முன்னாள் முதல்வர், முத்தமிழ் வித்தகர், எண்பத்தி மூன்று வயதிலும் முப்பத்திஎட்டு வயதிற்கான சுறுசுறுப்புடன் இருப்பவர் இன்று மெட்டி ஒலி என்கிற ஒரு தொலைக்காட்சி தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்,
கலைஞர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவிற்கு மெட்டி ஒலி நிறைவு நாள் நிகழ்ச்சி என்ன சமூகத்தின் முக்கிய நிகழ்ச்சியா? அல்லது மெட்டி ஒலி முடிவது என்ன வரலாற்றின் முக்கிய நிகழ்வா?
அல்லது மெட்டிஒலி நிறைவு நிகழ்ச்சியிலெல்லாம் கலந்து கொள்ளும் அளவிற்கு கலைஞர் ஓய்வாக உள்ளாரா?
இப்படியே போனால் கலைஞரை பின் வரும் நிகழ்ச்சிகளிலும் காணலாம்
செல்வி மெகா தொடரின் 50வது நாள் நிகழ்ச்சி
சமையல் சமையல் 50 வது நிகழ்ச்சி
கல்யாணமாலை ஆயிரமாவது நிகழ்ச்சி
இளமை புதுமை ஆயிரமாவது நிகழ்ச்சி
சந்திரமுகி நூறாவது நாள் விழா
கற்க கசடற் 50 வது நாள் விழா
கலைஞரிடம் அப்படியே தமிழ்மணத்தின் ஆயிரமாவது வலைப்பதிவர் நிகழ்ச்சிக்கு நேரம் கேட்டுப்பார்ப்போமே (நான் முன்னாள் பட்டியலிட்ட நிகழ்ச்சிகளை விட இது மிக மிக முக்கியமான நிகழ்ச்சி)
|
| |
ஏற்கனவே நீங்கள் ஓய்வு பெற வேண்டுமென ஓ.பி.எஸ் முதல் வலைப்பதிவர்கள் வரை புலம்பிக்கொண்டுள்ளனர், இது மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைவிட்டுவிட்டு இன்னும் தமிழுக்கும் தமிழ்மண்ணுக்கும், தமிழர்களுக்கும் வரப்போகின்ற தேர்தலுக்கும் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாமே...
வர வர எவனெல்லாம் வயசு, அனுபவ வித்தியாசமில்லாமல் கலைஞருக்கு அறிவுரை கூறுவது என்கிற விவஸ்தையில்லாமல் போய்விட்டது என நீங்கள் தலையில் அடித்துக்கொள்வது எனக்குத்தெரிகின்றது....
இருந்தாலும் நான் வலைப்பதிவன் அல்லவோ யாருக்கும் முளைக்காத கொம்பு எனக்கு முளைத்திருக்கின்றது அல்லவோ,
நான் யாரை வேண்டுமானாலும் தாக்கிப்பேசுவேன், எவருக்கு வேண்டுமானாலும் ஓய்வு எடுத்துக்கொள் என அறிவுரை கூறுவேன் அது எனது உரிமை... ஹா ஹா...
46 பின்னூட்டங்கள்:
பெரிய திரை (வெள்ளித் திரை) கலைஞர்கள் தான் 'அம்மா' பக்கம் போயிட்டாங்க. ஆ..ஊன்னா அம்மாவை பராட்டிடறாங்க.(காக்கா கூட்டம்!)) அதான்..சின்னத்திரையையாச்சும் கையிலே போட்டுகலாமான்னு ஒரு நப்பாசை தான். (அது என்ன போகிற போக்கில் 'சந்திரமுகி' 100 நாள் விழா என்று கூறியிருக்கீறீர்கள்? பதிலுக்கு எங்களுக்கும் ஒரு உதாரணத்தை கூற முடியும்..வேண்டாமே என்று பார்க்கிறேன்.)
