போலி மூர்த்தி- திராவிட ஆஃப் பாயில் குஞ்சுகள் - சுகுணாதிவாகர்

கடைசியாக எழுதியபோது போலி மூர்த்தி தொடர்பான விவகாரங்களை ஆஃப் லைனில் எடுத்து சென்றுவிடுகின்றோம் என்றேன், டோண்டு முரளி மனோகர் என்ற பெயரில் எழுதி மாட்டிக்கொண்டபோது எத்தனையோ பேர் கும்மு கும்மென்று கும்மினார்கள், அதில் எத்தனையோ பேர் மூர்த்தி பிரச்சினையில் அமைதியாக வேடிக்கைப்பார்த்தனர், அட எதற்கு கருத்து சொல்லனும், எப்போது சொல்லனும் என்ன சொல்லனுமென்பது அவரவர்கள் விருப்பம், அதை கேள்வி கேட்கும் அதிகாரமோ உரிமையோ எவருக்குமில்ல விமர்சனத்தை தவிர.

சுகுணாதிவாகர் போலி தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தார், அதில் அவர் அள்ளித்தெளித்த கருத்துகளுக்கு பேசாமல் மூடிக்கொண்டே இருந்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதில் அவர் அள்ளித்தெளித்த கருத்துகளில் ஒன்று

"முதலில் நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும்
இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில்
திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.ஆனால் இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான
நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது."

"போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த
எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை."


மற்றவர்களின் நிலைப்பாடு காரணங்கள் என்னவோ ஏதோ ஆனால் இதோ இப்போது வெளிப்படையாக சொல்கின்றேன், மூர்த்தி அசிங்கமாக என் குடும்பத்தையெல்லாம் கேவலமாக எழுதியபோதும் மின் மடல் அனுப்பிய போதும் தொடக்க காலங்களில் எனக்கு கோபம் வந்தது உண்மை, ஆனால் தொடர்ந்து அவன் மின் மடல்கள் வந்த போது மிக சாதாரணமாக அதை முழுவதும் படிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன்,

தொடர்ந்து அவன் அனுப்பிய மடல்களால் மரத்து போனது ஒரு காரணமெனில் தி.க. தலைவர் வீரமணி அவர்கள் சொன்னது அவரை திட்டி வரும் கடிதங்களில் சில "விபச்சாரி மகனே" என்று தான் ஆரம்பிக்கும் என்றும் ஆனால் அவைகளாலெல்லாம் காயப்படாமல் அவர் செயல்படுவதாகவும் பேசினார், அப்போதே ஆபாச மடல்களுக்கு உணர்ச்சி வயப்படும் நிலை குறைந்துவிட்டது.

போலி மூர்த்தியை எதிர்ப்பதற்கு எனக்கு சித்தாந்த புண்ணாக்கு எதுவுமில்லையென்றாலும் சில காரணங்கள் உண்டு....

1. மிக மேலோட்டமான மொக்கையான விவாதகளங்கள் நடத்தி வரும் காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சரி, அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி வெகுசன ஊடகங்கள் திராவிட, சபால்ட்டர்ன் கதையாடல்களுக்கு எந்த விதமான இடமும் அளிக்காமல், தம் இனத்தின் நலனுக்கான, தம் சாதிக்கான கருத்தாக்கங்களை, வேறு யாரும் ஊடகத்துறையில் வந்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊடக ஒழுக்கத்தை மீற முடியாதவாறு பொதுப்புத்தியாக மக்கள் மனதில் புகுத்திக்கொண்டிருக்கும், இருக்கின்ற இந் நிலையில் இந்த இணைய வெளி ஏற்படுத்தியிருக்கும் சுதந்திரவெளியில் மிகப்பெரிய தொடர் விவாதங்கள், உரையாடல்கள், கதையாடல்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த சூழலில் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஆபாசமாக பேசி வெகுசன ஊடகங்கள் மறுத்திருக்கும் ஒரு விவாத களத்தை இணையத்தில் சாத்தியமாக்கியிருக்கும் விவாத, உரையாடல் சூழலை நாசமாக்கும் மூர்த்தியின் போலி செயல்பாடுகளினால் இந்த மாதிரியான தளம் வீணாவதை தடுக்க போலி மூர்த்தியை எதிர்ப்பதற்கான முதல் காரணம்.

