என்று தணியும் இந்த பிரச்சாரம்...

இட்லிவடையின் 49.5% என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் இங்கே பதிவாக

இதில் கனிமொழி எழுதியது எத்தனை, இட்லி வடை இணைத்தது எத்தனை என்று கனிமொழி எழுதியதின் சுட்டி தந்திருந்தால் சரிபார்க்க வசதியாக இருந்திருக்கும்...

//பிள்ளை பத்தாம் வகுப்பு வந்ததும் பெற்றோர்கள் பல தியாகங்களுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். முதல் கட்டமாக வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குமுதம், ஆனந்த விகடன் நிறுத்தப்படுகின்றன. இந்து நாளிதழ் அவசியமாகிறது. அப்பாக்கள் வீட்டிற்கு நண்பர்களை அழைப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அம்மாக்கள் பொதுத் தேர்விற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நீண்ட விடுமுறைக்கு அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்கள்.

இதுவே 12ஆம் வகுப்புத் தேர்வாக இருந்தால் குடும்பமே தயிர்சாதம், பச்சை மிளகாய்க்கு மாறிக்கொள்கிறது. மிச்சப்படும் பணத்தை கணக்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், practicals என்று சிறப்புப் பாட ஆசிரியர்களுக்குக் கொடுத்து சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். சிறப்பு வகுப்புகள் காலை சுமார் ஆறு அல்லது ஐந்தே முக்கால் மணிக்குத் துவங்கி, பள்ளி நேரங்களில் 'பிரேக்' விட்டு மாலை மீண்டும் கூடி இரவு 10, 11க்கு முடியும்......
//
ம்... இப்படி இருக்க மாணவனுக்கும் அவன் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கும் முதலில் விழிப்புணர்ச்சி வேண்டும், எத்தனை குடும்பங்களுக்கு இந்த விழிப்புணர்ச்சி இருக்கின்றது, இந்த விழிப்புணர்ச்சிக்கு பின்புலமாக இருப்பது எது? எப்படி வந்தது இந்த குடும்பங்களுக்கு மட்டும் விழிப்புணர்ச்சி?

வசதி படைத்த விவசாய குடும்பங்களிலும் இன்றும் வயலுக்கு மருந்தடிச்சாச்சா? நேத்து வாங்கிட்டு வந்த பால்டாயில் எரவாணத்துல சொறுவியிருக்கு பார்த்து எவனாவது மருந்தடிச்சி நம்ம தாலியறுக்க போறானுங்க என்று எச்சரித்துவிட்டு இன்னைக்கு செய்முறைத்தேர்வில் என்ன வரும் என்று பார்த்துக்கொண்டே ஓடும் மகனை எங்கே போறான் ஒம்மொவன் அவசரமா என்று தகப்பனிடம் கேட்கும்போது என்ன எளவோ படிக்கிறானாம், படிக்கிறான் என்று கூறும் குடும்பங்களுக்கு என்ன பதில், அந்த மாணவன் இந்த so called புத்திசாலியாக இருக்காமலிருப்பதற்கு அந்த குடும்பம் மட்டும் காரணமா அல்லது 2000 வருட நம் சமூகம் காரணமா?

ஓரிரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களின் படிப்பே தம் வாழ்க்கையாக கேபிள் டிவி, குமுதம், விகடனையெல்லாம் நிறுத்திவிட்டு இரவெல்லாம் கண்விழித்து படிக்கும் மகனுக்கு தேநீர் போட்டு கொடுக்கும் விழிப்புணர்வு கொண்ட பெற்றோர்களுக்கு மத்தியில் பல பிள்ளைகள் பெற்று சமூகம் கையில் கொடுத்த தொழிலை செய்து தம் பிள்ளைகளுக்கு மேலே குறிப்பிட்ட சூழலை ஏற்படுத்தி கொடுக்காமலேயே 85%, 90% எடுக்கும் மாணவன் தயிர் சாத சூழலில் படிப்பிற்காக மொத்த குடும்பமே தாங்கியதால் 95% எடுக்கும் மாணவனை விட எந்த விதத்தில் குறைந்தவன்?

1991ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுக்கப்போறேன் என்றவனுக்கு யாரிடமோ ஓடிப்போய் இப்படி சொல்றானே மகன் என்ன செய்யலாம் என கேட்க கம்ப்யூட்டரெல்லாம் மாமி வீட்டு பசங்க படிக்க வேண்டிய படிப்பு, அதெல்லாம் படிச்சா பாம்பே, டெல்லி னு தான் வேலைக்குப் போகனும் நம்மூரிலே ஒன்னும் கெடைக்காது எனவே பயாலஜி குருப்பே எடுடா என்று கூறிய படித்த வேலைக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவரோட விழிப்புணர்சிக்கும் 9வது படிக்கும் போதே IIT, IIM என்று சொல்லி வளர்க்கும் பெற்றோரின் விழிப்புணர்ச்சிக்கும் நம் சமுதாயம் காரணமில்லையா?

