மனைவியின் காதலன்

"என்னங்க ஹனிமூன் வந்தா ரூம்லயே இருக்கனுமா?, வாங்க ஈவ்னிங் போட்டிங் போகலாம்"

"எனக்கு இந்த ஊட்டியில போட்டிங் னாலே பழைய ஞாபகம் வருது"

"அப்டியா? என்ன ஞாபகம்"

"நான் காலேஜ் படிக்கும் போது டூர் வந்தப்ப ஒரு பொண்ணுக்கு போட்டிங் போற இடத்துலதான் புரப்போஸ் பண்ணேன்"

"ஓ... இன்ட்ரஸ்டிங், அப்புறம் என்ன ஆச்சி?"

"நான் ஊட்டியில புரப்போஸ்பண்ணதுக்குக்கு பெங்களூர்ல தான் ஓ.கே சொன்னா, அன்னைக்குதாண் டூர் லாஸ்ட் டே"

"ம்... அப்புறம்"

"அப்புறம் என்ன பைனல் இயர் ஃபுல்லா லவ் பண்ணோம், அப்புறம் காலேஜ் முடிஞ்ச உடனே அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடிச்சி"

"அப்புறம் நீங்க தாடி வச்சி தேவதாசா சுத்தினிங்க ரைட்"

"சீ அதெல்லாம் இல்ல, அப்புறம் தான் இந்த தேவதை எனக்கு கிடைச்சது"

"தேவதை அது இதுன்னு ஐஸ் வைக்காதிங்க, சரி அந்த பொண்ணு பேர் என்ன?"

"சுஜாதா, சுஜான்னு கூப்பிடுவேன்"

"இப்போ எங்க இருக்காங்க?"

"பெங்களூரல தான், அவ ஹஸ்பண்ட்டோட இருக்கா"

"ம்... விட்டா சேரனோட ஆட்டோகிராப் மாதிரி உங்களுக்கு ஒரு ஆட்டோகிராப் எடுக்கலாம் போல"

"ஹலோ... சேரன் படம் 3 மணிநேரத்துல முடிஞ்சிடும், என் படம்லாம் 10 மணி நேரம் ஆகும்"

"அடப்பாவி... உண்ணைய...."

"சரி டா உனக்கு ஏதும் இந்த மாதிரி ஆட்டோகிராப் இருந்ததா?"

"சீ... இல்ல, பட் ஒரு 4,5 பசங்க புரப்போஸ் பண்ணியிருக்காங்க"

"சரி அதுக்கு நீ என்ன பண்ண?"

"ஒன்னும் ரெஸ்பான்ஸ் பண்ணல, அப்படியே விட்டுட்டேன் "

"பிடிக்கலையா யாரையும், சும்மா சொல்லு"

"ம்ஹீம்"

"சும்மா சொல்லுடா கண்ணு, ஒரு இன்பாக்சுவேஷன் கூடவா இல்ல"

"ம்... அப்படினா என்னோட +2 படிச்சப்ப பிரகாஷ்னு ஒருத்தவன் புரப்போஸ் பண்ணான், அவனைப்பிடிக்கும், பட் லவ்லாம் இல்ல, சும்மா பிடிக்கும் அவ்ளோதான்"

"அப்புறம் பிரகாஷை மீட் பண்ணவே இல்லயா?"

"ம்.. 4 வருஷத்துக்கு முன்னால நான் TCS வாக்கின் இன்டர்வியூ போனப்ப பார்த்தேன், பட் அப்புறம் சுத்தமா பார்க்கலை"

"சரி வா போட்டிங் கிளம்புவோம்..."

------------------------------------------------------
(ட்ரொய்ங்..... டொன்டடன்.... அல்லது ஒரு ஆண்டுக்குப்பிறகு இப்படி எது வேணா போட்டுக்குங்க மேட்டர் என்னன சீன், லொக்கேஷன் லாம் மாறுது)

"கிளம்பிட்டியா டா"

"இல்லங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதே வந்துட்டேன்"

"ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆனிவர்ஸரி, கொஞ்சம் சீக்கிரமா வெளிய போயி, இந்த ஈவ்னிங்க ரொமான்டிக் ஆக்கலாம்னா இப்படி லேட் பண்ற"

"கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா, இதோ வந்துட்டேன்"

"சீக்கிரம் வா"

"இதோ வந்துட்டேன், அப்பா ஏன் இப்படி கத்துறிங்க"

"ம்... அந்த பிரகாஷ் ரொம்ப லக்கி"

"ஏன் ஏன் ஏன்???"

"இல்ல அவர் எஸ்கேப் ஆயிட்டாரு, நான் மாட்டிகிட்டேனே உன்கிட்ட"

"உங்கள... தலையிலயே ஒன்னு போட்டன்னா!"
"அப்படி பாத்தா அந்த சுஜா ரொம்ப ரொம்ப லக்கி, அவங்க எஸ்கேப் ஆயிட்டாங்க, நான் இப்போ அவஸ்தை படுறேன்"

"உன்னைய இப்ப பாரு"

"அய்யோ கிள்ளாதிங்க வலிக்குது, இப்போ கையவிடலை கடிச்சிடுவேன்"

"ஆ...., வெறி நாய் எப்படி கடிக்கிறா பாரு...."

