மேல்மருவத்தூர் செவ்வாடையில் ஒரு சமயப்புரட்சி

எத்தனையோ ஆண்டுகள் மேல்மருவத்தூர் வழியாக சென்னை சென்றும் வந்தும் கொண்டிருந்தேன், ஆனால் ஒரு முறைகூட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
கோவிலினுள் சென்றதில்ல, யாம் ஒன்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவனல்ல,
ஆனாலும் ஒரு முறை கூட அங்கே செல்லவில்லை, கடந்த முறை தாயகம்
சென்றிருந்தபோது மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல வேண்டியதாயிற்று.
Image hosted by Photobucket.com
அங்கே சென்றபிறகுதான் தெரிந்தது சத்தமில்லாமல் ஒரு சமயப்புரட்சி நடந்துள்ளதை கண்டுகொள்ள முடிந்தது.

முதலில் மேல்மருவத்தூர் கோவில் பிரபலமாக தொடங்கியது அருள்வாக்கு சொல்வதினால், சாதரணமாக இது மாதிரி அருள்வாக்கு சொல்வது என சில
கோவில்கள் பிரபலமாகும் சில ஆண்டுகளுக்குப்பின் இந்த மாதிரியான அருள்
வாக்கு கோவில்கள் பிரபலம் இழக்கும், ஆனாலும் மேல்மருவத்தூர் கோவிலுக்கு மட்டும் எந்த விதமான வரலாற்று பின்புலமில்லாமல், அவ்வப்போது சங்கராச்சாரியர் மற்றும் சில இந்து மத பெரியவர்களிடமிருந்து மேல்மருவத்தூர் கோவில் வேத,ஆகம விதிகளின் படி செயல்படவில்லை என தாக்குதல் வேறு,இத்தனையிருந்தும் எப்படி இத்தனை மக்கள் சாரி சாரியாக மாலை போட்டு விரதமிருந்து அம்மனை தரிசிக்கின்றனர் என்பது என்னுள் எழுந்த கேள்வி, அம்மனின் சக்தி கோவிலின் சக்தி என்ற விடயங்களுக்குள் நான் செல்லவிரும்பவில்லை, என் கேள்விகளுக்கான விடை கோவிலிலும் அதைத்தொடர்ந்து நான் கவனித்து
வந்த விடயங்களிலும் கிடைத்தது,
Image hosted by Photobucket.com
முதன்முதலில் அங்கே என்னை கவர்ந்தது கோவிலின் சுத்தம், மிக சுத்தமாக கோவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது, அதற்கு சிறிது நாள் முன்புதான் பல நூற்றுக்கணக்கான ஆண்டு வரலாறுடைய சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சென்று அதன் சுத்தத்தை கண்டு மனம் நொந்துபோனேன், யாரேனும் இதற்கெல்லாம் அறநிலையத்துறைதான் காரணம் என கூறுமுன் ஒரு செய்தி சிதம்பரம் நடராசர் கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரவில்லை.
Image hosted by Photobucket.com
அடுத்தபடியாக அங்கே தொண்டூழியம் செய்து கொண்டிருந்த செவ்வாடையணிந்த ஆண் பெண் ஊழியர்கள், மிக மரியாதையுடனும், கண்ணியத்துடன் பக்தர்களை நடத்தினர், பல பெரிய வரலாற்றுடைய ஆகம விதிகளின்படி நடப்பதாக சொல்லப்படும்
பெரிய பெரிய கோவில்களில் கூட பக்தர்களை எரிச்சலுடனும் மிகக்கடுமையாகவும், தன்மானத்தை உரசிபார்க்கும் வார்த்தைகளையும் அனுபவித்தவனுக்கு தொண்டூழியர்களின் அமைதியான அன்பான கணிவுடன் மரியாதையாக நடத்திய விதம் மனதை கவர்ந்துவிட்டது.

