எடுக்கவா? கோர்க்கவா? துரியோதணன்-கர்ணன் நட்பு

எடுக்கவா? கோர்க்கவா? துரியோதணன்-கர்ணன் நட்பு

நட்புக்கு ஒரு வசதி உண்டு, உறவுகளை போல அல்ல அது, அடித்தாலும் பிடித்தாலும் சாகும் வரை உறவு என்பது மாறாது ஆனால் நட்பு என்பது எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட்டுவிடலாம். அவ்வளவு பலவீனமானது தான் நட்பு. ஆனால் அந்த நட்பு என்பது நம்பிக்கை என்ற பலமான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அந்த நட்பு உறவுகளையும் விட பலமான வலிமையான உறவாகிறது.

துரியோதனன் கர்ணன் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம், அவை தம் குடும்பத்து பெண்கள் மற்றும் சாவு. துரியோதணனின் மனைவிக்கும் கர்ணனுக்கும் இருந்த தோழமையை துரியோதணன் நம்பி தனது வீட்டு பெண்டிர்களை நம்பி கர்ணனுடன் பழக அனுமதித்தது.

ஒரு முறை கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தான், அப்போது துரியோதனனின் மனைவி தோற்றுப்போனதால் ஆட்டத்தை களைத்துவிட்டு எழுந்து ஓட அப்போது கர்ணன் அவரை பிடித்து இழுக்க முயன்ற போது அவரின் முத்தாரம் அறுந்து விழுந்தது, அப்போது திடீரென உள்ளே நுழைந்த துரியோதணன் கர்ணனிடம் கேட்டான் எடுக்கவா? கோர்க்கவா? என்று. அறுந்துவிழுந்த மணிமுத்தை நீ எடுக்க நான் கோக்கவா? அல்லது நான் எடுக்க நீ கோர்க்கிறியா என்றான். அது தான் துரியோதணன் கர்ணன் மீது வைத்திருந்த நம்பிக்கை.

இரண்டாவது துரியோதணனுடன் சென்றால் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும் கர்ணன் தொடர்ந்து துரியோதணனுடனே இருந்து உயிர்விட்டது. துரியோதணனுடன் இருந்தால் மரணமும் நிச்சயமும் சொர்க்கமும் கிடையாது என்று அறிந்தே பலரும் யுத்தத்திற்கு முன்பே வெளியேறியானர்கள், சில பெரியவர்கள் போர் செய்யாமல் வில்லை முறித்து போட்டுவிட்டு ஒதுங்கினார்கள், ஆனால் கர்ணன் மட்டுமே கடைசி வரை இருந்தான். இத்தனைக்கும் கர்ணனின் தாய் குந்தி தேவி உட்பட பலரும் கர்ணனிடம் துரியோதணனை விட்டு விலக கோரினார்கள், அவனுடன் இருந்தால் சாவு நிச்சயம் என்று சொல்லியும் துரியோதணனை விட்டு கர்ணன் விலகவில்லை.

எனவே தான் துரியோதணன் கர்ணன் நட்பு வேறெந்த நட்பையும் விட சிறந்ததாக உள்ளது. இப்போது சுப்பிரமணியபுரம் காலம் பாருங்க, குத்தனவன் நண்பனா இருந்தா சத்தம் கூட போடக்கூடாது என்று வசனம் பேசுகிறோம்.

பிள்ளையார் வேற்றுகிரகவாசியா?

ஏன்சியன்ட் ஏலியன்ஸ் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு, கேட்க கேட்க சுவாரசியமாக இருக்கும் ஒன்று, இது குறித்து ஹிஸ்டரி சேனல் பல டாக்குமெண்ட்ரிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் பிள்ளையார் ஒரு வேற்று கிரகவாசியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்கள். இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள முகமூடிகள் அமெரிக்க ஜெட் பைலட்டுகள் சுவாசிப்பதற்கு ஏற்ப அணிந்துள்ள ஆக்சிஜன் மாஸ்க்குகள், பிள்ளையாரின் தும்பிக்கை என்பது வேற்றுகிரகவாசி சுவாசிப்பதற்கு ஏற்ற ஒரு குழாயாக‌ இருந்திருக்கலாம், குழாய் முகமூடி அணிந்து வேற்றுகிரகவாசி இவ்வுலகிற்குள் வந்திருக்கலாம், அதைகண்ட இந்திய மக்கள் அது குறித்து புரியாமல் இந்தியாவில் இருந்த யானையுடன் ஒப்பிட்டு  அவர்களை யானை முகம் கொண்ட கடவுளாக ஆக்கியிருக்கலாம்.

