விஜயகாந்தின் முதிர்ச்சி

வணக்கம் விஜி,
எல்லோருக்கும் கேப்டன்னாலும் எனக்கு என்னமோ உங்களை விஜினு கூப்பிடறதுதான் மிகவும் பிடித்திருக்கு, எங்க சொந்தகார பயபுள்ள சின்ன வயசிலருந்தே உம்ம ரசிகர், நீங்க கேப்டனாகறதுக்கு முன்னாடி என் கிட்ட விஜி அண்ணன், விஜி அண்ணன்னு தான் பேசுவான், உங்களுக்கு யாரு கேப்டன்னு பெயர் வைத்தார்களோ எனக்கு தெரியாது, ஆனால் அவனோடு கேப்டன் பிரபாகரன் படம் பார்த்துட்டு வந்து நான் மன்சூரலிகான் நடிப்பை தலையை சொறிந்து கொண்டே பெரபாகரானு வசனம் பேசி நடித்து காட்டிக்கொண்டிருந்தபோது முதல் முதலில் கேப்டன்னு சொன்னது அவன்தான் இப்போ கூட உங்க மாநாட்டுல ஒரு ஓரமா கண்டிப்பாக இருப்பான் (பயபுள்ள அன்னைக்கி அவன் பொழப்பு போச்சி), இப்போ கூட மன்றத்து ஆளுங்க பேரில் கொஞ்சம் கோபமா இருக்கான், இரண்டாயிரம் செலவு செஞ்சும் அவன் பெயரை சுவரொட்டியில் போடலையாம், அவன் விஜி அண்ணனை கேப்டன்னு கூப்பிட்டாலும் இன்னும் எனக்கு நீங்க விஜிதான்.

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்னு கலக்கலா உங்க அரசியல் பிரவேசத்திற்கு தேதி குறிச்சிங்க செப்டம்பர் 14, வருவேன்,வந்தாலும் வருவேன்,எல்லாம் அவன் கையில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு வாய்ஸ் குடுக்காம, சொன்ன மாதிரியே வந்துட்டீங்க அப்பு, அந்த விதத்தில் சொன்ன சொல்லை காப்பாத்திட்டிங்க, அட நீங்க மற்ற அரசியல் கட்சிகளைவிட வித்தியாசமானவர், மக்கள் மாற்றத்தை விரும்புறாங்க அப்படினு சொன்னீங்க, அது எனக்கு என்னமோ சரியா படலை, அதனால் ஏதோ என்னால முடிந்தது விஜயகாந்த்தின் விஜயம் ஜெயமாகுமா? அப்படினு ஒரு பதிவு போட்டேன், அட இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பானு நினைத்தாலும் இப்போ இருக்குற அரசியல்வாதிகளை தாண்டி இவர் ஒன்னும் செய்யலை அதனால இன்னொரு அரசியல்வாதியா இருந்துட்டு போங்க அப்படினு நினைத்தேன், ஆனா இன்னும் அரசியலுக்கு வருவதற்கு முன்பே உங்க ஆண்டாள் அழகர் மண்டபத்துக்காக சுத்தி சுத்தி அடிச்சிங்களே கள்ளக்குறிச்சியில், அவங்ககிட்டயே போய் நின்னிங்களே(இரண்டு காந்துகளும் இரண்டு மண்டபங்களும்) அடடா இவர் சாதரண அரசியல்வாதியில்லையா இப்ப இருக்குறவங்களை முழுங்கி ஏப்பம் விடுவாரு டோய் அப்படினு நினைத்தேன்,

