இந்தி எதிர்ப்பு - ஒரு முக்கியமான அலசல்

சாதகம்

இந்தியாவில் நாம் இரண்டாம் நிலை குடிமகனாக ஆகாமல் இருப்பது

மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்றானது

வட மாநில, தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக சங்கு ஊதியது

திமுக ஆட்சிக்கு வந்தது

வணக்கம்,நன்றி,வேட்பாளர்,பேச்சாளர்,தலைவர் இன்ன பல சொற்கள் இன்னும் தமிழில் அழியாமல் இருப்பது.

இந்தி தெரியவில்லை என்றால் வெட்கப்படும் மற்ற மாநிலத்தவரைப் போலல்லாமல் தனித்துவமாக இருப்பது.

இன்னமும் சென்னையில் இந்தி வாடை அடிக்காமல் இருப்பது.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது

இரண்டு தலைமுறையாக இந்தி படிக்கவிடவில்லை என கருணாநிதியை திட்ட ஒரு வாய்ப்பு.

மதராசி என்று எரிச்சலோடு அழைப்பது

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிற்கு சங்கு ஊதாமல் இருப்பது.

பாதகம்

அச்சா,நஹி,கியா,சலோ போன்ற அருஞ்சொற்களை தமிழ் மொழி இழந்தது

சல்மான்கான், அமீர்கான், சாருக்கானிற்கெல்லாம் ஊரெங்கும் இரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது

மீனாட்சி சேஷாத்திரி,கஜோல்கெல்லாம் கோவில் கட்டும் பாக்கியத்தை இழந்தது.

28 நாளில் இந்தி கற்றுக்கொள்வது, ஹி ஹி சாதாரணமாக குறைந்தது 30 நாள் ஆகும், இந்தி அனா,ஆவன்னா ஏற்கனவே பள்ளியில் படித்துவிட்டதால் எப்படியும் குறைந்தது 28 நாளாகும்.

தமிழ் திரைப்படங்களின் பெயர் இந்தியில் இல்லாமல் ஆகிவிட்டது. பாவம் தற்போது ஒன்லி இங்கிலீஷ்.

மதராசி என்று ஏளனத்தோடு அழைத்திருப்பார்கள்

இந்தி சரளமாக பேசமுடியாததற்கு கூனி,குறுகி வெட்கப்படுவது

கருணாநிதியை இந்தி எதிர்ப்பை வைத்து திட்ட முடியாமல் போவது, அதனால் என்ன மேன்ட்ரின் படிக்க விடாமல் செய்தது கருணாநிதிதான் என திட்டலாம்

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லமுடியது, அதனால் என்ன மேன்ட்ரின் படித்தால் வேலை கிடைக்கும் என கூறுவோமே.

இந்தி நடிகர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லாமல் போனது

திமுக ஆட்சிக்கு வந்தது, இதில் பாதிதான் உண்மை, காங்கிரசின் மீது அப்போதிருந்த எரிச்சலும் தான் முக்கிய காரணம்.

தமிங்கிலந்தி என்ற ஒரு மொழி உலகிற்கு கிடைத்திருக்கும்

50 பின்னூட்டங்கள்:

ஏஜண்ட் NJ said...

quote

ஹிந்தியிலும் பாடுவேன்... டடாங்.. டண்...டடங்...

ஏக் துஜே கே லியே...

ஏண்டி நீ பாத்தியே...


unquote

Anonymous said...

//அச்சா,நஹி,கியா,சலோ போன்ற அருஞ்சொற்களை தமிழ் மொழி இழந்தது//
super

குழலி / Kuzhali said...

ஏஜென்ட் ஞான்ஸ் நீங்க எதில் வேண்டுமானாலும் பாடுவீர்கள்,

ஞானபீடம் மற்றும் Anonymous பின்னூட்டத்திற்கு நன்றி

Sri Rangan said...

வணக்கம்,குழலி!
நல்லதொரு அலசலும்,பதிவும்.
நன்றி.
ஸ்ரீரங்கன்

தருமி said...

"இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது"

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற இந்த தத்துவம் எனக்கு பிடிபடவே மாட்டேங்குது...உங்களுக்கு...?

குழலி / Kuzhali said...

நன்றி ஸ்ரீரங்கன்.

//"இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது"

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற இந்த தத்துவம் எனக்கு பிடிபடவே மாட்டேங்குது...உங்களுக்கு...?//
ஹி ஹி இது கூட தெரியாதா உங்களுக்கு இந்தியை தாய்மொழியாக கொண்ட வட நாட்டிலே வேலையில்லா திண்டாட்டமேயில்லையாம்,எல்லோருக்கும் இரண்டிரண்டு வேலையிருக்காம், உங்களுக்குதான் என்னமோ புரியலை, பிடிபடலைனு சொல்கின்றீர்.

முகமூடி said...

// இந்தியாவில் நாம் இரண்டாம் நிலை குடிமகனாக ஆகாமல் இருப்பது // தமாசு தமாசு... கண்ணை திறவுங்கோ...

// திமுக ஆட்சிக்கு வந்தது // இது தவறுதலா "சாதக" பட்டியல்ல இருக்கா, இல்ல இதுவும் தமாசா

// எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிற்கு சங்கு ஊதாமல் இருப்பது // இவங்க இல்லையின்னா தமிழுக்கு சங்குன்னு எல்லாரையும் நம்ப வச்சாங்களே, அங்க நிக்கிறான் சந்திரன் ;-)

Anonymous said...

//"இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது"

madhdhiya mandhiri velai kidaikka nicahyam udhavum

Anonymous said...

இந்தி படித்தால் நிச்சயமாக வேலைக்கு உத்தரவாதம் உண்டென்றால் நாமெல்லாம் ஏன் இங்க வந்து கஸ்டப்படுகிறோம்?! நல்ல பதிவு குழலி.

வெங்காயம் said...

