'டிஸ்க்கோ' சாந்தி என்றொரு அக்காள்

'டிஸ்க்கோ' சாந்தி, அனைவரும் இந்த பெயரை குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டிருப்பீர், 'தேள்கடி' நடிகை என்று பிரபல தமிழ் நாளிதழின் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் இலவச புத்தகத்தில் குறிக்கப் பட்டவர்.



Image hosted by Photobucket.com


இவருடைய தந்தை ஆனந்தன், சில பழைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பணத்தில் புரண்டவர், ஆனால் சில காலங்களில் எல்லா பணத்தையும் இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நின்ற போது பணம் இருந்த காலத்தில் கூடவே இருந்த கூட்டமில்லை, தனியாக நின்றார் கூட இருந்தது பதின்ம வயதிலிருந்த சாந்தியும், குஞ்சும் குளுவானுமாக இருந்த சாந்தியின் தங்கையும் தம்பியும் தான்.

வறுமை கோர தாண்டவமாடியது, அலுவலக வேலைக்குப் போகுமளவிற்கு படிப்புமில்லை, தந்தையால் சம்பாதிக்கும் நிலையுமில்லை, நடிப்புலகிற்கு வந்தார் சாந்தி, தங்க தாம்பாளத்தில் வரவேற்க யாரும் அங்கே தயாராக இல்லை, கிடைத்ததெல்லாம் கவர்ச்சி நடனங்கள் தான், அன்று ஆட ஆரம்பித்தார், தன் தம்பி தங்கைகளுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் வரை அவர்களுக்கு இறக்கை முளைக்கும் வரை ஆடினார், குலுக்கு நடிகை,தேள்கடி நடிகை என்று சமூகத்திலுருந்து பத்திரிக்கை வரை கடித்த கடிகள் அத்தனையும் தாங்கிக்கொண்டு ஆடினார்.

ஒரு சமயம் அவர் படப்பிடிப்பிற்கு சென்ற போது வர தாமதமானதால் சாந்தியின் தந்தை படப்பிடிப்பு தளத்திற்கு தொடர்பு கொண்டு சாந்தி ஏன் இன்னும் வரவில்லை (இப்போது உள்ளது போன்று கைத்தொலைபேசி அப்போது இல்லை) என கேட்டபோது சரியான பதிலில்லை, தொடர்ந்து இரண்டு மூன்று முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கிடைத்த பதில் 'பயப்படுற நீயெல்லாம் எதுக்கு பொண்ணை நடிக்க அனுப்புற' என்ற ஏச்சு தான் விழுந்ததாம், அழுது கொண்டே தொலைபேசியை வைத்துவிட்டாராம், தன் கையாலாகத தனத்தை எண்ணிய அந்த தந்தை அன்று தூங்கியிருப்பார் என நினைக்கின்றீர்?

தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல், ஒரு தாயைப்போல தன் தங்கையையும் தம்பியையும் வளர்த்த சாந்தி, என்று அவரின் சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததோ, என்று அவரின் தம்பி சொந்த காலில் நிற்கும் நிலைவந்ததோ அன்றே நிறுத்தினார் ஆடியதை. இது மாதிரியான கவர்ச்சி நடிகைகள் என்றும் குலுக்கு நடிகைகள் என்றும் நம்மாலும் சமூகத்தாலும் பத்திரிக்கையாலும் விளிக்கப்படும் ஒவ்வொரு நடிகயின் பின்னாலும் ஒரு கையாலாகத தந்தையோ, ஏமாற்றிய காதலனோ, கணவனோ இருந்திருப்பார்கள் அல்லது சகோதர சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையிலிருப்பார்கள்.

நடிகைகள் மட்டுமல்ல, எத்தனையோ பெண்கள் அலுவலகங்களிலும், கூலித் தொழிலாளியாகவும், கடைகளிலும் வேலைசெய்து கொண்டு தன் சொந்த வாழ்க்கையை எண்ணாமல் தன் தங்கை,தம்பிகளின் வாழ்க்கைக்காக பாடுபட்டுக் கொண்டுள்ளனர், இந்த மாதிரி உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை இதே நிலையில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று எனக்கு தோன்றுகின்றது.

