பிள்ளையார் வேற்றுகிரகவாசியா?
ஏன்சியன்ட் ஏலியன்ஸ் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு, கேட்க கேட்க சுவாரசியமாக இருக்கும் ஒன்று, இது குறித்து ஹிஸ்டரி சேனல் பல டாக்குமெண்ட்ரிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் பிள்ளையார் ஒரு வேற்று கிரகவாசியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்கள். இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள முகமூடிகள் அமெரிக்க ஜெட் பைலட்டுகள் சுவாசிப்பதற்கு ஏற்ப அணிந்துள்ள ஆக்சிஜன் மாஸ்க்குகள், பிள்ளையாரின் தும்பிக்கை என்பது வேற்றுகிரகவாசி சுவாசிப்பதற்கு ஏற்ற ஒரு குழாயாக இருந்திருக்கலாம், குழாய் முகமூடி அணிந்து வேற்றுகிரகவாசி இவ்வுலகிற்குள் வந்திருக்கலாம், அதைகண்ட இந்திய மக்கள் அது குறித்து புரியாமல் இந்தியாவில் இருந்த யானையுடன் ஒப்பிட்டு அவர்களை யானை முகம் கொண்ட கடவுளாக ஆக்கியிருக்கலாம்.
இந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ள பிள்ளையார் சிலைகள் அல்லது அது போன்ற முக அமைப்புடைய யட்சன் சிலைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன, எனவே இந்த யட்சன், பிள்ளையார் எல்லாம் வேற்றுகிரகவாசி பைலட்டுகளாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உண்மையோ பொய்யோ கேட்கவும் யோசிக்கவும் நம்பும்படியாகவுமாக சுவாரசியமாக உள்ளதல்லவா!

0 பின்னூட்டங்கள்:
Post a Comment