இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்

ரஜினிகாந்தும் ராகவேந்திரா மண்டபமும்

ரஜினிகாந்த்தினால் ராகவேந்திரா மண்டபம் கட்டப்பட்டது, கட்டப்படும்போதே இரைச்சல்களுக்கு குறைவில்லை, அந்த மண்டபம் கட்டப்பட்ட நிலம் எனக்குத்தான் சொந்தமானது என ஒருவர் வழக்கு பதிவு செய்தார், என்ன ஆனதோ ஏதானதோ மண்டபம் திறக்கப்பட்டு சில ஆண்டுகள் வரை சப்தமே இல்லை, திடீரென ஒரு நாள் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்தார், ராகவேந்திரா மண்டபம் கட்டப்பட்ட நிலம் தமக்கு சொந்தமென்றும் அதைப்பற்றி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார், அப்பொழுது அந்த நிலத்தின்மீது உரிமை கொண்டாட கூடாது என்று எல்லா முறையிலும்(?!) வேண்டுகோள்(?!) வைக்கப்பட்டதாக பேட்டியெல்லாம் வேறு கொடுத்தார், அப்பொழுது ஒரு திடீர் திருப்பம், அந்த மண்டபத்தை தமிழ் மக்களுக்கு தமிழ் மண்ணுக்கு தானமாக(?!) கொடுப்பதாக அறிவித்தார் திரு.ரஜினிகாந்த்.

அந்த மண்டபத்தை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையும் நிறுவப்பட்டது, அறக்கட்டளை உறுப்பினர்கள், தலைவர் யாரென நாமறியோம் பராபரமே!,
தானமாக வழங்கப்பட்ட அந்த மண்டபத்திலே தற்போது எத்தனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன, யாரெல்லாம் பயன்படுத்துகின்றனர் அத்ற்கு கட்டணம் எவ்வளவு? அந்த வருமானம் எங்கே செல்கின்றது என நாமறியோம் பராபரமே!, ஒரு வேளை ரஜினி ரசிகர்களின் சொந்த நிகழ்ச்சிகளுக்கு பயன்படுகிறதோ (ரஜினிரசிகர் யாரேனும் விளக்கினால் அறிந்து கொள்வோம்) என்னவோ?!

இரண்டு வழிப்போக்கர்கள் காட்டின்வழியே போகும்போது திடீரென ஒரு கொள்ளை கும்பல வழிமறித்து கொள்ளை அடிக்கும்போது ஒரு வழிப்போக்கர் தம்மிடமிருந்த பணத்தை எடுத்து இன்னொரு வழிப்போக்கரிடம் உமக்கு தரவேண்டிய ரூபாய் இதிலுள்ளது, உன்னிடத்தில் நான் வாங்கிய கடனை அடைத்துவிட்டேன் என்ற கதை நினைவுக்கு வருகின்றது சம்பந்தமில்லாமல் ஹி... ஹி...

வில்லங்கமில்லா சொத்துக்கள் கர்நாடகாவிலே... ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்த தமிழகத்துக்கு???

விஜயகாந்த்தும் ஆண்டாள் அழகர் மண்டபமும்
ஆண்டாள் அழகர் மண்டபம், விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் தலைமையிடம், சென்னை மாநகர நெரிசலை குறைக்க கட்ட திட்டமிடப்பட்ட மேம்பால பணியில் இந்த மண்டபம் சிறிதளவு இடிபடக்கூடும், பல கட்டிடங்கள் முழுமையாக இடிபடக்கூடும் என்பது வேறு விடயம், உடனே முறையிட்டார் பாருங்கள் விஜயகாந்த், யாரிடம் முறையிட்டார்? தஞ்சைவிவசாயிகள் எலிக்கறி தின்பதை தடுக்க விவசாயத்துறையை கேட்காமல் ஏன் நெடுஞ்சாலைத்துறையை கேட்டனர் என கள்ளக்குறிச்சியிலே முழங்கினாரே? பணம் சம்பாதிக்கத்தான் இந்த துறையை கேட்டு பிரச்சினை செய்கின்றனர் என விமர்சித்தாரே அவரிடம் இன்று மண்டபம் இடிபடாமல் காக்க சென்று முறையிட்டார் அதுவும் எப்படி நெடுஞ்சாலைத்துறையின் மேம்பால திட்டவரைபடத்திற்கு மாற்று வரைபடத்தோடு சென்று.

இதை வெளியே சொல்லவேண்டாம் என சொல்லியிருப்பார் விஜயகாந்த், சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி விடயத்தை அம்பலப்படுத்திவிட்டனர் (பார்க்க ஜீனியர்விகடன் மற்றும் நக்கீரன்).

என்ன செய்திருக்கலாம் விஜயகாந்த்?

ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து அதில் உங்கள் மனைவியை தலைவராகவும்,மைத்துனரை பொருளாளராகவும், ராமு வசந்தனை செயலாளராகவும், லியாகாத் அலிகான், இப்ராஹிம் ராவுத்தர், இன்ன பிறரை உறுப்பினர்களாகவும் சேர்த்து அந்த அறக்கட்டளைக்கு இந்த மண்டபத்தை தானமாக கொடுத்திருக்கலாம், உங்கள் மண்டபம் எங்கேயும் போகாது அறக்கட்டளை சும்மா ஒரு பேருக்குதானே ஆனால் கருப்பு எம்ஜியார், வள்ளல் பட்டங்கள் கிடைத்திருக்கும், நெடுஞ்சாலைத்துறை மண்டபத்தை கையகப்படுத்தும்போது இடிக்கும் போது ஒரு பெரிய மறியல் போராட்டம் நடத்தி மிக அட்டகாசமான ஒரு ஓப்பனிங்கோடு அரசியலுக்கு வந்திருக்கலாம், தவறவிட்டுவிட்டீர்களே விஜி.

28 பின்னூட்டங்கள்:

said...

கலக்குறீங்களே குழலி .. (ராமதாஸ் விஷயத்துலதான் கோட்டை விட்ரீங்க..)

said...

அபத்தம். உங்களை மாதிரியான ஆட்களுக்கு பதில் சொல்வதும் வெட்டி வேலைதான்.

said...

என்ன அபத்தம் ராம்கி ..

ரஜினி அளவுக்கு புத்தி விஜயகாந்துக்கு இல்லை என்பது உங்களுக்கு விசிலடிக்கும் விடயம்தானே.

said...

தாஸ்,

விஜயகாந்த் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஸ்ரீராகவேந்திரா மற்றும் அருணாச்சல அறக்கட்டளைகளின் சில செயல்பாடுகளை பக்கத்தில் நின்று கவனித்தவன் என்பதால் இப்பதிவை பற்றி கருத்து தெரிவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது தொடர்பான எனது பதிவு

http://rajniramki.blogspot.com/2004/11/blog-post_10.html#comments

சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகள் பற்றி எனது புத்தகத்திலும் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். இப்படியெல்லாம் சொல்லி உங்களை எனது புத்தகத்தை புரட்டச் சொல்லவில்லை. நிஜமாகவே இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வமிருந்தால் தனிமடலில் தெரிவிக்கவும். எங்கிருந்தாலும் எனது செலவில் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.

said...

திரு.ரஜினி ராம்கி அவர்களே தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்,உங்கள் பதிவை படித்தேன்,ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவிடுவதும் அவர்களை மகிழ்ச்சி படுத்துவதும் மிக நிச்சயமாக பாராட்ட வேண்டிய விடயம் தான், ஒரே ஒரு விடயம் தான் எமக்கு விளங்கவில்லை, ராகவேந்திரா மண்டபம் கட்ட நினைக்கும் போது அதை அறக்கட்டளைக்கு எழுதவில்லை, கட்டும் போதும் அதை அறக்கட்டளைக்கு எழுதித்தரவில்லை, கட்டி முடித்தப்பின்னும் எழுதி தரவில்லை ஆனால் ராகவேந்திர மண்டபம் கட்டி சில ஆண்டுக்கு பிறகு, அந்த நிலம் என்னுடையது என ஒருவர் உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட பின்பு திடீரென அறக்கட்டளைக்கு எழுதித்தந்தது தான் எனக்கு மிக வியப்பாக உள்ளது,

தவறிருந்தால் சுட்டிக்காட்டவும், நிச்சயமாக ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பேன்.

said...

//கலக்குறீங்களே குழலி .. (ராமதாஸ் விஷயத்துலதான் கோட்டை விட்ரீங்க..)//

ஹி ஹி ரொம்ப நன்றி தாஸ், இராமதாசுவை போட்டு தாக்க தான் நிறைய மக்கள் இணையத்திலிருக்கின்றனரே, அதனால் ஒரு சிலராவது அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லலாமேனுதான். இல்லையென்றால் ஆட்டத்தில் ஒரு பக்கத்தின் கையே எப்போதுமே ஓங்கியிருக்குமே என்றுதான்.

said...

//பெரிய மறியல் போராட்டம் நடத்தி ...................மிக அட்டகாசமான ஒரு ஓப்பனிங்கோடு அரசியலுக்கு வந்திருக்கலாம்.... தவறவிட்டுவிட்டீர்களே விஜி.
//

Fill in the blanks:

பெரிய மறியல் போராட்டம் நடத்தி , மரத்தையெல்லாம் வெட்டி , தொண்டர் படையை தீக்குளிக்கவச்சு , ரயில் பாதையில தலயை வைச்சு , பஸை பயணிகளோடு சேர்த்து எரிச்சு மிக அட்டகாசமான ஒரு ஓப்பனிங்கோடு அரசியலுக்கு வந்திருக்கலாம. ராமதாஸோடு 'கொளுகை' அடிப்படையில் கூட்டும் சேர்ந்திருக்கலாம் ..

இந்த சின்ன ஃபீல்டு ஒர்க் கூட பண்ணாம வசனம் பேசியே கட்சி ஆரம்பிக்கலாம், ஆட்சியை பிடிக்கலாம்னு நினைக்கிறதுதான் நம்ம குழலிக்கும் நம்ம ராமதாஸுக்கும் புடிக்கமாட்டிக்குது ..