//தமிங்கிலந்தி என்ற ஒரு மொழி உலகிற்கு கிடைத்திருக்கும் //

நகைச்சுவையோடு உண்மையுரைத்திருக்கிறீர்....

குழலி / Kuzhali said...

//// இந்தியாவில் நாம் இரண்டாம் நிலை குடிமகனாக ஆகாமல் இருப்பது // தமாசு தமாசு... கண்ணை திறவுங்கோ...//

என்ன முகமூடியாரே இப்பவே அப்படித்தான் இருக்கோமே என்கின்றீரா, கொஞ்சம் யோசித்து பாருங்க, இப்பவே இந்த நிலமை என்றால் இந்தி மேலாதிக்கத்தை முதுகெலும்பில்லாம் ஏற்றுக்கொண்டிருந்தால்?? என்ன நிலமை.


//இவங்க இல்லையின்னா தமிழுக்கு சங்குன்னு எல்லாரையும் நம்ப வச்சாங்களே, அங்க நிக்கிறான் சந்திரன் ;-)
//
அச்சா, பகுத் அச்சா, அவங்க ஆட்சிக்கு வருவதற்கு செய்தார்களோ எதற்கு செய்தார்களோ ஆனால் இன்னமும் குசராத்தி மற்றும் இன்ன பிற வட மாநில மொழிகளுக்கு ஏற்பட்ட நிலமை இன்னமும் தமிழுக்கு ஏற்படாததற்கு காரணம் திமுக என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

//இந்தி படித்தால் நிச்சயமாக வேலைக்கு உத்தரவாதம் உண்டென்றால் நாமெல்லாம் ஏன் இங்க வந்து கஸ்டப்படுகிறோம்?! //
அது சரி மூர்த்தி

Anonymous said...

Happenned to go to the Indian High Commission @ Singapore yesterday and I found a newsletter "India News". The queue was very long and in order to kill time I thought I would read the same. Unfortunately, only the title was in English :( I certainly agree with your view that languages other than Hindi are getting a stepmotherly treatment

Prince

Voice on Wings said...

//அச்சா, பகுத் அச்சா, அவங்க ஆட்சிக்கு வருவதற்கு செய்தார்களோ எதற்கு செய்தார்களோ ஆனால் இன்னமும் குசராத்தி மற்றும் இன்ன பிற வட மாநில மொழிகளுக்கு ஏற்பட்ட நிலமை இன்னமும் தமிழுக்கு ஏற்படாததற்கு காரணம் திமுக என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.//

எனக்கு ஜல்லியடிக்கறதுன்னா என்னன்னு சரியா தெரியாது. ஆனா, குஜராத்தியும் மராட்டியும் இன்ன பிற வடமொழிகளும் அழிஞ்சுட்டதா சொல்றது அதே வகை ஜல்லியாத்தான் படுது. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இந்த மொழிகள் அமோகமா வளர்ந்துக்கிட்டுத்தானிருக்குது, உன்னதமானக் கலைப்படைப்புகள் (கலைப்படைப்புகள்னா சினிமா என்பது நம்ம புரிதலா இருக்கலாம்), பிராந்திய மொழி ஏடுகள், இலக்கிய வட்டாரங்கள் என்றெல்லாம். இதை நான் ஹிந்திக்கு ஆதரவாகக் கூறவில்லை. உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறேன், அவ்வளவே.

Raja said...

இந்தி படிப்பது வேலைக்காக மட்டும் அல்ல.இந்தியாவில் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பேசப்படும் மொழி. அதை ஏன் நாம் கற்றுக் கொள்ள கூடாது.
நானும் இந்தி வேனாம் என சொல்லி விட்டு இப்பொது தமிழ் அதிமாக பேசபடும் பெங்களூரிலும் சில சமயம் படும் கஷ்டம் எனக்கு தான் தெரியும்.

குழலி / Kuzhali said...

//நானும் இந்தி வேனாம் என சொல்லி விட்டு இப்பொது தமிழ் அதிமாக பேசபடும் பெங்களூரிலும் சில சமயம் படும் கஷ்டம் எனக்கு தான் தெரியும்.
//
கன்னடம் தெரியவில்லை என்றால் தானே பெங்களூரில் கஷ்டப்படனும்? நீங்க என்னமோ புதுசா சொல்றீங்க, நீங்க கஷ்டப்பட்டது இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களிடமா?

//ஆனா, குஜராத்தியும் மராட்டியும் இன்ன பிற வடமொழிகளும் அழிஞ்சுட்டதா சொல்றது அதே வகை ஜல்லியாத்தான் படுது. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இந்த மொழிகள் அமோகமா வளர்ந்துக்கிட்டுத்தானிருக்குது, உன்னதமானக் கலைப்படைப்புகள் (கலைப்படைப்புகள்னா சினிமா என்பது நம்ம புரிதலா இருக்கலாம்), பிராந்திய மொழி ஏடுகள், இலக்கிய வட்டாரங்கள் என்றெல்லாம்//
குசராத்தி விரைவில் அழிந்து கொண்டிருக்கும் மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது, பல வட இந்திய மொழிகளெல்லாம் அதன் தனித்துவத்தை இழந்து இந்தியின் மறு வடிவாகிவிட்டன, இதெல்லாம் சமீபத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரையில் படித்தேன், சுட்டி தருகின்றேன். இன்றைக்கு பல குசராத்தி வார்த்தைகள் இந்தியிலிருந்து எடுக்கப்பட்டவைகள் தான், ஏன் குசராத்தி பற்றி இத்தனை கூறுகின்றேனென்றால் நம்ம நெருங்கிய நண்பர் ஒருவர் குசராத்தி, இதில் குசராத்தி பற்றி எழுதியதெல்லாம் அவரின் புலம்பல்கள் தான்

முகமூடி said...