2. நான் முதன் முதலில் தமிழ் வலைப்பதிவுலகிற்கு வந்த போது
தங்கமணி, சுந்தரவடிவேல், ரோசாவசந்த், சுந்தரமூர்த்தி மற்றும் பலர் பதிவுகள் படித்த போது பெரியார் கொள்கைகள் பற்றி நிறைய புரிதல்கள் ஏற்பட்டன, இவர்கள் பெரியார் சித்தாந்த வெளிப்பாட்டு பதிவாளர்களாக இனம் காணப்பட்டனர், இவர்களின் எழுத்து மேலும் பலரை பெரியார் பற்றி அறிந்து கொள்ளவும் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளவும் தூண்டியது. இவர்களின் பதிவுகள் ஒரு எல்லையில் ஒரு கோட்பாட்டில் சிக்கிக்கொண்டு சிந்திக்காமல் பரந்துபட்ட சிந்தனை வெளியை காண்பித்தது

முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணத்திலிருந்து மூர்த்தி நீக்கப்பட்ட போது ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் கேட்க நாதியில்லாமல் வெளியேற்றப்பட்டான் மூர்த்தி, கடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போலி மூர்த்தி பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதும் விடாது கருப்புவாக வலைப்பதிவுலகின் மூர்த்தியின் ரீ-எண்ட்ரி தனது சொந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள பெரியார் பெயரை சொல்லிக்கொண்டும் பெரியாரின் தொண்டனாகவும் நடந்தேறியது.

விடாது கருப்பு மூர்த்தி போன்ற போலி பொறுக்கிகளும், பார்ப்பன எதிர்ப்பிற்கும் ஆளைஎதிர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத மூர்த்தியின் ஓரிரு அல்லக்கை ஆஃப் பாயில் திராவிட குஞ்சுகள் எல்லாம் பெரியார் தொண்டர்களாகவும் பெரியார் சித்தாந்த வெளிப்பாட்டு பதிவர்களாகவும் கருதப்படுகின்ற நச்சு சூழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றது இரண்டாம் காரணம்.

3. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு பொறுக்கி மூர்த்தியும் அவனுடைய அல்லக்கை ஆஃப் பாயில்களும் நடத்தும் போலி கூத்தில் திராவிட சிந்தனை உடையவர்களே இப்படித்தான் என்று நடத்தப்படும் தவறான பிரச்சாரத்திற்கு மூலக்காரணமே இந்த போலி மூர்த்தியும் அவனுடைய அல்லக்கை ஆஃப் பாயில் களும் என்பதால் எதிர்க்கின்றேன்.

4. மேலும் மேலும் புதியவர்கள் இணைய வலைப்பதிவு உலகில் வர வர வெகு சன ஊடகங்கள் திணித்திருக்கும் கட்டமைத்திருக்கும் பொதுப்புத்தி உடைக்கப்படும் ஆனால் அதற்கான சூழலை நாசம் செய்யும் இம்மாதிரியான செயல்களை எதிர்க்கின்றேன்.

5. நமக்கு தெரிந்து நம் வட்டத்தில் நம் முன்னே நடந்து கொண்டிருக்கும் ஒரு அராஜக ஆபாச அத்துமீறல்களை தைரியமும் திராணியுமல்லாமல் கேள்வி கேட்கவோ எதிர்க்காமல் அதிகாரத்துவத்துக்கு எதிரான கலகக்குரல், மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் குரல், அரஜாகத்துக்கு எதிரான குரல் என்றெல்லாம் நாமே சொல்லிக்கொள்வதும் அபத்தமாக தோன்றியது.

