சிலுக்கு ஸ்மிதாவும்.... - களந்தை பீர்முகமது

சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் - களந்தை பீர்முகமது

சமீபத்தில் நான் படித்த புத்தகம், உண்மையை சொல்ல வேண்டுமெனில் புத்தகத்தின் பெயர்தான் என்னை சுண்டியிழுத்தது, யாமறிந்த வரையில் பெரும்பாலும் இசுலாமிய சமூகத்தின் வாழ்க்கை முறைகளையும் அதிலுள்ள பிரச்சினைகளயும் குர்ரான், வஹியைத்தொடமால் எழுதியவர்கள் மிகக்குறைவு, அந்த பிரிவில் வருவது இந்த நூல்.

இது ஒரு சிறுகதை தொகுப்பு, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பரிணாமத்தை காண்பிக்கின்றன. எல்லா கதைகளும் பேசும் பிரச்சினகளும் எல்லா சமுதாயத்திலும் நடைபெறும் விடயங்கள், கதைக்களம் மட்டுமே இசுலாமிய குடும்பங்கள்.

சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் என்ற சிறுகதையில் ஒரு ஹாஜியார் எத்தேச்சையாக சிலுக்கு ஸ்மிதாவை சந்தித்ததும் அது தொடர்பாக ஊரில் பேசிய பேச்சுகளும் மிக அழகான நடையில் படைப்பாளி விளக்கியுள்ளார்.

//ஹாஜியாரை சுற்றி நின்றவர்கள் சோகம் திரள சன்னமான குரலில் பலதும் சொன்னார்கள், "அவளா சாகல்ல. எல்லாருமா சேர்ந்து கொன்னுட்டோம்"//
// பெரும் பெரும் நடிகர்கள்,நடிகைகள் இன்றி, புகழ்மிக்க இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்றி, உறவினர் இன்றி நகர்ந்த சிறியதான இறுதியாத்திரையில் சோகத்தால் முழுமையாக ஆளப்பட்ட நிலையில் சுலைமான் ஹாஜியார் நடந்து சென்றதை காணமுடிந்தது//

என்ற வரிகள் நடிகைகளின் வாழ்க்கையை விளக்கும் சுருக்கமான வரிகள்

எமக்கு இசுலாமிய சமுதாயத்தினர்களின் வீட்டினுள் வளைய வந்த அனுபவமில்ல(பாய் மாமா வீட்டைத்தவிர), ஆனால் இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையும் இசுலாமிய குடும்பங்களினுள் ஊடுறுவி வாழ்க்கையை பார்த்த அனுபவத்தை தருகின்றன.

கிளை நதிகள் கதை ஒரு இழவு வீட்டில் ஒரு ஏழை பெண்ணின் மன ஓட்டத்தை அருமையாக காட்டுகின்றது.

தூரத்து வெள்ளம் கதையை படிக்கும் போது பாய் மாமாவும் அரபி அக்காவும் தான் என் கண் முன் வந்து போனார்கள்

காலவேர்கள் கதையில் எதிர்பாராத சமயத்தில் உருவான கரு, பொருளாதார பிரச்சினையால் அதை கலைக்கமுற்படுவதும் அதனால் அந்த பெண்ணிற்கு ஏற்படும் பிரச்சினைகளயும், அந்த பெண்ணின் மன வேதனையையும் விளக்கியுள்ளார்.

இளஞ்சிறகுகள் கதை தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை ஒரு இசுலாமியப்பெண் காதலித்து வீட்டை விட்டு வெளியேறும் போது ஏற்படக்கூடிய மன ஓட்டத்தை ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையிலிருந்து கூறியுள்ளார்.

