மன்னித்துவிடு என்னை!



என்ன மயிருக்கு
வந்தாய் இங்கே?

உயிர் பிழைக்கவா?
பிழைப்பததெற்கு
திறந்தவெளி கழிப்பிடத்திற்கும்
திறந்தவெளி சிறைக்குமா?

பேருந்தில் பெண்களை
கருக்கியவனும்
பெஸ்ட் பேக்கரியை
எரித்தவனும்
பெயிலில் சுதந்திரமாய்
சுற்றி வர
ஆறுமணி ரோல்காலுக்கு
ஆஜராக வேண்டிய
கண்டிஷன் பெயிலுக்கா
கடல் தாண்டி
வந்தாய்?

தொப்புள்கொடி உறவா?
அட பைத்தியமே...
சகோதரனை அனுப்பி
கற்பழிக்க செய்தவனிடம்
என்ன மயிரை
எதிர்பார்க்கிறாய்?

தார்மீக ஆதரவுமா?
சனியனே நான்
தேசதுரோகி பட்டம்
வாங்க வேண்டுமா!

சாய்ந்து கொள்ள தோளும்
ஆதரவு குரலும் தேடி
மானத்தோடு வாழ
பக்கத்திடம் பங்காளியிடமென
படகேறி வராமல்
உன் உயிர்போனாலும்
உன் தன்மானமாவது
மிஞ்சும் எனக்கும் குற்ற
உணர்ச்சி இருக்காது

நீ செத்துப் போனால்
உனக்காக ஒரு துளி
கண்ணீர் சிந்துவேன்
அதுவும் கூட
இரகசியமாக!

மன்னித்து விடு
என்னை!



நன்றி
தினமலர்

தமிழகத்துக்கு இலங்கை தமிழ் அகதிகள் வருகை

39 பின்னூட்டங்கள்:

said...

நீங்கள் சொன்ன எல்லா குற்றசாட்டுகளுக்குப் பின்னும் இங்கே வருகிறார்கள் என்றால் ஏதோ ஒரு பாதுகாப்பு இருப்பதினால் தானே???

said...

சொல்லக்கூசும் கையாலாகாதனத்தின் எரிச்சலை நன்கு பதிந்துள்ளீர்கள்

said...

எனது தார்மீக ஆதரவும் இங்கே.

said...

தமிழகத்தில் 1980களில் இருந்த எழுச்சி மீண்டும் ஏற்பட்டால் உலக நாடுகள் புலிகளின் மீது உரசிப்பார்க்க கொஞ்சம் தயங்குவார்கள். அதனை முன்னெடுத்துச் செல்ல யாரும் இல்லயே.

புலிகளை ஆதரிக்கவில்லையென்றாலும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம், கடையடைப்பு தமிழக அரசு நடத்தலாம்.

புலிகள் தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் இலக்கை அடைவது சிரமமானதே.

சோற்றால் அடைத்த பிண்டம் டில்லியில் பதவி வாங்குவதில் காட்டும் வேகம் தமிழன் கொல்லப்படுவதைக் கண்டிப்பதில் காட்டுவதில்லை.

நேற்று கொழுவி அவர்களின் பதிவில் கொன்று தூக்கிலிடப்பட்ட குழந்தைகளைப் பார்த்த பின்னும் அமைதியாக இருக்க முடியவில்லை.

இங்கு திட்டமிட்டு இலங்கைத் தமிழர்களை மறக்க வைக்கும் முயற்சி ஆங்கில ஊடகங்களால் நடக்கிறது. ஹிந்து என்ற ஆங்கில ஊடகம் அதில் முன்னிலையில் இருக்கிறது. அதற்கு இந்திய அரசு, இலங்கை அரசு என்ற இரு முனைகளில் இருந்து ஆதரவும் பணமும் கிடைக்கிறது.

