விகடன் வரவேற்பறையில் குழலி பக்கங்கள்

இந்த குழலி பக்கங்கள் ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது தொடக்கத்தில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தாலும் சில மாதங்களில் சோர்வு சோம்பல் எல்லாம் சேர்ந்து விட்டது அதனால் தொடர்ந்து எழுதவில்லை. நேரம் கிடைத்தால் என் எழுத்துகள் இதிலும் சபால்ட்டர்ன் கதைகள் என்ற இன்னொரு பதிவிலும் தொடரும் தொடரும்.

விகடன் வழியாக அறிந்து இந்த பதிவை காண வந்துள்ளவரென்றால் உங்களுக்கு திரட்டி தமிழ்மணம் தமிழ்வெளி பற்றி தெரியாதென்றால் ஒரு முறை அந்த வலைதளங்களுக்கு சென்று பாருங்கள் ஒரு புது அனுபவம், ஒரு புது வெளி, ஒரு புது பார்வை கிடைக்கலாம்.

தமிழ்வெளி
தமிழ்மணம்
திரட்டி
தேன்கூடு
கீற்று
தமிழ்.நெட்

வெகுசன ஊடகங்களின் பொது கருத்துகளுக்கும் எமக்கும் பெரும்பாலும் ஒத்து வந்ததேயில்லை, பொதுவாகவே எமக்கு கிடைத்த இந்த குழலி பக்கங்களில் வெகுசன ஊடகங்களை பெரும்பாலும் சாடியே வந்துள்ளேன், விகடனின் வரவேற்பரையில் என்பதிவு பற்றி வந்தது கொஞ்சம் வியப்புதான், விகடன் வரவேற்பரையில் என் பதிவை தேர்ந்தெடுத்த அந்த விகடன் அலுவலருக்கும் விகடனுக்கும் நன்றி.

அரசியலில் சாதி - குழப்பமும் உரத்த சிந்தனையும்

பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி