அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்

அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்

2003ல் நடந்த அரசு ஊழியர்கள் போராட்டம் அந்த குடும்பத்தில் இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என யாருமே நினைத்திருக்கவில்லை, திருமணமான ஒரு பெண், திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் ஒரு பல்தொழில் நுட்பக்கல்லூரியில்(பாலிடெக்னிக்) குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் ஒரு பெண், பல் தொழில் நுட்பக்கல்லூரியின் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் ஒரு பையன் என மூன்று பிள்ளைகள், அதிர்ந்து கூட பேசாத , சைடு வருமானம் இல்லாத ஆசிரியர் அவர், இன்னும் நான்கைந்து வருடங்களில் ஓய்வுபெறப்போகின்றவர், ஆயுள் காப்பீட்டு கழகத்தில் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தவர், மாவட்ட ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி

ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அவர்களுடைய சேம நலநிதி, சேமிப்புகளில் பணம் 50% மட்டுமே தரப்படும்(இத்தனைக்கும் இது இவர்களின் சேமிப்பு) மீதி 5.5 ஆண்டுகளுக்கு சேமிப்பு பத்திரமாக தரப்படும் என்பதில் ஆரம்பித்து சரண்விடுப்பு என எத்தனை எத்தனையோ சலுகைகளும் உரிமைகளும் சிக்கன நடவடிக்கை என பறிக்கப்பட்டது, ஓய்வு பெறும் போது கிடைக்கும் கணிசமான அவர்களது சேமிப்பை நம்பியே மகனையும், மகளையும் கரையேற்றும் கனவிலிருந்தவர்களுக்கு இடியாக இறங்கியது, இதய அடைப்பு வந்து சிக்கி சிகிச்சைக்கான பணத்தேவைக்காக சேமிப்பு பத்திரத்தை சேட்டு கடையில் அடகுவைத்த கொடுமைகளை கண்டபோது கோபம் வந்ததை தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாத கையாலாகத்தனம் நோகவைத்தது.

இதற்கெல்லாம் முடிவுகட்ட பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் தொடங்கினர், அன்று தெரியாது அவர்களுக்கு ஒரு கொடுமையான காலகட்டத்தை, கோர முகத்தை பார்க்கப்போகிறார்கள் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் தொடங்கியது, போராட்டத்தின் முதல் நாளன்றே கைது செய்யப்பட்டு மத்தியசிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் அந்த ஆசிரியர், அடுத்த நாள் பாய்ந்தது டெஸ்மா சட்டம்(Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002), முன் தேதியிட்டு அமல் செய்யப்பட்ட சட்டம் ஒரு அரச பயங்கரவாதத்திற்கு சமமானது, ஊழியர்களின் உரிமைகளை பறித்த சட்டம், வேலை நிறுத்தம் என்பது மட்டுமே ஊழியர்கள், வேலையாட்களின் ஒரே ஆயுதம், உரிமை அந்த உரிமை பறிக்கப்பட்டது, இலட்சனக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர், பலரும் தாம் வேலையிலிருக்கின்றோமா இல்லையா என்பதை அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் இருந்து மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய நிலை.

குடும்பத்தலைவர் வேலை இழந்தார், சிறைவாசம், இதையெல்லாம் அனுபவிக்க அவர் இலஞ்சம் வாங்கவில்லை, கொலை செய்யவில்ல, உயிரோடு யாரையும் எரிக்கவில்லை, பொய் கையெழுத்து போடவில்லை, கஞ்சா வைத்தில்லை, அவர் போராடியது இழந்து போன அவர்களுடைய உரிமைக்காக… சிறையிலிருந்த அவருக்கும் தெரிவிக்கப்பட்டது, பின்பு இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வேலை நீக்கம் நீதிமன்ற தலையீடு, மன்னிப்பு கடிதங்களுக்கு பிறகு 5000க்கும் மேற்பட்டோர் தவிர்த்து பிறருக்கு வழங்கப்பட்டது, அந்த குடும்பத்தலைவர் இந்த வேலை நீக்க பட்டியலிலும் இருந்தார், மீண்டும் இவர்கள் மாநில நிர்வாக தீர்பாணையத்தில் முறையிட்டு அதன் பிறகு ஜெயலலிதாவிற்கு பிடித்த 9 எண் கூட்டுத்தொகை வரவேண்டுமென நீக்கப்பட்ட 999 ஊழியர்களில் இவரும் ஒருவர், படிப்பு முடிக்காத மகன், திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு மகள் மூத்தமகளின் திருமணத்திற்கு வாங்கிய கடன் இன்னும் அடைக்காமல் இருக்கும் நிலை… மேலும் ஒரு இடி இறங்கியது அந்த குடும்பத்தில் அதீத அழுத்தத்தினால் மாரடப்பு (ஹார்ட் அட்டாக்) ஏற்பட்டு சில இலட்சம் செலவு செய்தார்கள் அவர்களுடைய சக்தியையும் மீறி , உயிருக்காக போராடி மீண்டார், பாராளுமன்ற தேர்தல் வந்த போது மீண்டும் வேலை வழங்கப்பட்டு இன்று நிரந்தர இதய நோயாளியாக மனம் உடைந்து தள்ளாடி நடந்து போகும் நெடு நெடுவென உயர்ந்த மனிதர் இன்று சுருங்கி தளர்ந்து போய்கொண்டிருப்பதற்கு அவர் என்ன கொள்ளையடித்தாரா? கொலைசெய்தாரா? உயிரோடு யாரையும் எரித்தாரா? பொய் கையெழுத்து போட்டாரா? கஞ்சா வைத்திருந்தாரா?

ஊழியர்களின் உரிமை வேலை நிறுத்தம், அவர்களின் கோரிக்கைகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அல்லது பேச்சு வார்த்தைக்கு அழைக்கவே படாமல் தான் வேலை நிறுத்தம் என்ற அவர்களின் உரிமை ஆயுதத்தை கடைசியில் எடுத்தனர், ஆனால் அராஜக அதிமுக அரசு செல்வி ஜெயலலிதாவின் ஆணவத்தினால் நசுக்கப்பட்டு நீதிமன்றங்களும் ஊழியர்களின் உரிமை பிடுங்கப்பட்டதை நியாயப்படுத்திய து(நீதி மன்றங்களின் மீது இது தொடர்பாக மிகக்கடுமையான விமர்சனம் உண்டு), செய்தியில் ஒரு பெண் அரசு ஊழியர் கூறியது போராட்டமா நடத்துகின்றீர் உங்கள் மீது விபச்சார வழக்கு போட்டு உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டினார்கள் என்றார், நீங்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு காலத்தில் உங்கள் உயிருக்காகவோ உங்கள் உரிமைக்காகவோ ஜெயலலிதாவின் அரசை எதிர்க்கும் நிலை ஏற்படுகின்றதோ அப்போது இதே விபச்சார வழக்கு மிரட்டல் எல்லா வீட்டு பெண்களுக்கும் ஏற்படும்,.

நாஜிக்கள் கம்யூனிஸ்ட்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் கம்யூனிஸ்ட் அல்ல


நாஜிக்கள் யூதர்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் யூதனல்ல

அய்யோ
நாஜிக்கள் என்னை கொல்லவருகின்றனர்
யாருமே அதை கேட்கவில்லையே

என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றது

அராஜக அதிமுக அரசை எதிர்த்து விழும் ஒவ்வொரு வாக்கும் போராட்ட காலத்தில் உயிர் நீத்த அரசு ஊழியர்களுக்கான அஞ்சலியாக இருக்கட்டும்.

உயிர் உரிமைப்பிரச்சனைகள் தான் எமக்கு தலையாய பிரச்சினை மற்றவைகள் எல்லாம் அதற்கு பிறகு தான்…

அட்சய திருதை - தி.மு. - தி.பி.

அட்சய திருதை - தி.மு. (திருமணத்திற்கு முன்)

அல்வாசிட்டியின் ஏதோ ஒரு பதிவில்: குட்டி இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு நகைக்கடைகளில் கூட்டம் என்ன என்று விசாரித்தால் அட்சயதிருதையாம், அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது அட்சய திருதை அன்று என, உள்ளே மனைவிகள் வெள்ளிகளை(டாலர்) தங்கமாக்கி கொண்டிருக்க வெளியே அழும் குழந்தைகளை சமாதானப்படுத்தியபடி பாவமாக கணவர்கள்.... இப்படி நீண்டது அந்த பின்னூட்டம்

அட்சய திருதை - தி.பி. (திருமணத்திற்கு பின்)


என்னங்க அடுத்த வாரம் அட்சய திருதை...

என்னது அட்சய திருதையா அதெல்லாம் வியாபாரிகள் செய்யும் விற்பனை தந்திரம் என்று தொடர்ந்த பேச்சின் மீதியை கேட்கத்தான் யாருமில்லை அங்கே

*****

தம்பி அட்சய திருதைக்கு ஒரு கிராம் வாங்கி சாமிக்கு படைங்க....

ஆகா நீங்களுமா?


*****

ஏப்ரல் 30

ஹலோ நான் தான் பேசுறேன், இன்னைக்கு முஸ்தபால கிராம் ரேட்டு எவ்வளோங்க...

மேலிடத்தின் தணிக்கைக்குப் பிறகு அனுமதியோடு இந்த பதிவு வெளியிடப்படுகின்றது, எனவே இதைப்பற்றி மேலிடத்தில் போட்டுக்கொடுக்க நினைப்பவர்களுக்கு சாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

தினமலருக்கு என்ன ஆச்சி?

பிராமண சங்கம் ஒரு சாதி சங்கம்; அந்த ஜாதியின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட என்பது எல்லோருக்கும் தெரியும்; அரசியல் கட்சியாக வளரும்போது ஒரு ஜாதிக்காக மட்டும் போராட முடியாது ஏனென்றால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர வாய்ப்புண்டு உதாரணத்திற்கு வன்னியர்களுக்காக பாமக ஆரம்பிக்கப்பட்டது வன்னியர் சங்கத்தில் இருந்த தலைவர்கள் ராஜினாமா செய்துவிட்டு பாமகவில் பொறுப்பேற்றனர் அதற்கு காரணம் ஜாதிகட்சியிலும் அரசியல் கட்சியிலும் ஒரே நேரத்தில் பொறுப்பு வைத்துக்கொள்வதில்லை என்பதால் தான்.

பாமகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர்ந்தனர், இதனால் தான் இன்று பாமக வளர்ந்துள்ளது அதனால் தாம்ப்ராஸ் பதவியில் இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு....மேலும் படிக்க இங்கே
தினமலரின் இது உங்கள் இடம் பகுதியில் சிந்திப்பார்களா தாம்ப்ராஸ் உறுப்பினர்கள் என்ற தலைப்பில் துரை.ராமகிருஷ்ணன் பம்மல் சென்னையிலிருந்து எழுதியதாக வெளியிடப்பட்டுள்ளது....
(எப்படிப்பா தினமலரில் இருந்து அத்தனை பெரிய பெரிய செய்திகளை பதிவிடுகின்றனரோ? ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா தினமலரிலிருந்து யுனிகோடாக மாற்றுவதற்கு, பார்த்து பார்த்து ஈ-கலப்பையில் அடிப்பதற்குள் ஸ்ப்ப்ப்பா....)

