எனது முதலிரவு(கள்)
என்ன தமிழ்மணத்தில் தெரிகின்ற நாலு வரிகளை படித்துவிட்டு
அப்பீட் ஆகிடலாம் என பார்க்கின்றீரா, பதிவில் வந்த படியுங்கள்
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
எனது முதல் முதலிரவு
எனது முதல் முதலிரவன்று என்ன நடந்தது என்று எணக்கு நினைவில்லை,
இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்ற அனுமானத்திலே
ஒன்று அய்யோ இந்த உலகத்தில் வந்து பிறந்துவிட்டோமே என்று
அழுது கொண்டிருந்திருப்பேன், இல்லையென்றால் தாயின் கத கதப்பில் சுகமாக
உறங்கிக்கொண்டுந்திருப்பேன், நான் தான் ஒரு இரண்டும் கெட்டானாயிற்றே...
இரண்டையும் சேர்ந்து செய்திருப்பின் எது எப்படியாயினும் எனது முதல் முதலிரவு
கடலூரிலே நடந்துவிட்டது
புத்தூரில் முதலிரவு
அந்த காலக்கட்டத்தில் சட்டையின் கழுத்துப்பட்டியை தாண்டி முடி வளர்த்திருப்பேன்
"பங்க் ஸ்டைல்" என அலம்பல் செய்து கொண்டிருந்தேன்.
+2 முடித்து புத்தூரில் உள்ள சீனுவாச சுப்புராய தொழில்நுட்பக்கல்லூரியிலே சேர்ந்தேன்
அப்போதிருந்த முதல்வருக்கும் எனது பெயர்தான்(குழலி அல்ல, எனது சொந்தப்பெயர்),
தொழில்நுட்பக்கல்லூரியிலே சேர்ந்தபோது முதல்வர் என்னைப்பார்த்து
என்ன இப்படி முடிவைத்து இருக்கிறாய்,
நீயெல்லாம் இங்க படிக்க வந்து என்ன செய்யப்போறியோ என்றார்,
கோபம் கோபமாக வந்தாலும் சாமி காணிக்கைக்கு முடிவைத்திருக்கின்றேன்
என புளுகிவிட்டு வந்துவிட்டேன், வகுப்பு ஆரம்பிக்க ஒரு வாரம் இருந்த நிலையில்
கூடவே இருந்த எனது தந்தை சாமி காணிக்கைக்கு முடிவைத்திருக்கின்றேன் என சொல்லிவிட்டாய்
எனவே மொட்டையடித்துக்கொண்டு போ என மொட்டை போட்டுவிட்டார்,
மறுநாள் வகுப்பு ஆரம்பம், முதல் நாள் இரவே விடுதிக்கு சென்றுவிட்டேன்,
உடன் என்னுடன் பள்ளியிலிருந்து வகுப்புத்தோழனாக இருந்து இங்கேயும் சேர்ந்திருந்த நண்பன்.
எனக்கு அப்போதிருந்த மனநிலையெல்லாம் நானும் 10 வது முடித்துவிட்டு
உடனே இந்த பாலிடெக்னிக்கில் சேர்ந்திருந்தால் நானும் இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பேன்
ம்... இப்போ முதலாண்டு என்ற எரிச்சலில் வேறு இருந்தேன்.
அறைச்சாவியை வாங்கிக்கொண்டு பொருட்களையெல்லாம் வைத்துவிட்டு வெளியே வந்து நின்றபோது
ஒரு மூத்த மாணவர் வந்தார், அப்போது அவர் முதலாண்டு மாணவர்கள் விடுதியில் எப்படி இருக்கவேண்டும்
என கூறினார், லுங்கி(கைலி)யை மடித்து கட்டக்கூடாது, முழுக்கை சட்டையை மடித்து விடக்கூடாது,
மூத்த மாணவர்களை "ரூம்மேட்" எனத்தான் கூப்பிடவேண்டுமென.