விடுதலைப் புலிகளை ஆதரிக்காமல், இலங்கைத் தமிழர்களை ஆதரித்து கொழுவி அவர்கள் பதிவில் போட்ட படங்களை நம் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டால் தமிழக கிராமங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இவைகளை யார் முன்னெடுதுச் செய்வது?

தமிழனின் போராட்ட குணம் குறைந்து விட்டது உண்மைதான்.

said...

//நீ செத்துப் போனால்
உனக்காக ஒரு துளி
கண்ணீர் சிந்துவேன்
அதுவும் கூட
இரகசியமாக!
//

என்ன சொல்ல! வார்த்தைகள் இல்லை.

said...

இங்கே தேவைப்படுவது கழிவிரக்கமா, போர்குணமா?

தங்களது கவிதை மிகவும் வசதியாக கழிவிரக்கத்தில் அடைக்கலம் புகுந்து, குற்றவுணர்வை சொறிந்து விடுவதாக, மிகவும் அருவெறுப்பாக உணர்கிறேன்.

வார்த்தைகள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும்.
எனது கருத்துக்களில் தவறுகள் இருந்தால் திருத்தவும்.

இங்கு ராஜீவ் மரணத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கிய கழகத்தின்- மருதையன் எழுதிய உரைவீச்சை நியாபகப்படுத்த விரும்புகிறேன்.

அதில், தமிழகத்தின் அமைதியை(அமைதிப் பூங்கா என்று பெயர் பெற்றதல்லவா நமது மண்) தீக்கொழுத்த ஒரு நெருப்போறி வேண்டும் என்று கேட்டு முடித்திருப்பார்.

அது போன்ற சூழ்நிலைக்கு தேவையான உணர்வை தூண்டும் கவிதைகள்தான் நன்றாக இருக்கும்.

மற்றவை இழவு வீட்டில் இன்னிசை கச்சேரியாக, மிக அபத்தமாக அருவெறுப்பாக இருக்கும்.

விமர்சனத்தின் நோக்கம் நட்பு முரன்பாடுதானன்றி வேறல்ல. சம தளத்தில் நின்று பரிசீலிக்கவும்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//இங்கே தேவைப்படுவது கழிவிரக்கமா, போர்குணமா?
//
ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத ஒரு இந்திய தமிழனின்(?!) புலம்பல் தான் இந்த பதிவு...

said...

குழலி,
எம்மினத்தின் தலைவிதியை என்னவென்று சொல்வது?!.

said...

ஆஹா அருமையான பதிஉ.தொடர வாழ்த்துக்கள்

said...

What happened to PMK and Ramadoss.
What happend to DMK and Karunanidhi.Why are they so silent
and not even willing to issue a
press statement condemning this.You should think about this first.

said...

காசிருந்தால் கனடா போயிருப்பான்,
கள்ள தோணியில்,
எங்கே போகமுடியும்,தமிழ் நாட்டை தவிர;

அங்கே பிணமாவதை விட
நம் மண்ணில் நடைப்பிணமாவதையே
விரும்புகிறார்கள் போலிருக்கிறது.

காலம் மாறலாம்,அவர் மண்ணில்
அகதிகளாய் நாம்.

கண்ணீருடன்,
முகு

said...

மக்கள் அநேகருக்கு மனதிலும் ஈழமக்களுக்கான ஆதரவு இருக்க செய்தாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது வாய் விட்டு பேச அது நம் இயலாமையா?இல்லை பயமா?எனத் தெரியவில்லை சமீபத்தில் ஊருக்குப் போகும்போது "Inside an Elusive Mind - by MRNarayan Swamy" படிப்பதற்காக எடுத்துச் சென்றிருந்தேன்.அப்பா பார்த்துவிட்டு பதறிவிட்டார்.இதெல்லாம் படிக்காதே படித்தாலும் பப்ளிக்கா பேசாதே என்கிறார்.என்ன செய்ய :(

/*நீ செத்துப் போனால்
உனக்காக ஒரு துளி
கண்ணீர் சிந்துவேன்
அதுவும் கூட
இரகசியமாக!*/

இயலாமையின் உட்சகட்டம் என்ன செய்ய வருத்தமாய் இருக்கிறது :(

said...