// ஆனால் இன்னமும் குசராத்தி மற்றும் இன்ன பிற வட மாநில மொழிகளுக்கு ஏற்பட்ட நிலமை இன்னமும் தமிழுக்கு ஏற்படாததற்கு காரணம் திமுக என்பதில் //

// குசராத்தி விரைவில் அழிந்து கொண்டிருக்கும் மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது, பல வட இந்திய மொழிகளெல்லாம் அதன் தனித்துவத்தை இழந்து இந்தியின் மறு வடிவாகிவிட்டன, இதெல்லாம் சமீபத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரையில் படித்தேன், சுட்டி தருகின்றேன். //

சுட்டி தாங்க குழலி... ஆனா நடைமுறையில என்ன நடக்குதுன்னு தருமி பதிவுல பின்னூட்டமா பத்மா சொல்றாங்க பாருங்க ::

நான் உங்கள் முதல் இரண்டு பதிவுகளையும் படித்தேன். உண்மையில் வட இந்தியாவில் கூட, காஷ்மீர் கிராமங்கத்திலிருந்து வந்த என் சக மாணவிக்கு காஷ்மீரி மட்டும்தான் தெரியும். இதுபோல பல குஜராத்திய கிராமத்தில்ரிஉந்து, பீஹாரிலிருந்து வந்தவர்கள் எங்கள் மருத்துவமனைக்கு வரும்போது ஹிந்தியில் பேசி பயனில்லை. குஜராத்தியும், போஜ்பூரியும் வேண்டும். நாம் வட நாட்டில் உள்ள் அனைவரும் ஹிந்தி மொழியில் படிப்பதாக ஒரு கருத்தை உருவாக்கி இருக்கிறோம். பெருவாரியான மக்கள் பேசுகிறார்கள் என்பதுகூட கருத்து கணிப்பில் தெளிவாக, நன்றாக என்று கேட்கப்படுவதில்லையோ என்னவோ?

நான் தமிழ் வழியிலதான் பள்ளி முழுதும் படித்தேன்.

இந்தி திணிப்பு எதிர்ப்பது தவறாகாது. ஆனால் அதை தங்கள் இலாபத்திற்காக அரசியலாக்கியது தவறு. உங்கள் அனுபவங்கள் படிக்கும் போதே சிந்திக்க வைக்கின்றன.

Anonymous said...

These folks will never change. They do not understand the difference between "Imposing Hindi" & "Learning Hindi". The issue in Tamil Nadu was about "Imposing Hindi". The agitations were about those.

Please note that Hindi Prachar Sabha's were functioning in Tamil Nadu for many decades. They even published that the no of students in TN is bigger when comparing other states.

Every body in TN had a chance to learn Hindi on their own. Dont blame the politicians if you didnt learn it.

Voice on Wings said...

இந்த விவாதம் தூண்டிவிட்ட எண்ணங்களால் உந்தப்பட்டு இதுவரை ஞானபீட விருது வாங்கியவர்களின் பட்டியலை ஆராய்ந்துகொண்டிருந்தேன். இவ்விருது தொடங்கிய காலத்திலிருந்து மொழிவாரியாகப் பட்டியல் கீழ்வருமாறு:

Kannada - 7
Hindi - 6
Bengali - 5
Malayalam - 4
Urdu - 3
Gujarati - 3
Oriya - 3
Marathi - 2
Telugu - 2
Tamil - 2
Punjabi - 2
Assamese - 2

அழிந்துகொண்டிருகின்றன என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் மொழிகள் நம்மை விட முன்னிலையில். மக்கட்தொகை குறைவாக இருக்கும் பஞ்சாபியையும் அஸ்ஸாமீஸையும் தவிர்த்துப் பாரத்தால், குறைவளவே விருதுகள் பெற்ற மொழிகள் தமிழ், தெலுங்கு மற்றும் மராட்டி. இவை மூன்றிற்கும் பொது என்றுப் பாரத்தால், நாட்டின் மிகப்பெரியத் திரைத் தொழிற்துறைகள் உள்ளப் பகுதிகள் இவையே ஆகும். மொழி வளர்ச்சிக்கும் மக்களின் ரசனை மேம்பாட்டிற்கும் தடையாயிருப்பது எது என்பதை அவரவர் புரிதல்களுக்கு விட்டு விடுகிறேன்.

Raja said...

கன்னடம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை தேசிய மொழி இந்தி கூட தெரியாத என எல்லாரும் கேட்கும் போது படும் கஷ்டம் நமக்கு தானே தெரியும்.
எல்லாரும் இந்தியில் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் உம்முனு உட்கார்ந்திருப்பதை பார்த்த உங்களுக்கு நக்கலாத்த்தான் இருக்கும்

குழலி / Kuzhali said...

//தேசிய மொழி இந்தி கூட தெரியாத என எல்லாரும் கேட்கும் போது படும் கஷ்டம் நமக்கு தானே தெரியும்.
//
தேசிய மொழி என்பதே ஒரு பீலா! இந்தி கூட தெரியாதா என்பது தான் இந்தி மேலாதிக்க வெறி.... இதே கேள்வியை பெங்களூரிலிருந்து கொண்டு உமக்கு கன்னடம் தெரியாதா? ஏன் கற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் என கேட்டுப்பாருங்கள் அப்போது வெளிவரும் பாருங்கள் அவர்களுடைய இந்தி மேலாதிக்க உணர்வு.

//எல்லாரும் இந்தியில் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் உம்முனு உட்கார்ந்திருப்பதை //
என் அலுவலகத்தில் கூட எல்லோரும் மேன்ட்ரின் பேசிக்கொண்டிருக்கும் போது நான் உம்மென்று தான் உக்கார்ந்திருப்பேன், நான் அதற்காக வருத்தப்படலாமா, இந்த மாதிரியான மனப்பாண்மையிலிருந்து வெளியில் வாருங்கள்

நன்றி

வீ. எம் said...

இந்திக்கு எதிர்ப்பல்ல, இந்தி தினிப்பைத்தான் எதிர்த்தோம்... தலைப்பை மாத்திவைனு யாரே அங்கே சொல்ற மாதிரு காதுல விழுது... உங்களுக்கு கேட்குதா குழலி????

