ஒன்னுமே புரியலை உலகத்திலே

1. எம்.ஜி.ஆர் பெருமை பாடும், எம்.ஜி.ஆரின் வாரிசாம், கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் எம்ஜிஆரின் பக்தர்கள், அபிமானிகளான அதிமுக ஓட்டுகளை விட எம்ஜிஆரின் எதிரியான திமுக ஓட்டை அதிகம் பிரிப்பார் என்று பத்திரிக்கைகள் சொல்வது எப்படி? ஒன்னும் புரியலை

2. களத்தில் அதிமுக போட்டி வேட்பாளர், திமுக வேட்பாளர் கலக்கம் என்று தினமலரில் செய்தி…. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர் போட்டியிட்டால் கலங்க வேண்டியது அதிமுக வேட்பாளர் தானே? அதிமுகவின் வாக்குகள் பிரியும் என மகிழ்ச்சி அடைய வேண்டிய திமுக வேட்பாளருக்கு கலக்கம் ஏன் என்பது புரியவில்லை.

3. 'கலைஞர்' கூட்டணியில் உரிமைக்குரல் எழுப்பும் கூட்டணித் தலைவர்கள் 'அம்மா' கூட்டணியில் மட்டும் அமுக்கமாக இருப்பது ஏன்?

4. கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயேந்திரரும், இரண்டாமிடத்தில் இருக்கும் விஜயேந்திரரும் வெளியே இருக்க ஐந்தாம் இடத்தில் இருக்கும் அப்பு மட்டும் இன்னமும் உள்ளே இருக்க என்ன பாவம் செய்தார்?

5. எப்பவும் ஆளுங்கட்சி தான் தற்காப்பு ஆட்டம் ஆடுவாங்க, ஆனா 'அம்மா' ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியா இருந்தாலும் 'கலைஞரை' எப்பவும் தற்காப்பு ஆட்டமே ஆட வைக்கிறாங்களே அது எப்படினு பிரியவே மாட்டேங்குது.

6. கர்நாடகத்தை எதிர்த்து ரஜினி உண்ணாவிரதம் இருந்ததாக கூறினார், ஆனால் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ரஜினியின் உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார், யாரை எதிர்த்து உண்ணாவிரதமோ அவர்களே வாழ்த்து செய்தி அனுப்புவது என்ன எழவு லாஜிக்யா? ஒரு மண் பாசமும் புரியலை.

7. ஆயிரம் இலட்சம் ஓட்டை உடைசல்கள் இருக்கும் இந்து மதம் அழிய கூடாது என சப்பைக்கட்டு, முட்டு கொடுத்தல் சால்ஜாப்பு என அத்தனையும் சொல்பவர்கள் ஒரே ஒரு ஓட்டை மட்டுமே இருக்கும் இட ஒதுக்கீட்டை மட்டும் அதற்கு மாற்று குட சொல்லாமல் ஒழிக்க வேண்டுமென்பதின் லாஜிக் என்னயா பிரியவே மாட்டேங்குது?

8. டாக்டரா பிறந்திருந்தாலும் எம்.பி.பி.எஸ், எம்.டி. பி.எஸ்.எம்.எஸ், ஆர்.எம்.பி யெல்லாம் படிச்சிருந்தா தான் டாக்டர்
டாக்டரா பிறக்கலைனாலும் எம்.பி.பி.எஸ், எம்.டி. பி.எஸ்.எம்.எஸ், ஆர்.எம்.பி யெல்லாம் படிச்சிருந்தா அவங்களும் டாக்டர் தான்…..
என்னங்க ஒன்னியும் பிரியலையா? சரி இப்போ இதை படிங்க

பிராமணராக பிறந்திருந்தாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் மட்டுமே பிராமணராக முடியும் பிராமணராக பிறக்கவில்லையென்றாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் அவர்களும் பிராமணர்களே– யஜீர் வேதத்தில் சொல்லப்பட்டதாக ‘சோ’ எழுதிய எங்கே பிராமணன் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