6. தலித் கம்னாட்டி(பல இடங்களில் இதையும் விட மோசமாக), என்றெல்லாம் எழுதுபவனும் பேசுபவனுமெல்லாம் சாதி ஒழிப்பாளன், சாதியத்தின் எதிரி என்பது போன்ற தோற்றத்தை விடாது கருப்பு மூர்த்தி சிலரிடம் உருவாக்கி வைத்திருந்தான், அவர்களுக்கெல்லாம் மூர்த்தி என்கிற பொறுக்கியின் உயர் சாதி செயல்பாடுகளை தோலுரிக்கவும் எதிர்த்தேன்... விடாது கருப்புவின் இந்த பதிவில் வெளியான சில பின்னூட்டங்கள்

வெங்காயம் said...
இத்தனைநாள் தீண்டாத் தகாதவனா பாப்பான் வெச்சிருந்தான்.
நீங்க இந்த அளவுக்கு இறங்கி வந்து இவன்களுக்காக போராடுகிறீர்களே அதுவே பெரிய விஷயம்.நீங்க போங்க சார். அவனுங்க பாப்பானிடம் அடிபட்டு மிதிபட்டு செருப்படி வாங்கினால்தான் திருந்துவானுங்க

அழகரசன் said...
இந்த தலித்து நாதாரிக்காக நீங்க இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்க வேண்டாம். உங்க ஜாதி என்ன இந்த பரதேசியின் ஜாதி என்ன? நீங்க இவனுக்காக போராடினால் இவன் டோண்டுகூட தொடுப்பு வெச்சிருக்கான்.

சிவா said...
தியாகு என்ற பரபோக்கி நாதாரி

செந்தில் said...
சார்,
உயர்ந்த ஜாதியான நீங்க ஏன் இந்த பர நாய்களுக்காக கஷ்டப்படுறீங்க? அவனுங்க பாப்பானிடம் ....


தனக்கு தானே போட்டுக்கொண்ட பின்னூட்டமோ அல்லது இந்த மாதிரி பின்னூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் மூர்த்தியின் ஆதிக்க சாதி பொறுக்கித்தனம் வெளிப்படையாக தெரிந்தாலும் இதையும் மீறி அவனையெல்லாம் ஒரு சாதி எதிர்ப்பாளன் என்று நம்பிக்கொண்டிருக்கும் சில புண்ணாக்குகளுக்கு அம்பலப்படுத்த வேண்டியதேவை இருந்ததால் எதிர்க்கின்றேன். இந்த மாதிரியான பின்னூட்டங்களை அனுமதித்ததற்காகவே மூர்த்தியை "வன் கொடுமை தடுப்பு சட்ட்த்தின்" கீழ் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

6. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எந்த சித்தாந்த புண்ணாக்கும் தேவைப்படாமலேயே பொறுக்கி மூர்த்தியின் போலி செயல்பாடுகள் தவறானவை, அத்துமீறல்கள் என்று தெரிந்ததால் எதிர்க்கின்றேன்.

ஒன்றரையாண்டிற்கு முன்பே போலியை எதிர்த்து நான் போட்ட பதிவில் ஆரம்பித்த நாளிலிருந்தே ஆபாச பின்னூட்டங்கள், மின் மடல்கள் வர ஆரம்பித்தது, தொடக்கத்தில் கோபம் வந்த போதும் பிறகு அவைகளை சுலபமாக தாண்டி போக ஆரம்பித்துவிட்டேன், பலருக்கும் அவனைப்பற்றி எச்சரித்ததிலிருந்து அவனது போலி செயல்பாட்டுக்கு எதிராக என்னென்ன வேலைகள் செய்தேன் என போலியை எதிர்க்க என்னோடு தொடர்புகொண்ட பலருக்கும் தெரியும், இத்தனை காரணங்களுக்கும் பிறகே என் குடும்பத்தை ஆபாசமாக பேசினான் என்ற காரணமும்....