//அவர்களது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளியிலேயே தரமான கல்வி கொடுக்கப்பட்டும், கிட்டத்தட்ட LKG, UKG யிலிருந்து ஆரம்பித்து 14 வருடங்கள் ஒரே கல்விநிறுவனத்தில் படித்தும், அத்தனை வருட இடைவெளியில்கூட சக மேல்சாதி(என்றழைக்கப்படுகின்ற) மாணவனுக்குச் சரியாக தன்னை வளர்த்துக்கொள்ள முடியாமல் +2 முடித்ததும் மேலே படிக்க இட ஒதுக்கீடு வேண்டுமானால் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
//
இதிலிருந்து என்ன சொல்ல வருகின்றீர் அதாவது so called புத்திசாலித்தனம் பிறப்பினால் வருகிறதா? பிறப்பினால் வருகிறது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா?? நம் so called புத்திசாலித்தனத்திற்கு குடும்ப சூழல், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி பேருதவி புரிகின்றது, தயிர்சாத குடும்ப சூழலை பிறரால் உருவாக்க முடியாத இந்த இந்த இடைவெளி தான் காரணம்..

//படிப்பவனின் மெத்தனமும் ஒருபக்கம் இருக்கட்டும்
//
எந்த மாணவனும் தனக்கு இட ஒதுக்கீடு இருக்கின்றது என்பதற்காக மெத்தனமாக இருப்பதில்லை, 90% வாங்கும் திறன் உள்ள மாணவன் எனக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதற்காக மெத்தனமாக 80% வாங்குவதில்லை, 80% வாங்கினால் தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும், அதே 90% வாங்கினால் அரசு கல்லூரியில் கிடைக்கும் என்று முயல்வானேயொழிய யாரும் இவ்ளோ மதிப்பெண்கள் வாங்கினால் போதும் என்று சொல்லிக்கொள்வதில்லை.ம்... நல்லாதான் கற்பனை குதிரையை தட்டி விட்டிருக்கின்றார்.

//அட, கல்வியின் தரமும்
//
தரமா? எதைய்யா தரம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடதிட்டம், ஒரே மாதிரியான சாப்பாடு, ஒரே மாதிரியான விடுதி, ஒரே மாதிரியான ஆசிரியர், ஒரே மாதிரியான சூழல் என்று இருந்த கல்லூரிகளில் (என் கல்லூரியும் அதில் ஒன்று) படித்த மாணவர்களில் கட்-ஆப் மதிப்பெண்களில் 300க்கான மொத்த மதிப்பெண்களில் கிட்டத்தட்ட 50 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் உள்ளே வந்த மாணவர்கள் கல்லூரி விட்டு வெளியேறும் போது கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலாக வந்தனர், மற்றவர்களுக்கும் தயிர்சாத சூழல் கிடைக்கும்போது இந்த so called புத்திசாலிகளைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள், அதே போல் தயிர்சாத சூழலில் மதிப்பெண்கள் வாங்கும் so called புத்திசாலிகள் மற்ற குடும்பங்களின் சூழலில் இருந்தால் தற்போது இவர்கள் வாங்கும் மதிப்பெண்களை விட குறைவாக வாங்கவும் வாய்புள்ளதை மறக்க கூடாது....

இதெல்லாம் அவர்களுக்கு தெரியாததா? புரியாததா? மீண்டும் மீண்டு இதை விளக்க வேண்டியதின் அவசியமென்ன என்று எனக்குள் வினவினேன், இதெல்லாம் தெரிந்தும் அறிந்துமே மீண்டும் மீண்டும் இந்த மாதிரி பிரச்சாரம் செய்யும் போது மீண்டும் மீண்டும் விளக்குவதில் சோர்ந்து விடக்கூடாது என்பதே இந்த பின்னூட்டத்தின் அவசியத்தை கூறுகின்றது.

//If I happen to recruit from these campuses any time in the future, I will make sure the candidate who gets through to my company is not a student who got in because of his caste certificate. Reservation candidates who can afford not to use the reservations can live in their own little world and work and thrive with their kind, I don’t want them around me...
//
மிக்க நன்றி இதனால் இழப்பு அந்த நிறுவனத்திற்கு தான், திறமையில்லாமல் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இன்று உலகம் பூராவும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத்துறையில் புகுந்து விளையாடுகின்றனர் என்பது அன்னாத்தைக்கு பிரியுமோ இல்லையோ

22 பின்னூட்டங்கள்:

said...