ஒரு வேளை இந்த செய்திக்கும் அதிமுகதான் எங்கள் எதிரி, பிராமணர் சங்கம் என்ற செய்திக்கும் அல்லது தினமலர் தில்லுமுல்லு என்ற செய்திக்கு தொடர்பு இருக்குமோ

நான் சொல்லவந்தது ஏதேனும் புரிகிறதா?

இவர்களும் இந்தியர்கள்படத்திற்கு நன்றி
விகடன்.காம்

களைந்(த்)த ஆடைகள்
சொல்லிக் கொள்(ல்)வோம்
இவர்களும் இந்தியர்கள்
உரக்க சொல்வோம்
ஜெய்ஹிந்த்

இப்படி தான் பதில் சொல்லனுமோ?

இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நாகரீகம் இந்த முறை வெகுவாக குறைந்துவிட்டது.


தாழ்த்தப்பட்ட சாதி என்று கூட எழுதாமல் தாழ்ந்த சாதி, கீழ் சாதி என்று தம் மன அழுக்கை காட்டியுள்ளனர் மேலும்

சிலந்திவலை என்ற வலைப்பதிவில்

//குறைந்த மதிப்பெண் பெற்ற சில பிற்படுத்தப்பட்ட(முதலில் தாழ்ந்த ஜாதி என்று எழுதி சிலர் சு(தி)ட்டி காட்டிய பிறகு பிற்பட்ட என்று மாற்றினார் ) ஜாதி மாணவர்களை அவர்கள் தகுதிக்கு மீறிய கல்விக்கூடங்களில் சேர்த்துவிட்டால் போதுமா?// என்று விடத்தை கக்கிவிட்டு பிறகு

//ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா ஜாதியிலும் அறிவில் சிறந்த மாணவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய கல்விக்கூடங்களில் சேர்வதற்கு ஒதுக்கீடு எதுவும் தேவையில்லை.// இப்படியும் எழுதியுள்ளார்

// இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் பாதிப்பேர் எப்படியோ சமாளிக்கிறார்கள் என்று வைத்துகொண்டாலும், 25% தேர்ச்சி பெறக்கூட முடியாதவர்களாக போனால் //
என மொத்தமாக கேவலப்படுத்துகின்றார்

அந்த விடம் கக்கிய பதிவின் சில பின்னூட்டங்கள்

//இட ஒதுக்கீடு என்ற பெயரில் சீட் வாங்கிவிட்டு ஒரு சிலர் அடித்த கூத்துகளை பார்க்கும்பொழுது வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. மொத்த ஸ்காலர்ஷிப் பணத்தையும்(பெற்றோர்கள் பணக்காரர்கள்)
வாங்கி மது,மாது என்று அமோகமாக வாழ்ந்தார்கள்.
//

இனி இட்லி வடையின் பதிவில்

//அவர்களின் சிறுசிறு தவறுகள் கூட ஒதுக்கீட்டைச் சொல்லி ஏளனப்படுத்தப் படுகின்றன. 'ரிசர்வேஷன்ல படிச்சுட்டு வந்து விஷயமும் தெரியாம நம்ப தாலியை அறுக்குறானுக!' என்று சொல்லியிருக்கிறோம், அலுவலகங்களில் கேட்டே வருகிறோம்.
//

//கிட்டத்தட்ட LKG, UKG யிலிருந்து ஆரம்பித்து 14 வருடங்கள் ஒரே கல்விநிறுவனத்தில் படித்தும், அத்தனை வருட இடைவெளியில்கூட சக மேல்சாதி(என்றழைக்கப்படுகின்ற) மாணவனுக்குச் சரியாக தன்னை வளர்த்துக்கொள்ள முடியாமல் +2 முடித்ததும் மேலே படிக்க இட ஒதுக்கீடு வேண்டுமானால் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
//

//49.5 இட ஒதுக்கீட்டை மத்திய அரசு இத்துடன் நிறுத்திவிட கூடாது - ரானுவம், பாராளுமன்றம், சட்டசபை, அமைச்சர்கள், இந்திய கிரிக்கேட் அணி ஏன் வலைப்பதிவில் கூட கொண்டு வர வேண்டும்
//
எத்தனை விடம் தோய்த்த கேலி

இனி சில பின்னூட்டங்கள்

//வலைப்பதிவு... ஹி.. ஹி... நாங்க திறமை காமிச்சாதான் கிடைக்கும்னு இருக்கச் சொல்ல தான் ஒதுக்கீடு கேப்போம். வலைப்பதிவு ஆத்தோட தண்ணி; நீயும் குடி, நானும் குடி, அள்ளிக் குடி மேட்டரு. . . அதுக்கெல்லாம் ஒன்னும் வேணாம் போ!

வேணும்னா, மேல்குடி இவ்ளோ சனம்தான் பதிவு வெக்கலாம்னு ஒரு லிமிடேசன் ரூல் வெக்கிலாம். அப்பவும் இந்த முகமூடிகளை எந்த கணக்குல சேர்க்க?..
//

//இப்படி எல்லாவற்றிற்கும் 'அவாளையே' குத்தம் சொல்லிக் கொண்டிராமல், கொஞ்சம் தன்நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அநாவசிய ஆத்திரங்களைக் குறைத்தால், இட ஒதுக்கீடும் வேண்டாம்; ரத்த அழுத்தமும் வராது.

தவறாக எண்ண வேண்டாம்.
//
//
I challenge the concerned jokers to go ahead with 50% Reservation for not only students but also for teaching staff. Its better that Government builds one more IIT and IIM and call them RIIT and RIIM (R stands for you know what) and let others live in peace and maintain their standards. RIIT and RIIM may be put under AICTE for added glory. It will be wiser for the government to offer the best of education from primary education and make them face the world rather than give them feel of artificial security by reservation.

Naam Arjun Raknewala sab Yudh nahi jeeet saktein
aur IIT IIM koi Kurushetra bi nahi hein
Na is Arjun ke paas koi Krishn bhi hai
Paritranaya sadhunam vinasaya Sathuskratham
Dharma samsdha banarthaya sambavami yuge yuge
Tora Tora Tora
//

என்று தனியும் இந்த பிரச்சாரம் என்ற என் பின்னூட்ட பதிவில் வந்த சில பின்னூட்டங்கள்

At 9:18 PM, அப்பாவித்தமிழன் said…

//மிக்க நன்றி இதனால் இழப்பு அந்த நிறுவனத்திற்கு தான், திறமையில்லாமல் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இன்று உலகம் பூராவும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத்துறையில் புகுந்து விளையாடுகின்றனர் என்பது அன்னாத்தைக்கு பிரியுமோ இல்லையோ//

ண்ணா, சூப்பர்ங்ணா. அப்புறம் யாரை ஏமாத்தறதுக்குங்க்ணா இன்னும் இட ஒதுக்கீடு? 'புகுந்து விளையாடறவங்க' ஏங்ணா சைட்லயே புகுந்து விளையாடணும்?

இன்னும் எந்தெந்த பதிவில் எந்தெந்த பின்னூட்டங்களில் எத்தனை விடங்கள் கக்கப்பட்டுள்ளதோ!

தயிர் சாத குடும்ப சூழல் என்று நான் அடித்த நக்கலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.


தாழ்ந்த சாதி, கீழ் சாதி, Reservation IIT, தகுதிக்கு மீறிய கல்வி என்றெல்லாம் பேசுபவர்களிடமும் நக்கல், நையாண்டி செய்பவர்களிடமும் எத்தனை விவாதம் செய்தாலும் ஆகாது....

அவர்களுக்கான பதில் கீழ்கண்டவாறு தான் இருக்க வேண்டும் போல

மேல்சாதியினர் புத்திசாலித்தனத்தினால் பெறுகிறார்கள் என்றால் மற்றையவர்கள் அவர்களின் அரசியல் பலத்தினால் பெறுகின்றனர், மேல் சாதியினருக்கு புத்திசாலி தனம் பலமென்றால் மற்றவர்களுக்கு அரசியல் பலம், இட ஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் ரீதியாக ஒழிக்க முடிந்தால் ஒழித்து கொள்ளுங்கள்....

மேலே நான் சொன்னது தாழ்ந்த சாதி, கீழ் சாதி, Reservation IIT, தகுதிக்கு மீறிய கல்வி என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும் மட்டுமே... மற்றபடி இதை வைத்து திரித்தல், சொறிதல் செய்பவர்கள் தாராளமாக செய்து கொள்ளலாம்

ஐ.ஐ.டி. யின் உள்வட்ட விளையாட்டுகள்

IITயின் B.Tech பிரிவுக்கு IIT-JEE என்ற நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர், M.Tech பாடப்பிரிவுகளுக்கு பெரும்பாலும் GATE நுழைவுத்தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுகின்றனர், ஆனால் இவை இரண்டு மட்டுமில்லாமல் பல படிப்புகள் IIT களில் உள்ளன.

Project Assitant என்றொரு தற்காலிக பணி IITகளில் உண்டு, இதற்கு குறைந்த பட்ச தகுதியாக பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அந்த துறைத் தொடர்பான பட்டம் பெற்றிருக்க வேண்டும், இந்த தற்காலிக பணியிடத்திற்கு 1998ல் சம்பளம் ரூபாய் 5,500 (தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை), இந்த பணியிடத்திற்கு குறைந்த பட்ச படிப்பு தகுதி தவிர மற்றவை வெளிப்படை யாக இல்லை, யாரை project assistant ஆக தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதற்கு பேராசிரியர்களுக்கு முழு உரிமை உண்டு என்றே கருதுகின்றேன், மேலும் இந்த பணியிடத்திற்கான விளம்பரங்கள் பெரும்பாலும் பத்திரிக்கைகளில் வருவதில்லை, IITயின் துறை பலகைகளில் (department notice board) மட்டுமே பல சமயங்களில் வெளியிடப்படும், சுற்றி வளைத்து சொல்லாமல் நேரடியாக சொல்ல வேண்டுமெனில் IITயில் Project Assitant ஆக சேருவது பேராசிரியர்களின் கையிலுள்ளது.