இந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ள பிள்ளையார் சிலைகள் அல்லது அது போன்ற முக அமைப்புடைய யட்சன் சிலைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன, எனவே இந்த யட்சன், பிள்ளையார் எல்லாம் வேற்றுகிரகவாசி பைலட்டுகளாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உண்மையோ பொய்யோ கேட்கவும் யோசிக்கவும் நம்பும்படியாகவுமாக சுவாரசியமாக உள்ளதல்லவா!

யட்சினி - 6

யட்சினி - 6
------------------
கெஞ்சி மிஞ்சி
பணித்து விட்டோம்
என‌ ஆணவத்தோடு பார்க்காதே
பாவம் பார்த்து விட்டது தான்
உன்னை துவள வைக்க
ஒரு “க்கும்” போதும் எனக்கு ‪

#‎யட்சினி_கவிதை‬

யட்சினி - 5


வீட்டுக்கு பின்னால் கொட்டாயில்
எரவாணத்தில் சொறுகி இருந்த
கோலிக்குண்டு பையை எடுக்க போன போது
சாந்தி அக்கா ஆறுமுகம் அண்ணனை
கட்டி தழுவிக்கொண்டிருந்தார்
நின்று பார்த்த போது,
சாந்தி அக்கா புருவத்தை உயர்த்தி
கண்ணாலே கேட்டார்
"என்ன"?
பார்வையை தாழ்த்தி
கொட்டாயிலிருந்து வெளியேறினேன்
எதுவுமே தெரியாமல் வேலையில்
மும்முரமாயிருந்தார் ஆறுமுகம் அண்ணன்

செந்தோசா தீவில் மீண்டும் பார்த்தேன்
தயங்கி நின்று அவர்களை பார்த்தேன்

இப்போதும் சாந்தி அக்கா தான் புருவத்தை உயர்த்தி
கண்ணாலே கேட்டார்
"என்ன?"
வாடா அந்த பக்கம் போய் விளையாடலாம்
என்று பையனை கூப்பிட்டுக்கொண்டு போய்விட்டேன்

யட்சினி - 4


யட்சினி
-----------
காமக்கடும் புயல் வீசி
கொதித்த அந்த இரவு
குழலியா? குந்தவியா?
யாராய் இருந்தல் என்ன?
பிழைத்து போகட்டும் என்று
அன்று அவள் விட்டதால்
தான் பிழைத்து கிடக்கிறேன் இன்று!

சே குவேராவின் பிறந்த நாள்


சே குவேராவின் பிறந்த நாள்.

காந்தியாகினும், ஃபிடல் காஸ்ட்ரேவாகினும், ஹிட்லர் ஆனாலும் உலகின் மாபெரும் தலைவர்கள், போராளிகள் யாராகினும் அவர்கள் மக்களுக்காக, நாட்டுக்காக மட்டும் தான் போராடியுள்ளார்கள், ஆனால் நாடு கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து போராடிய ஒரே போராளி  சே குவேரா தான்.

மோட்டார் சைக்கிளின் டைரி குறிப்புகள் என்ற ஒரு நூல் சே வை உணரச்செய்தது, அதை படிக்கும் ஒவ்வொருவனும் தானும் போராளி ஆக வேண்டும் என்று ஒரு நிமிடமாவது நினைப்பான். மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டும் போராடியவர் இவர், நோய்கள் போராளிகளின் போராட்டத்தை தடை செய்யாது என்று நிரூபித்தவர்

இந்த படம் எடுக்கப்பட்டது பாலித்தீவில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் நின்வாக எழுப்பட்ட நினைவிடத்தின் முன்பு.