இப்படியெல்லாம் பேசிக்கொண்டே அவரது அறைக்கு அழைத்துச்சென்றுவிட்டார்,
அங்கே சென்றவுடன் அவரது பேச்சின் தொனியே மாறிவிட்டது,
திடீரென்று ஓ.... பு.... என்ற நல்ல(?!) வார்த்தைகளால் அர்ச்சிக்க ஆரம்பித்துவிட்டார்,
அதுவரை அப்படி பட்ட வார்த்தைகளை திட்டுவதற்கு யாரும் பயன்படுத்தியில்லாததால்
சரக்கென்று கோபம் உச்சி மண்டைக்கு ஏறியது, அவரின் சட்டையைப்பிடித்து சுவற்றோடு அழுத்தி
மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும், இப்படி பேசினால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டு
தளபதி ஸ்டைலில் கைலியை மடித்து கட்டிவிட்டு ஒருவிதமான மிதப்பான நடையோடு
அறைக்கு வந்துவிட்டேன், அப்போது எனக்கு உட்கார்கின்ற இடத்தில் கால் கிலோ கறி கூட கிடையாது,
நானே அப்படியென்றால் நான் சட்டையைப்பிடித்த அந்த மூத்த மாணவர்
எப்படி இருந்திருப்பார் என எண்ணிக்கொள்ளுங்களேன்.
புத்தூரின் முதலிரவில் அறையில் தூங்கிக்கொண்டிருந்த பொழுது திடீரென என்னைச்சுற்றி சிலர் அமர்ந்திருந்தனர்,
என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி எல்லா வார்த்தைகளிலும் திட்டிக்கொண்டே மிரட்டினர்,
அறைகதவை திறந்துவிட்டது என் அறைத்தோழன் தான்.
முதலில் என்ன நடக்கின்றது எனப்புரியாமல் மலங்க மலங்க விழித்தேன்,
பின் மூத்த மாணவர்களின் மிரட்டல் எனப்புரிந்த உடன்.
அனைவரும் வெளியேபோங்கள் நான் தூங்க வேண்டும் என்றேன்,
ஏ.. நீ என்ன பெரிய இதா, அதா என மிரட்டினர்,
நாங்க அதை செய்வோம் இதை செய்வோம் என மிரட்டினர்,
நீங்க எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் காலையில் செய்து கொள்ளுங்கள்
இப்போ எல்லாம் வெளியே போங்க என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன்,
அவர்களுக்கு நான் அப்படி பேசியது அதிர்சியாக இருந்திருக்கலாம்,
நான் அப்படி பேசியதன் பிண்ணனியை பிறகு தான் அறிந்து கொண்டணர் ஆனால்
எனக்கு தெரியுமே, புத்தூரிலே எனது பலமும் எனது சொந்தங்களின் பலமும்.
இப்படியாக ஒருவிதமான மிரட்டல், சவால் என கழிந்தது புத்தூரில் எனது முதலிரவு
காரைக்குடியில் முதலிரவு
அழகப்பா பொறியியல் கல்லூரியில் சேருவதற்காக இரவு11.30 மணிக்கு காரைக்குடி வந்திறங்கினேன்
எனது தந்தையோடு, ஒவ்வொரு தங்கும் விடுதியாக தேடி அலைந்து எங்கேயும் இடம் கிடைக்காமல்
திரிந்தோம், எனது தந்தையின் மடியில் வேறு கல்லூரியில் சேருவதற்கான பணம் கணத்துக்கொண்டிருந்தது.