நல்ல அலசல் குழலி..

அப்படியே ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு - சாதக, பாதகங்கள் போடுங்களேன்... !!
வீ எம்

Anonymous said...

SaruKKal No.1 4 Kuzhali

முகமூடி said...

அலசல்னு மட்டும் நீங்க போடுங்க... அது முக்கியமான் அலசலா இல்லியான்னு நாங்க முடிவு பண்றோம்னு ஞானபீடம் சொல்ற மாதிரி எனக்கு கேக்குதே, வேற யாருக்காவது கேக்குதா?

நாராயண, நாராயண...

ஜோ/Joe said...

//கன்னடம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை தேசிய மொழி இந்தி கூட தெரியாத என எல்லாரும் கேட்கும் போது படும் கஷ்டம் நமக்கு தானே தெரியும்.//
அடேங்கப்பா! என்ன கஷ்டம் ..என்ன கஷ்டம் ..கண்ணீரே வருது போங்க!

ஜோ/Joe said...

யோவ் குழலி,
மேண்டரின் என்னையா மேண்டரின் ..நான் இப்போ வியட்நாம்ல இருக்கேன் ..இங்கே எல்லோரும் வியட்நாமிஸ் பேசும் போது எனக்கு அழுகை அழுகையா வருது ..தமிழ்நாட்டுல பள்ளிகள்ள வியட்நாமிஸ் சொல்லிக்கொடுத்திருந்தா எனக்கு இந்த நிலமை வருமா? அதுவும் ஒரு மொழி தானே? இன்னொரு மொழி சொல்லித்தந்தா அறிவு தானே வளரும் ..இது ஏன் உங்களுக்கு புரியல்ல ..நம்ம நண்பர் ஒருத்தர் கூட ஒரு தடவ டில்லில கத்திரிக்காய் வாங்க தெரியாம கஷ்டப்பட்டது பத்தி சொல்லி வருத்தப்பட்டாரு . சௌகார் பேட்டைல இருக்க சேட்டுங்கள்லாம் ராஜஸ்தான்லயே தமிழ் கத்துகிட்டு வந்து என்னமா கத்திரிக்கா வாங்குறாங்க பாருங்க!

வீ. எம் said...

தல, கடைசியா ஒரு கதை எழுதியிருக்கேன் தல (தலைப்பு : முகமூடி) ..பாக்கலயா?

வீ. எம் said...

இந்திக்கு எதிர்ப்பல்ல, இந்தி தினிப்பைத்தான் எதிர்த்தோம்... தலைப்பை மாத்திவைனு யாரே அங்கே சொல்ற மாதிரு காதுல விழுது... உங்களுக்கு கேட்குதா குழலி????

நல்ல அலசல் குழலி..

அப்படியே ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு - சாதக, பாதகங்கள் போடுங்களேன்... !!
வீ எம்

NambikkaiRAMA said...

நான் இங்கே வீ.எம் கருத்தோடு ஒத்துப்போகிறேன். இந்தி திணிப்பு தவறு.ஆனால் இந்தியை கற்பது தவறல்ல!

ஜோ/Joe said...

//நான் இங்கே வீ.எம் கருத்தோடு ஒத்துப்போகிறேன். இந்தி திணிப்பு தவறு.ஆனால் இந்தியை கற்பது தவறல்ல!//
கிட்டத்தட்ட எல்லோருடைய கருத்தும் இது தான் .ஒரு மொழியை கற்பதை யாராவது எதிர்க்க முடியுமா ?ஆனால் அதை கண்டிப்பாக்கினால் எதிர்ப்பு வரத்தான் செய்யும் .மற்ற மாநிலங்களில் எதிர்க்கவில்லயே ? என்று கேட்பார்கள் ..அதற்கு நாம் என்ன செய்ய முடியும் ? அது அவர்கள் பாடு. கட்டபொம்மனை பார்த்து வெள்ளைத்துரை கேட்பானே "மற்ற எல்லோரும் பணிந்து விட்ட பிறகு நீ மட்டும் பணியாதிருப்பது உனக்கு ஒரு லாபமா?" என்று கேட்பது போலிருக்கிறது.

குழலி / Kuzhali said...

//அது அவர்கள் பாடு. கட்டபொம்மனை பார்த்து வெள்ளைத்துரை கேட்பானே "மற்ற எல்லோரும் பணிந்து விட்ட பிறகு நீ மட்டும் பணியாதிருப்பது உனக்கு ஒரு லாபமா?" என்று கேட்பது போலிருக்கிறது.
//

!!!

வீ. எம் said...

/// அலசல்னு மட்டும் நீங்க போடுங்க... அது முக்கியமான் அலசலா இல்லியான்னு நாங்க முடிவு பண்றோம்னு ஞானபீடம் சொல்ற மாதிரி எனக்கு கேக்குதே, வேற யாருக்காவது கேக்குதா? - முகமூடி ////


ஞானபீடம் :
யார் யாரோ நன்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று -

பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே ரெண்டும் ஒன்று!

நாராயன, நாராயன !

வீ எம்

வீ. எம் said...

//இந்திக்கு எதிர்ப்பல்ல, இந்தி தினிப்பைத்தான் எதிர்த்தோம்... தலைப்பை மாத்திவைனு யாரே அங்கே சொல்ற மாதிரு காதுல விழுது... உங்களுக்கு கேட்குதா குழலி????

நல்ல அலசல் குழலி.