தீயின் விளிம்புகள் என்ற கதையில் ஜமாத் ஹாரம் கட்டுப்பாடு என்று மத்தின் பெயரைச்சொல்லி ஊரில் அடக்குமுறை செய்து கொண்டிருக்கும் ஒரு பணக்கார வர்கத்தின் போலித்தனத்தை கிழிக்கும் நிகழ்வுகளை கூறியுள்ளார் அந்த கதையிலிருந்து சில வரிகள்
// வந்து சேரவேண்டியவர்களெல்லாம் தங்கள் தங்கள் பந்தாவைக் காப்பாற்றுவதற்காகத் தாமதமாய் வருவதே சங்கைக்குறியது என்று கருதிக்கொண்டவர்களாய் சபையில் இந்த நிமிஷம் வரையில் ஆஜர் ஆகாமல் இருந்தார்கள்//

//'ஷரீ அத்'களையும் இதர பிற மார்க்க சம்பந்தமான நூல்களையும் தாங்கள் கரைத்துக் குடித்திருப்பதாகவே இவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் அது உண்மைதான் என ஊர் ஜனங்களும் அப்பீலே அன்றி ஏற்றுக்கொண்டிருப்பதாலும் வழக்கமான கொடுமைகட்கெள்ளாம் மத முத்திரைகள் குத்தப்பட்டு அங்கீகரிக்கப்படும்//

என்ன ஒரு சத்தியமான வார்த்தைகள் இது மற்ற சமயத்தினருக்கும் பொருந்தும்,

// பொம்பளைங்களை எப்பாடு பட்டாவது அடக்கியே வக்கணும்னு நினைக்கிறதாலதான் நீங்க இப்படியெல்லாம் அனாவசியமா பேசுறிங்க//
என்று ஆணாதிக்க எண்ணத்திற்கு ஒரு குத்து விடுகின்றார்

மனவிழி என்ற கதையில் நகைச்சுவையை இழையோட விட்டுள்ளார் படைப்பாளி

விசை என்றொரு கதை, திருமணம் ஆனதும் பெண்களின் நட்பு வட்டாரம் சுருங்கி தன் கணவனின் நண்பர்கள், அவர்களின் மனைவிகள் என்று ஆகின்றது, ஆனால் அவர்களுடைய பள்ளி, கல்லூரி தோழர்கள் மறக்கப்படுகின்றனர், கணவரின் நட்பு வட்டத்திற்கு அளிக்கப்படும் விருந்தோம்பல்கள் மனைவியின் நட்பு வட்டத்திற்கு அளிக்கப்படுவதில்லை...
// "ஏம்மா இந்த மாமா உங்ககூடவா படிச்சாரு?"
"ஆமா"
" அப்போ ஏம்மா இவங்களைப்பத்தி இதுவரை சொல்லவே இல்ல?"//
// "நீ அந்த மாமாவை நம்ம வீட்டுக்கு வாங்கனு ஒரு வார்த்தை கூட சொல்லலியே ஏம்மா? "
இது சாதாரணமாக சமுதாயத்திலே நடந்து கொண்டிருக்கின்ற விடயம், இதை மிக அழகாக விளக்கியுள்ளார் படைப்பாளி

மொத்தத்தில் சமுதாயத்தின் பல பிரச்சினனகளை கடுமையான வார்த்தைகள் கொண்டு சாடாமல் இயல்பான இசுலாமிய குடும்பங்களை கதைக்களமாகக் கொண்ட ஒரு நல்ல படைப்புதான் களந்தை பீர்முகம்மதுவின் இந்த சிறுகதை தொகுப்பு

14 பின்னூட்டங்கள்:

said...

நல்ல பதிவு ... அப்புறம் நம்ம ராமதாஸு , காந்த்ஸ் பத்தின பதிவெல்லாம் விட்ராதீங்க...

ஆயிரம் இருந்தாலும் நம்ம காந்தஸ் பதிவுகள் மாதிரி வருமா???

said...

குழலி,

நல்ல பதிவு..

