கூகிள் விளம்பரங்கள் மூலம் ஒரு முயற்சி
இந்த வலைப்பதிவு சராசரியாக ஒரு நாளைக்கு 200 முறை பார்வையிடப்படுகின்றது(ஹி ஹி என்னையும் சேர்த்துதான்), நையாண்டி, நகைச்சுவை, கருத்து கந்தசாமியாக கருத்து சொல்லித்திரிவது, என் படைப்புகளை பதிவது, என் சார்பு கருத்துகளை எடுத்து வைப்பது என்பதோடு இதை சில ஆக்கப்பூர்வ விடயங்களுக்கும் பயன்படுத்தலாம் என இந்த வலைப்பதிவில் கூகுள் விளம்பரங்களை இணைத்துள்ளேன்,
இந்த கூகுள் விளம்பரங்கள் வழியாக கிடைக்கும் தொகை முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், நலிவடைந்த தமிழ் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்.
கூகுளின் Terms and Conditions ஐ நான் ஏற்றுக்கொண்டிருப்பதால் இதற்கு மேல் இங்கே பேச முடியவில்லை.
அவ்வப்போது இது தொடர்பான விடயங்களை(updates) தெரிவிக்கின்றேன்.
பின் குறிப்பு:
இது மாதிரியான முயற்சிகளில் எனக்கு அதிக முன் அனுபவமில்லாததால், இதில் ஏதேனும் தவறோ, சட்ட சிக்கல்களோ, விதிமுறை மீறல்களோ இருப்பின் தெரிவிக்கவும்
6 பின்னூட்டங்கள்:
// இந்த வலைப்பதிவு சராசரியாக ஒரு நாளைக்கு 200 முறை பார்வையிடப்படுகின்றது(ஹி ஹி என்னையும் சேர்த்துதான்) //
எம்மாடியோபவ்.... நம்முது 100கூட தொட மாட்டேங்குதே.... சரக்கில்லையோ...:-(
/// இந்த வலைப்பதிவு சராசரியாக ஒரு நாளைக்கு 200 முறை பார்வையிடப்படுகின்றது(ஹி ஹி என்னையும் சேர்த்துதான்) //
எம்மாடியோபவ்.... நம்முது 100கூட தொட மாட்டேங்குதே.... சரக்கில்லையோ...:-(
//
கோ.கணேஷ் தவறாக புரிந்து கொண்டீர், என்னையும் சேர்த்துதான் என்பதை ஒரு முறை அழுத்தி படித்துக்கொள்ளவும்.
என்ன குழலி எத்தனை அழுத்திப் படித்தாலும் எத்தனை முறை அழுத்திப் பார்த்தாலும் நம்முது 100 தொட மாட்டேங்குதே.... சரி சரி மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்னு நினைச்சுக்க வேண்டியது தான்
என்ன ஆனது இந்த பதிவிற்கு, தமிழ்மணம் திரட்டியில் காணவில்லை :-(
//இந்த வலைப்பதிவில் கூகுள் விளம்பரங்களை இணைத்துள்ளேன்,//
ஏம்பா,கூகிள்ல தேடினா எல்லாம் உலகத்தில இருக்கிற எல்லாத்தைப் பத்தியும் கிடைக்குமாம்.
என்னோட லங்கோடை எந்தப் படுபாவியோ அடிச்சிட்டுப் போயிட்டான்.கொஞ்சம் கூகிலு கிட்ட சொல்லத் தேடிக் கொடுங்களேன்.
Post a Comment