ரசிகர் மன்றங்கள் ஒரு பார்வை -1

ரசிகர் மன்றங்கள் ஒரு பார்வை -1

இந்த பதிவு தனிப்பட்ட எந்த ஒரு ரசிகர் மன்றத்தையும்
குறிவைத்து எழுதப்பட்டதல்ல.... ஆரோக்கியமான
ஒரு விவாதம் மட்டுமே, ஆரோக்கியமான, நாகரிகமான கருத்துகளை
எதிர்பார்க்கின்றேன். இதில் பல விடயங்களில் எமக்கு நேரடி அனுபவமுன்டு

திரைப்படங்கள் என்பது தமிழகத்தில் வெறும் பொழுது போக்கு அம்சமாக
மட்டுமிருப்பதில்லை, இங்கே சாதாரண பொது மக்களுக்கு தான் செய்ய முடியாத
விடயங்களை ஒருவர் திரையில் அரங்கேற்றும் போது ஒரு விதமான மகிழ்ச்சி
ஏற்படுகின்றது, அங்கே திரையில் நாயகனுக்கு பதில் தன்னை வைத்துப்பார்க்கின்றான்.

வட்டாச்சியர் அலுவலகத்தில்(மட்டுமல்ல மற்ற பல இடங்களிலும்) ஒரு சான்று வாங்கும்போது எல்லா நிலைகளுக்கும் லஞ்சம் கொடுக்கும்போது அந்த சாதாரண
மனிதனால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் காசை கொடுத்துவிட்டு மனதிற்குள்
ஒரு இயலாமையான கோபம் மட்டுமே படமுடியும் அந்த கோபத்தைகூட அங்கே வெளியில் காட்டமுடியாது, இந்த நிலையில் இதை தட்டிகேட்டு ஒரு தாத்தா இந்தியன்
படத்தில் வரும்போது அங்கே நாயகனின் இடத்தில் தன்னையும் எதிர்நாயகனிடத்தில்
தன் எதிரியையும் வைத்துப்பார்க்கின்றான். தன்னால் செய்யமுடியாத ஒன்றை திரைப்படத்தில் காணும்போது உணர்ச்சி வசப்படுகின்றான், கை தட்டுகின்றான்,
ஆர்ப்பரிக்கின்றான், படம் முடிந்து வெளியில் வரும்போது அது அத்தனையும்
மறந்து தன் வேலையைப்பார்க்கின்றான், ஆனால் இன்னமும் அந்த படத்தையே
நினைத்துக்கொண்டிருப்பவன் அந்த நாயகனை நம்ப ஆரம்பிக்கின்றான்,

அந்த திரை நாயகனும் ஒரு சாதாரண மனிதரே, அவரும் நம்மை மாதிரிதான்,
நாம் எப்படி வேலை செய்கின்றோமோ அது மாதிரி அவருக்கும் நடிப்பது
ஒரு தொழில் அவ்வளவே என்று எண்ணாமல் திரையில் தெரியும் நாயகன் உண்மையென நினைக்கின்றான் விளைவு திரையில் நாயகன் செய்வது
பேசுவது எல்லாம் உண்மை என நினைக்க ஆரம்பிக்கின்றான்,
அதன் விளைவால் நிழலை மட்டுமின்றி நிஜத்தையும் ஆராதிக்கின்றான்.

திரையில் மட்டுமே நூறு பேரை அடிப்பது சாத்தியம் உண்மையில் சாத்தியமில்லை என்று நம்பும் அதே ரசிகன் திரையில் பேசும் வசனங்களும் பாத்திரமும் உண்மை என நம்புவது ஏன் என புரியவில்லை!!!

ஒரு குறிப்பிட்ட நடிகரை விரும்ப ஆரம்பித்தப்பின் அதே நடிப்பை வேறொருவர் திரையில் செய்யும் போது மனம் ஏற்றுக்கொள்வதில்லை, அந்த நடிகரின் மீது
காழ்புணர்ச்சிகொள்கின்றான், அவனுடைய விருப்ப நடிகர் திரையில் செய்யும்
விடயங்களை ஏற்றுக்கொள்ளும் மனம் மற்றொரு நடிகர் செய்யும் போது ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது, ஏனெனில் நிழலையும் தான்டி நிசத்திலும் அந்த நடிகரை ஆராதிக்க ஆரம்பித்து விட்டான்.

இதில் குறிப்பிட்ட அளவிற்கு நடிகர்களின் பங்களிப்பும் உண்டு, மனித மனம் எப்போதும் புகழை விரும்பும், மற்றவர்கள் தம்மை பின் தொடர்வதை விரும்பும், திரையில் கிடைத்த புகழை நிசத்திற்கும் பயன்படுத்த விரும்புகின்றனர், விளைவு இரசிகர்களை தெய்வம் அது இது என்று புகழ ஆரம்பிக்கின்றனர் விளைவு ரசிகன் மேலும் போதை கொள்கின்றான்.

தமிழகத்திலே திரைத்துறையை சேர்ந்தவர்கள் முதல்வரானதும், திரைத்துறையில்
உள்ளோரின் அரசியல் பிரவேசமும் பல நடிகர்களை அடுத்த முதல்வர்
பதவிக்கு கணவுகாண வைக்கின்றது, பத்திரிக்கைகளும் திரைத்துறை
தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

தன்னைப்போன்றே ஒரு குறிப்பிட்ட நடிகரை ஆராதிக்கும் சிலருடன்
சேர்ந்து மன்றம் தொடங்குகின்றனர் ரசிகர்கள், இது வளர்ந்த நடிகர்களுக்கு
மட்டுமே, தொடக்ககாலங்களில் நடிகர்களே பணம் தந்து சொந்தங்களின்
மூலம், தெரிந்தவர்கள் மூலம் ரசிகர் மன்றங்கள் திறக்கின்றனர்.

