கம்யூனிஸ்ட்,திமுக கூட்டணிகளின் இரட்டை வேடம்
கம்யூனிஸ்ட்,திமுக கூட்டணிகளின் இரட்டை வேடம்
தற்போதைய மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி
நாற்காலியின் ஒரு காலாக கம்யூனிஸ்ட்களும்
மற்றொரு காலாக திமுக கூட்டணியும்
மற்ற இரு கால்களாக காங்கிரசும் உள்ளன
காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம், பதவியேற்ற
ஓராண்டிற்குள் நான்கு முறை பெட்ரோல்
விலை ஏற்றிவிட்டது, ஆனால் மத்திய அரசை
முட்டுக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்களும்,
திமுக கூட்டணியும் அரசுக்கு ஆதரவு தந்து கொண்டே
பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்க்கின்றன
போராட்டம் நடத்துகின்றன, கம்யூனிஸ்ட்களாலும்
திமுக கூட்டணிக்கும் உண்மையிலேயே
பெட்ரோல் விலையேற்றத்தை உண்மையிலேயே
தடுக்க வேண்டுமென்றால் அவைகள் விலையேற்றினால்
அரசுக்கு தரும் ஆதரவை திரும்பப் பெற்று விடுவோம்
என மிரட்டினால் அரசு விலையேற்றி விடுமா என்ன??
இதெல்லாம் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி
கட்சிகளின் நாடகம், இரட்டை வேடம்
இது மாதிரியான கருத்துகள் ஒவ்வொரு முறையும்
பெட்ரோல் விலையேற்றத்தின் போதும் அதை
எதிர்த்து கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி
கட்சிகளின் போராட்டத்தின் போதும் ஊடகங்களால்
அதுவும் முக்கியமாக தினமலர் என்ற பத்திரிக்கையில்
அந்துமணி, நொந்தமணி, இது உங்கள் இடம்,
வாசகர் கடிதம் என எல்லா இடங்களிலும்
ஏதோ ஒரு பெயர் ஊருடன் வாசகர்களின்
கடிதம் என்ற பெயரில் அந்த பத்திரிக்கையின்
உதவி ஆசிரியர்களே(?!) எழுதி இந்த கம்யூனிஸ்ட்களும்,
திமுக கூட்டணியும் இரட்டை வேடம் போடுவதாக
மக்களிடம் பரப்பி வருகின்றனர்,
அந்த பத்திரிக்கைகளுக்கு என்ன வேண்டும்,
பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்த்து
கம்யூனிஸ்ட்களும், திமுக கூட்டணியும் மத்திய
அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்று
மத்திய அரசு கவிழ வேண்டும். இது தான் அவர்களின்
விருப்பமா?
விலையேற்றம் தவிர்க்க முடியாது என அரசு
முடிவெடுக்கின்றது, அதே சமயம் அதன் கூட்டணி
கட்சிகளுக்கு அதில் விருப்பமில்லை, அதற்காக
ஆட்சியை கவிழ்த்து விட வேண்டுமா??
பலமான வில்லனிடம் அடிபட்ட கதாநாயகன்
செத்து போய் படத்தை பாதியிலேயே முடிக்க வேண்டும்
என்பதுதான் அவர்கள் விருப்பமா?
விலையேற்றத்தை விரும்பாத அந்த கட்சிகள்
போராட்டங்கள் மூலம் தன் எதிர்ப்பை தெரிவிக்கின்றன,
ஒரு குடும்பத்திலே,ஒரு நிர்வாகத்திலே தமக்கு
விருப்பமில்லா ஒரு முடிவெடுக்கப்படும்போது அதை
எதிர்த்து அந்த நிர்வாகத்தைவிட்டோ அந்த குடும்பத்தை
விட்டோ வெளியேறி விடமுடியுமா?? அதற்காக விரும்பாத
ஒரு முடிவை குடும்பத்திலே எடுக்கும் போது பட்டினி
கிடந்து எதிர்ப்பதில்லையா?? கோபமாக இருப்பதில்லையா?