M.S. என்றொரு படிப்பு IITகளில் உண்டு, இது M.Tech.ற்கு இணையான படிப்பு என்று கருதப்படுகின்றது, இதற்கும் Project Assitant போலவே குறைந்த பட்ச கல்வி தகுதிகள் வேண்டும், அதை தாண்டி GATE score வேண்டும், ஆனால் M.Tech படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவது போன்ற வெளிப்படையான தேர்வு முறை இங்கு இருக்கிறதா என்பது சந்தேகமே!, GATE score அதிகம் வைத்திருப்பவர்களை விட குறைவாக வைத்திருப்பவர்களுக்கும் இந்த படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு, Project Assitant ஆக அந்த துறையில் சில ஆண்டுகள் வேலை செய்துள்ளவர்கள் GATE score வைத்திருந்தாலே M.S. படிப்பில் இடம் கிடைக்கலாம் பேராசிரியர்கள் நினைத்தால்.


சந்திப்பின் இந்த பதிவிலிருந்து கீழ்கண்ட புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது, அவருக்கான தகவல் ஆதாரம் Dalits at the Indian Institutes of Technology
// சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் பணிபுரியும் 427 ஆசிரியர்களில் இரண்டுபேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். 20 பேர் ஓ.பி.சி., மீதி 400 பேர் பிராமணர்கள்.//

Project Assitant வேலைக்கு சேர அனுமதிப்பது பேராசிரியர்கள் கையில், Project Assitant வேலை செய்திருந்தால் MS படிப்பில் இடம் கிடைக்கலாம்…. 1998ல் இருந்த இந்த நிலமை இப்போது மாறிவிட்டதா என்று தெரியவில்லை....

http://www.iitm.ac.in/Academics/Ordinances.html#MS

இது தொடர்பான விவரங்கள் அறிந்தவர்கள் மேலும் தகவல்களை தாருங்கள்....

விஜயகாந்த்தின் விஜயம் ஜெயமாகுமா? மீள்பதிவு

இது முன்பே எழுதப்பட்ட பதிவு இங்கே ஒருமுறை மீண்டும் மீள் பதிவு செய்கின்றேன்.

விஜயகாந்த் அவர்களே தாங்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளீர், மக்கள் மாற்றாத்தை விரும்புவதாக வேறு ஒவ்வொரு கூட்டத்திலும் கூறுகின்றீர்... இதற்கு தினமலரும்,குமுதம் வேறு அது இது என்று உங்கள் ஆதரவு நிலையெடுத்துள்ளன, அவர்கள் சொல்வதெல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், இந்த நிலையில் இப்போதுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து எந்த விதத்தில் மாறுபடுகின்றனர்.

முதலில் புரட்சிக்கலைஞர் என்று ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளீரே நீங்கள் செய்த புரட்சி என்ன? ஒருவேளை கதாநாயகியின் தொப்புளில் பம்பரம் விட்டதோ! உங்களைவிட 20 அல்லது 25 வயது குறைந்த கதாநாயகியோடு டூயட் பாடுகின்றீரே அதுவா? 45 வயதிற்கு மேலும் இன்னமும் சுவற்றில் கால்வைத்து படங்களில் சண்டை போடுகின்றீரே அதுவா? சற்று விளக்கம் தருகிறீரா?

ஆடம்பர அரசியலில் இருந்து மாறுபடப்போகின்றீரா?

மாவட்ட எல்லையிலிருந்து 100 கார்களில் பவனி வருகிறீர், கட்-அவுட்,சுவரொட்டி எல்லாம் தூள் பறக்கின்றதே உங்களின் விழாக்களில்.

சட்டத்தை மதிது நடக்கப்போகிறீரா? வன்முறைக்கு முடிவுகட்டப்பொகின்றீரா?

பாமகவோடு மோதியபோது உங்களது விசிறிகள் கூட பாமக கொடிக்கம்பங்கள்,அலுவலகங்களை உடைத்தனரே? இவர்களை வைத்துக்கொண்டா வன்முறைக்கு முடிவு கட்டப்போகின்றீர்

நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரானவரா?

ஒவ்வெரு படத்திற்கும் பல கோடி வாங்குகின்றீரே சரியான வருமான வரி கட்டுகின்றீரா? உமது பொறியல் கல்லூரி விதிப்படிதான் இயங்க்குகின்றதா? அங்கே அரசாங்கம் அனுமதித்தற்கு மேல் எந்த விதத்திலும் கட்டணம் வாங்கப்படவில்லையா?

குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவீரோ?
கருனானிதி,மூப்பனார்,இராமதாசு,வாழப்பாடி இராமமூர்த்தி வாரிசுகள் இப்போது அவர்களின் அரசியல் வாரிசாக உள்ளனர், உமது மன்றங்களில் கூட உங்கள் மனைவி மற்றும் மைத்துனரின் ஆதிக்கமாமே? இந்த கிச்சன் கேபினட் அரசியலிலும் தொடருமா?

தனி மனித ஒழுக்கம்?
இது சற்றே அதிகப்படியான எதிர்பார்ப்புதான்,எல்லோருக்குமே தெரியும் அது எந்த அளவுக்கு உள்ளது என்று.

விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை எதிர் நோக்கும் சகிப்புத்தன்மை?
தங்களை எதிர்த்து நடிகர் சங்கத்தேர்தலில் பெயர் தெரியாத நாடக நடிகையை மிரட்டியது, அவர் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றது அவரை பேட்டிகண்ட நிருபரையும், பத்திரிக்கைகாரையும் பத்திரிக்கையிலிருந்த செல்வாக்கை வைத்து திரைய்லக செய்தி சேகரிப்பு பிரிவிலிருந்து நீக்கியது இவையெல்லாம் உங்களது விமர்சனங்களை எதிர்நோக்கும் சகிப்புத்தன்மையை காட்டுகின்றது.

ஆடம்பர,வன்முறை,குடும்ப அரசியல்,தனிமனித ஒழுக்கம்,விமர்சனங்களை எதிர்நோக்கும் சகிப்புத்தன்மையின்மை, நேர்மை இவைகளில் இப்போதிருக்கும் அரசியல் வாதிகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை, எனவே என்ன வித்தியாசம் காட்டபோகின்றீர் என தெரிந்து கொள்ளலாமா?
உங்கள் ஆதரவு நிலை எடுத்திருக்கும் குமுதமும் தினமலரும் உங்களிடமிருந்து என்ன வித்தியாசத்தை கண்டுகொண்டார்கள் என தெரியவில்லை.

கீழ்கண்டவைகளை அரசியலுக்கு வருமுன் சற்று யோசிக்கவும்

சினிமாக்கார்கள் தும்மினாலும் கூட செய்தியாகும்,கூட்டம் கூடும் பூமியிது.... ஆனால் கூட்டமெல்லாம் ஓட்டாகுமா? ராமராஜனுக்கும்,பாக்கியராஜீக்கும் கூடிய கூட்டமெல்லாம் வேறெந்த நடிகருக்கும் கூடியதில்லை... ராமராஜன் 500 ரூபாய்க்கு சிங்கி அடிக்கின்றார், பாக்கியராஜ் கடனில் மூழ்கியுள்ளார்,
நீங்கள் வரும்படி வரும் பொறியியல் கல்லூரி,திருமணமண்டம, திரையரங்கம் என முதலீடு செய்துள்ளீர், இதெல்லாம் நிலைக்க வேண்டும்?

ஊருக்கு நூறு ரசிகன் (இதில் ரஜினி கமல் விஜய் அஜீத் என அவர்கள் ரசிகர்களும் அடங்கும்) என்றாலும் அந்த நூறும் உம் ரசிகர்கள் என எடுத்துக்கொள்வோம்... இந்த நூறு ஓட்டும் உமக்கே என்றாலும் மன்றம் என்று குடும்பத்தை கவனியாமல் அலையும் அவர்களுக்கு எதிராகத்தான் அவர்கள் குடும்ப ஓட்டு விழும்

நீர் கோலத்தில் பாய்ந்தால் அரசியல்வாதிகள் புள்ளியில் பாய்வர், உம்மைவிட அதிக விசிறிகள் பலம் வாய்ந்த ரஜினிக்கு அரசியல்வாதிகளொடு மோதி ஏற்பட்ட தோல்வியை எண்ணிப்பார்க்கவும்,

தமிழக அரசியலில் கட்சியைவிட சாதிக்கு முக்கிய இடம் உண்டு, தங்களுக்கு அந்த பலம் உண்டா? தமிழகத்தை மட்டும் கணக்கில் கொள்ளவும், ஆந்திராவிலிடுந்து இங்கு வந்து ஓட்டு போடமுடியாது!

பத்திரிக்கைகளை நம்புகிறீரா? அய்யோ பாவமே... உங்கள் பேட்டியை நடுப்பக்கத்தில் போட்டுவிட்டு முதல் பக்கத்தில் கும்பகோணம் தீ விபத்திற்கு நீங்கள் அறிவித்த பணம் எங்கே என கேள்வி கேட்பர், ரஜினிக்கு ஆப்பு வைத்தவர்களே இந்த பத்திரிக்கைகள் தான்.

சுனாமி உமக்கு ஒரு நல்ல வாய்ப்பு தந்தது, பாதிக்கப்பட்டபர்களுக்கு உதவி செய்து நல்லப்பெயர் வாங்கியிருக்கலாம்... இருந்தாலும் விவேக் ஓபராய் செய்த உதவிகளை கொச்சைப்படுத்தி அவர்மீது பாய்ந்ததெல்லாம் ஒரு விடயமே இல்லை... தமிழக மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.

உமது நிர்வாக திறமை அனைவரும் அறிந்ததே, நடிகர்கள் கோடிகோடியாக சம்பாதித்தாலும் நடிகர் சங்கக்கடனை நடிகர்களிக் கைக்காசை போடாமல் கலைநிகழ்ச்சிவைத்து ரசிகர்களிடமிருந்து வசூலித்து அடைத்ததே நல்ல சான்று.

முதல்வராக முதல்லில் எதிரியை மாற்றுங்கள்... பாமகவும், மருத்துவர் இராமதாடுவும் தமிழக அரசியலில் 3 (அ)4 வது இடத்திலுள்ளனர், அவரோடு மோதினால் உமக்கு அதிக பட்சம் 3 (அ)4 வது இடம் தான் கிடைக்கும், இப்போது உமது படம் பிரச்சினையின்றி வெளியாகவும் உமது பொறியியல் கல்லூரி வியாபாரம் நன்றாக நடக்கவும் செல்வி.ஜெயலலிதாவை எதிக்கவில்லையென்றால் உமக்குக் முதலிடம் கனவு மட்டுமே

உமக்காக ஜெயலலிதா பாமகவின் மீது நடவடிக்கை எடுக்க அவர் ஒன்றும் அரசியல் கத்துக்குட்டி அல்ல, பாமகவின் பலமும் வட மாவட்டங்களிலே அவர்களது கூட்டணியின்றி வெற்றிபெறுவது கடினம் எனவும் அவருக்கு தெரியும்.