ரசிகர் மன்றங்கள் திறக்கும் அல்லது அதில் இருப்பவர்களின்
முக்கிய நோக்கம் ஊரிலோ அல்லது தாமிருக்கும் பகுதியிலோ
தமக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் இது தான் முதல் காரணி
இதன் பிறகுதான் நடிகரின் மேலுள்ள பாசமெல்லாம்.

பெரும்பாலான நடிகர்கள் ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் கட்சி
மாதிரியே உருவாக்கிக்கொண்டுள்ளனர், மாநில (அகில உலக:-)) ) தலைமை
மாவட்டத்தலைமை என ஒரு அரசியல் கட்சி போன்றே நடத்துகின்றனர்
அரசியல் கட்சியாக மாறும்போதும் அமைப்பு ரீதியாக இது உதவுமென்பதால்.

அகில உலகத்தலைமை எப்போதும் ஒரு சாதாரண ரசிகராக இருக்க மாட்டார்
ஒன்று நடிகரின் சொந்தக்காரராக அல்லது நெருங்கிய நண்பராக இருப்பார்.
இதில் நடிகரின் மனைவிக்கும் அகில உலகத்தலைமை ரசிகர் மன்றத்தலைவருக்கும்
மன்றங்களை கட்டுப்படுத்துவதில் குழு மோதல் ஏற்படும்(இதைப்பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்), இப்படியாக மன்றங்கள் எப்போதும் சொந்தங்களின் கட்டுப்பாட்டில்தான்
இயங்கும், மன்றங்கள் கூட சொந்தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தான்
படத்திலும் நேரிலும் வாரிசு,குடும்ப அரசியலை எதிர்த்து கூப்பாடு போடுவர்,
என்னே ஒரு பார்வை!!!

சரி மன்றங்களின் அடையாளம் என்ன?

ஒரே ஒரு பெயர் பலகை.

பெரும்பாலான மன்றங்கள் ஒரு சிலரின் முயற்சியால் தான் ஆரம்பிக்கப்படும்
ஆனால் பெயர் பலகையில் பெயர் போடவேண்டுமே,
தலைவர்,துணைத்தலைவர், செயளாலர், துனை செயளாலர், இணை செயளாலர்,
பொருளாளர், துனை பொருளாளர், இணை பொருளாளர், கௌரவ தலைவர்,
கௌரவ செயளாலர் இது மட்டுமின்றி உறுப்பினர்கள்,

எங்கே செல்வர் இத்தனை பேருக்கும், எனவே மன்றம் ஆரம்பிப்போரின்
நண்பர்கள், சகோதரர்கள், மாமன், மச்சான்கள் பெயரெல்லாம் அவர்கள்
அந்த நடிகரின் ரசிகர்கள் இல்லையென்றாலும் ஒவ்வொரு
பதவியோடு மன்றப்பலகையில் அலங்கரிக்கும், பெயருக்கு முன் கட்டாயம்
நடிகரின் பெயர் இடம்பெற வேண்டும். இங்கேதான் பெரும்பாலான நடிகர்கள்
கோட்டை விடுகின்றனர், ரசிகர் மன்றம், உறுப்பினர்கள் கணக்கெல்லாம் போடும் போது
இவர்களெல்லாம் நடிகரின் தீவிர ரசிகர்களின் கணக்கில் வருகின்றனர், ஆனால் உண்மையில் அப்படியல்ல.


பெரும்பாலான மன்றங்களுக்கு இந்த பெயர்பலகையைத்தவிர வேறொன்றுமிருக்காது,
குறைந்தபட்சம் ஒரு கொட்டகைக்கூட இருக்காது. பெயர் பலகை வைத்தவுடன்
மன்றத்தை பதிவு செய்யும் சடங்கு உள்ளது, மன்றத்தின் பெயரை தலைமை மன்றத்திடம் பதிவுசெய்வது மிக அவசியம், அப்போதுதான் நாளை அரசியல் இயக்கமாக மாறும்போது அங்கீகாரம் கிடைக்கும், இதைவிட முக்கிய விடயமென்றால்
தலைமையிடமிருந்து ரசிகர் மன்றங்களுக்காக பணம் தரப்படுவது பதிவு செய்யப்பட்ட
மன்றங்களுக்கு மட்டுமே, மன்றங்களை பதிவு செய்யும் போது குறைந்தது 25 நபர்கள்
ரசிகர்களாக கணக்கு காட்டப்படவேண்டும், எனவே பல பெயர்களை தாமாகவே எழுதி
கையெழுத்தும் போட்டு அனுப்பவர் மன்ற நிர்வாகிகள், இந்த பெயர் பட்டியலையும்
பார்த்து தம் ரசிகர்களின் பலத்தை தவறாக கணிப்பர் நடிகர்கள்.