ஊசிக்குறிப்பு (நன்றி இணையக்குசும்பன்):

நமக்கும் சினிமாக்காரங்களே நாடாளுரது ஆவாதுங்க.. அதுக்கு காரணம் வேறங்க .இதை பாருங்க ..

http://lldasu.blogspot.com
ஹி ஹி -ADVT

said...

//அவன் சம்பாதிச்ச பணத்தை அவன் காஷ்மீர்ல போய்கூட கொட்டுவான் நீங்க யார் கேக்குறதுக்கு//

சூச்சூ ரொம்ப கோபமாக இருக்கின்றீர் போல தெரிகின்றது, நடிகர்கள் சம்பாதிப்பதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் அதை யாரும் கேட்பதற்கில்லை அவர்கள் அரசியலில் பொதுவாழ்வில் தலையிடாமல் இருக்கும் வரை, தமிழ் மக்களை காப்பாற்ற வந்த ரட்சகன் போல பெரிய வள்ளல்(?!) மாதிரி மண்டபத்தை அறக்கட்டளைக்கு தானம் (பிச்சை?!) போட்டதில் உள்ள உண்மையான காரணத்தை தான் இங்கே கேள்வியாக எழுப்பினேன்,

அரிதாரம் பூசி தமிழ் மக்களை மழுங்கடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களையும் அவர்களின் போலித்தனமான செயல்பாடுகளையும் தான் விமர்சிக்கிண்றேன்,

அரசியலுக்கு வருவதற்கு முன்பே கடுமையாக விமர்சித்த கட்சி தலைவரிடம் தன் மண்டபத்தை காப்பாற்ற சரணடைந்த விஜயகாந்த்தை என்னவென்று சொல்வது, இதில் இவர் பெரிய யோக்கியன் மாதிரி அரசியல்வாதிகளை படங்களில் விமர்சிப்பது மட்டுமல்லாமல் கூட்டங்களிலும் விமர்சிக்கின்றார்,

நான் இந்த பதிவில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் மாயவரத்தானின் பதிவில் போய் ஜோக்கர் என விமர்சித்துள்ளார் என் அன்பு நன்பர் பாலா, அதற்காகவெல்லாம் நான் வருத்தப்படுபவன் அல்ல,அதை இந்த பதிவிலேயே சொல்லியிருக்கலாம் தினம் ஒருமுறையாவது மாயவரத்தானின் பதிவிற்கு சென்று பார்ப்பேன், அதில்தாண் பாலா அவர்களின் ஜோக்கர் என்று விமர்சித்த பின்னூட்டத்தை கண்டேன்

இந்த பதிவு பலரின் வயிற்றெரிச்சலை கிளப்பிவிட்டது போல, ஜோக்கர் எனவெல்லாம் விமர்சனம் கிளம்பிவிட்டது, ம்... உண்மை சுடுகின்றது என்ன செய்ய??

said...

//ராமதாஸோடு 'கொளுகை' அடிப்படையில் கூட்டும் சேர்ந்திருக்கலாம் ..
//
சரியா சொன்னீர்கள் தாஸ், அரசியலுக்கு வரும்முன்பே கடுமையாக விமர்சித்த கட்சித்தலைவரிடமே தன் சொத்தை காப்பாற்ற ஓடினாரே விஜயகாந்த், இவர் அரசியலுக்கு வந்தால் கூட்டணி தாவுவதில் விஜயகாந்த்துக்குதான் முதலிடம், இராமதாசோடு அவர் கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

said...

வண்டார் குழலி வண்டார் குழலி செவ்வாய் பேட்டை டோய்...

பேஸ் பேஸ் பதிவு ரொம்ப நன்னாயிருக்கு. அப்புறம் ஆண்டாள் அழகர் மண்டபம் சென்னையில் எங்கேயிருக்கு?

said...

//ஆண்டாள் அழகர் மண்டபம் சென்னையில் எங்கேயிருக்கு?
//

சென்னையில் கோயம்பேடு நூறடி சாலை ரவுண்டானா அருகேயுள்ளது விஜயகாந்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபம்

said...

அனைத்து நடிகர்களை பற்றி எல்லோரும் பேசுவது இல்லை.. யார் இங்கே சிவகுமார் , விக்ரம் , சூர்யா,
செந்தில் அர்விந்த்சாமி etc... எழுதுகிறார்கள்???

கமல் பற்றி கூட யாரும் இங்கே யாரும் சொல்வதில்லை..

நன்றாக கவனித்தால் தெரியும்... நடிகர் என்ற வட்டத்தை மீறி எப்பொழுது வெளியே வருகிறார்களோ ..அப்பொழுது தான் அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்....

தங்களை ஏதோ , தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்க வந்த அவதாரம் போல சித்தரிக்கும் வசனங்களை வைத்து ..வாய் கிழிய பேசி ... நிஜத்தில் வரும்போது ..சுயநல முகம் காட்டும் நடிகர் மட்டுமே விமர்சிக்கப்படுகிறார்.. நியாயமே!!!

அதே நேரத்தில் ..விமர்சனம் நியாயமாக, உன்மை செய்தியின் அடிப்படையில்..நாகரீகமாக் இருக்க வேண்டும்..


