பத்ம வியூகத்தில் அரவாணன், அடிக்கும் அபிமன்யூக்கள்

அகில இந்திய மருத்தவ கழகத்தின் தன்னாட்சி உரிமையில் தலையிடுகின்றார் அமைச்சர், அதனால் அகில இந்திய மருத்துவ கழகத்தில் அமைச்சருக்குள்ள அதிகாரத்தை நீக்கிவிட்டு அதை குடியரசு தலைவர் எடுத்துக்கொள்ள வேண்டுமாம், அதாவது அகில இந்திய மருத்துவ கழகம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இந்தியாவுக்கே அதாவது 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் சுகாதாரத்துறை அமைச்சர், ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனைகளின் அமைச்சர் அகில இந்திய மருத்துவ கழகத்தின் தன்னாட்சி உரிமையில் தலையிடக்கூடாதாம், ஆனால் அந்த அமைச்சகத்திலிருந்து வரும் நிதியுதவி மட்டும் வேண்டுமாம், தன்னாட்சி உரிமையில் தலையிடக்கூடாது என்று கூறும் அத்தனை புனிதமான அகில இந்திய மருத்துவ கழகத்தில் தான் தேவையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கிய (உயர்சாதி) உயிர் காக்கும் பணியில் இருந்த வேலை செய்யாத மருத்துவர்களுக்கு சம்பளம் வேண்டுமாம்? அவர்களுக்கு சம்பளம் தரவிருந்தார் இயக்குனர், அதில் தலையிட்டு தடுத்தார் அமைச்சர்,

போராட்டகாலத்தில் சம்பளம் தர வேண்டுமென கோரும் இந்த வேலை நிறுத்தத்தில் இந்த மருத்துவர்கள் ஏன் இறங்கினர்? அவர்களுடைய சம்பளம் குறைக்கப்பட்டதா, அவர்களுடைய சேமநலநிதி(PF)யில் கை வைக்கப்பட்டதா? அவர்களுடைய விடுப்பை பயன்படுத்தாமல் சம்பளமாக்கும் ஈட்டிய விடுப்பு நிறுத்தப்பட்டதா? ஓய்வு பெறுபவர்கள் வீடு கட்டவும், பிள்ளைகளுக்கு படிக்கவும், திருமணம் செய்யவும் நம்பியிருந்த அவர்களுடைய சேமநலநிதி கிராஜீவிட்டி யில் பாதி பணம் சேமிப்பு பத்திரமாக ஆறு ஆண்டு கழித்து பெற்று கொள்ளுங்கள் என கொடுக்கப்பட்டதா? தங்கள் பாதி அவர்களுடைய கோரிக்கைகளுக்காக அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? அதற்கான நேரம் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டதா? அட பொதுப்பிரச்சினைக்காக போராடுகிறார்கள் என்றாலும் கூட இதற்கு முன் இத்தனை ஆண்டுகளாக எந்த பொது பிரச்சினையிலும் வராத ஆர்வம் இதில் வந்திவிட்டது இந்த மருத்துவர்களுக்கு, இதெல்லாம் பச்சை ஆதிக்க சாதி வெறி ஏறி இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடத்திய போராட்டத்திற்கு சம்பளம் தர தயாராக இருந்தாராம் இயக்குனர், அதை தடுத்தாராம் அமைச்சர்.

இது நாள் வரை சாதியின் பெயரால் ஒடுக்கி பிறரை அறியாமையில் வைத்திருந்து அதன் மூலம் அவர்களின் இடங்களை பிடித்துக்கொண்டு இருந்த இடத்தில் சமூக நீதிக்காக கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டை , பரம்பரை பரம்பரையாக தாம் அனுபவித்து வந்தது தொடரமுடியாமல் போகிறதே என்ற எரிச்சலில் மேற்கொண்ட போராட்டம் இது, நியாயப்படி பார்த்தால் உயிர் காக்கும் இந்த மருத்துவர்களின் மீது டெஸ்மா பாய்ந்திருக்க வேண்டும்( தமிழக அரசு ஊழியர்களின் வேலை நீக்கத்தை எதிர்த்து விட்டு இங்கே எப்படி ஆதரிக்கின்றீர் என்பவர்கள் இதற்கு முந்தைய பத்தியை மீண்டும் ஒரு முறை படிக்கவும்).