அது மாதிரிதான் இதுவும்.
தமிழகத்திலே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவிருந்தால் ஏன் வைகோ
தோற்கின்றார் என என்னமோ தமிழக மக்கள் ஈழத்தமிழர் ஆதரவு
என்கிற ஒரு அம்சத்தை வைத்து வாக்களிப்பது போல
அந்த பத்திரிக்கையில் எழுதுவார்கள், அதே போல
பெட்ரோல் விலையேற்றம் என்ற ஒரே ஒரு அம்சத்திலா
மத்திய ஆட்சி நடக்கின்றது இல்லையே பின் ஏனிந்த கூப்பாடு?
ஆனால் இதெல்லாம் தெரிந்தும் குறிப்பிட்ட சில
பத்திரிக்கைகளுக்கு தற்போது நடக்கும் அரசாங்கம்
கவிழ வேண்டும், கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி
கட்சிகளை தாக்க வேண்டும், இந்த விலையேற்றத்தை
அரசை கவிழ்த்து கம்யூனிஸ்ட், திமுக கூட்டணிகளால் தடுக்கமுடியும்,
ஆனால் சுய நலமாக அதை செய்யாமல் போராடுகின்றோம்
என இரட்டை வேடமிடுகின்றனர் என மக்கள் தவறாக
எண்ண வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக
பத்திரிக்கை தர்மத்தையெல்லாம் மீறி
ஒரே நடுநிலை நாளிதழ் என ஜல்லியடித்துக்கொண்டே
கண்மூடித்தனமாக தாக்குகின்றனர்.
என்றுதான் இந்த பத்திரிக்கை(கள்) திருந்துமோ
16 பின்னூட்டங்கள்:
குழலி பக்கங்களின் 50வது பதிவு இது,
மாயவரத்தானுக்கொரு எச்சரிக்கை
எனக்கு இந்த நெ.1 நெ.2 என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்பதை சொல்லிக்கொண்டு எப்போதும் குழலி பக்கங்கள் தான் வலைப்பூக்களின் நெ.1 என சொல்லிக்கொள்கின்றேன்....
எனவே மாயவரத்தான் வலைப்பூக்களின் நெ.1 என விளம்பரம் செய்வதை உடனடியாக நிறுத்தியாக வேண்டும்
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை குழலி.
உறைக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
last few days no political postings in your blog so I thought some one hacked your blog, now kuzhali back to the form.
பின்னூட்டமிட்ட கரிகாலனுக்கும், அனானிமசுக்கும் நன்றி,
//last few days no political postings in your blog so I thought some one hacked your blog, now kuzhali back to the form.//
அரசியல் பற்றி எழுதவில்லையெனில் கையெல்லாம் நடுங்குகின்றது (உபயம் அல்வாசிட்டி.விஜய்) என்ன செய்ய
அப்ப திமுக, கம்யூனிஸ்டு, பாமக எல்லாம் தான் எதிர்கட்சியா இருக்கறப்போ, மக்களால் தேர்ந்தெடுக்க்கப்பட்ட ஆட்சியில, பல விஷயங்களுக்காக "தார்மீக பொறுப்பேற்று மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்", "முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்", "ஆட்சி நடத்த தகுதி இல்லை" அப்படீ, இப்படீன்னு எல்லாம் உதார் உடுறது தப்புங்கறீங்க.... நல்லா சொன்னீங்க...
மிரட்டல் மூலமாக நமப்ர் 1 இடத்தை கைப்பற்ற முடியாது குழலி. தமிழின் நம்பர் 1 இடம் மக்களால் வழங்கப்பட்டது. (எப்போ எங்கேன்னு எல்லாம் கேள்வி கேட்ககூடாது ஆமாம்!)