வீ .எம்

said...

//தங்களை ஏதோ , தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்க வந்த அவதாரம் போல சித்தரிக்கும் வசனங்களை வைத்து ..வாய் கிழிய பேசி ... நிஜத்தில் வரும்போது ..சுயநல முகம் காட்டும் நடிகர் மட்டுமே விமர்சிக்கப்படுகிறார்.. நியாயமே!!!
//

சரியாக சொன்னீர் வீ.எம்.

//அதே நேரத்தில் ..விமர்சனம் நியாயமாக, உன்மை செய்தியின் அடிப்படையில்..நாகரீகமாக் இருக்க வேண்டும்..//
நக்கீரன்,மற்றும் ஜீனியர் விகடனில் வந்துள்ள கட்டுரையை வைத்துத்தான் இந்தப்பதிவை எழுதினேன், அதுமட்டுமின்றி விஜயகாந்த்தின் ஆதரவு நிலை எடுத்துள்ள குமுதத்தில் கூட இதைப்பற்றி எழுதியுள்ளனர்
குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து
//
தி.மு.க. வட்டாரத்தில் இந்த சந்திப்பு பற்றி சற்று மாறுதலான கருத்துச்சொல்கிறார்கள். சென்னையில் கட்டப்படும் மேம்பாலம் ஒன்றினால் விஜயகாந்த்தின் திருமண மண்டபம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இது தொடர்பாகவும் வேறு ஒரு உதவிகேட்டும்தான் கலைஞரை அவர் சந்திதார் - நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்//

நக்கீரன் இதழில் திருமண மண்டபம் விஜயகாந்தின் மாஸ்டர் பிளான் என்ற கட்டுரையை காணவும்.
சுட்டி இதோ http://www.nakkheeranbiweekly.com/Nakkheeran/index.html

ஜீனியர் விகடனில் கருணாநிதியை தேடிவந்த கேப்டன் என்ற கட்டுரையை காணவும்

ராகவேந்திரா மண்டப நிலப்பிரச்சினை தொடர்பான விடயம் அனைவரும் அறிந்ததே.

இதுவரை என்னளவில் எந்த விமர்சனத்தையும் நாகரீகமான முறையிலே சொல்வதாகவே எண்ணுகிறேன்

said...

//வில்லங்கமில்லா சொத்துக்கள் கர்நாடகாவிலே... ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்த தமிழகத்துக்கு?//

கருத்துக்கள் சூப்பர். "கருத்து கந்தசாமி
மாதிரி "கருத்து குழலி" எனும் பட்டம்
தரலாம் உங்களுக்கு.

said...

//கருத்துக்கள் சூப்பர். "கருத்து கந்தசாமி
மாதிரி "கருத்து குழலி" எனும் பட்டம்
தரலாம் உங்களுக்கு.
//

கரிகாலன் அவர்களே ஏற்கனவே "ஜோக்கர்" பட்டமே கொடுத்தாகிவிட்டது நீங்க வந்து "கருத்து குழலி" அது இது என்று சொல்லி எரிகின்ற வயிற்றில் எண்ணெய் ஊற்றுகின்றீர். ஹி ஹி ஏதோ என்னால் முடிந்ததை ஊதுகின்றேன் புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி

said...

குழலி,

//நான் இந்த பதிவில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் மாயவரத்தானின் பதிவில் போய் ஜோக்கர் என விமர்சித்துள்ளார் என் அன்பு நன்பர் பாலா, அதற்காகவெல்லாம் நான் வருத்தப்படுபவன் அல்ல,அதை இந்த பதிவிலேயே சொல்லியிருக்கலாம் தினம் ஒருமுறையாவது மாயவரத்தானின் பதிவிற்கு சென்று பார்ப்பேன், அதில்தாண் பாலா அவர்களின் ஜோக்கர் என்று விமர்சித்த பின்னூட்டத்தை கண்டேன்

இந்த பதிவு பலரின் வயிற்றெரிச்சலை கிளப்பிவிட்டது போல, ஜோக்கர் எனவெல்லாம் விமர்சனம் கிளம்பிவிட்டது, ம்... உண்மை சுடுகின்றது என்ன செய்ய??
//

நான் மாயவரத்தான் பதிவில் இட்ட பின்னூட்டம் உங்கள் இந்த பதிவை படித்து விட்டு அதற்கு எதிர்வினையாக இட்டது இல்லை, மிக நிச்சயமாக!! இந்த பதிவை இப்போது தான் படித்தேன் (11.02 PM IST). அந்த பின்னூட்டம், அங்கு இடப்பட்டவைக்கு எதிர்வினையாக மட்டுமே !!! எதற்கும் நேரடியாக பதில் கூறுவது தான் என் வழக்கம் :-(

நீங்கள் விளம்பியது போல் எனக்கு எந்த "வயிற்றெரிச்சலும்" இல்லை.
பா.ம.க குறித்த உண்மையான உண்மைகளே சம்மந்தப்பட்டவர்களை சுடாதபோது, ரஜினி பற்றிய உண்மை என்னை ஏன் சுட வேண்டும் ?????

