டோண்டுவின் பெயரில் பின்னூட்டம் - ஒரு பார்வை

வலைப்பதிவுகளில் டோண்டு அவர்கள் மிக கடுமையானதொரு பிரச்சினையை
சந்தித்துக்கொண்டுள்ளார், அவருக்கு ஆதரவாக பல பதிவுகள், பின்னூட்டங்கள்
எல்லாம் வந்துவிட்டன. அவரின் பெயரில் வேறொருவர் பின்னூட்டமிடுவது மிகவும்
கண்டிக்கத்தக்கது, எத்தனை கருத்துபிரச்சினையிருந்தாலும் அதை கருத்தால்
மட்டுமே எதிர்கொள்ளவேண்டும்.

தமிழ்மணம் வரும்முன் சில குழுமங்களிலும் சில ஃபாரம்களையும் படித்துள்ளேன்
பல இடங்களில் வாதம் விவாதமாகி பின் விதன்டாவாதமாகிவிடுகின்றது.
அது பின் ஆபாச வார்த்தைகளை வீசும் கேவலமான இடமாகிவிடுகின்றது
விளைவு அதிலிருந்து பலர் விலகுகின்றனர்.

இங்கு முதலில் தமிழ்மணத்தில் ஒரு விதமான ஆரோக்கியமான சூழ்நிலை
இருந்ததாகவே கருதினேன், பதிவிடுபவர்களும் பின்னூட்டமிடுபவர்களும்
ஒரு மனமுதிர்ச்சியிடன் கருத்துகளை எதிர்கொள்வதாகவே எமக்கு பட்டது

எனவே தான் எளிதில் மற்றவர்களால் தாக்கப்படகூடிய கருத்துகளை கூட
தைரியமாக கூறினேன், அதில் டோண்டுவின் ஊக்குவிப்பும் உண்டு

தமிழ்மணத்தினால் தான் எனக்கு எம்.கே.குமார்,ஈழநாதன்,அன்பு,தாஸீ(ஜோஸ்),விஜய்,ரமேஷ்,ஷாந்தன்,அருள், மூர்த்தி மற்றும் பல நண்பர்கள் கிடைத்தனர்


முத்து,கோ.கணேஷ் இந்த வயதில் இவ்வளவு எழுத்துதிறமையா என வியக்கவைத்தவர்கள், ஈழநாதனின்,சுந்தரமூர்த்தி,சுந்தரவடிவேல் மற்றும்
பலரின் பதிவுகளின் கருத்தாழம் வியக்கவைத்தது.

ஞானபீடத்தின் நகைச்சுவை பதிவுகளும் வீ.எம். எல்.எல்.தாஸீவின் நகைச்சுவையுடன்
கூடிய கருத்து பதிவுகளும், அல்வாசிட்டி விஜயின் பல பரிமாணங்களும் வியக்கவைத்தன என்பதில் வேறு கருத்தில்லை,

டோண்டு அவர்களின் வேலை அனுபவம் பதிவாக வெளிப்பட்டதும், மூர்த்தியின் அற்புதமான பல பதிவுகளும் ரசிகவ் ஞானியார் மற்றும் இப்னு,பஃக்ருத்தீன். கவிதைகளும்
காணக்கிடைக்காதவை, சந்திரவதனாவின் ஒவ்வொரு பதிவும் பாதுகாக்கப்பட வேண்டியவைகள், ரோசாவந்தின் வித்தியாசமான பார்வை ஒரு புது அனுபவம்,

மனுஷ்யபுத்திரனின் எழுத்தில் அதிகம் கவரப்பட்டவன், அவரும் வலைப்பதிகின்றார்
என்றறிந்தவுடம் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

இன்னும் பெயர் குறிப்பிட்டு சொல்லாத எத்தனை எத்தனையோ பதிவுகள் பதிவர்களின்
படைப்புகள் பாதுகாக்கப்படவேண்டியவை ஆனால் என்ன நடக்கின்றது இங்கே?