OK, you want the sons,daughters and grandchildren of Ramadoss to get benefits of reservation forever, not to speak of the children and grandchildren of
Karunanidhi and Maran.In which
they are backward.Please tell me.
We all know that the poor backward farmer is this post is just an excuse.The govt. high school in
that place wont have facilities
and who cares about it.You want reservation for all OBCs including the rich and super rich OBCs.The rich OBCs corner most of the benefits of reservation while the
poor in OBCs gets the crumbs.So had you argued that the creamy layer should be excluded that would have made sense.Will Ramadoss
declare that my grandchildren will
not claim any benefit under reservation.Ask him this question.

said...

good work kuzhali


here comes original article

கல்வி என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறந்த வியாபாரமாக மாறிவிட்டது. பாடசாலைகள், கல்லூரிகள் இவை எல்லாம் சிறந்த முதலீடுகளாகக் கருதப்படுகின்றன. பள்ளி வாசல்களில் எல்.கே.ஜி. வகுப்பில் பிள்ளைகளை சேர்க்க நடையாய் நடக்கும் பெற்றோர்கள். அவர்களைப் புழுக்களை விடக் கேவலமாய் நடத்தும் கல்வி நிறுவனங்கள்.
கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். ஆரம்பப் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களின் கல்வித் தகுதி, வாழ்க்கைத் தரம், சமூக அந்தஸ்து முதலியவை முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
இவர்களைப் பொறுத்தவரை பட்டதாரிப் பெற்றோர்களாக இருந்தால் பிள்ளைகளின் படிப்பை அவர்கள் மிகத் தீவிரமாக முன்னிறுத்தப் பாடுபடுவார்கள். அப்படி அல்லாத பெற்றோர்களுக்கு வீட்டுப் பாடங்களில் அதிக கவனம் செலுத்துவது கடினம். இப்படி ஆரம்பித்து அவர்கள் செய்யும் வேலை சமூகத்தில் எப்படி கணிக்கப்படுகிறது, இவர்கள் எத்தகைய குடும்ப அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தகுதிப் பட்டியல் நீள்கிறது.
இந்த அடிப்படையில் பல பள்ளிகள் முதல் தலைமுறையாக ஆங்கிலவழிக் கல்வித் தகுதிகளை நாடி வரும் பெற்றோர்களை வடிகட்டி வீசிவிடுகிறார்கள். பள்ளிகளின் அதிகப்படியான கட்டணம் அடித்தட்டு மக்களை அண்ட விடாமல் செய்துவிடுகிறது.
இப்படி சேர்த்துக்கொள்ளப்படும் குழந்தைகள் வாழ்க்கையில் மதிப்பெண் பெரும் இயந்திரங்களாகவே வளர்க்கப்படுகிறார்கள். அவர்களது குழந்தைப் பருவம் என்பது 10ஆம், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நோக்கிய பயணமாகவே மாற்றப்பட்டுவிடுகிறது. பாடங்கள் கரை புரண்டோடும் நீண்ட யாத்திரையின் முடிவை நோக்கி அவர்கள் நகரத் துவங்குகிறார்கள். பிள்ளைகள் ஒன்பதாம் வகுப்பு வந்ததும் அவர்களின் மற்ற ஆர்வங்கள் மூட்டை கட்டிப் பரண்மீது தூக்கி எறியப்படுகின்றன.

ஒன்பதாம் வகுப்பில் நன்றாகப் படிக்காத பிள்ளைகள் அங்கேயே பள்ளி நிர்வாகத்தால் 10ஆம் வகுப்பு செல்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பில் எல்லா மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்வு பெறவில்லை என்றால் பள்ளிக்குக் கெட்ட பெயர் வந்துவிடுமே.
பிள்ளை பத்தாம் வகுப்பு வந்ததும் பெற்றோர்கள் பல தியாகங்களுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். முதல் கட்டமாக வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குமுதம், ஆனந்த விகடன் நிறுத்தப்படுகின்றன. இந்து நாளிதழ் அவசியமாகிறது.
அப்பாக்கள் வீட்டிற்கு நண்பர்களை அழைப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அம்மாக்கள் பொதுத் தேர்விற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நீண்ட விடுமுறைக்கு அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்கள்.
இதுவே 12ஆம் வகுப்புத் தேர்வாக இருந்தால் குடும்பமே தயிர்சாதம், பச்சை மிளகாய்க்கு மாறிக்கொள்கிறது. மிச்சப்படும் பணத்தை கணக்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், practicals என்று சிறப்புப் பாட ஆசிரியர்களுக்குக் கொடுத்து சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். சிறப்பு வகுப்புகள் காலை சுமார் ஆறு அல்லது ஐந்தே முக்கால் மணிக்குத் துவங்கி, பள்ளி நேரங்களில் 'பிரேக்' விட்டு மாலை மீண்டும் கூடி இரவு 10, 11க்கு முடியும்.
பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்ததும் பெற்றோர்கள், தயிர் சாதத்தில் தயிரையும் மிளகாயையும் மிச்சப்படுத்தி சேமித்த பணத்தையும் உருட்டிப் புரட்டி கண்டெடுத்ததையும் எடுத்துக்கொண்டு போய்
தனியார் பொறியியற் கல்லூரிகளை முற்றுகையிடத் தொடங்குவர். கல்லூரியைப் பொறுத்துத் தொகை வேறுபடும்.
ஆசிரியர்கள் இருக்கும் கல்லூரிகள், மேசை நாற்காலி வாங்கப்பட வேண்டிய கல்லூரிகள், இன்னும் கட்டிடம் எழுப்பப்படாத கல்லூரிகள் என்று தரம் பிரிக்கப்பட்டு மதிப்பெண்ணைப் பொறுத்துத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இடம் பிடிக்கப்படும்.
கொஞ்சம் வசதியான பெற்றோர்கள் நிலம் நீச்சு, வீடு, தாத்தா, பாட்டி என்று எல்லா தட்டு முட்டு சாமான்களையும் விற்றுவிட்டு கோடிக்கணக்கில் கொண்டுவந்து தனியார் மருத்துவக் கல்லூரி வாசல்களில் காத்துக் கிடப்பார்கள். மத்திய மந்திரி முதல் வட்டச் செயலாளர் வரை காலை கையைப் பிடித்து இடம் வாங்கிய பிள்ளைகள், இதயம் இருப்பது இடமா, வலமா என்று தெரியாமல் டாக்டர் என்ற பட்டத்தோடு வெளியேற்றப்படுகிறார்கள்.
இன்றைய நடுத்தர வர்க்கத் தாய்கள் பிள்ளைகளை டாக்டர், இஞ்சினியர்களாக மட்டுமே கருத்தரிக்கிறார்கள். இந்த நிலையில் கல்வி வியாபாரமாக மாறாமல் என்ன செய்யும். பிள்ளைகளின் ஆர்வம் என்ன என்பதையும், உலகமும் இன்றைய கல்வி முறையும் வேலை வாய்ப்புகளும் எந்தத் திசையில் செல்கின்றன என்பதையும் நாம் அறியாத வரை, இந்த அறியாமை நீடிக்கும் வரை பிள்ளைகளுக்கும் கல்விக்கும் விமோசனம் இல்லை.

said...

\\...மற்றவர்களுக்கும் தயிர்சாத சூழல் கிடைக்கும்போது இந்த so called புத்திசாலிகளைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள், அதே போல் தயிர்சாத சூழலில் மதிப்பெண்கள் வாங்கும் so called புத்திசாலிகள் மற்ற குடும்பங்களின் சூழலில் இருந்தால் தற்போது இவர்கள் வாங்கும் மதிப்பெண்களை விட குறைவாக வாங்கவும் வாய்புள்ளதை மறக்க கூடாது....\\

ஒரு தலைமுறை (33 வருசம்) இந்த சூழலில் இருந்து வெளியே வர தடை ஏது இல்லாத பொதும், வெளியே வர மறுக்கும் போது, அதற்கு வழி/காரணம் கண்டறியாமல் இட ஒதுக்கிட்டை மட்டும் ஆதரிப்பது அரசியல் வா(வியா)திகள் விரித்த வலையில் படித்தவர்களும் விழுந்துவிட்டனர் என்பதை காட்டுகிறது. இது அடுத்த தலைமுறைக்கு நல்லதல்ல, எண்ணுடைய கரிசனத்தை ஆடு,நரி என்று பார்த்தால் அது தங்கள் இஷ்டம். ஸ்ரீதர்

said...