//அது என்ன போகிற போக்கில் 'சந்திரமுகி' 100 நாள் விழா என்று கூறியிருக்கீறீர்கள்? //
அய்யய்யோ மன்னித்துக்கொள்ளுங்கள்... சந்திரமுகி நூறாவது நாள் விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிதான் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன்....
- குழலி
நம்புங்கள் .. .. நான் தமிழ் தொலைகாட்சி பார்த்து
4,5 வருடங்கள் ஆகிவிட்டன (. Dish TV எஙக வீட்டல
தெரிய மாட்டேங்குது ). இந்த மெட்டி ஒலி பதிவுகளை பார்த்தா
இந்த தமிழ் TV பார்க்காதது ஒரு வரம் தான் என்று தோணுது..
"Reseted " appadinnu oru vaarthai illaingo .. Reset- ikku past tense -m "Reset" than..
(Nakkeeraaaaaaaan.. )
அந்நியம் வந்த இந்த நேரத்தில் உங்களுக்குள் ஒரு அந்நியனா? அநியாயயம் எங்கு நடந்தாலும் கொல்லுங்கள் மிதிங்கள் பிச்சி உதறுங்கள் இந்த பதிவில் மட்டுமே ;-))))
அட கொஞ்சம் 'ரிலாக்ஸ்' பண்ணிட்டுப் போறாரு விடுங்கய்யா!. ஒரு மனுசன் எப்பப் பாரு., உட்கட்சி பூசல்., கூட்டணியிடையே உள்ள அரசியல்., பத்திரிக்கை குழி பறிப்பு., இதுகிடையில அம்மா வேற? எம்புட்டு நேரந்தான் இப்பிடி தமிழ்நாட்டு அரசியலையே உத்துப் பாத்திட்டு இருக்கிறது?., என்னமோ எல்லாத் தேர்தல்லயும் வரிசையா அவரத் தூக்கி உக்கார வச்சிட்டமாதிரியில்ல ஆளாளுக்கு., அரசியல்ல இருந்து விலகு., மெட்டி ஒலி நிகழ்ச்சில கலந்துக்காதன்னு(ம்... குழலி அப்பிடி!!...)அதிகாரம் பண்ணுறிக?.
//"Reseted " appadinnu oru vaarthai illaingo .. Reset- ikku past tense -m "Reset" than..
(Nakkeeraaaaaaaan.. )//
புரியவில்லையே எனக்கு என்ன சொல்லவருகின்றீர் என்று....
ஒரு வேளை அவர் ஏற்கனவே ஓய்வில்தான் இருக்கின்றார் என கூறுகின்றீர்களா?
குழலி.. அவரு உங்களோட 'Counter' குறித்து சொல்றாரு..!!
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நக்கீரன்ன்ன்ன் மற்றும் மாயவரத்தான்... தவறு திருத்தப்பட்டுவிட்டது....
ஞானபீடம் said:
ஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போவானா?
இல்ல,
சோழியன் குடுமிதான் சும்மா ஆடுமா?
------------
'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே'
என்று பராசக்தியில் எழுதிய கலைஞர்,
மெட்டி ஒலி விழாவில் கலந்து கொள்வதன் மூலம்
அந்த விழாவை டி.வி.யில் தரிசிக்கும் எல்லோருக்கும் திவ்ய தரிசனம் நல்குகிறார்.
ஓட்டு வங்கிகளுக்கு காட்சியளிக்கிறார்.
*********************
- comment by ஞானபீடம்
*********************
//மெட்டி ஒலி விழாவில் கலந்து கொள்வதன் மூலம்
அந்த விழாவை டி.வி.யில் தரிசிக்கும் எல்லோருக்கும் திவ்ய தரிசனம் நல்குகிறார்.
ஓட்டு வங்கிகளுக்கு காட்சியளிக்கிறார்//
athellam sari, than blade niraitha uraiyin moolam oru 10 vottai izakkiraar!
//ஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போவானா?