"அன்பு நண்பராக" நினைத்ததற்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

ராகவேந்திரா மண்டபம் ரஜினிக்கு தான் சொந்தம் என சென்னை உயர்நீதிமண்றத்தில் தீர்ப்பு வந்தது அனைவரும் அறிந்ததே. நேரம் கிடைத்தால் மாலை நேரங்களில் ராகவேந்திரா மண்டபத்துக்கு செல்லவு. பொதுமக்கள் (ரசிகர்கள் அல்லாதவர்களும்)மருத்துவசெலவுக்கு,பள்ளி கட்டணங்களுக்கு வந்து மணு கொடுத்தும்,உதவி பெற்றும் செல்வதை காணலாம். இதுபோல் கர்நாடகவில் எங்கேயாவது ரஜினி செய்கிறாரா. இப்படி உன்மை தெரியாமல் அபத்தாமாக சொல்வது சரியல்ல.

said...

//இப்படி உன்மை தெரியாமல் அபத்தாமாக சொல்வது சரியல்ல.
//

ஹி ஹி அதென்னங்க அப்போ பெங்களூர் மைசூர் சாலையில் கட்டப்படும் கல்லூரி (பல்கலைகழகம்?!) ரஜினியோட சகோதரர் சம்பாதித்து கட்டுவதா? பெங்களூரில் உள்ள ஒரு 3 நட்சத்திர ஓட்டலும் 5 நட்சத்திர் ஓட்டலில் உள்ள பங்கும் ரஜினியின் சகோதரர் சம்பாதித்ததா?

//பொதுமக்கள் (ரசிகர்கள் அல்லாதவர்களும்)மருத்துவசெலவுக்கு,பள்ளி கட்டணங்களுக்கு வந்து மணு கொடுத்தும்,உதவி பெற்றும் செல்வதை காணலாம். இதுபோல் கர்நாடகவில் எங்கேயாவது ரஜினி செய்கிறாரா//

அதானே அவர் என்ன கர்நாடகாவிலா முதல் அமைச்சர் ஆகவோ கர்நாடக அரசியலிலா இறங்க நினைத்தார் அல்லது கர்நாடக அரசியல்வாதி யாரையாவது தோற்கடிக்க முயற்சி செய்தாரா? எல்லாம் தமிழ்நாட்டில்தானே அப்போ இந்த விளம்பரமும் இங்கதானே செய்யனும்,

இன்னொரு விடயம் கர்நாடகாவில் சென்று இந்த வேலையெல்லாம் காட்டினால் மகாராட்டிரத்துக்கு பேக்கப் பண்ணிவிடுவார்கள்

said...

kuzali,
Hope you read my comments !!!!

said...

//kuzali,
Hope you read my comments !!!!//

பாலா தங்கள் பின்னூட்டம் படித்தேன், தவறான புரிதலுக்கு மன்னிக்கவும், எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் அனைவரும் நன்பர்கள் தான் என நான் நம்புகின்றேன்

said...

//இவர் அரசியலுக்கு வந்தால் கூட்டணி தாவுவதில் விஜயகாந்த்துக்குதான் முதலிடம், இராமதாசோடு அவர் கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை//

சரியா சொன்னீங்க! கூட்டணி தாவுவது எப்பவுமே அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணிதானுங்களே. அவங்களா வந்து ராமதாசோடு மாறி மாறி கூட்டணி வச்சிகிட்டா ராமதாஸ் என்னங்க பண்ணுவாரு! பாவம்!

ஹும். இந்த உண்மையெல்லாம் நம்ம சனங்களுக்கு எப்ப தெரியப் போவுதோ!

said...

இந்த மேட்டரை நான் இது நாள் வரையில் எப்படி கவனிக்காமால் விட்டேன்?!

ம்...குழலி, உங்க தலைவரும் அவரோட மகனும் ரெண்டு காந்த்கள் மேலும் (பயந்து கொண்டு) ஆவேசமாக இருக்கிறார்கள் என்பதினால் இப்படி முழுநீள நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்க வேண்டாம்.

* ரஜினி அறக்கட்டளை சம்பந்தமாக பல செய்திகள் வந்துள்ளன. நீங்கள் அவற்றை படிக்கவில்லை.. அல்லது படித்தை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. ரஜினி ராம்கியின் புத்தகத்தை படிக்கவும்.

** விஜயகாந்த் எதற்காக கருணாநிதியை சந்தித்தார் என்பது அவர்கள் இருவரும் சொன்னாலொழிய வெளியில் பரப்பப்படும் செய்திகள் அத்தனியும் கப்ஸா தான். அப்படியே இந்த மேட்டரில் பத்திரிகைகள் எழுதுவதை முழுசும் ஒத்துக் கொள்ளும் நீங்கள் எல்லா மேட்டரிலும் அதே மாதிரி கொள்கையை கடை பிடிப்பீர்களா என்பதே கேள்வி.

*** அப்படி உண்மை எனும் பட்சத்தில் கருணாநிதி மத்திய அமைச்சர்களை ஆட்டுவிப்பவராக இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்கிறீற்களா?!