another article of kanimozhi

சமீபத்தில் வடசென்னையில் ஒரு பள்ளியின் 20 ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மேல்தட்டுப் பள்ளிகளின் ஆசிரியர்களை விட அவர்கள் மாணவர்களிடமும் சமூகத்திடமும் கரிசனம் அதிகம் உடையவர்களாக இருந்தார்கள்.
அதிலும் அங்கு இருந்த ஆசிரியைகளிடமிருந்த தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அவர்களை நிமிர்ந்து பார்க்கவைத்தன.
இத்தனை இருந்தும் அவர்கள் அனைவரும் சமூக நீதி என்று வரும்போது ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தனர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுக் காலம் ஆகியும் இன்னும் ஏன் இந்த இட ஒதுக்கீடு? சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் தரப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது சிலருக்கு மட்டும் சில சலுகைகள் அளிக்கப்படுவது எப்படி நியாயமாகும்? முன் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று எங்களது வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பது எப்படி நியாயமாகும்? இப்படி இட ஒதுக்கீடு செய்து அந்தச் சலுகையின் மூலம் வாய்ப்பு பெறும் ஒரு மாணவனிடம், அல்லது வேலையாளிடம் எப்படித் தகுதியை எதிர்பார்க்க முடியும்?
இவர்களை மட்டுமின்றி படித்த மத்திய தர மற்றும் மேட்டுக் குடியினரை அலைக்கழிக்கும் இந்தக் கேள்விகள் அவர்களை அறியாமல் அவர்களுக்குள் கோபத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் உருவாக்கியிருக்கின்றன.
நான் சந்திக்கும் பல கல்லூரி மாணவர்களிடம் இதே கோபத்தைக் காண முடிகிறது. இந்த மாணவர்களில் பலருக்கு இந்தியா ஓர் ஏழை நாடு என்பதைத் தவிர தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் நிதர்சனங்கள் எதுவும் தெரியாது. ஆனால் தங்கள் வாய்ப்பும் எதிர்காலமும் தட்டிப் பறிக்கப்படுவதாக அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கும் தீ கவலைக்குரியது.
உண்மையில் விசாரித்துப் பார்த்தால் மேல் ஜாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தலித் மாணவர்களுக்கும் அதிகம் மதிப்பெண்களிலோ தகுதிகளிலோ வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட பிரமை மக்களிடையே மிக சாமர்த்தியமாக உருவாக்கப்பட்டிருக்குகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் செலுத்தப்பட்டுவரும் ஒரு ஆதிக்கத்தை 50 ஆண்டுகள், அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் சீர்செய்துவிட முடியும் என்பது அதீத எதிர்பார்ப்பு. அதுவும் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வாழும் வசதிகளையும் தரமான கல்வி வாய்ப்புகளையும் உருவாக்காத சூழ்நிலையில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது. எல்லாவற்றையும் விட இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கூட ஏதோ தங்களது வாய்ப்புகள் தலித் மக்களால் தட்டிப் பறிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள்.
சினிமா, பத்திரிகைகள் போன்ற வெகுஜன ஊடகங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துகளை மிக சாமர்த்தியமாகப் பரப்பிவருகின்றன.
'ஓரே ஒரு கிராமத்திலே' என்ற படம் பத்திரிகைகளில், அதுவும் பொதுவாகத் தமிழைக் கண்டுகொள்ளாத ஆங்கிலப் பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. சங்கரின் 'ஜென்டில்மேன்' என்ற வெற்றி விழாப் படம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கோஷத்தோடுதான் தொடங்குகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள்மீது சமூகம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையும் வன்முறையும் எப்பொழுதாவது நடைபெறும் அத்துமீறல்களாகவே பார்க்கப்படுகின்றன. இப்படிச் சமூகத்தின் ஒரு முக்கியமான சிக்கலை விடுவிக்கவோ தெளிவுபடுத்திச் சீர்செய்யவோ ஊடகங்களும் அரசியல் இயக்கங்களும் முன் வராதது வியப்பளிக்கிறது. சமூகச் சீர்திருத்தங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் அவற்றைப் பெரிதாக்குவதா அறிவுஜீவித்தனம்?

said...

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளில் மிகப் பெரும்பான்மையானவை
பிறபடுத்தப்பட்ட சமுதாயம்,சிறுபான்மை சமூகத்தினரால் நடத்தப்படுகின்றன.ராமதாஸ் வன்னியர்
நிகர்நிலை பல்கலைகழகம் நிறுவியிருக்கிறார். கனிமொழி இதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்.மேலும் கலைஞர் ஆட்சிகாலங்களிலும் தனியார் கல்லூரிகளின் வளர்ச்சி அமோகமாக இருந்தது என்பதையும் சொல்லியிருக்கல்லாம்.அத்துடன் எத்தனை உட்னபிறப்புகள்,
அவர்களது குடும்பங்கள் இத்தகைய கல்லூரிகளை நடத்துகிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கலாமே. உயர்ஜாதியினர் எனப்படும் பிராமணர்கள் வசம் எத்தனை தனியார்
பொறியியல்,மருத்துவக் கல்லூரிகள இருக்கின்றன.மிகமிகக்குறைவு. ஆனால் பிராமணர்களை வசைபாடுவது இங்கே வழக்கம். பிற்படுத்தப்படுத்த,தாழ்த்தப்பட்ட,சிறுபான்மையினர் என்று மேடைகளில் முழங்கும் ராமதாஸ் ஏன் நிகர்நிலைப் பல்கலைகழகப்ப் பெயரில் வன்னியர்
என்று வைத்திருக்கிறார்.
தனியார் கர்நிலைப்பல்கலைகழகங்களில் மிகப் பெரும்பான்மையும்
சிறுபான்மை,பிறபடுத்தப்பட்ட சமூகத்தினர் நடத்துவதுதான். ஆனால் சில வலைப்பதிவாளர்கள்
இந்த உண்மைகளைகளைக் கண்டுகொள்ளாமல் ஏதோ உயர்கல்வியே பிராமணர்கள் கையில்
இருக்கிறது என்று எழுதிக் கொண்டே இருப்பார்கள்.

said...