தமிழ்நாட்டில் சீமான் வேறு இவர் படத்தை பனியனில் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார், அதனால் சே குவேரா தமிழ்நாட்டில் என்ன கதி ஆனாரோ என கொஞ்சம் பயமாக உள்ளது


டிமாண்டி காலனி படத்தின் கதை என் வலைப்பதிவில் இருந்து சுட்டது


கடந்த 2 மாதங்களாக கடுமையான வேலை, புதியதொரு சிஸ்டம் என் கீழ் வந்துள்ளதால் அந்த வேலையில் மூழ்கி இருந்ததால் ஃபேஸ்புக்கில் அவ்வளவாக எதுவும் எழுதவில்லை, இந்த நேரத்தில் ஆஸ்த்திரேலியாவில் இருக்கும் சத்யா சிங்கப்பூர் வந்திருந்தார், அவரோடு டீமாண்டி காலனி படம் பார்க்க சென்றிருந்தேன்.

படத்தின் மொத்தமுமே ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் முடிச்சில் தான் இருந்தது, ங்கொய்யால அந்த சஸ்பென்ஸ் முடிச்சி உடையும் போது தான் தெரிந்தது ஆகா நம்ம கிட்ட இருந்து தான் சுட்டிருக்கிறார்கள் என்று.

அருள்நிதி உடன் கூட இருக்கும் ஒரு நண்பர் ஏற்கனவே இறந்து போனவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டவர் என்பது நாடி ஜோதிடம் பார்க்க போன ஜோசியர் மூலமாக தெரியும், இது தான் படத்தின் சஸ்பென்ஸ் அதுவும் படத்தின் ஒரே சஸ்பென்ஸ்சும் இது தான். இதை தான் ஆவிகளின் புரிதல் (எ) ஷியங் - என்று 2005ம் ஆண்டில் நான் எழுதியிருந்தேன். டீமாண்டி காலனி படத்தை பார்த்தவர்கள் இந்த லிங்கை ஒரு முறை படித்து பாருங்கள், படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் காட்சியே இது தான், இதன் மேல் தான் மொத்த படத்தின் கதையும் உள்ளது.

வலைப்பதிவுகளின் வெளியான கதையை சுட்டு அதனை டெவலப் செய்து படம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல, மிகப்பிரபலமாக ஓடிய மைனா படத்தின் மொத்த படத்தின் அடிப்படையே கற்பகம் என்ற வலைப்பதிவர் எழுதிய கதையில் இருந்து தான் சுடப்பட்டது.

படம் குறித்து சொல்வதென்றால்,  மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம், நல்ல நடிப்பு ஒரு முறை பார்க்கலாம்.

ஒன்றரை கோடிக்கு பட்ஜெட்  என்று சொல்லி தயாரிப்பாளரை ஒத்துக்கொள்ள வைத்து படம் முடிவதற்குள் ஒன்றரை கோடி செலவை 4 கோடிகளாக்கிவிட்டு படம் குப்பையாக வந்திருக்கும் பட்சத்தில் பட்ஜெட் பத்தலை என்று தயாரிப்பாளரை குறை சொல்லும் புது இயக்குனர்களுக்கு இப்படியும் மிகக்குறைவான செலவில் சிம்பிளாக படம் எடுக்கலாம் என்று சொல்லும் பாடம்

சாவிலும் சாதி பிரிவினை உண்டாக்க நினைக்கும் திராவிட பொறுக்கிகள்

நீதிமன்றம் ஏறிய பாமக, திராவிட பொறுக்கிகளின் புரட்டு வாதம், சாவிலும் சாதி பிரிவினை உண்டாக்க நினைக்கும் திரா"விட" பொறுக்கிகள்

ஆந்திராவில் தெலுங்கு இனவெறியர்களால் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் சாதி குறித்த விபரங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்தது, பாமக, தவாக, நாம் தமிழர்கள் மற்றும் பல்வேறு சிறு குறு தமிழ் தேசிய இயக்கங்கள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என போராடிக்கொண்டிருக்க இந்த சிக்கலில் வடுக வந்தேறி திராவிட கும்பல்கள் களின்  நாடக வேடகங்கள் கலைந்ததை அடுத்து போராட்டத்தில் இருக்கும் இயக்கங்கள் மீது சேறு வாரி இறைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது.