அகில இந்திய மருத்துவ கழகம் சுகாதாரத்துறையின் கீழ் வருகின்றது ஆனால் அதில் அதன் அமைச்சருக்கு அதிகாரம் இருக்க கூடாதாம், நேரடியாக குடியரசு தலைவரின் கீழ் வரவேண்டும் என்று கையெழுத்து வேட்டை நடத்துகிறார்களாம், ஏற்கனவே குடியரசு தலைவர் பெயருக்கு வகிக்கும் பல அதிகாரமற்ற பதவிகளில் இதுவும் சேர்ந்துவிட்டால் அகில இந்திய மருத்துவ கழகத்தின் தன்னாட்சி, தன் இச்சையான ஆட்சியாகிவிடுமல்லவா அதற்காகத்தான் இந்த கையெழுத்து வேட்டை, தன் இச்சையான ஆட்சியாகவிட்டால் யாருக்கு வேண்டுமானாலும் சம்பளம் தரலாம், யாருக்கு வேண்டுமானாலும் வேலை தரலாம் இந்த புனித நிறுவனத்தில்.

இடஒதுக்கீட்டு விடயத்தில் தங்கள் சாதி வெறியை காண்பித்து கரி பூசிக்கொண்ட புனித பத்திரிக்கைகள் தற்போது அன்புமணிக்கு எதிரான போரை தொடங்கியுள்ளன, இந்த அன்புமணி தான் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு நடவடிக்கை எடுத்தவர், காலம் காலமாக அகில இந்திய கழகத்தின் தன் இச்சையான ஆட்சியின் அடித்தளத்தையே ஆட செய்பவர், மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தின் போது அன்புமணியே நேரடியாக நோயாளிகளை பரிசோதனை செய்து தேவைப்பட்டால் தானே நேரில் களத்தில் இறங்குவேன் என்று செயல்பாடு, இதனால் மருத்துவர்களின் போராட்டத்திற்க்கு ஏற்பட்ட ஆதரவு பின்னடைவு, எல்லாவற்றிற்கும் மேலாக இடஒதுக்கீட்டின் முழு ஆதரவு கட்சியை சேர்ந்தவர், இதற்காகத் தான் அகில இந்திய மருத்துவ கழகத்தின் தன் இச்சையான ஆட்சிக்காக சிலர் பிரதமரை சந்திக்கப்போகின்றனராம், தினம் தினம் அன்புமணிக்கு எதிராக தங்கள் ஆதிக்க சாதிவெறி முகத்தை சில பத்திரிக்கைகள் காண்பித்து அன்புமணிக்கு எதிரான பத்ம வியூகத்தை வகுக்கின்றன.

இந்திய இராணுவத்தை(?!) இலங்கைக்கு அனுப்பி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து வரவேண்டுமென்று ஜெயலலிதா அரசு சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவந்த போது திமுக எந்த எதிர்ப்பும் காண்பிக்காமல் நடுநிலை வகித்த போது கறுப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்தில் தீர்மாணத்தை எதிர்த்து எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த பாமக ஈழத்தமிழருக்கான அடையாள ஆர்பாட்டத்தில் அரசியல் காரணங்களினால் பாமக அதிகாரப்பூர்வமாக கலந்துகொள்ளாது(அதிகாரப்பூர்வமற்று பல பாமகவினர் கலந்துகொண்டனர்) என்று அறிவித்த போது அரசில் இருப்பதால் தானே இப்படியான நிர்பந்தங்கள் இதற்கு அரசில் பங்கேற்காமலே இருந்திருக்கலாம் என்ற என் எண்ணத்தையும் அதிருப்தியையும் சிலருடன் பகிர்ந்து கொண்டேன், ஆனால் இப்படி முறுக்கி கொண்டால் இழப்பு யாருக்கு என்பது இப்போது புரிந்துவிட்டது, அதிகாரத்தில் இல்லாமலிருந்தால் அகில இந்திய கழகத்தில் நடைபெறுவது போன்ற சாதி வெறி அக்கிரமங்களை எதிர்த்து அடையாள கண்டன போராட்டம் மட்டுமே நடத்திக் கொண்டிருந்திருக்க முடியும், ஆனால் அனுபவிப்பவர்கள் அனுபவித்துக் கொண்டே இருந்திருப்பர், வேறு ஒன்றும் செய்திருக்க முடியாது.