25 பின்னூட்டங்கள்:

ஏஜண்ட் NJ said...

//தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல், ஒரு தாயைப்போல தன் தங்கையையும் தம்பியையும் வளர்த்த சாந்தி, என்று அவரின் சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததோ, என்று அவரின் தம்பி சொந்த காலில் நிற்கும் நிலைவந்ததோ அன்றே நிறுத்தினார் ஆடியதை. //

சபாஷ்!

மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்னு சும்மா இல்லாம, முயற்சியால் மெய்வருத்திக் கூலி பெற்ற டிஸ்கோ!

no politics in this comment! beleive me kuzhali ;-)

era.murukan said...

//ஒரு சமயம் அவர் படப்பிடிப்பிற்கு சென்ற போது வர தாமதமானதால் சாந்தியின் தந்தை படப்பிடிப்பு தளத்திற்கு தொடர்பு கொண்டு சாந்தி ஏன் இன்னும் வரவில்லை (இப்போது உள்ளது போன்று கைத்தொலைபேசி அப்போது இல்லை) என கேட்டபோது சரியான பதிலில்லை, தொடர்ந்து இரண்டு மூன்று முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கிடைத்த பதில் 'பயப்படுற நீயெல்லாம் எதுக்கு பொண்ணை நடிக்க அனுப்புற' என்ற ஏச்சு தான் விழுந்ததாம், அழுது கொண்டே தொலைபேசியை வைத்துவிட்டாராம், தன் கையாலாகத தனத்தை எண்ணிய அந்த தந்தை அன்று தூங்கியிருப்பார் என நினைக்கின்றீர்?
//

குழலி,

ஆட்டோ சங்கரின் வாக்குமூலம் புத்தகம் (நக்கீரன் வெளியீடு) படித்தால் இந்த சம்பவத்தின் கொடுமையான வடிவம் நெஞ்சை உலுக்கும் முறையில் சொல்லப் பட்டிருக்கும். நாராயண் என் பதிவில் கேட்டாரே, நளினி ஜமீலா பற்றி. அவர் அனுப்பவித்த துன்பம் எல்லாம் ஒன்றுமேயில்லை இந்தப் பெண் அன்பவித்ததோடு ஒப்பிடும்போது.

-/பெயரிலி. said...

குழலி,
"டிஸ்கோ சாந்தி"க்கும் "சில்க் ஸ்மிதா"வுக்கும் இடையிலேயிருந்த உலகத்தினை எதிர்கொள்ளும்தன்மை மிகவும் வேறானது. அந்தவிதத்திலே சாந்தி மிகவும் முன்னோடி. (கவர்ச்சி நடிகைகள் என்றில்லை, எல்லா நடிகைகளின் வாழ்க்கைகளிலும் இதே நிகழ்வுகள் ஏற்படுவதுண்டுதான். அண்மையிலே ஹொலிவுட்டின் நடிகை/பாட்டுக்காரி ஒரு நூல் இது குறித்து எழுதியிருந்தார்).

கொழுவி said...

நல்ல பதிவு.
நன்றி.

SnackDragon said...

நல்ல பதிவு.

குழலி / Kuzhali said...

//ஆட்டோ சங்கரின் வாக்குமூலம் புத்தகம் (நக்கீரன் வெளியீடு) படித்தால் இந்த சம்பவத்தின் கொடுமையான வடிவம் நெஞ்சை உலுக்கும் முறையில் சொல்லப் பட்டிருக்கும்.//
ஏற்கனவே படித்துள்ளேன் மனது வலித்தது.

//நாராயண் என் பதிவில் கேட்டாரே, நளினி ஜமீலா பற்றி.//
உங்களது பதிவில் தேடினேன் கிடைக்கவில்லை, சுட்டி தந்தால் நன்று.