Kuzhali,

I am afraid, you forgot one clear distinction between us and them. They are tamil speaking srilankans and we are tamil speaking Indians.

Our constitution provides security blanket for Indians not for srilankans. If you want to confuse nationality based on secular priniciples with linguistic (read opportunistic) nationality like Dr. Ramadoss, it is your prerogarative.

Do not blame tax paying Indians for not taking care of srilankans. They do no have to. We can accomodate them as long they are not nuisances.

I sympathasize with srilankan tamils for their cause. However, I do not think it is India's problem. It is their internal problem, they should take care of themselves

We argue against pakistan supporting the so called "freedom fight" by the mujahideens in kashmir. So, why should we do the same?

Now, before you accuse me of aryan/brahmin theory, I am BC and an atheist!!!(not the periyar type, but the genuine one).

Vignesh

said...

//Now, before you accuse me of aryan/brahmin theory,
//
ம்.... புரிகிறது என்ன மாதிரியான ஒரு படிமம் என் மீது வந்துள்ளது அல்லது இப்படியான ஒரு படிமம் என் மீது உருவாக்கப்பட்டுள்ளது என்பது....

said...

இந்தப் பதிவைப் படித்தபிறகு சொல்லமுடியாத சோகம்.

பாவம் எங்கள் தமிழினம்!

said...

Vignesh,

/We argue against pakistan supporting the so called "freedom fight" by the mujahideens in kashmir. So, why should we do the same?//

Do not compare Kashmir with Srilanka. Please check the facts first.

A section of Indian Tamils are still expecting the Indian government to help the tamils in Srilanka. Why? To me it is very simple, they are tamils. I feel that we share the same culture/tradition.

If India can send the army to support E.Pakistan & help Mujibur, If India can support Srilanka in thier fight against JVP, If India can support tiny islands in Indian Ocean against coup attempts - why not they support the tamils in srilanka??

Atleast the Indian govt can issue a stern warning to the srilankan govt.

said...

This is in reply to comments from Vignesh,

Sri Lankan Tamils are NOT asking for protection from India.
They have their own protectors, the LTTE.
What we are asking for is to recognise the legitimate liberation struggle of the Tamils in Tamil eelam and recognise our right to protect our selves.

Even though India is publicly silent, it is silently providing financial and technical assistance to the Sri Lankan government. Its intelligence agency RAW is arming and controlling paramilitary out fits in the south Tamil Eelam.

All what we ask is recognise our legitimate struggle as you have done in Palestine, Bangkladesh and South Africa, and provide recognition based on humanitarian considerations as a minimum.

said...

//Now, before you accuse me of aryan/brahmin theory, I am BC and an atheist!!!(not the periyar type, but the genuine one).

Vignesh //

This shows your real colours mate.

said...

உள்ளேன் அய்யா...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள்..

said...

Arunmoli said

" A section of Indian Tamils are still expecting the Indian government to help the tamils in Srilanka. Why? To me it is very simple, they are tamils. I feel that we share the same culture/tradition"

Thats counterproductive argument. The same kashmiri muslims (a small number) are also expecting the pakistani govt to liberate them from Indian govt's atrocities!!!

"If India can send the army to support E.Pakistan & help Mujibur, If India can support Srilanka in thier fight against JVP, If India can support tiny islands in Indian Ocean against coup attempts - why not they support the tamils in srilanka??"

Indian govt is not obligated and should not support any struggle anywhere in the world. The only reason we support the Mujibur rehman in Bangladesh is for our national security. To deal with our enemy on both sides of the country was unacceptable (no other country has such trouble).

Also, the Indian govt should do business with other govts not with ragtag armed groups in other countries. Indian govt should always put its citizens and its country's progress far ahead of anyother issue.