இடஒதுக்கீட்டிற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் ஓலக்குரலுக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் நடந்த, நடக்கும் போராட்டங்களுக்கும் ஒடுக்குபவர்களின் ஊளைக்குரலுக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான சமூகநீதிக்கெதிரான போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு, அகில இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் நடத்திய இடஒதுக்கீட்டிற்கெதிரான போராட்டம் எந்த வர்க்கத்தில் வருகிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், அந்த வித்தியாசம் தெரியவில்லையென்றால் அவர்களுக்காக என்னால் பரிதாபம் மட்டுமே படமுடியும்.

அகில இந்திய கழகத்தின் இயக்குனர் வேணுகாபல் ராஜினாமா மிரட்டல் வேறு விடுக்கின்றார், மிரட்டல் என்ன மிரட்டல் ராஜினாமா செய்வதென்றால் செய்துவிட்டு போக வேண்டியது தானே (வேணுகோபால் ராஜினாமா செய்யவேண்டுமென அகில இந்திய மருத்துவ கழகத்திலேயே கையெழுத்து வேட்டை நடக்கின்றதாம்) ஏற்கனவே இந்த பதிவில் சொன்னது போல புழுத்துப்போன வீச்சங்களை எதிர்த்து அரவாணன்கள் உரக்க சமூகநீதிக் குரல் எழுப்புவதால் அரவாணன்கள் மீதே அபிமன்யூக்களின் தாக்குதல். பீடங்கள் உடைந்து அரவாணன்கள் எழுந்து கொண்டிருக்கும் காலம் இது, அபிமன்யூக்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால் அரவாணன்களிடம் மாட்டி அடிபட நேரிடும்.

பின்குறிப்பு
இத்தனை நாளும் தன் இச்சையான ஆட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் இதே மாதிரியான நிலையே...

31 பின்னூட்டங்கள்:

said...

பதிவுக்கு நன்றி

said...

//சமூக நீதிக்காக கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டை , பரம்பரை பரம்பரையாக தாம் அனுபவித்து வந்தது தொடரமுடியாமல் போகிறதே என்ற எரிச்சலில் மேற்கொண்ட போராட்டம் இது//
ஆட்சியும் அதிகாரமும் தங்களிடம் மட்டுமே குவிந்துகிடக்க வேண்டும் எனும் மேல்சாதி மானோபாவத்தின் வெளிப்பாடு இது.

said...

இதில் சுற்றிவளைத்துப் பேச என்ன இருக்கிறது. அன்புமணி ஒரு வன்னியர், ஆகவே ஆதரிக்கிறேன்
என்று நேரடியாக எழுதிவிடலாமே.எல்லாம் ஒரு அரை டஜன் எம்பிக்களை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற திமிர்.அடுத்த தேர்தலில் மக்கள் வைப்பார்கள் ஆப்பு.

said...

அடேடே அன்பு அனானி... உங்க லாஜிக் படி இதே பிரச்சினையை பற்றி முத்து(தமிழினி) பதிவு இங்கே முத்து(தமிழினி)வும் அன்புமணியை வன்னியர் என்பதால் ஆதரிக்கிறாரா?

உங்களை மாதிரி கொஞ்சம் ஆளுங்க இருந்தாதான்பா கலகலப்ப்பா இருக்குது

said...

அண்ணே, இதுல யாரூ அரவான், யாரூ அல்பாய்ஸ்ல போன அபிமன்யூ?

said...

ஆமா...அரவாணனுக்கும் அபிமன்யுவுக்கும் ஏது சம்பந்தம்...?

அபிமன்யூ மாண்டது சக்ர வியூகத்தில்...கொன்றது பல கவுரவர்கள்...

பீஷ்மரைக் கொல்லத்தான் அரவாணான் தேவைப்பட்டான்...

இந்த விஷயத்தில் யார் அரவாணர் யார் அபிமன்யூ..? ஒரே குழப்பமாக இருக்கிறதே...விளக்கவும்...

said...

அமெரிக்காவில் அரசாங்க பணத்தில் நடக்கும் ஏஜன்சிகளை செனட்டில்
கூப்பிட்டு வைத்து கேள்வி கேட்பார்கள்.

வேணுகோபாலை பாராளுமன்றத்திற்கு வரவழைத்து நிர்வாகம்
ஸ்தம்பித்து பொதுமக்கள் அவதிக்கு உள்ளானதற்கு விளக்கம் கேட்க வேண்டும்.

There cannot be government funded agencies
without accountability.

said...

