இவர்களும் இந்தியர்கள்



படத்திற்கு நன்றி
விகடன்.காம்

களைந்(த்)த ஆடைகள்
சொல்லிக் கொள்(ல்)வோம்
இவர்களும் இந்தியர்கள்
உரக்க சொல்வோம்
ஜெய்ஹிந்த்

37 பின்னூட்டங்கள்:

said...

வணக்கம் குழலி.
இது தொடர்பான ஒரு பதிவை நான்
2004 ம் ஆண்டில் பதித்திருந்தேன்.
பார்க்கவும்

http://karikaalan.blogspot.com/2004/08/blog-post_21.html

said...

சம்பந்தமேயில்லாமல் இதில் என்ன ஒரு 'ஜெய் ஹிந்த்'? தனி மனிதர்கள் செய்யும் தவறுக்கு தேசத்தை இழுக்க வேண்டாம். உதாரணத்துக்கு தமிழகத்தின் கடைகோடியில் ஒரு குக்கிராமத்தில் ____ கட்சி தொண்டர் ஒருவர் கொள்ளை அடித்தாரென்றால், மறுநாள் _____ கட்சி தொண்டர்கள் கொள்ளையர்கள் என்று ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டுவது போல இருக்கிறது இது!

said...

//சம்பந்தமேயில்லாமல் இதில் என்ன ஒரு 'ஜெய் ஹிந்த்'? தனி மனிதர்கள் செய்யும் தவறுக்கு தேசத்தை இழுக்க வேண்டாம்.
//
அனானி உண்மையிலேயே இதற்கும் ஜெய்ஹிந்த் ற்கும் தொடர்பில்லை என நீங்கள் நம்புகின்றீரா? முடிவை படிப்பவர்களிடமே விடுகின்றேன்

நன்றி

said...

அனானி,
தமாசா பேசறீங்களே...
4 தனி மனிதர்கள் தான் எல்லையில் துப்பாக்கி தூக்கிட்டு ரொட்டி சுட்டுகிட்டு இருக்காங்க...அவங்களுக்குத் தானே எல்லோரும் ஜெய்ஹிந்த் சொல்லறாங்க!

எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுறுவியவர்களை உள்ளே விட்டபின்னர் அவர்களிடமிருந்து தேசத்தை காப்பாறினோம் என்று கதறுபவர்கள், கண்டிப்பாக பாலியல் பலாத்காரம் செய்யலாம்...தேசத்தை காப்பவருக்கு இந்த ப்ரிவிலெஜ் கூட இல்லன்னா எப்படி?

வாழ்க இந்திய சனநாயகம்!
ஜெய்ஹிந்த்

said...

அனானி உண்மையிலேயே இதற்கும் ஜெய்ஹிந்த் ற்கும் தொடர்பில்லை என நீங்கள் நம்புகின்றீரா? முடிவை படிப்பவர்களிடமே விடுகின்றேன்


இடஒதுக்கீட்டுக்கும் நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கும் என்ன தொடர்போ அந்த தொடர்பாக இருக்கலாம்.

said...

//இடஒதுக்கீட்டுக்கும் நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கும் என்ன தொடர்போ அந்த தொடர்பாக இருக்கலாம்.
//
அனானி உம் வீட்டு பெண்களிடம் இந்திய இராணுவம் இப்படி நடந்திருந்தாலும் இதே உதாரணத்தை நீங்கள் தருவீர்கள் என நம்புவோமா?

எப்படியா இப்படி கேவலப்படுத்துகின்றீர் அந்த பாதிக்கப்பட்ட மக்களை..... இந்திய தேசியம் கண்ணை மறைக்குதா அல்லது மனிதத்தன்மையை மழுங்க செய்கிறதா?

said...

யார் அந்த பெண்களை கேவலப்படுத்தியது?

இட ஒதுக்கீட்டுகாக ஒருபாவமும் அறியாத மரங்களை வெட்டியதையும் தீவிரவாததிகளை பிடிக்க ஒரு பாவமும் அறீயாத இந்த பெண்களை கெடுத்ததையும் ஒப்பிட்டு சொன்னால் உங்களுக்கு அது வேறு மாதிரி புரிகிறது.

said...

