தெக்கத்தி டெர்மினேட்டர் லிங்கம்

லிங்கம்,பிரபு,அயோத்திக்குப்பம் வீரமணி, எர்ணாவூர் நாராயணன், காட்டான் சுப்பிரமணி, கேட் சுப்பிரமணி, மிலிட்ரி குமார், வெல்டிங் குமார், சேரா, வெள்ளை ரவி, ஆத்தூர் கண்ணையா, வெடிகுண்டு பாஸ்கர், பாக்ஸர் வடிவேலு,கபிலன், ஆசைத்தம்பி மற்றும் பலர்.

தினம் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பெயர்களையெல்லாம் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர், இந்த பட்டியலில் உள்ளவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை, சிலர் திருந்தி வாழ்வதாக கூறியுள்ளனர்.

தற்போது சில வாரங்களாக தெக்கத்தி டெர்மினேட்டர் லிங்கம் என்றொரு தொடர் ஜீனியர் விகடனில் வந்து கொண்டுள்ளது, இந்த லிங்கம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் கன்யாகுமரி மாவட்டத்தை கலக்கியவர்,தமிழக அணியின் கபடி வீரராக இருந்தவர், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மொத்த கன்னியாகுமரியையும் தன் பிடியில் கொண்டுவந்தவர், இவர் 90களின் முற்பகுதியில் ஆரம்பித்து 90களின் மத்திய பகுதிவரை கன்னியாகுமரியை கலக்கியவர், இவர் ஒரு கொலைவழக்கில் காவல்துறை தேடியபோது தலைமறைவாக இருந்த படியே நக்கீரன்(அல்லது ஜீனியர் விகடன்) பத்திரிக்கைக்கு பேட்டி தந்தார். அதை படித்த பிறகு அதனை தொடர்ந்து லிங்கம் தொடர்பான பத்திரிக்கக செய்திகளை சற்று ஆர்வத்துடன் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், 1995ல் குமுதம்(அ)விகடன் ஏதோ ஒரு பத்திரிக்கையில் அட்டையில் (தகவல் பிழை இருக்கலாம்) இவரது படத்துடன் கூடிய இவரது பேட்டியை பதிப்பித்திருந்தனர், அந்த சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்றும் தெரிவித்தார், சரியாக ஒரு வருடத்திற்குள் கொடூரமாக தலை தனியாக துண்டிக்கப்பட்டு அவரின் எதிரிகளால் கொல்லப்பட்டார்.

இவரை போன்றவர்களின் பேட்டியும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் வீர பிரதாபங்களையும் நக்கீரன்,விகடன்,குமுதம் போன்றவை அவ்வப்போது பேட்டிகளாகவும் தொடர்களாகவும் வெளியிட்டு வருகின்றன. எந்த மனிதனும் முழுக்க கெட்டவனுமில்லை, முழுக்க நல்லவனுமில்லை, கெட்டவர்கள் என்று சமூகம் சொல்பவர்களிடம் சில நல்ல குணங்களும் உண்டு, நல்லதும் செய்திருப்பர், நல்லவர்கள் என்று சமூகம் சொல்பவர்களிடம் சில கெட்ட குணங்களும் உண்டு, கெட்டதும் செய்திருப்பர்.