ஆங்கில பின்னுட்டதிற்கு மன்னிககவும்

http://www.nellaimedicos.com/blog/bruno/2006/06/no-work-and-no-pay.html

How can we claim pay when we have not worked

If so then we need not have various kinds of leave such as Casual leave, Compensatory Leave, Permission Leave, Earned Leave, Unearned Leave, Maternity Leave, Study Leave, Leave on Medical Grounds etc

If I want to take leave, then I can go on a strike demanding that there should be no seperate hostel for Ladies (in the name of equality) and hence go for my personal work When the work is over, I can come back and join…

Wonderful !!!

அந்த இயக்குனர் பற்றி ஒரு ஆங்கில படிவு எழுதி இருக்கிறேன்
http://doctorbruno.blogspot.com/2006/06/erosion-of-dignity-of-aiims.html

said...

Doctor Bruno வின் பதிவிலிருந்து கீழ் கண்ட பத்தி எடுக்கப்பட்டுள்ளது....

//Now if you look back

The dignity of institute was not eroded because of institute quotas

The dignity of institute was not eroded when the question papers were leaked in 2002

The dignity of institute was not eroded when the guys could not give a question paper with 300 proper questions (with 30 to 35 questions missing in fwe question papers) in 2004

The dignity of institute was not eroded when patients were refused treatment for 2 weeks

The dignity of institute was not eroded when AIIMS posted an irresponsible notice
//

//இந்த விஷயத்தில் யார் அரவாணர் யார் அபிமன்யூ..? ஒரே குழப்பமாக இருக்கிறதே...விளக்கவும்...
//
வஜ்ரா ஷங்கர், இந்த பதிவை படித்து பாருங்கள், யார் அரவாணன், யார் அபிமன்யூ என்று புரியும்

said...

// பீஷ்மரைக் கொல்லத்தான் அரவாணான் தேவைப்பட்டான்...//

அது சிகண்டி, பெண் அம்சம் உள்ள ஒரு ஆண்.

அரவாணன் ஒரு முழுமையான ஆண். அப்பிடிதான் நினைக்கிறேன் !!!

said...

மன்னிக்கவும்...அரவாணன் - அரவாணிகள் (சம கால அர்தத்துடன் பார்த்து) ஷிகண்டியுடன் குழப்பிக் கொண்டேன்.

said...

அரவான் : கவுரவர்களாலும், பாண்டவர்களாலும் களப்பலி கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரன். கிருஷ்ணர் அமாவாசையை முதல்நாளாக்கி பாண்டவர்களுக்காக களப்பலி கொடுக்கும்படி செய்தார்.

அபிமன்யு: பத்மவியூகத்தில் மாட்டி உயிரிழந்தவன்.

இருவரும் ஒருவகையில் ஒரே பிரிவைச் சேர்ந்தவரே.

மோகன் ப. சிவம்
ரியாத்.

said...

//
அரவாணன் ஒரு முழுமையான ஆண். அப்பிடிதான் நினைக்கிறேன் !!!
//

அரவாணன் (iravan) ஒரு முழுமையான ஆண், மாவீரன், நாக லோக இளவரசி உலுபிக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்த இளவரசன். (அவனை யாரும் நிராகரித்து காட்டில் தவிக்க விடவில்லை!!)

களப்பலி கொடுக்கும் காண்டாம் ஒரு சில பிராந்திய மாற்றமாக மஹாபாரதத்தில் உள்ளது...அதே அரவாணன் வட நாட்டின் மஹாபாரதத்தில் 8ம் நாள் அலம்பூஷா என்கிர அசுரனால் கொல்லப்படுவான்.

அர்ஜுனனுக்கு நான்கு மனைவிகள், த்ரௌபதி, சுபத்ரா, உலுபி, சித்ராங்கதா.

சுபத்ராவுக்குப் பிறந்தவன் அபிமன்யூ. அபிமன்யூவை தூக்கிப் பிடிப்பது ஏன் என்றால் பாண்டவ குலத்தின் Patriarch என்பதால் (மற்றவர்கள் போரில் இரந்துவிட்டதால், அவனது வம்சம் மிஞ்சியிருக்கும்)..அவனுக்கும், உத்தாரவுக்கும் பிறந்தவன் பரிக்ஷித்

பரிக்ஷித் மைந்தன் ஜன்மஜெயன்.