நான் முதல் பின்னூட்டம் இட்ட அனானி. (ரெண்டாவது பின்னூட்டம் இட்டது நான் இல்லை என்றாலும் அதில் இருந்த உண்மையை ரசித்தேன்!).

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் உங்கள் வீட்டு பெண்ணண என்றெல்லாம் இழுப்பது திசை திருப்பும் வேலை. பதிலுக்கு நான் கேட்கட்டுமா? உங்கள் வீட்டு பெண்களுக்கு அப்படி எதுவும் நடந்தால் நீங்கள் இப்படி தான் 'ஜெய் ஹிந்த்' என்று பதிவு போட்டுக் கொண்டு உட்காந்திருப்பீர்களா? நான் கேட்பதும் அது தான், இப்படி ஹம்பக் காட்டும் பதிவுகளை போட்டுக் கொண்டு ஒரு வட்டத்தினை சேர்ப்பதற்கு பதிலாக உருப்படியாக எதுவும் செய்ய முயலுங்கள்.

said...

//சம்பந்தமேயில்லாமல் இதில் என்ன ஒரு 'ஜெய் ஹிந்த்'? தனி மனிதர்கள் செய்யும் தவறுக்கு தேசத்தை இழுக்க வேண்டாம்.
//
கீழே உள்ள பின்னூட்டத்தில் இருக்கின்றது ஜெய்ஹிந்த் திற்கான தொடர்பு

//அனானி உண்மையிலேயே இதற்கும் ஜெய்ஹிந்த் ற்கும் தொடர்பில்லை என நீங்கள் நம்புகின்றீரா? முடிவை படிப்பவர்களிடமே விடுகின்றேன்


இடஒதுக்கீட்டுக்கும் நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கும் என்ன தொடர்போ அந்த தொடர்பாக இருக்கலாம்.
//

said...

//தனி மனிதர்கள் செய்யும் தவறுக்கு தேசத்தை இழுக்க வேண்டாம்.
//
தனி மனிதர்கள் எதன் பொருட்டு தவறு செய்கிறார்கள் என்பதை பொறுத்து இழுப்பதும் இழுக்காததும், மனித தன்மையற்ற பாலியல் பலாத்காரங்கள் என்கவுன்டர் கொலைகள் இங்கே நடப்பது தேச பாதுகாப்பு என்ற பெயரில்... இதோ நீங்கள் இங்கே சப்பை கட்டு கட்டுகின்றீர்களே அதும் கூட இந்திய தேசியம் உங்கள் கண்ணை மறைப்பதினால்.

// உதாரணத்துக்கு தமிழகத்தின் கடைகோடியில் ஒரு குக்கிராமத்தில் ____ கட்சி தொண்டர் ஒருவர் கொள்ளை அடித்தாரென்றால், மறுநாள் _____ கட்சி தொண்டர்கள் கொள்ளையர்கள் என்று ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டுவது போல இருக்கிறது இது!
//
தனிப்பட்ட முறையில் கொள்ளையடித்தால் கட்சியை இழுக்க தேவையில்லை ஆனால் கட்சிக்கு நிதி சேர்க்கிறேன் என கொள்ளையடித்தால் கட்சியை குற்றம் சாட்டுதல் தவறானது அல்லவே!!!

said...

தனிப்பட்ட முறையில் கொள்ளையடித்தால் கட்சியை இழுக்க தேவையில்லை ஆனால் கட்சிக்கு நிதி சேர்க்கிறேன் என கொள்ளையடித்தால் கட்சியை குற்றம் சாட்டுதல் தவறானது அல்லவே'

இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?இந்த பெண்களை கெடுத்த ராணுவ வீரர்கள் தேசபக்தியாலும் நாட்டுப்பற்றாலும் தான் அப்படி செய்தார்கள் என்கிறீர்களா?

said...

http://vettri.blogspot.com/2006/04/blog-post_23.html

said...

//இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?இந்த பெண்களை கெடுத்த ராணுவ வீரர்கள் தேசபக்தியாலும் நாட்டுப்பற்றாலும் தான் அப்படி செய்தார்கள் என்கிறீர்களா?//

இராணுவ உடை உடுத்தியதானலேயே வரும் அதிகாரத் திமிரும், அகங்காரமும் தான். இதைத் தானே ஈழத்தில் கூட அமைதி?!காக்கும் படை என்ற பெயரினாலும் அரங்கேற்றினார்கள்.

//தனி மனிதர்கள் செய்யும் தவறுக்கு தேசத்தை இழுக்க வேண்டாம்.//

சிவிலியனாக இருக்கும் பொழுது தான் அவன் தனி மனிதன். இராணுவ உடை தரித்துவிட்டாலும் அவன் தனி மனிதன் தான் என்றால் அதற்கென்று ஒரு அமைப்பும், நிறுவனமும்?! தேவை இல்லை. வேலையில்லா அனைவரும் இராணுவ உடை உடுத்தி போவோர் வருவோர் அனைவரையும் பலாத்காரம் செய்யலாமோ??? தேசத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில்.

இதில் இந்திய இராணுவம் மட்டுமல்ல.,முத்தாண்டிகுப்பம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவல் துறை, வீரப்பனை கொன்ற அதிரடிப்படையின் அத்துமீறல்களும்(அதிரடிப்படை முகாமில் நடந்த பலாத்காரங்கள்) அடங்கும்.

இந்தியர் அனைவரும் எனது சகோதர சகோதரிகளென்று இவர்களும் "ப்லெட்ஜ்" எடுத்துக்குவாங்க தானே?

said...

சமுத்திராவின் பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கே...

பிரிவினைவாதிகளின் கொலைகளை ஆதரித்து ஏதேனும் எனது பதிவில் இருக்கின்றதா? இல்லையே பிறகு ஏன் ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கின்றீர்...

உரக்க சொல்லுங்கள் ஜெய்ஹிந்த், இந்த ஜெய்ஹிந்த் சத்தத்தில் மனோரமாக்கள் குரல் மறையட்டும், ஈழத்தமிழ் சகோதரிகளின் குரல் நசுங்கட்டும், காஷ்மீரின் குரல் குறையட்டும், சந்தனக்காட்டு சந்ததிகளின் குரல் சுருங்கட்டும், உரக்க சொல்வோம் ஜெய்ஹிந்த்

said...

அன்பு குழலி,

நீங்க எதை எதிர்பார்த்து இப்பதிவு போட்டீங்களோ, அது நன்றாகவே நடக்கிறது, இன்னும் நன்றாகவே நடக்கும்.

வேறு என்ன சொல்ல :(

said...

அடேங்கப்பா, சப்போர்ட்டுக்கு ஈழத்துக்கெல்லாம் போயாச்சா. சரி தான். உங்கள் உள் வட்டத்திலே இந்த மாச ஹீரோ நீங்க தான் குழலி. பரஞ்சோதி சொன்ன மாதிரி எதிர்பார்த்தது நடந்து விட்டது.

said...

குழலி,
மயக்கத்திலிருப்பவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். சுதந்திரம் பெற்றதிலிருந்தே வடகிழக்கு பிரச்சனையை இந்தியா முறையாக கையாலவில்லை. அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ராணுவ அடக்குமுறையினால் அடக்கிவிடலாம் என்று செயல்பட்டு வருகின்றனர். மக்கள் உரிமை குரல் எழுப்பினால் இருக்கவே இருக்கிறது அட்சயபாத்திரம் போல தீவரவாதம் என்ற பரிவட்டம்.