எனவே மூன்று சக்கர வாகணம்(ஆட்டோ)கூட எடுக்காமல் முதல் பேருந்துக்காக காத்திருந்து கல்லூரி
வந்து சேர்ந்தபோது அதிகாலை மணி 3.00, கல்லூரியிலிருந்த முருக்கப்பா அரங்கத்தில் படுத்து கண் அயர்ந்தோம்
இப்படியாக காரைக்குடியில் என் முதலிரவு கழிந்தது
ஹைதரபாத்தில் முதலிரவு
பயிற்சிக்காக செகந்திரபாத் சென்று வாசவி காலணியில் அலுவலகத்திலிருந்து தந்திருந்த வீட்டில் தங்கினோம்
அருகிலிருந்த ஒரு கடையில் சென்று தேனீரும் 4 பிஸ்கட்களும் கேட்டோம் நானும் உடனிருந்த நண்பரும்
இரண்டு தேனீரோடு ஒரு தட்டு நிறைய(10+) பிஸ்கெட்டுகளை கொடுத்தார் பணியாளர்,
அய்யா நான் கேட்டது 4 பிஸ்கெட், நீங்கள் இத்தனை தந்திருக்கிறீரே என கேட்டபோது எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு
சாப்பிட்டுவிட்டு மீதியை வைத்துவிடுங்கள் என்றார், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, பிறகு 6 பிஸ்கெட்டுகள் சாப்பிட்டுவிட்டு மீதி வைத்தோம், அவர் 6 பிஸ்கெட்டிற்கும், இரண்டு தேனீருக்கு பணம் வாங்கிவிட்டு மீதி பிஸ்கெட்டுகளை பிஸ்கெட்டுகள் இருந்த கண்ணாடி குடுவையில் வைத்தபோது இருவரும் முழுதாக அதிர்ந்தோம்,
சில மெட்டீரியல் நகலெடுக்கவேண்டும் வா போகலாம் என்றார் உடனிருந்த நண்பர்,
முதன்முறையாக அந்த அலுவலக நண்பரோடு அப்போதுதான் பழகுகின்றேன்,
அப்போது மணி இரவு 11.30, காலையில் எடுத்துக்கொள்ளலாம் வாங்க சென்று உறங்குவோம் என்றேன்,
இல்லை இப்போதே எடுத்தால் தான் நாளை பயிற்ச்சி வகுப்பில் சவுகரியமாக இருக்கும் என்றார்,
அலைந்தோம் அலைந்தோம், கிட்டத்தட்ட செகந்திரபாத் முழுவதும் சுற்றினோம்,
ம்... கிடைக்கவில்லை, அலுப்பின் உச்சத்திற்கு சென்று அறைக்கு சென்று தூங்கினோம்
சிங்கப்பூரில் முதலிரவு
H1B நுழைவு அனுமதிச்சீட்டு வைத்து அமெரிக்கா செல்ல காத்து காத்து தோல்வியடைந்தபின்
திட்டப்பணி நிமித்தமாக 3 மாதங்களுக்கு அலுவலகத்திலிருந்து சிங்கப்பூர் அணுப்பினர்,
முதல் வெளிநாடு பயணம், சிங்கப்பூர் நிலப்பரப்பில் சிறிய நாடு எனத்தெரியும்,
இந்தியா போன்ற மிகப்பரந்த நிலப்பரப்பை கொண்ட நாட்டிலிருந்த வந்த எனக்கு
சிறிய நாடானா சிங்கப்பூர் குறைந்தது தமிழ்நாடு அளவாவது பரப்பளவில் இருக்கும் என எண்ணிணேன்
அந்த அளவு என்னுடைய புவியியல் அறிவு.
மற்ற அனைத்தையும் விட தங்குமிடம் பற்றிய கனவே எனக்கு சிங்கப்பூர் வந்தபோது இருந்தது.
ஆங்கிலத்திரைப்படங்களில் பார்த்தது போன்ற ஒரு பெரிய வீடு அதைச்சுற்றி தோட்டம் என ஒரு
வித கற்பனையில் இருந்தவனுக்கு கான்கிரீட் குவியல்களாக வானளாவிய கட்டிடங்களின் மத்தியில்
ப்ளாக்520ல் 11 ஆவது மாடியில் ஒரு வீட்டை காண்பித்து
இங்குதான் நான் தங்கவேண்டும் என்றபோது நான் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றேன்.