இந்த கதைக்குள், இந்த இடது சாரி class struggle ஐ புகுத்தி, அரவாணனை ஏதோ கீழ் சாதிக்காரன், அபிமன்யூ மேல்சாதிக்காரன் என்று புனைத்து...அந்த புனைப்பில் அன்புமணி-வேணுகோபால் சண்டையைக் கலந்து அடித்துவிட்டீர்கள்...

வாழ்த்துக்கள்..

said...

//இந்த கதைக்குள், இந்த இடது சாரி class struggle ஐ புகுத்தி, அரவாணனை ஏதோ கீழ் சாதிக்காரன், அபிமன்யூ மேல்சாதிக்காரன் என்று புனைத்து...அந்த புனைப்பில் அன்புமணி-வேணுகோபால் சண்டையைக் கலந்து அடித்துவிட்டீர்கள்...
//
அரவாணன் பாத்திர படைப்பு பற்றிய ஒரு மீள்பார்வை இங்கே...
http://kuzhali.blogspot.com/2006/02/blog-post_11.html
இதை வைத்து தான் அப்படி எழுதப்பட்டது

said...

//
இதை வைத்து தான் அப்படி எழுதப்பட்டது
//

அதையும் நீங்கதானே எழுதுனீர்கள்? அல்லது ஏதாவது பத்திரிக்கையில் வந்ததா?

ஒன்று மட்டும் திண்ணம்...நீங்கள், மற்றும் இந்த "திராவிடத் தமிழர்கள்" வலைஞர்கள்...கொஞ்சம் நேரம் ஒதுக்கி, இந்த class struggle கண்ணோட்டத்திலிருந்து விலகி நின்று சுயபரிசோதனை செய்து கொள்ளவேணுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

கொஞ்சம் காட்டமாகச் சொன்னால், காமாலைக் கண்ணணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்...அதே போல்...உங்களைப் போன்றவர்களுக்கு எதில் நோக்கினும் மேல் சாதி கீழ் சாதிச் சண்டை. அல்லது பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற பிரிவு தான் தெரியும்...துரதிர்ஷ்டவசமாக உங்களைப் போன்றவர்களைத்தான் "சமூக நீதிக்காவலர்கள்" என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்...

said...

குழலி, அர்த்தமுள்ள கேள்விகள். நேர்மையான பதிவு.

'தெரிந்தே திருடனாய் இருப்பவர்கள் அப்பாவியாய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வார்த்தைகளை விரயம் செய்யவேண்டாம்' என்று நான் கெட்டுகொள்வது உங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கும் பரிந்துரை மட்டுமே.

said...

சங்கர்,

தீடிரென்று புனிதராகி மாறி அறிவுரை எல்லாம் தூள் கிளப்புறீங்க.

அவரவர் அவரவர் நிலைகளை காக்க பல நிலைகளை எடுக்கிறார்கள்.அதன் அடிப்படையில் நாங்கள் ஒரு நிலை எடுக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பாருங்கள்.

1. இஸ்ரேலியர்கள் நல்லவர்கள்

2. பி.ஜே.பி நல்லவர்கள்.

3. மேதா பட்கர் ஒரு கரிமினல்

4.கம்யூனிஸ்டுகள் கொடியவர்கள்

5.திராவிட கட்சிகள் ஒதுக்கப் படவேண்டியவை.

6.பிற்படுத்தப்பட்டவர்கள் திம்மிகள்(அப்படின்னா என்னங்க)

எங்களை மாதிரி கொஞ்சம் பேர் இருப்பதால் தான் இன்னும் இந்தியாவில் கலவரம் வரவில்லை :)

said...

Kuzhali has no idea about class struggle or caste struggle or both.
He and other Dravida Tamils are happy with cliches.They think cliches are replacements for
thinking and understanding.

said...

இந்த சண்டையில் எல்லோரும் இறந்தே ஆகவேண்டும் என்பது தெரிந்தே சண்டை தொடங்குகிறது. ஏனென்றால் இருப்புறத்திலும் படல்பலம் அப்படி. கிருஷ்ணர் தெரிந்தே தனது மகன்களை கூட துரியோதனன் புறத்திற்க்கு அனுப்பிவைக்கிறார் தான் குடுத்த வாக்கை காப்பாற்றுவதற்க்கு. 13ம் நாள் யுத்ததில் அவர்கள் அனைவரும் இறந்தும் போகின்றனர். கிருஷ்ணர் துக்கிக்கவில்லை, கர்மயோகியாக சண்டையை மேற்கொண்டு வழி நடத்துகிறார். அரவான் கதை வ்யாஸ பாரததில் இல்லை என்றே கருதுகிறேன். பலரும் சொன்னது போல இதில் சாதிபூச்சு எதுவும் கிடையாது. தேவையில்லாமல் உணர்ச்சிகளை தூண்டிவிடவே இது போன்ற புனைகதைகளை பயன்ப்டுத்துகிறோம்.

said...

