இந்தியாவின் புனித பசு (பாகம் - 1)
2003ல் ஜீலை 1, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (உயிர்காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர்த்து) தங்களது வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர், இதற்கு பல மாதங்களுக்கு முன்பே பறிக்கப்பட்ட பல சலுகைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அரசின் அலட்சியத்தாலும் வேலை நிறுத்த அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே வெளியிட்டும் அரசு கண்டுகொள்ளாததாலும் தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்
ஈட்டியவிடுப்பு குறைப்பு, முழு ஓய்வூதியம் கிடைக்க வேலை செய்திருக்க வேண்டிய ஆண்டுகள் அதிகரிப்பு, பி.எஃப் மற்றும் கிராஜிவிட்டி பாதி மட்டுமே ஓய்வு பெறும் போது பணமாக தரப்படும், மீதி ஆறாண்டு காலத்திற்கான பத்திரமாக தரப்பட்டதை (செத்த பிறகு பாலூற்ற இந்த பத்திரங்கள் பயன்படலாம்) மீண்டும் பணமாக வழங்க சொன்னது, அரசாங்க வேலைக்கு பணியமர்த்துதலை நிறுத்தி வைத்ததை திரும்ப பெற வலியுறுத்தல் என்பன அவர்களின் கோரிக்கைகளில் சில ஆனால் இவர்கள் சம்பள உயர்வு எதுவும் கேட்கவில்லை.
சமூகநீதிக்காக சமத்துவ சமுதாயத்தை உருவாக்க, எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக பிற்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முனைந்த மத்திய அரசை எதிர்த்து அகில இந்திய மருத்துவ கழகத்தின் (AIMS) அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு கூட வாய்ப்பளிக்காமல் நேரமளிக்காமல் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர் (தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் வேலை நிறுத்தத்தில் இறங்காதவர்கள் மருத்துவர்கள், இங்கேயோ வேலைநிறுத்தத்தில் இறங்கிய ஒரே ஆட்கள் மருத்துவர்கள்) தமது பணி, ஊதியத்தில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத போதும் அரசாங்கம் கொண்டுவந்த இடஒதுக்கீட்டை ஆதிக்க சாதிவெறி ஏறி எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்
நீதிபதி கற்பக வினாயகத்தின் அரசாங்க நடவடிக்கைக்கான இடைக்காலத்தடையை சில மணிநேரங்களில் உயர்நீதிமன்ற பெஞ்ச் ரத்து செய்தது மட்டுமல்லாமல் முதலில் உடனடியாக வேலைக்கு செல்லுங்கள், வேலைக்கு செல்லாமல் எதை பேசவும் உரிமையில்லை, பணி நீக்கம், இடை நீக்கம் நடவடிக்கை அனைத்தையும் பிறகு பேசலாம் என மாதசம்பளக்கார அரசு ஊழியர்களை இடித்துரைத்து உடனடியாக பணிக்கு செல்ல ஆணையிட்டது.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் இந்த சுட்டியில், அதிலிருந்து சில பகுதிகள்
(A) There is no fundamental right to go on strike:--
Law on this subject is well settled and it has been repeatedly held by this Court that the employees have no fundamental right to resort to strike.
(B) There is no legal / statutory right to go on strike. There is no statutory provision empowering the employees to go on strike.
(C) There is no moral or equitable justification to go on strike. Apart from statutory rights, Government employees cannot claim that they can take the society at ransom by going on strike. Even if there is injustice to some extent, as presumed by such employees, in a democratic welfare State, they have to resort to the machinery provided under different statutory provisions for redressal of their grievances. Strike as a weapon is mostly misused which results in chaos and total maladministration. In case of strike by Doctors, innocent patients suffer;
We agree with the said submission. In the prevailing situation, apart from being conscious of rights, we have to be fully aware of our duties, responsibilities and effective methods for discharging the same. For redressing their grievances, instead of going on strike, if employees do some more work honestly, diligently and efficiently, such gesture would not only be appreciated by the authority but also by people at large. The reason being, in a democracy even though they are Government employees, they are part and parcel of governing body and owe duty to the Society.
2. This reinstatement in service would be subject to unconditional apology as well as undertaking to the effect that employees would abide by Rule 22 of the Tamil Nadu Government Servants Conduct Rules 1973 which provides as under: -"22. Strikes: No Government servant shall engage himself in strike or in incitements thereto or in similar activities."