சுகுணாதிவாகர் மட்டுமே போலியை அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் எதிர்க்கிறாராம் மற்றவர்களெல்லாம் தனி மனித அரிப்புக்காகவும், தன் முனைப்புக்காகவும் தான் என்கிற வார்த்தைகளில் சுகுணாதிவாகர் தம்மை தாமே ஒரு புனித பீடத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு போலியை எதிர்க்கும் மற்றவர்களை பார்த்து ஏளனம் செய்யும் அந்த வரிகள் ஒரு கலகக்காரனுக்கான செயலாக தெரியவில்லை... நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டது போல நான் ஒஸ்தி நீ மட்டம் என்ற வார்த்தைகள் அங்கே மிதக்கின்றன.

பச்சையாக சொல்லவா சுகுணா? நீங்கள் ஒரு அடி உயரத்தில் மிதந்து கொண்டிருக்கின்றீர், அது மாதிரி மிதப்பவர்களுக்கு பதின்ம வயது நிலை, பணம், புகழ் போதை, என பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நீங்கள் மிதந்து கொண்டிருப்பதற்கான காரணம் இவைகள் இல்லையென்றாலும் நண்பர் கூறியது போல உங்களை நீங்களே ஒரு புனித பீடத்தில் ஏற்றிவைத்திருப்பதுவே என கருதுகின்றேன், நக்சல்கள், போராளிகள் பின்னாலான உளவியல் காரணங்கள்(சமூக காரணங்களை சொல்லவில்லை) அவர்கள் தம்மை பற்றி இப்படியான ஒரு உயர்ந்த புனித எண்ணத்தில் இருப்பதுவும் என சில இடங்களில் படித்திருக்கின்றேன். சுகுணா திவாகர் ஒரு தோழனாக சொல்கிறேன் நீங்கள் சுய ஆய்வு செய்ய வேண்டும், உங்களை நீங்களே சுய ஆய்வுக்குட்படுத்தும் நேரம் இது...

நான்காம் நாளாக தொடரும் பழ.நெடுமாறன் அவர்களின் உண்ணாநோன்பு போராட்டம்

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து வரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் போராட்டம் இன்று நான்காம் நாளாக தொடர்கின்றது.

நேற்றே உடல் சோர்வடைந்த அய்யா நெடுமாறன் அவர்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்படுவதாகவும் பல்ஸ் குறைந்து கொண்டிருப்பதாகவும் மன உறுதியினாலேயே நலமாக இருப்பதாக நெடுமாறன் அய்யா அவர்கள் சொல்லிக்கொண்டு போராட்டத்தை கைவிட மறுப்பதாகவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்கள்...

இலங்கைக்கு எம் தமிழின மக்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசின் இராணுவத்திற்கு ராடார் மற்றும் ஆயுதங்கள் அளித்த மானங்கெட்ட மத்திய அரசும், இப்பிரச்சினையில் பாராமுகமாக இருக்கும் மானங்கெட்ட தமிழக அரசுக்கும் எம் கண்டனங்கள்...

அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் போராட்டம் வெற்றிகாண வாழ்த்துகிறேன்...

போராட்டம் தொடர்பான தட்ஸ்டமில்.காம் இன் செய்தி இங்கே

இன்னா நக்கலுப்பா நாராயணனுக்கு

உருப்படாத நாராயணன் நக்கல் நையாண்டியோடு சமூக அவலங்களையும் அதிகார பீடத்தையும் எழுத்தால் துகில் உரிப்பவர், திமுக வின் ஓராண்டு ஆட்சியை முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0 என்று கலாய்த்தவர், கில்லிக்காக எலக்கியசம் (அ) என் பெயர் கோவாலு என்று எழுதியதை படித்து ரசித்து சிரித்தேன்... நக்கல் நையாண்டியோடு அறிவுசீவி போலித்தனம் செய்பவர்களை சுளுக்கெடுத்திருப்பார் நாராயணனன்....