Lord Krishna is not a brahmin by birth.He fought with Pandavas and
his forces were with Kauravas.There are many versions of the epic, with local/regional
variations. But dont expect Dravida Tamils to read
epics or hindu philosophy or upanishads or to understand the nuances in narratives. They are more than happy with Periyar and his silly comments.

said...

//
தீடிரென்று புனிதராகி மாறி அறிவுரை எல்லாம் தூள் கிளப்புறீங்க.
//

நன்றி, புனிதராகும் தகுதி பொதுவுடமை இல்லையா? யார் வேணா புனிதனாகலாம்..

//
1. இஸ்ரேலியர்கள் நல்லவர்கள்

2. பி.ஜே.பி நல்லவர்கள்.

3. மேதா பட்கர் ஒரு கரிமினல்

4.கம்யூனிஸ்டுகள் கொடியவர்கள்

5.திராவிட கட்சிகள் ஒதுக்கப் படவேண்டியவை.

6.பிற்படுத்தப்பட்டவர்கள் திம்மிகள்(அப்படின்னா என்னங்க)
//

தமிழினி முத்து சார்,

1. இஸ்ரேலியர்கள் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்று நான் வாதிடவில்லை, நான் கூறியது...Out of contextல் எடுத்துக்
கொள்ளக்கூடாது...

2. Did i ever claim like that ? BJP is just another political party like congress and commies.

3. மேதா பட்கர் விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன்.

4. கம்யூனிஸ்டுகள் கொடியவர்கள் மட்டுமல்ல என்னைக் கேட்டால் பல வேளைகளில் தேசத் துரோகிகள். (இது என் கருத்து தான்)

5. திராவிடக் கட்சிகள் ஒதுக்கப் படவேண்டியவையே.

6. நனும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்தவன் தான்.? இட ஒதுக்கீடு போன்ற ஐஸ் குச்சி மிட்டாய்களுக்கு மயங்காத OBC.

3 out of 6 (50% ரைட்!!) :))

For your information திம்மிக்கள் என்றால் யார்?

//
எங்களை மாதிரி கொஞ்சம் பேர் இருப்பதால் தான் இன்னும் இந்தியாவில் கலவரம் வரவில்லை :)
//

என்னத்தெச் சொல்றது...அது வேறு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா...?

அது தான் பார்த்தோமே...செய்யுறதெ உருப்படியா செஞ்சிறுந்தா கொயம்புத்தூர்ல குண்டு வெடிச்சிறுக்குமா? இப்ப BJP ஆளுங்க கிட்ட இந்து வோட்டு polaraize ஆகிறுச்சு? அடுதது என்ன செய்யப் போறீங்க, மதானியை விடுதலை செய் என்று ஆர்பாட்டமா? (கேரள முதல்வர் ஏற்கனவே அதற்கு steps எடுத்துவருகிறார்)

கலவரம் வராம என்ன செய்யும்?

//
ரொசவசந்த்:

குழலி, அர்த்தமுள்ள கேள்விகள். நேர்மையான பதிவு.

'தெரிந்தே திருடனாய் இருப்பவர்கள் அப்பாவியாய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வார்த்தைகளை விரயம் செய்யவேண்டாம்' என்று நான் கெட்டுகொள்வது உங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கும் பரிந்துரை மட்டுமே.
//

rozavasanth thinks that i am a hindutvavadi, facist, hindu fundamentalist, பார்ப்பாணீய வாதி, masquerading as normal person. With this kind of vision if i look at all the dravida thamizhargal i should tell, All are Commies, maxists, funded by missionaries, etc., etc., ( it will sound disgusting is in't it? )

said...

//
தீடிரென்று புனிதராகி மாறி அறிவுரை எல்லாம் தூள் கிளப்புறீங்க.
//

நன்றி, புனிதராகும் தகுதி பொதுவுடமை இல்லையா? யார் வேணா புனிதனாகலாம்..

