யட்சினி - 5


வீட்டுக்கு பின்னால் கொட்டாயில்
எரவாணத்தில் சொறுகி இருந்த
கோலிக்குண்டு பையை எடுக்க போன போது
சாந்தி அக்கா ஆறுமுகம் அண்ணனை
கட்டி தழுவிக்கொண்டிருந்தார்
நின்று பார்த்த போது,
சாந்தி அக்கா புருவத்தை உயர்த்தி
கண்ணாலே கேட்டார்
"என்ன"?
பார்வையை தாழ்த்தி
கொட்டாயிலிருந்து வெளியேறினேன்
எதுவுமே தெரியாமல் வேலையில்
மும்முரமாயிருந்தார் ஆறுமுகம் அண்ணன்

செந்தோசா தீவில் மீண்டும் பார்த்தேன்
தயங்கி நின்று அவர்களை பார்த்தேன்

இப்போதும் சாந்தி அக்கா தான் புருவத்தை உயர்த்தி
கண்ணாலே கேட்டார்
"என்ன?"
வாடா அந்த பக்கம் போய் விளையாடலாம்
என்று பையனை கூப்பிட்டுக்கொண்டு போய்விட்டேன்