சரி.. (சப்பை) மேட்டருக்கு வருவோம். அது என்ன, உதவி ஆசிரியர்களால் எழுதப்பட்டது அப்படின்னு ஒரு நக்கல்? ஊரிலே எல்லாரும் இந்த அரசாங்கத்துக்கு 'ஜிங் ஜக்' போடுற ஆசாமியா தான் இருப்பாங்க அப்படீன்னு நெனப்பா?
பதவியேற்பு விழாவிலே கலந்து கொள்ளறதுக்கு முன்னாடி முரண்டு புடிச்சுகிட்டு உட்கார்ந்திருந்தாரே தி.மு.க. தலைவரு.. அது எதுக்கு? அரசுக்கு ஆதரவை விலக்க வேண்டாம்.. ஆதரவை விலக்குவோம் அப்படீன்னு எச்சரிக்கையாவது விட வேண்டியது தானே.
நீ விலையை உயர்த்துற மாதிரி உயர்த்து.. நான் போராட்டம் நடத்துற மாதிரி நடத்துறேன் அப்படீன்ன என்ன விளையாட்டு?
அடுத்த ஆட்சியில் இதே மாதிரி விலையேற்றம் நடத்தும் போது இப்போ சும்மாவாச்சுக்கும் உப்புக்குச்சப்பாணி போராட்டம் நடத்துற உங்க ஆட்கள் வாயே திறக்காம இருப்பாங்கன்னு உங்களால உறுதி கொடுக்க முடியுமா குழலி?
எது எதுக்கு தான் நடுநிலையை இழுக்குறிதுன்னு விவஸ்தையில்லாம போயிடுச்சி.
தமிழின் நம்பர் 1 நடுநிலை வலைப்பூ...
//அது என்ன, உதவி ஆசிரியர்களால் எழுதப்பட்டது அப்படின்னு ஒரு நக்கல்?//
ஹி ஹி முரசொலி,நமது எம்ஜியார், கேள்வி-பதில் மற்றும் வாசகர் கடிதங்கள் பகுதிக்கும் தினமலர் வாசகர்கடிதம்,இது உங்கள் இடத்திற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை...
//பதவியேற்பு விழாவிலே கலந்து கொள்ளறதுக்கு முன்னாடி முரண்டு புடிச்சுகிட்டு உட்கார்ந்திருந்தாரே தி.மு.க. //
பெட்ரோல் விலையேற்றத்தைவிட அது முக்கியமான பிரச்சினைனு உங்களுக்கு தெரியாதா, அப்போ கூட ஆதரவு தரமுடியாது என்று சொல்லவில்லை, வெளியிலிருந்து ஆதரவு என்றுதானே கூறினார்.
//அடுத்த ஆட்சியில் இதே மாதிரி விலையேற்றம் நடத்தும் போது இப்போ சும்மாவாச்சுக்கும் உப்புக்குச்சப்பாணி போராட்டம் நடத்துற //
என்ன சொல்கின்றீர் ஒன்னுமே புரியவில்லை எனக்கு, தன் கூட்டணி ஆட்சி இருக்கும் போது விலையேற்றத்தை எதிர்ப்பவர்கள், எதிர் கட்சியாக மாறினால் சும்மா விடுவார்களா என்ன?
//உங்களால உறுதி கொடுக்க முடியுமா குழலி?//
ஏதேது ஏற்கனவே பாமக வின் வலையுலக கொ.ப.செ. என்ற பதவியிலிருக்கேன், இப்போது திமுக,கம்யூனிஸ்ட்களுக்குமா? ஏன்யா ஒரு கட்டுரை ஆதரவா எழுதனா அவங்களோடு முற் செயல், பிற் செயல் எல்லாவற்றிற்கும் என்னிடம் விளக்கம் கேட்பீர் போல
//எது எதுக்கு தான் நடுநிலையை இழுக்குறிதுன்னு விவஸ்தையில்லாம போயிடுச்சி.//
கேள்வி இடம் மாறி வந்துவிட்டது, இது நடுநிலைநாளிதழ் என ஜல்லியடித்துக்கொண்டிருக்கும் தினமலர் ஆசிரியர் மற்றும் அந்துமணி நொந்தமணி க்கு போக வேண்டியது.