இல்ல,
சோழியன் குடுமிதான் சும்மா ஆடுமா?//
யோவ் ஞானபீடம் இந்த பதிவில்தான் இன்னும் சாதிப்பிரச்சினை வரவில்லை...நீர் வந்து இங்கு சாதிப்பிரச்சினையை தூண்டுகிறீரோ...
சாதிப்பிரச்சினையை தூண்டும் ஞானபீடம் ஒழிக.... உம்ம பதிவிற்கு வந்து சாதிப்பிரச்சினையை கிளப்பினால் தன் நீர் சரிபட்டு வருவீர் :-)
எங்க ஊர் பக்கம் எல்லாம் அதை 'சோழியும், குடுமியும் சும்மா ஆடுமா"'ன்னு சொல்லுவாங்க. அதாவது சோழியும், குடுமியும் தானா ஆடாது.. நாம தான் ஆட்டணும் அப்படீன்னு அர்த்தமாம். அதை போய் வேற மாதிரி இப்போ திரிச்சிட்டாங்க. அப்படி பார்த்தாலும் சோழியர்கள் குடுமி சும்மா ஆடாது...மத்தவங்க குடுமி சும்மா ஆடுமோ?!
அடங்கொக்கமக்கா, குயிலி தன்னோட 'இவர்களின் நல்ல பக்கங்ள்' தொடர்ல கருணாநிதிய பத்தி சொல்றாராம்புன்னு ஊரே ஆச்சரியத்தோட வண்டி கட்டிகிட்டு வந்திடுச்சி... இங்கன வந்து பாத்தா.....
(கலைஞர்னு பொத்தாம் பொத்தாம் பொதுவா சொன்னா சினிமா கலைஞர் கோவை சரளாவா, நாட்டுப்புற கலைஞர் குப்புசாமி அனிதாவா யார சொல்றேன்னு தெரியாதுல்லையா? அதான் கருணாநிதின்னு சொல்லிட்டேன்... நானும் கூட ஒரு கலைஞர்தான் ஹி.ஹி..) -- முகமூடி
ஞானபீடம் said:
//...யாருக்கும் முளைக்காத கொம்பு எனக்கு முளைத்திருக்கின்றது அல்லவோ,..//
நல்லா பாருப்பா,
அது கொம்பு தானா?
இல்லே வாலா?
அதுவுமில்லேனா வேற எதுனாவா?
ஒன்னய கல்யாணம் பண்ணிக்கப்போற அந்த பாவப்பட்ட புள்ளக்கித்தெரியுமாபா ஒனக்கு கொம்போ என்னவோ மொளச்சிருக்கிற மேட்டரு?
--------
சாதிச்சண்டையை நான் தூண்டுவதாக
அபாண்டமாய் என்மீது சேற்றை வாரி இறைப்பதை நடுநிலையாளர்கள் எல்லோரும் இங்கே பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் எனக்காக பொங்கி எழுந்தால் ........ ஜாக்கிரதை !. கொம்பா என்னவோ முளைத்திருக்கு என்றீரே, அதைப் பிடுங்கி எறிய நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வட்டமிடும் கழுகு, வசந்தசேனை யார் என்பதைச் சான்றோர்கள் அறிவார்கள் !
"மத்தவங்க குடுமி மட்டும் சும்மா ஆடுமா" என்று விஷம் கக்கியுள்ள அந்த ஏழெழுத்துக்காரன் ஏழரையாய் எட்டில் நிற்பதைக் கண்கள் காணவில்லையா? இல்லை கண்ணில் ஒளி இல்லையா?
-----------------
comment by ஞானபீடம்.
-------------------
த்தோடா..!!
மாயவரம் இதே பதிவ நீங்க போட்டிருந்தா என்னா நடந்திருக்கும்னு நினைச்சி பாத்தேன்.... எல்லாம் மாயை. (குயிலி எப்படி பின்னூட்டம் கொடுத்திருப்பாங்கன்னு சரியா கணிக்கறவங்களுக்கு 100 பித்தளை காசு - எனக்கு கிடைச்சா - பரிசு)
யாருப்பா அது....