மாலன் போன்ற எழுத்தாளர்களையே மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம்,
ஏற்கனவே காஞ்சிபிலிம்ஸ் கடையை மூடிவிட்டார், என்ன ஏதென்று தெரியவில்லை,
தனிமடல் அனுப்பியும் பதிலில்லை, இங்கே டோண்டு மற்றும் சிலரின் பெயரில்
பின்னூட்டமிடுவதும், பின்னூட்டமிடுபவரை பலரும் வசை பாடுவதும் ஆபாசமாக
பேசுவதும் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை தருவதில்லை, இது தொடர்ந்தால்
பலரும் கடையை மூடிவிட்டு சென்றுவிடுவர்.


prejudice midsetல் உள்ளவர்களை விவாதம் செய்து யாரையும் மாற்றமுடியாது,
அவரவர்கள் கருத்தை எடுத்து வைப்போம், ஏற்றுக்கொள்பவர்கள் கொள்ளட்டும்
மறுப்பு தெரிவித்து விளக்கம் சொல்லமுடிந்தால் சொல்வோம் இல்லையென்றால்
அமைதியாக நம் வேலையைப்பார்த்துக்கொண்டு செல்வோம்.

நானும் மற்றொரு வலைப்பதிவரும் கடுமையாக கருத்து மோதல் செய்து கொண்டுள்ளோம், அவர் பதிவை நானும் என் பதிவை அவரும் நையாண்டி
செய்து கொண்டிருக்கின்றோம் ஆனால் எந்த இடத்திலும் நிதானமிழக்கவில்லை

எனவே அடுத்தவர்களின் பெயரில் பின்னூட்டமிடுபவர் சற்று சிந்திக்கவும்
வலைப்பூக்களின் ஆரோக்கியம் கெட்டுக்கொண்டுள்ளது,
அதை உடணடியாக சரிசெய்ய வேண்டும், இல்லையென்றால் காசி,மதி மற்றும்
இன்ன பலரின் நேரத்தையும் உழைப்பையும் சாப்பிட்டு வளர்ந்து வரும் தமிழ்மணம்
அதன் நோக்கத்தை விட்டு தவறிவிட நாம் காரணமாக இருக்கக்கூடாது.

நம்மில் எத்தனை பேருக்கு கண்டிக்க உரிமையிருக்கின்றது.
எத்தனைபேர்களின் உணர்வை முகத்தை காட்டிக்கொண்டும்,
முகத்தை மூடிக்கொண்டும், அனானிமசாகவும் பின்னூட்டங்களிலும்
வலைப்பதிவுகளிலும் கொச்சைப்படுத்துகின்றோம், காயப்படுத்துகின்றோம்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபடும் ஒரு தலைவனின் வெளிநாடு
பயணத்தை கிண்டல் அடிக்கின்றோம், குறிப்பிட்ட சாதியை குறிவைத்து
தாக்குகின்றோம், பல தலைவர்,நடிகர்களின் பின்னால் அவர்கள் சொன்னால்
கேட்கக்கூடிய லட்சக்கணக்கான மக்களின்(நாம சொன்ன நம்ம வீட்டு நாய்குட்டி கூட கேட்காது) உணர்வை பின்னூட்டங்களிலும்
பதிவுகளிலும் கிழி கிழியென்று கிழிக்கவில்லையா?
உயிர்,பொருள் ஆவி கொடுத்து சொந்த மண்ணிற்காக போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்களை அவர்களிம் இதயத்தை கிழித்தெடுத்து தரையில்
போட்டு மிதிக்குமாறு பின்னூட்டமும் பதிவுமிடவில்லையா நாம்?
நமக்கு எந்த அளவிற்கு தட்டி கேட்க உரிமையுள்ளது? அதற்காக கேட்ககூடாது என
சொல்லவில்லை, கேட்கும்போது நம் மனசாட்சியையும் ஒரு முறை கேட்டுக்கொள்ளவேண்டும், அவரை கண்டிக்கும் நாம், அதே தவறை நாமும் செய்யக்கூடாது செய்ய மாட்டோம் என சொல்வோமா?

அவர் செய்யும் தவறு பெரிய அளவு, மற்ற பலர் செய்வது அதனினும் குறைந்த அளவு, அவ்வளவே...
தப்பு என்ன பனியன் சைசா ஸ்மால், மீடியம், லார்ஸ் என்பதற்கு
எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான்.(நன்றி - அன்னியன் திரைப்படம்)

ஒரு விபச்சாரி(பாலியல் தொழிலாளி)யின் மீது கல்லெறிந்தவர்களை
தவறே செய்யாதவர்கள் கல் எரியட்டும் என ஏசு கூறினாரே,
அந்த கூற்றை ஒரு முறை நாம் சிந்திப்போம்.

