வழியனுப்ப செல்வதால் விளையும் நன்மைகள்
யாராவது ஊரைவிட்டு கிளம்பினால் வழியனுப்ப செல்வதுண்டு, அதனால் பல நன்மைகள் மேலே உள்ள படத்தை பாருங்கள், இதெல்லாம் வழியனுப்ப சென்றதால் கிடைத்தவை.
சென்ற வாரம் ஒரு நண்பர் ஊரைவிட்டு மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்பினார்,
சரி வழியனுப்பலாம் என்று சென்றேன், அப்படியே இந்த படங்களில் இருக்கும் பொருட்களையெல்லாம் சுட்டுக்கொண்டு வந்து விட்டேன்.
ஏன் தல கைப்பை எடையெல்லாம் சரியாக இருக்கின்றதா என பல முறை கேட்டேன், அதெல்லாம் பார்த்துக்கலாங்க நீங்க கவலைப்படாதிங்க என்றார், நாம என்னைக்கு அதுக்கெல்லாம் கவலை பட்டிருக்கோம் எடை அதிகமா இருந்து அனுமதிக்கலைனா எதுனா தூக்கி போடுவாரே அதை சுட்டுக்கினு வந்துடலாம்னு தான்.
ஆனா மனுசன் கடைசி வரைக்கும் கால்சட்டை பையிலிருந்த பர்சை மட்டும் தூக்கிப்போடவேயில்லீங்கோ படு உசாருங்கோ அவர். அது சரி பையில் இருப்பதற்குதானே எடை போடுகின்றனர், கால்சட்டை பையில் இருப்பதற்கெல்லாம் எடை போட மாட்டேங்குறாங்களே!
அது சரி மேல கீதே படத்துல அதுயின்னானு கேக்குறிங்களா? எத்தனைதான் send off க்கு போயி சுட்டுக்கின்னு வர்றது, அதான் காசு போட்டு வாங்குனேன்.
எல்லாத்துக்கும் மேல மனுசனை ப்ளைட்ல ஏத்திவுட்டுட்டு உடனே வந்துடாம ப்ளைட் கெளம்பி பறக்கறதை பார்த்துட்டு வரோம் பாருங்கோ அதுல ஒரு நிம்மதி, ஆகா மனுசன் கெளம்பிட்டான்டா, நிச்சயமா ஊருல ஆளு இல்லைனு ஆசுவாசபடுத்திக்கிட்டே நாம நம்ம லக்கேஜோட நடைய கட்டவேண்டியது தான்.
ஆனாலும் மனுசன் நம்ம பக்கத்தில் இல்லையென்றாலும் இதையெல்லாம் பாக்க சொல்ல அவர் ஞாபகம் வரும், எனவே மக்களே யாருக்கேனும் உங்கள் ஞாபகம் இந்த குழலிக்கு இருக்க வேண்டுமா வழியனுப்ப கூப்பிடுங்கள்...
இத்த படிச்சிட்டு என்னை திட்டாத தல, சும்மா தமாசு...
ஆனாலும் சிலர் மூட்டை முடிச்ச கட்டிக்கொண்டு கிளம்பும்போது வருத்தமாதாங்க இருக்கு.
10 பின்னூட்டங்கள்:
வழியனுப்பப் போறதில இத்தின இருக்கா?
குழலி,நீங்க இவரையா வழியனுப்பப் போனீங்க???
Alpam..Alpam..nee panurathodu illama aduthavangallaiyum ..Chi Chi..
//குழலி,நீங்க இவரையா வழியனுப்பப் போனீங்க??? //
உண்மை என்னவென்று அவருக்கும் தெரியும் என நம்புகின்றேன், நீங்க எங்கே வருகின்றீர் என்றும் புரிகின்றது. நானும் காத்திருக்கின்றேன்.
//Alpam..Alpam..nee panurathodu illama aduthavangallaiyum ..Chi Chi.. //
யாம்பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக.
நன்றி வசந்தன,சுதர்சன் கோபால் மற்றும் Anonymous,
#
ஞானபீடம் அண்ணாத்தே உங்களை வெளியில விடவேண்டாம் என்று விளம்பரம் கொடுத்தும் விட்டுட்டாங்களா? நேற்று என்னிடம் வெகுமதி வாங்கிக் கொண்டு உங்களையும் விட்டுட்டாங்களே.... ஏமாந்துட்டேன்...
Mr. Ganesan should be ashamed of himself. Making irresponsible comments and running away when confronted with comments did show how shallow his understanding of matters that he talked and how irrational his attitude was. I failed to distingush himself from the people like LLTrashu. They neither know what they talk nor tamiz.
Ein Idiot soll seine Ohren öffnen und soll breit, nicht sein Mund beäugen.
Agent 8860336 ஞானபீடம் said...
குழலி,
sidebar-ல போட்ருக்க எச்சரிக்கைய தூக்கேய். அப்பால, layout-அ காலி பண்ற இந்த comment-ல கைய வையேய்.
- ஞானபீடம்
(அடுத்த பதிவு(50) போட்டாச்சேய்!)
:-))))
+++++++++++++++++++++++++++++++++
3:37 AM
குயிலி, தனது இந்த வலைப்பக்கத்தின் side-bar-ல் எனக்கு நிரந்தரமாக விளம்பரம் செய்ய முடிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.!!
Post a Comment