Thats why we should not support the LTTE, Palestinian liberation army and so on an so forth. India has 100 crores people with different ethnic and linguistic groups. If everyone wants to support political movements around the world based on their identitites, our country will dissappear in less than a year.

This explains why India supported srilankan govt and not the JVP. Any vicotry in terms of separate nation for srilankan tamils will give false ideas for the dravidian separatists movement in TN.

As an Indian, I believe in our "Unity in Diversity" motto of our country. For a small fraction of Indian tamils, having a separate country that includes elam ann TN is a dream. As Indians, we should thwart those nightmarish dream.

VIgnesh

said...

Anon said....

"This shows your real colours mate"

Mate! The dravadian separatists ideologists always use caste/aryan theory to counter argue anyone who disagrees with them.

I had to mention those things as a preemptive strike from Kuzhali.

I hope he does not take it personal. Not all the dravidians beleive in LTTE. Atleast not me.

Vignesh

said...

//Any vicotry in terms of separate nation for srilankan tamils will give false ideas for the dravidian separatists movement in TN.
//
பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது...

said...

விடுதலை சிறுத்தை சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார் மற்றும் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் மூலமாக சிறு ஆறுதல் மேலதிகவிவரம் மணிக்கூண்டு சிவா பதிவில்

said...

Vignesh,

Why are you getting confused with LTTE & Srilankan tamils?. Do you think all the tamils are LTTE?

//Indian govt is not obligated and should not support any struggle anywhere in the world. The only reason we support the Mujibur rehman in Bangladesh is for our national security.//

Then why did the govt supported PLA & Africans in Southafrica?. At that time PLA was a ragtag armed group. Also a section of africans were engaged in armed struggle with the Govt.

Why did the govt made lot of noise when the indian descendants were attacked in Fiji. Is Fiji also our neighbour?

National security!!! Where is it now. Why the BSF men are losing their lives everyday in the bangladesh border?

//Any vicotry in terms of separate nation for srilankan tamils will give false ideas for the dravidian separatists movement in TN.//

You have made it very clear why you are opposing the srilankan tamils.

said...

விக்கினேசு,
அப்ப என்னத்துக்கப்பு 80 களில சும்மா கிடந்தவங்கள கூப்பிட்டு வச்சு ஆயுதங்களும் பயிற்சியும் குடுத்து உருவேத்தி விட்டீக? அந்த ஆயுதங்கள வச்சு காக்கா, குருவி, கொக்கு சுட்டு வெளையாடவா? ஒங்களுக்குக் கூலிப்படையா இருக்கச் சொல்லித் தானே?
தங்களுக்குள்ள சண்டை பிடிச்சுச் சாகிறதுக்குத் தானே?
அல்லது உண்மையிலயே தனிநாடு அடையிறதுக்குத்தானா?
எதையாவது சொல்லுங்கப்பு, அப்புறம் மேற்கொண்டு பேசலாம்.

அதென்னது? ஜேவிபி வேற சிறிலங்கா அரசாங்கம் வேறயுன்னு புதுசா ஒரு கதை விடுறீக?

தமிழங்களை அழிக்கிறதுக்கு இந்தியா உதவி செய்யிறத ஒத்துக்கிறீங்களா? அதைச் செய்யிறது தன்னோட பாதுகாப்புக்குத்தான் அப்பிடீன்னு சொல்ல வாறீகளா?
அப்படீனாலும், ஈழத்தமிழர்களின் அழிவுதான் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அப்படீன்னு வெளிப்படையா சொல்லிறதுதானே? பிறகென்னதுக்கு சுத்திவளைப்பு?

ஒங்களப் போல தேசியவாதிகளால 80 களில போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்ததையும் எதிர்கொள்ள முடியாது. இப்போது ஈழத்தமிழர் அழிவுக்கு இந்தியா துணைபோவதையும் எதிர்கொள்ள முடியாது. முடிஞ்சா தெளிவா பதில் தாங்கப்பு அப்புறம் வந்து கேக்கிறேன் மிச்ச கேள்விகள.

said...