மிக கடுமையாக திராவிடத்தை விமர்சனம் செய்திருந்தாலும் இதுவரை பொறுக்கிகள் என்று நான் விமர்சித்ததில்லை, இப்போதும் திராவிடம் பேசும் அனைவரையும் நான் பொறுக்கிகள் என்று சொல்லவில்லை, தமிழர்களாக நான்கு நாட்களுக்கும் மேலாக உணர்வால் ஒன்றுபட்டு இந்த படுகொலையை தமிழகமே எதிர்க்கும் நேரத்தில் சாவிலும் சாதி பிரிவினை உண்டாக்க செயல்படும் ஒரு சில திரா"விட" பொறுக்கிகளை மட்டுமே பொறுக்கிகள் என்று விமர்சிக்கிறேன்.

தற்போது திராவிட பொறுக்கிகள் கொல்லப்பட்ட 20 பேரில் 6 பேர் வன்னியர்கள் அவர்களின் உடலை மட்டும்  திரும்பவும் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டுமென்று பாமக வழக்கு தொடுத்ததாகவும் இந்த 6 வன்னியர்கள் மட்டும் தான் தமிழர்களா? மற்றவர்கள் தமிழர்கள் இல்லையா என்று பல திராவிட பொறுக்கிகள் குறிப்பாக செந்தில் நாதன் என்பவர் பதிவிட்டுக்கொண்டுள்ளார்கள், இதில் எவிடென்ஸ் கதிர் என்கிற ஒருவரோ மூன்றே நாளில் தமிழர்கள் சாதியாக பிரிந்தனர் என்று தனது வழக்கம் போல சொல்லும் பொய்யை அவிழ்த்து விடுகிறார்.

உண்மையில் நடந்தது என்ன வென்றால் பாமக வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் போலூரை சேர்ந்த முனியம்மாள் சார்பில் வழக்கு தொடர்ந்தார், இவரின்கணவர் சசிக்குமாரும் இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார், அதற்கு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தார், ஆனால் அதற்கு உத்தரவிட மறுத்த உயர்நீதிமன்றம் எரிக்கப்படாமல் உள்ள மீதி உள்ள அனைத்து உடல்களையும் (6 உடல்கள்) ஏப்ரல் 17ம் தேதி வரை பாதுகாத்து வைக்க உத்தரவிட்டுள்ளது.

கொல்லப்பட்ட 20 பேரின் உடல்களில் 14 பேரின் உடல்கள் எரிக்கப்பட்டுவிட்டன, எந்த அதிகாரம் அவர்களை மிரட்டியது என்பது அனைவரும் அறிந்ததே, இந்த உடல்கள் வெறும் உடல்கள் அல்ல ஆந்திர அரசின் இனவெறி படுகொலைகளை வெளிப்படுத்தும் ஆதாரம், ஒன்றிரண்டு உடல்களாக இருந்தாலும் அவைகள் தான் முக்கியம், 20 உடல்களும் எரிக்கப்பட்டுவிட்டால் அவ்வளவு தான் முடிந்தது ஒன்றுமே செய்ய இயலாது, அதற்காக தான் அரசு அழுத்தம் கொடுத்து எரிக்க வைக்கின்றன, 6 பேரின் உடல்கள் மட்டுமே எரிக்கப்படவில்லை, அதிலும் 3 பேர் உடல்களை நடுரோட்டில் போட்டு மக்கள் போராடிக்கொண்டுள்ளார்கள், இதைத்தான் திராவிட பொறுக்கிகள் வன்னியர்கள் 6 பேருக்காக மட்டும் வழக்கு தொடர்ந்த பாமக என்று சேற்றை வாரி இறைத்துக்கொண்டுள்ளார்கள்.


