நக்கீரன் புலனாய்வு இதழ்









நக்கீரன் புலனாய்வு இதழ்,

பதினெட்டாம் ஆண்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும்

இந்த இதழிற்கும்

இதன் ஆசிரியர் திரு நக்கீரன் கோபாலுக்கும்

வாழ்த்துக்கள்.

நக்கீரன் இதழ் எப்பொழுதுமே
எதிர் கட்சியாகத்தான் செயல்படும்,

அது தி.மு.க ஆட்சியிலிருந்தாலும் சரி

அ.தி.மு.க ஆட்சியிலிருந்தாலும்,

நக்கீரனின் புலனாய்வு செய்திகள் எமக்கு

எப்போதும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது.







இவர் இப்படித்தானிருப்பார்
என்பது தெரிந்ததே நக்கீரனால்தான்

யாராலும் கண்டுபிடிக்க முடியாத, தொடர்பு கொள்ள முடியாமல்
இருந்த வீரப்பனிடமிருந்து பேட்டியெடுத்து வெளியிட்டது அதன் முதல் மாபெரும் வெற்றி.

முந்திரிக்காட்டில் பதுங்கியிருந்த தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழர் விடுதலைப்படையின் தலைவர் இளவரசனிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது









அடித்த ஸ்கூப்களிலே
முக்கியமான ஸ்கூப் இவருடையது தான்


திரு.சங்கரராமன் அவர்கள் காஞ்சிபுரத்திலே வரதராஜ பெருமாள் சன்னிதியிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு பத்திரிக்கையும் ஒரு கிசு கிசு வாகக்கூட மடத்தை கை காட்டாத போது, நக்கீரன் தான் இந்தக்கொலையில் மடத்தின் தொடர்பை கேள்விக்குள்ளாக்கியது, அது மட்டுமின்றி சங்கராச்சாரியார் அவர்களிடம் நேரடியாக இந்த கொலை பற்றி பேட்டி கண்டபோது, எனக்கு தெரியாது, ஆனால் சங்கரராமன் எனக்கு தந்த தொல்லைகளை பார்த்து என் மேல் பாசம் வைத்திருக்கும் யாரேனும் செய்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அவர் பேட்டியில் கூறியபோது ஒரு கோடு,இரண்டு கோடு, மூன்று கோடு என பல கோடுகளை வரைந்தனர், பிறகு இந்த வழக்கில் ஜெயேந்திரர்,விஜயேந்திரர் என பலர் கைது செய்யப்பட்டனர்













திரு.ஆலடி அருணா வெட்டிக்கொலை செய்யப்பட்ட போது, பல பத்திரிக்கைகளும் திரு.கட்டதுரையின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது என்று தகவல் தந்து கொண்டிருந்தபோது பொறியியல் கல்லூரித்தொழில்போட்டியினால் தான் இந்த கொலை நடந்தது என எஸ்.ஏ.ராஜா வின் மீது முதன் முதலில் கைக்காட்டியது நக்கீரன் தான், இவரும் பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஏ.ராஜா, திருநெல்வேலி மாவட்டத்திலே பல கல்விக்கூடங்கள் நடத்தி வரும் பிரபலம்.







தமிழகத்தை கலக்கிய இரு பெண்கள்



கஞ்சா வழக்கில் செரீனா கைது செய்யப்பட்ட போதும், சீட்டிங் வழக்கில் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டபோதும் ஏதோ இது தினம் நடக்கும் சம்பவங்களில் ஒன்று என்று எண்ணியிருந்த்தபோது கைதின் பின் புலங்களை முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் தான்.


இது போல எண்ணிலடங்கா உதாரணங்கள், கொலை வழக்குகள் மட்டுமல்ல
அரசாங்க அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,கான்டிராக்ட் ஊழல்கள் என கிட்டத்தட்ட எல்லா ஊழல்களையும் பெரும்பாலும் முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் தான்

பத்திரிக்கைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டது நக்கீரன் தான், ஒரு பத்திரிக்கை ஒரு சிரிப்பு வெளியிட்டதற்காக ஒரே ஒரு நாள் அதன் ஆசிரியர் கைது செய்யப்படதை இன்று வரை பத்திரிக்கை சுதந்திரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டுள்ளது, பொடாவினில் பல மாதங்கள் சிறையிலே, பல முறை நக்கீரன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்,பாதிப்படைந்த பதிப்பாளர் திரு.கணேசனின் இறப்பு, ஊழல்களை அம்பலப்படுத்திய பெரம்பலூர் நிருபர் கொலை, இன்னும் பற்பல ஊர்களில் நக்கீரன் நிருபர்கள் மீது தாக்குதல் என ஒரு அடக்குமுறையை எதிர்த்து போராட்டத்தையே நடத்திக்கொண்டுள்ளது நக்கீரனும் அதன் ஆசிரியர் கோபாலும். பொடாவிலே நக்கீரன் கோபால் சிறையிலிருந்த போதும் எந்த பத்திரிக்கையும் கடுமையாக போராடவில்லை, பெயருக்கு ஒரு கண்டன ஆர்பாட்டம், ஒரு கையெழுத்து வேட்டை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டன.