சோ’ எழுதிய எங்கே பிராமணன் என்ற நூலில் ‘முன்னுரையிலேயே பிராமணராக பிறந்திருந்தாலும் என்று வேதத்தில் சொன்னதாக குறிப்பிட்டிவிட்டு பிறகு மாங்கு மாங்கென பிராமணன் என்பது பிறப்பினால் வருவதில்லை அது குணங்களால் அடையும் தகுதியென வேத சாத்திர லாஜிக்கெல்லாம் பேசிய சோவின் லாஜிக் சுத்தமா பிரியலை ராசா

14 பின்னூட்டங்கள்:

said...

1. தி.மு. க. ஓட்டுகள்தான் பிரிக்கக்கூடியவை; அ.தி.மு. க. ஒட்டுகள் கட்டுக்கோப்பானவை என்று அர்த்தமோ! ஆனால், இந்த முறை இருபக்காமும் ஓட்டுகள் பிரியப் போவதென்னவோ உறுதி!

2. அ.தி. மு. க. வின் வாக்குகள் பிரியும் அதே நேரத்தில், இந்தப் போட்டி வேட்பாளர் தொகுதியில் செல்வாக்கு உள்ளவர் என்பதால், தன் வாக்குகளும் பிரியப் போகுதே என்ற கலக்கம்தான்!

3. அங்கும் இங்கும் எங்கும் இருந்த 'டாக்டர் அய்யா'விடம் கேட்டால் ஒருவேளை விடை கிடைக்குமோ, என்னமோ! அல்லது, அம்மாவிடம் 'நெறயக்' கிடைக்குதோ ?!!

4. அப்புவிடம் அப்படி என்னவெல்லாம் வெளியே வரக்கூடாத சமாச்சரங்கள் இருக்கின்றனவோ, யாருக்குத் தெரியும்!? அது சரி, என்ன இந்த திடீர் கரிசனம் அப்புவின் மீது? ஆடு நனையுதா?

5. யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல, கேட்பார் பேச்சைக் கேட்டு[கேளாமல்??] இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டால், யாரை நொந்து கொள்வது?!

6. இப்போ, நம்ம 'நெப்ஸ்' கூட, எஸ், வி. சேகர் மேல பாசம்னு அறிக்கை வுடலை.... அது போலத்தான்!

7. ஒரு வலையில் இருக்கும் ஆயிரம் லட்சம் 'ஓட்டை'களுக்கும், ஒரு வேட்டியின் பின்புறத்தில் இருக்கும் ஒரே ஒரு 'பெரிய்ய்ய' ஓட்டைக்கும் உள்ள வித்தியாசம்தான்!

8. மனிதனாகப் பிறந்திருந்தாலும், மிருகமாக நடந்து கொள்ளும் சிலர் எப்படி மனிதனாக மதிக்கப் படுவதில்லையோ, அதே போலத்தான், 'பிராமண' குலத்தில் பிறந்ததனால் மட்டுமே ஒருவன் 'பிராமணன்' ஆகிவிட முடியாது என்பதைத்தான் அறுதியிட்டு சொல்லியிருக்கிறார்கள்.

'லாஜிக்'லாம் புரியற நிலையிலிருந்து நீங்கள் இந்தப் பதிவை எழுதவில்லை யென்பது மட்டும் நன்றாகப் புரிகிறது!
உங்களின் மற்றைய படைப்புகளைப் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.
கோபப்பட வேண்டாம்.

said...

கலக்கல் குழலி, சூப்பர்.

விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற கொஞ்சம் வாய்ப்பு இருப்பதாக சிலர் சொல்லுகிறார்கள்
தாங்கள் கருத்து என்ன?

மயிலாடுதுறை சிவா...

said...

இட ஒதுக்கீடு கல்லூரியளவில் தேவையில்லை. இது முற்றிலும் அரசியலுக்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.