இந்தக் கவிதையின் வீச்சு செல்ல வேண்டியவர்களைச் சென்றடைந்தால் சரி தான். அற்புதமாகத் தீட்டியிருக்கிறார் தமிழகத் தமிழனின் இயலாமையை. தினமலர் பத்திரிகை இதை வெளியிட்டதற்காக அதற்கும் பாராட்டுக்கள். தொடர்க உங்கள் பணி. ஊடகங்களே மக்களை விசயங்களை அறிய வைக்க வேண்டும்.

இந்த விக்னேஷ் போன்றோரைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவர்கள் அப்படித் தான். இந்து பத்திரிகை, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே ஆதரிக்காத ஒன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களை விடுங்கள். அவர்கள் அப்படித் தான்.

said...

மன்னிக்க வேண்டுகிறேன்.
அவசரப் பட்டு இது தினமலரில் வந்த கவிதை என்று நினைத்துப் பாராட்டி விட்டேன். குழலி உங்களுக்குப் பாராட்டுக்கள்.

தினமலர், அபத்தமாக, ஒரு கருத்தையும் சேர்த்து எழுதியுள்ளது.
// பெணகளையும் சிறுவர்களையும் சேர்த்துச் சண்டைக்குத் தயாராகின்றார்கள் //
என்று. பரவாயில்லை, செய்தியையாவது வெளியிட்டார்களே. வங்காலை, அல்லைப்பிட்டி படங்கலையும் வெளியிட்டால், தமிழகம் கொதிக்கும் என்று தணிக்கை செய்து விட்டார்களோ.

said...

"தமிழங்களை அழிக்கிறதுக்கு இந்தியா உதவி செய்யிறத ஒத்துக்கிறீங்களா? அதைச் செய்யிறது தன்னோட பாதுகாப்புக்குத்தான் அப்பிடீன்னு சொல்ல வாறீகளா?
அப்படீனாலும், ஈழத்தமிழர்களின் அழிவுதான் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அப்படீன்னு வெளிப்படையா சொல்லிறதுதானே? பிறகென்னதுக்கு சுத்திவளைப்பு?"


This is an argument designed to digress the issue at hand. No one with his right mind will say that srilankan tamils should be killed for India's security. When LTTE and its anti democratic attitudes turned against India, We need to put a full stop for any kind of support for those groups.

I said, we should always empathasize and extend moral support for srilankan tamils for their just cause demanding equal rights and dignified existence. But at no point we should encourage them to take up arms. After all it was Gandhi's non-violent struggle that got us freedom and not subasch chandra bose's tactics.

"Then why did the govt supported PLA & Africans in Southafrica?. At that time PLA was a ragtag armed group. Also a section of africans were engaged in armed struggle with the Govt.
Why did the govt made lot of noise when the indian descendants were attacked in Fiji. Is Fiji also our neighbour?"

It was all wrong, thats why India paid a price in terms of economy and its national growth. We should not have sided with anyone including the USSR.

"அப்ப என்னத்துக்கப்பு 80 களில சும்மா கிடந்தவங்கள கூப்பிட்டு வச்சு ஆயுதங்களும் பயிற்சியும் குடுத்து உருவேத்தி விட்டீக? அந்த ஆயுதங்கள வச்சு காக்கா, குருவி, கொக்கு சுட்டு வெளையாடவா? ஒங்களுக்குக் கூலிப்படையா இருக்கச் சொல்லித் தானே?
தங்களுக்குள்ள சண்டை பிடிச்சுச் சாகிறதுக்குத் தானே?
அல்லது உண்மையிலயே தனிநாடு அடையிறதுக்குத்தானா?"

And we paid a heavy price with the life of our national leader. I hope we do not make such mistakes in future.

"அதென்னது? ஜேவிபி வேற சிறிலங்கா அரசாங்கம் வேறயுன்னு புதுசா ஒரு கதை விடுறீக?"