கலைஞரென்றால் தமிழகத்திலே கருவிலிருக்கும் பிள்ளை கூட சொல்லும் அது கருனாநிதி தானென்று... கலைஞருக்கே கருனாநிதி என்ற பெயர் மறந்துவிட்டது...
இங்கு கலைஞரை கருனாநிதி எனப்பெயர் சொல்லி கேவலாமாக பேசும் வாழமட்டை,தமிழ்துரோகி முகமூடிக்கு எச்சரிக்கின்றேன்...
இனியொருமுறை கலைஞர் யாரென கேட்கக்கூடாது.... அக்காங் சொல்லிப்புட்டேன்...
கருணாநிதிக்கு எப்படி "கலைஞர்" என்று பெயர் வந்தது பற்றி
எங்கேயோ படித்தது. ஓரு முறை MR ராதா நாடகம் ஒன்றில் பேச
வந்த அண்ணா க்கு அறிஞர் என பட்டம் போட்ட சுவரொட்டி
அமைப்பளர், கருணாநிதிக்கு என்ன போடுவது என்று ராதாவை கேட்க
அண்ணா க்கு அறிஞர், கருணாநிதிக்கு கலைஞர் என்றாராம்.
இது எவ்வளெவு நிஜம் என்று தெர்ந்தவர்கள் சொல்லாம்..
//கருணாநிதிக்கு எப்படி "கலைஞர்" என்று பெயர் வந்தது பற்றி
எங்கேயோ படித்தது. ஓரு முறை MR ராதா நாடகம் ஒன்றில் பேச
வந்த அண்ணா க்கு அறிஞர் என பட்டம் போட்ட சுவரொட்டி
அமைப்பளர், கருணாநிதிக்கு என்ன போடுவது என்று ராதாவை கேட்க
அண்ணா க்கு அறிஞர், கருணாநிதிக்கு கலைஞர் என்றாராம்.
இது எவ்வளெவு நிஜம் என்று தெர்ந்தவர்கள் சொல்லாம்.. //
கலைஞர் பெயரை ஆராய்ச்சி செய்கிற அளவு வயசானவன் இல்லீங்கோ நானு... வேணும்னி லிட்டில் சூப்பர் ஸ்டாரு பெயரை ஆராய்ச்சி செய்யலாம்...
////கருணாநிதிக்கு என்ன போடுவது என்று ராதாவை கேட்க
அண்ணா க்கு அறிஞர், கருணாநிதிக்கு கலைஞர் என்றாராம்.
//
அப்படியே இருந்தால் கூட அது ராதா கலைஞருக்கு கொடுத்தப்பட்டம்... சரிதானே.... படத்தில் தமக்கு தாமே கொடுத்துக்கொண்ட பட்டமல்ல...சரியா?
என்னுடைய வலைப்பதிவின் பத்தாயிரமாவது ஹிட்டுக்கு கலைஞரை கூப்பிடலாம் என இருக்கின்றேன் யாராவது கலைஞரிடம் நேரம் வாங்கித்தரமுடியுமா?
*********************
coment by ஞானபீடம்
*********************
குழலி... குழலி...
இன்னா... ஞானம்...
blog... பண்றியா...
ஆமா.. ஞானம்...
டபாய்க்கறியா...
இல்லே.... ஞானம்...
லொள்ளு ... பண்றயா...
ஆமா... ஞானம்...
ஒத படுவே... படவா... வயசான பெர்ய மன்ஷன லந்து வுட்றியா?
