நரி, சிறுத்தை மற்றும் சிங்கம்

ஒரு காட்டுல ஒரு சிங்கம், ஒரு சிறுத்தை ஒரு நரி இருந்துச்சாம்,
சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் உடம்புல பலம் இருக்குற அளவுக்கு
குறுக்கு புத்தியில்லையாம், நரிக்கு உடம்புல பலம் இல்லைனாலும்
குறுக்கு புத்தியிருந்துதாம் அதனால எப்போ பார்த்தாலும் சிங்கத்துக்கும்
சிறுத்தைக்கும் இடையே கோலிமூட்டி விட்டுக்கிட்டே இருக்குமாம்
சிங்கமும் சிறுத்தையும் புர்... புர்... னு மோதிக்கிட்டே இருக்குமாம்
இதனால எப்போதுமே அந்த காட்டுலே நரியோட நாட்டமைதானாம்
இப்படியே பல தலைமுறையா நரியோட நாட்டாமைதான்...

இப்படியிருந்த சமயத்துல சிங்க கூட்டத்துல எல்லாருக்கும் வைத்தியம்
பாக்குற ஒரு சிங்கம் யோசிச்சிதாம், நாம நரிய விட பலமாயிருக்கோம்
அப்புறம் என்ன நரியிங்க நாட்டாமை செய்யுதுனு, இது தெரிஞ்ச நரி
காவல் நாய்களை ஏவி விட்டது சிங்கத்துமேல, சொந்த பலம் தெரியாம
இருந்த சிங்கங்களுக்கு கொஞ்சம் அடிதான் இந்த நாய்ங்க குதறனதுல.

ஆனா சிங்க கூட்டத்துக்கு பலம் என்னனு தெரிஞ்சிடுச்சி அதனால நரியை
எங்க பார்த்தாலும் ரவுண்டு கட்ட ஆரம்பிச்சிடுச்சி, சண்டை போட்டுகிட்டு இருந்த சிங்கமும் சிறுத்தயும் பழசையெல்லாம் மறந்து கூட்டணி வச்சிக்கிச்சாம், ஏற்கனவே சிங்கம் முழிச்சிக்கிட்ட அடியையே நரியால தாங்க முடியல, இப்போ சிறுத்தை வேற சிங்கத்தோட கூட்டணியானு நரிக்கு கலங்கிடுச்சி, அதனால நரி உடனே நாய் வேசம் போட்டுக்கிச்சாம்,

நரிய காணோமேனு சிங்கம் தேடிக்கிட்டு இருந்தப்ப நரி நாய் வேசம் போட்டது தெரிஞ்சிடுச்சாம், சிங்கமா போன நாய் வேசத்துல இருக்குற நரி உசாராயிடுமினு சிங்கமும் குரங்கு வேசம் போட்டுகிட்டு நரிய ஃபாலோ செஞ்சிதாம்.

ஒரு நாள் நாய் வேசம் போட்ட நரிய சிறுத்தை ஒன்னு தன்னை நெருங்கறத கண்டுச்சி. சிறுத்த கிட்ட மாட்னா காலின்னு நாய்க்கு தெரியாதா என்ன... தப்பிக்கறதுக்கு இப்ப என்னடா பண்ணலாம்னு யோசிச்ச நாய், பக்கத்துல கொஞ்சம் எலும்புத்துண்டுங்க கெடக்கறத பாத்திச்சி... உடனே சிறுத்தைக்கு தன் பின்புறத்தை காட்டி உக்காந்து எலும்பை கடிக்க ஆரம்பிச்சிது... சிறுத்தை நெருங்கவும், 'ங்கொக்கமக்கா... சிறுத்த கறி ருசியாத்தான் இருக்கு, இன்னிக்கி இன்னொரு சிறுத்த கெடச்சா கூட நல்லாத்தான் இருக்கும்' ன்னுச்சி... இத கேட்டவுடனே 'அடடா ஆழம் தெரியாம கால வுட இருந்தேனே... நல்ல வேளையா நூலிழையில தப்பிச்சோம்டா சாமி, மாட்டியிருந்தா என்னா ஆகியிருக்கும்'னு நினைச்சி சிறுத்தை நைசா சைடுல ஒதுங்கிகிச்சி......

