புரட்சி புரோகிராமர்

நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் எல்லாரையும் பார்த்து நமக்கும் ஏன் எதுனா பட்டம் போடக்கூடாது அப்படினு நினைச்சேன், அட நம்ம படிச்சி வாங்கியது ஒரு பட்டம்னா ப்ளாக்ல நமக்கு குடுக்குற பட்டம் எக்கச்சக்கம், என்ன இருந்தாலும் நாமலே நமக்கு ஒரு பட்டம் கொடுத்துக்கிறதுல இருக்கிற சொகம் வேறெதுக்குமில்லை

சரி ஆனா பட்டத்துல மொத வார்த்தை புரட்சினு இருக்கனும், ஆமா நீ என்ன பெரிய புடுங்கி புரட்சி செஞ்சனு நம்ம தேசிகனோட வேதாளம் கேட்குது,
அதனால என்ன மத்த புரட்சிகள்ளாம் என்ன செஞ்சிட்டாங்க அப்படினு கேட்டேன், அது தெரியாம வேதாளத்தின் தலை இஞ்சி நூறாக சுக்கு நூறாக உடைந்துவிட்டது (இனி தேசிகனுக்கு வேதாளம் தொல்லை இருக்காது.).

தலைவர், தலைவி(அட நமக்கு இது வராது இருந்தாலும் இதை சொல்லலைனா ஆணாதிக்கவெறியன்னு போட்டு தள்ளிடுவாங்க), கலைஞர் எல்லாம் ஏற்கனவே சிலருக்கு இருக்கு, அதனால சரி புரட்சி மனிதன் அப்படினு போட்டுக்கலாம் பார்த்தேன் அட நம்ம வலைப்பதிவுல உள்ள புரட்சி மனிதர்களை பார்த்தவுடனே நமக்கு இந்த புரட்சி மனிதன் பட்டம் சரியாவராதுனு தோணிச்சி.

புரட்சி நடிகன்னு பட்டம் போடலாம்னா நான் நடிகன் இல்ல, சரி புரட்சி பிள்ளைனு போடலாம்னா பிள்ளை சாதிக்காரங்கலாம் பிரச்சினைக்கு வந்திடுவாங்க, ஆனா என்னனாலும் புரட்சினு பட்டபெயர் போட்டே ஆகனும்னு பிடிவாதமா இருந்தேன், சரி நம்ம பொட்டி தட்டுற தொழிலை சேர்த்து புரட்சி புரோகிராமர்னு போட்டுக்கலாம்னு தோணிச்சி.

நாளைக்கு தேசிகன் வேதாளம் மாதிரி யாரும் வந்து என்ன பெரிய புரட்சி செஞ்சிட்ட புரட்சி புரோகிராமர்னு பட்டம் போட்டுகிட்டனு கேட்க கூடாதில்லையா அதான் என்ன தகுதியிருக்கு அப்படினு யோசித்தேன்

ஜாவா(நம்ம தருமியோட ஜாவா இல்லை) கிளாஸ், கம்பைளர்,டீ-கம்பைளர் லாம் தெரிந்தவர்கள் இப்பவே அப்பீட் ஆயிடுங்க

ஜாவால புரோகிராம் எழுதிய பிறகு கம்பைள்(compile) செய்யனும் அதை கம்பைள் செஞ்சா கிளாஸ் (அப்படியே நமக்கு ஒன்னரை கிளாஸ் போடுங்கனு யாரும் கேட்டுடாதிங்க இது class) அப்படினு ஒன்னு கிடைக்கும், இது இருந்தா போதும் அந்த ஜாவா பைல் தேவையேயில்ல.

இதுல என்ன மேட்டர்னா நாங்கெல்லாம் எங்க ப்ராடெக்டை வாடிக்கையாளர் கிட்ட கொடுக்கும் போது கிளாஸ் கொடுத்தா போதும், ஜாவா பைல் தரத்தேவையில்லை.

இந்த பாடாவதி பசங்க டீ-கம்பைளர்னு (de-compiler) ஒன்னு கண்டுபிடிச்சிட்டானுங்க, இந்த கிளாஸ் பைல அந்த டீகம்பைளர்ல குடுத்தா அது ஏற்கனவே இருந்த ஜாவா பைலை கொடுத்துவிடும். அதனாலா நாங்க ஜாவா புரோகிராம்ல எழுதின லாஜிக்(பெரிய்ய பொல்லாத லாஜிக்) எல்லாம் தெரிந்துவிடும்.