இது மாதிரி சில நல்லதுகள் செய்திருந்தாலும் அவர்களின் பின்னணி இரத்தமயமானது, எனவே இதை படிக்கும் அத்தனை பேரும் ஒரு சம்பவமாகவோ அல்லது முதிர்ந்த மனத்துடனோ இருப்பார்கள் என்று சொல்லமுடியாது, அதிலும் முக்கியமாக இளம் வயதினர் (15-23 வயது) எந்த ஆபத்தையும் பற்றி எண்ணாமல் கால் தரையில் படாமல் திரியும் வயதினர், ஓடுற பாம்பை மிதிக்கிற வயதினருக்கும் ஒரு விதமான சாகச மனப்பான்மையிலிருப்பவர்களுக்கும் எது சரி எது தவறு என்று புரிவதில்லை, செயல்களின் விளைவுகள் சுத்தமாக புரிவதில்லை, இது மாதிரியான தொடர்களையும் நாயகன்,தளபதி,ரெட் இன்னபல இது மாதிரியான படங்களை பார்க்கும்போதும் 'நாலு பேருக்கு நல்லது செய்ய எது வேணா செய்யலாம்' என்ற வசனங்களை கேட்கும்போதும் அவர்களை அறியாமல் இதெல்லாம் தவறேயில்லை, சரி தான் என்கிற நினைப்பு வந்துவிடும் அவர்களுக்கு.

இந்த வயதிலுள்ள எல்லோருக்கும் அரவணைப்பான, நல்ல பெற்றோர்களும், நல்ல சகோதர சகோதரிகளும், நல்ல ஆசிரியர்களும், நல்ல நண்பர்களும் அமைந்தால் அவர்களை நல்வழிபடுத்துவர் எங்கேயானும் இதில் குறைபாடுகளிருந்து அதே சமயத்தில் இது மாதிரியான தொடர்களையும் படங்களையும் பார்த்துவிட்டு சாகச மனப்பாண்மையோடு ஏதேனும் முயற்சியில் இறங்கினால்?? இந்த வயதில் செய்யும் ஒரு சில செயல்கள் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும், ஆனால் கொஞ்சம் கூட சமூக பொறுப்பின்றி நாயகன்,தளபதி,ரெட் மாதிரியான படங்களை எடுப்பதும் பத்திரிக்கைகள் தொடர்கள் வெளியிடுவதும் திரைப்படங்களும் பத்திரிக்கைகளும் அவர்களுடைய சமூக பொறுப்பற்று செயல்படுவதையே காண்பிக்கின்றது.
'இது யாரையும் நியாயப்படுத்தும் தொடர் அல்ல இதை படிப்பவர்கள் வன்முறையை நினைத்து பார்க்கக்கூட மாட்டார்கள்' என்று சப்பைகட்டு கட்டுவது வன்முறை வேண்டாமென படம் முழுக்க வன்முறையை காண்பித்து கடைசி காட்சியில் இரண்டு நிமிடம் போதனை வசனங்கள் பேசிய விருமாண்டி படத்தை போன்றது தான்.

நாம் அறிந்து கொள்ள எத்தனையோ சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு உண்டு, எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை வரலாறு உண்டு.

குமுதம்,நக்கீரன்,விகடன், இன்ன பிற இதழ்களும் திரைப்படத்துறையினரும் தம் சமூக பொறுப்பை சிந்தித்து இம்மாதிரியான படங்களையும் தொடர்களையும் வெளியிடாமல் இந்த சமூக இளைஞர்களை வன்முறை வழியில் இறங்காமல் இருக்க உதவுங்கள்.

18 பின்னூட்டங்கள்:

சங்கரய்யா said...

முற்றிலும் உண்மையான கருத்துக்கள், தங்களின் வணிகத் தேவைக்காக உணர்வு சுரண்டலை முன்னிலைப்படுத்தி பணம் ஈட்டுவதே ஊடகங்களின்(பத்திரிகை, திரைப்படம், தொலைக்காட்சி) முதல் வேலையாக உள்ளது (சில விதி விலக்குகளும் உண்டு)

குழலி / Kuzhali said...