*********************
coment by ஞானபீடம்
*********************
// கலைஞரிடம் நேரம் வாங்கித்தரமுடியுமா? // நான் ரொம்ப பிஸி, வேணும்னா பிறகு பார்க்கலாம்.... (ஆமா என்னத்தானே கலைஞர்னு சொன்னீக)
// கலைஞரிடம் நேரம் வாங்கித்தரமுடியுமா? // ஓ திரு. கருணாநிதியவா... ஏய்யா தெளிவா சொல்லக்கூடாது... சரி
இந்த குசும்புதானே வேணாங்கிறது.... கருணாநிதி வேல வெட்டி இல்லாத சும்மா குந்திகினு கெடக்காரு... அல்லாத்துக்கும் வருவாருன்னு பதிவு போட்டுட்டு, இப்போ என்னவொ கருணாநிதி பிஸியா கீற மாதிரி தேதி கேட்டா இன்னாபா நக்கலா... இல்ல கட்சி மாற்ற ப்ளானா
*********************
ஞானபீடம்
*********************
//அல்லாத்துக்கும் வருவாருன்னு பதிவு போட்டுட்டு... இப்போ என்னவொ கருணாநிதி பிஸியா கீற மாதிரி தேதி கேட்டா//
இது... இது...
இதுதாங்க கலக்கல்-ங்கறது முகமூடி !
------
25 ஆவது comment கொடுத்த எனக்கு பாரட்டு விழா நடத்த வேண்டும் என்ற கடமை கண்ணியம் கட்டுப்பாடு குழலிக்கு உண்டா என்று கேட்கிறேன் !
---------
யாரங்கே... இப்டி comment கொடுக்குற எனக்கு வேலையில்லையா என்று விஷம் கக்குவது?
*********************
ஞானபீடம்
*********************
//25 ஆவது comment கொடுத்த எனக்கு பாரட்டு விழா நடத்த வேண்டும் என்ற கடமை கண்ணியம் கட்டுப்பாடு குழலிக்கு உண்டா என்று கேட்கிறேன் !//
25 வது பின்னூட்டம் வழங்கிய ஞானபீடம் வாழ்க... உமக்கு சில பின்னூட்டங்கள் இலவசமாக அளிக்கின்றேன்.... உங்க வந்தார்கள், தின்றார்கள், சென்றார்கள் நன்றாக உள்ளது
ஏற்கனவே கூட்டனில இருந்துட்டே மருத்துவரும் , ஈரேடு பேரனும் பன்ற டார்ச்சர் பத்தலைனு .. இப்பொ குழலியும் ஆரம்பிசுட்டாருய்யா... இது அந்த திருமா வின் திட்டமிட்ட சதி.. !
வீ எம்
அது ஏன் என்று புரியவில்லை, கலைஞர் எது செய்தாலும் அதை விமர்சிப்பது, நக்கலடிப்பது என்பது தற்போது ஒரு பேஷன் என்றாகிவிட்டது.. கருணாநிதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என சொல்லவில்லை.... ஆனால் சம்பந்தப்பட்டவர் கலைஞர் என்பதாலேயே ஏன் விமர்சனங்கள் வருகிறது என்று தான் புரியவில்லை.. !
நிச்சயமாக, இதுவே ஜெயா டீவியின் தொடர் ஒன்று வெற்றி விழா நடத்தி அதில் அம்மா கலந்துக்கொண்டிருந்தால், இப்படி ஒரு விமர்சனம் வந்திருக்குமா என்பது சந்தேகமே.. மாறாக ..அட இவ்வளவு வேலைக்கிடையிலும் இந்த அம்மா நேரம் ஒதுக்கி ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளதே என்று வியந்திருப்போம்..
ஒன்றை யோசித்து பதில் சொல்லுங்கள், இதுவே மெட்டி ஒலி என்பது ஒரு சின்னத்திரை தொடராக இருந்திராமல், அது ஒரு நாவல் என்று வைத்துக்கொள்வோம், அதன் விழாவில் கலைஞர் கலந்துக்கொன்டிருந்தால், இப்படி சொல்லியிருப்போமா???
இது சின்னதிரை தொடரின் வெற்றி விழா என்பதாலா , அல்லது கலைஞர் கலந்துக்கொண்டதாலா ... எதனால் இந்த விமர்சனம் என்று புரியவில்லை.. !