கும்பல் கூடினால் 4 பேர் வருங்கால முதல்வர் என கூவினால் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத்தான் செய்யும், அதுவும் பாமகவின் கோட்டையான கள்ளக்குறிச்சியிலும் திருவண்ணாமலையிலும் கூடிய கூட்டம் இன்னும் 2 பட்டாம் பூச்சிகளை கூடுதலாக பறக்கச்செய்யும்... ஆனால் கூட்டமெல்லாம் ஓட்டாகுமா?

அரசியலுக்கு வாருங்கள் அது உமது உரிமை, ஆனால் நான் வித்தியாசமானவன்,மக்களுக்கு மாற்றம் தரப்போகின்றேன் என ஜல்லியடிக்காமல் வாருங்கள், உங்களுக்காக குமுதமும் தினமலரும் ஜல்லியடித்தாலும் ஒரே ஒரு தோல்வி அவர்களை உமக்கு எதிராக மாற்றிவிடும், ரஜினிக்கும் அதேதான் நடந்தது.

அரசியலில் வாழ்ந்த நடிகர்களைவிட வீழ்ந்தவர்கேளே அதிகம். எனவே கவனம் தேவை

மற்றைய விஜயகாந்த் தொடர்பான என் பதிவுகளின் சுட்டிகள்

விஜயகாந்த்தின் முதிர்ச்சி

இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்

WE ARE THE IMMORTAL, BE CAREFUL.

ரஜினிக்கு ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் அதை எடுத்து குழலி பதிவில் போட்டதால் குழலிக்கு ரஜினியின் முரட்டு பக்தரிடமிருந்து வந்த அன்பு மடல்... மின் மடலை தெளிவாக படிக்க படத்தின் மேல் கிளிக்கவும்ம்... தெருவில் சுவரொட்டி ஒட்டிய ரஜினி ரசிகர்களுக்கு இப்போதாவது புரிந்தது, மின் மடல் அனுப்பத்தெரிந்த இந்த முரட்டு பக்தர்களுக்கு(?!) எப்போது புரியும்?!

ஹி ஹி ஒரே ஒரு கேள்வி ரஜினிக்கு,... ரஜினி எப்போது பா.ம.க விற்கு வாக்களிக்கப்போகின்றார்? அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலயும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவர் மாம்பழத்திற்கா வாக்களிக்கமாட்டார்?....

இது எப்படி இருக்கு

இந்த சுட்டியில் இன்னும் சில தகவல்கள்

சாருவை மிரட்டிய ரஜினி ரசிகர்கள்

எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

என்று தணியும் இந்த பிரச்சாரம்...

இட்லிவடையின் 49.5% என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் இங்கே பதிவாக

இதில் கனிமொழி எழுதியது எத்தனை, இட்லி வடை இணைத்தது எத்தனை என்று கனிமொழி எழுதியதின் சுட்டி தந்திருந்தால் சரிபார்க்க வசதியாக இருந்திருக்கும்...

//பிள்ளை பத்தாம் வகுப்பு வந்ததும் பெற்றோர்கள் பல தியாகங்களுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். முதல் கட்டமாக வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குமுதம், ஆனந்த விகடன் நிறுத்தப்படுகின்றன. இந்து நாளிதழ் அவசியமாகிறது. அப்பாக்கள் வீட்டிற்கு நண்பர்களை அழைப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அம்மாக்கள் பொதுத் தேர்விற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நீண்ட விடுமுறைக்கு அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்கள்.

இதுவே 12ஆம் வகுப்புத் தேர்வாக இருந்தால் குடும்பமே தயிர்சாதம், பச்சை மிளகாய்க்கு மாறிக்கொள்கிறது. மிச்சப்படும் பணத்தை கணக்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், practicals என்று சிறப்புப் பாட ஆசிரியர்களுக்குக் கொடுத்து சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். சிறப்பு வகுப்புகள் காலை சுமார் ஆறு அல்லது ஐந்தே முக்கால் மணிக்குத் துவங்கி, பள்ளி நேரங்களில் 'பிரேக்' விட்டு மாலை மீண்டும் கூடி இரவு 10, 11க்கு முடியும்......
//
ம்... இப்படி இருக்க மாணவனுக்கும் அவன் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கும் முதலில் விழிப்புணர்ச்சி வேண்டும், எத்தனை குடும்பங்களுக்கு இந்த விழிப்புணர்ச்சி இருக்கின்றது, இந்த விழிப்புணர்ச்சிக்கு பின்புலமாக இருப்பது எது? எப்படி வந்தது இந்த குடும்பங்களுக்கு மட்டும் விழிப்புணர்ச்சி?

வசதி படைத்த விவசாய குடும்பங்களிலும் இன்றும் வயலுக்கு மருந்தடிச்சாச்சா? நேத்து வாங்கிட்டு வந்த பால்டாயில் எரவாணத்துல சொறுவியிருக்கு பார்த்து எவனாவது மருந்தடிச்சி நம்ம தாலியறுக்க போறானுங்க என்று எச்சரித்துவிட்டு இன்னைக்கு செய்முறைத்தேர்வில் என்ன வரும் என்று பார்த்துக்கொண்டே ஓடும் மகனை எங்கே போறான் ஒம்மொவன் அவசரமா என்று தகப்பனிடம் கேட்கும்போது என்ன எளவோ படிக்கிறானாம், படிக்கிறான் என்று கூறும் குடும்பங்களுக்கு என்ன பதில், அந்த மாணவன் இந்த so called புத்திசாலியாக இருக்காமலிருப்பதற்கு அந்த குடும்பம் மட்டும் காரணமா அல்லது 2000 வருட நம் சமூகம் காரணமா?

ஓரிரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களின் படிப்பே தம் வாழ்க்கையாக கேபிள் டிவி, குமுதம், விகடனையெல்லாம் நிறுத்திவிட்டு இரவெல்லாம் கண்விழித்து படிக்கும் மகனுக்கு தேநீர் போட்டு கொடுக்கும் விழிப்புணர்வு கொண்ட பெற்றோர்களுக்கு மத்தியில் பல பிள்ளைகள் பெற்று சமூகம் கையில் கொடுத்த தொழிலை செய்து தம் பிள்ளைகளுக்கு மேலே குறிப்பிட்ட சூழலை ஏற்படுத்தி கொடுக்காமலேயே 85%, 90% எடுக்கும் மாணவன் தயிர் சாத சூழலில் படிப்பிற்காக மொத்த குடும்பமே தாங்கியதால் 95% எடுக்கும் மாணவனை விட எந்த விதத்தில் குறைந்தவன்?

1991ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுக்கப்போறேன் என்றவனுக்கு யாரிடமோ ஓடிப்போய் இப்படி சொல்றானே மகன் என்ன செய்யலாம் என கேட்க கம்ப்யூட்டரெல்லாம் மாமி வீட்டு பசங்க படிக்க வேண்டிய படிப்பு, அதெல்லாம் படிச்சா பாம்பே, டெல்லி னு தான் வேலைக்குப் போகனும் நம்மூரிலே ஒன்னும் கெடைக்காது எனவே பயாலஜி குருப்பே எடுடா என்று கூறிய படித்த வேலைக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவரோட விழிப்புணர்சிக்கும் 9வது படிக்கும் போதே IIT, IIM என்று சொல்லி வளர்க்கும் பெற்றோரின் விழிப்புணர்ச்சிக்கும் நம் சமுதாயம் காரணமில்லையா?

//அவர்களது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளியிலேயே தரமான கல்வி கொடுக்கப்பட்டும், கிட்டத்தட்ட LKG, UKG யிலிருந்து ஆரம்பித்து 14 வருடங்கள் ஒரே கல்விநிறுவனத்தில் படித்தும், அத்தனை வருட இடைவெளியில்கூட சக மேல்சாதி(என்றழைக்கப்படுகின்ற) மாணவனுக்குச் சரியாக தன்னை வளர்த்துக்கொள்ள முடியாமல் +2 முடித்ததும் மேலே படிக்க இட ஒதுக்கீடு வேண்டுமானால் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
//
இதிலிருந்து என்ன சொல்ல வருகின்றீர் அதாவது so called புத்திசாலித்தனம் பிறப்பினால் வருகிறதா? பிறப்பினால் வருகிறது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா?? நம் so called புத்திசாலித்தனத்திற்கு குடும்ப சூழல், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி பேருதவி புரிகின்றது, தயிர்சாத குடும்ப சூழலை பிறரால் உருவாக்க முடியாத இந்த இந்த இடைவெளி தான் காரணம்..

//படிப்பவனின் மெத்தனமும் ஒருபக்கம் இருக்கட்டும்
//
எந்த மாணவனும் தனக்கு இட ஒதுக்கீடு இருக்கின்றது என்பதற்காக மெத்தனமாக இருப்பதில்லை, 90% வாங்கும் திறன் உள்ள மாணவன் எனக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதற்காக மெத்தனமாக 80% வாங்குவதில்லை, 80% வாங்கினால் தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும், அதே 90% வாங்கினால் அரசு கல்லூரியில் கிடைக்கும் என்று முயல்வானேயொழிய யாரும் இவ்ளோ மதிப்பெண்கள் வாங்கினால் போதும் என்று சொல்லிக்கொள்வதில்லை.ம்... நல்லாதான் கற்பனை குதிரையை தட்டி விட்டிருக்கின்றார்.

//அட, கல்வியின் தரமும்
//
தரமா? எதைய்யா தரம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடதிட்டம், ஒரே மாதிரியான சாப்பாடு, ஒரே மாதிரியான விடுதி, ஒரே மாதிரியான ஆசிரியர், ஒரே மாதிரியான சூழல் என்று இருந்த கல்லூரிகளில் (என் கல்லூரியும் அதில் ஒன்று) படித்த மாணவர்களில் கட்-ஆப் மதிப்பெண்களில் 300க்கான மொத்த மதிப்பெண்களில் கிட்டத்தட்ட 50 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் உள்ளே வந்த மாணவர்கள் கல்லூரி விட்டு வெளியேறும் போது கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலாக வந்தனர், மற்றவர்களுக்கும் தயிர்சாத சூழல் கிடைக்கும்போது இந்த so called புத்திசாலிகளைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள், அதே போல் தயிர்சாத சூழலில் மதிப்பெண்கள் வாங்கும் so called புத்திசாலிகள் மற்ற குடும்பங்களின் சூழலில் இருந்தால் தற்போது இவர்கள் வாங்கும் மதிப்பெண்களை விட குறைவாக வாங்கவும் வாய்புள்ளதை மறக்க கூடாது....

இதெல்லாம் அவர்களுக்கு தெரியாததா? புரியாததா? மீண்டும் மீண்டு இதை விளக்க வேண்டியதின் அவசியமென்ன என்று எனக்குள் வினவினேன், இதெல்லாம் தெரிந்தும் அறிந்துமே மீண்டும் மீண்டும் இந்த மாதிரி பிரச்சாரம் செய்யும் போது மீண்டும் மீண்டும் விளக்குவதில் சோர்ந்து விடக்கூடாது என்பதே இந்த பின்னூட்டத்தின் அவசியத்தை கூறுகின்றது.