3. It is also stated that Government will proceed under the Disciplinary Rules only against those employees who had indulged in violence and who had incited the other employees to go on strike.
We also agree that misconduct by the government employees is required to be dealt with in accordance with law.
அகில இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட மருத்துவர்களுக்கு வேண்டுகோள்/ஆணையிட்ட உச்ச நீதிமன்றம் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மருத்துவர்கள், மாணவர்கள் மீது எடுக்க கூடாது என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
The court had also assured the medicos that the Government would not take any action against them for acts done during the course of the strike.
A vacation bench comprising Justice Arijit Pasayat and Justice L S Panta said if the strike is called off, the government should appropriately consider the feelings of students and not take any punitive action.
தமிழக அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப ஆணையிடப்பட்டது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு மூன்று நாள் வழங்கப்பட்டது.
The Court said the government shall recall the doctors whose services were terminated during the agitation and they should be given three days time to join work.
தமிழக அரசு பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்ட சமயத்தில் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்த தகவல் கீழே, அதன் படி வேலை நிறுத்த காலம் சம்பளமில்லா விடுப்பு காலமாக கருதப்படும்(அதாவது No work, No Pay)
"A submission has been made by the State Government among other things in the Apex Court that for the employees who would be reinstated in service, the period of absence will not be treated as break in service. But the treatment of period of absence up to July 24, 2003, as leave on loss of pay in respect of all employees and subsequent periods in respect of all employees who do not possess leave at credit runs counter to the above submission as leave and loss of pay will not count for the purpose of qualifying service under Pension Rules and is deducted from the qualifying service for pension," it said.
06 ஜீலை 2006 அன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்திபடி
போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்ற உத்தரவு நீதிபதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது, மத்திய அரசு இது போல் செயல்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, உங்கள் அரசு ஒரு முன்மாதிரி முதலாளி போல் செயல்பட வேண்டும் என்று கூறுங்கள் என்று கடுமையாக கண்டிக்கும் வகையில் பேசினார்.
தமிழக அரசு ஊழியர்களின் போராட்ட மற்றும் பணி நீக்க காலங்களில் 80க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்தனர், ஒன்பது நடத்தை விதிகளை மீறியதாக அகில இந்திய மருத்துவ கழகத்தின் இயக்குனர் பதவியிலிருந்து வேணுகோபாலை 17 பேர் அடங்கிய எய்ம்ஸ் நிர்வாக குழுவில் 14 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது, வேணுகோபாலின் பதவி நீக்கத்தை ரத்து செய்ய கோரி In case of strike by Doctors, innocent patients suffer; என்று உச்ச நீதிமன்றம் கருதும் மருத்துவர்கள் செய்த வேலைநிறுத்தத்தினால் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்தார்.
தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது கீழே
We also agree that misconduct by the government employees is required to be dealt with in accordance with law.
கடைசி செய்தியாக வேணுகோபாலின் பதவி நீக்கத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முழுவிபரம் இந்த சுட்டியில்.
வாழ்க சம நீதி, வாழ்க சமூக நீதி
References
http://judis.nic.in/supremecourt/
qrydisp.asp?tfnm=19215
http://www.dinamalar.com/
2006july06/fpnews3.asp
http://www.tribuneindia.com/
2003/20030807/main1.htm
http://www.hindu.com/
2004/07/02/stories/2004070205190400.htm
http://in.rediff.com/news/quota06.html
http://in.rediff.com/news/2006/may/31quota1.htm
http://www.hindustantimes.com/
news/181_1710133,001302220000.htm
http://www.rediff.com/news/2003/aug/06sc.htm
http://pd.cpim.org/2004/1107/11072004_ardhendu%20dakshi.htm
http://www.rediff.com/news/2003/jul/21tn.htm?zcc=rl
http://www.indianexpress.com/sunday/
fullcoverage/38.html
http://www.indianexpress.com/sunday/story/7261.html
http://www.deccanherald.com/deccanherald/
aug07/i1.asp
http://www.hinduonnet.com/
fline/fl2104/stories/20040227004202600.htm
http://www.hinduonnet.com/
fline/fl2015/stories/20030801004201500.htm
http://www.indianexpress.com/sunday/story/7975.html
http://www.newkerala.com/news3.php?action=fullnews&id=18327