//
1. இஸ்ரேலியர்கள் நல்லவர்கள்

2. பி.ஜே.பி நல்லவர்கள்.

3. மேதா பட்கர் ஒரு கரிமினல்

4.கம்யூனிஸ்டுகள் கொடியவர்கள்

5.திராவிட கட்சிகள் ஒதுக்கப் படவேண்டியவை.

6.பிற்படுத்தப்பட்டவர்கள் திம்மிகள்(அப்படின்னா என்னங்க)
//

தமிழினி முத்து சார்,

1. இஸ்ரேலியர்கள் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்று நான் வாதிடவில்லை, நான் கூறியது...Out of contextல் எடுத்துக்
கொள்ளக்கூடாது...

2. Did i ever claim like that ? BJP is just another political party like congress and commies.

3. மேதா பட்கர் விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன்.

4. கம்யூனிஸ்டுகள் கொடியவர்கள் மட்டுமல்ல என்னைக் கேட்டால் பல வேளைகளில் தேசத் துரோகிகள். (இது என் கருத்து தான்)

5. திராவிடக் கட்சிகள் ஒதுக்கப் படவேண்டியவையே.

6. நனும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்தவன் தான்.? இட ஒதுக்கீடு போன்ற ஐஸ் குச்சி மிட்டாய்களுக்கு மயங்காத OBC.

3 out of 6 (50% ரைட்!!) :))

For your information திம்மிக்கள் என்றால் யார்?

//
எங்களை மாதிரி கொஞ்சம் பேர் இருப்பதால் தான் இன்னும் இந்தியாவில் கலவரம் வரவில்லை :)
//

என்னத்தெச் சொல்றது...அது வேறு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா...?

அது தான் பார்த்தோமே...செய்யுறதெ உருப்படியா செஞ்சிறுந்தா கொயம்புத்தூர்ல குண்டு வெடிச்சிறுக்குமா? இப்ப BJP ஆளுங்க கிட்ட இந்து வோட்டு polaraize ஆகிறுச்சு? அடுதது என்ன செய்யப் போறீங்க, மதானியை விடுதலை செய் என்று ஆர்பாட்டமா? (கேரள முதல்வர் ஏற்கனவே அதற்கு steps எடுத்துவருகிறார்)

கலவரம் வராம என்ன செய்யும்?

//
ரொசவசந்த்:

குழலி, அர்த்தமுள்ள கேள்விகள். நேர்மையான பதிவு.

'தெரிந்தே திருடனாய் இருப்பவர்கள் அப்பாவியாய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வார்த்தைகளை விரயம் செய்யவேண்டாம்' என்று நான் கெட்டுகொள்வது உங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கும் பரிந்துரை மட்டுமே.
//

rozavasanth thinks that i am a hindutvavadi, facist, hindu fundamentalist, பார்ப்பாணீய வாதி, masquerading as normal person. With this kind of vision if i look at all the dravida thamizhargal i should tell, All are Commies, maxists, funded by missionaries, etc., etc., ( it will sound disgusting is in't it? )

said...

//'தெரிந்தே திருடனாய் இருப்பவர்கள் அப்பாவியாய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வார்த்தைகளை விரயம் செய்யவேண்டாம்' //
நன்றி ரோசா, கடந்த சில மாதங்களாகவே கவனித்திருப்பீர்களே மாற்றத்தை.... இருந்தாலும் ஒரு சில இடங்களில் சுழலில் விழுந்து விடுகின்றேன்... கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

said...

sankar,

thanks..i think i made my point

said...

ramayanathil varum sambuganin kathai vendumanal dalit ilakiamaga parpatharku vasathiyanathu. Atharkum 1000 vilakangal undu. Aravan kathai porutha milladha ondru.

said...

குழலி அவர்களே,
அபிமன்யூ போரில் இறக்கப் போவது கிருஷ்ணனுக்கு தெரியாதா?
அபிமன்யூ வீரத்தில் சிறந்தவன். அர்ச்சுணனுக்கு நிகரானவன். கிருஷ்ணனின் பாசமுள்ள தங்கை மகன்.
அவனை கிருஷ்ணனும் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. அபிமன்யூ அரசாளவில்லை.
கர்ணனின் கேவலமான செயலால் கொல்லப்பட்டவன். உங்கள் சாதிப்பிரச்சனைக்கு அபிமன்யூவை இழுக்காதீர்கள்.
வேண்டுமென்றால், ஏகலைவனையும் துரோனரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

-பாலாஜி

said...