**** தி.மு.க., அ.தி.மு.க.விற்கெல்லாம் அறக்கட்டளைகள் உள்ளன. பா.ம.க.விற்கு அப்படி எதுவும் இருக்கிறதா? இருந்தால் அதன் தலைவர், பொருளாளர் பற்றிய விபரங்களை தெரிவிப்பீற்களா? (இங்கு பா.ம.க. குறித்தும் பேச்சு எழும்பியிருப்பதால் கேட்கிறேன்!)

***** ஜனனாயக முறைப்படி (?!) நடத்தப்படுவதாகக் கூறப்படும் கட்சிகளில் அடுத்த வாரிசாக தனது மகனை தான் நியமிக்க வேண்டியிருக்கீறது. அப்படியிருக்கையில் அறக்கட்டளைகளில் தனது சொந்த, பந்தங்களை நியமிப்பதில் தப்பேதுமில்லை.

said...

//இந்த மேட்டரை நான் இது நாள் வரையில் எப்படி கவனிக்காமால் விட்டேன்?!//
அடேடே ரஜினி ராம்கியே வந்துவிட்டு போய்விட்டாரே என்ன இன்னும் மாயவரத்தானை காணாமே என்று நினைத்துக்கொண்டேன்... நல்லவேளை வந்துவிட்டீர்

//உங்க தலைவரும் அவரோட மகனும் ரெண்டு காந்த்கள் மேலும் (பயந்து கொண்டு)//
என்னங்க நான் நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்கிறேன் என கூறிவிட்டு இப்படி நகைச்சுவையா பின்னூட்டமிடுகின்றீர் இருந்தாலும் மாயவரத்தான் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம்... மருத்துவர் இராமதாசுக்கு உள்ள பய உணர்ச்சியை(?!) பார்த்தவர்தானே உங்கள் ரஜினியும், விஜயகாந்தும்... சும்மா இங்க வந்து கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டு...

//* ரஜினி அறக்கட்டளை சம்பந்தமாக பல செய்திகள் வந்துள்ளன.//
எங்க தலீவா வந்து கீது... ரஜினிபேன்ஸ்.காம் லயா??

// நீங்கள் அவற்றை படிக்கவில்லை.. அல்லது படித்தை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. ரஜினி ராம்கியின் புத்தகத்தை படிக்கவும்.
//
நானெல்லாம் நமது எம்ஜியார்,முரசொலி,சங்கொலி மாதிரியான பத்திரிக்கைகளைப்படிப்பதில்லைங்கோ...
ரஜினி ராம்கியின் எழுத்துத்திறமைக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் சம்பந்தமில்லைங்க,அவர் எழுத்தை நானும் மதிப்பவன்தான்

//** விஜயகாந்த் எதற்காக கருணாநிதியை சந்தித்தார் என்பது அவர்கள் இருவரும் சொன்னாலொழிய வெளியில் பரப்பப்படும் செய்திகள் அத்தனியும் கப்ஸா தான்.//
இத்தனை நாளாகாயியும் திமுக பக்கமிருந்தும் எனக்கு தெரிந்தவரை வி.கா. பக்கமிருந்தும் மறுப்பு வரவில்லையே... ஒரு வேளை கலைஞரின் கதை வசனத்தில் அடுத்த படத்திற்கான கதாநாயகனாக வாய்ப்பு கேட்டு போயிருப்பாரோ அல்லது கலைஞர் இவரிடம் கதை வசனம் எழுத வாய்ப்பு கேட்டிருப்பாரோ...


// அப்படியே இந்த மேட்டரில் பத்திரிகைகள் எழுதுவதை முழுசும் ஒத்துக் கொள்ளும் நீங்கள் எல்லா மேட்டரிலும் அதே மாதிரி கொள்கையை கடை பிடிப்பீர்களா என்பதே கேள்வி.
//
ஹி ஹி அது எப்படிங்கானும்... என்னிய கேள்விகேட்கிற நீங்களும் இணையத்தில் இன்னும் சிலபேரும் இதை கடைபிடிச்சிங்கோனு வச்சிக்குங்க பதிவு போடறதுக்கே விடயமில்லாம போய்விடும்...

அப்புறம் அப்படியே சங்கரராமன் வந்து சொன்னாதான் அவரே ஆள்வைத்து கொலைசெய்து கொண்டாரா எனத்தெரியும்,

ஆலடி அருணா வந்து சொன்னாதான் வெட்டியவங்க யாருனு தெரியும்னு நிறைய கேள்வி வரும் தலீவா...

//**** தி.மு.க., அ.தி.மு.க.விற்கெல்லாம் அறக்கட்டளைகள் உள்ளன. பா.ம.க.விற்கு அப்படி எதுவும் இருக்கிறதா? இருந்தால் அதன் தலைவர், பொருளாளர் பற்றிய விபரங்களை தெரிவிப்பீற்களா? (இங்கு பா.ம.க. குறித்தும் பேச்சு எழும்பியிருப்பதால் கேட்கிறேன்!)
//
என்னங்கனா நீங்கதான் அடிக்கடி இப்போ இருக்கின்ற கட்சிகளெல்லாம் சாக்கடை, தங்க தலவர் மட்டும்தான் பன்னீருனு கருத்து தொனிக்கின்ற மாதிரி சொல்வீங்க..
அதான் உங்களைப்பொறுத்தவரை சாக்கடையாச்சே ஏன் அத இப்போ கிளறுறிங்க...