ஆனால் அத்தனை போராட்டங்களையும் மனவலிமையோடு சந்தித்து இன்றும் ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாக வந்து கொண்டுள்ளது,

ஒரு சில அரசியல் இதழ்களைப்போல் அட்டையை உரித்துவிட்டால் எல்லா வாரமும் அதே செய்திகளை தாங்கிக்கொண்டுள்ள (தி.மு.க, கலைஞர் மீது தாக்குதல், பா.ம.க.,ம.தி.மு.க வை மாவட்ட கட்சி என கிண்டல் செய்தல், பாஜக மற்றும் மடங்களுக்கு ஜால்ரா போடுதல், ஒவ்வொரு வாரமும் அதே கேள்வி அதே பதில்கள், கிறுக்குத்தனமாக எதையாவது எழுதுவிட்டு, தான் ஒரு கிறுக்கன் என சொல்லிக்கொள்தல் - புரிகின்றதா யார் என?) பத்திரிக்கை போலன்றி நக்கீரனின் ஒவ்வொரு இதழ் வெளியீடும் ஒரு களப்போராட்டம் தான்.

ஆனாலும் நக்கீரனுக்கு பத்திரிக்கை உலகில் ஒரு பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை? ஏன் ?

எது இதற்கு காரணம் சாதியா? பணமா? அல்லது சற்று தரம் குறைந்த காகிதத்தில் வண்ணமயமாக பதிப்பிக்காததா?

படங்கள் உதவி - நக்கீரன்

நன்றி - நக்கீரன்

13 பின்னூட்டங்கள்:

said...
This comment has been removed by a blog administrator.
said...

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில அந்த சாதி-ங்கற ரெண்டு எழுத்த தொடாம எழுதலேனா...

துக்ளக் பத்திரிக்கை நல்லாருக்கும், அரசியல் நையாண்டிகளுக்கு!

புடுங்கிட்டேன்,புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன்

said...

//அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில அந்த சாதி-ங்கற ரெண்டு எழுத்த தொடாம எழுதலேனா...//
நானும் அந்த இரண்டெழுத்தை தொடக்கூடாதென்றுதான் நினைத்தேன் ஆனாலும்,
சத்தியமா சொல்றேங்க நக்கீரனுக்கும் கோபாலுக்கும் ஏன் பத்திரிக்கை உலகில் ஒரு நல்ல இடம் கொடுக்கப்படவில்லை என்பது இன்று வரை எனக்கு குழப்பமாக உள்ளது, சாதியில்லையென்றால் வேறு என்னவாக இருக்கும் ஒரு வேளை அவருடைய பெரிய மீசை யாக இருக்குமா?

//துக்ளக் பத்திரிக்கை நல்லாருக்கும், அரசியல் நையாண்டிகளுக்கு!//
ஆமோதிக்கின்றேன், ஆனால் ஒரு பத்து வாரம் துக்ளக் படித்துவிட்டால் போதும், அதே நையாண்டிகள் தான் மீண்டும் மீண்டும், என்னங்க நான் சொல்வது சரிதானே?

said...

இந்த இதழிற்கும்

இதன் ஆசிரியர் திரு நக்கீரன் கோபாலுக்கும்

வாழ்த்துக்கள்.

said...

I think that Nakeeran focusses too much on bring out the injustice and less on lighter side of life. That could be the reason for its lack of recognition. It is a wonderful magazine. I used to read it for a long time while I was in India.

Thanks for the nice article.

said...

நக்கீரன் இணையத்திலும் கிடைக்கின்றது http://www.nakkheeranbiweekly.com

said...