//If I happen to recruit from these campuses any time in the future, I will make sure the candidate who gets through to my company is not a student who got in because of his caste certificate. Reservation candidates who can afford not to use the reservations can live in their own little world and work and thrive with their kind, I don’t want them around me...
//
மிக்க நன்றி இதனால் இழப்பு அந்த நிறுவனத்திற்கு தான், திறமையில்லாமல் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இன்று உலகம் பூராவும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத்துறையில் புகுந்து விளையாடுகின்றனர் என்பது அன்னாத்தைக்கு பிரியுமோ இல்லையோ

ஒன்னுமே புரியலை உலகத்திலே

1. எம்.ஜி.ஆர் பெருமை பாடும், எம்.ஜி.ஆரின் வாரிசாம், கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் எம்ஜிஆரின் பக்தர்கள், அபிமானிகளான அதிமுக ஓட்டுகளை விட எம்ஜிஆரின் எதிரியான திமுக ஓட்டை அதிகம் பிரிப்பார் என்று பத்திரிக்கைகள் சொல்வது எப்படி? ஒன்னும் புரியலை

2. களத்தில் அதிமுக போட்டி வேட்பாளர், திமுக வேட்பாளர் கலக்கம் என்று தினமலரில் செய்தி…. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர் போட்டியிட்டால் கலங்க வேண்டியது அதிமுக வேட்பாளர் தானே? அதிமுகவின் வாக்குகள் பிரியும் என மகிழ்ச்சி அடைய வேண்டிய திமுக வேட்பாளருக்கு கலக்கம் ஏன் என்பது புரியவில்லை.

3. 'கலைஞர்' கூட்டணியில் உரிமைக்குரல் எழுப்பும் கூட்டணித் தலைவர்கள் 'அம்மா' கூட்டணியில் மட்டும் அமுக்கமாக இருப்பது ஏன்?

4. கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயேந்திரரும், இரண்டாமிடத்தில் இருக்கும் விஜயேந்திரரும் வெளியே இருக்க ஐந்தாம் இடத்தில் இருக்கும் அப்பு மட்டும் இன்னமும் உள்ளே இருக்க என்ன பாவம் செய்தார்?

5. எப்பவும் ஆளுங்கட்சி தான் தற்காப்பு ஆட்டம் ஆடுவாங்க, ஆனா 'அம்மா' ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியா இருந்தாலும் 'கலைஞரை' எப்பவும் தற்காப்பு ஆட்டமே ஆட வைக்கிறாங்களே அது எப்படினு பிரியவே மாட்டேங்குது.

6. கர்நாடகத்தை எதிர்த்து ரஜினி உண்ணாவிரதம் இருந்ததாக கூறினார், ஆனால் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ரஜினியின் உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார், யாரை எதிர்த்து உண்ணாவிரதமோ அவர்களே வாழ்த்து செய்தி அனுப்புவது என்ன எழவு லாஜிக்யா? ஒரு மண் பாசமும் புரியலை.

7. ஆயிரம் இலட்சம் ஓட்டை உடைசல்கள் இருக்கும் இந்து மதம் அழிய கூடாது என சப்பைக்கட்டு, முட்டு கொடுத்தல் சால்ஜாப்பு என அத்தனையும் சொல்பவர்கள் ஒரே ஒரு ஓட்டை மட்டுமே இருக்கும் இட ஒதுக்கீட்டை மட்டும் அதற்கு மாற்று குட சொல்லாமல் ஒழிக்க வேண்டுமென்பதின் லாஜிக் என்னயா பிரியவே மாட்டேங்குது?

8. டாக்டரா பிறந்திருந்தாலும் எம்.பி.பி.எஸ், எம்.டி. பி.எஸ்.எம்.எஸ், ஆர்.எம்.பி யெல்லாம் படிச்சிருந்தா தான் டாக்டர்
டாக்டரா பிறக்கலைனாலும் எம்.பி.பி.எஸ், எம்.டி. பி.எஸ்.எம்.எஸ், ஆர்.எம்.பி யெல்லாம் படிச்சிருந்தா அவங்களும் டாக்டர் தான்…..
என்னங்க ஒன்னியும் பிரியலையா? சரி இப்போ இதை படிங்க

பிராமணராக பிறந்திருந்தாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் மட்டுமே பிராமணராக முடியும் பிராமணராக பிறக்கவில்லையென்றாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் அவர்களும் பிராமணர்களே– யஜீர் வேதத்தில் சொல்லப்பட்டதாக ‘சோ’ எழுதிய எங்கே பிராமணன் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

சோ’ எழுதிய எங்கே பிராமணன் என்ற நூலில் ‘முன்னுரையிலேயே பிராமணராக பிறந்திருந்தாலும் என்று வேதத்தில் சொன்னதாக குறிப்பிட்டிவிட்டு பிறகு மாங்கு மாங்கென பிராமணன் என்பது பிறப்பினால் வருவதில்லை அது குணங்களால் அடையும் தகுதியென வேத சாத்திர லாஜிக்கெல்லாம் பேசிய சோவின் லாஜிக் சுத்தமா பிரியலை ராசா

இந்த படத்திற்கு விளக்கம் தேவையில்லைநன்றி
விகடன்.காம்

தேர்தல் 2006 - அரசியலின் கூட்டல், கழித்தல்கள்

திசைகள் மின்னிதழில் வெளியான எனது கட்டுரை இங்கே...
திசைகளில் வாய்ப்பளித்த அருணா சீனிவாசனுக்கு ஆசிரியர் குழுமத்திற்கும் நன்றி
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்த தருணத்தில் தமிழக அரசியலின் முக்கிய கூட்டணிகளான திமுக-அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறுவதை வழக்கத்திற்கு மாறாக கடுமையாக தடுத்த நிறுத்த திமுக முயற்சித்ததும், அதிமுகவும் கூட்டணிக்காக கதவை திறந்தே வைத்ததும் இந்த தேர்தலில் கூட்டணியின் முக்கியத்தை தெளிவுபடுத்துகின்றதும், ஆனால் தமிழக அரசியல் கூட்டணிபலம் தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்கு எத்தனை தூரம் சான்றுகள் தரமுடியுமோ அதே அளவிற்கு கூட்டணி பலத்திற்கும் தேர்தல் வெற்றி தோல்விக்கும் தொடர்பில்லை என்றும் சான்றுகள் தரமுடியும்.

பொதுவாக தேர்தல் முடிவுகளை தீர்மாணிப்பவைகளாக கருதப்படுவது
1. அனுதாப அலை
2. எதிர்ப்பு அலை
3. கூட்டணி பலம்
4. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி


இது வரை அனுதாப அலை எதுவும் இருப்பதாக தெரியவில்லை, மேலோட்டமாக பார்க்கும் போது எந்த கட்சிக்கும் எதிர்ப்பு அலை இருப்பதாகவும் தெரியவில்லை எனவே மற்றைய காரணிகள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

கூட்டணி பலம்
முக்கிய கூட்டணிகளாக வழக்கம் போல திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளே உள்ளன, விஜயகாந்த்தின் தேமுதிக, பாஜக, பார்வர்ட்பிளாக்(கார்த்திக்) போன்றவர்கள் திமுக,அதிமுகவிற்கு பிறகே வருகின்றனர்.
திமுக, அதிமுக கூட்டணி சமபலத்தில் இருப்பதாக ஒரு தோற்றம் இருந்த போதிலும் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி பலமாகவே உள்ளது.

வடமாவட்டங்களில் கட்சிகளின் செல்வாக்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், மதிமுக, பாஜக என்ற வரிசைப்படியே உள்ளது. புற சென்னை,செங்கல்பட்டு,கடலூர்,விழுப்புரம்,திருவள்ளூர், காஞ்சிபுரம்,பெரம்பலூர், அரியலூர்,வேலூர்,சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் கட்சிகளின் வாக்கு விழுக்காடு சற்றேறக்குறைய கீழ் கண்டவாறே முந்தைய தேர்தல்களில் இருந்துள்ளது.

திமுக - 30-35%
அதிமுக - 25-30%
பாமக - 12-15%
காங்கிரஸ் - 10-12%
விடுதலை சிறுத்தைகள் - 5%
மதிமுக - 2%
இரு கம்யூனிஸ்ட்கள் - 3%

"தொகுதிக்கு தொகுதி இந்த புள்ளிவிவரத்தில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கும்


திமுக கூட்டணியில் பாமக,காங்கிரஸ் இருப்பதால் வடமாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெற்றி கொள்ள இயலும், விடுதலை சிறுத்தைகளின் வாக்கு அதிமுக கூட்டணிக்கு உதவினாலும் அதிமுகவினால் விடுதலை சிறுத்தைகளின் பலத்தால் திமுகவை மட்டுமே சமன் செய்யமுடியும், அதனோடு பாமகவும், காங்கிரஸ் வாக்குகளும் சேரும் போது அதிமுக கூட்டணி வட மாவட்டங்களில் பெருத்த சரிவை சந்திக்கும் நிலை உள்ளது. மதிமுகவினால் வடமாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு எந்த பலனும் இல்லை, வட மாவட்டங்களில் சில தொகுதிகளில் மதிமுக பெற்ற கணிசமான வாக்குகள் மதிமுகவிற்காக அல்ல, மதிமுக வின் வேட்பாளர்களின் சொந்த செல்வாக்குக்காக, இந்த வாக்குகள் அந்த வேட்பாளர் போட்டியிலிருந்தால் மட்டுமே விழும் வாக்குகள், இதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டத்தின் மற்றைய தொகுதிகள் 2000 வாக்குகள் மட்டுமே பெற்ற மதிமுக கடலூர் சட்டமன்ற தொகுதியில் 7000க்கும் கூடுதலான வாக்குகள் பெற்றது மதிமுக வேட்பாளர் திரு.செள. பத்மனாபனால், இவர் 1989ல் சுயேட்சையாக போட்டியிட்டு 5000க்கும் கூடுதலான வாக்குகள் பெற்றார், இதே போன்றே நெல்லிக்குப்பம் தொகுதியில் திரு.கிருஷ்ணமூர்த்தி மதிமுக சார்பாக நின்றபோது கிடைத்த கணிசமான வாக்குகள் 2001 சட்டமன்ற தேர்தலில் வெகுவாக குறைந்து 2000 வாக்குகள் மட்டுமே மதிமுகவிற்கு கிடைத்தது, 2001 தேர்தலில் 10,000 வாக்குகளுக்கு மேல் பெற்ற 36 தொகுதிகளில் 8 தொகுதிகள் மட்டுமே வடமாவட்ட தொகுதிகள் அதிலும் சென்னை புறநகர் தொகுதிகள் 3 (பூந்தமல்லி, தாம்பரம்,ஆலந்தூர்) மற்றவைகளும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கணிசமான வாக்குகள் வாங்கியது (செங்கல்பட்டு – மல்லை சத்யா, செஞ்சி – மாசிலாமணி, மேல்மலையனூர் – ஏ.கே.எம் என அழைக்கப்படும் ஏ.கே.மணி, ரிஷிவந்தியம் – மருதூர் துரை)