"சரி வண்டிய வெளியில எடுங்க, நான் கதவை லாக் பண்ணிட்டு வரேன்"

------------------------------------------------------------------------------------------------(ட்ரொய்ங்..... டொன்டடன்.... அல்லது சில ஆண்டுகளுக்குப்பிறகு இப்படி எது வேணா போட்டுக்குங்க மேட்டர் என்னன முன்ன சொன்னதுதான் சீன், லொக்கேஷன் லாம் மாறுது)

"என்னங்க நம்ம பையன் பர்த்டே பார்ட்டிக்கு ஹோட்டல் புக் பண்னிட்டிங்களா?"

"இந்திரா நகர் சாலிமர் ஹோட்டல்ல தான் பார்ட்டி ஹால் புக் பண்ணியிருக்கேன்,
ஆனா இன்னும் புட் ஆர்டர் தரல, எத்தனை பேர் வருவாங்கனு எண்ணிக்கிட்டு அப்புறம் தரலாம்னு வந்துட்டேன்"

"ம்... சரி, எத்தனை பேரு இன்வைட் பண்ண போறிங்க"

"ம்.. அப்பா,அம்மா, தங்கச்சி,மாப்பிள்ளை, என் ஆபிஸ் கொலீக் ஏழு பேரு அவங்க ஒய்ப், அப்புறம் சுஜா, சுஜா ஹஸ்பண்ட்"

"உன் சைட்ல இருந்து எத்தனை பேரு இன்வைட் பண்ண போற"

"அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி, அப்புறம் அபி, அபி ஹஸ்பண்ட்"

"ம்..."

"ஏங்க ஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சேன்"

"என்ன சொல்லு"

"காலையிலதான் அபி சொன்னா, பிரகாஷ் இப்போ பெங்களூர்லதான் இருக்காராம், ஆரக்கிள்ல ஜாயின் பண்ணியிருக்காராம்"

"அப்படியா சரி..."

"பிரகாஷையும், பிரகாஷ் ஒயிப்பையும் பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிடலாம்"

"ஏன் உன் பழைய காதலை புதுப்பிச்சிக்க பார்க்குறியா?"

"என்ன சொன்னிங்க? என்ன என்ன சொன்னீங்க"

"என் பையன் பர்த்டே பார்ட்டியை வச்சி உன் பழைய காதலை புதுப்பிச்சிக்க பார்க்குறியா?"

ஆயிரம் கத்தியை நெஞ்சில் ஒரே நேரத்தில் செருகியது மாதிரி இருந்தது...

பின்குறிப்பு
சில ஆண்டுகளுக்கு முன் வாரமலரில் இது உங்கள் இடம் பகுதியில் பிரசுரமாயிருந்த ஒரு வாசகரின் கடிதத்தை தழுவி எழுதப்பட்ட கதை

13 பின்னூட்டங்கள்:

said...

ஐயோ குழலி, அந்த பிரகாஷ் நம்ம சுஜாவை கல்யாணம் பண்ணத்து உங்களுக்கு தெரியவே தெரியாதா?

said...

ரவியா,
'இது'வும் நல்லா இருக்கு:-)))))))

said...

ஆகா ஒரு கதைக்கு இரண்டு முடிவுகளா நன்றாக உள்ளதே இந்த முடிவு கூட, தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நாடோடி மற்றும் துளசிக்கு எனது நன்றிகள். பின்னூட்டமிட்ட ரவியாக்கு நன்றிகள்

said...

ரவியா...*** 'நம்ம' *** சுஜாதாவா...?! ஒரு கதைக்கு 'மூணு' முடிவு வந்திடும் போலருக்கே! :) நல்லா கதை வுடுறீங்க குழலி! சூப்பர்!

said...

Congrats

Good flow and sudden ending. Padikka swarasyamaa irunthathu.

M. Padmapriya

said...

பின்னூட்டத்திற்கும் உங்களது ஊக்கத்திற்கும் நன்றி பத்மப்பிரியா

said...

குழலி
கதை நல்லாயிருக்கு.

said...

//Chandravathanaa said...
குழலி
கதை நல்லாயிருக்கு.
//

உங்களைப்போன்ற சிறந்த எழுத்தாளர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது, உங்களது சிறுகதைகளை படித்துக்கொண்டே... இருக்கின்றேன்

said...

டக் டக்குனு படத்தை போட்டுட்டீங்க!! நல்ல சுறுசுறுப்பான நடை.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

said...

எதிர்பார்த்த முடிவு (நிறைய கதைகள் ப்டிக்கிறேன் என்று நினைக்கிறேன்). நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

said...

கதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

said...

இந்தக் கதை சூப்பர்