நோய் நாடாமல் வெளிப்புண்ணுக்கு மருந்து தடவிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

இதணை உணரக்கூட முடியாமல் தர்க்கம் செய்கின்றனர் படித்தவர்கள். ஆனால் யார் வாயிலிருந்தும் மறந்தும் கூட பிரச்சினையின் வேரை பற்றி பேசுவதில்லை.

இட ஒதுக்கீட்டால் தரம் இருக்காது என்றால் அவர்களின் தரத்தை எங்கே மேம்படுத்துவது?

வசதியில்லாமல் படிப்பை பள்ளிஅளவிலேயே நிறுத்தி விடுபவர்கள் தான் அதிகம்.
இட ஒதுக்கீட்டை கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவதை விட பள்ளிகளில் குழந்தைகளின் கல்வி தரத்ததை மேம்படச் செய்து கல்லூரிகளுக்கு செல்வதற்கான வசதிகளை செய்தால் உருப்படியாக இருக்கும்.

இதை செய்தால் மேற்படிப்புகளுக்கு போட்டியிடுபவர்களின் திறன் ஒரே நிலையில் இருக்கும். அவர்கள் படிப்புச் செலவை கூட ஏற்றுக்கொள்ளலாம்.

உண்மையிலேயே படிக்கும் ஆசை உள்ளவர்களும் திறமையானவர்களும் இட ஒதுக்கீட்டில நுழைவது தான் நல்லது. ஆனால் நடப்பது என்ன? வசதியான வீட்டு பிள்ளைகள் இட ஒதுக்கீட்டு முறையால் ஒரு பெருமைக்காக மருத்துவ தொழிநுட்ப கல்லூரிகளில் நுழைந்து விடுகிறார்கள். இவர்களிடம் நாம் எப்படி மருத்துவம் செய்து கொள்வது?

இந்த தொலைக்காட்சிகளும் பரபரப்புக்காக விவாதாங்களை ஆரோக்கியமில்லாமல் திசை திருப்பிவிடுகின்றன. உருப்படியான யோசனைகளை சொல்லி அடிப்படை மாற்றங்களை உண்டாக்குவது தான் நல்லதாக இருக்கும்.

போதாக்குறைக்கு இதில் ஜாதியையும் இழுத்து...

சந்திப்பு இப்படி ஒரு பத்தி எழுதியருக்கிறார் தன் பதிவில்
//நுழைவுத் தேர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மிக முக்கியமானது. இந்த வகுப்புகளில் கூட குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர்களுக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதைத்தான் நான் உள்வட்டம் - வெளிவட்டம் என்று குறிப்பிட்டிருந்தேன்//

பயிற்சி வகுப்புகளில் ஜாதி என சொல்கிறாரே! இது அதிகமாக படவில்லையா? அங்கே பணம் தான் பிரதானம். அதற்கும் இந்த கல்லூரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

வேண்டுமானால் இது போன்ற தரமான பயிற்சி வகுப்புகளை இலவசமாக அரசு ஒவ்வொரு மாவட்ட அளவிலும் உருவாக்க வேண்டுமென சொல்லுங்கள்.

நமக்கு பிரச்சினகைளை மேலும் சிக்கலாக்க தெரியுமே தவிர தீர்வு காணத் தெரியாது. அது இந்தியனின் குறைபாடு. அது சாலை விதிகளில் மக்களின் செயல்பாடுகளை கொண்டே சொல்லிவிடலாம்.

அப்படித் தான் இடஓதுக்கீடும்.

said...

1. விஜயகாந்தை பார்த்து எதுக்கு பயம்?

2. உங்களுக்கு இன்னுமா அரசியல் தெரியலை?

3. இப்பதிக்கு அமுக்கமா இருப்பது டாக்டர் அய்யா இல்லையா?

4. அப்பு வன்னியரா?

5. தற்காப்பு கலைஞர்தான் ஆடணுமா? டாக்டர் அய்யா வேடிக்கை மட்டும்தான் பார்ப்பாரா?