அப்படியே ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு - சாதக, பாதகங்கள் போடுங்களேன்... !!
வீ எம் ///

யோவ் குழலி, இதுக்கு பதில் சொல்லுவியா , மாட்டியா ????? :) :)
வீ எம்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்கள் பல பின்னூட்டங்களே தனிப்பதிவு அளவுக்கு கருத்துச்செறிவு மிகுந்துள்ளதை பார்த்துள்ளேன். இந்த பதிவும் எழுதப்பட்ட தொனியும் ரசிக்க வைக்கிறது. எப்பொழுது தான் விழிப்பான் தமிழன், எப்பொழுது முன்னேற்றத்திற்கு தன் மொழி மட்டுமே போதுமானது என்ற உலக உண்மையை உணருவான் என்று ஏக்கமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் நாட்டை தாண்டாத சிலர் தான் தமிழ் குறித்து குறைந்த மதிப்பு கொண்டுள்ளார்களோ என்று தோன்றுகிறது. ஆங்கிலம் தவிர்த்த வேற்று மொழி பேசும் மொழி நாடுகளில் வாழும் போது தான் அவரவர் தாய் மொழியின் சாத்தியங்கள் புரிய வருகிறது

ஜோ/Joe said...

//ஆங்கிலம் தவிர்த்த வேற்று மொழி பேசும் மொழி நாடுகளில் வாழும் போது தான் அவரவர் தாய் மொழியின் சாத்தியங்கள் புரிய வருகிறது//
ஆஹா! என்ன அருமையான கருத்து. மிகவும் அனுபவபூர்வமான கருத்து.

Anonymous said...

என்னதான் சொன்னாலும் ஹிந்தி எதிர்ப்பு என்பது என்னைப் போல கிராமத்திலிருந்து வேலைத்தேடி வட இந்திய பட்டணத்திற்கு சென்றவர்களுக்கு சிரமத்தையே கொடுத்தது என்று சொன்னால் மிகை ஆகாது. ஹிந்தி எதிர்ப்பு செய்த அனைத்து அரசியல் தலைவர்களின் வாரிசுகளும் ஹிந்தி படித்துள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை. பட்டணத்தில் உள்ளவர்கள் பிரைவேட்-ஆக ஹிந்தி டியூசன் படித்துகொள்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்டது கிராமத்துக் காரர்களாகிய நாங்கள் தான். இங்கிலீஸ்-உம் தெரியாமல் தேசிய மொழி என்று சொல்லப்படும் ஹிந்தி-யும் தெரியாமல் அவதிப்படுகிறோம். தமிழ் நாட்டை விட்டு வெளியே வராத வரை ஹிந்தி -யின் அவசியம் இல்லை. நான் தற்போது சவுதி அரேபியாவில் இருக்கின்றேன். இங்கு தன்னுடன் பணிபுரிபவர்களிடம் உரையாட ஹிந்தி அவசியம். இங்கு மட்டுமல்ல அனைத்து வெளிநாடுகளிலும் இதுதான் நிலை. எனது இந்த கருத்துக்களுக்கு மறுப்பு சொல்வோர் உண்டோ?

வெங்காயம் said...

//இதில் பாதிக்கப்பட்டது கிராமத்துக் காரர்களாகிய நாங்கள் தான். இங்கிலீஸ்-உம் தெரியாமல் தேசிய மொழி என்று சொல்லப்படும் ஹிந்தி-யும் தெரியாமல் அவதிப்படுகிறோம். தமிழ் நாட்டை விட்டு வெளியே வராத வரை ஹிந்தி -யின் அவசியம் இல்லை. நான் தற்போது சவுதி அரேபியாவில் இருக்கின்றேன். இங்கு தன்னுடன் பணிபுரிபவர்களிடம் உரையாட ஹிந்தி அவசியம். இங்கு மட்டுமல்ல அனைத்து வெளிநாடுகளிலும் இதுதான் நிலை.//

நீங்கள் சவுதி செல்லாமல் ஜப்பான் சென்றிருந்தால், அய்யோ! எனக்கு ஜப்பானிய மொழி கற்றுத்தரவில்லை என்று புலம்புவீர்களா? (ஜப்பானெல்லாம் போக முடியாது என்று சொல்லாதீர்கள். என்னுடைய மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு கூட படிக்காத பலர் ஜப்பான் சென்று உங்களைவிட அதிகமாக சம்பாதிக்கின்றனர்.

இரு மொழிக்கொள்கை இருக்கும்போதே ஆங்கிலம் சரிவரத் தெரியவில்லை என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள். மூன்றாவது மொழியாக இந்தியும் படித்துக் கொடுத்தால் தமிழின் கதி அதோ கதி என்பதை நான் விளக்கவேண்டியதில்லை.

கென்னடி அவர்களே நானும் (தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த) ஒரு கிராமத்தான்தான்.நானும் துபையில் பணியாற்றியிருக்கிறேன். நான் துபை சென்றபோது எனக்கு தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும். அங்கு சுமார் மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்த போது, எனது சுயஆர்வத்தின் காரணமாக இந்தி, மலையாளம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டேன். பேச மட்டுமின்றி எழுதப்படிக்கவும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அரபிக் மொழியையும் ஓரளவு என்னால் புரிந்து கொள்ள முடியும். இது நான் பள்ளிக்குச் சென்று படித்தது அல்ல. எனது ஓய்வு நேரங்களில் சகபணியாளரின் உதவியுடன் கற்றுக்கொண்டவை. சக பணியாளருக்கும் ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. எனது தாய்மொழியில் எனக்கு இருந்த பற்றும் ஓரளவு புலமையும் என்னுடய ஆர்வமும்தான் இவற்றிற்கு காரணம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்....

சவுதியில் இந்தி தெரிந்தவர்களும் குறைவான சம்பளத்துடன் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும், இந்தி தெரியாதவர்களும் அதிக சம்பளத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் மறுக்கிறீர்களா?

சங்கரய்யா said...

//நீங்கள் சவுதி செல்லாமல் ஜப்பான் சென்றிருந்தால், அய்யோ! எனக்கு ஜப்பானிய மொழி கற்றுத்தரவில்லை என்று புலம்புவீர்களா? // நல்ல விளாசல்!

Anonymous said...