இந்த வலைப்பூக்களும் தமிழ்மணமும் நமக்கு கிடைத்த ஒரு
அருமையான ஊடகம், அதை வீணாக்கிவிட வேண்டாம் என்ற ஒரு ஆதங்கம் தான்

இந்த பதிவை கண்டபிறகாவது மற்றவர்கள் பெயரில் பின்னூட்டமிடுவதை
நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமாக, மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளாத
வகையில் மற்றவர்களின் மனதிற்கும் ஆரோக்கியத்திற்கும் குந்தகம் விளைவிக்காத
வகையில் எதிர்ப்பை காட்டிக்கொள்ளட்டும், மற்றவர்கள் பதிவில் குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்குமாறு அவரை கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்ந்தால்
தமிழ்மணத்திலிருந்து தொடர்ந்து பலர் விலகுவார்கள் என்பது கசப்பான உண்மை.

பின் குறிப்பு:
இந்த பதிவிடுவதினால் ஏற்படும் பின்விளைவுகள், குத்தப்படும் முத்திரை
அத்தனையும் அறிந்தே இந்த பதிவை இடுகின்றேன். அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படாமல் தான் இந்த பதிவிடுகின்றேன்.

18 பின்னூட்டங்கள்:

முகமூடி said...

// நானும் மற்றொரு வலைப்பதிவரும் கடுமையாக கருத்து மோதல் செய்து கொண்டுள்ளோம், அவர் பதிவை நானும் என் பதிவை அவரும் நையாண்டி செய்து கொண்டிருக்கின்றோம் // அவர் யார் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த முடியுமா ??

// ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபடும் ஒரு தலைவனின் வெளிநாடு பயணத்தை கிண்டல் அடிக்கின்றோம் // ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபடும் தலைவர் என்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? எனில் எந்த தலைவர் கிண்டல் அடிக்க தகுதி வாய்ந்தவர்?? அந்த தலைவரை கிண்டலடித்தால் அவர் சார்ந்த சமுதாயத்தவர் கோபிக்க மாட்டாரா??

// மறுப்பு தெரிவித்து விளக்கம் சொல்லமுடிந்தால் சொல்வோம் இல்லையென்றால் அமைதியாக நம் வேலையைப்பார்த்துக்கொண்டு செல்வோம் // இதில் கூத்து என்னவென்றால் டோண்டுவுக்கு மன உளைச்சல் தருபவர் சொல்லும் விளக்கம்... டோண்டு ஜாதி வெறியராம்... அதனால் இவர் அவரை அடக்குகிறாராம்.. அதாவது சாதி முறை அடக்குமுறை செய்த ஒரு சமூகத்தில் இருந்து வந்தவரை (போலி சொல்வதுதான்) சாதி முறை அடக்குமுறையை எதிர்ப்பவர் அடக்குகிறார். நல்ல கூத்துதான்...

// மாலன் போன்ற எழுத்தாளர்களையே மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம் // நஷ்டம் அவருக்கல்ல என்பதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி

பினாத்தல் சுரேஷ் said...

இதே கருத்தை ஒட்டி நான் போட்ட பதிவுக்கு வந்த பின்னூட்டங்களால் நான் நடுங்கிக் கொண்டு இருக்கிறேன் - என்னை ஒட்டகம் மேய்ப்பவன் என்று ஒருவர் கண்டுபிடித்துவிட்டார். இன்னொருவர், என் பதிவை அழிப்பதற்கு முன் கருணையுடன் ஒரு கடைசி சந்தர்ப்பம் அளித்து உள்ளார்!!

உங்கள் பதிவுடன் நான் ஒத்துப்போகிறேன் - கருத்தில் வேறுபாடோ, கோபமோ இருந்தாலும் அதைக் காட்டிய வழிமுறையால்தான் அந்த நபரை இழிபிறவி எனக் கூறுகிறோம் என்பதையே புரிந்துகொள்ளாமல் (அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல்) நீ அவருக்கு ஆதரவா, அவர் கட்சியா ஜாதியா எனக் கேட்பவருக்கு என்ன பதில் கூற முடியும்?

aazhiyaal said...

நல்லது. சொல்ல வேண்டியதை சரியான நேரத்தில் துணிவாகச் சொல்லியிருக்கிறீங்க - anonymous பின்னூட்டங்களுக்கு பயப்பிடாமல்.

dondu(#11168674346665545885) said...

