எடுக்கவா? கோர்க்கவா? துரியோதணன்-கர்ணன் நட்பு

எடுக்கவா? கோர்க்கவா? துரியோதணன்-கர்ணன் நட்பு

நட்புக்கு ஒரு வசதி உண்டு, உறவுகளை போல அல்ல அது, அடித்தாலும் பிடித்தாலும் சாகும் வரை உறவு என்பது மாறாது ஆனால் நட்பு என்பது எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட்டுவிடலாம். அவ்வளவு பலவீனமானது தான் நட்பு. ஆனால் அந்த நட்பு என்பது நம்பிக்கை என்ற பலமான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அந்த நட்பு உறவுகளையும் விட பலமான வலிமையான உறவாகிறது.

துரியோதனன் கர்ணன் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம், அவை தம் குடும்பத்து பெண்கள் மற்றும் சாவு. துரியோதணனின் மனைவிக்கும் கர்ணனுக்கும் இருந்த தோழமையை துரியோதணன் நம்பி தனது வீட்டு பெண்டிர்களை நம்பி கர்ணனுடன் பழக அனுமதித்தது.

ஒரு முறை கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தான், அப்போது துரியோதனனின் மனைவி தோற்றுப்போனதால் ஆட்டத்தை களைத்துவிட்டு எழுந்து ஓட அப்போது கர்ணன் அவரை பிடித்து இழுக்க முயன்ற போது அவரின் முத்தாரம் அறுந்து விழுந்தது, அப்போது திடீரென உள்ளே நுழைந்த துரியோதணன் கர்ணனிடம் கேட்டான் எடுக்கவா? கோர்க்கவா? என்று. அறுந்துவிழுந்த மணிமுத்தை நீ எடுக்க நான் கோக்கவா? அல்லது நான் எடுக்க நீ கோர்க்கிறியா என்றான். அது தான் துரியோதணன் கர்ணன் மீது வைத்திருந்த நம்பிக்கை.

இரண்டாவது துரியோதணனுடன் சென்றால் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும் கர்ணன் தொடர்ந்து துரியோதணனுடனே இருந்து உயிர்விட்டது. துரியோதணனுடன் இருந்தால் மரணமும் நிச்சயமும் சொர்க்கமும் கிடையாது என்று அறிந்தே பலரும் யுத்தத்திற்கு முன்பே வெளியேறியானர்கள், சில பெரியவர்கள் போர் செய்யாமல் வில்லை முறித்து போட்டுவிட்டு ஒதுங்கினார்கள், ஆனால் கர்ணன் மட்டுமே கடைசி வரை இருந்தான். இத்தனைக்கும் கர்ணனின் தாய் குந்தி தேவி உட்பட பலரும் கர்ணனிடம் துரியோதணனை விட்டு விலக கோரினார்கள், அவனுடன் இருந்தால் சாவு நிச்சயம் என்று சொல்லியும் துரியோதணனை விட்டு கர்ணன் விலகவில்லை.

எனவே தான் துரியோதணன் கர்ணன் நட்பு வேறெந்த நட்பையும் விட சிறந்ததாக உள்ளது. இப்போது சுப்பிரமணியபுரம் காலம் பாருங்க, குத்தனவன் நண்பனா இருந்தா சத்தம் கூட போடக்கூடாது என்று வசனம் பேசுகிறோம்.

பிள்ளையார் வேற்றுகிரகவாசியா?

ஏன்சியன்ட் ஏலியன்ஸ் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு, கேட்க கேட்க சுவாரசியமாக இருக்கும் ஒன்று, இது குறித்து ஹிஸ்டரி சேனல் பல டாக்குமெண்ட்ரிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் பிள்ளையார் ஒரு வேற்று கிரகவாசியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்கள். இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள முகமூடிகள் அமெரிக்க ஜெட் பைலட்டுகள் சுவாசிப்பதற்கு ஏற்ப அணிந்துள்ள ஆக்சிஜன் மாஸ்க்குகள், பிள்ளையாரின் தும்பிக்கை என்பது வேற்றுகிரகவாசி சுவாசிப்பதற்கு ஏற்ற ஒரு குழாயாக‌ இருந்திருக்கலாம், குழாய் முகமூடி அணிந்து வேற்றுகிரகவாசி இவ்வுலகிற்குள் வந்திருக்கலாம், அதைகண்ட இந்திய மக்கள் அது குறித்து புரியாமல் இந்தியாவில் இருந்த யானையுடன் ஒப்பிட்டு  அவர்களை யானை முகம் கொண்ட கடவுளாக ஆக்கியிருக்கலாம்.

இந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ள பிள்ளையார் சிலைகள் அல்லது அது போன்ற முக அமைப்புடைய யட்சன் சிலைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன, எனவே இந்த யட்சன், பிள்ளையார் எல்லாம் வேற்றுகிரகவாசி பைலட்டுகளாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உண்மையோ பொய்யோ கேட்கவும் யோசிக்கவும் நம்பும்படியாகவுமாக சுவாரசியமாக உள்ளதல்லவா!