இந்த கூத்தயெல்லாம் மரத்துல உக்காந்து குரங்கு வேசம் போட்ட சிங்கம் கவனிச்சிகிட்டே இருந்திச்சி... இந்த சிறுத்தகிட்ட நரியோட நாய் வேசத்தை கிழிக்க இதான் சான்சுனு உடனே அது சிறுத்தய பாக்க ஓடிச்சி... குரங்கு சும்மாகாச்சிக்கும் அம்மணமா ஓடாதேன்னு நாய்க்கு தோனிச்சி... பாவம் அந்த நாய் வேசம் போட்ட நரிக்கு அது குரங்கு வேசம் போட்ட சிங்கம்னு தெரியல சீக்கிரமே சிறுத்தய வளச்சிடுச்சி...

அந்த நாய் வேசம் போட்ட நரிய உண்டு இல்லையின்னு ஆக்கிபுடுறேன்'னு சொல்லி ரெண்டு பேரும் கெளம்பினாங்க...குரங்குவேசம் போட்ட சிங்கமும் சிறுத்தையும் கூட்டணி போட்டு வர்றத நாய் வேசம் போட்ட நரி பாத்துச்சி... இதுங்க ரெண்டும் சேந்து வேற வருதுங்களே, இப்ப நமக்கு ஆப்பாச்சே, எப்படி தப்பிக்கலாம்னு சட்னு ஒரு யோசனை பண்ணிச்சி... உடனே பழைய மாதிரியே அதுங்களுக்கு எதிர்ப்பக்கமா உக்காந்துகிட்டு "எங்க அந்த அறிவு கெட்ட குரங்கு... ஒரு சிறுத்தைய புடிச்சிகிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா" ன்னு சவுண்ட் விட்டுச்சி...

அப்படியே சிங்கமும் சிறுத்தையும் ஆளுக்கு ஒரு பக்கமா போயி அந்த நாய் வேசம் போட்ட நரியோட இரண்டு கண்ணத்திலயும் பொளேர்னு அடி போட்டுச்சிங்க. நல்லா பாரு இது குரங்க்கா சிங்கம்டா சிங்கம், நீ என்ன தான் நாய் வேசம் போட்டாலும் உன் புத்தி நரி புத்தினு எங்களுக்கு தெரியாதா என்ன? ஓடிப்போயிடு இந்த காட்டைவிட்டுனு அடிச்ச அடியில நரி ஊளையிட்டுக்கிட்டே காட்டை விட்டு ஊருக்குள்ளார ஓடிடுச்சாம், அங்க போயி தான் தான் அந்த காட்டுக்கே ராசானு கதை உட்டுக்கிட்டு திரியுதாம், இந்த கதையெல்லாம் சிங்கமும் சிறுத்தையும் ஊருக்குள்ள வர வரைக்கும் தான்னு அதுக்கு தெரியாதா என்ன?

முகமூடியின் நாய், சிறுத்தை மற்றும் குரங்கு என்ற பதிவிற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை, இது முழுக்க முழுக்க கற்பனையே,

ஒலிக்கும் பறை உங்க வேலையை நான் எடுத்துக்கிட்டேன்... மன்னிச்சிகோங்க...

20 பின்னூட்டங்கள்:

said...

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்கு ..

வழக்கம்போல.... இதுக்கு அர்த்தம் என்ன.. ?

said...

தாசு உங்களுக்கு புரியலைனாலும் புரிய வேண்டியவங்களுக்கு நல்லா புரியும்...

said...

வழக்கம்போல நான் தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன்

said...

ஆக,

சிங்கம் போட்டது குரங்கு வேஷம்;

நரி போட்டது நாய் வேஷம்;

வேஷம் போடாதது சிறுத்தை மட்டுந்தான்னு சொல்லுங்க!

பின்குறிப்பு: இதில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை!.

அங்கே நான் இட்ட பின்னூட்டம் தனி!


- ஞானபீடம். {நீங்கள் CLICK செய்ய வேண்டிய இடம் இது அல்ல!! ;-)

said...

//வழக்கம்போல நான் தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன்//

சரி தல, பேசுவோம்...

said...

சபாஷ். சரியான போட்டி.
சந்தடி சாக்குல புலிய கிலிய இழுத்து விட்டுடாதேங்கப்பா.

said...

குழலி, கதை நல்லா இருந்தது... ஆனா ஏன் எப்ப பாத்தாலும் எல்லா மிருகமும் வேஷம் போட்டுகிட்டே அலையுதுங்க... நாய் நரி வேஷம் போடும் போது சிங்கம் குரங்கு வேஷம் போட்டாதானே உயிர் வாழ வேண்டியிருக்குங்கறீங்களா... அதுவும் சரிதான்... என் கேள்வி என்னன்னா, சிங்கம் குரங்கு வேஷத்துல இருக்கும் போது அத குரங்குன்னு சொல்லலாமா கூடாதா ??