பின்னூட்டத்திற்கு நன்றி சங்கரய்யா,

//தங்களின் வணிகத் தேவைக்காக உணர்வு சுரண்டலை முன்னிலைப்படுத்தி பணம் ஈட்டுவதே ஊடகங்களின்(பத்திரிகை, திரைப்படம், தொலைக்காட்சி) முதல் வேலையாக உள்ளது (சில விதி விலக்குகளும் உண்டு)
//

சமூகத்திலிருக்கும் ஒவ்வொருவருக்கும் சில பொறுப்புகள் உண்டு, இளைஞர்களுக்கு நல்ல வழி காண்பிக்கவில்லையென்றாலும் கெட்ட வழி காண்பிக்காமல் இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவிற்கு பத்திரிக்கைகளும் திரைப்படங்களும் சமூக பொறுப்பற்று இருந்தால் என்ன செய்வது, இதையெல்லாம் கூறினால் இலக்கிய கமிஸர்கள் என்றும் படைப்பிற்கும் கூட தணிக்கையா என்றும் பொங்கியெழுவார்கள்.

பத்ம ப்ரியா said...

நல்ல கட்டுரை.. ஆட்டோ சங்கரையும், சந்தனக் கடத்தல் வீரப்பனை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு பில்ட் அப் செஞ்சு கட்டுரை எழுதுவாங்க.. அந்தக் கட்டுரைகளை படிக்கும் போது நமக்கே அவங்க மேல ஒரு பரிதாப எண்ணம் வரும்..

இது தேவலை.. இதை விட மோசமாக ..

குழந்தைகளை.. குழந்தைகளாக சித்தரிக்காமல்.. வயதுக்கு மீறிய மன முதிர்சியோடும்..கேவலமான வசனங்கள் பேசுவதாகவும், விரசமான காட்சிகளுக்கு துணை போவதாகவும்.. (திருடா திருடீ) காட்டும் திரைப்படங்களை என்ன செய்வது..?

Anonymous said...

//'இது யாரையும் நியாயப்படுத்தும் தொடர் அல்ல இதை படிப்பவர்கள் வன்முறையை நினைத்து பார்க்கக்கூட மாட்டார்கள்' என்று சப்பைகட்டு கட்டுவது வன்முறை வேண்டாமென படம் முழுக்க வன்முறையை காண்பித்து கடைசி காட்சியில் இரண்டு நிமிடம் போதனை வசனங்கள் பேசிய விருமாண்டி படத்தை போன்றது தான்.//

சரியா சொன்னீங்க. அதே போல ஊரிலே இருக்குற மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு 'பசுமைத்தாயகம்' அப்படீன்னு கப்ஸா விடுறவங்களையும் உதாரணமா சேர்த்திருக்கலாம்.

dondu(#11168674346665545885) said...

"சரியா சொன்னீங்க. அதே போல ஊரிலே இருக்குற மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு 'பசுமைத்தாயகம்' அப்படீன்னு கப்ஸா விடுறவங்களையும் உதாரணமா சேர்த்திருக்கலாம்"

எல்லாத்தையு கேட்டு நம்புபவர்களைத்தான் குறை சொல்லணும். காதில் கூடைப் பூ வைத்துக்கொண்டால் ஏமாத்துறவனுக்குக் கொண்டாட்டம்தானே.

ஊராருக்குத் தாய் மொழிக் கல்வியைத் தீவிரமாக வலியுறுத்துவார்கள், உன் வீட்டு விஷயம் என்ன என்று கேட்டால் அன்புடன் மிரட்டுவார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் அதையும் சப்பைகட்டு கட்டிப் பேசும் அறிவுஜீவிகள் வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

hayy dondo

kizava, paapara puthiya vituttu veliya varave maattiya... pathivukkum nee solrathukkum enna sampantham...

naan oru mosamanavana erunthu unga amma utthaminnu sonna atha nambama ella thevadiyathaannu solluviya....


Sorry friends...
intha allu roommba paduththurar... thala muzukka azukka vacukkittu ella edaththuleyum asingam pannrar... thaangamudiyalappa

kuzali neengkal virumbavittal ethai aziththuvidavum

kumar

குழலி / Kuzhali said...

புராணகாலத்து கதைகளில் மற்றவர்களை விட கம்சன்,இரணியன் போன்றோர் தான் அதிக நேரம் கடவுளைப்பற்றியே நினைத்துக்கொண்டே இருப்பார்கள் எதிர்மறையாகவேனும்.