//'ஷரீ அத்'களையும் இதர பிற மார்க்க சம்பந்தமான நூல்களையும் தாங்கள் கரைத்துக் குடித்திருப்பதாகவே இவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் அது உண்மைதான் என ஊர் ஜனங்களும் அப்பீலே அன்றி ஏற்றுக்கொண்டிருப்பதாலும் வழக்கமான கொடுமைகட்கெள்ளாம் மத முத்திரைகள் குத்தப்பட்டு அங்கீகரிக்கப்படும்//

ஷரிஅத் என்றால் என்ன என்று சரியாக விளங்காமல் தன் மனம் போன போக்கில் தீர்ப்பு வழங்கி பின் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்வோர் ஒரு புறம்..

ஆகா கிடைத்ததடா நல்ல ஒரு வாய்ப்பு என்று முடிந்த மட்டும் நஞ்சு கக்கும் இஸ்லாமோஃபோபிக்குகள் மற்றொரு புறம்.. (இவர்களுக்கு பாதிக்கப் பட்டவர்கள் மேல் துளிகூட அக்கறை இருக்காது)

என்ன செய்வது? பெர்னார்ட் ஷா சரியாகத் தான் சொன்னார்.

Islam is the best religion and Muslims are the worst followers

said...

நல்ல கருத்து

ஆனால் சிலுக்கின் படம் போட்டு கவர்ச்சி கூட்டும் ஒரு அரிய வாய்ப்பை இழந்தீர்களெ..(உஙளுக்கு அது தேவையில்லை என்பது தெரியும்.. இருந்தாலும் எங்களுக்காகவாவது he he he..)

அன்புடன் விச்சு

பத்தாயிரமாவது குத்து வாழ்த்துக்கள் (கை குத்தல் err.. தட்டல் ஒலி பின்னணியில்)

தயவு செய்து ananymous posting வசதியை நீக்கி விடுங்கள்

said...

//நல்ல பதிவு ... அப்புறம் நம்ம ராமதாஸு , காந்த்ஸ் பத்தின பதிவெல்லாம் விட்ராதீங்க...

ஆயிரம் இருந்தாலும் நம்ம காந்தஸ் பதிவுகள் மாதிரி வருமா???//

மருத்துவர் பற்றிய பதிவுகள் இனி இங்கே வருவது கடினம் அதான் சொல்லவேண்டியதையெல்லாம் 4 பதிவா போட்டு சொல்லிவிட்டேனே, ஆனா காந்த்கள் பதிவு விடாது கருப்பாக தொடரும்...

அண்ணாத்தே தாசு இந்த நேரத்துல தூங்கமா என்ன பேய் மாதிரி சுத்துறிங்க இணையத்தில.

contivity உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி இதுதான் முதல்முறையாக எனது பதிவில் பின்னூட்டமிடுகின்றீர் என எண்ணுகின்றேன்!

said...

நன்றி விச்சு
//பத்தாயிரமாவது குத்து வாழ்த்துக்கள் (கை குத்தல் err.. தட்டல் ஒலி பின்னணியில்)//

ஹி ஹி தேங்க்ஸ் பா

//தயவு செய்து ananymous posting வசதியை நீக்கி விடுங்கள் //
இன்னும் சிறிது நாட்கள் பார்க்கின்றேன்,
ananymous பின்னூட்டங்களை எடுத்துவிட்டால் பெரும்பாலும் நமக்கு தெரிந்தவர்கள் சுதந்திரமாக கருத்து சொல்ல நினைப்பவர்களுக்கு தயக்கமாக போய்விடும்,அதுவுமின்றி பிளாக்கர் கணக்கு இல்லாமல் சில நண்பர்கள் எனது பதிவுகளைப்படித்து பின்னூட்டமிடுகின்றனர், ஆதலால் தான் வைத்துள்ளேன்,
இது வரை ஒரே ஒரு முறைதான் போலிப்பிரச்சினை வந்துள்ளது, அதுவுமின்றி கடந்த 3 மாதமாக பதிகின்றேன், ஆபாச வார்த்தைகள் வைத்து பின்னூட்டம் எதுவும் இதுவரை வந்ததில்லை
இன்னும் சிறிது காலம் பார்க்கின்றேன் பிரச்சினை இருந்தால் நிச்சயம் தூக்கிவிடுகின்றேன்.... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...

said...