ஏமாற்றத்தோடு வீட்டை ஒழுங்குபடுத்தி படுத்தால் உறக்கம் வரவில்லை,
புத்தகம் படித்தேன்,ம்... உறக்கம் வருவேனா என்றது.
வீட்டின் வெளியில் வந்து பார்த்தால் வெஸ்ட்கோஸ்ட் சாலை தெரியும்,
இரவு 2 மணி ஆளில்லாத அந்த சாலையை தனியாக வேடிக்கை பார்த்த போது
ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டி சிக்னலில் பச்சைவிளக்கு எரிவதற்காக நின்று கொண்டிருந்தார்,
அட நாம் அத்தனை போக்குவரத்து நெரிசல் இருக்கும் பெங்களூர் ஏர்போர்ட் சாலையில்
போக்குவரத்து காவலர் பார்க்கமுயாதபடி பேருந்தின் பக்கவாட்டில் ஒளிந்துகொண்டே மோட்டார் வண்டியில்
சிவப்பு விளக்கை தாண்டி வருவோம், இங்கேயோ யாருமே இல்லாத நேரத்திலும் சாலைவிதியை மதித்து நிற்கின்றாரே
என்ற ஆச்சரியத்தில் பெங்களூர் வந்து சில மாதங்கள் நானும் அதை கடைபிடித்தேன்.
கோலாலம்பூரில் முதலிரவு
மூன்று நாள் விடுமுறையில் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் சென்றோம்,
ஜென்டிங் சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவு கோலாலம்பூர் திரும்பினோம்
ஒவ்வொரு ஹோட்டலாகச்சென்று தங்க அறை கேட்டு ஏமாந்து திரும்பினோம்.
மணி இரவு 12.00 தாண்டி விட்டது, என்னோடு வந்தவர்களை சாப்பிட அனுப்பிவிட்டு
நான் மீண்டும் அறை தேடும் வேட்டையில் இறங்கினேன், ஒவ்வொரு இடமாக அலைந்துவிட்டு
திரும்பியபோது ஒருவர் வந்து "வாட் டூ யூ வாண்ட் சார்" என்றார், எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில்
தங்குவதற்கு அறை வேண்டும் என்றேன், "ஓ சாரி, ஐ தாட் யூ ஆர் லுக்கிங் கேர்ள்" என்றார்
அடப்பாவி என் முகத்தை பார்த்தால் அப்படியா தெரிகின்றது,
அதுவும் இல்லாமல் வாழ்நாளில் முதன் முதலில் இப்படி ஒருவர் கேட்டதும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டேன்,
பிறகு அலைந்து திரிந்து ஒரு விடுதிக்கு சென்றோம், தமிழர் விடுதிதான், அங்கே அறை கேட்டபோது
அந்த அம்மணி சாரி சார் உங்களுக்கு இந்த விடுதி சரிவராது, உங்களுக்கு பிடிக்காது என்றார்,
எதை வைத்து அப்படி சொன்னார் என புரியவில்லை?
பரவாயில்லை காலையில் கிளம்பிவிடுவோம் என்றோம்,
சரி முதலில் அறையைச்சென்று பாருங்கள் என்றார், பார்த்தபின் தான் புரிந்தது ஏன் அப்படி சொன்னாரென்று
மூன்று கட்டில்கள் இரண்டு ஒன்றன் மீது ஒன்று, அறைமுழுவதும் ஒரு வகையான நாற்றம்,
காலையிலிருந்து அலைச்சல், அறைத்தேடி தேடி உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தது, எனவே பரவாயில்லை
என்று ஒத்துக்கொண்டோம் குளிர்சாதன வசதியோடு கூடிய அறையை 65RM க்கு கொடுத்தார்,
ரூம் பிரஷ்னர் அடிக்கின்றேன் என்று மல்லிகை மணமுடைய ஒரு ஸ்பிரேயை தெளித்தார்,
மல்லிகை மணம் எனக்கு எதிரி, உடனே தலைவலி வந்துவிடும், வந்துவிட்டது தலைவலியோடு
தூங்காமல் மூட்டைப்பூச்சி கடிகளுக்கிடையில் இனிதே எனது கோலாலம்பூர் முதலிரவு கழிந்தது
அதுசரி முதலிரவுனா யின்னாபா? மொத நாள் ராத்திரிதானே, அதான் ஒவ்வொரு ஊருலயும் என்னோட மொத நாள் ராத்திரிய பத்தி விலாவரியா சொன்னேன், கரீக்டா
27 பின்னூட்டங்கள்:
ஓஓஓஓ.... இப்பப் புரியுது! இதைத்தான் 'லொள்ளூ'ன்னு சொல்றதோ?