2009ல் காங்கிரஸ் தலைமயிலான மத்திய அரசின் ஆட்சியே கருணாநிதியின் ஆதரவினால் நடந்து கொண்டிருந்ததை போல அல்லாமல் தற்போது மத்திய அரசில் தமிழகத்தின் பங்கு எதுவுமில்லை, எனவே மத்திய அரசின் மூலம் அழுத்தம் தரமுடியாது, உணர்வுகளை வெளிப்படுத்த போராட்டங்கள், அழுத்தங்கள் தந்தாலும் பிற மாநில அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுகளுக்கும் மத்திய அரசுக்கும் மட்டுமே உள்ளது என்று பாமக கோர்ட் படியேறியது, சந்திரபாபுவுக்கு வலிக்காதது போல ஒரு அறிக்கை விட்டு பதுங்கி கொண்ட திராவிட கட்சிகள் மத்தில் கோர்ட் படியேறியது பாமக.

இந்த 20 பேர் படுகொலையில் திராவிட கட்சிகளின் சாயம் வெளுத்ததையடுத்து திராவிட பொறுக்கிகள் சாவிலும் சாதியரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர் திராவிட பொறுக்கிகள்.

புரிகிறதா தமிழா தமிழர்களை சாதிகளாக பிரித்து யார் அரசியல் செய்து அதிகாரத்தை சுவைக்கிறார்கள் என்று.

இவர்கள் குற்றச்சாட்டின் படியானாலும் எப்படி பார்த்தாலும் பாமக 6 உடல்களை பாதுகாத்து விட்டது, இந்த உடல்கள் வெறும் உடல்கள் அல்ல ஆந்திர அரசின் இனவெறி படுகொலைகளை வெளிப்படுத்தும் ஆதாரம், ஒன்றிரண்டு உடல்களாக இருந்தாலும் அவைகள் முக்கியம், ஆனால் 14 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன, பாமக மீது குற்றம் சொல்லும் இவர்கள் என்ன செய்தார்கள்?

http://www.thenewsminute.com/news_sections/3572

http://www.newindianexpress.com/cities/chennai/Madras-HC-Orders-Preservation-of-Six-Woodcutters-Bodies/2015/04/10/article2757789.ece

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D17-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7089233.ece

லீ குவான் யூ

ஒரு வாரமாக இவரைப்பற்றிய பேச்சுதான், நேற்று(சனி) முக்கியமான ஒரு கட் ஓவர் இருந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணி அளவில் தான் வீட்டுக்கு செல்வேன், காலை 10 மணிக்குள் அலுவலகம் வந்துவிடுவேன், வெள்ளி இரவு, சனி, ஞாயிறு முழுவதும் லீ அவர்களின் உடல் நிலை குறித்து செய்திகள் பார்த்துக்கொண்டே வந்தோம், திங்கள் அதிகாலை 3 மணிக்கு படுக்க சென்றேன், காலை எழுந்த போதே அந்த செய்தி பரவியிருந்தது, முதல் இரண்டு நாட்கள் அவரது உடல் குடும்பத்தினர்கள் அஞ்சலி செலுத்தவும் பின் புதன் அன்றிலிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

வெள்ளி இரவு ஆரம்பித்து சனி காலை வரை எனக்கு கட் ஓவர் இருந்தது, சனி இரவு 8 மணி வரை தான் லீயின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இயலும் என்பதால் வியாழன் மாலை அவரது உடல் வைக்கப்ப‌ட்டிருந்த பார்லிமெண்ட்டுக்கு செல்லலாம் என வியாழன் அன்று கருப்பு உடையணிந்து வந்திருந்தேன், புதன்கிழமையே  இரவு இருந்து வேலைகளை முடித்திருந்தோம், ஆனால் வியாழன் அன்று ஆறுமணிக்கு கிளம்பும் நேரத்தில் எங்கள் பிராஜெக்ட்டில் ஒரு பிரச்சினை வந்தது, அதை சரி செய்ய உட்கார்ந்தால் அன்று இரவும் போனது, வெள்ளிக்கிழமை  ஆரம்பித்து சனி காலை வரை அலுவலகம், அப்போதும் அஞ்சலி வரிசை நிலையை பார்த்துக்கொண்டே இருந்தேன் வெள்ளி இரவு 11 மணிக்கு வரிசை நிறுத்தப்பட்டது காலை 5 மணி வரை வரிசையில் ஆரம்பிப்பது குறித்து எதுவும் செய்தி இல்லை, காலை 6 மணிக்கு வீடு வந்து படுத்தவன் மாலை தான் எழுந்தேன்.