உச்ச நீதிமன்றம் பிற்பட்ட ஜாதியில் முன்னேறியோர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னது. அதை கலைஞர் ஏன் ஏற்கவில்லை. ஏன் ஏழைகள் எந்த ஜாதியாக இருந்தாலும்
இட ஒதுக்கீடு உண்டு என்பதை திராவிட இயக்கங்கள் ஏற்க மறுக்கின்றன. கோடி கோடியாக
சொத்திருக்கும் ஒருவரின் வாரிசுகளுக்கு பிற்பட்ட ஜாதி இட ஒதுக்கீடு தருவது எந்த விதத்தில்
நியாயம். கனி மொழி திராவிட இயக்கங்களின் பிரச்சாரத்தினை வேறு வார்த்தைகளில் செய்கிறார்.
உண்மையான கல்வி சீர்த்திருத்தம் பற்றி அக்கறை இருந்தால் புற்றீசல் போல் தனியார் கல்வி நிறுவனங்கள் வளர எவை காரணம் என்பதையும் அவர் பேச வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான் அவை வளர்ந்தன என்பது கண்கூடு.

said...

உண்மையில் விசாரித்துப் பார்த்தால் மேல் ஜாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தலித் மாணவர்களுக்கும் அதிகம் மதிப்பெண்களிலோ தகுதிகளிலோ வித்தியாசம் இருப்பதில்லை

So why you still need reservations.

said...

http://www.dailyprincetonian.com/archives/2003/04/07/news/7825.shtml

http://www.dailyprincetonian.com/archives/2003/04/07/news/7826.shtml

http://www-rcf.usc.edu/~cmmr/NEWS/CSMonitor_Oct13.html

said...

இட்லிவடை பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கேயும்

அண்ணாவ் என்று விளித்திருக்கும் அன்பு அனானிமஸ் தம்பி/தங்கையே

என் பின்னூட்டத்தை பாதி கூட படிக்காத அவசரத்துடன் பின்னூட்டியிருப்பது புரிகின்றது, கொஞ்சம் முழுசா படிச்சி தான் பாருங்களேன் அட நான் என்னதான் எழுதியிருக்கேன்னு படிச்சி பாருங்களேன்,

பொருளாதாரத்திற்கும் so called புத்திசாலித்தனத்திற்கும் தொடர்பில்லை பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரால் so called புத்திசாலித்தனத்திற்கு தேவையான தயிர் சாத சூழலை உருவாக்கி தரமுடியாத நிலை... ஓரிரு விதிவிலக்குகளை தவிர இதற்கு காரணம் இத்தனை காலமாக இருந்த நம் சமூக கட்டமைப்பு என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

முத்துவின் மீதான வாய்ஸ் ஆப் விங்க்ஸ் குற்றச்சாட்டு சற்றும் யோசிக்காமல் வைத்துள்ளது, முத்து மட்டுமல்ல, நானும் இந்த கட்டுரையை படிக்கும் போது கனிமொழி எழுதியது போன்ற தோற்றத்தினையே தந்தது, மேலும் முதலில் வந்துள்ள சில பின்னூட்டங்களும் இதே கண்ணோட்டத்தில் வந்தவைகளே...

said...

//OK, you want the sons,daughters and grandchildren of Ramadoss to get benefits of reservation forever, not to speak of the children and grandchildren of
Karunanidhi and Maran.In which
they are backward.Please tell me.
//
இதைத்தான் இட ஒதுக்கீட்டில் உள்ள ஒரே ஓட்டை என்று குறிப்பிட்டிருந்தேன், இந்த ஒரே காரணத்திற்காக மொத்த இட ஒதுக்கீட்டையும் தள்ளிவிடுவது எந்த விதத்தில் நியாயம்.

இன்னொரு விடயம் தெரியுமா? நான் வலைப்பதிவிற்கு வந்த போது இங்கே இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசிய யாரும் இந்த ஓட்டையை சொல்லி பேசவில்லை, இதை பேசியது நானும் இதற்குக் முன் பேசியது தருமியும் தான்,

//Will Ramadoss
declare that my grandchildren will
not claim any benefit under reservation.Ask him this question.
//
ராமதாசை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் இந்த சுட்டிக்கு செல்லுங்கள் அந்த பின்னூட்டத்தை முழுதும் படியுங்கள் புரியும்.

said...

//ஓரிரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களின் படிப்பே தம் வாழ்க்கையாக கேபிள் டிவி, குமுதம், விகடனையெல்லாம் நிறுத்திவிட்டு இரவெல்லாம் கண்விழித்து படிக்கும் மகனுக்கு தேநீர் போட்டு கொடுக்கும் விழிப்புணர்வு கொண்ட பெற்றோர்களுக்கு மத்தியில் பல பிள்ளைகள் பெற்று சமூகம் கையில் கொடுத்த தொழிலை செய்து தம் பிள்ளைகளுக்கு மேலே குறிப்பிட்ட சூழலை ஏற்படுத்தி கொடுக்காமலேயே 85%, 90% எடுக்கும் மாணவன் தயிர் சாத சூழலில் படிப்பிற்காக மொத்த குடும்பமே தாங்கியதால் 95% எடுக்கும் மாணவனை விட எந்த விதத்தில் குறைந்தவன்? //

அதே கேள்வியை நான் இவ்வாறு கேட்கிறேன். 95% வாங்கிய மாணவனும், 85%-90% வாங்கிய மாணவனும் ஒன்று என்று கூறும் போது, 95% வாங்கிய மாணவன் முற்படுத்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவனாய் இருந்தால் அவனுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டு, மற்றவனுக்கு கிட்டப் படுகிறதே, ஒதுக்கீடு என்கின்ற ஒரு முறையால். இது எந்த விதத்தில் நியாயம்?

