால்
அதை செய்யாமல்
ஆயா செஞ்ச
பாயாயில்லை
ஆத்தா செஞ்ச
ஆப்பமில்லை
என்றால்
பரிதாபம் வராமல்
எரிச்சல்தானடா வருகிறது
சாப்ட்வேர் செல்வா!
19 பின்னூட்டங்கள்:
நெத்தியடி!!!
நச். நிறைய பேருக்கு குடும்பத்தில் இருக்கும் கமிட்மெண்டுக்காக வெளிநாடுகளுக்கு செல்லாலம். அவர்கள் புலம்பினால் நியாயம் இருக்கிறது.
வீட்டில் கஷ்டமில்லாவிட்டாலும் career டெவலப்மெண்ட் என்றும், 4 பேர் ஊரில் புகழ வேண்டுமென்பதற்காகவும், பணம் பார்க்க வேண்டுமெனவும் வந்து விட்டு அதை மிஸ் பண்ணிட்டேன் இதை மிஸ் பண்ணிட்டேன் என்று புலம்பும் போது பாசாங்கு தான் ஒலிக்கும்.மூளை வளர்ச்சி குன்றிய காலத்தில், வெளிநாடு வந்து விட்டு இப்படி தான் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இப்படி புலம்புவர்களை கண்டால் தூக்கி போட்டு மிதிக்க வேண்டுமென்று தான் தோன்றுகிறது. கல்லாகி போன மனது.
வாழ்க்கையில் காணக்கிடைக்காத சந்தோஷங்களாக குழந்தை முகத்தை பார்த்து சிரிக்கிறது என்று மனைவி ஊரிலிருந்து சொல்லும் போது, "நிறைய மிஸ் பண்றேன்" என்று போனில் வாய் சொல்லும் முன் "மூதேவி, பணத்திற்காக தானே வெளிநாடு வந்தாய் பன்னாடை.சுகங்களை இழந்து பைசா பார்க்க வேண்டுமா பேமாளி?" என்று மனது ஒரு ஓரத்தில் கூக்குரலிடுவதை தடுக்க முடியுமா சொல்லுங்க?
வாவ்! நீங்கள் எழுதியதா இது? கலக்கியிருக்கிறீர்கள்!
சுதர்சனின் சந்தேகம் தான் எனக்கும். :))))))))
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி நல்லவேளை இன்னும் யாரும் திட்டவில்லை
//சுதர்சனின் சந்தேகம் தான் எனக்கும். :)))))))) //
எனக்கே தெரியுமைய்யா ஏன் வந்தேன் என்று, பிசிபேலாபாத்தும்,காராபாத்தும் செட் தோசையும், சிங் தாபாவில் வகை வகையாக சாப்பிட்டாலும் சிங்கை வந்த உடன் குட்டி இந்தியா செல்லும்போது மட்டும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு மீதி நாட்களில் 24 மணி நேர பரோட்டா கடையில் காய்ந்து போன பரோட்டா நெஞ்சில் அடைக்கும் போது எதையோ இழந்த துக்கமென்றாலும் நான் என்ன நாட்டுக்காகவா தியாகம் செய்துகொண்டு இருக்கின்றேன், அல்லது இந்தியாவிலே வேலைகிடைக்காமலா இங்கு வந்தேன், பணம் அய்யா பணம்... நேர்மையான முறையில் சம்பாதிக்க வேண்டும்... அவ்வளவே... இங்கு வந்து பாயா இல்லை சாயா இல்லை என்பது தேவையற்ற அர்த்தமற்ற புலம்பல்...
இது எல்லாரையும் குறிவைத்து எழுதப்படவில்லை, இங்கே பல லட்சங்களை முகவர்களிடம் கொட்டி கொடுத்து வாழ வழி தேடி வந்திருப்பவர்களை காணும் போது மனம் நெகிழ்ந்து போகின்றது, அவர்களை சாப்ட்வேர் செல்வன் களோடு ஒப்பிட முடியாது... அவர்கள் குடும்பத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் இந்த அனுபவங்களை புலம்பாமல் தாங்கிக்கொண்டிருக்கும் போது சாப்ட்வேர் செல்வங்கள் மட்டும் அழும்போது எரிச்சல்தான் மிஞ்சுகின்றது
good to read and think
Hi Kuzhali,
Your thinking also makes some impact on us on the view of NRIs/foreign employment etc..
But "pulam peirvu"(Dioaspara?) may have special reasons relating to country's situation,specially,Eelam..
Some families' expectations are not money from boys & girls,who have come abroad,rather "safe of life" of that youths,and other members didn't worry for their lives...
Please consider these living examples also..
As you mentioned in a feedback,happy to note that you have sympathy&empathy over emloyee friends,who came with agreement to "agents".
Anyhow,this kavithai definitely gives different and appriciatable aspects,and makes us to think widely...!Wishes & Thanks
Look forward more from you...!
Anpudan,
Shanthan
ktps24@yahoo.co.uk
//But "pulam peirvu"(Dioaspara?) may have special reasons relating to country's situation,specially,Eelam..
Some families' expectations are not money from boys & girls,who have come abroad,rather "safe of life" of that youths,and other members didn't worry for their lives...
//
ஷாந்த், நாட்டின் நிலையை வைத்து புலம் பெயர்தலை இங்கே குறிப்பிட்டுள்ளேன்... கீழுள்ள வரிகள் அதை விளக்கும்
//இனப்போராட்டத்திலே
உயிர்வாழுதலே
பிரச்சினையாகி
புலம்பெயர்ந்தாயா?
//
இங்கே நான் வெளிநாட்டில் வேலை செய்வதை எதிர்க்கவில்லை, சொந்த நாட்டில் மற்ற எந்தத்துறையிலும் கிடைக்காத அளவுக்கு பல ஆயிரங்கள் சம்பளம் கிடைக்கும் நிலையில் லட்சங்களுக்கு ஆசைப்பட்டு வந்து இங்கே பாசம் இல்லை மோசம் இல்லை என புலம்புபவர்களைப்பற்றிதான் எழுதினேன்
Kalakkal kuzali
-LLDasu
இன்றுவரை இந்தக்கவிதை எனக்கும் மிகவும் பிடித்ததாக இருந்தது - அது என் புலம்பலைச்சொல்வதால்.
ஆனால் உங்களின் ஆயா செஞ்ச பாயா அதை மாற்றியிருக்கிறது!
ரசிகவ் ஞானியாரின் இந்தக் கவிதையை படித்திருக்கின்றீர்களா?
தூக்கம்விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்
" என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!
"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
- ரசிகவ் ஞானியார்--
K.Gnaniyar
Dubai
www.nilavunanban.blogspot.com
அடிச்சா நெத்தியடியாத்தான் அடிப்பேன்னு அஜீத் மாதிரி கிளம்பியிருக்கீங்களோ (நான் அஜீத் ரசிகன் இல்லை)
அருமையாக இருக்கிறது......... என் வெளிநாட்டு நண்பர்களுக்கு அனுப்பி விட்டேன்.....
அது சரி "தேசம்" அப்டீன்னு ஒரு தமிழ்படம் (ஹிந்தி டப்பிங்) வந்ததே பாத்தீங்களா........
பாருங்க....... அப்புறம் இன்னொரு கவிதை எழுதுங்க.......
Kuzhali,
Alright,can understand your perception of reasons.
I also didn't mention in that way,but put my comment as some adding points,with "uNNarvukaL"...
In the mean time,Anbu anna's that Kavithai sharing also add more to strenghthen the feedbacks and issues.Yes,that feelings are also real and felt in pragmatic.
I also thought to quote about "Thesam",but Ganesh put it..
Yes,specailly in that Thamil film,hope song by "Vaali".."unthan thesathin kural...",song is really have some deep thouhts,in some way..
Look forward more of these appriciatable creations from you all...
Anpudan,
Shanthan
ரசிகவ் ஞானியாரின் கவிதை சத்தியமான உண்மை,என் சொந்தங்கள் சிலரை இது மாதிரி பார்த்திருக்கின்றேன்...
தினம் ஒரு கவிதையில் வந்த முத்துக்குமாரின் கவிதை நன்றாக உள்ளது, அது உண்மையென்றாலும் அதன் கருத்திலிருந்து நான் மாறுபடுகின்றேன்...
//அருமையாக இருக்கிறது......... என் வெளிநாட்டு நண்பர்களுக்கு அனுப்பி விட்டேன்.....//
கோ.கணேஷ் வெகுசீக்கிரம் எனக்கு வசவு உண்டு போலத்தெரிகின்றதே....
//சரி "தேசம்" அப்டீன்னு ஒரு தமிழ்படம் (ஹிந்தி டப்பிங்) வந்ததே பாத்தீங்களா........
பாருங்க....... அப்புறம் இன்னொரு கவிதை எழுதுங்க....... //
இன்னும் பார்க்கவில்லை, குறுந்த்தட்டு கிடைக்குமா என முயற்சிக்கின்றேன்...
ஷாந்த் உங்களது உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... அடுத்த முறை சந்திக்கும் போது உரையாடிச்செல்வோம்...
Hi kuzhali
Excellent.. fantastic.. romba nalla irukku intha poem.. write more like this.
Software selvargal athai mis panren.. ithai mis panrennnu pulambinaa kooda paravaa illai.. oru step meela pooi.. India varum poothellaam.. what a pollution? what a traffic? nnu Indiavai mattamaa pesarathai thaan thaanga mudiyalai.
Thank you for a neththiyadi poem..
M. Padmapriya
மேலும் நிறைய கோந்துவாயன் கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.
குழலி
கோந்து வாயன் , பவுர்ணமி பாண்டியணுக்கு குருவாய் இருப்பார் போல இருக்கே?
அந்த கவிதைக்கு மூலம் எது ?
குஜிலிண்ணே,
தூங்கிட்டிருந்த குஞ்சிங்களாம் எய்ந்து வந்திருச்சீங்க...
ஜமாய்...:))
Post a Comment