6. கரண்டை பிடித்து இழுத்திருந்தா என்எல்ஸியை இழுத்து மூடியிருப்பார்கள். நிறைய வன்னியர்களுக்கு வேலை போயிருக்குமே?

7. மத நம்பிக்கை இல்லைன்னு சொல்றவங்களுக்கு எப்படி ஜாதி நம்பிக்கை இருக்குது?

8. கமலையும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?

9. 10 ஆண்டுகளுக்கு முன்பு சோ சொன்னது மட்டும் புரிந்ததா?

10. அது ஏன் 9 நம்பர் போடவில்லை?

said...

குழலி,
உங்கள் கேள்விகளில் எனக்கு முக்கியமாக படுகிற கேள்வி 'கலைஞர்' கூட்டணியில் உரிமைக்குரல் எழுப்பும் கூட்டணித் தலைவர்கள் 'அம்மா' கூட்டணியில் மட்டும் அமுக்கமாக இருப்பது ஏன்?

ஏனெனில் மற்றவற்றில் பல கேள்விகள் அல்ல. அவை தவறான கருத்துக்கள் என்பதை உங்களுடைய லாஜிக்கலான கேள்விகள் காட்டுகின்றன.இந்த கேள்வி அந்த வகையில் வரவில்லை.

முதலில் தனித்து போட்டியிடுகிறது என்பது தற்கொலைக்கு சமம் என்பதை இந்த கட்சிகள் அனைத்தும் உணர்ந்திருக்கின்றன. எனவே அவை இரண்டு கழகங்களிடமும் மாற்றி மாற்றி கூட்டணி வைக்கின்றன. இவர் அல்லது அவர் என்பது தான் இவர்களின் கணக்கு. கருணாநிதி பா.ஜ.கவை கையில் வைத்து கம்யூனிஸ்ட் காங்கிரஸ் பக்கம் வராதவாரு செய்து விட்டார். அதனால் போன முறை அவர்கள் இங்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவிடமும் கட்சிகள் டிமாண்ட் பண்ண தான் செய்கிறார்கள்.சில சமயங்களில் கலைஞர் அளவுக்கு மீறிய நம்பிக்கையினால் கதவை சாத்தி விட அதனால் கட்சிகள் அம்மையாரிடம் சரண்டர் ஆகி விட்டன. இந்த முறை உண்மையில் அம்மா பலத்த முயற்சி செய்தார் ம.தி.மு.க மற்றும் பா.ம.க கட்சிகளுக்காக என்பது நீங்கள் -ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டிய ஒன்று.

said...

இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ?

இன்னும் பலபேர் வெளியில் வரவில்லை. ரிசல்ட்டை பொறுத்து வருவார்கள்.பேசுவார்கள்.

குழலி நீங்க எழுதுங்க...

said...

ஒண்ணுமே உங்களுக்கு புரியலே என்பது உங்களை பொருத்த வரை சரிதான் போலிருக்கிறது. அதை உறுதி செய்வது அந்த 8வது கேள்வி.

லாஜிக் இல்லையே என புலம்பும் நீங்கள் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட விஷயம் லாஜிக்கும் இல்லாமல் சாத்தியமும் இல்லாமல் சோவை வாருவதற்காகவே புனைந்திருக்கிறீர்களே!

உண்மையிலேயே ஒண்ணும் புரியவில்லை போங்கள்.

said...

குழலி இதை அனுமதியுங்கள்.

ஒருவர் விஜயகாந்த்தை பார்த்து என்ன பயம் என்கிறார்.ஒரு எடுபிடி அதிமுக தொண்டர்கள் கட்டுகோப்பானவர்கள் என்கிறார். திமுக எப்படியாவது தோற்கவேண்டும் என்பதுதான் எங்க எண்ணம்னு சொல்லுங்கப்பா. இதுக்காக நாங்க யாரை காலை வேண்டுமானாலும் பிடிப்போம்.உருவி விடுவோம்னு சொல்ற துணிச்சல் இவங்களுக்கு இல்லை.