நாம் இருக்கும் சமுதாயத்தில், பள்ளி மதிப்பெண் ஒரு அளவுகோல் என்று ஒத்துக் கொள்ளப்பட்ட பிறகு, அந்த அளவுகோலை ஏன் சமமானதாக ஒத்துக்கொள்ளக் கூடாது?

said...

குழலி,
என்று முடியும் இந்த விவாதங்கள்?

நான் மாணவனாக இருந்த போது சாதிப் பிரச்சனைகள் எனக்கு முற்றுமாக தெரியாமல் இருந்தன.
ஆசிரியனாக இருந்த போது சாதிப் பிரச்சனைகள் எனக்கு முற்றுமாக புரிந்து போனது என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது வலைப்பதிவாளனாக ஆன பிறகே முழுமையாகப் புரிகிறது.
உங்களுக்கு இருக்கும் பொறுமை எனக்கு இல்லை. கையாலாகாத சோகமே மிச்சம். அவர்களும் மாறப்போவதில்லை; நம் அரசியல் வாதிகளும் தங்கள் சித்து விளையாட்டை விடப்போவதில்லை. இறுதியில்,
வேதனைகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும், தன் நிலை என்ன உரிமைகள் என்ன என்று கூட தெரியாமல் 'தலைவிதி'க்குப் பணிந்து நடக்கும், 'சித்தன் போக்கு...சிவன் போக்கு' என்று எதையும் தெரிந்து கொள்ளாத, புரிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்களாகவே, நம்மால் ஆணி அடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் அவர்கள்தான் பாவம்.
அவர்களுக்கு தங்கள் சாதிச்சான்றிதழ் பெறுவதில் உள்ள உண்மையான் கஷ்டங்களைச் சொன்னால் கூட நம்ப மறுக்கும் மக்கள் அவர்களுக்குச் சலுகைகள் தேவை என்று எப்படி ஒப்புக் கொள்வார்கள்.
I salute your perseverence. keep going -ஆனால் உங்களுக்குத் தெரியாதா என்ன...தூங்குபவர்களைத்தானே எழுப்ப முடியும்....?!

said...

It is possible to envisage a future where there will be no caste based reservations.But when
those who have benefitted from reservation want to ensure that
the generations to come should
corner all benefits in the name
of backward caste they want to
perpetuate and increase the reservation.Ramadoss wants to
consolidate his base among
vanniyars.Politicians want to
use it as a tool in vote
bank politics.It is easy to
continue reservation than to
increase the funding for
education or provide excellent
education to all irrespective
of caste.They want to keep
the society divided on caste
lines and reservation is one
technique they will always
use.Otherwise people like
Ramadoss will become non entities
in politics.

said...

குழலி,
முன் வைத்த கருத்துக்கள் ஓரளவு சரியே. ஆனால், பாராவுக்கு பாரா "தயிர் சாத்ச் சூழல்" என்று நக்கலடிப்பது சற்று உறுத்துகிறது :-(

மேலும், நீங்கள் கூறுவது கிராமச் சூழலுக்கே பொருந்தும். நகரத்தில் உள்ள அனைத்து சாராருக்கும், பொதுவாக, தங்கள் மகன்/மகளின் கல்விக்காக வேண்டி என்ன தியாகங்கள் செய்ய வேண்டும் என்பது பற்றி நல்ல விழிப்புணர்வு உள்ளது. அனானி கூறியபடி, OBC-க்கான இட ஒதுக்கீடு, Creamy Layer தவிர்த்து மற்றவருக்குத் தேவை என்பதே என் கருத்து.

அதோடு, அடிப்படைக் கல்வி நலிந்தோர்க்கு பலப்படுத்தப்பட வேண்டும். ஆட்சியில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் கட்சிகள் அமைத்த எந்த அரசும் இதற்கு முனைவதாகத் தோன்றவில்லை ! அவர்கள் அதை செய்யவும் மாட்டார்கள்.

தங்கள் இல்லற வாழ்வு இனிதே செல்கிறதல்லவா ? வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்
பாலா
*****************************

said...

தயிர்சாதங்கள் இதை படிக்க வேண்டும்...

http://outlookindia.com/fullprint.asp?choice=2&fodname=20060424&fname=Cover+Story+%28F%29&sid=1

Magazine| Apr 24, 2006

RESERVATION

How Sharad Got A Life

As did Amit, Risha, Parag and many like them. Quotas empowered them to take on challenges. Here's their side of the story.
.....
Devendar Kumar: He spent a year at Allahabad University before moving on to IIT Roorkee in 1986 to acquire a BTech degree in civil engineering. Three years later, he joined the Military Engineering Services as an executive engineer. "I don’t want reservations for my children," he says. But that is not because he is against the idea. "I have availed of it and benefited from it," he acknowledges. "I am quite capable of looking after my children."
.....

