பாமக - Risk Analysis



மைனஸ் பாயிண்ட்ஸ்

சாதிக் கட்சி என்று குத்தப்பட்ட முத்திரை

மரம் வெட்டி கட்சி என்று குத்தப்பட்ட முத்திரை

பத்திரிக்கைகளின் ஊடகவன்முறை

திரைப்பட வெளிச்சத்தில் தலைவனைத் தேடும் தமிழர்கள்

வாரிசு அரசியல்

வட மாவட்டங்களில் மட்டுமேயான செல்வாக்கு

சாணக்கியனைப் போல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத தலைவர்

மக்களை கவரும் பேச்சாற்றல் இல்லாத தலைமை

கேமராவின் முன்னால் மட்டுமின்றி பின்னாலும் நடிக்கத் தெரியாத தலைவர்


ப்ளஸ் பாயிண்ட்

Image hosted by Photobucket.com

பின்குறிப்பு
அது சரி அந்த காந்த் நடிகர்களின் எதிர்ப்பெல்லாம் ப்ளஸ் சா? மைனசா? என நீங்கள் கேட்பது புரிகின்றது...

அதையெல்லாம் நாங்கள் எந்த கணக்கிலும் எடுப்பதில்லை

10 பின்னூட்டங்கள்:

said...

தலைவர் சொல்லும் ஒரு வார்த்தைக்காக (சில சமயங்களில் சொல்லாமலே கூட) தடாலடி காரியங்களில் இறங்கும் முரட்டுத்தனத்தையே முதுகெலும்பாகக் கொண்ட தொண்டர்கள் - இது ப்ளஸா மைனஸா?

said...

"சாணக்கியனைப் போல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத தலைவர்"
நீங்க யாரக் குறிப்பிட்ருங்கீன்னு தெரிஞ்சு போச்...

"கேமராவின் முன்னால் மட்டுமின்றி பின்னாலும் நடிக்கத் தெரியாத தலைவர்"
ஓ இது அவருங்களா???

ஆக மொத்தத்தில சப்பாசு...சப்பாசு..

said...

நன்றி கேவிஆர் மற்றும் சுதர்சன் கோபால், இந்த பதிவை இட ஊக்கமளித்த அல்வாசிட்டி விஜய் மற்றும் கருத்து உருவாக்கம்(concept) கொடுத்த ரஜினி ராம்கி ஆகியோருக்கும் நன்றி....

//"சாணக்கியனைப் போல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத தலைவர்"
நீங்க யாரக் குறிப்பிட்ருங்கீன்னு தெரிஞ்சு போச்...

"கேமராவின் முன்னால் மட்டுமின்றி பின்னாலும் நடிக்கத் தெரியாத தலைவர்"
ஓ இது அவருங்களா???//

சுதர்சன் கோபால் சரியா புரிந்து கொண்டீர்கள்,

கேவியார் தொண்டர்களின் இது மாதிரியான செயல்கள் மைனஸ் ஆனால் ஒரு சிலரிடம் இது பிளஸ் தான்

said...

மரம் வெட்ட சொன்னா ஆளையே காலி பண்ணுற தொண்டர்கள்.

ஊருல இருக்குறவன் எல்லாரையும் தமிழ் படிக்க சொல்லுறது. ஊட்ல மட்டும் ஆங்கிலம்,இந்தி படிக்க சொல்லுறது.(இது மட்டும் கூட்டனி தலைவர்கிட்ட கத்துக்கிட்டாறா).

குரங்க விட வேகமா கூட்டனி தாவுறது(கொள்கைக்காக).

பாப பெட்டிய கடத்துனது எல்லாம் எவ்வளவு பெரிய செயல் . இதெல்லாம் மிஸ் பண்ணிட்டிங்களே

said...

//மரம் வெட்ட சொன்னா ஆளையே காலி பண்ணுற தொண்டர்கள்.//

இது மாதிரியான புரளி கிளப்பும் செயல் எல்லாம் நிதானத்தை தவறவிடுவதால் என நினைக்கின்றேன்,

//ஊருல இருக்குறவன் எல்லாரையும் தமிழ் படிக்க சொல்லுறது. ஊட்ல மட்டும் ஆங்கிலம்,இந்தி படிக்க சொல்லுறது.(இது மட்டும் கூட்டனி தலைவர்கிட்ட கத்துக்கிட்டாறா).

குரங்க விட வேகமா கூட்டனி தாவுறது(கொள்கைக்காக).//
இதற்கெல்லாம் எத்தனை தடவைதான் பதில் சொல்வது?

//பாப பெட்டிய கடத்துனது எல்லாம் எவ்வளவு பெரிய செயல் . //
சில சமயம் அதிரடி தேவைப்படுது என்ன செய்ய, திரைப்பட வெளிச்சத்திலே தலைவனை தேடும் தமிழர்கள் இருக்கும் நாட்டிலே பேசி பேசி புண்ணியமில்லை, அது சரி என்ன என்ன புனிதரோடு மோதும்போது போதனைகளால் பேசலாம், புரட்டுவாதிகள் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் திரையுலகிலே நிலைகொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த தொடக்க கால கட்டத்திலே வாய்ப்பு தந்து கதாநாயகனுக்கு நிகரான எதிர் கதாநாயகன் வாப்பு தந்த நன்றி உணர்ச்சி கூட இல்லாமல் பாரதிராஜா வீட்டில் கல்லெறிந்த கூட்டத்திடம் ஒரு கண்ணத்தில் அறைந்தால் அடுத்த கண்ணத்தையும் காட்ட வேண்டுமென்ற தத்துவமெல்லாம் எடுபடாது.

said...

//ஊருல இருக்குறவன் எல்லாரையும் தமிழ் படிக்க சொல்லுறது. ஊட்ல மட்டும் ஆங்கிலம்,இந்தி படிக்க சொல்லுறது.

குழலி, குறிப்பாக இதற்கு உங்கள் பதிலை அறிய ஆவல். பதிவின் சுட்டி கொடுத்தால் உபயோகமாக இருக்கும். நன்றி.

said...

கணேசன் அய்யா உங்க பின்னூட்டப்பெட்டியில் பாருங்கள்

said...

ஸ்ரீகாந்த் ஏற்கனவே இது தொடர்பான விவாதம் டோண்டுவின் பதிவில் நடந்தது, அங்கே பின்னூட்டமாக இட்டுள்ளேன், என் பதிவிலும் இட்டுள்ளேன், சரியான சுட்டியை விரைவில் தருகின்றேன்.

said...

// திரைப்பட வெளிச்சத்தில் தலைவனைத் தேடும் தமிழர்கள் // இது எப்படி பாமகவுக்கு மைனஸ் பாயிண்டாவும் குழலி..

// உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத தலைவர் //
// கேமராவின் முன்னால் மட்டுமின்றி பின்னாலும் நடிக்கத் தெரியாத தலைவர் //

எந்திரிங்க எந்திரிங்க... இப்படி த்ரீ மச்சால்லாம் கனவு காணக்கூடாது

said...

இப்பதிவு கொடுத்த ஊக்கத்தில் ஏதோ என்னாலான ஒரு சிறு அனாலிஸிஸ்... பாத்துட்டு சொல்லுங்க