தேன்கூடு இன்றைய வலைபதிவர்

ஆகா தேன்கூடு இன்றைய வலைபதிவரில் நம்மள கண்டுக்கிட்டாங்கய்யா....



கடலூர்க்காரரான குழலி தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். நகைச்சுவை, இலக்கியம், அரசியல், திரைப்படம், சமூகம் என இவரது பதிவுகள் பலரசமானவை.ஆனாலும் தமிழ் வலைப்பூ உலகின் அறிவிக்கப்படாத பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக அறியப்படுபவர். வெகுஜன ஊடகங்கள் பா.ம.க.வை குறி வைத்து தாக்குவதாகக் கூறி, அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் கொள்கைகளை நியாயப்படுத்தி இவர் எழுதிய தொடர் பதிவுகள் ஒரு கால கட்டத்தில் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.


"கருத்து சுதந்திரம்னா உங்களுக்கு பிடிக்காதவங்களுக்கு பிடிக்காதவர்கள் என்ன சொன்னாலும் அது கருத்து சுதந்திரம்" என்ற கருத்து கொண்டிருக்கிறார்.

சேகுவாராவைப் பற்றியும் எழுதுவார், சாரு நிவேதித்தா பற்றியும் எழுதுவார். சமயத்தில் கோபமாகவும் பதிவுகள் வரும்.
ஓராண்டிற்கும் மேலாகத் தமிழ்ப் பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் குழலியின் பதிவுகள், ஒரு மிக்ஸ் பகோரா என்றே சொல்லலாம்! படிக்க:குழலி பக்கங்கள்


//"கருத்து சுதந்திரம்னா உங்களுக்கு பிடிக்காதவங்களுக்கு பிடிக்காதவர்கள் என்ன சொன்னாலும் அது கருத்து சுதந்திரம்" என்ற கருத்து கொண்டிருக்கிறார்.//

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் நம்ம அண்ணாசாமி, நம்ம பதிவினோட வலது பக்கத்தில் பாருங்க, நம்ம அண்ணாசாமியும் அப்பாவியும் பேசியிருப்பது தெரியும் :-) அது என்னமோ புடிச்சிருந்ததாலே பக்கதுல போட்டுக்கிட்டன்.

நம்மள கண்டுக்கிட்ட தேன்கூடுக்கு நன்றி....

20 பின்னூட்டங்கள்:

said...

ஏனுங்க டிவில where are they now ங்குற அட்ரசு இல்லாமபோன நடிகர்ங்க, பாட்டுக்காரங்க பத்தி போடும் புரோகிராம் பாத்ததுண்டாங்க. தேன்கூடு இன்றைய பதிவரும் அதே காட்டகரிதானுங்க

said...

//ஏனுங்க டிவில where are they now ங்குற அட்ரசு இல்லாமபோன நடிகர்ங்க, பாட்டுக்காரங்க பத்தி போடும் புரோகிராம் பாத்ததுண்டாங்க. தேன்கூடு இன்றைய பதிவரும் அதே காட்டகரிதானுங்க
//
ஹி ஹி...

said...

வாழ்த்துக்கள் நண்பரே!

said...

சூப்பரா தான் எழுதியிருக்காங்க உங்களப் பத்தி குழலி! வாழ்த்துக்கள்.

said...

//சூப்பரா தான் எழுதியிருக்காங்க உங்களப் பத்தி குழலி! வாழ்த்துக்கள்.//
ஹி ஹி நன்றி :-)

said...

வாழ்த்துக்கள் நண்பா!

//அறிவிக்கப்படாத பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக அறியப்படுபவர்//

:)))

said...

////அறிவிக்கப்படாத பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக அறியப்படுபவர்//

:)))//
பாத்துக்கிட்டே இருங்க, திடீரென மருத்துவர் இராமதாசு அடுத்த தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கப்போகிறார் :-))

said...

//மருத்துவர் இராமதாசு அடுத்த தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கப்போகிறார் :-)) //
ஆச்சர்யப்படுவதற்கில்லை. நீ போடற பிட்ட போடு. நடந்தாலும் நடக்கும் :)

said...

//மருத்துவர் இராமதாசு அடுத்த தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கப்போகிறார் //

வருங்கால அமைச்சர்!
;-)

said...

வாழ்த்துக்கள் குழலி.

said...

---வருங்கால அமைச்சர்!---

தலைவர் குழலி அவர்களே...

ஞான்ஸ் நினைப்பது அமைச்சர்தான்!
தொண்டன் நானோ, முதலமைச்சராக வாழ்த்துகிறேன் :-)

(என்னை கவனிச்சுப்பீங்க இல்லே?!)

said...

என் சக கடலூர் நண்பரே,

வாழ்த்துக்கள்,.நான் இப்போது தான் நுழைந்துள்ளேன் வலைப்பூக்களினுள்.வந்த
பிறகு தான் தெரிகிறது.,இங்கேயும் "குழாயடி''சண்டை என்று.இருந்த போதிலும் ரசிக்கிறேன்.
பிரியமுடன்,
முகு
emugu.blogspot.com

said...

//ஞான்ஸ் நினைப்பது அமைச்சர்தான்!
தொண்டன் நானோ, முதலமைச்சராக வாழ்த்துகிறேன் :-)
//
இப்படி உசுப்பி உசுப்பியேதான் ஒடம்பு ரணகளாமாயிடுச்சி....

ஹி ஹி நானென்ன சினிமாவிலா நடிக்கிறேன் முதலமைச்சர் ஆவதற்கு :-)

said...

முகு நேற்று உங்கள் வலைப்பதிவை பார்த்தேன்...

//இங்கேயும் "குழாயடி''சண்டை என்று.இருந்த போதிலும் ரசிக்கிறேன்.
//
இது குழாயடி சண்டையா? இதெல்லாம் அறிவு வெளியின் விவாதம ஹா ஹா :-)

said...

// இதெல்லாம் அறிவு வெளியின் விவாதம ஹா ஹா :-) //

இதெல்லாம் உங்களுக்கே நியாயமா தெரியலையா?

கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைவரே வேறு கட்சியை பற்றியும் அமைச்சர் ஆவதை பற்றியும் பேசலாமா? பொதுகுழு கூட்டலாமா?


( ஏற்கனவே கட்சி உறுப்பினர் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு என்று சிலர் பேச ஆரம்பித்தாயிற்று அதை பாத்துட்டு சிரிச்சு மாளலை எனக்கு:).

நியோ ஒண்ணுக்கு போவதுகூட என்னை கேட்டுத்தான் போகணுமாம். என்னை என்ன பண்ண சொல்றீங்க?:)

said...

வாழ்த்துக்கள் நண்பரே!

said...

congratulations

said...

சரி சரி... முதுகை காட்டுங்க...

வாழ்த்துக்கள் குழலி :)))

said...

வாழ்த்துக்கள் குழலி

said...

அனைவருக்கும் நன்றி

//வாழ்த்துகள் .உமது எழுத்துக்களின் ரசிகன்(உமக்கும் தான் :)

அன்புடன்
சிங்கை நாதன்.
//
நண்பரே குண்டுசட்டியில் குதிரை ஓட்டியவனை (ஒரு சிறிய வட்டத்தில் படைப்புகளை பங்கிட்டுகொண்டிருந்தவனை) வலைப்பதிவு, தமிழ்மணம் என்ற மாபெரும் வெளியை அறிமுகப்படுத்தியவரே நீர்தானே, இந்த சமயத்தில் உமக்கு நன்றி கூறுகின்றேன்...