அப்புறம் காட்டுல எலக்ஷன் வந்தா சிங்கமும் சிறுத்தையும் இதே ஒத்துமையோட இருக்க மாட்டாங்க, அப்ப தெரியும் அவங்க ஒத்துமைய பத்தின்னு முயல்ங்க பேசிக்குதுங்களே, அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா உங்களுக்கு...

கொசுறு தகவல் ஒன்று :: காப்பிரைட் செய்யப்பட்ட என் பதிவை என்னிடம் எழுத்தால் அனுமதி வாங்காமல் வரிக்கு வரி உபயோகப்படுத்திய உங்களுக்கு என் ஆட்சேபணையை பதிவு செய்கிறேன்... ஒலிக்கும் பறைக்கு மட்டும் ஏன் ஆட்சேபணை செய்யவில்லை என்றால், ஒரு இசையை தேவா காப்பி அடிக்கும் போது ஒரிஜினல் படைப்பாளிக்கு அதன் பாதிப்பு கம்மிதான்... அதையே ரஹ்மான் செய்தால்.... (ஞானபீடம் வந்து சோப்பு விளம்பர பாடல் பாடும் முன் விடு ஜீட்)

கொசுறு தகவல் இரண்டு :: என் பதிவுக்கு சம்பந்தம் இல்லையின்னு சொல்றீங்களே, அந்த பதிவுல இருக்குற கதை உண்மையிலே வழக்கத்துல இருக்குற கதைதான்... பின் குறிப்புல நான் சொன்னது உண்மையிலேயே யாராவது தப்பா புரிஞ்சுகுவாங்கலோங்கற பயத்துலதான்...

said...

// வேஷம் போடாதது சிறுத்தை மட்டுந்தான்னு சொல்லுங்க! // இடத்துக்கு தக்க மாதிரி சூப்பர் பல்டி அடிக்கிறீரய்யா ஞானபீடம்.... பாத்து உம்மயும் ப.ம.க காரன்னு சொல்லிடப்போறாங்க...

முகமூடி {நீங்கள் அவசியம் CLICK செய்ய வேண்டிய இடம்!! ;-)

said...

//இடத்துக்கு தக்க மாதிரி சூப்பர் பல்டி அடிக்கிறீரய்யா ஞானபீடம்..// - சொன்னது முகமூடி.

சூப்பர்,
பல்டி,
CLICK

யோவ் முகமூடி, என்னமோ தமிழத்தவுர வேற எத்தயும் பேச/கேக்க மாட்டோம்-னு தார்ல அடிச்சு ஒங்க தலீவர் கையாண்ட பிராமிஸ் பண்ணேன்னு சொன்னீரு; இதெல்லாம் இன்னாய்யா. இப்போ சொல்லுய்யா, பல்டி அடிக்கிறது நானா, நீயா?.

- ஞானபீடம். <<= Click-னா Click-கு, Click-காட்டி Go!

said...

முகமூடி,
//காப்பிரைட் செய்யப்பட்ட என் பதிவை என்னிடம் எழுத்தால் அனுமதி வாங்காமல் வரிக்கு வரி உபயோகப்படுத்திய உங்களுக்கு என் ஆட்சேபணையை பதிவு செய்கிறேன்... //

அண்ணாத்த "பாட்டி வடை சுட்டு காக்கா திருடும்" கதையும் நீங்களா காப்பிரைட் செய்த்துள்ளீர்கள். வழக்கத்தில் இருக்கும் கதை என்கிறீர்கள், பிறகென்ன காப்பிரைட்? உங்க தலைய ஏதாச்சும் நன்னா தாக்கீட்டா?:)

//என் பதிவுக்கு சம்பந்தம் இல்லையின்னு சொல்றீங்களே, அந்த பதிவுல இருக்குற கதை உண்மையிலே வழக்கத்துல இருக்குற கதைதான்... //

ஆமா உங்களுக்கு மட்டுமா இந்த "வழக்கில் உள்ள" கதை தெரியும்? அதை என்ன உங்க பரம்பரைக் கதையா?:)
(ஒரு வேளை அந்த வழக்கில் உள்ள கதை குழழிக்குத் தெரிஞ்சிருக்கலாமல்லா?)

குழழி,
நல்ல கதை சொன்னீர்கள்! குறிப்பா அந்த " உன் புத்தி நரி புத்தினு எங்களுக்கு தெரியாதா என்ன? ஓடிப்போயிடு இந்த காட்டைவிட்டுனு அடிச்ச அடியில நரி ஊளையிட்டுக்கிட்டே காட்டை விட்டு ஊருக்குள்ளார ஓடிடுச்சாம " வரி நல்ல இருந்திச்சு. தொடருங்க உங்க ஆட்டத்தை, ஏற்கனவே நரி ஒன்னு ஊளைஇயிடத் தொடங்கீட்டுப் போலே இருக்கு! :).

said...