//ஒரு பத்திரிக்கை ஒரு சிரிப்பு வெளியிட்டதற்காக ஒரே ஒரு நாள் அதன் ஆசிரியர் கைது செய்யப்படதை இன்று வரை பத்திரிக்கை சுதந்திரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டுள்ளது, பொடாவினில் பல மாதங்கள் சிறையிலே, பல முறை நக்கீரன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்,பாதிப்படைந்த பதிப்பாளர் திரு.கணேசனின் இறப்பு, ஊழல்களை அம்பலப்படுத்திய பெரம்பலூர் நிருபர் கொலை, இன்னும் பற்பல ஊர்களில் நக்கீரன் நிருபர்கள் மீது தாக்குதல் என ஒரு அடக்குமுறையை எதிர்த்து போராட்டத்தையே நடத்திக்கொண்டுள்ளது நக்கீரனும் அதன் ஆசிரியர் கோபாலும். பொடாவிலே நக்கீரன் கோபால் சிறையிலிருந்த போதும் //

கோபால் மீதும் அவரது குடும்பம், மனைவி மீதும் செலுத்தப்பட்ட அதிகார அழுத்தங்களினால் கோபால் சிறையில் இருந்த போது அவரது மாமனார் தூக்குபோட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதும் நிகழ்ந்தது.

உண்மையில் நக்கீரன் நெருப்பாற்றில் நீந்திவந்தது என்றால் அது மிகையாகாது. கருத்துச் சுதந்திரம் தமிழ்நாட்டில் இருப்பதாக நினைத்து கதைக்கும் பலர் நக்கீரன் எதிர்கொண்ட சோதனைகளை அறிய நேர்ந்தால் அப்படிச் சொல்லமாட்டார்கள்.

நக்கீரனுக்கும், கோபாலுக்கும் அவருடன் பணியாற்றும் சக தோழர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, அந்தப் பத்திரிக்கைக்காகவும் கருத்துச்சுதந்திரத்துக்காகவும் தங்கள் உயிரைக்கொடுத்த அப்பத்திரிக்கை ஊழியர்களை நினைவில் கொள்ளவேண்டும்.

செய்திக்கு நன்றிகள்!

said...

நக்கீரன் தன் இணையப் பதிப்பை நிறுத்திக் கொண்டது ஏனோ? நக்கீரன் மீண்டும் தன் இணையப் பதிப்பைத் தொடங்க வேண்டும். நக்கீரனுக்கு என் வாழ்த்துக்கள்!

said...

நக்கீரன் இணைய தளம் இயங்கிக்கொண்டுதான் உள்ளது,
சுட்டி இதோ http://www.nakkheeranbiweekly.com

இரண்டாம் தேதிக்கு பிறகு இன்று நக்கீரன் இணையதளத்திற்கு சென்று பார்த்த பொழுது ஒரு ஆச்சரியம் எனது இந்தக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததற்கு சற்றேறக்குறைய அதே கருத்து மற்றும் வார்த்தைகளுடன் ஆலடி அருணா கொலை வழக்குப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

said...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே,

என்ன தல,
நான் சொன்ன உண்மையை இங்க போடவே இல்ல.

said...

எனக்குத் தெரிந்தவரை ஆண் பெண்களின் மர்மப் புலன்களை ஆராய்ந்துவருவது மட்டுமே இந்தப் பத்திரிக்கை செய்துவருவது.

இந்தப் புலனாய்வுக் காகிதத் தொகுப்பில் வேலை செய்த ஒரு நண்பர் அவர் அனுபவங்கள் பற்றி பல வருடங்கள் முன்னால் சொன்னார். அப்போதே அவர் அந்த நிறுவனத்திலிருந்து விலகி, அதைவிடக் குறைந்த சம்பளம் தரும் ஒரு NGOல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

said...

Exactly same thinking and pondering of mine. People who shout "Karuthu sthanthiram" when Jayalalitha was torturing media( especially those arivu jeeevi media like Hindu, kumudam, Aavi), never gave support for Nakkeran. When kumudam made a false story linking Balachander and Kushbu( AF day), the later one sued them for defamtion suit but she can make statement about tamil women which is against "Karuthu suthandram". How polarised and biased are these medias. For a sample check the "Thatstamil.com" poll results. You cannot stop laughing. I wish people in Tamilnadu should have opportunity to read all these articles in the tamilblogs. That will definitely awaken the Tamil and other dravidian communities reminding the days of 1960's when Periyar and other justice parties sowed seeds of awakeing for us.

said...

//ஆனாலும் நக்கீரனுக்கு பத்திரிக்கை உலகில் ஒரு பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை? ஏன் ?//

ஏன் என்றால் அவர்களின் குழுமத்திலிருந்து ஒரு ஜனரஞ்சக வார இதழோ வேறு "supporting sister media" இல்லை. அவர்கள் வெளியிடும் இதழ்கள் பெரும்பாலும் சினிமா சம்மந்தப்பட்டதே !!!!