நன்றி குழலி அவர்களே. கெட்டதிலும் நல்லது நடந்துள்ளது. என் பெயரைக் கெடுப்பதற்காகச் செய்த மற்றும் செய்யப்படுகிற முயற்சிகளுக்கெதிராக இவ்வளவு குரல்கள் எழுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதலில் என் பெயரில் இன்னொரு வலைப்பதிவு வந்தது. அங்கு போய் க்ளிக் செய்தால் என் பக்கம் மெடா ரீடைரெக்ஷன் உத்தி மூலம் காட்சிக்கு வந்தது. இந்த இடத்தில் நான் ஒரு காரியம் செய்தேன். "என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" என்றத் தலைப்பில் ஒரு பதிவு போட்டேன். அது இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகவே மெடாரீடைரெக்ஷன் மூலம் என் பதிவுக்கு வருபவர்கள் கணகளில் இப்பதிவுதான் முதலில் தென் படும். போலி ஆசாமி இதை எதிர்ப்பார்க்கவில்லை. இந்த குயுக்தியான முறையைப் பற்றியும் பல முறை எழுதி விட்டேன். இப்போது அம்மாதிரி வருவதில்லை. போலி டோண்டுவின் ப்ளாக்கர் எண்ணுக்கு ப்ரொஃபைலே இல்லை. இப்போது டுண்டு என்ற பெயரில் அவர் உலா வந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் முகவரியில்லை. எல்லாரும் பிச்சைக்காரார்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே கதிதான் துர்வாசனுக்கும் பாப்பானுக்கும்.

இப்போது டுண்டு தன்னை ஈழ ஆதரவாளராகக் கூறிக்கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ் எழுத முயற்சிக்கிறார். இதெல்லாம் திசைதிருப்பச் செய்யும் உத்திகள். அவர் யார் என்பது எனக்கும் இன்னும் பலருக்கும் தெரியும். எவ்வளவு தரக்குறைவான தமிழ் கெட்ட வார்த்தைகளை அவர் உபயோகிப்பார் என்பதும் தெரியும். தாஸின் பதிவில் அவர் காசியின் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளார். பார்க்க http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html#comments

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்

Vijayakumar said...

குழலி இந்த கேவலங்களை மதிப்பு கொடுத்து கண்டனம் தெரிவிப்பதால் தான் இந்த ஆட்டம் ஆடுகிறார். நீங்கள் சொன்ன மாதிரி கண்டுக் கொள்ளாதீர்கள் இந்த போலிகளை. அவரவர் அவரவர் வேலை பாருங்கள். பதியுங்கள். போலி என்று தெரிந்தால் பின்னூட்டத்தை தூக்கிவிடுங்கள். இன மத தனிமனித பெயருடன் பின்னூட்டம் வந்தால் மறுப்பு ஏதும் இல்லாம் அழித்து விடுங்கள். நாயை கல் கொண்டு எறிவதால் மிரண்டு பிராண்டுகிறது. கண்டுக்கொள்ளாமல் சென்றால் சிறிதுநேரம் குலைத்துவிட்டு போய்விடும். அனாவசியமாக கழிவுகளை பெரிய ஆள் ஆக்க வேண்டாம்.

Saran said...

நல்ல பொறுப்பான படிவு, குழலி. கவலை படாதீர்கள்... அவர்கள் திருந்தி விடுவார்கள். நன்றி.

சிங்காசரன்

ஏஜண்ட் NJ said...

"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது."

சந்தடி சாக்குல, ஞானபீடம் ஒரு பொழப்பத்த ஆளு-ன்னு சொல்லிப்புட்டீரய்யா ! வாழ்க நீவிர்; வளர்க உமது புகழ். !

- ஞானபீடம்.

Anonymous said...

Dondu sir,

Did you notice the comment in your name in the GOYINDSAMY blog about Kizhakku pathippakam? I think it is not yours .For your attention ...

தகடூர் கோபி(Gopi) said...

போலி டோண்டுவுக்கு(கண்டிப்பாய் இதைப் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்),

இதுவரை நீங்கள் செய்து வந்தது என்ன? அவை ஏன் வெற்றி பெறவில்லை என அலசுவோம்.

1) டோண்டு அவர்களின் பெயரில் போலிப் பின்னூட்டம் இடுகிறீர்கள்
2) அனானிமஸ் பின்னூட்டம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் டோண்டு அவர்களின் ப்ளாக்கர் எண்ணைப் பயன்படுத்துகிறீர்கள்.
3) மெடா ரீடைரக்ஷன் பயன்படுத்துகிறீர்கள்.
4) பல பல ப்ளாக்கர் எண்களைப் பயன்படுத்தி டோண்டு அவர்களின் பெயரில் பின்னூட்டம் இடுகிறீர்கள்.
5) இன்னும் பல யுக்திகளைப் பயன்படுத்தி பின்னூட்டம் இட்டது டோண்டு தான் எனச் சிலரை நம்பவும் வைத்துவிடுகிறீர்கள்.