அகில உலகத்தலைமையிடமிருந்து பணம் மாவட்ட தலைமைக்கு அனுப்பப்படும்
அங்கிருந்து பணம் நகரத்தலைமைக்கும் அங்கிருந்து ஒவ்வொரு மன்றத்துக்கும்
தரப்படும். ஆனால் இந்த பணத்தை பிரித்துக்கொள்வதில் மன்றங்களுக்குள்
பெரிய குழு மோதலே நடக்கும். இந்த பணத்தை வைத்து நடிகர்களின் படம்
வெளியாகும்போது கட்-அவுட் வைப்பதும், சுவரொட்டி அடிப்பதும், பேனர்கள்
கட்டுவதும் நடக்கும், இந்த கட்-அவுட், தோரணங்கள், சுவரொட்டி
களை வண்ணப்படம் எடுத்து தலைமைக்கு அனுப்பிவைப்பர், இது அவர்கள்
பெற்ற பணத்திற்கு செய்த செலவிற்கான கணக்கு காண்பிப்பதற்காக,
எல்லா நடிகர்களின் தலைமை மன்றங்களும் ரசிகர் மன்றங்களுக்கு பணம் அனுப்பவதில்லை, அந்த மாதிரி நடிகர்களின் மன்றங்களுக்கு கட்-அவுட் வைக்க,
சுவரொட்டி அடிக்க, கொடித்தோரணம் கட்ட செலவு செய்ய பணம் எப்படி கிடைக்கின்றது.

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

29 பின்னூட்டங்கள்:

said...

குழலி., நல்லா எல்லாத் தகவலையும் கொடுத்திட்டிங்க! நல்ல பதிவு., அவசரமாப் போயிட்டு இருக்கேன்...அப்புறமா வாரேன்...?.,. ம். எங்கயா? அட பதிவு பண்ணத்தான்!. யாருக்குன்னு கேட்டா எல்லாரும் அடிக்க வந்திருவிக... நான் முழு மூச்சா எதிர்க்கிற வி.காவுக்குத்தான்., அவருதான அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் குதிக்கப் போறாரு?., காமராசரு இல்ல., எம்.ஜி.யாரு இல்ல... இப்ப இவருதான நமக்கு?...ம்.. நீங்க என்னா சொல்றிக?.

said...

//அந்த திரை நாயகனும் ஒரு சாதாரண மனிதரே, அவரும் நம்மை மாதிரிதான்//.

***ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை என்னவென்றால்., எங்களால் கடைசி வரைத் தலைவரின் முகத்தை நேரில் பார்க்கவே முடியாதா? என்பாதுதான். ***

இத இன்னைக்கு காலைல இங்க ( http://www.kumudam.com/reporter/mainpage.php) படிச்சேன். கடவுள் மாதிரி இருக்காங்க... சாதரண மனிதாரேன்னு 'சட்டுன்னு' எழுதிப் புட்டிங்களே?.

said...

//நல்லா எல்லாத் தகவலையும் கொடுத்திட்டிங்க!//

இல்லிங்க, இன்னும் நிறைய இருக்கு, அடுத்த பதிவில் பாருங்க

***ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை என்னவென்றால்., எங்களால் கடைசி வரைத் தலைவரின் முகத்தை நேரில் பார்க்கவே முடியாதா? என்பாதுதான். ***

நோ கமென்ட்ஸ்

// நான் முழு மூச்சா எதிர்க்கிற வி.காவுக்குத்தான்., //
அய்யயோ அப்படிபோடு, கேப்டன் குமாரு னு ஒருவர் உள்ளே வந்திருக்கார் ஞாபகமிருக்கட்டும்

//ரசிகர் மன்றத்தை விட மட்டமான கட்சியையும், யாரோ முதல்வராகவும், தேர்தலில் நிற்காமல் அமைச்சராகவும் கொடி பிடிக்கும் அப்பாவி தொண்டர் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள். //
நம்ம பட்டி மன்றம் படித்து பாருங்கள் ரசிகர் மன்றங்களைவிட அரசியல் தொண்டர்களைத்தான் அதிகம் சீண்டியிருப்பேன்.

http://kuzhali.blogspot.com/2005/05/1.html

http://kuzhali.blogspot.com/2005/06/2.html

http://kuzhali.blogspot.com/2005/06/3.html

ஆனாலும் அரசியல் கட்சிகள் இல்லாத நாடு உண்டா?? ஆனால் ரசிகர் மன்றங்கள் இல்லாத பல நாடுகள் உண்டு (இந்தியாவைத்தவிர வேறெங்கேனும் ரசிகர் மன்றங்கள் உண்டா?)

தலைவலிக்கிறது என தலையை வெட்டிவிட முடியாமா, வலி என்றாலும் தேவையான ஒன்று என்பதால் வேறு வழியில்லை, அதே சமயம் இன்னொன்று தேவையில்லாத அதிகப்படியான சுமை (எக்ஸ்ட்ரா லக்கேஜ்) எனவே இறக்கிவைத்துவிடலாம் எல்லோரும் உணர்ந்தால்.

//எனக்கென்னமோ, உங்கள் பதிவை பார்த்ததில் இருந்து ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆதாயம் உள்ளது போல் தெரிகிறது. //

அடுத்தப்பதிவில் மேலும் பல விவரங்கள் புரியும்

அது சரி இரண்டு பேரும் நல்லப்பதிவுனு சொல்லிட்டீங்க, எத்தனை பேரு வந்து மட்டையடிக்கப்போறாங்கனு தெரியலை...

said...

எனக்குத் தெரிய "பஞ்ச கல்யாணி" க்கும், ஏதோ ஒரு ஊரில் ரசிகர் மன்றம் இருந்ததாக, ஏதோ பத்திரிகையில் படித்ததாக ஞாபகம். நிச்சயமாக "பஞ்ச கல்யாணி" தனது பணத்தைக் கொண்டு இந்த ரசிகர் மன்றத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை.

