கருடபுராணமும் அன்னியனும்...


அந்தகூபம்:

கொலை செய்வோன், துரோகிகள் அடையும் நரகம். இதில் பல விஷப் பிராணிகளால் துன்புற்றுக் கண் தெரியாது ஆன்மா வருந்துவன்.

--
சாலையில் ஒன்னுக்கு போனவனையும், காரை நிறுத்தாமல் போனவனையும் கருடபுராணத்தை சொல்லி கொன்ற அம்பி அன்னியனுக்கும் இதே அந்தகூபம் தானா?

கிருமி போஜனம்:

தெய்வத்திற்கு படையல் செய்யாமல் உண்பவர்கள் பசியால் வருந்தித் தாமும் புழுக்களாய்த் தம்மை ஒத்த பெரும் புழுக்களால் புசிக்கப்படும் இடம்.
--
தெய்வம் என்ன அந்த அளவிற்கு பசியாகவா இருக்கின்றது? அல்லது கருடபுராணத்தில் சொல்லப்படும் தெய்வம் அந்த குறிப்பிட்ட, மனிதர்களாக வாழும் தெய்வங்களா? ஆனால் எனக்கு கிருமிபோஜனம் தான் கண்டிப்பாக...

பன்றிமுகம்:

அதர்மமாகத் தண்டிப்பவனும் மற்ற தீமை செய்வோரும் அடையும் பன்றி போன்ற முகத்தை உடைய நரகம்.
--
சிவனேன்னு தூங்கிக் கொண்டிருந்தவனையும், காரை நிறுத்தியவனையும் அதர்மமாக கொன்ற அன்னியனுக்கும் பன்றிமுகம் தானா?

கும்பிபாகம்:

பிற உயிரைக் கொன்று தின்றோரைக் கும்பியிற் பாகப்பட்ட பொருளைப் போல் வருத்தும் இடம்.
--
அது சரி ஆடு,கோழி இன்ன பிற உயிர்களை கொன்று தின்றால் கும்பிபாக தண்டனை... நெல் போன்ற உயிருள்ள பயிர்களை கொன்று தின்றாலும் இதே கும்பிபாகம் தானா? அப்படியெனில் உலகில் உள்ள எவனுமே கும்பிபாகத்திற்கு தப்பமுடியாது அன்னியன் உட்பட.

இது போல 28 தண்டனைகள் கருடபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

முனுக்கென்றதற்கெல்லாம் கருடபுராணம் சொல்லி பலர கொன்ற அன்னியன் காதலியின் தப்புக்கு காதலியை கொல்லாமல் விட்டதற்கு அன்னியனுக்கு என்ன தண்டனை என தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சாதிக்கொரு நியாயம் என போதித்த இயக்குனருக்கும் வசனம் எழுதியவருக்கும் என்ன தண்டனை என கருடபுராணத்தில் தேடிப்பார்த்தேன் அதுவும் கிடைக்கவில்லை.

சதா பயத்திலும் புத்திசாலித்தனமாக மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிக்குச் சென்று அடைக்கலம் பெறுகிறாள். அந்த சண்டை நடக்கும் நேரத்தில் அம்பியின் பெர்சனாலிடியும் வந்து விடுகிறது.
(நன்றாக கவனியுங்கள் மற்றவர்களுக்கு இல்லாத புத்திசாலித்தனம் சதாவிற்கு மட்டும் வந்துவிடுகின்றது, அங்கதான் நிற்கின்றார் அம்பி...)

இப்படியெல்லாம் பேசுபவர்களுக்கு கருடபுராணத்தில் ஏதாவது தண்டனை உண்டா என பார்த்தேன், அதுவும் இல்லை.


சமீபத்தில் கருடபுராணம்(ஆங்கிலத்தில்) PDF கோப்பாக என்னிடம் உள்ளது, பிரதி வேண்டுபவர்கள் kuzhali140277(at)yahoo(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும், இலவசமாக கருடபுராண pdf கோப்பு அனுப்பிவைக்கப்படும்.

இப்படியெல்லாம் கருடபுராணத்தின் புகழை பரப்புவதால் கிருமிபோஜனம், கும்பிபாகம் போன்ற தண்டனைகள் எனக்கு கிடைக்காமல் இருக்குமா?

9 பின்னூட்டங்கள்:

said...

Hi, I liked this post to your blog. I have a blog site that you may be interested in. It is related to forex trading information and currency trading. There are a number of people making money trading the forex or mini forex, visit forex trading information for some nice tips and articles.

said...

//முனுக்கென்றதற்கெல்லாம் கருடபுராணம் சொல்லி பலர கொன்ற அன்னியன் காதலியின் தப்புக்கு காதலியை கொல்லாமல் விட்டதற்கு அன்னியனுக்கு என்ன தண்டனை என தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சாதிக்கொரு நியாயம் என போதித்த இயக்குனருக்கும் வசனம் எழுதியவருக்கும் என்ன தண்டனை என கருடபுராணத்தில் தேடிப்பார்த்தேன் அதுவும் கிடைக்கவில்லை.//

Knows only Paappaans like Sujatha.

said...

//முனுக்கென்றதற்கெல்லாம் கருடபுராணம் சொல்லி பலர கொன்ற அன்னியன் காதலியின் தப்புக்கு காதலியை கொல்லாமல் விட்டதற்கு அன்னியனுக்கு என்ன தண்டனை என தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சாதிக்கொரு நியாயம் என போதித்த இயக்குனருக்கும் வசனம் எழுதியவருக்கும் என்ன தண்டனை என கருடபுராணத்தில் தேடிப்பார்த்தேன் அதுவும் கிடைக்கவில்லை.//

Knows only Paappaans like Sujatha.

said...

இது மட்டும் இல்லைங்காணும். மொதல்ல நீச மொழிக்கு ஆதரவு தருவதை விட்டு இலை எடுக்க கற்றால் சொர்கமே கிடைக்கும். (போனா திரும்பி வந்து கேள்வி கேட்க மாட்டீங்ன்ற நம்பிக்கைதான்).

said...

ரோட்டோர விபத்துக்களில் நமது அன்றாட செய்கை அந்த இடத்திலிருந்து ஒதுங்கிப் போவதாகத்தான் இருக்கும். அதற்கு பல காரணங்கள். தண்டனை கொடுக்க வேறு நல்ல காரணங்கள் தேடியிருக்கலாம். ஜாதிசார்ந்த விஷயங்கள் எவ்ளோ இருந்தாலும், விக்ரமின் அம்பி கெட்அப் சூப்பர்தான்

said...

Hello,

I liked your blog. I found many interesting information here.
I also give free info about forex forum online trader on my
href="http://www.WebTradingSystem.com">Forex Trading System
site.

If you have time please visit my web site to get some free forex forum online trader
information.

Kind regards,
Nick

said...

Good info. Thanks.

Regards,

Emini Russell 2000 Futures Daytrader
day trading coaching

said...

நான் மநு (அ)தர்மந்தான் பெரிதென நினைத்தேன்.

மநு தர்மமே தேவலாம் போல...

குழலி, அந்த கோப்பு எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன்..


நன்றி,
பூங்குழலி

said...

சங்கரின் படங்கள் 'காமிக்ஸ்' பிரிவில் தான் வரும்.

இதில் சுஜாதா சொல்லும் தீர்வுகள் காமெடி வகை.
சுஜாதா எழுத்தாளராகவே எனக்குப் பிடிக்கிறது.