டோண்டு அய்யாவிற்கு என்ன பிரச்சினையென்று தெரியவில்லை அவரால் பாமகவை தவிர்த்து வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை போலும் அந்தளவிற்கு பாமகவும் மருத்துவரும் அவரை ஆக்கிரமித்துவிட்டார்கள் போல :-))

வடக்கத்தி டெர்மினேட்டருக்கு ஒருவகையில் உங்கள் காழ்ப்புணர்ச்சியை காண்பித்துக்கொண்டதிற்கு நன்றி.

நன்றி

ஜென்ராம் said...

நல்ல பதிவு குழலி..

Anonymous said...

அன்பின் குழலி,
டோண்டு விதயத்தில் உங்களின் அசாத்திய பொறுமையும் மென்மையான போக்கும் எனக்கு ஆச்சரியமூட்டுகின்றது, டோண்டுவை விட்டுத்தள்ளுங்கள் அவர் அப்படித்தான் உங்களின் வழக்கமான பதிவுகளை எழுதுங்கள். அசின் பதிவுகளை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள், நல்ல பதிவு

அன்புடன்
ராஜ்குமார்
(mailme2rajkumar@yahoo.co.uk)

dondu(#11168674346665545885) said...

"டோண்டு அய்யாவிற்கு என்ன பிரச்சினையென்று தெரியவில்லை அவரால் பாமகவை தவிர்த்து வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை போலும் அந்தளவிற்கு பாமகவும் மருத்துவரும் அவரை ஆக்கிரமித்துவிட்டார்கள் போல :-))"

என்ன செய்வது குழலி அவர்களே, இந்த சமூக இளைஞர்களை வன்முறையில் திசை திருப்புவதைக் கண்டித்து எழுதும்போது படச்சுருளைக் கடத்தியவர்களையும், திருட்டு வி.சி.டி. போடுவோம் என மிரட்டியவர்களையும் கூட உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது.

"kizava, paapara puthiya vituttu veliya varave maattiya..." என்று முகவரியில்லாக் குமார்கள் எழுதும் பின்னூட்டத்தைக் கண்டிக்காது ரசிக்கும் மனப்பான்மையை என்னவென்று சொல்வது?

ஐயா குமாரு, என் பின்னூட்டம் எனக்கு முன்னால் வந்தப் பின்னூட்டத்தின் எதிர்வினை என்பதைக் கூடப் புரியாது என்ன ஐயா தமிழ் படிக்கிறீர்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

/புராணகாலத்து கதைகளில் மற்றவர்களை விட கம்சன்,இரணியன் போன்றோர் தான் அதிக நேரம் கடவுளைப்பற்றியே நினைத்துக்கொண்டே இருப்பார்கள் எதிர்மறையாகவேனும்.

டோண்டு அய்யாவிற்கு என்ன பிரச்சினையென்று தெரியவில்லை அவரால் பாமகவை தவிர்த்து வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை போலும் அந்தளவிற்கு பாமகவும் மருத்துவரும் அவரை ஆக்கிரமித்துவிட்டார்கள் போல :-))/

;-)

Anonymous said...

//இதில் விசேஷம் என்னவென்றால் அதையும் சப்பைகட்டு கட்டிப் பேசும் அறிவுஜீவிகள் வேறு.//
hey dondu kuzali arivujeevyaka irupadhil unaku enna pirachini un paapara jaadhi veriyai vida avarin jadhi patru paravillai.

dondu(#11168674346665545885) said...

//இதில் விசேஷம் என்னவென்றால் அதையும் சப்பைகட்டு கட்டிப் பேசும் அறிவுஜீவிகள் வேறு.//
"hey dondu kuzali arivujeevyaka irupadhil unaku enna pirachini un paapara jaadhi veriyai vida avarin jadhi patru paravillai."