எனவே பெரும்பாலான ரசிகர் மன்றங்கள், அந்தந்த நடிகர்களின் தூண்டுதலால், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு நண்பரோ அல்லது உறவினரோ மூலம், அவரது முதலீட்டில்தான் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த நம்பிக்கைக்கு பாத்திரமான ஆள், தனது அடுத்த கட்ட ஆட்கள்மூலம் இதனை விரிவுபடுத்திக் கொளவார், இது இப்படியே விரிவடைந்து செல்லும்.

இவையெல்லாம்தான் அந் நடிகரின் இருப்பை தக்க வைத்துக்கொள்ளும், வியாபார உத்திகள்.

"ஆனாலும், அதைவிட எதிர்காலத்தில் அந்த நடிகர் அரசியலுக்கு வர, ரசிகர் மன்றங்கள்தான், ஓர் பேரம் பேசுவதற்குரிய காரணியாகும், என்பதனையுணர்ந்த நடிகர்கள்தான் இவ்வாறு தங்களுடைய பணத்தில் ரசிகர் மன்றங்களை ஏற்படுத்தினார்கள்/விரிவு படுத்தினார்கள் என்பதுதான் மிகவும் சரியானது."

said...

//எத்தனை பேரு வந்து மட்டையடிக்கப்போறாங்கனு தெரியலை...// - kuzhali.

வாட் ஈஸ் & ஹவ் டு, மட்டையடிகறது ? குழலி !

ஞானபீடம்.

said...

//வாட் ஈஸ் & ஹவ் டு, மட்டையடிகறது ? குழலி !//

நாளைக்கு வந்து பாருங்க பதிவுல, சில ஆட்கள் இன்னும் வரவில்லை அவங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க.

said...

////அந்த திரை நாயகனும் ஒரு சாதாரண மனிதரே, அவரும் நம்மை மாதிரிதான்,
நாம் எப்படி வேலை செய்கின்றோமோ அது மாதிரி அவருக்கும் நடிப்பது
ஒரு தொழில் அவ்வளவே என்று எண்ணாமல் திரையில் தெரியும் நாயகன் உண்மையென நினைக்கின்றான்/////

ஆனால், திரைக்கு அப்பாற்பட்டு நிஜத்தில் அவரின் எளிமைக்கும், நல்ல சில பன்புக்கும் அவரின் ரசிகராக இருக்கிறார்கள் அல்லவா?? நேரடியாக சொல்லவேண்டும் என்றால், ரஜினிக்கு இன்று ரசிகர்களில் பலர், அவர் திரையில் செய்வதை ரசிப்பதை விட , நிஜத்தில் அவரின் நல்ல பல குணங்களுக்காக , எளிமைக்காக ரசிக்கிறார்கள் அல்லவா?? நானும் அப்படி ஒரு ரசிகனே!

///////அகில உலகத்தலைமை எப்போதும் ஒரு சாதாரண ரசிகராக இருக்க மாட்டார்.ஒன்று நடிகரின் சொந்தக்காரராக அல்லது நெருங்கிய நண்பராக இருப்பார்//////
யோசித்துப்பார்தேன் , இது 100/100 உன்மையான கருத்து!

வீ எம்

said...

No comments...! :)

said...

//நிஜத்தில் அவரின் நல்ல பல குணங்களுக்காக , எளிமைக்காக ரசிக்கிறார்கள் அல்லவா?? நானும் அப்படி ஒரு ரசிகனே!//

இதில் நான் வேறுபடுகின்றேன், எல்லா மனிதனிடத்திலும் சில நல்ல குணங்கள் உண்டு ஒத்துக்கொள்கின்றேன், ஆனால் சில விடயங்களை பிடித்தவர் பிடிக்காதவர் என்பதை விளக்கிவிட்டு ஒரு முறை அத்தனையும் யோசித்துப்பார்த்தால் தன்னை இருத்திக்கொள்வது, லாபம் சம்பாதிப்பது என்பதைத்தவிர வேறொன்றும் எமக்கு தெரியவில்லை, "குணம்நாடி குற்றம்நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" என்னும் போது என்னைப்பொருத்தவரை என்னளவில் இதை ஏற்க முடியவில்லை... இது என் கருத்து மட்டுமே!

said...

//No comments...! :) //

அண்ணாத்தே நீங்களேவா?

இன்னொன்று உண்மையான பாசத்தோடு இருக்கும் பலருக்கும் மன்றங்களின் உள்ளே நடக்கும் பல விடயங்கள் வெளியே தெரிந்திருக்க வாய்பில்லை, இதற்கு முதல் காரணம் பெரும்பாலும் விடயங்களை பத்திரிக்கை மூலமாகத்தான் அறிந்து கொள்கின்றனர், அரசியைல் கட்சிகளின் உள்குத்துகளை பத்திரிக்கை அலசுவது போல ரசிகர்மன்றங்களின் உள்குத்துகளை எந்தப்பத்திரிக்கையும் (அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு சம்பவங்களைத்தவிர) அலசுவதில்லை, இதற்கு முக்கிய காரணம் பத்திரிக்கைகளுக்கு ரசிகர் மன்றங்களின் மீதான அலட்சியம் என்பதைத்தவிர எமக்கு வேறொன்றும் தெரியவில்லை

said...

ரஜினியை அரசியலில் இருந்து ஒட ஒட விரட்டி தமிழர் மனம் காத்ததற்காக மட்டுமே ராமதாஸை பாரட்டலாம் , நோக்கமும் வழிமுறையும் தவறாக இருந்தாலும் .

said...

நடிகர் என்ற இடத்தில் கட்சித் தலைவர் என்றும் இரசிகர் மன்றங்கள் என்ற இடத்தில் கட்சியின் கிளை அலுவலகங்கள் என்றும் போட்டுப்பார்த்தால் ? (இது வேற போட்டுப்பார்க்கிறதுங்க)

said...