முதலில் டிஸ்கெள்யமர்: இந்த கட்டுரையில் வரும் மனிதர்கள், விஷயங்கள் எல்லாமே கற்பனையே. யாரையும் தனிப்பட்டு குறிப்பிடுவன அல்ல

தேசாங்கி தெரியுமா உங்களுக்கு ? தெரியாதா. அப்போது நீங்கள் தமிழில் வரும் எந்த பத்திரிக்கையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. காலச்சுவடிலிருந்து குமுதம் வரை தமிழில் வரும் எல்லா இதழ்களிலும் தேசாங்கியின் கதை, கட்டுரை, கவிதைகள் இடம்பெறும். தமிழின் முண்ணணி எழுத்தாளர்களில் ஒருவர். சூரிச்சில் நடந்த 37வது உலக தமிழ் மாநாட்டில் தமிழகத்தில் இருக்கும் 10 தமிழ் ஐகான்களில் விஷாலுக்கு பிறகு தேசாங்கிக்குதான் இரண்டாம் இடம்.

தேசாங்கியின் கட்டுரைகளில் பொறி பறக்கும். கவிதைகளில் காதலும், காமமும் மயக்கும். கதைகளில் நையாண்டி தெறிக்கும். எல்லாரையும் படிக்க சொல்லும் மனிதநேயம் மிதக்கும். தமிழ் சினிமாவில் இளங்கோவிற்கு பிறகு நறுக்கென வசனங்கள் எழுதியது தேசாங்கி மட்டுமே. தேசாங்கியின் “பிஞ்சமட்ட” நாவல் முன்னொரு காலத்தில் வைரமுத்து என்கிற கவிஞன் எழுதி, பில்ட்-அப் கொடுத்து கவியரசு வாங்கியதை விட, செம பில்ட்-அப்பான கவி-கதை-கட்டுரை. புலிட்சர் விருதினை தவிர வேறெந்த விருதையும் வாங்க மாட்டேன் [யாரும் தரமாட்டார்கள் ] என்கிற வைராக்கியதோடு இருக்கும் தன்மான தமிழ்சிங்கம் தேசாங்கி. தமிழ்நாட்டில் எங்கே கூட்டம் நடந்தாலும், தேசாங்கியின் பாதச்சுவடுகள் இன்றி எதுவும் நடக்காது. தமிழகத்தின் அரசியல்வாதிகள், சினிமா, இலக்கியம், நவீனம், வகையறா, வகையறா எல்லாவற்றிலும் தேசாங்கி இருக்கிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் கலைஞர் டிவியின் சமையல் சமையல் நிகழ்ச்சியில் கூட தேசாங்கியின் வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சமையல் குறிப்புகள் நேயர்களுக்கு ஸ்பெஷல் போனாஸாக அறிவிக்கப்பட்டன. தேசாங்கியினை பற்றிய பாடங்கள் வருங்கால தமிழ் வரலாற்றில் இருக்கவேண்டும் என்று கலாச்சார துறை அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். இவ்வளவு சொன்னாலும், இந்த கட்டுரை தேசாங்கியினை பற்றியது அல்ல.

கோவாலு.
நாயே.
டவுசரு.
குமாங்கி.
தவுடு பார்ட்டி.
ஜூமாகா.
பண்டலு.
பொறை மச்சான்.
தேங்காநாய்.
சிலுக்கான்.
விலாயி.

மேலே சொன்னவை ஒரு அட்டெண்டஸ் ரிஜிஸ்டர் எழுதுமளவுக்கு இருந்ததிலிருந்து பொறுக்கியெடுத்த கோவாலுவின் பெயர்கள். உங்களுக்கு இஷ்டப்பட்ட பெயரில் நீங்கள் கோவாலுவினை அழைக்கலாம், நான் கோவாலு என்று தான் கூப்பிடப்போகிறேன்.
மீதியை அவர் பதிவில் படித்துக்கொள்ளுங்கள்

மசோகிஸ்ட் டோண்டுவை தமிழ்மணத்தை விட்டு நீக்க கோரிக்கை...