எந்த அடிமுட்டாளுக்கும் இது புரியவேண்டும்.இதையும் புரியவில்லை என்று சொல்லும் எடுபிடிகளை என்ன என்று சொல்ல?

ராமதாஸ் வைத்து கேட்கப்பட்ட இந்த கேள்விகளில் பொருள் உள்ளது. இந்த தேர்தலில் ராமதாஸ் அடக்கி வாசித்தாலும் கடந்த முறை இவரும் ஆடியவர்தான்.ஆனால் இதிலும் திரிப்புதான் வருது.பதிலைக்காணோம்.

திரித்தல் வாதிகள் "சுப்பரமணி" விஷயத்தில் மட்டும் கருத்தே சொல்லமாட்டார்கள்.

இதைவிட கேவலமான தேர்தல் அறிக்கை வந்தப்போது எல்லாம் மூடிக்கொண்டு இருந்த சிலதுகள் இப்போது ஆடுவது ஏன் என்பது கேள்வி.இதற்கு பதிலை காணோம்.

எஸ்.வி.சேகர் மேல் பாசம்னா சொன்னார்?

மூளைல ஓட்டை இருக்கற எடுபிடி ஆளுங்களுக்கு எது பெரிய ஓட்டை என்பது தெரியாது. இன்னொன்று சாதி நம்பிக்கை மத நம்பிக்கைன்னு லெக்சர் அடிக்குது.அப்ப உன் மதத்தினால் தான் சாதி வந்ததுன்னு நீ ஒத்துக்கறியா?

கமலை கிண்டல் பண்ணக்கூடாதா சுவாமி? கடைசியாக நீங்கள் கேட்ட கேள்விக்கு எடுபிடிகள் பதில சொன்னால் எடுப்பாக இருக்காது.விஷயம் புரியாமல் உளறுவார்கள்.(உளறிவிட்டார்கள்) முதலாளிகள் வந்து சொல்வார்கள்.

said...

//களத்தில் அதிமுக போட்டி வேட்பாளர், திமுக வேட்பாளர் கலக்கம் என்று தினமலரில் செய்தி…. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர் போட்டியிட்டால் கலங்க வேண்டியது அதிமுக வேட்பாளர் தானே? அதிமுகவின் வாக்குகள் பிரியும் என மகிழ்ச்சி அடைய வேண்டிய திமுக வேட்பாளருக்கு கலக்கம் ஏன் என்பது புரியவில்லை.//

ENNAKU PURIETHU ITHU KANDIPA ORU COMEDY .....he he he he

//ஆயிரம் இலட்சம் ஓட்டை உடைசல்கள் இருக்கும் இந்து மதம் அழிய கூடாது என சப்பைக்கட்டு, முட்டு கொடுத்தல் சால்ஜாப்பு என அத்தனையும் சொல்பவர்கள் ஒரே ஒரு ஓட்டை மட்டுமே இருக்கும் இட ஒதுக்கீட்டை மட்டும் அதற்கு மாற்று குட சொல்லாமல் ஒழிக்க வேண்டுமென்பதின் லாஜிக் என்னயா பிரியவே மாட்டேங்குது?//

Ennakum pooriyala ithu NEETHI adiya illa SERUPADIYA.??.)-
he he he he

-Swamy red bull

said...

4. income tax kattum periya thirudanuku A class jail, kutti thirudanuku C class jail illeya adhu pola.

said...

//6. இப்போ, நம்ம 'நெப்ஸ்' கூட, எஸ், வி. சேகர் மேல பாசம்னு அறிக்கை வுடலை.... அது போலத்தான்!
//
அது சரி அப்போ பாரதிராஜாவுக்கு மட்டும் எஸ்.எம்.கிருஷ்ணா வாழ்த்து அனுப்பலையே
//3. இப்பதிக்கு அமுக்கமா இருப்பது டாக்டர் அய்யா இல்லையா?
//
பாலமுருகன், பொதுவில் எழுதியது ராமதாசையும் சேர்த்து தான் குறிப்பிடுகின்றேன்.