//உண்மையை சொல்ல வேண்டுமெனில் புத்தகத்தின் பெயர்தான் என்னை சுண்டியிழுத்தது//
என்னையும் கூட அதான்யா சுண்டாம இழுத்துச்சு!

குழலியின் விளம்பரம்
***********
குழலி: வெற்றிகரமான 10,000 ஆவது குத்தை நோக்கி குழலிப்பக்கங்கள்
ஞானபீடம்: யோவ் நீ என்னை விட அதிகமா விளம்பரம் செய்றேயா!
************

பாவிங்களா, நீரும், முகமூடியும் என்னோட இந்த வெளம்பர ஐடியாவ புடிச்சுக்கிட்டு இப்டி தொங்குவீங்கன்னு முன்னமே தெரியாமப் போச்சுய்யா; தெரிஞ்சிருந்தா நா வெளம்பரமே போட்டுருக்கமாட்டேன்யா !

ஆனா எனக்கு ஒரு சந்தேகம்யா, மெய்யாலுமே மூனு மாசத்துல ஒமக்கு 10,000 ஹிட்டு எப்டிய்யா கெடச்சுது? எங்க தல கொங்கு ராசா-வுக்கே ஒரு வருஷத்துக்கப்புறம் தானய்யா 10,000 ஹிட் கெடக்கிது !.

ஞானபீடம்.
disclaimer: (இங்கே என் புனைபெயரின் மேல் தயவு செய்து கிளிக்-க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்; மீறி ஒரு உத்வேகத்தில் கிளிக்-கினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஞானபீடமாகிய நான் பொறுப்பல்ல !)
ஞானபீடம்.

said...

ஹதீஸ் பற்றி சொல்லவில்லை?. இஸ்லாம் உண்மையில் ஒரு இனிய மார்க்கம்தான். அது ஒரு மார்க்கம்., வழிமுறை. அங்கு உள்ளது அனைத்துமே முன்பே கட்டமைக்கப்பட்ட நெறிகள். ஒளியைத் துதிக்கும், எந்தவித பாவனையும் இல்லாத நன்மார்க்கம். கட்டுக்கள் இல்லாத என் மதம் எனக்குப் பல வாழ்க்கை முறையைக் காண்பித்து., சிறந்த ஒன்றை நான் தேரிந்தெடுத்துக் கொள்ள வழிவிடுகிறது. இராமன் வாழ்வைக் காட்டுகிறது., தசரதன் வாழ்வைக் காட்டுகிறது. காவியக் காட்சிகளை முன் வைத்து, அதில் சிறந்ததாக மனதுக்குப் பட்டதை நான் எனது வாழ்வு முறையைத் தேர்ந்தெடுக்கிறேன். ஆனால் அங்கு முன்பே போட்டுவைக்கப் பட்டிருக்கிறது நல்லதொரு பாதை., அதில் பயணம் செய்வதே அவர்களின் கடமையாகப் போதிக்கப் பட்டிருக்கின்றது. பெண்களுக்குண்டான உரிமைகள் எம்மதத்திலும் ஆய்வுக்குரியவையே. ஆனால் மற்ற மதத்தைக் காட்டிலும் இஸ்லாம் மதத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அப்புத்தகம் கிடைத்தால் படித்துப் பார்க்கிறேன்.

said...

ஐய் குழவி, அரசியல்வாதிகளை கொட்டுறதை விட்டு புக்கு படிச்சி இருக்காரு போல.

இன்னா தலீவா, லைப்ரரி புக்கா? சொந்த புக்கா? சொந்த புக்குன்ன கடன் கிடைக்குமா? அப்புறம் தொடர்புக் கொள்கிறேன்.

said...

ஞானபீட குசும்பும் விளம்பரமும் தாங்க முடியல..