தாசு வாங்க வாங்க, இன்னும் மாயவரத்தான் கூட வந்துவிட்டார் இன்னும் முகமூடிய காணவில்லை. அப்புறம் நம்ம ரஜினி ராம்கி, ஜெகன், sundarraj(rajinifans.com) இந்தப்பதிவைப்பற்றிய இவர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.

said...

//நடிகர் என்ற இடத்தில் கட்சித் தலைவர் என்றும் இரசிகர் மன்றங்கள் என்ற இடத்தில் கட்சியின் கிளை அலுவலகங்கள் என்றும் போட்டுப்பார்த்தால் ? (இது வேற போட்டுப்பார்க்கிறதுங்க) //

லதா (அக்காவா? அண்ணனா?) நீங்க சொல்வது ஓரளவுக்கு ஒத்துவரும் ஆனாலும் மன்றங்கள் அளவுக்கு வருமா என்றால் இல்லை என்பது எனது கருத்து அப்படியே கீழ் கண்ட சுட்டிகளை விரும்பினால் படித்துப்பாருங்களேன்

http://kuzhali.blogspot.com/2005/05/1.html

http://kuzhali.blogspot.com/2005/06/2.html

http://kuzhali.blogspot.com/2005/06/3.html

said...

// முகமூடிய காணவில்லை // நான் தங்களது அனைத்து பதிவுகளையும் முதல் ஆளாக படிக்கிறேன் என்றும் படம் போட்டு பாடம் கற்பிக்கும் "சைடு" குத்துக்கு பயந்தே மௌனியாக இருக்கிறேன், மேலும் கட்சி வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால், இதன் தொடர்பதிவுகள் அனைத்தும் வெளியீடு ஆன பின் தங்கள் டாக்டர் அய்யா பத்திய தொடர் பதிவுகளுக்கு பதில் உரைத்துவிட்டு மேற்கொண்டு முகம் காட்ட (முகமூடி போட்டுக்கொண்டுதான்) முடிவு செய்திருக்கிறேன் என்றும் இந்நேரத்திலே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

said...

முகமூடி உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி, மருத்துவர் இராமதாசு பற்றிய பதிவு போடுங்க, நானும் பதில் சொல்கிறேன் .

//படம் போட்டு பாடம் கற்பிக்கும் "சைடு" குத்துக்கு பயந்தே மௌனியாக இருக்கிறேன்//
இதுக்கெல்லாம் பார்த்தா வேலைக்காகுமா? அங்கங்கே முட்டிக்கறதால கொஞ்ச நாளைக்கு உங்க பதிவுல மவுனவிரதமிருக்கலாம்னு முடிவு செய்திருக்கேன், கொஞ்ச காலம் தான் மீண்டும் வருவேன் உங்க பதிவில் வந்து பின்னூட்டமிட

said...

தாஸு. ரஜினிய விரட்டியாச்சுனு சொன்னீங்க. அப்புறம் எப்படி தர்மபுரி மற்றும் எல்லா ஏரியாவிலும் படம் பட்டையா கிளப்புது. அப்ப உங்க ஆளுங்கலும் எங்க படத்த மட்டும் தான் பார்க்குறாங்களா? அது சரி ரஜினி எப்ப கட்சி ஆரம்பிச்சாரு. சொல்லவே இல்லை.

அது சரி உங்க 7 பேத்தையும் அம்மா ஒட ஒட கும்முடிபூண்டி, காஞ்சிபுரத்துல விரட்டுனதைவிடவா?

ரஜினிய விரட்டுனதால தமிழர் மானம் காப்பாற்றப்பட்டதா? அம்மாவும் கர்னாடகம் தாம்பா? அப்பா அம்மா விரட்டுனாதாலா அய்யா மானம் போச்சா இல்லை தமிழர் மானம் போச்சா. சரியா சொல்லுங்க டாசு

said...

//எப்படி தர்மபுரி மற்றும் எல்லா ஏரியாவிலும் படம் பட்டையா கிளப்புது//

என்னுடைய ஆசையே அதுதாம்பா .. படம் நல்லா ஓடனும் ..அதே நேரம் அரசியல்ல இவர் அடி வாங்கனும் ….. அது நடந்தால் தமிழனுக்கு சினிமாவிற்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியும் என உலகத்திற்கு புரியும் ..

said...

அது சரி ராஜாராமதாசு பதிவில் எழுப்பிய கருத்துகளுக்கும் குற்றசாட்டுகளுக்கும் பதில் ஏதுமுன்டோ??

//அது சரி ரஜினி எப்ப கட்சி ஆரம்பிச்சாரு. சொல்லவே இல்லை. //
அதான் ஆரம்பிக்கறதுக்கு முன்னமேயா மூட்டை கட்டி அனுப்பிவிட்டார்களே, அப்புறம் என்னத்த ஆரம்பிக்கறது?

//அது சரி உங்க 7 பேத்தையும் அம்மா ஒட ஒட கும்முடிபூண்டி, காஞ்சிபுரத்துல விரட்டுனதைவிடவா?//

இது கூட ரஜியானலதானா??