நான் சொல்லியது போல, அவர் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், இவர் ஏன் இதிலெல்லாம்கலந்து கொள்ளவேண்டும், கட்சி வேலை, தேர்தல் வேலையெல்லாம் விட்டு விட்டு என்ற விமர்சனமும், அதுவே அரசியல் பேசும் போது, 83 வயதில் இவருக்கு எதுக்கு அரசியல்..பேசாமே எழுத்து, கதை , நாடகம் , திரைப்பட வசனம் என்று போகலாமே என்று சொல்லுவதும் நமக்கு ஒரு ·பேஷன் ஆகிவிட்டது, நமக்கு மாற்றிக்கொள்வது சற்று கடினமே !!
வீ எம்
//இதுவே ஜெயா டீவியின் தொடர் ஒன்று வெற்றி விழா நடத்தி அதில் அம்மா கலந்துக்கொண்டிருந்தால், இப்படி ஒரு விமர்சனம் வந்திருக்குமா என்பது சந்தேகமே.. //
சே சே இதை விட கடுமையாக இருந்திருக்கும் விமர்சனம், ஒரு மாநில முதல்வர் வெட்டித்தனமாக இதிலெல்லாம் கலந்து நேரத்தை விரயம் செய்கிறார் என விமர்சித்திருப்பேன்...
//அது ஒரு நாவல் என்று வைத்துக்கொள்வோம், அதன் விழாவில் கலைஞர் கலந்துக்கொன்டிருந்தால், இப்படி சொல்லியிருப்போமா???
//
நிச்சயமாக இல்லை... இலக்கியம் வேறு... இது வேறு என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு
//அதுவே அரசியல் பேசும் போது, 83 வயதில் இவருக்கு எதுக்கு அரசியல்..//
இல்லை தற்போது உள்ள சூழ்நிலையில் அரசியலில் அவரது பங்கு நிச்சயம் தேவை என்பது எனது கருத்து....
மேலும் கலைஞர் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பவன் நான்...
//ஆனால் சம்பந்தப்பட்டவர் கலைஞர் என்பதாலேயே ஏன் விமர்சனங்கள் வருகிறது என்று தான் புரியவில்லை.. ! //
ஒரு விதத்தில் இது சரிதான்... எப்போதுமே எல்லா பாடங்களிலும் தோல்வியுற்று கடைசி தரத்தில் இருக்கும் மாணவனை திட்டுவதைவிட எப்போதும் முதல் மாணவனாக இருந்து திடீரென ஒரு பாடத்தில் தோல்வியுறுபவனை திட்டுவது அதிகமாக இருக்கும்... அதே நிலைப்பாடுதான் கலைஞர் விடயத்திலும்
குழலி,
நான் சொன்னது எதுவுமே..தங்களின் ஒரு பதிவுக்கு மட்டுமல்ல.. பொதுவானவை.. நீங்கள் தனிபட்ட முறையில் அம்மாவையும் இப்படி தான் சொல்லிருப்பீர்கள் என்று தெரியும்.
//// ரகத்தை சேர்ந்தவன் நான் !////
திட்டுவதை விட.. எல்லாம் நல்லா செய்தவருக்கு இந்த ஒரு பாடத்தில் என்ன ஆச்சு என்று பார்த்து ஊக்கபடுத்துவது சரி என்று நினைப்பவன் நான். தவறா?? :)
வீ எம்
இது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயமுள்ள செய்கைதான். மறுப்பில்லை.
இருந்தாலும் கருணாநிதி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாதா? ஏன் கலந்து கொள்ளக் கூடாது? ஒருவருக்கு தனிப்பட்ட பொழுது போக்குகள் இருக்கலாம். அவை தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் என்ன தவறு. ஒரு வேளை எம்.எஸ்.விஸ்வநாதன் கச்சேரி வைத்தால் கூட அவர் கலந்து கொள்ளலாம். அதில் தவறில்லை என்பது எனது கருத்து.
என்னப்பா இது வம்பா போச்சு! 83 வயசான மனுஷன் கிட்ட எதுலதான் குறை கண்டுபிடிக்கிறதுண்ணு அளவே இல்லியா?