குழலி அண்ணா,

AIIMS director Venugopal sacked

போதுங்களா? அபிமன்யூவை களபலி கொடுத்துட்டாங்க, அரவாணன் எஸ்கேப் ஆயிட்டாரு! இது எப்படிங்க பழிவாங்காத நடவடிக்கையா? இப்ப தாழ்ந்த சாதியினர்க்கு கிடைத்த வெற்றியா கொண்டாடுங்க! என்னமோ போங்க, நாடு எங்க போகுதுனே தெரியல...

said...

வேணு என்ன தேசப்பிதாவா...அவனவன் அடிக்கற கூத்தைப் பாத்தாக்கா...தாங்கலடா சாமியோவ்...தேசப்பிதான்னு கூப்படற காந்தியையே இன்னமும் அவனவன் ரிவிட் அடிச்சிக்கினு இருக்கறான்...

ஒரு சிலர் ஆதாரம் தரக்கூடிய பதவியை பயன்படுத்தி அன்புமணி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

வேணு ஒரு ஊழல் பெருச்சாளி. சுகாதார ஊழியர்களை அவர்கள் பணியை சரி வர செய்ய விடாத ஒழுங்கீனப் பிறவி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தயவால் தலைவர் பதவியை அனுபவித்து வந்தவர். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பொழுதே வேணுவை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

காலம் கடந்த செயல் என்றாலும் அவசியம் தேவையான செயல். வேணுவை விட வேறு ஒரு சிறந்த தலைமை கிடைக்காதா என்ன?...அல்ல வேணு ஒருவர் தான் அறிவாய்ந்த மருத்துவரா?...

பேசாம வேலைய போய் பாருங்கப்பா...

said...

பொதுவாக சில நல்ல காரியங்கள் கைகூட வேண்டுமானால் சிலரை பலிகொடுத்துதான் ஆகவேண்டும். இது இந்த பதிவிற்கு பொருந்துமோ பொருந்தாதோ அது தெரியாது உண்மை தத்துவம் இது

said...

http://muthuvintamil.blogspot.com/2006/07/2_05.html

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலும் ஓய்வூதியத்திலும் கைவைத்ததை எதிர்த்து போராடியதற்கு பணிநீக்கம் செய்ததற்கும் அதற்கு சம்பளம் கொடுக்காமல்(அந்த போராட்ட நாட்களை ஊழியர்களின் விடுப்பு நாளாக எடுத்துகொண்டது) இருந்த போதும் வழக்கின் போதும் அரசாங்கத்தை ஆதரித்து ஏகப்பட்ட வியாக்கியானம் பேசிய நீதிமன்றங்கள் தற்போது அவர்களின் வேலைக்கும் தொழிலுக்கும் எந்தவித தொடர்புமில்லாத ஒரு விடயத்தில் ஆதிக்க சாதிவெறி ஏறி நடத்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உறுதி மொழியளித்த பிறகே நீதிமன்றம் மருத்துவர்களை வேலைக்கு செல்ல பணிக்கின்றது, தற்போது வேலை நிறுத்த நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படாததற்கு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டுமென்றும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என கூறிவிட்டு சம்பளம் தராமல் விட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றது, சம்பளம் தராதது நடவடிக்க அல்ல, வேலை செய்யாததற்கு சம்பளம் தரவில்லை, நடவடிக்கை என்றால் மேல் விசாரனை, பணி இடை நீக்கம், பணி நீக்கம் இவைகளே தவிர நிச்சயமாக வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் தராதது நடவடிக்கை அல்ல....

நீதிமன்றங்கள் ஆளுக்கொரு(சாதிக்கொரு) நீதியோடு செயல்படுகின்றன, இதை எழுதியதால் ரவிஸ்ரீனிவாஸ் போன்றோர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள், நீதிமன்றம் மதிப்போடு நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.

said...

//*The Centre on Tuesday offered to withdraw its controversial decision to sack All India Institute of Medical Sciences (AIIMS) Director P Venugopal*//

அரவாணன் கடுப்பயிடுவாரு போலயிருக்கு?? இந்த மாரி மாரி பல்டி அடிக்கற அசிங்கம் அன்புமணிக்கோ, மத்திய அரசுக்கோ தேவையா??