///நான் துபை சென்றபோது எனக்கு தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும். அங்கு சுமார் மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்த போது, எனது சுயஆர்வத்தின் காரணமாக இந்தி, மலையாளம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டேன். பேச மட்டுமின்றி எழுதப்படிக்கவும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அரபிக் மொழியையும் ஓரளவு என்னால் புரிந்து கொள்ள முடியும். இது நான் பள்ளிக்குச் சென்று படித்தது அல்ல. எனது ஓய்வு நேரங்களில் சகபணியாளரின் உதவியுடன் கற்றுக்கொண்டவை. சக பணியாளருக்கும் ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. எனது தாய்மொழியில் எனக்கு இருந்த பற்றும் ஓரளவு புலமையும் என்னுடய ஆர்வமும்தான் இவற்றிற்கு காரணம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்....///

Mr. வெங்காயம் அவர்களே, தங்களுடன் பணி புரிபவர்களுக்கு ஆங்கிலம் சரிவர தெரியாததால் நீங்கள் இந்தி, மலையாளம், அரபி போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டீர்கள்.

"இந்தி பேசாமலே நான் இங்கு தமிழையும், ஆங்கிலத்தையும் வைத்தே சமாளிக்கிறேன் என்று சொல்ல வக்கு இல்லை உங்களுக்கு".

நான் பொதுவாக கிராமத்துக் காரர்களுக்கு என்றுதான் சொன்னேன், எனக்கு இந்தி இப்போதும் தெரியாது என்று சொல்லவில்லை.

நான் கடந்த 13 வருடங்களாக மும்பையில் வசித்து வருகிறேன். உங்களைவிட நன்றாக ஆங்கிலம், மலயாளம் (எனது மனைவியின் தாய்மொழி), இந்தி, இந்த மூன்று மொழிகளிலும் நன்றாக பேச, எழுத, படிக்க தெரியும். மேலும் மராட்டி, குஜராத்தி, அரபி நன்றாகப் பேசத் தெரியும்.

நான் 13 வருடங்களுக்கு முன்பு மும்பை வந்தபோது எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் நீங்கள் சொன்னது போல ஆர்வமுடன் முயற்சி எடுத்து இந்தி பேச கற்றுக்கொண்டேன்.

கேரளாவில் இந்தி பாடம் சொல்லிக் கொடுத்ததால் அங்கு மல்யாளம் அழிந்து விட்டதா?

//நீங்கள் சவுதி செல்லாமல் ஜப்பான் சென்றிருந்தால், அய்யோ! எனக்கு ஜப்பானிய மொழி கற்றுத்தரவில்லை என்று புலம்புவீர்களா? //

நான் போகும் நாட்டின் மொழிகளை எல்லாம் கற்றுத்தரச் சொல்லவில்லை. அரபியும், ஜப்பானும் நமது தேசிய மொழியா? இந்தியை தேசிய மொழி என ஏன் ஒப்புக்கொண்டீர்கள். ஒப்புக்கொண்ட பின் அதனை கற்றுக்கொள்ள ஏன் தயங்குகின்றீர்கள்?

///சவுதியில் இந்தி தெரிந்தவர்களும் குறைவான சம்பளத்துடன் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும், இந்தி தெரியாதவர்களும் அதிக சம்பளத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் மறுக்கிறீர்களா?///

நான் இந்தி தெரியாதவர்கள் குறைவான சம்பளத்துடன் கஷ்டப்படுகிறார்கள் என்று சொன்னேனா? எல்லோரும் இந்தியர்களாக இருந்தும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, கருத்தை பரிமாரிக்கொள்ள இயலவில்லையே என்பதைத்தான் சொல்கிறேன். நமது சர்ச்சை இந்தி தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது என்பது அல்ல. புரிகிறதா Mr.வெங்காயம். நீங்கள்தான் வெங்காயம் ஆயிற்றே உங்களுக்கு எங்கே புரியப்போகிறது.

Mr. வெங்காயம், தைரியம் இருந்தால் உங்களுடைய உண்மையான பெயரில் பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்.

ஜோ/Joe said...

//இந்தியை தேசிய மொழி என ஏன் ஒப்புக்கொண்டீர்கள். ஒப்புக்கொண்ட பின் அதனை கற்றுக்கொள்ள ஏன் தயங்குகின்றீர்கள்? //
யார் ஒப்புக்கொண்டது ? நாங்கள்லாம் கையெழுத்துப்போட்டுக்கொடுத்த பத்திரம் உங்க கையில இருக்கற மாதிரி பேசுறீங்க..

மீண்டும் கட்டபொம்மன் வசனம்...

துரை : "சட்டப்படி உன்னிடம் வரி வாங்கும் உரிமை எங்களிடம் உள்ளது"

கட்ட: "உரிமையை வாங்கியோ விற்றோ எமக்கு பழக்கமில்லை..உன்னிடம் யாராவது விற்றிருந்தால் அவனிடமே போய் கேள்"

துரை :" அவன் தான் ஆற்காட்டு நவாப் .அவன் தான் உன்னை கேட்கச்சொல்லுகிறான்"

கட்ட: "நான் அவனிடமே கேட்கச்சொன்னதாக போய் அவனிடமே கேள்"

ஜோ/Joe said...

//Mr. வெங்காயம், தைரியம் இருந்தால் உங்களுடைய உண்மையான பெயரில் பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்.//
இது என்னங்க சின்னபுள்ளதனமா இருக்கு?இதுக்கு என்னங்க பெரிய தைரியம் வேண்டிக்கிடக்கு ?வெங்காயம் பேருல அவர் வலைபதிவு வச்சிருக்கார் .உங்க உண்மையான பேர் கென்னடி தான்னு எப்படி எங்களுக்கு தெரியும் ? பிறப்பு சான்றிதழ் இணைச்சுருக்கீங்களா என்ன?

வெங்காயம் said...