// இலக்கியம் வேறு... இது வேறு என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு//
வேறுன்னு எல்லோருக்கும் தெரியும்.ஆனா தகுதி அடிப்படையில இலக்கியம் (இதே மெட்டி ஒலி கதையை ஒருத்தர் இலக்கியமா படைத்திருந்தால்) இதை விட எந்த விதத்தில் உயர்ந்தது .ஏதோ எழுதிட்டா மட்டும் உசத்தி மாதிரியும் அதே சினிமா ,தொலைக்காட்சின்னா மட்டங்கற மாதிரியும்..ஒன்னும் புரியல்ல போங்க!
//இருந்தாலும் கருணாநிதி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாதா? ஏன் கலந்து கொள்ளக் கூடாது? //
சே சே கலந்து கொள்ளக்கூடாது என்று யார் சொன்னது, இதிலெல்லாம் கலந்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு நேரமிருக்கின்றதா? அவருக்கு தலைக்கு மேலே வேலை இருக்கின்றதே....
இதைவிட ஆக்கப்பூர்வமான பல வேலைகளை செய்யலாமே என்பது தான் எனது ஆதங்கம்....
ஏற்கனவே திரைப்பட விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திரைப்படங்களென்னவோ வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று போன்ற ஒரு மாயை உருவாகிவிட்டது....
இப்போது தொ.கா. தொடர்களுக்கும் அதே நிலையை உருவாக்க வேண்டுமா?
//எப்போதும் முதல் மாணவனாக இருந்து திடீரென ஒரு பாடத்தில் தோல்வியுறுபவனை//
தமாசு.. தமாசு..!!
//ரஜினிக்காக மக்கள் உருவாக்கிய பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம். தலைமகனுக்கு தமிழர்கள் கொடுத்த பட்டம். //
இதை விடவா தமாசு??
//ரஜினிக்காக மக்கள் உருவாக்கிய பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம். தலைமகனுக்கு தமிழர்கள் கொடுத்த பட்டம். //
இதை விடவா தமாசு??
நன்றி - http://rajinifans.blogspot.com/
உங்கள் தலைவர் போலவே ஊருக்கு தான் உபதேசமா குழலி சார். இப்போ தான் தெரியுது தீஞ்ச வாசனை எங்கிருந்து வருகிறதென்று. உன்ட்க அடுப்பை கவனிங்க சார்..!
//அதுவுமின்றி எதற்கெடுத்தாலும் சிலரால் தேவையின்றி விவாதத்தை திசை திருப்பும் போக்கு ஆரோக்கியமான மனப்பாண்மையாக என்னால் காணமுடியவில்லை... இந்த பதிவிற்கும் நடந்துகொண்டிருக்கும் விவாதத்திற்கும் சம்பந்தமில்லாமல் ஒருவரை இழுப்பது தேவையில்லாதது... அதற்குதான் மாற்றி மாற்றி நானும், மற்ற சிலரும் பதிவு போட்டுக்கொண்டிருக்கின்றோமே...
அங்கே வைத்துக்கொள்ளலாம்...
சிலர் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமிழப்பது எனக்கு நன்றாக புரிகின்றது.... //
Thanks : halwacity.blogspot.com
இந்தப் பதிவுக்கும் ரஜினிக்கு என்ன சம்பந்தம் என்று விளக்குவீர்களா அல்லது அடுத்தவரை பின்னோட்டங்களை திசை திருப்புவதாக சொல்லி தான் மட்டும் சொல்வது தனது தலைவரின் வழி என்பதை ஒப்புக் கொள்வீர்களா குழலி?!
நோ சமாளிபிகேஷன் ப்ளீஸ்..! தவறை ஒப்புக் கொள்ளவும்!!!
அட்றா சக்கை... அட்றா சக்கை...