ஆனாலும் மண்டபத்தில் பிரச்சினை வந்த உடனே பெரிய வள்ளள் மாதிரி அறக்கட்டளைக்கு எழுதி தமிழர்களுக்கு தானம்(பிச்சை?!) போடவில்லை ரஜினி மாதிரி...

சும்மா திரைப்படத்தில பேசுகிற மாதிரி பொதுக்கூட்டங்களில் தி.மு.க. வை கண்ட மேனிக்கு தாக்கிவிட்டு தன் மண்டபத்தை காப்பாற்ற அதே தி.மு.க. விடம் ஓடவில்லை இங்கே யாரும்...

//***** ஜனனாயக முறைப்படி (?!) நடத்தப்படுவதாகக் கூறப்படும் கட்சிகளில் அடுத்த வாரிசாக தனது மகனை தான் நியமிக்க வேண்டியிருக்கீறது. அப்படியிருக்கையில் அறக்கட்டளைகளில் தனது சொந்த, பந்தங்களை நியமிப்பதில் தப்பேதுமில்லை. //

அதுதான் வாரிசு கட்சினு மூச்சிக்கு முன்னூறு தரம் புலம்புறிங்க, தாக்குறிங்க, அப்பாலிக்கா நானும் அதையேதான் செய்வேன்னு சொன்னாங்காட்டி யின்னாபா வித்தியாசமிருக்கு....

அது சரி சொந்தகாரணுவோல டிரஸ்டியில போட்டாதானே கட்சி வரிக்கும் மண்டபம் நம்ம கையிலயே இருக்கும், நாளைக்கு எல்லாம் அடங்கனதுக்கப்பால... திருப்பியும் சொத்த நம்ம பேருக்கே எளுதிக்கலாம்... அட போங்க சார்...

said...

இலங்கை தமிழர்கள் சந்தோஷம் (?) அடையும் வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்
என்று சூளுரைத்திருக்கிறாரே? இதையாவது பாராட்டக்கூடாதா?

said...

குழலி அக்கோவ்,
ஷோக்கா பேசிட்டீங்களே,இந்த பதிவ அப்படியே SCROLL BAR i புடிச்சு இழுத்து கீழ வரைக்கும் ஓட்டுனா உங்க பேரு மட்டும் தான் தெரியுது, அவ்ளே பேசிருக்கிங்க, ம்ம் GOOD ஆன
நல்லா இல்ல,

சொந்த பொண்ணையே சுத்ந்திரமா நடக்கவிட்டவரை பத்தி சுய நலவாதி
மக்களை மழுங்கடித்துக்கொண்டிருக்கும் நடிகர் அப்பிடின்னு பேசுனா நல்லாதான் இருக்கும்
(என்ன ஆபீஸல stree reduction programme ல எவனையவது புடிச்சு திட்டு இல்லனா ஏதாவது பொம்மைய வங்கிவச்சு முகரைல ஒரு குத்துவிடு சொல்லிக்கொடுத்தாங்களா) நல்லா அழுத்தாமா எவனையாவது புடிச்சு திட்டினா நல்லாதான் இருக்கும் இல்லங்கல ஆனா யாரு யாரை திட்டுறதுன்னு இருக்கு
நீங்க யாரு, தாழ்த்தப்பட்டவர்(டேய் ஆரம்பிச்சுறாதிங்கடா, நான் அவங்க ராமதாஸ் கூட்டமுனு சொல்லறேன் அவ்வளோதான்)உங்க கொள்கை அப்படித்தான இருக்கும்

//அதனால் ஒரு சிலராவது அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லலாமேனுதான். இல்லையென்றால் ஆட்டத்தில் ஒரு பக்கத்தின் கையே எப்போதுமே ஓங்கியிருக்குமே //

இது நாலதான் அவருகூட அப்பப்ப யாரு கை ஓங்கி இருக்கோ அவங்க பக்கம் கூட்டணி மாறிக்கறாறோ

//அவர்கள் அரசியலில் பொதுவாழ்வில் தலையிடாமல் இருக்கும் வரை, தமிழ் மக்களை காப்பாற்ற வந்த ரட்சகன் போல பெரிய வள்ளல்(?!) மாதிரி மண்டபத்தை அறக்கட்டளைக்கு தானம் (பிச்சை?!) //

நாமகூடதான் ஆயிரம் எழுதறோம், அதையும் முட்டா ஜனங்க படிக்கறங்க, அறிவுரை குடுக்கறோம் ராமதாஸு நல்லவருனு சொல்றோம், ரஜினி கெட்டவருனு(ஆண்டவா மன்னிச்சிருடா) சொல்லறோம் இதுகூட பொதுவாழ்க்கை மாதிரிதான்(அப்படி இல்லைனு சொன்னிங்கன்னா இனிமே தமிழ் நாடு முன்னேறமுன்ன அத ராமதாஸு கைல குடுக்க்கனும்னு பொதுக்கருத்து சொல்லாதிங்க)
ஒஸ்திரேலியாவலிருந்து, அமெரிக்காவுலருந்து ஆயிரம் கருத்து சொல்லறோம் அக்கா எவ்வளே மாசாமாசம், ஏழை குழந்தைகளுக்கு தானம் (பிச்சை?!) குடுக்கறிங்க அப்படியே எங்க எங்க சொத்து வாங்க
ரிங்கனு ஒரு லிஸ்ட்டு குடுத்திட்டா நல்லருக்கும்
நீங்க சிங்கப்பூர்ல சம்பாதிக்கறதால உங்க தர்மப்படி அங்கதான் எல்லா பணத்தையும் செலவளிச்சு சொத்து வாங்குவீங்கனு நெனைச்சுகிட்டு இருக்கேன்!!!!!!!!

நீங்களாம் பண்ணறதுக்கு பேரு விமர்சனம் இல்ல வியாதி அட சிரியஸாதங்கா சொல்லறேன்
நீங்க பார்த்ததில்ல, Tendulkar வேஸ்டு,சுஜாதா குப்பை, ரஜினிக்கு ஒன்னுமே தெரியது(ராம்கி கேள்விப்பட்டிங்களா 100 கோடியமே, கலக்குறாரில்ல, தல தல தான்)
இது மாதிரி ஒரு கோஷ்டி எல்லாப்பக்கமும் இருக்கும் என்னா அப்பத்தான் எதையாவது வம்படிக்க முடியும் எல்லாரும் உண்மையா ஒத்துக்கிட்டா அப்பறம் சுவாரஸ்சியமே இருக்காதே( நீங்க கூட இதேதான் சொல்லிருகிங்க இல்லியா) இந்த வியாதிக்கு ஒரு பெரிய உதாரணம் : சாரு
அவருதான்,
1) டமில் படிகறதே இல்ல ஏன்னா எல்லாமே குப்பை, ஆனா அசோகமித்திரனுக்கு நோபல் தரனும்
2) நான் எழுதறத வெளிட காசில்லைங்கறதப்பத்தி தாய்லாந்து தேவடிய வீட்டுல்ல யோசிச்சுக்கிட்டு இருந்தேன்
3)ரஜினி எதோ ஒரு(மறந்து போச்சு) எழுத்தாளருக்கு 7 லட்சமோ என்னமோ குடுத்தாருன்னு ஒரு கட்டுரைல புலம்பி இருந்தாரு பாருங்க
4) அப்பறம் இளையராஜா அழகிய பெரிய்வன் மாதிரியில்ல(என்னடா இவனுக்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணூறியேன்னா இசைல கம்பேர் பண்ண வேற யாரும் இல்ல என்னபண்ணாறது)
இத்தெல்லாம் சொல்லறது ராமதாஸை follow பண்ற ஒரு தற்குறியோ இல்லைன்னா நக்கிரன்ல வரதெல்லாம் படிச்சிட்டு நம்பற முட்டாக்குவோ இல்ல, உலக இலக்கியங்களை கரைத்து குடித்தவர்,அவரு எழுத்துல இருக்கற flow வேறா யாருகிட்டயுமே இருக்கறமாதிரி தெரியல அப்படி எழுதக்கூடியவர் அப்படீன்னா மத்தவங்களைப் பத்திவேற என்ன சொல்லறது இதெல்லம் சும்மா பொறாமை என்னடா அவன் மட்டும் அப்படி இருக்கானே நம்மளுக்கு ஏன் அதெல்லாம் கிடைக்கல அப்படீன்னு ஒரு வயி த்தெரிச்சல் அவளளோதான்

சரிங்க எனக்கு போரயிடுச்சு, எப்படியும் நீங்க திருப்பியும் அந்த level ல தான் இருக்க போறிங்க
ஆண்டவங்கிட்ட வேண்டிக்கறேன் வேற என்ன பண்ண்முடியும் சொல்லுங்க

said...

.........

said...

//அப்புறம் அப்படியே சங்கரராமன் வந்து சொன்னாதான் அவரே ஆள்வைத்து கொலைசெய்து கொண்டாரா எனத்தெரியும்,//

சிரிப்பு தாங்க முடியவில்லை.

//நன்றாக கவனித்தால் தெரியும்... நடிகர் என்ற வட்டத்தை மீறி எப்பொழுது வெளியே வருகிறார்களோ ..அப்பொழுது தான் அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்....//

ஆமாம்.

//சரியா சொன்னீங்க! கூட்டணி தாவுவது எப்பவுமே அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணிதானுங்களே. அவங்களா வந்து ராமதாசோடு மாறி மாறி கூட்டணி வச்சிகிட்டா ராமதாஸ் என்னங்க பண்ணுவாரு! பாவம்!
//

இந்த ஜொக் நல்லா இருக்கு

said...

Vanakkam Kuzhali,

Ungalathu Patthivugal aniathum miga nanraaga ullathu. Thodarnthu arasiyalvathigal matrum makkali kaakka vanthathaaga solli thiriyum kayavaaligalin muga thiraiyai kilithu eriyungal. Manniyungla Thamizhil elutha menporul illai.
Nanri.
krishna