நல்ல கான்சப்ட். நல்ல கட்டுரை. சோக்காகீதுப்பா.
//திட்டப்பணி நிமித்தமாக 3 மாதங்களுக்கு அலுவலகத்திலிருந்து சிங்கப்பூர் அணுப்பினர்//
அப்படியே நீங்களும் திட்டமிட்டு இங்கேயே (சிங்கப்பூரிலேயே) தங்கீட்டீங்களா?
////திட்டப்பணி நிமித்தமாக 3 மாதங்களுக்கு அலுவலகத்திலிருந்து சிங்கப்பூர் அணுப்பினர்//
அப்படியே நீங்களும் திட்டமிட்டு இங்கேயே (சிங்கப்பூரிலேயே) தங்கீட்டீங்களா?//
முதல்முறை வந்தது 2002 ஜீலை அதன் பிறகு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்தது 2003 டிசம்பரில், வாழ்க்கையில் பல விடயங்கள் திட்டமிடாமல் நடக்கின்றது அதில் ஒன்றுதான் சிங்கப்பூர் வந்தது
// அவர்களுக்கு நான் அப்படி பேசியது அதிர்சியாக இருந்திருக்கலாம்,
நான் அப்படி பேசியதன் பிண்ணனியை பிறகு தான் அறிந்து கொண்டணர் ஆனால்
எனக்கு தெரியுமே, புத்தூரிலே எனது பலமும் எனது சொந்தங்களின் பலமும். //
ஓ அப்பவே உங்களுக்கு "அவரை".... மன்னிக்கவும்.... "அவருக்கு" உங்களைத் தெரியுமா ?
//லதா said...
// அவர்களுக்கு நான் அப்படி பேசியது அதிர்சியாக இருந்திருக்கலாம்,
நான் அப்படி பேசியதன் பிண்ணனியை பிறகு தான் அறிந்து கொண்டணர் ஆனால்
எனக்கு தெரியுமே, புத்தூரிலே எனது பலமும் எனது சொந்தங்களின் பலமும். //
ஓ அப்பவே உங்களுக்கு "அவரை".... மன்னிக்கவும்.... "அவருக்கு" உங்களைத் தெரியுமா ?
//
அப்படி போடுங்க அருவாளை. இப்போ தான் புரியுது மேட்டரு. அய்யா... அவரு... கலக்குறே குழலி.
ஆஹா உங்களுக்கு இத்தனை முதலிரவுகளா.. ? பொறாமையாயிருக்கு போங்க.. (பதிவை படிக்காமலேயே இடுகிறேன். இனித்தான் படிக்க போகிறேன்)
//அப்படியே இந்த புத்தக மீமீயவும் போட்டுத் தாக்குனீங்கன்னா படிச்சிட்டு பொழைச்சுப் போவோம் இல்லையா?!