யட்சினி - 6

யட்சினி - 6
------------------
கெஞ்சி மிஞ்சி
பணித்து விட்டோம்
என‌ ஆணவத்தோடு பார்க்காதே
பாவம் பார்த்து விட்டது தான்
உன்னை துவள வைக்க
ஒரு “க்கும்” போதும் எனக்கு ‪

#‎யட்சினி_கவிதை‬

யட்சினி - 5


வீட்டுக்கு பின்னால் கொட்டாயில்
எரவாணத்தில் சொறுகி இருந்த
கோலிக்குண்டு பையை எடுக்க போன போது
சாந்தி அக்கா ஆறுமுகம் அண்ணனை
கட்டி தழுவிக்கொண்டிருந்தார்
நின்று பார்த்த போது,
சாந்தி அக்கா புருவத்தை உயர்த்தி
கண்ணாலே கேட்டார்
"என்ன"?
பார்வையை தாழ்த்தி
கொட்டாயிலிருந்து வெளியேறினேன்
எதுவுமே தெரியாமல் வேலையில்
மும்முரமாயிருந்தார் ஆறுமுகம் அண்ணன்

செந்தோசா தீவில் மீண்டும் பார்த்தேன்
தயங்கி நின்று அவர்களை பார்த்தேன்

இப்போதும் சாந்தி அக்கா தான் புருவத்தை உயர்த்தி
கண்ணாலே கேட்டார்
"என்ன?"
வாடா அந்த பக்கம் போய் விளையாடலாம்
என்று பையனை கூப்பிட்டுக்கொண்டு போய்விட்டேன்

யட்சினி - 4


யட்சினி
-----------
காமக்கடும் புயல் வீசி
கொதித்த அந்த இரவு
குழலியா? குந்தவியா?
யாராய் இருந்தல் என்ன?
பிழைத்து போகட்டும் என்று
அன்று அவள் விட்டதால்
தான் பிழைத்து கிடக்கிறேன் இன்று!

சே குவேராவின் பிறந்த நாள்


சே குவேராவின் பிறந்த நாள்.

காந்தியாகினும், ஃபிடல் காஸ்ட்ரேவாகினும், ஹிட்லர் ஆனாலும் உலகின் மாபெரும் தலைவர்கள், போராளிகள் யாராகினும் அவர்கள் மக்களுக்காக, நாட்டுக்காக மட்டும் தான் போராடியுள்ளார்கள், ஆனால் நாடு கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து போராடிய ஒரே போராளி  சே குவேரா தான்.

மோட்டார் சைக்கிளின் டைரி குறிப்புகள் என்ற ஒரு நூல் சே வை உணரச்செய்தது, அதை படிக்கும் ஒவ்வொருவனும் தானும் போராளி ஆக வேண்டும் என்று ஒரு நிமிடமாவது நினைப்பான். மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டும் போராடியவர் இவர், நோய்கள் போராளிகளின் போராட்டத்தை தடை செய்யாது என்று நிரூபித்தவர்

இந்த படம் எடுக்கப்பட்டது பாலித்தீவில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் நின்வாக எழுப்பட்ட நினைவிடத்தின் முன்பு.

தமிழ்நாட்டில் சீமான் வேறு இவர் படத்தை பனியனில் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார், அதனால் சே குவேரா தமிழ்நாட்டில் என்ன கதி ஆனாரோ என கொஞ்சம் பயமாக உள்ளது


டிமாண்டி காலனி படத்தின் கதை என் வலைப்பதிவில் இருந்து சுட்டது


கடந்த 2 மாதங்களாக கடுமையான வேலை, புதியதொரு சிஸ்டம் என் கீழ் வந்துள்ளதால் அந்த வேலையில் மூழ்கி இருந்ததால் ஃபேஸ்புக்கில் அவ்வளவாக எதுவும் எழுதவில்லை, இந்த நேரத்தில் ஆஸ்த்திரேலியாவில் இருக்கும் சத்யா சிங்கப்பூர் வந்திருந்தார், அவரோடு டீமாண்டி காலனி படம் பார்க்க சென்றிருந்தேன்.

படத்தின் மொத்தமுமே ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் முடிச்சில் தான் இருந்தது, ங்கொய்யால அந்த சஸ்பென்ஸ் முடிச்சி உடையும் போது தான் தெரிந்தது ஆகா நம்ம கிட்ட இருந்து தான் சுட்டிருக்கிறார்கள் என்று.

அருள்நிதி உடன் கூட இருக்கும் ஒரு நண்பர் ஏற்கனவே இறந்து போனவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டவர் என்பது நாடி ஜோதிடம் பார்க்க போன ஜோசியர் மூலமாக தெரியும், இது தான் படத்தின் சஸ்பென்ஸ் அதுவும் படத்தின் ஒரே சஸ்பென்ஸ்சும் இது தான். இதை தான் ஆவிகளின் புரிதல் (எ) ஷியங் - என்று 2005ம் ஆண்டில் நான் எழுதியிருந்தேன். டீமாண்டி காலனி படத்தை பார்த்தவர்கள் இந்த லிங்கை ஒரு முறை படித்து பாருங்கள், படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் காட்சியே இது தான், இதன் மேல் தான் மொத்த படத்தின் கதையும் உள்ளது.

வலைப்பதிவுகளின் வெளியான கதையை சுட்டு அதனை டெவலப் செய்து படம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல, மிகப்பிரபலமாக ஓடிய மைனா படத்தின் மொத்த படத்தின் அடிப்படையே கற்பகம் என்ற வலைப்பதிவர் எழுதிய கதையில் இருந்து தான் சுடப்பட்டது.

படம் குறித்து சொல்வதென்றால்,  மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம், நல்ல நடிப்பு ஒரு முறை பார்க்கலாம்.

ஒன்றரை கோடிக்கு பட்ஜெட்  என்று சொல்லி தயாரிப்பாளரை ஒத்துக்கொள்ள வைத்து படம் முடிவதற்குள் ஒன்றரை கோடி செலவை 4 கோடிகளாக்கிவிட்டு படம் குப்பையாக வந்திருக்கும் பட்சத்தில் பட்ஜெட் பத்தலை என்று தயாரிப்பாளரை குறை சொல்லும் புது இயக்குனர்களுக்கு இப்படியும் மிகக்குறைவான செலவில் சிம்பிளாக படம் எடுக்கலாம் என்று சொல்லும் பாடம்