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் முந்தைய முக்கிய தலைவர் திரு.திருவள்ளுவன் தேமுதிகவிற்கு ஆதரவளிப்பது விடுதலை சிறுத்தைகள் வாக்கு வங்கியின் சில இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தவிர எல்லா கட்சிகளின் வாக்கு வங்கியிலும் தேமுதிக கைவைக்கின்றது, குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் தேமுதிகவிற்கு ஆதரவு இருப்பது போல தெரிகின்றது, இந்த தேர்தலின் முடிவில் தான் தேமுதிகவின் பலம் தெரியும் என்றாலும் திரு.இராமச்சந்திரனின் தனிப்பட்ட செல்வாக்கினால் பண்ருட்டி தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி தவிர்த்து தேமுதிக திரு.கருணாநிதி அவர்கள் கூற்றுப்படி ஹார்ம்லெஸ் என்ற நிலைதான் இது வரை.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இருந்த தவறான இமேஜ் மாறி தற்போது தலித் அல்லாத மக்களும் விடுதலை சிறுத்தைகளின் மீது கரிசனத்தோடு (குறிப்பாக திரு.திருமாவின் மீது) இருக்கின்றனர், இதற்கு சான்றாக 2004 பாராளுமன்ற தேர்தலில் திரு.திருமா சிதம்பரம் தொகுதியில் பெற்ற வாக்குகள், அதற்கு முந்தைய தேர்தலில் பெற்றதை விட 30,000 வாக்குகள் அதிகம், தலித் வாக்குகளையும் தாண்டி பிற சாதி மக்களின் வாக்கு வங்கியில் ஊடுறுவியிருப்பது தெளிவாகின்றது, தலித்கள் மட்டுமல்லாமல் வன்னியர்களும் விடுதலை சிறுத்தை அமைப்புகளில் சேரத்துவங்கியுள்ளனர், பாண்டிச்சேரி நாடாளுமன்ற வேட்பாளராக விடுதலை சிறுத்தை அமைப்பின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஒரு வன்னியர், ஆனாலும் கடலூர்,விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்கள் தவிர்த்து பிற இடங்களில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினால் அதிமுக கூட்டணிக்கு பயன் எதுவும் இல்லை.

ஏறக்குறைய 60 தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் பாமக வட மாவட்டத்தின் அரசியலை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, 1996 தேர்தலில் செல்வி.ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான வாக்குகள், 4 தொகுதிகளில் வெற்றி 9 தொகுதிகளில் இரண்டாமிடம், 1991 தேர்தலில் ராஜீவ் காந்தி மரண அலையிலும் இதே போல் பல தொகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள், 1989 பாராளுமன்ற தேர்தலிலும் 5.5% வாக்குகள் (இதை வட மாவட்டங்களில் மட்டும் என கணக்கிடும்போது ஏறக்குறைய 15%) பெற்றது, ஆனால் பாமகவின் வளர்ச்சி தற்போது தேக்கநிலைக்கு வந்துவிட்டது, இதற்கு மேல் பாமக வளர்வதும் கடினம், அதே போல அதன் சரிவும் குறைவாகவே இருக்கும், solid vote bank என கூறப்படும் நிச்சய வாக்கு வங்கியே அதன் சரிவு மிககுறைவாக இருக்க காரணம், 1996 தேர்தல் தவிர்த்து பாமக கூட்டணியின்றி போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் அதன் வாக்கு வங்கி ஒரே மாதிரியாகவே உள்ளது, தேர்தலுக்கு தேர்தல் பாமக பெற்றுள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியதால் பாமக வாக்கு வங்கி வளர்ந்துவிட்டதாக கூறமுடியாது, பாமக வாக்கு வங்கி அதன் நிறுவனர் திரு.இராமதாசால் அரசியல் கணக்கோடு பயன்படுத்தப்பட்டதே அதன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு காரணம், விடுதலை சிறுத்தைகள் அமைப்போடு பாமக கைகோர்த்தது சாதி, கட்சி பாகுபாடின்றி வடமாவட்ட மக்கள் பலரை ஆசுவாசப்படுத்தியது, எதிர் முகாம்களில் தற்போது இருக்கும் போதும் எந்த விதமான அறிக்கை தாக்குதல்களிலும் ஈடுபடாமல் இன்று வரை நட்புமுறையில் இருவரும் இருப்பதும் தேர்தலுக்கு பிறகு இணைந்து செயல்படுவோம் என்ற பேச்சுகளும் எதிர் எதிர் அணியில் தேர்தலை சந்தித்தாலும் கடந்த கால தேர்தல்களில் நடை பெற்றதை போன்ற வன்முறைகள் நடைபெறாது என்ற நம்பிக்கையுடன் உள்ளது வட மாவட்ட தேர்தல்களம்.

வடமாவட்டங்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் பணம் காசு எதிர்பார்க்காமல் தேர்தல் வேலை செய்வார்கள் என்பதைத் தவிர்த்து திமுக கூட்டணிக்கு நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, தர்மபுரி மாவட்டத்தின் சில தொகுதிகள் தவிர வேறெந்த தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட்களால் பெரிய அளவில் இலாபமில்லை

திமுகவின் கோட்டையாக வட மாவட்டங்கள் கருதப்பட்டாலும் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தேர்வு மிக முக்கியமானதாக கருதப்படும், 2001 தேர்தலில் மிகப்பெறும் வெற்றி பெற்றதற்கான காரணங்களில் ஒன்று வேட்பாளர் தேர்வு, மிகப் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள், ஏற்கனவே கெட்ட பெயர் எடுத்தவர்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர், ஆனால் இது மாதிரி திமுகவில் செய்வது கடினம் ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுகவின் அதே குட்டி மன்னர்களையே வேட்பாளர்களாக பார்க்கின்றனர், புதுமுகங்கள் நிறுத்தப்பட்டால் குட்டி மன்னர்களே அவர்களுக்கு எதிராக வேலை செய்து கவிழ்த்துவிடுகின்றனர், பழைய வேட்பாளர்களையே பார்த்தால் மக்களுக்கு எரிச்சல், புது முகங்கள் போட்டியிட்டால் குட்டி மன்னர்களின் உள்ளடி வேலைகள் என திமுகவிற்கு வேட்பாளர் தேர்வு இந்த முறையும் தலைவலி தான்,

பொதுவாகவே அதிமுக சற்று பலம் குறைந்த வடமாவட்டங்களில் வெள்ள நிவாரணத்திற்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கிடைத்த நல்லபெயரும் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் அதில் புழங்கும் பணம், திமுக வெற்றிபெற்றால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ற பிரச்சாரம், வழக்கமான வாக்கு வங்கி இவை தவிர்த்து அதிமுக விற்கு சொல்லிக்கொள்ளும் படியான பலம் எதுவும் இல்லை, இதை கணித்தே அதிமுகவும் முடிந்த அளவிற்கு வடமாவட்டங்களில் போட்டியிடுவதை தவிர்த்து மதிமுக, விசிகளுக்கு தொகுதிகளை இங்கு அளித்துள்ளது, ராசிபுரம், கிருஷ்ணகிரி,பெரம்பலூர்,அரியலூர் போன்ற இடங்களில் சில தொகுதிகளை சொந்த மாகவும், விழுப்புரம்,கடலூர் மாவட்டத்தின் சில தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளின் பலத்தினாலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

திமுகவின் கோட்டையாக கருதப்படும் வடமாவட்டங்களில் பலமிகுந்த பாமகவும் கணிசமான வாக்கு வங்கியுள்ள காங்கிரசும் கூட்டணியில் இருப்பது வடமாவட்ட தொகுதிகளை திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும் நிலையிலிருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் அதிமுக கூட்டணியில் இருப்பதால் சில தொகுதிகள் கைவிட்டும், சில தொகுதிகள் இழுபறி நிலைக்கும் சென்றுவிட்டது, சிறிய அளவிலான சேதாரத்துடன் திமுக கூட்டணி வட மாவட்ட தொகுதிகளை தக்கவைத்து கொள்ளும்.

தஞ்சாவூர் மாவட்டம் பொதுவாகவே திமுகவிற்கு எந்த சூழலிலும் கை கொடுக்கும் மாவட்டம், தமிழகமெங்கும் திமுக-தாமக கூட்டணி 1998 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும் தஞ்சையில் சுனாபானா என செல்லமாக அழைக்கப்படும் சு.பழனிமானிக்கம் வெற்றிபெற்றார், தஞ்சையின் திமுக-அதிமுக கூட்டணி சொந்த பலத்தில் தான் மோதிக்கொள்ள வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு செல்வாக்கில்லாத தொகுதிகளாதலால் இங்கும் திமுகவுக்கு சாதகமான நிலை

நாகை மாவட்டம் கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று கூறப்பட்டாலும் திமுக அல்லது அதிமுக என ஏதேனும் ஒரு கூட்டணியில் இருந்தால் மட்டுமே எளிதாக வெற்றி பெறுவார்கள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள் என்ற வரிசையில் கட்சிகளின் பலம் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் சமீப காலமாக கம்யூனிஸ்ட்களின் வாக்கு வங்கியில் ஓட்டை ஏற்படுத்தியுள்ளனர் கம்யூனிஸ்ட்களின் பலத்தால் திமுக கூட்டணியின் கை ஓங்கினாலும் சீர்காழி, மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றிமுகம் காணலாம்.

திருச்சி புதுக்கோட்டை,சிவகங்கை போன்ற மாவட்டங்களில் திமுக அதிமுக கட்சிகள் தம் சுயபலத்தில் மட்டுமே மோதிக்கொள்ள வேண்டும், வேறு எந்த கட்சிகளுக்கும் எந்த பலமுமில்லாததால் திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் வெற்றி தோல்வி முழுக்க முழுக்க திமுக அதிமுகவை பொறுத்ததே, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் கணிசமாக திமுகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கணிசமாக அதிமுகவும் வெற்றிபெறும்.