//பத்தாயிரமாவது குத்து வாழ்த்துக்கள் //

இதனை ஒட்டி 'இணையதளபதி' எனும் பட்டத்தை குழலிக்கு வழங்குகிறேன் ..(நமக்குள்ள இருக்கிற அக்ரீமெண்டு தனிமடலில்)

said...

களந்தை பீர்முகமது ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர்.

தமிழ் வலைப்பதிவுகளில் இவரது பெயர் இதுவரையில் வெளிவந்ததில்லை. நல்ல அறிமுகம் கொடுத்துள்ளீர்கள். உங்கள் அறிமுகத்தை அடுத்து இன்னும் சிலரும் இவரைப் படிக்க விரும்புவது நல்ல ஆரம்பம்.

said...

குழலி,
நல்ல அறிமுகம். எழுத்தாளர் (அ) நூல் அறிமுகம் செய்யும்போது நூலின் bibliograpic details, எழுத்தாளரின் பிற நூல்களின் தலைப்புகள் (தெரிந்தால்) கொடுப்பது நல்லது.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, சுந்தரமூர்த்தி உங்கள் கருத்துக்கு நன்றி.

சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் என்ற இந்த சிறுகதைத்தொகுப்பை பதிப்பித்தவர்கள் பல்கலைப்பதிப்பகம், முதல் பதிப்பு டிசம்பர் 2001

said...

//ஆனா எனக்கு ஒரு சந்தேகம்யா, மெய்யாலுமே மூனு மாசத்துல ஒமக்கு 10,000 ஹிட்டு எப்டிய்யா கெடச்சுது//

நம்ம ரமனா விஜயகாந்த் குரலில் வாசிக்கவும்

இதுவரைக்கும் மொத்தம் 45 பதிவுகள்
கவுண்டர் போட்டதுகப்புறமா போடப்பட்ட பதிவுகள் மொத்தம் 38, இதுல அரசியல் பதிவுகள் 12,
சிறுகதை பதிவுகள் 2
கவிதை பதிவுகள் 5
ஜிங்குச்சா பதிவுகள் 13 1/2
போங்கு பதிவுகள் 3 1/2
சுட்ட பதிவுகள் 2

மருத்துவர் இராமதாசைப்பற்றி பதிவு போடுற அன்றைக்கு குத்துகள்
சராசரியாக 367

ரஜினிகாந்த்தைப்பற்றி பதிவு போடுற அன்றைக்கு குத்துகள்
சராசரியாக 342

ஜெயகாந்தனை திட்டி
பதிவு போடுற அன்றைக்கு குத்துகள்
மொத்தம் 411

கவிதைப் பதிவிற்கான குத்துகள் சராசரியாக 25

பதிவே போடாத அன்று குத்துக்கள் சராசரியாக 67

எல்லாவற்றையும் விட எனது முதலிரவு(கள்) என்ற பதிவிற்கான குத்துக்கள் மொத்தம் 642

ஆங்காங்கே மற்றவர்கள் பதிவில் சென்று விளம்பரம் செய்வதால் வரும் குத்துக்கள் கணக்கில் இல்லை

ஞான பீடம்: கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்

"இணைய தளபதி" என்று பட்டம் கொடுத்த தாசுவே நீ காசு வாங்கிக்கொண்டு கொடுத்தாய் என சிலர் கும்மியடிக்ககூடும், அதுசரி என்ன இணைய தளபதினு எப்பவுமே தளபதியாவே நான் இருக்க வேண்டியது தானா? எப்போதான் நானும் ராசாவாகிறது.

எமக்கு இணைய தளபதி பட்டம் கொடுத்த தாசுவிற்கு நன்றிக்கடனாக "இணையில்லா தளபதி" என்ற பட்டம் வழங்குகின்றேன்,

யாரெல்லாம் எனக்கு பட்டம் கொடுத்தாலும் அவர்களுக்கு ஒரு பட்டம் இனாம் இனாம் இனாம்

said...

Hi

Good essay. As Mr. S. sundara moorthy said, if the biblography had annexed, then it is useful for the readers like me.