எனது மகனையும் லீ உடல் வைக்கப்பட்டிருந்த படாங்கிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தேன், ஆனால் முடியவில்லை, எனது மகனிடம் சரி வா ஜூராங்கில் போய் அஞ்சலி செலுத்தி விட்டு வருவோம் என்றேன், அவன் அதற்கு நான் ஏற்கனவே அஞ்சலி செலுத்திவிட்டேன் என்றான், எப்படி டா என்றேன்? எங்கள் வீட்டிற்கு கீழ் உள்ள சமுதாய கூடத்தில் லீயின் புகைப்படம் வைத்து அங்கே புத்தகம் வைத்திருக்கிறார்கள், இவன் அங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அஞ்சலி குறிப்பும் எழுதி வைத்திருக்கிறான்.


ஞாயிறு காலை நானும் மகனும் சென்று ஜூராங்கில் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தோம், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த செல்ல வில்லை என்ற வருத்தம் வாட்டினாலும் வேலை பொறுட்டு தானே செல்லவில்லை என்று தேற்றிக்கொள்கிறேன், லீ குவான் யூ அவர்கள் இறந்த பின்பு அரசு பொது விடுமுறை விடவில்லை, அவ்வளவு ஏன் இன்று அவரது இறுதி ஊர்வலத்தின் போது பல இடங்களில் பின்னால் பார்தால் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன, ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன, போக்குவரத்து தடை செய்யப்படவில்லை.


8 வயது ஆகும் மகன் 4 வயதில் ஒரு முறை போலிஸ் வேலைக்கு போக வேண்டும் என்று சொல்லியிருந்தான், நேற்று இரவிலிருந்து பல முறை லாயர் ஆக போகிறேன் என்கிறான், கேட்டால் மிஸ்டர் லீ லாயர் அவரைப்போலவே நானும் லாயர் ஆகப்போகிறேன் என்கிறான்.

இந்த ஒரு வாரத்தில் சிங்கப்பூரின் சிறு குழந்தைகளிடம் மிஸ்டர் லீ ஆழப்பதிந்துவிட்டார். உண்மையில் சொல்லப்போனால் நானொரு கொக்கு, வளமான குளம் நோக்கி பறந்தவன், என் படிப்பு திறமையை விற்று நல்ல வாழ்க்கையை தேட முனைந்தவன், சிங்கப்பூர் இல்லையென்றால் இன்னொரு ஊரில் இதை செய்திருப்பேன், அப்படி உள்ளே வந்தவன், இரண்டே வருசம், அப்படியே யுஎஸ் போயிடனும் என்று சொல்லி உள்ளே வந்தவன், அதன் பின் யுஎஸ் விசாவும், வேலையும் தயாராகி இருந்தும் சிங்கப்பூரை விட்டு போக மனமின்றி யுஎஸ் வாய்ப்பை விட்டுவிட்டேன். இனி நான் வளமான குளம் நோக்கி பறக்கும் கொக்காக இருக்க முடியாது, என் அடுத்த தலைமுறை இங்கே வேர் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

சிங்கப்பூரின் எல்லா புகழும் லீ குவான் யூ வுக்கே

கி,வீரமணி ஒரு மொக்கை, பாண்டே ஒரு ஆர்.எஸ்.எஸ் அடிவருடி

கி,வீரமணி ஒரு மொக்கை, பாண்டே ஒரு ஆர்.எஸ்.எஸ் அடிவருடி

தந்தி டிவியில் பாண்டே நடத்திய கி.வீரமணி கலந்து கொண்ட கேள்விக்கு என்ன பதில் என்ற நிகழ்ச்சியை பார்த்ததில் இரண்டு விசயங்கள் தெள்ளத்தெளிவானது

1) ஆசிரியர் கி.வீரமணி ஒரு மகா மொக்கை
2) ரங்கராஜ் பாண்டே ஒரு ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடக பீரங்கி