//"டிஸ்கோ சாந்தி"க்கும் "சில்க் ஸ்மிதா"வுக்கும் இடையிலேயிருந்த உலகத்தினை எதிர்கொள்ளும்தன்மை மிகவும் வேறானது.//
எனக்கும் இதே எண்ணம் உண்டு.

//எல்லா நடிகைகளின் வாழ்க்கைகளிலும் இதே நிகழ்வுகள் ஏற்படுவதுண்டுதான்.//
உண்மைதான்...

//no politics in this comment! beleive me kuzhali ;-) //
ஏற்றுக்கொள்கின்றேன்.

இதில் மிகக்கொடுமையான விடயம் என்னவென்றால் பதிவெழுதிவிட்டு அவரது படம் ஒன்று போடலாம் என இணையத்தில் தேடினேன் ஏகப்பட்ட படங்கள் கொட்டின ஆனால் இந்த பதிவில் போடப்பட்ட இந்த ஒரே ஒரு படம் தான் எடுக்க முடிந்தது, என்னதான் நாம் சொல்வது போல கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் ஒரு சாதாரணமான படம் கிடைக்காதது அதுவும் இணையத்திலே கிடைக்காதது மன வருத்தம் தந்தது.

பின்னூட்டமளித்த அனைவருக்கும் நன்றி

Srikanth Meenakshi said...

நல்ல பதிவு. நன்றி.

G.Ragavan said...

நல்லதொரு கருத்து மிகுந்த பதிவு. அவரது மனவுறுதி பாராட்டத்தக்கது.

முகமூடி said...

// தேள்கடி நடிகை என்று சமூகத்திலுருந்து பத்திரிக்கை வரை கடித்த கடிகள் // தேள்கடி நடிகை என்று அவரை சமூகம் கடிக்கவில்லை அய்யா... சிம்ரனுக்கு எப்படி 'இடுப்பு ஆட்டுவது' என்பது ப்ராண்ட் ஆனதோ (அதே பாணியில் தொடர்ந்து நடன அசைவுகள்) அதே போல டிஸ்கோ சாந்திக்கு ஒரு வித ப்ராண்ட் ஆனது...

மற்றபடி சினிமா நடிகைகள் வாழ்க்கை என்பது ஒரு மாயப்புதிர்தான்... வெளியே படோடமாக தெரியும் வாழ்க்கைக்கு பின்னே தற்கொலை செய்து கொள்வது, இரண்டாம் தாரமாக வாழ்க்கைபடுவது/வாழ்க்கைப்பட ஆசைப்படுவது (ஸ்ரீதேவி கபூர் வரை), மிரட்டல்கள், பணம் சம்பாதித்தாலும் அதை தான் அனுபவிக்க முடியாமல் இருப்பது என்று இன்னும் எவ்வளவோ...

முகமூடி said...

// ஆட்டோ சங்கரின் வாக்குமூலம் புத்தகம் (நக்கீரன் வெளியீடு) படித்தால் // இது என்ன... நான் படிக்கவில்லை... ஏதாவது சுட்டி உள்ளதா...

Ramya Nageswaran said...

நல்ல நடிகராக இருந்த ஒருவரின் பெண்ணுக்கே இவ்வளவு தான் மரியாதை என்றால் சினிமா ஆசையில் கிராமத்தை விட்டு ஓடி வரும் பெண்கள், மற்றும் 'extras' என்று அலட்சியமாக அழைக்கப்படும் பெண்களின் நிலமை என்ன?

கோடி கோடியாக நடிகர்கள் சம்பாதிக்கும் பொழுது ஒரு நல்ல அமைப்பை உருவாக்கி இப்படி ஓடி வருபவர்களுக்கு உண்மையிலேயே திறமை இருக்கிறதா என்று சோதித்து அல்லது counselling செய்து ஊருக்கு திருப்பி அனுப்ப ஒரு அமைப்பை ஏன் நடிக/நடிகைகள் உருவாக்க கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.

இவரின் தங்கை ப்ரகாஷ் ராஜின் மனைவி என்று நினைக்கிறேன்?

Anonymous said...