என்னுடைய கருத்து என்னவென்றால்,

1. ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பம் இரு தலைமுறை ஒதுக்கீட்டினால் பயனடைந்தால் பின்னர் பொதுதொகுப்பிற்கு மாறவேண்டும்.
2. ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பம் ஒரு தலைமுறை ஒதுக்கீட்டினால் பயனடைந்தால் பின்னர் பொதுதொகுப்பிற்கு மாறவேண்டும்.

இது இட ஒதுக்கீட்டின் பயனை பரவலாக்கி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த பலருக்குப் பயனளிக்கும்.
ஒதுக்கீட்டால் சலுகை அடைந்தவர்களே மீண்டும் மீண்டும் பயனடைவதைத் தடுக்கும்.
ஆனால், இது பொது பட்டியலில் நெரிசலை ஏற்படுத்தும்.
எனவே தொடக்க, உயர் கல்விக் கட்டமைப்பை கூடவே மேம்படுத்த வேண்டும்.

குறுகிய கண்ணோட்டத்துடன் நேற்றையும், இன்றையும் மட்டுமே பார்த்து இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் வாதிட்டுக்கொண்டிருக்கும்வரையில் இந்த சச்சரவு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

said...

Those who oppose reservation for OBCs do not oppose reservation for Dalits and STs.The concept of creamy layer was not accepted by
supporters of reservation for OBCS in Tamil Nadu.All political parties including PMK are against the creamy layer principle.Some parties do not want a limit on reservation quota.In other words for them 69% reservation is not
sufficient. So try to know the facts before reproducing from
Outlook.
என்னுடைய கருத்து என்னவென்றால்,

1. ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பம் இரு தலைமுறை ஒதுக்கீட்டினால் பயனடைந்தால் பின்னர் பொதுதொகுப்பிற்கு மாறவேண்டும்.
2. ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பம் ஒரு தலைமுறை ஒதுக்கீட்டினால் பயனடைந்தால் பின்னர் பொதுதொகுப்பிற்கு மாறவேண்டும்.
This will not be acceptable to DK or DMK or ADMK or PMK.Nor dalit parties will support this.

said...

http://kuzhalifeedbacks.blogspot.com/2006/03/blog-post.html
என்ற பின்னூட்டத்திலிருந்து

//ஏற்கனவே எங்களில் பல சொந்தகாரர்களும் இந்த தலைமுறை சொந்தங்களும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர், ஸ்காலர்ஷிப் வாங்குவதற்கான விதிமுறைகள் பூர்த்தி செய்திருந்த போதும் என்னால் பணம் கட்ட முடியும் பணம் கட்ட முடியாத பிறர் பயன் படுத்திக்கொள்ளட்டும் என்று கூறியவர் போன தலைமுறை, மருத்துவர் கோவிந்தசாமி விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அவரது மகளுக்கு மிகப்பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை பயன் படுத்தவில்லை, அவரது மகளுக்கு அவர் சொன்னது நீ இட ஒதுக்கீட்டை பயன் படுத்தக்கூடாது பொது ஒதுக்கீட்டில் நீயாகத்தான் படிக்க வேண்டும் என்றார் (அப்போது அவர் சட்ட மன்ற உறுப்பினர் அல்ல)
//

said...

//ஆனால், பாராவுக்கு பாரா "தயிர் சாத்ச் சூழல்" என்று நக்கலடிப்பது சற்று உறுத்துகிறது :-(
//
தவறுக்கு மன்னிக்கவும்... வருங்காலத்தில் தவிர்க்கிறேன்.

said...

Will Ramadoss or Anbumani will do so.Why cant PMK request the rich and well to do vanniyars to forego
reservation benefits.

said...

"I challenge the concerned jokers to go ahead with 50% Reservation for not only students but also for teaching staff. "

nalla yosanai. ulladi velaigalai thavirpadharku idhu ondre vazhi.

said...

Kuzhali is a supporter of PMK and Ramadoss.Ramadoss starts a deemed
university in the name of vanniyars.Kuzhali would like to divert the attention from real issues like OBC domination and OBC vs dalit.For that the safe route is
blame everything on brahmins as they are the soft targets.

said...

//Ramadoss starts a deemed
university in the name of vanniyars.Kuzhali would like to divert the attention from real issues like OBC domination and OBC vs dalit.For that the safe route is
blame everything on brahmins as they are the soft targets.
//
ஆமாம்....மருத்துவர் இராமதாசு நிகர்நிலை பல்கலை கழகத்தின் ஒவ்வொரு பாடப்பிரிவில் எனக்கு இரண்டு ஒதுக்கியுள்ளார், அதற்காக நான் இதை செய்கிறேன்.... :-)