//ரஜினிய விரட்டுனதால தமிழர் மானம் காப்பாற்றப்பட்டதா? //
சத்தியமாக காப்பாற்றப்பட்டது, இனி கனவிலும் நினைக்கமுடியாத அளவிற்கு போட்டு தாக்கியாச்சி, விஜயகாந்து வரட்டும், அவரு அரசியலுக்கு வந்து அவரோட உண்மையான பலம் என்னனு அவருக்கு தெரிஞ்சிக்கனும் (பழைய சோறும் வெங்காயமும் தான் கடைசியா மிஞ்சும் அவருக்கு)

அம்மாவும் கர்னாடகம் தாம்பா?
// அந்த சமயத்தில் இது மாதிரி ஒரு மருத்துவர் இராமதாசு இல்லை, இப்போ கை மீறி போய்விட்டது//

// அப்புறம் எப்படி தர்மபுரி மற்றும் எல்லா ஏரியாவிலும் படம் பட்டையா கிளப்புது//
திரைப்படம் ஒரு பொழுது போக்கு மட்டுமே,திரைப்படவெளிச்சத்தில் தலைவனை தேடுபவர்கள் அல்ல, படம் ஓடுவதால் அந்த பகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு வந்துவிட்டது, ரஜினி சொன்னால் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் அது அறிவீனமே.

said...

குழலி... நான் எந்தவொரு ரசிகர் மன்றத்திலும் எக்காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை.. இருக்கவுமில்லை.. இப்போதைய எண்ணப்படி வரும்காலத்தில் இருப்பதாகவுமில்லை.. அதனால் தான் இது குறித்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தேன்.

சரி.. இந்த விவாதத்தில் நீங்களே திசை திருப்பும் விஷயத்திற்கு வருவோம். அது என்னங்க அது... பொதுமக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஜெ. அரசின் மீது எதிர்ப்பை காட்டி ஓட்டு போட்ட போது கூட்டணிகளின் புண்ணியத்திலும், அதை விட முக்கியமாக பொதுமக்களின் ஜெ. எதிர்ப்புணர்வினாலும் ஜெயித்த 'நீங்கள்' அந்த தேர்தல் முடிவு ரஜினிக்கு மக்களின் பா.ம.க. அனுதாபத்தினால் தான் 'வாய்ஸ்' எடுபடவில்லை என்று கருதலாம். அதுவே, லேட்டஸ்டாக 'உங்களுக்கு வாக்கு வங்கி' மிக அதிகமாக இருப்பதாக தேர்தலுக்கு முன் பத்திரிகைகளில் 'அள்ளி விட்ட' இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தலில் உங்கள் கூட்டணி ஆட்கள் எக்கச்சக்கமான ஓட்டு வித்தியாசத்தில் குப்புற விழுந்தது மட்டும் உங்கள் கட்சி மக்களிடத்தில் வெறும் செல்லாக்காசு என்று ஒப்புக் கொள்ள மறுக்கிறீற்கள்.?!

விஜயகாந்த், அரசியலுக்கு வரட்டும்... மக்களிடத்தில் செல்லட்டும்.. அவருக்கு ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும்.. அதற்குள் நீங்களாகவே பழைய சோறும் வெங்காயமும் அப்படீன்னு எல்லாம் கமேண்ட் அடிப்பது ஒரு வித பய உணர்வை காட்டுவதாகதான் அர்த்தம்.

மீண்டும் கூறுகிறேன்.. வெறும் கூட்டணி அரித்மெட்டிக்கை வைத்து இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற முடியும் பார்க்கலாம்?!

ஜெ. அரசியலுக்கு வந்த போது மருத்துவர் இல்லையாம்... இதையே நான் வேறு மாதிரி கூறட்டுமா?! மரம் வெட்டி போராட்டம் நடத்துவது இப்போது ஜெ. ஆட்சியில் நடந்திருக்க வேண்டுமாம்.. அப்போது தெரிந்திருக்கும் யாருடைய டப்பா டான்ஸ் ஆடுமென்றூ!

ரஜினிக்கு செல்வாக்கு வந்துவிட்டது அவர் சொன்னால் ஓட்டு போடுவார்கள் என்று கருதுவது அறிவீனமே என்பது இருக்கட்டும்... உங்கள் தலைவர் (?!) சொல்லி ஒரு வேட்பாளரையாவது தனியாக ஜெயிக்க வைக்க முடியுமா? (கூட்டணி இல்லாமல்?!). ஒருவேளை ரஜினி அரசியலுக்கு நேரடியாக வந்தால் அப்போது தான் அவருக்கு செல்வாக்கு இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பட்டிமன்றம் வைக்க முடியும். ஒரு பாராளுமன்ற தேர்தலில் மேலே கண்ட காரணங்களுக்காக கூட்டணியில் (கூட்டத்தில்) கோவிந்தா போட்டு ஜெயித்து விட்டு நீங்கள் பண்ணுற அலம்பல் தாங்கலையப்பா!

தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக டெபாசிட் ஒட்டுமொத்தமாக காலியாகி கட்சியின் சின்னத்தையே பறிகொடுத்த நீங்களே இப்படியெல்லாம் பேசும் (பேத்தும்?!) போது... விஜய்காந்த் எல்லாம் இப்போதே இப்படியெல்லாம் பேசுவது தப்பேயில்லை தான்.!

said...

எல்.எல்.தாசு... உங்களை லிருந்தே பார்த்து வருகிறேன்.. சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறீர்கள் என்று விளக்க முடியுமா? அரசின் சலுகையில் மருத்துவம் படித்து அதை மக்களுக்கு பயன்படுத்தாமல் அரசியலுக்கு வரலாம்.. சினிமாக்காரர்கள் மட்டும் ஏன் வரக்கூடாது என்பதற்கான வலுவான காரணம் கூறுங்களேன் உங்களுடைய பதிவில்!!!

said...

//எல்.எல்.தாசு... உங்களை லிருந்தே பார்த்து வருகிறேன்.. //

இதை இப்படி படிக்கவும்...