ஆனால் பெரும்பாலானோர் (அதிலும் என் போன்ற பாமரர்கள் கூட) பின்னூட்டத்தில் சில வரிகளைப் படிக்கும் போதே அது போலி என அறிந்து கொள்கிறார்கள்.

ஏனென்றால்,

நீங்கள்:

1) அவர் பயன்படுத்தும் மொழி நடையைப் பயன்படுத்துவதில்லை.
2) அவர் பயன்படுத்தாத (அல்லது யாருமே பயன்படுத்த யோசிக்கும்) தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
3) ஒவ்வொரு முறையும் உங்களின் மொழி நடை மாறுகிறது.

இக்குறைகளைக் களைந்தால் நீங்கள் உண்மையான டோண்டு என அனைவரும் நம்பக் கூடும். ஆனால் உங்களின் நோக்கமான "டோண்டுவை இழிவு படுத்துதல்" நிறைவேறாது.

அவர் உயர்சாதி ஆதிக்க வெறியர் அவரை அடக்க இவ்வாறு செய்கிறேன் என்கிறீர்கள். சரி, உங்கள் கூற்றுப் படி அவர் உயர்சாதி வெறியர் என்றே ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். இவ்வளவு தொழில் நுட்ப அறிவு பெற்ற நீங்கள், ஒரு ஆதிக்க வெறியரை(உங்களின் பார்வையில்) இவ்வளவு கேவலமான குறுக்கு வழிகளில் எதிர்ப்பதா?

என்ன செய்யலாம் நீங்கள் ? உங்கள் தொழில் நுட்ப அறிவை தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு பயன் படுத்திக் காட்டி, நீங்கள் அனைவராலும் போற்றப் படும் போது "நான் உயர்சாதி வெறிக்கு எதிரானவன்" என்று பேசலாம் அப்போது உங்கள் சொல் அம்பலம் ஏறும்.

நேரம் கிடைத்தால் ஒரு முறை Men of Honor என்ற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள்.

இனியாவது நேரான வழியில் சிந்திப்பீர் என்ற நம்பிக்கையில்,

ப்ரியமுடன்,

கோபி

வீ. எம் said...

மிக நல்ல பதிவு ..மிக தெளிவாக சொல்லியதற்கு நன்றி.
வந்த 20 வது நாளில் "வலைப்பூ - சின்ன நெருடல்' என்ற தலைப்பில் சுருக்கமாக இங்கே நடக்கும் விதன்டாவதையும், சாதி மோதலையயும் சொன்னேன் , அந்த பட்டியலில் மற்றவர் பெயரில் கருத்து போடுவதும் சேருகிறது !
இப்படி அந்த சிலரை பற்றி முக்கியத்துவம் கொடுத்து பேசினால் தான் அவர்களுக்கு இன்னும் அதிகமாக செய்ய தோன்றும்.. கண்டுக்கொள்ளாமல் விடுவதே நல்லது !

வீ எம்

வீ. எம் said...

டூப்ளிகேட் dondu ,

தங்களுக்கு இருக்கும் இந்த தொழில்நுட்ப அறிவை , ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தலாமே!!
சற்று சிந்தித்து பாருங்கள்... வலைப்பூ ஆரம்பியுங்கள். தங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்லுங்கள்.. ஆரோக்கியமான வாதத்தை வையுங்கள் .. நியாயமாக இருந்தால் நாங்களும் ஆதரிக்கின்றோம்.. அதை விட்டு ஏன் இப்படி?

Duplicate DONDU please "Dont DO "

வீ எம்

Ganesh Gopalasubramanian said...

குழலி நீங்கள் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லியுள்ளீர்கள். மனது புண்படும் படியான பின்னூட்டங்கள் அவ்வப்போது வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் இதுகாலம் வரை முன்னேறிக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்கள் பலர். அவர்களின் திடத்திற்கு வணக்கங்கள்.

டூப்ளிகேட் டோண்டு தெரிந்தோ தெரியாமலோ ஒரிஜினல் டோண்டு சாரை பிரபல படுத்திவிட்டார். பாருங்கள் அவரின் வலைப்பதிவில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை. சரியான முறையில் ஒரு தவறை செய்திருக்கிறார். பாராட்டுக்குறியவர்.