மிக மோசமாக நடத்தப்பட்ட இரு தரப்பிலும் எந்த தயாரிப்பும் இன்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சி போல தெரிகிறது. பாண்டே கேட்ட கேள்விகள் எல்லாம் பெரிய அதிபுத்திசாலி தனமான கேள்விகள் அல்ல, அவைகள் பார்ப்பனர்களால் காலம் காலமாக வீசப்படும் கேள்விகள், இது போன்ற கேள்விகளை பிரின்ஸ் என்னெரசு, நான் போன்றவர்களே சிலகாலங்களுக்கு முன் இணையத்தில் பார்ப்பனர்களால் எழுப்பப்பட்ட போது அனாயசமாக கையாண்டு பதில் கொடுத்திருந்தோம். கீழ்வெண்மணி படுகொலை குறித்த பெரியாரின் அறிக்கையை நானே கி.வீரமணி அவர்களிடம் நேரில் பேசியுள்ளேன், விமர்சனங்களை கூறியுள்ளேன், பாண்டேவின் எந்த கேள்வியும் புதியது அல்ல.

வீரமணி அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் பாண்டேவை அனாயசமாக கையாண்டு துவைத்திருக்கலாம், ஆனால் நிகழ்ச்சி முழுவதும் ஒரு கான்ஃபிடன்ஸ் இல்லாமல் அனுபவமற்ற புதியவரை போல பதட்டத்துடன் இருந்தார் கி.வீரமணி, அவருடைய உரைகளை நேரில் கேட்டறிந்தவன், அவருடன் நேரில் பேசியிருந்தவன் என்ற முறையில் இந்த பதட்டம் அவருக்கு எழ வாய்ப்பேயில்லை, ஆனாலும் பதட்டப்படுகிறார் எனில் களநிலவரம் அப்படி, திராவிடம் தற்போது தற்காப்பில் இறங்கியுள்ளது, திராவிடத்தின் அழிவு பாதையை வீரமணி உணர்ந்துள்ளார், அதனால் அவருக்கு பதட்டம் அதிகரிக்கிறது, நேற்று அவர் கொடுத்த பதில்களை பார்க்கும் போது  நிச்சயமாக வீரமணி அவர்கள் எழுதியதாக சொல்லப்படுகிற நூல்கள் எல்லாம் மண்டபத்தில் எழுதி கொடுக்கப்பட்டதாக தான் இருந்திருக்கும் என்ற அய்யம் எனக்கு எழுகிறது.

திராவிடம் குறித்து தமிழ் தேசியம் பார்வையில், தமிழர்கள் பார்வையில் ஏன் தமிழ்நாட்டு மக்கள் பார்வையில் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தும் பாண்டே வின் கேள்விகள் எல்லாம் பச்சை பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பார்வையில் இருந்துள்ளது.

இங்கே கட்டமைக்கப்படுவது என்னவெனில் திராவிடம் அதை விட்டால் ஆரியம் தான் தமிழ்தேசியம் என்ற ஒரு அரசியலே இல்லை என்பது போன்ற நிலையை காட்ட இரு தரப்பும் விரும்புகிறது.

தமிழர்களே கவனமாக இருங்கள்.

திராவிடமும் ஆரியமும் ஒன்னு, அறியாதவன் வாயில மண்ணு

"ஐ" ஷ‌ங்கர் போட்ட காஸ்ட்லி மொக்கை

"ஐ" ஷ‌ங்கர் போட்ட காஸ்ட்லி மொக்கை

அன்னியன் பட ஸ்க்ரிப்ட்டை முதலில் ஷங்கரிடமிருந்து பிடுங்குங்கப்பா, 5 கதையே ஒரே மாதிரி எடுத்தா அது பாலா, ஒரே கதையை 5 மாதிரி எடுத்தா அது ஷங்கர்னு சொல்வாங்க, ஆனா இப்போது அதுவும் போயிரும் போல பொய் காதல், அப்புறம் அதுவே உண்மை காதல் ஆவது, வில்லன்களை பழிவாங்குதல், கூடவே உதவுப‌வர் வில்லனாவது என ஒரு மொக்கை திருப்பம் கூட இல்லாத பழைய ஸ்க்ரீன் ப்ளே.