//4. அப்பு வன்னியரா?
//
இதற்கு முன் ரஜினிகாந்த்,ஜெயலலிதா, சோனியாகாந்தி பற்றியெல்லாம் எழுதியுள்ளேன் அவர்களெல்லாம் வன்னியரா? இப்படி எதற்கெடுத்தாலும் திரிக்கும் இந்த செயலை நான் என்ன சொல்லி அழைப்பது? அடுத்தமுறை இப்படி செய்யும் போது சொல்கின்றேன்.

//லாஜிக் இல்லையே என புலம்பும் நீங்கள் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட விஷயம் லாஜிக்கும் இல்லாமல் சாத்தியமும் இல்லாமல் சோவை வாருவதற்காகவே புனைந்திருக்கிறீர்களே!
//
எங்கே பிராமணன் என்ற நூலை சோ எழுதியதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடுவதும், சோ மாங்கு மாங்கென்று பல லாஜிக்குகள் நானூறு பக்கங்களுக்கு மேல் எழுதியதும் பிராமணர் என்பது பிறப்பால் வருவது இல்லை, அது ஒரு மேன்மை நிலை, பிறப்பால் பிராமணர் என பேசுவதெல்லாம் கழகங்கள் கட்டிய கதை, வெள்ளையர்கள் தான் ஆரிய கதை கட்டியவர்கள் என எழுதியிருந்தார், ஆனால் அதன் முன்னுரையில் பிறப்பால் பிராமணராக இருந்தாலும் என யஜீர் வேதத்தின் சுலோகத்தை எடுத்து போட்டுவிட்டு பிறப்பால் பிராமணர் என்பது கிடையாது என மாங்கு மாங்கென்று எழுதியதின் லாஜிக் தான் புரியவில்லை.

said...

கலர் டிவிக்கும் பொது அறிவுக்கும் என்ன தொடர்பென புரியலைங்க

said...

மதங்களில் சில ஓட்டைகளுண்டு என்று சொல்லிக்கொள்ளும் நிலையைத்தாண்டி, ஓட்டைகள் மட்டும்தான் இந்துமதம் என்று சொல்லிச்சென்ற SK மிக்பெரிய இந்துமத எதிர்ப்பு வாதியாக இருப்பார் போலுள்ளது.(வலைகளிலுள்ள ஓட்டைகளின் உதாரணத்துக்குள்ளால் இதைத்தானே சொல்ல வருகிறார்?. ஓட்டைகள் மட்டுமே வலையாகும். அந்த ஓட்டைகளை இணைக்க ஒரு நூல். அவ்வளவுதான் வலையில் ஓட்டைகளைவிட மேலதிகமாக இருப்பது)

இந்த வலை உதாரணம் இந்துமதத்துக்கு மட்டும் பொருந்துமா? இல்லை எல்லா மதத்துக்கும் பொருந்துமா என்று SK தான் சொல்ல வேண்டும்.

said...

குழலி!

சிறப்பான கேள்விகள்! நெத்தியடிதான்! நீங்க முன்னாடி ஒரு இடத்தில சொன்னாப்புலதான்....'முடிஞ்சா அரசியல் ரீதியா இதுகள் இட ஒதுக்கீட்டை தடுத்துக் கொள்ளட்டும் பார்க்கலாம்!'-னு விட்டுட வேண்டியதுதான்.

மற்றபடி 'பரம்பரைப் பகையை' இதுகள் வெளிப்படியாவே சொன்னப்புறமும் - இதுகள்ட்ட 'லாஜிக்' எதிர்பார்க்கலாமா?!

'இடதுசாரி'(!) ராமே இட ஒதுக்கீட்டு பிரச்சனைல ஆடும் ஆட்டம் நமக்குத் தெரிந்ததுதானே?!

These are incorrigible species! Their genetic makeup won't let them see the logic anyway! ;)