எனக்கு உங்க நிர்வாகத்திறமையில் முழு நம்பிக்கை உண்டு, சும்மாவா நடிகர் சங்க கடனை அடைச்சிங்க கைக்காசை போடாமல்,தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்கவைத்து ஏழு மாங்காய் அடிச்சிங்க மீண்டும் நடிகர் சங்கத் தலைவரானிங்க(ஆமா இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம்னே பெயர் இருக்கே,தமிழ்நாடு நடிகர் சங்கம்னு எப்போ மாற்றப்போறிங்க), இப்போ பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளுக்கு இணையா ஒரு மாநாடு நடத்துறிங்க அதுவும் சொந்த காசை போட்டு பாராட்ட வேண்டியது ஆனால் திடீரென யாரும் மாநாட்டு மேடையில் நன்கொடை கொடுத்தா வாங்கிப்போம் அப்படிங்கறிங்க, ஒன்னும் புரியலை விஜி, மாநாட்டு மேடையில் நன்கொடை கொடுங்கனு சொல்றீங்களா? நம்ம பயபுள்ளைகளுக்கு ஒன்னும் புரியாது பாருங்க அதனால கொஞ்சம் தெளிவா சொல்லிடுங்க விஜி.

உங்க பேட்டி விஜய் தொலைக்காட்சியில் வரப்போகுது அப்படின்ன உடனே எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி, என்னடா நம்ம விஜி தொலைக்காட்சிக்கெல்லாம் பேட்டி தரமாட்டாரே அவரோட கொள்கையாச்சே அது, அவரே மற்ற நடிகர்களை தொலைக்காட்சிக்கெல்லாம் பேட்டி தரக்கூடாதுனு தடா போட்டவராச்சேனு நினைச்சேன், அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சி நீங்க கட்சி கொள்கையிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையில்லைனு ஏற்கனவே பேட்டியில சொல்லியிருந்தீங்க, அப்புறம் நீங்க அரசியல்வாதியா மாறி ரொம்ப நாளேச்சே அப்படினு.

சரி ஏதோ பேச வந்து ஏதேதோ பேசிக்கிட்டிருக்கேன், உங்க பேட்டியை குமுதத்தில் படித்தேன், அட நீங்க முதிர்ச்சியா பேட்டி தந்ததா பெரியவங்கலாம் சொன்னாங்க, சரி நம்ம விஜி மத்த அரசியல்வாதிங்க மாதிரி இல்லப்பா அரசியல் முதிர்ச்சியாத்தான் இருக்காருனு சந்தோசமா விகடன் படிக்க போனங்க, விஜயகாந்த் அரசியல் பிரகடனம் அப்படின்ற தலைப்புல மதன் எடுத்த பேட்டியைப்பற்றி மதனே பேசியிருக்காருங்க, உங்களுக்கு தமிழ் உச்சரிப்பே வரலைனு தொடக்க காலத்தில் படங்களில் மூன்று நாளில் நீக்கிய கதை அப்புறமா நீங்க ரமணால கண்ணீர் வர பேசியது, நீங்க கடினப்பட்டு தமிழ்திரைப்படத்துல வளர்ந்த கதையெல்லாம் சொன்னாருங்க, நெகிழ்ச்சியா இருந்தது.

"மனைவி என்பதே இன்றைய அரசியலில் எக்ஸ்ட்ரா கான்ஸ்ட்டிடியூஷனல் அத்தாரிட்டி" என்கிற மாதிரி ஆகிப்போச்சே, அப்புறம் இன்னும் என்னென்னமோ சொன்னாரு மதன், அதுக்கு நீங்க ரெண்டு பத்தியில் ஒரு நீளமான பதில் சொன்னீங்க,நீங்க எவ்வளவு உயர்வா பெண்களை நினைக்கின்றீர்னு அப்போதான் புரிந்தது எனக்கு, மேலும் "எல்லாத்துலயும் என்னோடு பங்கெடுத்துக்கற என் மனைவிக்கு பொதுத்தொண்டிலும் உரிய பங்கு கொடுத்தா அதை எப்படி தப்புனு சொல்லமுடியும் வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டு போக முடியும்?" அப்படிங்கற வரிகளை படித்த உடனே தூக்கி வாரி போட்டுடுச்சிங்க, அப்போ அண்ணி தான் வாரிசுங்கறிங்க, சரி விடுங்க எந்த கட்சியல தான் வாரிசு இல்ல அப்படினு மனச தேற்றிக்கொண்டு அடுத்த வரிக்கு போனேன்.

"வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டு போக முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி கூட்டிக்கிட்டு போக முடியுமா இல்ல வேற பொண்ணுங்களை அழைச்சிக்கிட்டு போகமுடியுமா?..." நீங்க சொன்னதா மதன் சொன்ன இந்த வரியை படித்த உடனே பகீர்னு ஆனது எனக்கு இன்னமும் இதனோட அர்த்தம் முழுசா புரியலை, ஆனால் உங்கள் முதிர்ச்சி மட்டும் நன்றாக புரிகின்றதுங்க விஜி.

இப்போ இருக்கின்ற அரசியல்வாதிகளை விட நீங்கள் இந்த விடயத்தில் நிச்சயம் வித்தியாசமானவர்தாங்க விஜி.

நீங்க என்னதான் பழைய சோறும் பச்சமிளகாயும் சாப்பிட தயாராயிருந்தாலும் என் சொந்தகார பயப்புள்ள மனசு தாங்காது விஜி. அதனால 2006 தேர்தல்ல சரியான ஆதரவு கிடைக்கலைனா அண்ணி சொல்ற மாதிரி கேட்டு உங்க சொத்து பத்த காப்பாத்திக்குங்க விஜி.

26 பின்னூட்டங்கள்:

said...

குழலி,
நம்ம ஊருல தான் விஜய் டிவி வராதே? உங்க நண்பர்கள் யார் மூலமா அதை பதிவு செய்து பகிர்ந்துக்க சொல்லுங்க.என்ன தான் சொல்லுறாருன்னு பாக்கலாமே?

said...

ஜோ நாளை நண்பர்களிடம் பதிவு செய்ய சொல்கின்றேன்,

விகடன் சுட்டி இதோ
http://www.vikatan.com/jv/2005/sep/14092005/jv0602.asp

said...

போட்டுத் தாக்கிட்டீங்க குழலி..ரஜினிக்கு ஒரு குத்து..விஜிக்கு ஒரு வெட்டு..அடக்கி வைச்சிருந்ததெல்லாம் கொட்டிட்டீங்க..

இதையும் பாருங்க..
http://webulagam.com/discussion/openletter/2000_07/16_openletter.htm
எனக்கு அப்படியே மறுமொழியில் சுட்டி கொடுக்கத் தெரியலங்க..பக்கத்து வீட்டு படிச்ச தம்பிக்காவது தெரியுதான்னு பார்க்கணும்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

http://webulagam.com/discussion/
openletter/2000_07/
16_openletter.htm

இப்போவாது முழுசா வருதா பார்க்கறேன்..

said...

நன்றி தெருத்தொண்டன், உங்கள் கடிதத்தையும் படித்தேன், நிறைய விடயம் எழுதியிருக்கின்றீர்.

நன்றி

said...

தெருத்தொண்டன் உங்களின் ஒரு பின்னூட்டத்தில் html tag பிரச்சினை இருந்ததால் தூக்கிவிட்டேன் அதே பின்னூட்டத்தை நீங்கள் மீண்டும் கீழே கொடுத்துள்ளீர்.

நன்றி

said...

விஜயகாந்த் நல்ல மனுசன். அவர் படத்துல பைட் நல்லா இருக்கும். செவத்த பொண்ணுங்கதான் அவரோட ஹீரோயினா இருப்பாங்க. அவர் படத்துல வில்லன் பெயர் கண்டிப்பா வாசிம்கான்-ன்னு இருக்கும். படத்தின் கடைசி ரெண்டு ரீல் முழுக்க கோர்ட்டுல வசனம் பேசவார்.

நீங்க என்னதான் சொல்லுங்க
இவை இல்லேன்னா தமிழ் சினிமாவே இல்லை

விஜயகாந்த பத்தி எல்லோரும் எழுதறதால நானும் எழுதிட்டேன்.(வருங்கால முதல்வர் மதுரைக்காரன் இல்லை. சொன்னவர் அதிரைக்காரன்)

said...

ஆனாலும் குழலி நீங்கள் எல்லோரிடமும் நேர்மையை எதிர்பார்க்கிறீர்கள். தவறு உங்கள் மீதுதான்.