அது சரி கோபி இப்படி என்சைக்ளோபீடியாவில் சொல்வது போல் அவரது (டூப்ளிகேட் டோண்டுவின்) ஆக்கங்களைச் சொல்ல வேண்டுமா? எப்படியோ "Men of Honor"க்கு இண்ட்ரோ கொடுத்ததற்கு நன்றி.

// இவர் அவரை அடக்குகிறாராம்.. அதாவது சாதி முறை அடக்குமுறை செய்த ஒரு சமூகத்தில் இருந்து வந்தவரை (போலி சொல்வதுதான்) சாதி முறை அடக்குமுறையை எதிர்ப்பவர் அடக்குகிறார். நல்ல கூத்துதான்... //
முகமூடி சார் ("மானே தேனே பொன்மானே"ன்னு போட்டுக்குங்க)...சும்மா சொல்லக்கூடாது .....சரியான நெத்தியடி........

இப்னு ஹம்துன் said...

நல்லதொரு பதிவு குழலி.
இனியேனும் போலிகள் திருந்தட்டும்

மு. சுந்தரமூர்த்தி said...

Kuzhali,
Could you please send an email to me? The email address in my profile. I saw my name in your post and I need to send personal message in this regard.

குழலி / Kuzhali said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, நான் பதிவில் போட்டது வெறுமனே டோண்டு மற்றும் சிலரின் பெயரில் போலியாக இடப்படும் பின்னூட்டத்தைப்பற்றி மட்டுமல்ல, பதிவின் இரண்டாம் பகுதி ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்காமல், ஆரோக்கியமான விவாதங்களை செய்யாமல் பலரின் உணர்வுகளை புண்படுத்தும்படியான பதிவுகளையும் பின்னூட்டங்களையுமிடுவது பற்றியுமான கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்,

சிலரின் பெயரில் பின்னூட்டமிடுவது எத்தனை கேவலமானதோ அதே மாதிரி ஆரோக்கியமான விமர்சனமாக விமர்சிக்காமல் கேவலமாக பிறரை விமர்சிப்பதும் அத்தனை கேவலமானது என்பது எனது நம்பிக்கை.

டோண்டுவின் பெயரில் பின்னூட்டமிடுபவர் என்பது பிரச்சினையின் ஒரு வெளிப்பாடுதான், அது வெளியில் அடிக்கும் நாற்றம்தான்,
அந்த நாற்றத்தை போக்க ஊதுபத்தியும் வாசனைதிரவியமும் பூசமுயற்சிக்கின்றோமே தவிர உண்மை பிரச்சினையை கவணிக்காமல் விடுகின்றோம். யாரையும் விமர்சிக்கவே வேண்டாம் என்பதல்ல என் நிலைப்பாடு, விமர்சனத்தை ஆரோக்கியமாக வைப்போம் என்பது தான் என் நிலைப்பாடு.

டோண்டுவிற்கு இந்த பிரச்சினை வரும்முன் ரோசாவிற்கும் மற்ற சிலருக்கும் இந்த பிரச்சினை வந்துள்ளது, அப்போதே கடுமையாக கண்டிக்காமல் விட்டது இப்போது இந்த நிலைக்கு வந்து நிற்கின்றது.

ஆரோக்கியமான விமர்சனங்கள் செய்து நிறைய நல்ல படைப்புகள் கொடுத்து , நமது கருத்துகளை வெளிப்படுத்தும் தளமாக, சிலரின் அரும்முயற்சியால் உருவாகி வளரும் தமிழ்மணத்தை பயன் படுத்துவோம்

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
neyvelivichu.blogspot.com said...

i think we should shift back to not letting the ananymous comments. after i read all these from your blog, i read aruna srinivasan's blog http://aruna52.blogspot.com/2005/06/blog-post_29.html

this is the dirty comment there..

வாயில் நிப்பிளா? அப்ப ஜாக்கெட் திறந்து இருந்ததா?


அன்புடன்,
டோண்டு ராகவன்.

By Anonymous, at 9:38 AM

i dont see any hope.. this duplicate Dondu should realise that he is doing a great damage to whatever cause he thinks he is fighting.

regards

vichchu

வீ. எம் said...

என் கடைசி பதிவிற்கு உங்கள் வருகை தேவை படுகிறது.. வாருங்கள்
வீ எம்