தங்களுக்கிழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குரலை அவர்கள் தெரிவித்ததை பொதுவில் வைத்தால் ஏன் பலருக்கு உறுத்த வேண்டும். இந்தியாவில் பாலும் தேனும் மட்டும் பொழியவில்லை. இந்த மாதிரியான ரத்தச் சகதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. மக்களுக்கெதிரான ராணுவம் என்றுமே வென்றதாக சரித்திரம் இல்லை. அடக்குமுறைகளை விட பிரச்சனைகளுக்கு மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்பதை உணர்ந்து நடப்பதுதான் இந்திய தேசிய கூட்டமைப்பிற்கு தகுதியானதாக இருக்கும்.

ஜெய் கிந்த்!!

said...

Kuzhali,
I too think that it is not necessary (and proper) to use 'ஜெய் ஹிந்த்' for this post. This can happen in any country, though I do not justify what some jawans did, in this case ?

Do you mean to say that we should not be proud to be an Indian just because of this incident ?

Sorry for commenting in English.

said...

Each and every of your post shows your cheap thinking in issues. So for god sake do not comment that this is right or this is wrong. Good writing style and command in tamil language does not gives you the right to accuse people as your crediblity is pathetic and is crystal clear from your posts. Your style is same as periyar or MK who tried to maniplate people based on their command in language.

Regards,
Arvindh

said...

Sad.

But good work by Kuzhali.

said...

சமுத்ராவின் இந்த பின்னூட்டம் இந்த பதிவிற்கு தொடர்புடையதால் அதன் சுட்டி இங்கே
அந்த வரிகள் இதோ
//Are you aware that those women in famous picture were not even aware of meaning of words written in the banner they prominently held against the Army?
//
இந்திய தேசியத்தின் பெயரால் இன்னும் எத்தனை அசிங்கங்கள் இந்த பெண்களுக்கு சமுத்ராக்களை போன்றவர்களால்?

said...

ஐயயோ குழலி நீங்க எழுத முன்னால் அர்விந்த்கிட்டே பர்மிஷன் வாங்கல்லையா?

said...

//Your style is same as periyar or MK who tried to maniplate people based on their command in language//

ஹி... ஹி...

அரவிந்த் பட்டயம் கொடுத்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் குழலி!

said...

//Are you aware that those women in famous picture were not even aware of meaning of words written in the banner they prominently held against the Army?//
அவர் தான் சொல்லியிருக்கிறாரே...உரக்க சொல்லுங்கள் ஜெய்ஹிந்த் என்று!

போலித் தேசியம் இப்படி கூட சிந்திக்க செய்யுமோ?

said...

//சமுத்ராவின் இந்த பின்னூட்டம் இந்த பதிவிற்கு தொடர்புடையதால் அதன் சுட்டி இங்கே
அந்த வரிகள் இதோ//

எப்படியெல்லாம் விளம்பரம் தேடி கொண்டு இருக்கிறீர்கள்!

அது சரி, நான் சொன்னது உன்மையா பொய்யா என்ற கேள்வி கேட்கும் வேலையெல்லாம் கிடையாது.முதலில் ஒரு விஷயத்தை எவன் சொல்கிறானோ அவனை தாக்கு!

தமிழர்களின் ("செருப்பு சீமாரு" )கலாச்சாரம் இது தானோ?

//தங்களுக்கிழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குரலை அவர்கள் தெரிவித்ததை பொதுவில் வைத்தால் ஏன் பலருக்கு உறுத்த வேண்டும்//

பாலியில் வன்கொடுமை நடக்கவில்லை என்று forensic lab தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துவிட்ட கதை உங்களுக்கு தெரியாதோ?

said...

//Are you aware that those women in famous picture were not even aware of meaning of words written in the banner they prominently held against the Army?//

தங்கள் ''சொந்த'' மொழியில் எழுதி இருந்தால் இந்திய தேசிய அரசிற்கு புரிந்திருக்காது. அதுதான் காரணம்.

said...

//தங்கள் ''சொந்த'' மொழியில் எழுதி இருந்தால் இந்திய தேசிய அரசிற்கு புரிந்திருக்காது. அதுதான் காரணம்.
//
அவர்களின் சொந்த மொழியில் எழுதியிருந்தால் அது இராணுவத்தை வாழ்த்தி எழுதியிருப்பதாக சமுத்ராக்கள் மொழிபெயர்த்திருப்பார்கள்....

said...