// வழக்கத்தில் இருக்கும் கதை என்கிறீர்கள், பிறகென்ன காப்பிரைட்? // அடடே அனானி... புத்திசாலிப்பா நீயி... எவ்ளோ பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு இது... அது குழலியிடம் சும்மா விளையாட்டுக்கு சொன்னது... நிஜமாகவே சொல்லியிருந்தால் தொடர்ச்சியாகவே கொசுறு தகவல் இரண்டுன்னு ஒரு பத்தி போட்டு இருப்பேனா... ஆமா நரி ஊளையிடுது, நல்லா பொழுது போகும்... இன்னமும் பொந்துகுள்ளயே நின்னு இளிக்காத hyena, வெளிய வந்து ஜாலியா இரு...

said...

முகமூடி,
இன்ன அண்ணாத்த, உங்களுக்குப் பக்கத்துல கழுதப்புலி நிக்கிதோ? நல்ல கூட்டணிதான் போங்க. :) (ஆனா சாகிரதையா இரு அண்ணாத்த, கழுத்தப்புலி கெட்ட மிருகம்னு கேள்விப்பட்டன்).

said...

//அப்புறம் காட்டுல எலக்ஷன் வந்தா சிங்கமும் சிறுத்தையும் இதே ஒத்துமையோட இருக்க மாட்டாங்க, அப்ப தெரியும் அவங்க ஒத்துமைய பத்தின்னு முயல்ங்க பேசிக்குதுங்களே, அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா உங்களுக்கு...//

இந்த முயல்ங்களுக்கு இதே வேலை, சிங்கமும் சிறுத்தையும் தேர்தல் சமயத்துல ஒண்ணா இருந்தா தேர்தலுக்கு மட்டும் ஒண்ணா இருக்குதுங்க, மத்த நேரத்தில அடிச்சிகிதுங்கனு புலம்புது, தேர்தல் இல்லாதப்ப ஒண்ணா இருந்தா இதுங்க இப்போ ஒண்ணா இருக்குங்க ஆனா தேர்தல் வந்தா பாரு அடிச்சிக்குங்கனு பேசிக்கிட்டு இருக்கும் ஆக மொத்ததுல இந்த நரிகளுக்கு மட்டுமில்ல முயல்களுக்கும் எப்பவும் இந்த சிங்கமும் சிறுத்தையும் அடிச்சிக்கினும் அப்படின்றதுதான் ஆசை ஆணா அது இனிமேல நடக்காது...

யோவ் அனாமதேயம், எதுனா ஒரு பேரை போடுப்பா கீழ, யார் இதுமாதிரிலாம் எழுதறாங்கன்றதைவிட யாரு எழுதலை அப்படினும் தெரியனுமில்ல

said...

குழலி,
எனக்கொன்னும் புரியலை.. ! ஒருவேளை இதை படிக்கறதுக்கு முன்னாடி ஏதாச்சும் புத்தகத்தை படிச்சுட்டு வரனுமா??? சொல்லுங்க!

வீ எம்

said...

நல்ல கதை... ஸோ.. (அ)சிங்கமும், சிறுத்தையும் காட்டிலே தான் இருக்குன்னு சொல்றீங்க?! சீக்கிரம் நாட்டுக்கு வர வாழ்த்துக்கள்.

said...

வீ எம் ,
புத்தகமெல்லாம் ஒண்ணும் படிக்க தேவையில்ல.. கீழே இருக்கிற வரிய அழுத்தி படிங்க.. எல்லாம் வெளங்கும் ;)

//சிங்க கூட்டத்துல எல்லாருக்கும் வைத்தியம் பாக்குற ஒரு சிங்கம் யோசிச்சிதாம்//

--பாண்டி

said...

என் கேள்வி என்னன்னா, சிங்கம் குரங்கு வேஷத்துல இருக்கும் போது அத குரங்குன்னு சொல்லலாமா கூடாதா ??

குரங்குன்னு சொல்லலாமா கூடாதா ??

குரங்குன்னு சொல்லலாமா கூடாதா ??

said...

// சிங்க கூட்டத்துல எல்லாருக்கும் வைத்தியம் பாக்குற ஒரு சிங்கம் யோசிச்சிதாம் // அட இந்த கதையில சிங்கத்துக்கு வைத்தியம் பாக்க தெரியுமா.. என் கதையில குரங்குக்கு வைத்தியம் பாக்க தெரியும்... ஆனா நம்ம கதையில வர்ற நாய்க்கு கண்ல ப்ரச்னை வந்தப்போ அத சரி பண்ணி கறுப்பு கண்ணாடி போட்டு விட்டது அந்த குரங்கு இல்லைன்னு காட்டுல பேசிக்கிறாங்க...

said...