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் போலி பிரச்சினை முடியும் தருவாயை ஒவ்வொரு முறை எட்டும் போதும் அதை எப்பாடு பட்டேனும் கலைக்கும் வேலையை டோண்டு செய்து கொண்டிருப்பார், சைக்கோ போலி மூர்த்தியினை பட்டவர்த்தனமாக அடையாளம் காட்டி சில நாட்களாக சேற்றிலே இறங்கி பன்றியை துரத்த போராடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் முயற்சியை வீணடிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார், புண்ணை சொறிந்து சொறிந்து அதை ஆறவிடாத முயற்சியாகவே இதை பார்க்கின்றேன், இது ஆரம்பித்த அன்றே டோண்டு அவர்களின் போலி ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்கி பின்னூட்டம் போட்டு பிரச்சினையை திசை திருப்ப நினைத்த போதே டோண்டுவுக்கு மின் மடல் அனுப்பி உமக்கு என்ன பிரச்சினை முடியவேண்டுமென்ற என்னமில்லையா என்ற கருத்து தொணிக்க மடல் அனுப்பி போலி பற்றி பேசாமல் சற்று அமைதியாக ஒதுங்கி இருங்கள் என்றும் சொன்னேன்... பொதுப்படையாக போலி மூர்த்தியை அடையாளம் காட்டியும் ஆகிவிட்டது, அவன் சைக்கோ பேச்சையும் பொதுவில் காட்டியாகிவிட்டது, இனியும் அந்த சைக்கோ மூர்த்திக்கு உதவி செய்பவர்களுக்கும் அவனது அல்லக்கைகளுக்கும் என்ன மரியாதை கொடுக்கப்பட வேண்டுமோ அதை பதிவுலகம் பார்த்துக்கொள்ளும், மேலும் இதை தொடர்ந்து பொதுவில் பேசாமல் சைக்கோ மூர்த்தி மற்றும் அவன் அல்லக்கைகளுக்கு சட்டப்படியாகவும், மனசாட்சிபடியாகவும் என்ன செய்ய வேண்டுமோ அவைகளை ஆஃப் லைனில் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு பதிவு போட்டு போலி பிரச்சினையை எங்கே முடிந்து விடுமோ என்ற பதட்டத்தில் சொறிந்து விட்டுள்ளார் டோண்டு, போலி டோண்டு மூர்த்திக்கும் ஒரிஜினல் டோண்டு ராகவன் அவர்களுக்கும் என்ன தான் அப்படி ஒரு பந்தமோ, போலி டோண்டு மூர்த்தி இல்லாமல் ஒரிஜினல் டோண்டு வாழவே முடியாது போல.... சே....

தமிழ்மணத்தினால் எழுத ஆரம்பித்தவர்கள் ஏராளம், வெகுசன ஊடகங்கள் திணிப்பது மட்டுமே மக்கள் பார்வை என்றிருந்ததை குறைந்த இணைய பயன்பாட்டாளர்களுக்காவது வெகுசன ஊடகங்களுக்கு மாற்று ஏற்படுத்தியது தமிழ்மணம், அது நீடிக்கவும் மேலும் மேலும் பயனாளர்கள் எழுதும் ஆரோக்கிய சூழலை உருவாக்கவும் போலி மூர்த்திக்கு முடிவு கட்டுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தேவை மசோகிஸ்ட்(pleasure in being abused or dominated : a taste for suffering ) டோண்டு அவர்களையும் தமிழ்மணத்திலிருந்து நீக்குவது, எப்போதோ சில நண்பர்கள் பன்றி துரத்தும் வேலையில் இறங்கியிருக்க வேண்டியது ஆனாலும் அப்போதெல்லாம் போலியை துரத்துவதை விட டோண்டுவுக்கும் வேறு சிலருக்கும் திராவிட சிந்தனையுள்ள பதிவர்கள் மீது பழி போட்டுக்கொண்டே இருந்ததே நண்பர்களையும் என்னையும் இந்த பன்றி துரத்தும் நிலையிலிருந்து ஒதுங்கியே இருக்க செய்தது...