அடுத்ததாக வழிபாடுகள் புரியாத மொழியில் நடக்காமல், எல்லோருக்கும் புரிந்த எளிய நடையில் தமிழில் நடைபெற்றது,
இதே தமிழ்முறை மற்றும் அந்தந்த ஊரின் மொழியில் வழிபடுதான் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சக்தி பீடங்களில் நடைமுறையாக உள்ளது
Image hosted by Photobucket.com
மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் எந்த விதமான சாதி வேறுபாடுகளையும் காணவில்லை,
யாரும் ஏற்றிவைக்கப்படவுமில்லை,யாரும் விலக்கிவைக்கப்படவுமில்லை அதன் பின் ஆர்வத்தோடு ஊரிலிருக்கும் சக்தி வழிபாட்டு மன்றத்திலிருக்கும் சிலரை சந்தித்து பேசியபோதும், கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் இருக்கும் அத்தனை சக்தி வழிபாட்டு மன்றங்களும் பெண்களின் கட்டுப்பாட்டிலுள்ளது, மேல்மருவத்தூரில் வேத ஆகம விதிகளின் பெயரைச்சொல்லி பெண்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிமுறைகளும்
விதிக்கப்படவில்லை, எங்கே பார்த்தாலும் ஏதாவது ஒரு விதியை சொல்லி விலக்கி வைக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமான ஒரு ஆண்மீகத்தேடலுக்கு வழி செய்தது
மேல்மருவத்தூர் சக்தி பீடம், மேலும் கோவிலில் தொண்டூழியம் சாதி வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றதும் வியக்க வைத்த விடயம்.

சாதி வேறுபாடின்மையும் வேத, ஆகம விதிகளின் பெயரைச்சொல்லி பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்காமையும், கோவிலின் சுத்தமும், தொண்டூழியர்களின் அன்பும் பணிவும் எல்லோருக்கும் புரியும் அவரவர்களின் தாய்மொழியில் வழிபாடும் நிச்சயமாக இந்து சமுதாயத்தில் செவ்வாடையில் ஒரு சமயபுரட்சியை ஏற்படுத்தியுள்ளது மேல்மருவத்தூர் சக்தி பீடம்.

இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் தான் பங்காரு அடிகளார் என்று கூறுவதில் எனக்கு துளியும் தயக்கமில்லை

மேல்மருவத்தூர் சக்தி பீடத்தின் சமுதாயப்பணியைப்பற்றி நான் குறிப்பிடாததற்கு முக்கிய காரணம்
அவர்களின் சமுதாயப்பணியை சொல்வதல்ல பதிவின் நோக்கம் என்பதே.

படங்கள் உதவிக்கு நன்றி - http://www.omsakthi.org

16 பின்னூட்டங்கள்:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

thanks for appreciating my poem "thookkam vittra kaasuhal:..nanri nanba..bye take care

குழலி / Kuzhali said...

அது சரி ரசிகவ் கமிஷன் எங்கே?

-L-L-D-a-s-u said...

சைடு மேட்டர் பத்தி..

அருமை அண்ணன் ப ம க தலைவர் , ரஜினியையும் கேலி பண்ணுவதை நீங்கள் பார்த்ததில்லையா?

குழலி / Kuzhali said...

//அருமை அண்ணன் ப ம க தலைவர் , ரஜினியையும் கேலி பண்ணுவதை நீங்கள் பார்த்ததில்லையா?//

நான் பார்க்கவில்லையே, எங்கே சத்தியராஜ் படம் தான் போட்டிருந்தார் அதையா கேலி என சொல்கின்றீர்?

rv said...

குழலி அவர்களே
பங்காரு அடிகளாரைப் பற்றி பல மாற்றுக்கருத்துக்கள் உண்டென்றாலும் இந்த விஷயத்தில் நிஜமாகவே சத்தமில்லாமல் ஒரு சமுதாயப் புரட்சி தான் செய்துள்ளார். பெண்ணடிமையை போற்றும் விதிகளை பின்பற்றவில்லையென்பதால் வானம் ஒன்றும் இடிந்து தலையில் விழுகிறமாதிரி தெரியவில்லை. மாறாக எல்லா மக்களும் உரிமையோடு தன்னைப் பார்க்கவருவது கண்டு மகிழ்ச்சியுடன் மேல்மருவத்தூரையும் பிரபலமாகவே ஆதிபராசக்தி வைத்துள்ளாள் என்றே நினைக்க தோன்றுகிறது.

இன்னொரு பிடித்த விஷயம், 100ரூ 500ரூ என்று தெய்வத்தைப் பார்ப்பதற்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்பதில்லை.

நன்றி

குழலி / Kuzhali said...