// தற்போது இந்த பதிவை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை 0 //
:-((

said...

அட நென்டு(ரெண்டு) பேரும் ஒரே மாதிரி காட்டு சிச்சுவேசன் எடுத்துறுக்கோம்....

அடங் கொக்கா மாக்கா.... அங்ஹ்....

பொதுவா நம்ம அறிவுரை, குழந்தைகளுக்கு சொல்லும் போது எதிராளியையும் கேவலப்படுத்தற மாதிரி காடு, ராஜா போன்ற சிச்சுவேசன்ல சொல்றது வழக்கம்(அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை ஒட்டி ஜெயலலிதா அடக்குமுறை ஏவி, மக்கள் ஆதரித்தார்களே அதற்க்கும் கூட இதே போல காட்டு சிச்சுவேசன் கதை வைச்சிருக்கேன்)..

முகமூடிய நல்லாத்தான் வாரியிருக்கீஹ....

ஆனா.... ஒன்னு(ஆவன்னா இரண்டு) (அ)சிங்கம் ஏதோ நல்லவர் அப்படிங்கற மாதிரி போட்டிருக்கே அது நம்ம கதைல வில்லனுக்கு அல்லக்கை வேசம் கட்டுற கேரக்டர்..

கவுண்ட குண்டர்கள், வன்னிய வெறியர்கள், தேவர் ரௌடிகள் எல்லாம் மொசக் குட்டிகளை கும்மியெடுத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் இவ்வாறூ போட்டிருப்பது...சரியில்லேங்கோ...

அதுவும் சிறுத்தை மாதிரில்லாம மொசக்குட்டிக திருப்பியடிக்கலேங்கோ....

இப்போஒ கொஞ்ச நாளாத்தான் அடிக்க ஆரம்பிச்சிருக்கோம்...

அடி இன்னும் பிண்ணி பிடலு எடுக்க வேண்டியது பாக்கியிருக்கும் போது நீங்க சிங்கமும், மொசலும்(உங்க கதையில் சிறுத்தை) ஒத்துமையா போகுதுன்னு சொல்றது யாதர்த்தமா இல்லைங்கோ....

இரண்டே பிரிவுதான் ஒன்னு மொசக்கூட்டம், இன்னோன்னு மொசக்கூட்டத்துக்கு எதிரிக் கூட்டம் (தவிர்க்க இயலாமல் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் அடையாளம் என்பது மிக பெரும்பான்மையாக மொசக்குட்டிகளோடத்தான் உள்ளது.)

(அ)சிங்கக் கூட்டத்திலேயும் உழைக்கும் வர்க்கம் உள்ளனர்(ஏன்.. கழுதப்புலி கூட்டத்திலேயும் உழைக்கும் வர்க்கம் உள்ளனர்). ஆனால் தன்னுடைய விலங்குகூட்ட வெறியால் பீடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்கள் விலங்கு நிலைப்பாட்டை விட்டு வரவேண்டும்...

அந்த(விலங்கு வெறி) பண்பாட்டை முன்னிறுத்தும் எல்லாவற்றையும் களைய வேண்டும் (முதல் ரிக்குயர்மென்ட் பா.ம.க மெம்பர் சிப்பை கிழித்துப் போட வேண்டும். ஏதேனும் நக்சல்பாரி அமைப்பில் மெம்பர் ஆக வேண்டும்).


ஆனால் நமக்கு இந்த (அ)சிங்கம் என்னைக்குமே எதிரிதானுங்க.....

அவிங்களை அடுப்புல விறகா வைச்சி, கழுதைப் புலிகளை சுப்பு வைச்சி குடிக்கிற காலத்துக்காக காத்திருக்கிறேங்கோ....

இதுக்கு அந்த விலங்கு(கழுதப்புலி, (அ)சிங்கம்)) கூட்டத்திலிருந்தும் விலங்குகள் தங்களோட விலங்கு அடையாளத்தை களைந்து விட்டு வந்து போரடனும்ங்க......

அவிங்களுக்கும் சூப்புல பாகுபாடில்லாம பங்கு கொடுக்கப்படும்ங்க....
இதுதான் நம்ம நிலைப்பாடு...

ஏதேனும் தவறா சொல்லியிருந்தா சுட்டிக் காட்டுங்க...


நன்றி,
அசுரன்