;-)

http://www.hrdc.net/sahrdc/resources/armed_forces.htm

said...

People who say that these kinds of things happen in every arm force throughout the world is a sad weight for this world to hold.

I think 'Jai Hind' holds the right amount of sarcasm, for the jawans as well as blind citizens. It's not without reason that India holds the first place in world blindness.

-Kajan

said...

ஜெய்ஹிந்த் சொல்லுதல்..தேசிய நீரோட்டத்தில் வேகமாக துடுப்பு போடுவது என்பதுதான் சேஃபான பாதையாக பலருக்கு தெரிகிறது..

மத்தவனை எல்லாம் கேனையன்னு நினைக்கிறார்கள்.உரிமையை கேட்டா உதைக்க வர்றவனுங்க பகவத் கீதை பாடம் எடுக்கறது அசிங்கம் மட்டுமல்ல ஆபாசம்

said...

http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_22.html

நாம் இன்று இது போல பதிவுகளை எழுத முடிகிறது, வெடி குண்டு புகை நம்மை நடுவே நாம் வாழ்க்கையை கழிக்காமல் இருக்கிறோம், நாம் இன்று கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இன்று நம்முடைய நாட்களை கழிக்கிறோம் என்றால் அது நம்முடைய எல்லையில் தன் வீடு மறந்து சொந்தம் துறந்து இல் வாழ்வு துறந்து நம்மை காத்துக் கொண்டிருக்கும் எல்லைக் காவல் வீரர்களால் மட்டும்தான்.

ஆகவே இங்கு நாம் அவர்களைப் பற்றி எழுதும் முன் சிறிது யோசனை செய்த பின்னரே எழுத வேண்டும், முதல் அமைச்சர் முதல், பிரதமர் வரை யாரைப் பற்றி வேண்டுமெனிலும் நாம் எழுதலாம், கேவலமாக திட்டலாம், அதற்கு நமக்கு உரிமை உண்டு ஆனால் இந்த விசயத்தில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடுவது தவறாகும்.

அதற்காக இந்த விசயத்தை இப்படியே விட சொல்லவும் இல்லை. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற பரம்பரையில் வந்தவர்கள் அல்லவா நாம்?

பொதுவாக சைன் ஆப் கமாண்ட் என்பது ஆர்மியில் உயிரைவிட உயர்வாக கருதப்படும் ஒன்று ஏனெனில் சைன் ஆப் கமாண்டை ஒருவர் கடைபிடிக்கவில்லை என்றால் போகப் போவது இன்னொருவர் உயிர் அல்ல அந்த முழு குழுவில் உள்ள அனைவரின் உயிருமே ஆகவே சைன் ஆப் கமாண்ட் என்பதுதான் ஆர்மியில் மிகவும் முக்கியமாக கடைபிடிக்கப்பட வேண்டிய விசயம். ஆகவே ஒரு குழு தலைவர் சொல்லாமல் இந்த மாதிரி தவறுகள் நிகழ்வது மிகவும் கடினம்.

அதற்காக குழுத் தலைவரே இது போல கட்டளை இட்டார் என்றும் கூறவில்லை. வட கிழக்கு விவாகாரங்களில் நம்முடைய பாலிசி மேக்கர்ஸ் நடந்து கொள்ளும் விதமே இவ்வாறு தவறு நடக்க காரணம். மாற்றாந்தாய் பிள்ளைகளை பார்ப்பது போல வட கிழக்கு விவகாரங்களில் நம்முடைய அரசு நடப்பதால்தான் இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன். நம்முடைய ராணுவம் காஷ்மீரில் இருந்து ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற பல மா நிலங்களிலும் உள்ளதே இது போன்ற தவறுகள் அங்கெல்லாம் நடக்காமல் இங்கு நடக்க காரணம் அரசின் அலட்சிய போக்கே.