//இவரின் தங்கை ப்ரகாஷ் ராஜின் மனைவி என்று நினைக்கிறேன்?//

தங்கை லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவி; டிஸ்கோசாந்தி, தெலுகு கதாநாயகர்/வில்லன் நடிகர்/ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்ரீஹரியின் மனைவி.

Thangamani said...

//டிஸ்கோ சாந்தி"க்கும் "சில்க் ஸ்மிதா"வுக்கும் இடையிலேயிருந்த உலகத்தினை எதிர்கொள்ளும்தன்மை மிகவும் வேறானது.//

Yes. I understand. Nice post. Thanks!

Anonymous said...

எனக்கும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து முடியவில்லை. பொறுமை இழந்து விட்டேன். எனவே ஆட்டோசங்கர் எனும் அறிஞர் என்ற தலைப்பில் ஒரு பதிவு இடலாமா என எண்ணமும் உள்ளது.

அதன் ஆரம்ப வரிகளாக:-

ஆட்டோ சங்கர் தனது இளம்பிராயம் முதலாக அடிபட்டு மிதிபட்டு ஒருவேளை சோற்றுக்காக ரத்தம் சிந்தி இந்த சமுதாயத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தார். அதன்பின் வந்தாரை வாழவைக்கும் நம் தமிழக மாநகர் சென்னையில் டீக்கடை, ஹோட்டல்களில் வேலை கேட்டும் சரிவரக் கிடைக்கவில்லை. பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்தார். எட்டி உதைத்த கருங்காலிகளை மண்டியிட வைக்க வேண்டும் என்பது அவரது நெடுநாள் ஆசை.

சென்னையில் அப்போது இருந்த சிறு சிறு கும்பல்களில் சேர்ந்து...

எப்படி இருக்கிறது?

ஜோ/Joe said...

குழலி,
வித்தியாசமான கோணம் .நல்ல பதிவு..

குழலி / Kuzhali said...

//நல்ல நடிகராக இருந்த ஒருவரின் பெண்ணுக்கே இவ்வளவு தான் மரியாதை என்றால் சினிமா ஆசையில் கிராமத்தை விட்டு ஓடி வரும் பெண்கள், மற்றும் 'extras' என்று அலட்சியமாக அழைக்கப்படும் பெண்களின் நிலமை என்ன?//

நிலமை சொல்லிக்கொள்ளும்படியில்லை என்பது தான் உண்மை, இதில் மிக அதிகம் பாதிக்கப்படுவது ஆந்திர கிராமத்துப் பெண்கள்,சென்னை சென்ட்ரலில் ரயிலில் வரும் அவர்கள் ரயில் நிலையத்திலேயே சில புரோக்கர்களால் மிக எளிதாக மடக்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு திருப்பிவிடப்படுகின்றனர், இது மாதிரி மடக்கப்படும் பெண்களின் சராசரி எண்ணிக்கை ஒரு நாளைக்கு 15-20.

சென்னை சென்ட்ரல் என்ற ஒரு இடத்தில் மட்டும் இத்தனை என்றால் சென்னையிலும், மும்பையிலும் நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஒரு நாளுக்கு?

கையாலாகத நிலைதான் நமக்கும்...

Anonymous said...

//கோடி கோடியாக நடிகர்கள் சம்பாதிக்கும் பொழுது ஒரு நல்ல அமைப்பை உருவாக்கி இப்படி ஓடி வருபவர்களுக்கு உண்மையிலேயே திறமை இருக்கிறதா என்று சோதித்து அல்லது counselling செய்து ஊருக்கு திருப்பி அனுப்ப ஒரு அமைப்பை ஏன் நடிக/நடிகைகள் உருவாக்க கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.//
பாதி கயவாளிகளே அவனுங்க தானே

Unknown said...

ஒரு முறை எங்கோ வெளியில் சென்று இரவில் அவரும் அவரது தங்கையும் திரும்பிக்கொண்டு இருக்கும்போது ரோட்டில் சிலர் அவர்களிடம் தகாத முறையில் அழைத்து வம்புக்கு இழுத்ததாக ஒரு முறை குமுதத்தில் சொல்லி இருந்தார். கூடவே கவர்ச்சி நடனம் ஆடுவதால் இப்படி தவறாக அழைக்கிறார்கள் என்று வருத்தப்பட்டு இருந்தார்.