//"இந்தி பேசாமலே நான் இங்கு தமிழையும், ஆங்கிலத்தையும் வைத்தே சமாளிக்கிறேன் என்று சொல்ல வக்கு இல்லை உங்களுக்கு".//

தமிழ் தெரியாதவர்களுடன் தமிழை மட்டும் வைத்து சமாளிக்கிறேன் என்பது சாத்தியமில்லாத ஒன்று. நீங்கள் அதிகம் தொடர்பு கொள்ளும் நபர்கள் (உங்களுக்குத் தெரிந்த) தமிழ், மலையாளம், இந்தி அறியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் இவர்களை இணைக்கும் மொழி ஆங்கிலமே. உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், நமக்கு ஆங்கிலம் ஓரளவு தெரிந்திருந்தால் நாம் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டால், ஏற்கனவே உள்ள இரண்டு மொழி அறிவிலும் குறைவு ஏற்படும். இது வெறும் அனுமானம் மட்டுமன்று. மும்மொழிக் கொள்கை வழக்கில் உள்ள மாநில மக்களைவிட தமிழக மக்களே ஆங்கில அறிவில் சிறந்தவர்கள் என்பது தமிழகத்தை பார்வையிட்ட பின் என் மலையாள நன்பர் கூறிய கருத்து.

//எல்லோரும் இந்தியர்களாக இருந்தும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, கருத்தை பரிமாரிக்கொள்ள இயலவில்லையே என்பதைத்தான் சொல்கிறேன்//

தமிழகத்திலிருந்து எத்தனை சதவீதம் பேர் இந்தி பேசும் மாநிலங்களுக்கு அல்லது வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். அதிகபட்சமாக 20 சதவீத மக்கள் செல்வார்கள் என்று வைத்துக் கொண்டாலும் மற்ற 80 சதவீதத்தினரையும் இந்தி படித்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

இந்தி திணிப்பை எதிர்க்க இவற்றைவிட மிக முக்கியமான காரணம் எனது தாய்மொழி அழியக்கூடும் என்ற அச்சம்தான். தமிழா? அழிவதா? என்று எள்ள வேண்டாம். உங்கள் மனைவி கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த தகவல்... சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மலையாளம் என்ற ஒரு மொழியே உலகில் இல்லை. தமிழொடு சமஸ்கிருதம் கள்ளத்தொடர்பு கொண்டு பிறந்த குழந்தையே மலையாளம். துஞ்சத்தெழுத்தச்சன் என்பவர்தான் மலையாள எழுத்தை (லிபி) வடிவமைத்தவர். இப்படித்தான் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளும் உருவானது. ஆரியர்களின் படையெடுப்புக்கு முன்பு (வருகை என்று வரலாற்றுப்பாடங்களில் படித்ததைப் போன்று எழுதி அடிமை விசுவாசத்தை காட்ட நான் தயாரில்லை) இந்தியாவின் தேசிய மொழியாக இருந்தது தமிழ் என்பதே அண்ணல் அம்பேத்கரின் கருத்து. (இது குறித்து நீண்ட கட்டுரை எழுத எண்ணியுள்ளேன். நேரமின்மையே காரணம்) ஆனால் இன்று வெறும் 6.5 சதவீத மக்கள் மட்டுமே பேசும் மொழியாக ஆக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்த நூற்றாண்டில் 50 முதல் 90 சதவீத மொழிகள் மரித்துவிடும் என்ற இந்த ஆய்வுக் கட்டுரையையும் கொஞ்சம் நோட்டமிடுங்கள்.

//Mr. வெங்காயம், தைரியம் இருந்தால் உங்களுடைய உண்மையான பெயரில் பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்.//

வேடிக்கையாக இருக்கிறது. வலைப்பூக்களில் பதிவோரில் சுமார் 75 முதல் 90 சதவீதம் பேர் புனைப்பெயரிலேயே எழுதுகின்றனர். எனக்குப் பிடித்த தமிழர்களில் மிக முக்கியமான இடம் பெரியாருக்கு உண்டு. அவர் இந்த மக்களின் அறியாமையை நினைத்து அடிக்கடி உபயோகித்த வார்த்தை "வெங்காயம்". அவர் கொள்கையைப் பின்பற்றும் நான், இந்த பெயரை என் புனைப் பெயராக ஆக்கிக் கொண்டேன். என் பெயர் (சொல்லித்தான் ஆக வேண்டுமா?) கணேசன்.

ஜோ...

நன்றி. பிறப்புச் சான்றிதழ் குறித்து அவரிடம் கேட்டிருந்தீர்கள். என்னுடைய பெயர் வெங்காயம் என்று நான்கூட பிறப்புச் சான்றிதழ் பெற முடியும். இந்தியாவில்தான் நான் இருக்கிறேன். ஜனாதிபதிகளிலேயே அதிகம் அறியப்பட்ட ஜனாதிபதியான அப்துல் கலாம் அவர்களுக்கே கைது வாரண்ட் வழங்கிய நீதிபதிகளும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ramachandranusha(உஷா) said...

என்னவோ போங்க, இந்தி படிக்க வெச்சதாலதான் இப்ப மந்திரி பதவி கெடச்சிருக்கிறதா காதுல விழுந்துச்சுங்க.

Anonymous said...

//தேசிய மொழி இந்தி கூட தெரியாத என எல்லாரும் கேட்கும் போது படும் கஷ்டம் நமக்கு தானே தெரியும்.//

http://indiacode.nic.in/coiweb/coifiles/part.htm
http://indiacode.nic.in/coiweb/coifiles/p17.htm

தேசிய மொழி!! தேடுங்கள் தேடுங்கள், தேடிக்கொண்டேயிருங்கள்.


கன்பத்தி பப்பா மோரியா!!

Anonymous said...

http://www.viduthalai.com/20050626/hist.html

இந்தி படிக்காதவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என்று இராஜாஜி
அவர்கள் ஜல்லியடித்ததை இங்கு காணுங்கள். இன்றைய நிலை என்ன?



http://www.viduthalai.com/20050626/hist.html

ஜோ/Joe said...