மதுரையும் அதை தாண்டிய தென்மாவட்டங்களில் அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியும், சிவகாசி,கோவில்பட்டி,குளச்சல்,பொள்ளாச்சி,சாத்தூர் போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட தென்மாவட்ட தொகுதிகளில் மதிமுக பலமாக உள்ளது, (2001 தேர்தலில் 10,000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய 36 தொகுதிகளில் 28 தென்மாவட்டங்களை சேர்ந்தது, 5000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய 33 தொகுதிகளில் பலவும் தென்மாவட்டங்களை சேர்ந்ததே) வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 5,000 க்கும் குறைவாக இருக்குமாயின் மதிமுகவின் கூட்டணி அதிமுகவிற்கு மிகப்பெரும் வெற்றியை தரும், ஆனால் பழைய புள்ளிவிவரங்கள் எத்தனை நெருக்கமான போட்டியிலும் 5000க்கும் குறைவான வெற்றி வாக்கு வித்தியாசம் மிக சில தொகுதிகளில் மட்டுமே, மதுரை மற்றும் தென்மாவட்ட திமுகவின் உட்கட்சி பூசல்கள் அதிமுகவின் வெற்றிக்கு உதவும். காங்கிரசிற்கு தமிழகம் முழுவதுமாக இருக்கும் 10-12% வாக்கு வங்கி திமுகவிற்கு தென் மாவட்டங்களில் ஆறுதல் தரும், பல தொகுதிகளில் கடும்போட்டியையும் ஒரு சில தொகுதிகளில் வெற்றியை தந்தாலும் ராமநாதபுரம், தூத்துக்குடி தவிர்த்து தென் மாவட்டங்களின் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக கூட்டணியே கைப்பற்றும்.

கோயம்புத்தூர்,கரூர்,ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் திமுக, அதிமுக வோடு மதிமுகவும் அதிக வலுவுடன் இருப்பதால் இங்கும் அதிமுக கூட்டணி முண்ணனி பெற்றாலும் தொழில்நகரங்களின் கம்யூனிஸ்ட்களின் பலத்தால் சில தொகுதிகளில் திமுக, கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெறுவர்,

கன்னியாக்குமரி, தூத்துக்குடி, நாகர்க்கோயில் மாவட்டங்களில் திமுக,அதிமுக,மதிமுக,பாஜக, கம்யூனிஸ்ட்கள் என அத்தனை கட்சிகளும் வாக்கு வங்கி வைத்துள்ளதால் முடிவுகள் கணிக்க முடியாத நிலையென்றாலும் பெரும்பான்மை கிறித்துவர்களின் திமுக ஆதரவினால் அதிமுகவைவிட சற்று அதிக இடங்களை திமுக பெறக்கூடும்.

இது தவிர்த்து புதிய தமிழகம், பார்வர்டு பிளாக் (கார்த்திக்) போன்ற கட்சிகள் ஓரிரு தொகுதிகள் கணிசமான வாக்குகள் பெற்றாலும் மற்ற தொகுதிகளின் முடிவை மாற்றமுடியாத நிலையிலேயே உள்ளன.கூட்டணி பலத்திற்கு அடுத்த படியாக தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது ஆளுங்கட்சியின் மீதான எதிர்ப்புணர்வு, இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எந்த உணர்வும் இல்லையென்று கூறப்பட்டாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக சாலைப்பணியாளர்கள் நீக்கம், மதமாற்ற தடைசட்டம், ஆடு கோழி பலியிட தடை, ஹெச் குடும்ப அட்டை, அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், போக்குவரத்து தொழிலாளர்களின் மீதான நடவடிக்கைகள் , விவசாயிகள் என பொது மக்களில் பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு வகையில் அதிமுக ஆட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர், பொடா அத்துமீறல்கள், பத்திரிக்கைகள் மீதான தாக்குதல்கள், திமுக பேரணியில் ரௌடிகளை வைத்து விரட்டி விரட்டி வெட்டிய நிகழ்ச்சிகள், பொடா, கஞ்சா வழக்கு அத்துமீறல்கள், வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்காத நிவாரணம் போன்றவைகள் வெள்ள நிவாரண நிதியில் பாதிக்கப்படாதவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய்களும் திரும்பப் பெறப்பட்ட எல்லா நடவடிக்கைகளும், லாட்டரி சீட்டு ஒழிப்பு, முற்றுபெறாத கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவைகளை சமன்படுத்துமா என்பதையும் எந்த அளவிற்கு வாக்களிக்கும் போது மக்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது என்பதையும் தேர்தல் முடிவுகள் தான் சொல்லும், மேலும் தற்போது பெரும்பாலான பத்திரிக்கைகள் அதிமுக ஆட்சியில் எதிர்ப்பலை இல்லை என்று தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே வந்தாலும் “இந்தியா ஒளிர்கிறது” என்ற கோஷத்திற்கு ஏற்பட்ட நிலையும், 1996 முதல் 2001வரையிலான திமுக ஆட்சியின் மீது எந்த அதிருப்தியும் இல்லையென்று(feel good factor) கூறப்பட்ட போதும் திமுக அடைந்த தோல்வியும் அதிமுக அரசின் மீது அதிருப்தி இல்லையென்று பத்திரிக்கைகள் கூறுவதை சந்தேகப்பட வைக்கின்றன.

கூட்டணி கூட்டல் கழித்தல்கள் என்று பார்க்கும் போது திமுக கூட்டணி வடமாவட்டங்களிலும் அதிமுக கூட்டணி தென் மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி பெறுமென்று தோன்றினாலும் இது வரை தமிழக தேர்தல்களில் வட மாவட்டங்களில் தனி முடிவுகள் தென் மாவட்டங்களில் வேறு முடிவுகள் என்று ஏற்பட்டதில்லை தமிழகம் முழுவதுமாக ஒரே மாதிரியான முடிவுகள் என்று கூறுவதற்கு முந்தைய தேர்தல் முடிவுகள் ஆதரவாக இருந்தாலும் 1999 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 11 தொகுதிகள் தென் மாவட்டங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற மற்ற பாராளுமன்ற தொகுதிகள் பிற தமிழகம் என்பதனால் வட, தென் மாவட்டங்களுக்கு வெவ்வேறு முடிவுகள் ஏற்படும் வாய்ப்பையும் நிராகரிக்க இயலாது, திமுக வெறும் 129 தொகுதிகளில் போட்டியிடுவதும் கிட்டத்தட்ட 45% தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளித்திருப்பதும் வெற்றி பெற்றால் முழு வெற்றி கிட்டும் இல்லையென்றால் படு தோல்வி என்ற நம்பிக்கையால் தான்.

இந்தியா ஒளிர்கிறது, feel good factor களுக்கு ஏற்பட்ட கதியும் கூட்டணி பலமும் மீண்டும் திமுகவை அறுதிபெறுபான்மை பெற வைக்கும், அல்லது மிகச்சிறிய அளவில் கூட்டணி கட்சிகளின் உதவி தேவைப்படும் (அப்படி ஒரு நிலைமை வந்தால் எளிதாக சிறு கட்சிகள் உடைக்கப்படும்), கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பது திமுக, அதிமுக கட்சிகளுக்கு சோதனை என்றாலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இன்னும் ஒரு தேர்தல் தேவைப்படுகின்றது.

தேர்தல் 2006 - ஆச்சரிய ஆண்டிமடம்

பாமக போட்டியிடும் தொக்குதிகளின் பட்டியலை பார்த்த போது ஆண்டிமடம் இல்லாதது ஆச்சரியம், அதிமுக ஆண்டிப்பட்டியில் போட்டியிடாமலிருந்தால் எத்தனை ஆச்சரியமோ அத்தனை ஆச்சரியம், ஆண்டிமடம் பாமகவின் நிச்சய வெற்றி தொகுதி 1991 சட்ட மன்ற தேர்தலில் ராஜீவ்காந்தி மரண அலையிலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் ஞானமூர்த்தி தோல்வியை தழுவினார், 1996 தேர்தலில் அப்போதைய பாமக தலைவர் தீரன் ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் வெற்றிபெற்றார், அதன் பின் அதிமுக கூட்டணியோடு 2001ல் திரு,குரு வெற்றி பெற்றார், தமிழகத்தின் வேறெந்த தொகுதியையும் விட அதிக செல்வாக்கோடு பாமக இருக்கும் தொகுதி ஆண்டிமடம்,

பாமகவின் தோற்றத்தினால் அதிமுகவும், காங்கிரசும் கடுமையான பாதிப்புக்குள்ளானது ஆண்டிமடத்தில், திமுகவிற்கு சேதாரம் அதிமுக,காங்கிரஸ் அளவிற்கு இல்லையென்றாலும் திமுகவும் கணிசமான வாக்கு வங்கியை இழந்தது.

முழுக்க முழுக்க கிராமங்கள் அடங்கிய தொகுதி, தொகுதி முழுவதும் விவசாயத்தை நம்பிதான், பெரும்பான்மை வன்னிய மக்களும், அடுத்ததாக எண்ணிக்கையில் தலித்களும் அதிகம் இருக்கும் தொகுதி, தமிழர் விடுதலைப்படை ஆதிக்கம் நிறைந்த பகுதி, வன்னிய தலித் இளைஞர்கள் பலர் தமிழரசன், லெனின் காலத்தில் தமிழர் விடுதலைப்படையில் இணைந்தனர், ஒரு வகையில் தமிழர் விடுதலைப்படையின் செல்வாக்கிழப்பிற்கு பாமகவும் காரணம், ஏழை இளைஞர்களை வசப்படுத்திக் கொண்டிருந்த தமிழர்விடுதலைப்படை இளைஞர்கள் பாமகவின் தோற்றத்திற்கு பின் பாமக பக்கம் சாய்ந்தனர், தலித் இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் இணைந்தனர், துப்பாக்கி தூக்குவதை விட அரசியல் பாதையே பாதுகாப்பானது என்ற எண்ணமும் ஓங்கியிருக்கலாம், கடலூர் மாவட்ட செய்தி தாள்களில் தினமும் இடம் பெறும் செய்தியாக வழிப்பறி கொள்ளையடித்த தமிழ் தீவிரவாதி கைது, கார் திருடிய தமிழ் தீவிரவாதி கைது என வழிப்பறிகாரர்களையெல்லாம் தமிழ் தீவிரவாதிகள் எனவும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்தவர்களை வழிப்பறிகாரர்களாகவும் காவல்துறையும் அரசாங்கமும் கணக்கு காண்பித்தாலும் தமிழர் விடுதலைப்படையினரின் மீதான ஆதரவு எண்ணம் இன்னமும் அந்த பகுதி மக்களிடையே உள்ளது.

பாமகவினருக்கும் தமிழர் விடுதலைப்படை அமைப்பினருக்கும் அடிக்கடி மோதல்களும் நடைபெறும், பொதுவாக வன்னியர்கள் குறைந்த அளவில் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளாகவும், கூலிகளாகவும், வெகு சில தலித் மக்கள் சிறு விவசாயிகளாகவும் பெரும்பாலோர் கூலிகளாகவும் வாழ்கின்றனர், இங்கிருக்கும் மற்றொரு பிரச்சினை சாராயம், சில கிராமங்கள் முழுக்க முழுக்க கள்ளசாராயம் காய்ச்சுவதை குடிசைத் தொழிலாகவே செய்கின்றனர்.