//(வருங்கால முதல்வர் மதுரைக்காரன் இல்லை. சொன்னவர் அதிரைக்காரன்)//

அதிரைக்காரரே சோதிடமா அல்லது உங்களுக்கும் முதல்வர் ஆசை வந்துவிட்டதா? (ஆண்டிப்பட்டியில் போட்டியிடுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.)

said...

//ஆண்டிப்பட்டியில் போட்டியிடுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்//

ஏற்கனவே அங்கு ஒரு AUNTY 'ஜெ'யித்து அரசியாகி விட்டார். நான் போட்டியிட்டால் "ஆண்டி" தான்.

said...

நல்ல பதிவு தல.. ! செப் 14 மதுரை வரீங்களா?? முடிஞ்சா வாங்க..அங்க பார்க்கலாம்..
அப்புறம்.. கீழே எங்கயும் என்னை தேடாதீங்க... மேடைல பாருங்க..சரியா!

said...

ஆனாலும் குழலி நீங்கள் ராமதாஸ் தவிர எல்லோரிடமும் நேர்மையை எதிர்பார்க்கிறீர்கள்.

said...

அரசியல்வாதிகளை சுற்றி சுற்றி சொல்லால் அடிக்கும், அரசியல் சாக்கடை அதை சுத்தபடுத்தப்போகின்றேன் என அரசியல்வாதிகளை கேவலமாக பேசும் விஜயகாந்த் வைப்பாட்டி, வேற பொண்ண கூப்பிட்டு போகமுடியுமா என்று பேசும் அவரின் முதிர்ச்சியும் நாகரீகமும் தான் என்னை பொறும வைத்தது

//ஆனாலும் குழலி நீங்கள் ராமதாஸ் தவிர எல்லோரிடமும் நேர்மையை எதிர்பார்க்கிறீர்கள்.
//
அட இவர் தான் உலகை உய்விக்க வந்தவர், தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் என்றா கூறினேன், மற்றவர்களுக்கு வைக்கும் அதே அளவுகோலை இவருக்கும் வையுங்கள் என்றுதான் கூறினேன். சரி பதிவு திசைமாறிவிடும், இந்த கேள்வியை பற்பல தடவை ஏற்கனவே பார்த்தாயிற்று வெவ்வேறு வடிவங்களில்.

நன்றி

said...

குழலி,
இத கொஞ்சம் படியுங்க ..நல்ல தமாசு.

http://www.tamilcircle.net/puthiyajananayagam/aug-2005/06.html

said...

எல்.எல்.தாசு படித்து மகிழ

http://www.tamilcircle.net/puthiyajananayagam/may-2005/puthi-05.htm

said...

nalla arumayana katturai. ennudaya vazhthukal kuzhali. edhu aracialukku vara pora yella nadikanukkum, nadikaikum neradia oru padam maraimugama oru punch seria mugathula. innumm evaragalai thodardhu pora rasikarkalukkum oru kottu. Arumai kuzhali nanri.

said...

இதோ விஜயகாந்த்தின் முதிர்ச்சிக்கு இன்னொரு உதாரணம், மகாநடிகன் திரைப்படத்திற்கான
விஜயகாந்தின் முதிர்ச்சியான பேட்டி,
"நடிகராக இருந்துகொண்டே சத்தியராஜ், மகாநடிகன் படத்தில் சக நடிகர்களை கேவலம் செய்து
நடிப்பது, மல்லாக்காக படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல் இருக்கிறது"

ரஜினிகாந்த் தானாக ஒதுங்கிவிட்டார், இவருக்கு எங்கே சங்கமம் என்பதை நாம் பொறுத்திருந்து
பார்க்கவேண்டியதுதான்!

//நம்பி//

said...

Regarding the above comment..
Hell no!! I dont want to use your name, that's my name too..
That was just my opinion and not to harm your NAME...Take it easy.

Nambi Balasubramaniyam.
PS: I dont have a blog for me, will do something better when I start blogging.. :)-

said...