குழலி அறிவுஜீவியாக இருப்பதில் எனக்கு என்னப் பிரச்சினை இருக்க முடியும்? ஆக, சப்பைகட்டு கட்டிப் பேசும் அறிவுஜீவி என்பது குழலிதான் என்று ஒத்துக் கொள்கிறீர்கள். உம்மை விடப் பெரிய அனுகூல சத்ரு குழலிக்குக் கிடைக்காது. நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அட அட அடா...
இந்த மாதிரி "பி"ன்னூட்டத்த முதல்ல டெர்மினேட் பண்ணனுமய்யா....

குழலி / Kuzhali said...

//avarin jadhi patru paravillai. //
அனானிமஸ் ஏற்கனவே நான் சில இடங்களில் கூறியது தான் இருந்தாலும் மீண்டும் ஒருமுறை நான் எந்த இடத்திலும் எந்த சாதியையும் ஆதரித்தோ தூக்கி பிடித்தோ எழுதவில்லை, பாமக வின் மீதும் மருத்துவர் இராமதாசு மீதும் காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்பட்ட ஊடக வன்முறையை எதிர்த்து தான் சில பதிவுகளும் பின்னூட்டங்களும் இட்டேன்,தயவு செய்து என்னை சாதிய வட்டத்தில் சுருக்காதீர்கள்.

சிலரின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் வரிகளுக்கிடையில் படித்து புரிந்து கொள்ளவேண்டும், சிலரின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் வரிகளுக்கிடையில் படித்து புரிந்து கொள்ளவேண்டும் வஞ்சப்புகழ்ச்சியணி விளையாடும்.

//kuzali arivujeevyaka irupadhil unaku enna pirachini //
எனக்கும் அறிவுஜீவியாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசை ஆனால் உண்மை அப்படியில்லையே என்ன செய்வது :-))

டோண்டு அய்யா அவர்கள் மெத்த படித்தவர், சிறந்த அனுபவசாலி, பன்மொழிபுலவர், அவர் எப்படி கூறினாலும் சரியாகத்தான் இருக்கும்.

//"kizava, paapara puthiya vituttu veliya varave maattiya..." என்று முகவரியில்லாக் குமார்கள் எழுதும் பின்னூட்டத்தைக் கண்டிக்காது ரசிக்கும் மனப்பான்மையை என்னவென்று சொல்வது?
//
டோண்டு அய்யா ரசிக்கும் மனப்பான்மை யாருக்கு என்று கூறினால் நன்றாக விளங்கும், அது மட்டுமல்ல, பின்னூட்டத்தை நீக்காததற்கு காரணம் உங்களை இந்த மாதிரியான பின்னூட்டங்கள் பாதிக்காது என்பதும் நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள் "போங்கடா ஜாட்டான்களா" என்று போய் கொண்டே இருப்பீர் என நீங்களே சில இடங்களில் கூறியதும் மேலும் பல இடங்களில் நீங்களே சாதி தெரிய பெருமையாக ராகவைய்யங்கார் என்று பெயர் எழுதி பின்னூட்டமிட்டதாலும் தான்.

தவறிருந்தால் மன்னிக்கவும்

நன்றி

குழலி / Kuzhali said...

//அட அட அடா...
இந்த மாதிரி "பி"ன்னூட்டத்த முதல்ல டெர்மினேட் பண்ணனுமய்யா.... //

அர்னால்ட் சிவனேசன் என்ன சொல்கின்றீர் என சுத்தமாக புரியவில்லை "பி"ன்னூட்டமென்றால் என்ன?

Anonymous said...

"பி" - என்றால் அசிங்கம்.....
"பி"ன்னூட்டமென்றால்..... புரிகிறதா...?

யாத்ரீகன் said...

ஒரு நடிகையின் கதை போன்ற... அற்புதமான இலக்கிய தொடர்களை வெளியிட்ட குமுதத்திடம் இதை எதிர்பார்பது சரியா குழலி.. ??