என்ன மாயவரத்தான் எரிச்சல் படாதீர்... இத்தனை காலமாக நீங்களும் சிலரும் செய்ததை ஒரே ஒரு தடவை செய்ததற்கே இந்த குதி குதிக்கின்றீர்....
போங்க சார் போயி எதாவது கூலா சாப்பிடுங்க கூல்டவுன்....
தலைவலியும் பல்வலியும் தமக்கு வந்தாத்தான் தெரியும்
//நோ சமாளிபிகேஷன் ப்ளீஸ்..! தவறை ஒப்புக் கொள்ளவும்!!! //
இதில் தவறெதுவும் காணவில்லை, நீங்கள்தான் வலைப்பதிவில் எனது குரு, நீங்கள் செய்யாத எதை நான் செய்துவிட்டேன்...
Avarukku vela iruntha enna ,illena enna?. Muthalla Unkalukku vela irukka?? Itellam site la pottukitu ,ellathoda neratahayum waste pannringa.Olunga oru katha pottoma,kavithai eluthunoma,pattimanram vaichomanu iruntha interestinga irukkum.
//Olunga oru katha pottoma,kavithai eluthunoma,pattimanram vaichomanu iruntha interestinga irukkum.
//
ஹி ஹி நானும் அப்படித்தான் தலைவா நினைத்துக்கொண்டு வலைப்பதிய வந்தேன்... கதை கவிதைகள் என இருந்தேன்... ஆனால் வலைப்பதிவில் சிலரின் அட்டூழியம் தாங்கமுடியாமல் திசை மாறிவிட்டேன், இனி மீண்டும் என் பாதைக்கே திரும்பிவிடுகின்றேன்...
//தலைவலியும் பல்வலியும் தமக்கு வந்தாத்தான் தெரியும் //
அப்பாடா.. நீங்கள் செய்த தவறை சுட்டிக்காட்டிய உடன் தான் இந்த ஞானோதயம் வந்ததோ?! சமாளிக்க வேன்டாம் குழலி!!
// வலைப்பதிவில் சிலரின் அட்டூழியம் தாங்கமுடியாமல் திசை மாறிவிட்டேன் // என்னே ஒரு சமூக அக்கறை...
சம்பந்தமில்லாத செய்தி :: PRO பத்வி கொடுத்தும் நமது கட்சியை பலவீனப்படுத்தும்படி வலைப்பதிவு செய்திகள் வெள்யிட்டு தான் பெட்டி வாங்கியதை நிரூபித்த குயிலி ஒளிக... (டாக்டர ஐயான்னு எழுத் தெரியாம ஜயா எழுதற பயக்கம்)
கலைஞருக்கு வேலை நிறைய இருக்குப்பா! ஆனால் அவருக்கு வேலை இருக்கா இல்லையா என்கின்ற வெட்டி வேலைகளை நீங்கள் செய்யாமல் இருங்க...இங்கு குடுமி வைத்த சில குசும்பன்களுக்கு கலைஞர் நின்றால் குற்றம் உட்கார்ந்தால் குற்றம்.. பேசினால் குற்றம் என்று அவரை வம்புக்கு இழுப்பதே வாடிக்கையாகிவிட்டது.
//கலைஞர் நின்றால் குற்றம் உட்கார்ந்தால் குற்றம்.. பேசினால் குற்றம் என்று அவரை வம்புக்கு இழுப்பதே வாடிக்கையாகிவிட்டது//
இம்புட்டு நாளா அவரு எல்லாருக்கும் அபப்டி செஞ்சிட்டிருந்தாரு.இப்போ எல்லாரும் அவருக்கு பதில் மரியாதை தர்றாங்க. அம்புட்டு தான.அதுக்கு எதுக்குய்யா உங்களுக்கு பொத்துகிட்டு வருது. பொதுவாழ்க்கைன்னு வந்தா எல்லாத்தையும் கேட்டு தான் ஆகணும் அப்படீன்னு ஊருக்கு உபதேசம் பண்ணுவீங்களே. அது இப்போ பூமராங்.
Post a Comment