மாலனை வாழ்த்துவோம் மனமிருந்தால்

Image hosted by Photobucket.com

திசைகள் ஆசிரியர் திரு.மாலன் அவர்கள் திருச்சியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தகவலுக்கு இங்கே சுட்டுங்கள்.

நீண்ட நெடிய இலக்கிய சேவை, சிறுகதை உலகில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர் மாலன், மேலும் அவரின் ஊடக பணியும் இலக்கிய பணியும் பாராட்டத்தக்கது, எல்லாவற்றிற்கும் மேல் பிரபலம் என்ற ஒளிவட்டத்தில்(நன்றி- யாரோ ஒரு நண்பர் ஏதோ ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்) இருந்து கொண்டு அதை விட்டு இறங்காமல் இருக்கும் எழுத்தாளர் அல்ல.

இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சில பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவர், என் சக வலைபதிவாளர் (ஹி ஹி அவரை என்னோடு ஒப்பிட்டு விட்டேன் பாருங்கள்!) அவரது பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.

தனி மனித வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு வாழ்த்துவோம் மாலனை மனமிருந்தால்

படங்களுக்கும் செய்திக்கும் நன்றி : திசைகள்

29 பின்னூட்டங்கள்:

Boston Bala said...

மாலனுக்கு வாழ்த்துக்கள்!

குழலி / Kuzhali said...

ஹி ஹி கணேசன் அய்யா மன்னிச்சிக்குங்க, புத்திசாலிகள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் (ஹி ஹி சந்தடி சாக்குல என்னைய புத்திசாலினு சொல்லிக்கிட்டேன் பார்த்தீங்களா!)...

விடுங்க அண்ணாத்தே அடுத்த தபா பாத்துக்கலாம்.

//நான் முகமூடியின் பதிவில் 'சுதர்சன் கோபால்' -ன் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன்//
சுட்டி கொடுத்த சுதர்சனத்திற்கு நன்றி.

//யோவ் குழலி போய் தூங்குமய்யா//
அதெல்லாம் 11.00 மணிக்கு மேல் தான், இன்று 11.30 ஆகிவிடும் எனக்கு பிடித்த சூப்பர் 10 பார்த்துவிட்டு தான் தூங்க வேண்டும்.

குழலி / Kuzhali said...

//கருத்து வேறுபாடுகளை மறந்து மாலனை வாழ்த்துவோம்.
மாற்றுக் கருத்து /மாற்றுக் கட்சி என்பதனால் அடுத்தவன் வீட்டு விழாக்களில்கூட கலந்து கொள்ளாமல் மனிதத்தை இழந்து வரும் அரசியல் கட்சிகள் போல் அல்லாமல்
இணைய நண்பர்களே
//
இணையத்தில் கிட்டத்தட்ட முழுமையாக இந்த பண்பு இருக்கின்றது என நம்புகின்றேன் கணேசன்.

நன்றி

-L-L-D-a-s-u said...

திரு. மாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

வசந்தன்(Vasanthan) said...

தகவலுக்கும் பதிவுக்கும் நன்றி குழலி.
மாலனுக்கு வாழ்த்துக்கள்.

ஜோ/Joe said...

நான் பயின்ற பல்கலைகழகத்திற்கு செனட் உறுப்பினராக மாலன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்துக்கள் மாலன் அவர்களே!

Suresh said...

மாலனுக்கு வாழ்த்துக்கள்.

முகமூடி said...

வா ழ் த் து க் க ள் மாலன்

Anonymous said...

எங்கள் பல்கலைகழகம்., அவரை வாழ்த்த வயதில்லை. மகிழ்கின்றேன்.

Thangamani said...

மாலனுக்கு வாழ்த்துக்கள்!

வலைஞன் said...

மனமிருக்கு!
மாலன்!! பிடியுங்க பூங்கொத்தை!!!

மாலன் said...

வாழ்த்துத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.வழக்கம் போல என்னால் இயன்றதை இங்கும் செய்வேன்.
எல்லோருக்கும் அன்புடன்,
மாலன்

பினாத்தல் சுரேஷ் said...

வாழ்த்துக்கள் மாலன்

Ramya Nageswaran said...

நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க குழலி.

மாலன் சாருக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

Sud Gopal said...

மாலனுக்கு வாழ்த்துக்கள்!!!
//சுட்டி கொடுத்த சுதர்சனத்திற்கு நன்றி//
இத்தெல்லாம் என்னாத்திக்கு இப்போ..
:-)

இப்னு ஹம்துன் said...

மாலனின் தோளில் மாலையாக விழும் வாழ்த்துக்களினூடே இந்த எளியவனின் நேச பூங்கொத்துக்களும்.
வாழ்த்துவதற்கு வாய்ப்பளித்த குழலிக்கு கூடவே பாராட்டுக்களும்.

Kasi Arumugam said...

மாலனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

மாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜென்ராம் said...

திரு. மாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

மு. சுந்தரமூர்த்தி said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தகடூர் கோபி(Gopi) said...

மாலன் அவர்களின் மணிமகுடத்தில் மற்றுமொரு ரத்தினம்.

வாழ்த்த வயதில்லை (இருந்தாலும் பரவாயில்லை) வாழ்த்துக்கள் மாலன்!!!

Chandravathanaa said...

மாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

டண்டணக்கா said...

வாழ்த்துக்கள திரு.மாலன்.

enRenRum-anbudan.BALA said...

திரு. மாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
பொதுவாக ஒரு பல்கலைக்கழக செனட் உறுப்பினரின் பணி/கடமைகள் என்ன என்பது குறித்தும், மாலன் அவர்கள் செய்ய நினைக்கும் விடயங்கள் குறித்தும் அவர் ஒரு பதிவு (சாவகாசமாக, சமயம் கிடைக்கும்போது) எழுதினால் நன்றாக இருக்கும்.
நன்றி !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Anonymous said...

எங்களின் வழிகாட்டியும் மூத்த வலைப்பூவருமான மாலன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மதுமிதா said...

மாலன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
மதுமிதா

Unknown said...

வாழ்த்துகள் மாலன் சார்

Osai Chella said...

மாலன் அவர்களுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

Balaji-Paari said...

மாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்