ஆஸ்பத்திரியில் கற்பழிப்புகள் நடக்கவில்லையா, போலீஸ் நிலையங்களில் நடக்கவில்லையா? டெல்லியில் நடக்கும் பாலியல் கொடுமைகள் போல எங்குமே நடப்பதில்லை ஆகவே ஒட்டு மொத்த பாரதத்தயே கீழ்தரமாக சித்தரிக்கும் வகையில் அந்த ஜெய் ஹிந்த் என்ற எழுதப் பட்டிருப்பது வேதனையை உண்டாக்குகிறது.

இந்தப் பதிவும் நம் பாரதத்திலா இப்படி என்ற வேதனையில் எழுதப் பட்டிருப்பதாகவே கருதுகிறேன் இருப்பினும் மனதில் ஒரு வேதனை அந்த ஜெய் ஹிந்த் என்ற சொற்களை கண்டு.

இதனை தனிப் பதிவாக என்னுடைய பதிவிலும் வெளியிட்டுள்ளேன்.

http://kathalregai.blogspot.com/2006/05/blog-post.html

said...

//நாம் இன்று இது போல பதிவுகளை எழுத முடிகிறது, வெடி குண்டு புகை நம்மை நடுவே நாம் வாழ்க்கையை கழிக்காமல் இருக்கிறோம், நாம் இன்று கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இன்று நம்முடைய நாட்களை கழிக்கிறோம் என்றால் அது நம்முடைய எல்லையில் தன் வீடு மறந்து சொந்தம் துறந்து இல் வாழ்வு துறந்து நம்மை காத்துக் கொண்டிருக்கும் எல்லைக் காவல் வீரர்களால் மட்டும்தான்.
//
அதற்காக இராணுவத்தினர் என்பதற்காக எதுவேண்டுமானாலும் செய்துவிட்டு ஜெய்ஹிந்த் என்று கத்திவிட்டால் போதுமா? இதோ இத்தனை பின்னூட்டங்கள் நான் ஜெய்ஹிந்த் என்று எழுதியதை கண்டித்ததில் எத்தனை பின்னூட்டங்கள் இந்த இராணுவம் செய்தது தவறு என்று கூறியவர்கள்?

said...

//இத்தனை பின்னூட்டங்கள் நான் ஜெய்ஹிந்த் என்று எழுதியதை கண்டித்ததில் எத்தனை பின்னூட்டங்கள் இந்த இராணுவம் செய்தது தவறு என்று கூறியவர்கள்? //

ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும்போது, தம் விருப்பு வெறுப்புகளைக் காட்டும் மற்றொரு, நிலையினையும் காட்டப் போகும் போதுதான், இது திசை திருப்பப் படுகிறது என்பதை நீங்கள் அறியாதது வருந்தத்தக்க ஒன்று.

இராணுவ வீரர்கள் செய்தது நிச்சயமான தவறுதான்.

கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட.

ஆனால், அதற்கும், நாடு முழுதற்கும் பொதுவான 'ஜெய்ஹிந்த்' என்னும் கோஷத்தை கேலி செய்த போதே முந்தைய பிரச்சினையின் முனை மழுங்கப்பட்டது.

பிறகு, "அதை யாருமே கண்டிக்கவில்லையே" என்னும் வாதம் எடுபடவில்லை.

said...

//ஆனால், அதற்கும், நாடு முழுதற்கும் பொதுவான 'ஜெய்ஹிந்த்' என்னும் கோஷத்தை கேலி செய்த போதே முந்தைய பிரச்சினையின் முனை மழுங்கப்பட்டது.//

ஒரு நாட்டினுடைய மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய ராணுவம் அந்த நாட்டு பெண்களையே கற்பழித்தது ,அந்நாட்டு 'ஜெய்ஹிந்த்' கோஷத்தையே கேள்விக்குறியாக்கி விட்டது

said...

வாழ்க வாழ்க

said...

ஜெய்கிந்த் :)

said...

ஜெய்கிந்த் :)