I apologize for the random typing.

"பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது... "

I am always an Indian. My patriotism is undiluted and unpretentious.

Vignesh

said...

உணர்வுகள் வார்த்தைகளில் வடிந்துள்ளன.

நன்றி சகோதரர் குழலி அவர்களே.

said...

குழலி,
இன்று தான் படித்தேன். படித்து முடித்தவுடன் சத்தியமாக சொல்கின்றேன் செருப்பால அடித்த மாதிரி இருந்தது. ஏன்? என்ற கேள்வி மேல் ஒங்கி நிற்கின்றது.

திரு. விக்னேஷ், நீங்கள் இங்கு வாதம் பண்ணவில்லை. விதாண்டவாதம் செய்து கொண்டு இருக்கின்றீர்க்கள்.

//we paid a heavy price with the life of our national leader//
இது துயர சம்பவம் நடந்தற்கு, உண்மையான காரணம் உங்களுக்கு தெரியாதா?

//சகோதரனை அனுப்பி
கற்பழிக்க செய்தவனிடம்
என்ன மயிரை
எதிர்பார்க்கிறாய்?//

//After all it was Gandhi's non-violent struggle that got us freedom and not subasch chandra bose's tactics.//

தயவு செய்து நிறுத்தவும். உண்மையை திரித்து கூறாதீர்க்கள். நீங்கள் அமைதியின் மூலம் பெற்ற சுகந்திரத்தை நம் சகோரதர்க்கள் ரத்தத்தின் மேல் நின்று தானே அனுபவித்தீர்க்கள்.
தயவு செய்து திரு. போஸ் அவர்க்களை பற்றி எதுவும் கூற வேண்டாம்.

said...

அய்யா குழலி,

நீங்க என்ன தான் சொல்ல வரீங்க. கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்க ப்ளீஸ். என்ன தான் வேண்டும் உங்களுக்கு???

Pseudo-அரசியல்வாதிகள் மற்றும் Pseudo-போராளிகளால் ஏற்பட்ட நிலமைதான் இது, என்பதே அப்பட்டமான உண்மை. அந்த Pseudo-அரசியல்வாதிகளில் ஒரு தலைவனை ஆதரிக்கும் கூட்டத்தின் ஒரு குட்டித் தலைவன் நீர் என்பதை மறந்தீரோ! கண்ணீர் விடுகிறீரே! இது உண்மையான கண்ணீரா அல்லது அந்த அரசியல்வாதிகளின் நீலி கண்ணீரா?

கவிதை எழுதி நீலி கண்ணீர் விட்டு பத்திரிக்கையில் அச்சிட்டு பாராட்டு வாங்கி, அமைதியாய் இருக்கும் அரசியல்வாதிபோல் ஆக வேண்டாம் என்பது என் ஆசை!!!

//*நீ செத்துப் போனால்
உனக்காக ஒரு துளி
கண்ணீர் சிந்துவேன்
அதுவும் கூட
இரகசியமாக!*//

இதுலயும் உங்க தலைவர் பாலிஸிதானா? மனதலவில் ஆதரவு, வெளியே சொல்ல பயம், அவருக்காவது தன் மகன் பதவி போய்விடுமோ என்று பயம். உமக்கு என்ன? யாரவது மத்திய மந்திரியாக உள்ளானா?

இந்த(குழலி) தமிழனுக்கு புலம்பலைத்தவிற வேற ஒன்றும் தெரியாத???

said...

வாங்க ஜெய்... எப்படி இருக்கிங்க... உங்கள் வலைப்பதிவு பார்த்தேன், நன்றாக எழுதியுள்ளீர்.... அப்புறம் இந்த பதிவை ஒரு குழலி என்ற பிம்பம் எழுதியதாக கருதாமல் யாரோ ஒரு அனானி எழுதியதா கருதி படிங்க.... அதன் பிறகும் இப்படி கேள்வி எழுந்தால் சொல்லுங்கள்....