//அப்ப திமுக, கம்யூனிஸ்டு, பாமக எல்லாம் தான் எதிர்கட்சியா இருக்கறப்போ, மக்களால் தேர்ந்தெடுக்க்கப்பட்ட ஆட்சியில, பல விஷயங்களுக்காக "தார்மீக பொறுப்பேற்று மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்", "முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்", "ஆட்சி நடத்த தகுதி இல்லை" அப்படீ, இப்படீன்னு எல்லாம் உதார் உடுறது தப்புங்கறீங்க.... நல்லா சொன்னீங்க...
//
முகமூடி நல்லா கேட்டிங்க போங்க, அப்போ திமுக,பாமக,கம்யூனிஸ்ட்டுங்க மாதிரி தினமலரும் ஒரு கட்சி சார்பு என்கின்றீரா, அப்படினா பிரச்சினையே இல்லை
ஞாபகம் இருக்கா முகமூடியாரே பச்சோந்தினு ஒரு கவிதை எழுதினிங்களே
//கண்ணுக்கு தெரியா களம் என்று ஒன்றும் இல்லை...
கறுப்பு அல்லது வெள்ளைதான்,
இரண்டில் ஒன்று பார்த்துவிடு...
தப்பை சரியாக்க,
உன் வார்த்தை விளையாட்டை புரிந்து கொள்ள,
நேரம் இல்லை யாருக்கும்...
//
அப்படியே எனக்கு இந்த வரிகள் தினமலரைத்தான் நினைவு படுத்தியது
//பெட்ரோல் விலையேற்றத்தைவிட அது முக்கியமான பிரச்சினைனு உங்களுக்கு தெரியாதா//
அடேங்கப்பா.. அப்படி என்ன பிரச்னைங்க?
// அப்படியே எனக்கு இந்த வரிகள் தினமலரைத்தான் நினைவு படுத்தியது // தினமலர் கருணாநிதி & ராமதாஸ திட்டும்னு பச்ச புள்ளக்கி கூட தெரியும்.. அது ஜெயலலிதாவ திட்டினது இல்லையா... இது உங்கள் இடம் பகுதியில தமிழக அரசை குறை சொல்லி கடிதமே வருவதில்லையா... 'அவிங்கள' விட 'இவிங்கள' அதிகமா திட்டுறாங்களேன்னா... ஸாரி நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. நீங்க வேணா தினமலர எவ்வளவு வேணா திட்டுங்க... ஆனா தினமலர நடுநிலை நாளிதழ் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க...
அந்துமணியால யாருக்கு பிரயோஜனம் இருக்கோ இல்லியோ, சில பேருக்கு அந்துமணி இல்லைன்னா பதிவு எழுதவே மேட்டர் இல்ல.. மாயவரத்தான் லேட்டஸ்ட் பதிவ பாருங்க...
அதாச்சும் பரவாயில்லை. சில பேருக்கு தமிழில் நம்பர் 1 வலைப்பூவை பாராட்டியோ, எதிர்த்தோ எழுதலைன்னா அவங்க வலைப்பூவுக்கு ஹிட் ரேட்டே கிடைக்க மாட்டேங்குதுன்னு ஊரிலே பேச்சு இருக்குது தெரியுமா?
உருப்படியில்லாத சொத்தைப் பதிவுகளைப் பட்டியலிட்டால் அதில் திருவாளர் ரமேஷ்குமார் என்கிற மாயவரத்தானின் பதிவுதான் முதலிடம் பெறும்.அது போல் உருப்படியில்லாத பின்னூட்டங்களையும் அதிகமாக அவர்தான் எழுதுகிறார்.வலைப்பதிவுகளில் வாசகர் பரிந்துரைத்த பதிவுகள் அவரது பதிவு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்து ஒரளவு அதனை பிறர் எப்படி மதிக்கிறார்கள் என்பது தெரியும். என் பெயரை வெளியிட்டால் அவர் தேவையில்லாமல் இன்னொரு முறை பின்னூட்டம் எழுதிவிட்டுப் போவார். அவருக்கு வேறு வேலையில்லை..ரஜனி,தினமலர் இதை தாண்டி அவரால யோசிக்கவே முடியாது
உருப்படியில்லாதவர்கள் திட்டுவதற்கு கூட தமிழில் நம்பர் 1 வலைப்பதிவை தான் பயன்படுத்துகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லக்கனியாகும்.