//பங்காரு அடிகளாரைப் பற்றி பல மாற்றுக்கருத்துக்கள் உண்டென்றாலும் //

எமக்கும்தான்

//இன்னொரு பிடித்த விஷயம், 100ரூ 500ரூ என்று தெய்வத்தைப் பார்ப்பதற்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்பதில்லை.
//
ஆம் தற்போதுதான் நினைத்துப்பார்க்கின்றேன், இதுமாதிரி ஒரு நடைமுறை அங்கு இல்லைதான்...

Anonymous said...

உங்களின் பல கட்டுரைகள் வித்தியாசமான சிந்தனைகளோடு உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்

- பாலமுரளி

வீ. எம் said...

குழலி,
நலமா?
நீங்கள் சொல்லிய பல விஷயங்கள் உன்மை , பாராட்ட வேண்டியது என்றாலும்.. பங்காரு அடிகளார் பற்றிய தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை
கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே மீடீயேட்டர் தேவையில்லை என்பது என் கருத்து..
வீ எம்

குழலி / Kuzhali said...

//கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே மீடீயேட்டர் தேவையில்லை என்பது என் கருத்து..
//

உண்மை உண்மையோ உண்மை, எனக்கும் அதே கருத்துதான் அதனால் தான் கடவுள் பக்தியிருந்தாலும் எந்த சாமியாரையும் நம்பாதவன் நான், இங்கே அவரைப்பற்றி கூறுவதல்ல என் நோக்கம், மேல்மருவத்தூர் சக்தி பீடம் செய்த சமயப்புரட்சியை சொல்வது தான் எனது நோக்கமே...

குழலி / Kuzhali said...

//பங்காரு அடிகளார் பற்றிய தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை //

தற்போது புரிகின்றது, அவரை மார்ட்டின் லூதரோடு ஒப்பிட்டது தானே? மார்ட்டின் லூதர் எப்படி கிறித்துவ மதத்தின் பழமைவாதங்களை முறியடித்தாரோ அதே போல் இந்து மதத்தில் பின்பற்றப்பட்ட சில பழமைவாதங்களை முறியடித்தார் என்பதனால் தான் இந்த ஒப்பீடு...

குழலி / Kuzhali said...

பூனா எப்படி உள்ளது வீ.எம். நான் நலம்

Anonymous said...

nice post. i have heard that unlike other temples where normally menstruating women are barred from visiting the temple and offering prayers, here women can go anytime. if it is true, it should be appreciated because, in our society, even at home , women are secluded during those three days,

raj

Anonymous said...

//கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே மீடீயேட்டர் தேவையில்லை என்பது என் கருத்து..//

மேல் மருவத்தூரில் கருவறையுள் சென்று பூஜை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. எனக்குத் தெரிந்து இந்த நடைமுறை வேறு எந்த கோயிலிலும் இல்லை.

பல விஷயங்களில் பங்காரு அடிகளின் செயல்பாடுகளின் மீது எனக்கு கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் இது போன்ற சில விஷயங்களில் அவர் செய்தது புரட்சி என்பதில் சந்தேகமில்லை

சினேகிதி said...

குழலி நீங்கள் குறிப்பிட்ட ஆலயத்தைப்பற்றி நான் அம்புலிமாமா புத்தகங்களில் வாசித்ததாக ஞாபகம்…இந்தப் பராசக்தி ஆலயம் எப்போது கட்டப்பட்டது?

cholai said...

குழலி..நான் தமிழ்மணத்திற்குப் புதிது! இந்த ஆரம்ப நாட்களில்..நான் ரசித்த நேரடி அனுபவப் பதிவுகளில்..இதுவும் ஒன்று! கலக்குங்கள் !

koothanalluran said...

எனது நண்பரொருவர் ஆதிபராசக்தியின் படத்தை பூசையறயில் வைக்க வேண்டுமென்பதற்காக கடை கடையாக ஏறி இறங்கினார். கிடைத்தும் வாங்காமல் வந்து விட்டார். என்னவென்று வினவியபோது, ஆதிபராசக்க்தியின் எல்லாப் படங்களிலும் பங்காரு அடிகளின் படம் இருக்கிறது. அந்த கேடு கெட்டவனை பூசையறையில் வைக்க மனது இடம் கொடுக்கவில்லை அதனால்தான் வாங்கவில்லை என்றார்.