ஒவ்வொரு நடிகைக்கு பின்னும் இப்படி பல சோகங்கள்.

பத்மா அர்விந்த் said...

Kuzhali
Good post. Not only actress, even other women go through lots of trouble.As actress and dancers, they go thorugh sexual harrassment as well. There are stories on the dancers at bars, and women who work in restaurents too

-L-L-D-a-s-u said...

இதற்கு தீர்வு என்ன.. ரசிகர்கள் நாம், இந்த மாதிரியான ஆடல்களை ரசிக்காமல் விடலாம் .. அனுராதா போன்றோருக்கு பிரச்சினைகள் வராதுப்போகலாம்.. ஆனால் அவர்களுக்கு வேலை இருக்காதே .. என்னமோ போங்கள்..

விசிதா..

அவரை நடிகையாக அல்ல அக்கா என்ற கோணத்தில் பார்த்திருக்கிறார் குழலி . தலைப்பு சரியெனவேப்படுகிறது ..

Ramya Nageswaran said...

விசிதா, நன்றி.. கண்டிப்பாக பார்க்கிறேன்.

வெவ்வேறு துறையில் இருப்பவர்கள் அதில் முன்னேறிய பிறகு, தான் கடந்து வந்த பாதையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிலரையாவது கை தூக்கிவிட்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிடும் என்பது என்னுடைய பேராசை. தான் முன்னேறினால் குடும்பத்தை முன்னேற்றும் அதே நேரம், கொஞ்சம் தன் சமுதாயத்தையும் முன்னேற்றலாமே!

பலர் செய்கிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை. நானும் சொல்லிக்கும் படியாக செய்யவில்லை. இன்னும் நிறைய செய்தால் நம் வாழ்நாள் முடிவதற்குள் இன்னும் பலப்பட்ட இந்தியாவை பார்த்துவிட்டு போகலாம்.

NONO said...

"நடிகைகள் மட்டுமல்ல, எத்தனையோ பெண்கள் அலுவலகங்களிலும், கூலித் தொழிலாளியாகவும், கடைகளிலும் வேலைசெய்து கொண்டு தன் சொந்த வாழ்க்கையை எண்ணாமல் தன் தங்கை,தம்பிகளின் வாழ்க்கைக்காக பாடுபட்டுக் கொண்டுள்ளனர்"

பெண்கள் மட்டுமா இப்படி வாழ்கையை அற்பனிக்கிறார்கள் ஆண்களுந்தான் அற்பனிப்பார்கள்/அற்பணித்துருப்பார்கள்!!!!!!!

Chandravathanaa said...

நல்ல பதிவு

தகடூர் கோபி(Gopi) said...

மிக நல்ல பதிவு குழலி.

//தங்கை லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவி; டிஸ்கோசாந்தி, தெலுகு கதாநாயகர்/வில்லன் நடிகர்/ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்ரீஹரியின் மனைவி.//

சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான "நூவு ஒஸ்தானன்ட்டே நேனு ஒத்தன்ட்டானா?" (நீ வர்றேன்னா நான் வேணான்னுவனா) தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாபத்ததிரத்தில் (த்ரிஷாவின் பாசமிகு கிராமத்து அண்ணனாய்) நடித்துள்ளார் ஸ்ரீஹரி.

நிஜவாழ்விலும் கட்டப்பஞ்சாயத்து தாதா. ஆனால் அடிப்படையில் நல்லவர் என எனது தெலுங்கு நண்பர்கள் கூறுவர்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சிந்தனையைத்தூண்டும் வித்தியாசமான மனிதாபிமானமிக்க பதிவு. ஒரு வேளை இதை சாந்தியே படிக்க நேர்ந்தால் மிகவும் மகிழ்வார் என நம்புகிறேன்