//தாய்த்தமிழை வளர்க்க என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சிந்தியுங்கள்! //
கென்னடி,
இது பற்றி உங்க சிந்தனை சிதறல்களைப் பட்டியலிட்டால் நாங்களும் பின்பற்ற வசதியாயிருக்கும்.

Anonymous said...

Dayanithi Maran has mentioned that he does not know Hindi. He told that in an interview for Vikatan.

வெங்காயம் said...

//துபையில் ஆங்கிலத்தை வைத்தே சமாளித்திருக்கலாமே!!! பிறகு ஏன் கஷ்டப்பட்டு இந்தி படித்தீர்கள்.//

கஷ்டப்பட்டு இந்தி படித்தேன் என்று நான் சொல்லவில்லை. இஷ்டப்பட்டுத்தான் படித்தேன். என் ஓய்வு நேரங்களில், சுயமாக கற்றேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். என்னுடன் பணிபுரிந்தோருக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்பதையும் கூறியிருக்கிறேன். மாறாக நான் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் இராக்கைச் சேர்ந்தவர். ஜெர்மனில் குடியேற்றம் கண்டவர். அவருடன் பேசுவதற்கு இந்தி உதவாது. ஜெர்மனியோ, அரபியோ அறிந்திருக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. அவருடன் ஆங்கிலத்திலேயே உரையாடுவேன்.

//ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவ, மாணவிகளிடம் தமிழில் ஒரு கட்டுரை எழுதச்சொல்லிப் பாருங்கள், இன்றைய தலைமுறையினரிடம் தமிழின் நிலை என்ன என்பது உங்களுக்குப் புரியும்//

தமிழ்நாட்டில் தமிழின் நிலை பரிதாபமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். இரண்டு மொழிக் கொள்கை இருக்கும்போதே இந்த நிலை எனில், மூன்றாவதாக ஒரு மொழி பயிற்றுவிக்கப்பட்டால் தமிழின் கதி அதோ கதிதான். ஆங்கில வழிக் கல்விபோல இந்தி வழி கல்வியும் உண்டாகும். இப்போது இருப்பதைவிட இன்னும் மோசமான நிலைமை உண்டாகும். என் மகளை ஆங்கில வழி பள்ளியிலேயே படிக்க வைத்திருக்கிறேன் என்றாலும், அவள் L.K.G. படிக்கும்போதே பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டேன். தமிழ் எழுத்துக்களை உச்சசரிக்கும் விதத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டேன். வீட்டில் தமிழில்தான் உரையாடுகிறோம். மம்மி டாடி அல்ல. அம்மா, அப்பாதான்.

இந்தி திணிப்புக்கு ஆதரவாக எழுதிய நீங்கள் திடீரென்று ஆங்கில எதிர்ப்பாளராக மாறியதன் மூலம் நீங்கள் சொல்ல வந்த இந்தி திணிப்பை நீங்களே எதிர்க்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஜோ கூறியது போன்று தமிழை வளர்க்க என்ன செய்யலாம் என்று நீங்கள் கருதுவதை பட்டியலிடுங்கள். நாம் கலந்துரையாடுவோம்.

Anonymous said...

Joe, Vengayam & others,

Whenever you talk about improving Tamil language, there are some guys who will immediatly say the politicians asked us not to study Hindi. So we lost the jobs etc etc. Their children study in english schools etc etc.

You can never change their mindset. From their conversations you can understand that they dont care about Tamil at all. All they are interested is about Hindi & attacking the politicians.

வெங்காயம் said...

//இந்தியை படித்தால் நமது தமிழ் மொழி அழிந்துவிடும் என்று சொல்லும் நீங்கள் துபையில் இந்தியை படிகாமல் ஒதுக்கித் தள்ளியிருக்கவேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து.//

மிகுந்த யோசனைக்குப் பிறகுதான் இதனை எழுதினீர்களா? அல்லது வெங்காயத்துக்கு ஏதாவது பதில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினீர்களா?

நான் எனது கல்லூரி கல்வி வரை முடித்து, பணியில் இருக்கும்போது விருப்பப்பட்டு இந்தி கற்றேன். ஆனால் நீங்கள் சொல்வது ஆரம்பக் கல்வி முதலே இந்தி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பது. இரண்டுக்கும் உள்ள முரணை சிந்தித்துப் பாருங்கள். இரண்டினால் ஏற்படும் விளைவுகளையும் சிந்தியுங்கள்.

//நமது தமிழ் மொழி வளர்ச்சி குறைய அல்லது அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது நாம் இந்தியை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில் என்ன பயன். மற்ற காரணங்களையும் அல்சுவோம், தீர்வு காண முயல்வோம்//

தமிழின் அழிவுப் பாதைக்கு ஆயிரம் காரணங்கள் இருப்பதாக கூறினீர்கள். இருக்கின்ற காரணங்களை குறைக்கும் வேலையைச் செய்யாமல் அல்லது அதற்கு திட்டம் தீட்டாமல் ஆயிரத்தோராவது காரணத்தையும் சேர்ப்போம். அதன்பின் காரணத்தை அலசி தீர்வு காண்போம் என்பது மடமையின் உச்சம் அன்றி வேறு என்ன?

Muthu said...

இங்க இப்படி ஒரு இழை செல்வதை இப்போதுதான் பார்த்தேன்...
நடக்கட்டும். ...
கென்னடி ஒருமுறை நீங்க எழுதியதை அனைத்தையும் மொத்தமாக திருப்பி படித்து பாருங்களேன். உங்கள் வெட்டி தர்கம் உங்களுக்கே சிரிப்பை கொடுக்கும்.

சம்பந்தமில்லா ஒரு செய்தி. இப்போதான் விக்கிபீடியா பார்தேன். சமஸ்கிருதம் nationwideமே. மக்கா எல்லா எடத்துலேயும் வெளையாடுரானுகப்பா.
http://en.wikipedia.org/wiki/List_of_official_languages_by_country#I