இணைய சுதந்திரம் லொட்டு லொசுக்கு என்பதை தாண்டி, தமிழ்மணம் மீண்டும் மணம் வீச, ஆரோக்கிய சூழல் மீண்டு வர, தமிழ்மணத்திலிருந்து டோண்டுவை நீக்க கோரி தமிழ்மணம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றேன்.... உங்களுக்கும் அதுவே தோன்றினால் ஒரு மின்மடல் தமிழ்மணத்திற்கு அனுப்புங்கள்.... இணைய சுதந்திரத்திற்கும் அராஜகத்திற்கும் வித்தியாசமுள்ளது, தமிழ்மணம் இணைய சுதந்திரம் என நினைக்காமல் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரிஜினல் மற்றும் போலி டோண்டுகளின் தொல்லையிலிருந்து தமிழ்மணத்தை விடுவிக்குமாறு வேண்டுகின்றேன்...

கிராஸ் ஃபயரில் அடிபட்டு சாகாதிங்க....

மூர்த்தி என்ற போலி பொறம்போக்கை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவ்வளவு நாட்களாக எங்கேயே போயிருந்த கவிதாயினிகளும், புத்தன்களும் திடீரென முளைக்கின்றார்கள், எந்த வித வரைமுறையுமில்லாமல் போலி மூர்த்தி அத்தனை வசவுகளையும் பொது இடங்களில் பொழிந்து கொண்டிருக்கின்றான்,ஆனால் கவிதா அவர்களுக்கோ இம்புட்டு நாள் இல்லாத கவிதை இப்போது மட்டும் பீறிட்டுக்கொண்டு வருகின்றது, எரியறதை பிடுங்கினால் கொதிக்கிறது தானா அடங்கும் சும்மா அவன் இவன் மலேசியா வில் இருக்கும் ஒருவன் மூவில் ஆரம்பித்து தியில் முடியும் என்றெல்லாம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடாமல் நேரடியாக அந்த போலி மூர்த்தியை அம்பலப்படுத்திய செல்லா,ரவி என அதை தொடர்ந்து போலி மூர்த்திக்கு ஆப்பு அடிக்க நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் எவர் செயல்பட்டாலும் அவர்களும் சேர்ந்தே அம்பலப்பட்டே போவார்கள்...

போலி மூர்த்தி மட்டுமல்ல அவன் செயல்களுக்கு நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுக்கும் எந்த சொறி நாயாக இருந்தாலும், எந்த சாதி சொறி நாயாக இருந்தாலும் விலக்கப்பட வேண்டியவர்களே, போலி மூர்த்திக்கு ஆள் காட்டி கொடுக்கும் அல்லக்கையாக இருந்தாலும் சரி, நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுக்கும் எந்த சொறிநாயாக இருந்தாலும் சரி தானாகவே பொதுவில் அம்பலப்பட்டு போவார்கள்.

அய்யா புத்தி சொல்லும் புத்தர்களே(?) இப்போது குறுக்கே வராதீர்கள், புத்த பிக்குகளின் பணியெல்லாம் சண்டை முடிந்த பிறகு தான் கலிங்கப்போரின் போதும் சண்டை முடிந்த பின் தான் புத்த பிக்குகளின் பணி ஆரம்பமாயின, சண்டையின் போது கிடையாது... எனவே உங்கள் புத்தர் கருணை கதைகளையும், கவிதைகளையும் இப்போது தூக்கிக்கொண்டு வராதீர்கள் முடிந்த பின் வாருங்கள், பொறுமையாக நேரமிருந்தால் கேட்கிறோம்....

கதைகளும் கவிதைகளும் மற்ற ஆளுக்கு சொல்லும் போது சரியாகத்தான் தோன்றும் ஆனால் தனக்கென்று வந்தாலோ அல்லது தனக்கென்று வந்தபோதோ எந்த நிலை எடுத்தோம், எடுக்கின்றோம் எடுப்போம் என அவரவர்கள் மனசாட்சியிடம் கேட்டால் சொல்லும்....
இப்போதைக்கு சொல்லிக்க விரும்புவது....

No Rulers Required, No Fixed Game Turns, இந்த ஆட்டம் அதன் போக்கில் போய் கொண்டிருக்கின்றது எனவே கிராஸ் ஃபயரில் அடிபட்டு சாகாதிங்க....