எல்லாரையும் நல்லாத்தான் ஒட்டறிங்க(சாருவைத் தவிர). ஏன் ஒரு மனிதன் தப்பு பண்ணகூடாதா? யார் தான் தப்பு பண்ணவில்லை? ஆண்டவன் முதல் கொண்டு அடிபொடிவரைதப்பு பண்ணி இருக்காங்க. அப்படி தப்பு பண்ணவன் தான் அரசியலுக்கு வந்து நல்லது பண்ணக்கூடாதா? திருந்த சந்தர்ப்பம் கொடுங்க. சரி உங்க பாயிண்டுகே வருவோம். அப்படி ஒரு நல்லவரை(சாரு, மருத்துவர் தமிழ் குடிதாங்கி இவர்களை போல் போதுமா?) தேடி புடிங்க அது வரையில் இப்ப உள்ளவர்கள் ஆட்சி செய்யட்டும்.

மாற்றங்கள் மற்றும் மாற்றுக்கள் வரட்டும், பிடித்தல் வைத்துக்கொள்வோம் இல்லை எனில் ஒதுக்குவோம்.

said...

வந்துட்டாரய்யா வந்தேபுட்டாரு,
கொடி என்ன தே.மு.தி.க ன்னு பேரு என்ன (இந்த மூணு எழுத்த வெச்சுக்கிட்டு இன்னும் எத்தன பார்டி வரப்போகுதோ?)
வாரதுக்கு முன்னால விஜி இப்டி சொன்னாரு, இனி என்ன பண்ணப்போராருன்னு பாப்போம்.

said...

தே.மு.தி.க...எனக்கு கேப்டன் என்ன சொல்ல வரார்னு புரியலே! ஆனா "அரசியல்" தெரிந்து வைத்துள்ளதாகவே எனக்குத் தெரிகிறது.

"...இதன் பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. விஜயகாந்த் மேடையில் ஏறியதும் அங்கே தனக்காக போட்டிருந்த அலங்கார இருக்கையைப் பார்த்தார். அதை உடனடியாக அகற்றக் கோரிய அவர், அனைவருக்கும் உள்ளது போல சாதாரண "பிளாசுட்டிக்கு" இருக்கையை போடுமாறு கோரி அதிலேயே உட்கார்ந்தார்..."
(www.thatstamil.com)

எப்படியோ நல்லா இருந்தா சரி!

தமிழில் வலைப்பூ தொடுத்துள்ளேன். எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்!

சத்யா

said...

//"...இதன் பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. விஜயகாந்த் மேடையில் ஏறியதும் அங்கே தனக்காக போட்டிருந்த அலங்கார இருக்கையைப் பார்த்தார். அதை உடனடியாக அகற்றக் கோரிய அவர், அனைவருக்கும் உள்ளது போல சாதாரண "பிளாசுட்டிக்கு" இருக்கையை போடுமாறு கோரி அதிலேயே உட்கார்ந்தார்..."
//
இன்னும் தீவிரவாதியை எதிர்த்து வசனம் பேசலை, கூடிய சீக்கிரம் அதையும் பார்க்கலாம்.

நன்றி

said...

அவரோட கொள்கை ரொம்ப சிம்ப்பில்.

பிரபாகரனை ஆதரிக்கும் தீவீரவாதத்தை எதிர்க்கும் தமிழுக்காக உயிர் விடும்
அனைத்து மொழிகளையும் படிக்கும் பிலாஸ்டிக் சேரில் தங்க கிரீடத்துடன்
அமரும் தேசிய திராவிட முற்போக்கு தலைமை.

said...

என்ன 5 நாளாச்சு, காணவில்லை ..காணவில்லை.. பதிவு போட்டுடலாமா??

said...

//என்ன 5 நாளாச்சு, காணவில்லை ..காணவில்லை.. பதிவு போட்டுடலாமா??
//
சரக்கு காலி தல, கூடிய சீக்கிரம் அடுத்த பதிவை போட்டுடறன், வேலை செய்ய சொல்றாங்க அலுவலகத்தில் அதான் பதிவு தூங்குது.

said...

இன்றோடு 9 நாட்கள் ஆகிவிட்டது !

//வேலை செய்ய சொல்றாங்க அலுவலகத்தில் //
எவன் அவன் அப்படி சொல்றது.. தல மேலயே போடுங்க தல.. இதயெல்லாம் வளர விடகூடாது