நன்றி

said...

தல,

உங்கள் கருத்துக்கு என் ஆதரவு உண்டு. என் ஆதங்கம் உங்கள் மேல் அல்ல நீங்க ஆதரிக்கும் கட்சிமேல் தான் ஆதங்கம்.

//* இந்த பதிவை ஒரு குழலி என்ற பிம்பம் எழுதியதாக கருதாமல் யாரோ ஒரு அனானி எழுதியதா கருதி படிங்க.... *//

ஒரு பத்து தடவ படிச்சு படிச்சு பார்த்தேன்... அவன் அனானி அல்ல குழலி தான் என்று அடித்து அடித்து சொல்லுதுங்க உங்க கவிதை

//* பேருந்தில் பெண்களை
கருக்கியவனும்
பெஸ்ட் பேக்கரியை
எரித்தவனும்*//

அது எப்படி தல இந்த ரெண்டு மேட்டர் மட்டும் செலக்ட் செஞ்சிங்க! இதுலயே உங்க சாயல் வருதே!

said...

//நீங்க ஆதரிக்கும் கட்சிமேல் தான் ஆதங்கம்.
//
எந்த கட்சிங்க பாமகவா? விசி யா? இவை இரண்டுக்கும் அடுத்த படியாக ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்களா? திமுக வா? தமிழக நலன் என்று வந்தால் மாநில கட்சியாக நான் ஆதரிக்கும் அதிமுகவா? இந்திய தேச அளவில் ஆதரிக்கும் காங்கிரசா சில ஆண்டுகளுக்கு முன்(தற்போதல்ல) கொ.ப.செ அளவிற்கு நான் ஆதரித்த பா.ஜ.க, சங்பரிவாரங்களா?

பாமக, விசிகள் சாதிக்கட்சி என்று அடையாளப்படுத்தப்பட்டதால் அதை ஆதரிப்பது தவறு என்று நீங்கள் கருதினால் அதற்கான காரணங்களை அரசியலில் சாதி - குழப்பமும் உரத்த சிந்தனையும்
என்ற என்பதிவில் எழுதிக்கொண்டுள்ளேன், இன்னும் ஓரிரு பாகங்கள் வரும், அது முடிந்த உடனோ அல்லது அந்த பதிவுகளிலோ விரிவாக பேசலாம்.

said...

ஈழம் அகதிகளுக்கு 50,000 வீடுகள் கட்டி தர தமிழக அமைச்சர்கள் பரிந்துரை

http://thatstamil.oneindia.in/news/2006/06/21/refugee.html

said...

////* பேருந்தில் பெண்களை
கருக்கியவனும்
பெஸ்ட் பேக்கரியை
எரித்தவனும்*//

அது எப்படி தல இந்த ரெண்டு மேட்டர் மட்டும் செலக்ட் செஞ்சிங்க! இதுலயே உங்க சாயல் வருதே!
//
இதுவரையான என் வாழ் நாளில் இதைவிட கொடுமையான அரசியல் காரணமான சமூக கொடூரத்தில் முதலிரண்டு இடங்களை பிடிக்கின்றன, வேறு ஏதேனும் இதைவிட கொடுமையான அரசியல் சமூக நிகழ்வை சொல்லுங்கள்(இதற்காக மற்ற கொடுமைகள் கொடுமைகள் அல்ல என்று அர்த்தமல்ல, உயிரோடு கொளுத்துவது அதுவும் எந்த தொடர்புமில்லாமல் எதற்காக கொளுத்தப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் சாவது மிகப்பெரிய கொடூரம், இதற்கு அதிமுக,பாஜக என்று கட்சி சாயம் கொடூரத்தின் வீரியத்தை குறைத்துவிடும்)

said...

பகலிலேயே காணாமல் போகும் தமிழ் பெண்கள்

http://www.dinamalar.com/2006june27/events_tn1.asp

said...

http://www.dinakaran.com/epaper/2006/jun/29/16_3.jpg