ஏதோ அந்த காலத்து படத்துல அசோகன், நம்பியார் எல்லாம் சுற்றி நின்று ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ என்று எம்ஜிஆரை கீழே தள்ளி உன்னை நாங்க என்ன செய்தோம் தெரியுமா என்று சுற்றி நின்று சிரிப்பது போன்ற ஒரு சீன் அதுவும் மிக முக்கியமாக நாட் ஓப்பன் செய்யற சீனை போய் இவ்வளவு பழசா யோசித்திருக்கிறாரே ஷங்கர்.

 கருடபுராணம் போல ஒரு ஒரு வில்லனையும் புதுவிதமாக பழிவாங்குகிறாராம், பூனை மாதிரி மீசை வைத்துக்கொண்டு ஒரு பாட்டு வருமே அது வரும் போதெல்லாம் கொட்டாவியே விட்டேன், படம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது தான் இடைவேளையே, செகண்ட் ஆஃப் செம மொக்கை.

மியூசிக் ஏ.ஆர்.ஆர் ஆம், சொல்லவே யில்லை, மெர்சலாயிட்டேன் பாட்டை தவிர மற்றதெல்லாம் நிக்கவே யில்லை, ஷங்கரோட படம் பார்க்கும்போது அதுக்கு முந்தைய படமே இதைவிட பரவாயில்லை என்று தோன்றும் அது போல இந்த படத்தை பார்க்கும் போது எந்திரன் தரத்தில் பாதிக்கூட இல்லை.

ஒரே நெகட்டிவ்வா இருக்கே பாசிட்டிவா என்ன இருக்கு என்றால்

நிச்சயமாக முதல் பாதி போரடிக்காமல் நன்றாக தான் செல்கிறது, கேமரா சூப்பர், ஸ்டண்ட் ஓகே அதுவும் ஜிம் ஃபைட் சூப்பர், காமெடி சந்தானம் வழக்கம் போல சரவெடி, அட பவர் ஸ்டார் கூட கலக்கியிருக்கார், ஏமி ஜாக்சன் சூப்பரா இருக்கார், இவரு நல்லா நடிக்கிறாரா இல்லையான்னே சொல்ல முடியலை ஒரே கன்பியூசிங். சீனா லொக்கேசன்ஸ் சூப்பர், ஆனால் அதில் வரும் காட்சிகள் சுத்தமாக இண்ட்ரெஸ்ட்டிங்காக இல்லை.

விக்ரம் இந்த ஒருவருக்காக‌ இந்த படத்தை நாலு முறை கூட பார்க்கலாம், என்னா உழைப்பு, என்னா அப்பியரன்ஸ், மிஸ்டர் தமிழ்நாடு வடசென்னை பையனா, அல்ட்ரா மாடலா, அகோரமாக உருமாறிய கூனனா, அதற்கு முன்பு ஒல்லியாகி வரும் சீனா எல்லாவற்றிலும் கலக்கியிருக்கார்.

விக்ரம் மட்டும் இந்த படத்தில் இல்லையென்றால் 100கோடி செலவுக்கு 1 கோடி கூட வசூல் ஆகியிருக்காது. ஷங்கரை பாராட்ட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயத்துக்காக பாராட்டலாம், திருநங்கைகளுக்கு காதல் வரும், அந்த காதலுக்காக அவர்கள் ஏங்குகிறார்கள், காதலுக்காக பழிவாங்கவும் கிளம்புவார்கள் என்று திருநங்கைகளுக்கும் காதல் உணர்வு உண்டு என்று எடுத்து சொல்வதற்காக வேண்டுமானால் பாராட்டலாம்.

படம் பிரம்மாண்டமா இருக்கு, படம் ரிச்னெஸ் சான்சே இல்லை, எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் தெரியுமா என்றெல்லாம் சொல்வீர்களேயானால் யானை போட்ட விட்டை பெருசாத்தான் இருக்கும், பெருசா இருக்கு என்பதாலேயே அது விட்டை இல்லையென்றாகிவிடாது.