எல்.எல்.தாசு... உங்களை forumhub-லிருந்தே பார்த்து வருகிறேன்..

said...

//காமராசரு இல்ல., எம்.ஜி.யாரு இல்ல... இப்ப இவருதான நமக்கு?//

அப்படிப்போடு.. அட...எம்.ஜி.ஆரு..காமராசரை எல்லாம் சேத்துகிட்டீங்க.. மருத்துவரையும் அவரோட மகனாரையும் உங்க லிஸ்ட்டிலே சேத்துக்க மறந்திட்டீங்க பாருங்க! அட.. நீங்க காமராஜர், எம்.ஜி.ஆர்., இவங்களுக்கு அடுத்தபடியா மருத்துவரை தான் நெனச்சீங்களா அவரு கட்சி ஆரம்பிச்சப்ப?! இல்லைன்னா இப்போ விஜயகாந்துக்கு மட்டும் ஏன் அப்படி கேக்குறீங்க?! ஆமாம்னா இப்போ உங்க நெனப்பு சரின்னு படுதா?! சரியா சொல்லுங்க பார்க்கலாம்.!

said...

சினிமாக்காரர்களே முதல்வராக தமிழ்நாடென்ன திரைப்படக்கல்லூரியா? ... நீங்கள் சொன்னபடி என் பதிவில் பதிகிறேன்.. நீங்கள் வழக்கம்போல தட்டையாக பேசுகிறேன் என மட்டையடியுங்கள்(தமிழ்மண பாதிப்பு??)

அதுசரி forumhubல் நீங்கள் என்ன பெயரில் எழுதினீர்கள் ???

said...

//அதுசரி forumhubல் நீங்கள் என்ன பெயரில் எழுதினீர்கள் ???//

:) அது சஸ்பென்ஸ் தாஸ்..! வேண்டுமானால் ஒரு க்ளூ தரட்டுமா?! நான் அங்கே 'எப்போதுமே சரி'யாக தான் எழுதுவேன்..!! நான் சொல்வது 'பழைய' கதை!

said...

மாயவரத்தான் நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கு மாய்ந்து மாய்ந்து 4 பதிவு ஏற்கனவே எழுதிவிட்டேன், மீண்டும் அதையே என்னத்தை,

//ஜெ. அரசியலுக்கு வந்த போது மருத்துவர் இல்லையாம்... இதையே நான் வேறு மாதிரி கூறட்டுமா?! மரம் வெட்டி போராட்டம் நடத்துவது இப்போது ஜெ. ஆட்சியில் நடந்திருக்க வேண்டுமாம்.. அப்போது தெரிந்திருக்கும் யாருடைய டப்பா டான்ஸ் ஆடுமென்றூ!
//
இன்னும் அதிகமாக வளர்ந்திருப்போம், எதிர்ப்பு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு வளர்வோம்,இப்போது அரசியல் நடத்திக்கொண்டிருந்ததைப்போல மென்மையான விடயமல்ல போராட்டங்கள் நடத்திய காலகட்டம், அப்போது மட்டுமென்ன போராட்டத்தை மென்மையாகவா எதிர்கொண்டனர், வன்முறையில்தானே எதிர் கொண்டது அரசாங்கம், அதை விட என்ன பெரிய வன்முறையை வேற அரசாங்கம் செய்து விடப்போகிண்றது,

விஜயகாந்த் தான் சொன்னார் எனக்கு பழையசோறும் வெங்காயமும் போதுமென,2006 தேர்தலில் தெரிந்துவிடும் பழையசோறும் வெங்காயமுமா இல்லை வெறும் பழைய சோறானு

said...