//
தப்பான ஆள ஆட்டத்துல இளுத்துட்டரு நம்ம எம்.கே.கொமாரு, அதுல என்ன விசேடம் என்றால் உங்களுடைய புத்தகப்பதிவும்,கோபியின் புத்தகப்பதிவையும் படித்தால் என்னுடையதாகிவிடும், ஆனால் நீங்கள் இருவரும் முந்திவிட்டதால் இப்போது நான் எப்படி எழுதுவது என யோசித்துக்கொண்டுள்ளேன், இந்த வார இறுதியில் எழுதிவிடுவேன்
//ஓ அப்பவே உங்களுக்கு "அவரை".... மன்னிக்கவும்.... "அவருக்கு" உங்களைத் தெரியுமா ?
//
லதா சேட்டையும் விஜய் சேட்டையும் தாங்கமுடியலைப்பா
ஹ்ம்ம்.. புரியுது.. ! வேற ஒரு மேட்டரை எழுத வந்துட்டு .. ஐயோ இத்தனையானு எல்லோரும் கண்ணு வெக்க போறாங்கனு கடைசி நேரத்துல மாத்தி எழுதிட்டீங்க.. ஹ்ம்ம்ம் !
//கடிகளுக்கிடையில் இனிதே எனது கோலாலம்பூர் முதலிரவு கழிந்தது//
தெரியாம கோகிலாவுடன்... அப்படினு படிச்சிட்டேன்.. மன்னிச்சிக்கோபா!!
//நான் எப்படி எழுதுவது என யோசித்துக்கொண்டுள்ளேன், இந்த வார இறுதியில் எழுதிவிடுவேன்
/////
இந்த வார இறுதியில் ரஜினி பற்றி எழுதுறேனு எனக்கு சொல்லி இருக்கீங்க.. ஞாபகம் இருக்கா குயிலி.. சாரி குழலி??
////அதுசரி முதலிரவுனா யின்னாபா? மொத நாள் ராத்திரிதானே,////
ஓ வாங்க வாங்க சின்னதம்பீபீபீ
>>+2 முடித்து புத்தூரில் உள்ள சீனுவாச சுப்புராய தொழில்நுட்பக்கல்லூரியிலே சேர்ந்தேன்<<
இங்கே நீங்கள் படிப்பதற்கு சில அல்லது பல வருடங்களுக்கு முன்பு நானும் படித்தேன்! அப்போது முதல்வர், சந்தான கோபாலன்!
வாசன்
ச்ச்ச்ச்ச்ச்சை.
Speak english or eles
//தெரியாம கோகிலாவுடன்... அப்படினு படிச்சிட்டேன்.. மன்னிச்சிக்கோபா!!
//
யோவ் ஈயம் வீட்டிலே திருமணம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஏதாவது தப்பும் தவறுமா பேசி காலி செய்துவிடாதீர்
//இங்கே நீங்கள் படிப்பதற்கு சில அல்லது பல வருடங்களுக்கு முன்பு நானும் படித்தேன்! அப்போது முதல்வர், சந்தான கோபாலன்!
வாசன்
//
மிக்க மகிழ்ச்சி வாசன், நான் அங்கு படித்தது சில காலங்கள் மட்டுமே
//இந்த வார இறுதியில் ரஜினி பற்றி எழுதுறேனு எனக்கு சொல்லி இருக்கீங்க.. ஞாபகம் இருக்கா குயிலி.. சாரி குழலி??
//
ரஜினிப்பற்றி எழுதிவிட்டேன் நாளை பதிவு செய்கின்றேன்
// அப்போது முதல்வர், சந்தான கோபாலன்! // இதன் மூலமா குயிலியோட உண்மையான பேரு என்னான்னு கண்டுபிடிக்க முயற்சி பண்றாப்ல இருக்கு... உண்மையான பேரு என்னான்னு // அன்புள்ள புருஷோத்தமன் அண்ணா // கிட்ட கேட்டு பாருங்கப்பு....