அநாநிமஸ் என்ற பெயரில் மேலே உருப்படியற்ற பின்னூட்டத்தை எழுதியவர் யாரென்று எல்லாருக்கும் தெரியும். ரஜினி என்பதை ரஜனி என்று எழுதியிருப்பதிலிருந்தும் இன்னும் வேறு சில வார்த்தைகளைக் கொண்டும்! ஆனாலும் ஸ்ட்மொமக் அல்சருக்கெல்லாம் தமிழில் நம்பர் 1 வலைப்பதிவரிடம் மாத்திரை கிடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். (வாசகர் பரிந்துரையாம்.. சுண்டைக்காய்.. யாருக்கு வேண்டும் அது! கம்ப்யூட்டரை ரீ-பூட் செய்து செய்து மீண்டும் மீண்டும் ஓட்டு போட்டு கொண்டு வரச் செய்யும் கேவலப் பிழைப்பை சில ஜந்துக்கள் செய்யும்.. அவை தான் அது பற்றி கவலைப்படும்.)
அப்புறம் எதுக்கு உன்னோட பதிவிலே அந்த option-ஐ வைத்திருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு.... எத்தனை பேரு நம்ம பதிவைப் பார்த்து வயிறெரிகிறார்கள் என்று கண்டு பிடிக்க தான். போதுமா?!
Indian are paying the cost for petrol and other allied products in Asian continent
As per thinathandi ... i dont remember the date ... we are the highest payer for a litre of petrol in Asia ... relatively smaller countries like malaysia, singapore, for that case pakistanis are paying Pak rupees 27 per litre means still less when compare to INR ... The news article says we are paying high bcoz Indian government is making huge margin in terms of import tax ... YOU KNOW THE TAX PERCENTAGE ITS 64% WHILE IMPORTING CRUDE OIL ... DO U THINK GOVT IS RIGHT ON THIS ...
Kuzhali do u have any comments about this ....
திரு செயசங்கர் அவர்களே மற்ற நாடுகளைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அரசாங்கம் நட்டத்திற்குதான் பெட்ரோல் விற்றுக் கொண்டுள்ளது, அரசாங்கம் அதிக அளவில் மானியம் தருகின்றது எண்ணெய்க்கு.
இங்கே நான் எண்ணெய் விலையை உயற்றியது சரி என்றோ தவறென்றோ சொல்ல வரவில்லை ஆனால் இதை வைத்து பத்திரிக்கைகளின் ஒரு சார்பு விமர்சனத்தைதான் வேதனையோடு குறிப்பிட்டுள்ளேன்
இந்தியா எப்பொழுதும் பெட் ரோல் விலையை ஏற்றும். கெரசின் விலையை ஏற்றாது.
காரணம் கெரசின் ஏழைகள் பயன்படுத்துவது. இந்தியாவைப் பொறுத்தவரை பெட் ரோல்
'உயர்வகுப்பு' ஐட்டம்தான். உலக அளவில் கச்சா என்ணை விலை தினம் ஏறிக்கொண்டேதான்
இருக்கிறது. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
வேண்டுமென்றால் ஒ.என்.ஜி.சி. போன்ற எண்ணை நிறுவனங்கள் பணத்தை திருவாசக இசைத்தட்டு
போன்ற புண்ணிய காரியங்களில் முதலீடு செய்வதை குறைத்து மக்களுக்கு உதவலாம்.
Post a Comment