மாயவரத்தான்., அத நாஞ்சொல்லல விஜயகாந்த் அண்ணந்தான் சொன்னாரு., குமுதத்துல!. காமராசர் இருந்திருந்தால்., எம்.ஜி.யார் இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்னு கூசாம சொல்றாரு. போயிப் படுச்சுப் பாருங்க. எம்.ஜி.யார் ஆட்சியின் போதுதான் 'மஞ்சள் பை' யில வாங்கிட்டு இருந்தவனெல்லாம் சாக்குப் பையில வாங்குனாய்ங்க. எம்.ஜி.யாரும், காமராசரும் ஒண்ணா?. அவரு வரட்டும் மக்கள் சொல்வாக்கு இருக்குதான்னு பார்க்கலாம்கிறிங்க., காக்கா ஒக்கார விழுகிற பனம்பழம் மாதிரி., ராஜீவ் மரணம்தான் சில பேர எங்கையோ கொண்டு போய் உக்கார வச்சுருக்கு. உங்க மனசத் தொட்டுச் சொல்லுங்க தமிழ்நாடு நடிகர்களின் ஆட்சியினால தன்னிறைவு அடைஞ்சிருச்சா?. கவல்துறைங்கிறது ஏவுனா அடிக்கிற 'கூர்ஹா' (அய்யோ அவங்கள களங்கப்படுத்துறேன்) துறைன்னு ஆகிப்போச்சு. ஒண்ணும் தெரியாம ஒரு பாட்டுல மேல வற்ரவுங்க காவல்துறைய தத்தெடுத்தான் உட்காரமுடியும்., எதிர்க்கிற்வங்க மேல குழவிக்கூட்டத்தை கழைச்சு விடுற மாதிரி காவலர்களை ஏவி விட்டா போதும், நிம்மதியா உக்கார்ந்துக்கலாம். ராமதாஸ் மறத்த வெட்டுனாரு., தி..மு.க ஊழல் கட்சி. பழைய குப்பையவே ஏன் போட்டு கிளறிக்கிட்டு இருக்கிங்க?. அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். மாற்றத்திற்கான வழி என்ன?., அது நடிகர்கள்ங்கிறத ஒத்துக்க முடியாது. எவ்வளவோ நல்ல சக்திகள்., நாட்டின் தலையெழுத்தை உண்மையாகவே மாற்றும் சக்திகள் நிறைய இருக்கு நம்ம நாட்டுல. ஆனா பவுடர்பூசி மேக்கப் போட்ட முகங்களின் ஆட்டத்தால் அவை பொழிவாக வெளித்தெரிவதில்லை. இத ஏதோ அலங்காரத்திற்காக சொல்ல்றேன்னு நினைக்காதீங்க. உண்மையான அக்கரையில சொல்றேன். தப்பு பண்ணுன்னு சனங்களே சொன்னாக்கூட பண்ணத்தெரியாத அரசியல்வாதிகள் நம்மூர்ல இன்னம் இருக்காங்க. யோசிச்சுப்பாருங்க(தயவுசெய்து மிகைப்படுத்தி கூறுகிறேன் என கிண்டல் செய்யாதீங்க). அப்புறம் ஒண்ணு சொன்னிங்க கைகாட்டுபவர்களைப் பற்றி., சில கிராமங்களில் 18 பட்டிக்கு ஒரு ஆள் சொலறவங்கதான் வெற்றி பெற முடியும். இதுவும் நடந்து கொண்டிருக்கின்ற உண்மை. தேர்தல் சமயத்துல எங்க வீட்டுக்கு வராத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். முன்பு என் பாட்டா., இப்போது என் பெரியப்பாவைச் சந்திக்கின்றனர். எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல பிரசிடெண்டு, கவுன்சிலர்லயிருந்து பஞ்சாயத்து தலைவர் வரை இவங்க சொல்ற ஆளுகதான் வர முடியும். கட்சி, கிட்சியெல்லாம் இவங்களுக்கு அப்புறம்தான். அதுக்காக கிராமத்து பெருசுக எல்லாம் வந்து உக்கார்ந்துக்கன்னு, சட்டமன்றத்தை திறந்து விட்டுவிடலாமா?. மக்கள் செல்வாக்கு இவங்களுக்கு இருக்கிறமாதிரி யாருக்கும் இல்லை. ஆனால் அவர்கள் மற்றவரை கொண்டுவர உதவுகிறார்களேயன்றி அவர்கள் போட்டியிடுவது அரிது. நடிகர்கள் சொல்லுக்கு மந்திரம் இருக்கிறதுதான். சத்தியராஜ் சொல்ற மாதிரி "அட, நடிகர்கள்னா ஜனங்க கூடத்தாய்யா செய்வாங்க!"., ஒரு முறை கலைஞர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது., பாண்டியராஜன் இடையில் வர, கூட்டம் பூரா எந்திரிச்சு நின்னுருச்சு அவரப் பாக்க., கலைஞரின் பேச்சின் சுவை ஊரறிந்தது., அதை சலனப்படுத்த பாண்டியராஜனால் முடிகின்றது. வழக்கமான வாதத் திறமைய இதுல காட்டாதிங்க!. நீங்கதான் செயிச்சிகன்னு எழுதி வேண்டுமானும் குடுத்திரேன் அப்பு. நடிகர்களை அரசியலில்(கவனிக்க: அரசியலில்) நீங்களெல்லாம்(பாய்ந்து வராதிக சாமிஸ்., இது ரசிகர்கள்) ஆதரிக்க என்ன காரணம்னு சொல்லுங்க!.

said...

//No Comments!// - இப்பிடி நீங்க எழுதுனப்பயே., நிறையப் பேசப் போறின்னு நான் நினைச்சேனப்பு., பாத்திங்களா என் நினைப்பு பலிச்சுருச்சு.

said...

Hello author, It is very nicely written about fan clubs. I am reading in lot of places that Rajini out of reel life is leading a very simple life. Ha... Ha..... Haa.... (yes i love to watch his movies .. that is for fun) It makes me laugh. If he is so simple in his life then why do not he give all his wealth (i heard that he earned around 5 crores thru latest movie) to poor and needy or donate it to charity institutions? Atleast I have never seen Rajini in any interview say that he leads a simple life. That is good for him. (For eg. if he is a simple man why does he need nice bunglows all over chennai, bangalore, hyderabad. He could come in a auto to the Thiruvasagam function.. right...). I do not think that he would be able to survive even a single day without airconditioning now? This is all bullshit. People are made fools by some people with him always giving wrong details to poor people. Once again if he is so simple why did he want to get money from his fan club and print notices against a useless filthy political party head? That guy (who calls himself tamil savior) is another cranky fellow. Really Rajini made his name more bad by attacking that maram vetti guy. What every one should try to learn is as this author said "Reel life is not real". Even educated fools do not understand this. Without knowing anything they call Rajini as Thalaivar? What is the meaning of Thalaivar? One thing people (esp so called fans) should know that an actor is void without a director. So without a director he cannot do anything. So how can we expect actors to become great political heads? So called fans should think atleast now. Watch cinema for fun because u are spending your hard earned money for entertainment. Yesterday i read in a news that a guy in CBE saw 100 times latest Rajini movie. Adada what a great achievement... That guy is telling in the newspaper that he achieved something great. But one day when he comes in need of some money for any emergency need for his parents or childrens hospitalisation he will undertand the value of money. By the by Rajini did not ask him to watch his movie n number of times right.

One thing fans should understand that the actors become nothing if people stopped watching movies.

By the by actor is actor. Then why do not we believe that.