அப்புறம் இந்த பதிவுக்கு தலைப்பு சரியில்லா.... தமிழ் பண்பாட்டு படி இல்ல... இறுதியா அன்பு எச்சரிக்கை (?!)கொடுக்கிறேன்... தானா மாத்திட்டா நல்லாருக்கும்... இல்ல தமிழ்மணத்துல படம் ச்செ பதிவு எப்படி போடறீங்கன்னு பாக்கறேன்... (புத்தூர் தால் சிங்கையில வேகாதப்பு)
//இறுதியா அன்பு எச்சரிக்கை (?!)கொடுக்கிறேன்... //
இந்த "அன்பு" எச்சரிக்கைக்கெல்லாம் நாங்க ஒன்னும் பயப்படமாட்டோம். "அவங்க" எல்லோரும்தான் எங்க பக்கமாச்சே :-))
"அவங்க" எல்லோரும்தான் எங்க பக்கமாச்சே கொடுக்கறதே 'அவங்க' தானே
அடடே..அண்ணன் காரைக்குடி காலேஜா..எந்த வருஷம் சார்..?? நான் 1988-1992..!!
இன்னொரு ACCETian ஐ அறிந்ததில் மகிழ்ச்சி- நீங்க எழுதற சப்ஜெக்ட் எனக்கு அலர்ஜி என்றாலும். :-)
//இன்னொரு ACCETian ஐ அறிந்ததில் மகிழ்ச்சி-//
எனக்கும் மிக்க மகிழ்ச்சி சுந்தர்ராஜன் அண்ணே...
// நீங்க எழுதற சப்ஜெக்ட் எனக்கு அலர்ஜி என்றாலும். :-) //
அண்ணே நீங்க எதை சொல்கின்றீர் மருத்துவரைப்பற்றிய பதிவுகளா?
ஆம் என்றால் என் பதில் இங்கே
ஒருவரையே எல்லோரும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ எழுதிக்கொண்டிருந்தால் வலைப்பதிவு குழுமத்தின் பதிவுகள் ஒரு தூர்தர்ஷன் சேர்ந்திசையாகிவிடும்...
ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு அவரின் பக்கமிருக்கும் நியாயம் என கருதுவதை எடுத்து வைப்போம் என்றுதான் எழுதுகின்றேன், கருத்தை ஏற்பது ஏற்காததும் அவரவர் விருப்பம்...
1994-98ல் கல்லூரியில் படித்தேன்...
kuzali,
Beautifully written and interesting to read !!!
Actually, your "thalaippu" pulled me to read this :-)
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...
//Actually, your "thalaippu" pulled me to read this :-) //
ஹி ஹி அதுக்குதானே அப்படிவைத்ததே...
இன்னாடா இது இன்னும் பத்திரிகை அனுப்பறேன்னு சொன்ன ஆளு அனுப்பவேயில்லையே, அதுக்குள்ளாற இப்படி ஒரு பதிவை போட்டு தொலச்சிட்டாரே அப்படீன்னு பயந்து பார்த்தேன். சூப்பரு!
அட.. நீங்களும் காரைக்குடி காலேஜ் தானா?! நான் இல்லை!! அதான் கேட்டேன்!!!
ஹி ஹி --இந்த வார்த்தையை 'சுரதா'விலே எப்படி அடிக்கணும்னு சொல்லிகொடுங்க. நம்ம பதிவுக்கு ரொம்ப அவசியமா தேவை! (முன்பு முரசு பயன்படுத்தியபோது பாதி பின்னோட்டங்களில் இந்த வார்த்தைகள் தான்!)
Well written and it was funny how you handled your first night in collage.
Keep writing!
Regards
BG
Dear Kuzhali,
I was the student S S P ,Puttur in 1985-88, I too +2 completed, and joint Polytechnic and faced the same situation. I used 7 0 clock blade to threat Seniors( Junior`s Infact).Glad to know about the SSP studebt. Hope as per ur age btn 90-2000 batch.
Keep going,Regards
Kuzhali,
the same situation after completing my +2 I join in ssp 1985, I used 7 `0 clock blade to threaten my seniors(Juniors!!!!).
Regards,Keep going
Post a Comment