1991ல் பாமக சார்பாக போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகளில் வெற்றியை நழுவவிட்ட ஞானமூர்த்தி ஆண்டிமடத்தில் பாமகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார், 1996ல் தீரனுக்காக கட்சி தலைமை ஞானமூர்த்தியை ஆண்டிமடத்துக்கு பதில் குறிஞ்சிப்பாடியில் போட்டியிட வற்புறுத்தியது, தலைமைக்கு மீண்டும் ஞானமூர்த்தியே ஆண்டிமட வேட்பாளராக நிற்க வேண்டுமென வலியுறுத்தி ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்பப்பட்டன, அந்த தேர்தலில் தீரன் கடுமையான ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் எளிதாக வெற்றி பெற்றார், அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்கட்சி பிரச்சினையால் ஞானமூர்த்தி திமுகவில் இணைந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார், 2001ல் தீரன் கட்சியை விட்டு விலகிய பின் பாமக வேட்பாளராக ஆண்டிமடத்தில் திரு.குரு போட்டியிட்டார், திமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிவசுப்பரமணியம் குடும்பத்தினர் கேட்ட போதும் குருவிற்கு எல்லாவிதத்திலும் ஈடு கொடுக்க கூடியவராக ஞானமூர்த்தி திமுக வேட்பாளராக போட்டியிட்ட போதும் குரு வெற்றி பெற்றார், தற்போது ஞானமூர்த்தி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க கேட்ட போதும் திரு.சிவசுப்ரமணியத்தின் குடும்பத்தினருக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தொகுதியின் முதலிடத்தில் இருக்கும் பாமகவும் இரண்டாமிடத்தில் இருக்கும் திமுகவும் கூட்டணியில் இருப்பதால் மூன்று மற்றும் நான்காமிடத்திலிருக்கும் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணியால் திமுகவின் வெற்றிக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது, தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என குருவின் மீது தொகுதியில் இருக்கும் அதிருப்தி தேர்தலில் பிரதிபலிக்காது, பிரதிபலித்திருந்தால் தொகுதிக்கு எதுவுமே செய்யாத தீரன் மீதான அதிருப்தி சென்ற தேர்தலில் வெளிப்பட்டிருக்கும்.

2001 சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்
திரு.குரு (பாமக - அதிமுக கூட்டணியில்)66,576
திரு.ஞானமூர்த்தி (திமுக)39,574
திரு.வீரபாண்டியன் (மதிமுக)2,869
வாக்கு வித்தியாசம்27,002


1996 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (ஜெயலலிதா எதிர்ப்பு அலை)
திரு.தீரன் (பாமக) 49,853
திரு.சிவசுப்ரமணியம் (திமுக)
36,451
திரு. ஆர்த்தர் ஹெல்லர்(காங் - அதிமுக கூட்டணியில்) 13,779
திரு.இராமலிங்கம்(மதிமுக) 3,526
13,779
வாக்கு வித்தியாசம்13,402

1991 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (ராஜீவ் காந்தி மரண அலை)
திரு.தங்கராசு (காங் - அதிமுக கூட்டணியில்) 40,816
திரு.ஞானமூர்த்தி (பாமக)
33,238
திரு.சிவசுப்ரமணியம் (திமுக)
21,996
வாக்கு வித்தியாசம்7,578


ஆண்டிமடம் தொகுதி அலசலில் தினமலர் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வென்ற தொகுதி என்று குறிப்பிட்டுவிட்டு பாமகவின் பெயரை கூட குறிப்பிடாமல் இருந்தாலும் முந்தைய தேர்தல் முடிவுகளும் தற்போதைய தொகுதி நிலவரமும் ஆண்டிமடத்தில் பாமகவின் முக்கியத்தை உணர்த்துகின்றன.

தொகுதி பங்கீட்டில் ஆச்சரியமளித்த ஆண்டிமடத்தின் தேர்தல் முடிவில் அலையடித்தாலும் ஆச்சரியமில்லை

அரசியல் புரளிகள்

வாய் வழி செய்திகள் பற்றி ஒரு பெரும் ஆச்சரியம் எனக்கு உண்டு, அதிலும் குறிப்பாக அரசியல் வாதிகள் பற்றிய செய்திகள் ஆச்சரியமான விதத்தில் பரப்பப்படுகின்றன.

தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான அனைவருக்கும் இந்த செய்தி கள் தெரிந்திருக்கும்,

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மேயர் மு.க,ஸ்டாலினின் இளமைக்கால வாழ்க்கை என்றும், அவர் ஒரு பெண் பித்தர் போலவும் குறிப்பாக பிரபல தொலைகாட்சி செய்தி வாசிப்பாளரோடு(தற்போது அம்மா ,அக்கா வேடங்களில் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்) இணைத்தும் பேசுவார்கள்,.

பாமக நிறுவனர் தாழ்த்தப்படவர் என்று பொய் சான்றிதழ் கொடுத்து மருத்துவர் படிப்பு படித்ததாகவும், அது தொடர்பாக அரசு மருத்துவர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அரசியலுக்கு வந்ததாகவும் கூறுவார்கள்

இந்த இரண்டு புரளிகளும் நான் சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருபவைகள், பின்னூட்டத்தில் சிறில் அலெக்ஸ் மக்களுக்கு மு.க.ஸ்டாலினின் இளமைகால வாழ்க்கை ஞாபகத்தில் இருக்கிறதோ என்று எழுதியிருந்தார்
ஆனால் இந்த இரண்டு புரளிகளும் எனக்கு தெரிந்த வரை ஊடகத்திலும் வந்ததில்லை, மிக சமீபத்தில் என் அலுவலக நண்பரோடு தமிழக அரசியல் பற்றி பேசிக்கொண்டிருந்த போது இந்த இரண்டு புரளிகளையும் கூறினார், உடனே யார் இதை உங்களுக்கு சொன்னது? எப்படி உங்களுக்கு இது தெரியும் ஏதாவது பத்திரிக்கையில் படித்தீர்களா? அது எந்த பத்திரிக்கை? என்றேன், இல்லை நான் சிறு வயதிலேயே கேள்விப்பட்டேன் என்றார், 1985(நம்புங்கள் அப்போது நான் படித்துக்கொண்டிருந்தது ஐந்தாம் வகுப்பு)லிருந்து மருத்துவர் இராமதாசு பற்றிய செய்திகளை ஆர்வத்தோடு படித்தும் முக்கிய செய்திகளை நினைவில் கொண்டும் உள்ளேன் ஆனால் இது வரை இப்படி ஒரு செய்தியை நான் படித்ததில்லை, ஆனால் பலரும் அதிலும் குறிப்பாக நான் பாமக தொடர்பாக பேசும்போது நிச்சயம் இதை எதிர்கொள்வேன், யார் என்னிடம் இதைப்பற்றி கேட்கும் போதும் உடனடியாக நான் கேட்பது இது எப்படி உங்களுக்கு தெரியும் என்பேன் யாரோ சொன்னார்கள் என்பதை தவிர வேறெந்த பதிலும் கிடைப்பதில்லை, இதே போல மு.க.ஸ்டாலின் பற்றியுமான இந்த புரளிக்கு யாரோ சொன்னார்கள் என்பதை தவிர்த்து வேறு பதில் கிடைத்ததில்லை, அந்த யாரோவிற்கு யார் சொல்லியிருப்பார்கள்??

அட ஒரு வேளை மக்கள் கிசு கிசு வாக எங்கேயாவது படித்திருப்பார்களா என்றும் ஒரு எண்ணமும் எனக்கு இருந்தது, கிசு கிசுக்களின் உண்மை பொய் ஆதாரங்கள் பற்றி ஆராய்ந்தாலும் மு.க.ஸ்டாலின் மற்றும் மருத்துவர் இராமதாசு மேலான இந்த புரளிகள் எனக்கு தெரிந்த வரை கிசு கிசுவாக கூட நான் எங்கேயும் படித்ததில்லை பிறகெப்படி இத்தனை ஆண்டுகளாக, இத்தனை மக்களுக்கு யாரோ சொன்னார்கள் யாரோ சொன்னார்கள் என்று தெரிந்தது? யார் இந்த புரளிகளை கிளப்பிய விஷமிகள்.

எந்த வித ஆதாரமும், பத்திரிக்கை ஊடக செய்திகளும், கிசு கிசுக்களின் உண்மை பொய் ஆதாரங்கள் பற்றி ஆராய்ந்தாலும் அட குறைந்த பட்சம் கிசு கிசுக்கள் கூட எங்கேயும் வெளிவந்திராத போதும் எல்லாம் தெரிந்த மாதிரி தோட்டத்தில் வைத்து மருத்துவர் இராமதாசு தண்ணியடிக்கலாம் என்று அள்ளித்தெளித்து சென்ற வலைப்பதிவர் முகமூடி மாதிரி எந்த காலத்தில் எந்த புண்ணியவான் கிளப்பிச்சென்றானோ இந்த புரளிகளை,

கொஞ்சமே கொஞ்சம் மூளையை உபயோகித்து யோசித்தால் மருத்துவர் இராமதாசுவை பற்றிய பொய் சான்றிதழ் புரளி எத்தனை பொய்யானது, அப்படியிருந்திருந்தால் இத்தனை நாட்களில் எந்த அரசும், அரசியல்வாதியும் பத்திரிக்கையும் இதை தோண்டாமலிருந்திருப்பார்களா என்று புரியும் ஆனாலும் இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் நாமும் தொடர்ந்து பரப்பிவருகின்றோம்.

இதனால் மு.க.ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்ற போட்டியில் ஸ்டாலின் மீது பரப்பப்பட்டுள்ள இந்த அபாண்டமான புரளி மக்களிடம் உளவியல் ரீதியாக ஸ்டாலினை பின்னிருத்துகின்றது.

ஊடகங்களில் வராமல் எப்படி இந்த செய்திகள் வாய்வழியாகவே பலராலும் பரப்பப்படுகின்றன?யாரோ சொன்னார்கள் என்பதை எந்த கேள்விக்கும் உட்படுத்தாமல் நாமும் விளையாட்டாக இந்த மாதிரி செய்திகளை பரப்புவதற்கு ஏதேனும் உளவியல் காரணங்கள் இருக்குமா?

இந்த இரு தலைவர்களின் மீதான இப்படி பரப்பப்படும் குற்றச்சாட்டிற்கு ஏதேனும் ஆதாரங்கள், பத்திரிக்கை செய்திகள் அல்லது குறைந்த பட்சம் கிசு கிசு வாக எங்கேயாவது கூறப்பட்டிருந்தாலும் எனக்கு தெரிவியுங்கள் நானும் தெரிந்து கொள்கின்றேன், இப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் யாரிடமும் தயவு செய்து யாரோ சொன்னார்கள் என்று இந்த தகவல்களை பரப்ப வேண்டாமென்று வேண்டுகின்றேன், அப்படி உங்களிடம் யாரேனும் சொன்னாலும் எப்படி இந்த செய்தி உங்களுக்கு தெரியும் என்று கேளுங்கள்.