உலக ரகசியம் தெரிந்துவிடும் அதனால இன்னொரு கும்பல் கிளம்புச்சி, அப்வியூசிகேஷன் (obfuscation) அப்படினு சொல்லி ஒரு அப்ளிகேஷன் எழுதி துட்டு பார்க்க ஆரம்பிச்சாங்க, இது என்னனு கேட்கிறிங்களா

இந்த கிளாஸ் பைல அப்வியூசிகேஷன் செஞ்சோம்னா உள்ள எல்லாத்தையும் கலைச்சி போட்டு விடும், டீகம்பைளர் வைத்து டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒன்னும் புரியாது, அதனால எல்லாத்தையும் அப்வியூசிகேட் செய்துடுவோம்

இதுல பார்த்திங்கனா புளோ அப்வியூசிகேஷன் (flow obfuscation), நேம் அப்வியூசிகேஷன் (name obfuscation) அப்படினு இரண்டு இருக்கு, நேம் அப்வியூசிகேஷன்னா இப்போ height , weight,length அப்படினு எழுதினா jingilika, jikka, pumbilika னு பெயரை மாத்திடும், டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒரு மண்ணும் புரியாது

புளோஅப்வியூசிகேஷன் (flowobusication) அப்படினா இப்போ சைதாப்பேட்டையில இருந்து சிங்கப்பூர் வரனும்னா சைதாப்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம் வந்து அங்கேயிருந்து சிங்கப்பூருக்கு ஏரோபிளேன் புடிச்சி சாங்கி ஏர்போர்ட்டுக்கு வரணும் இது தான் நான் ஜாவால எழுதியிருக்கிறதுனா புளோஅப்வியூசிகேஷன் என்ன செய்யும்னா சைதாப்பேட்டையிலருந்து மதுரைக்கு போயி அங்கேயிருந்து டெல்லி போய் பிறகு அங்கிருந்து கொரியா போயி அங்கேயிருந்து ஜப்பான் அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்கேயிருந்து சிங்கப்பூர் வரும், டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒரு மண்ணும் புரியாது.

ஆனா நான் எழுதுற புரோகிராம் லாம் அப்வியூசிகேஷன் செய்யவே தேவையில்லை, நான் எழுதறதே அப்படித்தான் எழுதுவேன் நானே இரண்டு நாளைக்கு பிறகு எடுத்து பார்த்தா புரியாது, அப்படி இருக்க சொல்ல டீகம்பைள் செய்து பார்த்தா என்ன வெளக்கெண்ண விளங்கும், இப்போ சொல்லுங்க நான் புரட்சி புரோகிராமர் தானே.

சரினு சொல்லி என் கொசுமெயில் சாரி சாரி ஈமெயில் signatureல் புரட்சி புரோகிராமர்னு போட்டேன், இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள் "கங்கிராட்ஸ், யூ காட் புரமோஷன்?" அப்படினு, என்ன சொல்லுங்க அப்படின்னேன், இல்ல உன் டெசிக்னேஷன் மாறியிருக்குதே அப்படின்னு கேட்டேன், "வாட் ஈஸ் தட் பொர்ரட்ட்ட்சி" அப்படி ஒரு டெசிக்னேஷன் நம்ம ஆபிஸ்லயே இல்லையேனு பிறகு நான் நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் எல்லாரை பற்றியும் சொன்னேன் அவங்க புரட்சி பற்றியெல்லாம் சொன்னேன், மரமண்டைங்களுக்கு நம்ம புரட்சிதலைவர்,புரட்சிதலைவி,புரட்சிகலைஞர் இவங்களோட புரட்சி பற்றியெல்லாம் ஒன்னுமே தெரியவேயில்லை, என்ன மக்கள் இவங்க, இவங்களையெல்லாம் தெரியாம.

அப்பாலிக்கா இந்த அப்வியூசிகேஷன் மேட்டரை சொன்னேன், ஆனால் இந்த அப்வியூசிகேஷன்லாம் புரட்சியில்லை ஏன்னா பல புரோகிராமர்ங்க இப்படிதான் எழுதறாங்க அப்படினு ஒருத்தர் வயித்தெரிச்சல்ல சொன்னாரு, சே எங்க போனாலும் இந்த வயித்தெரிச்சல் பார்ட்டிங்க தொல்லை தாங்கலை யாராவது மந்திரியானாலும் வயிறெரியறாங்க, யாராவது புரட்சி செய்தாலும் வயிறெரியறாங்க, சரி அதைவிடுங்க ஒரு புராஜெக்ட் வேலைக்கு ஆறுமாசம் ஆகுதுனு வச்சிக்குங்க, மொதல் அஞ்சு மாசத்துல 5% வேலைதான் நடந்து இருக்கு அப்போ மீதி வேலையை முடிக்க எத்தனை மாசம் ஆகும் அடடே உடனே கால்குலேட்டர் எடுக்காதிங்க,95 மாசம் ஆகுமா?! ஆனால் மீதி 95% வேலை ஒரே மாசம் தான் இது புரட்சிதானே, அட எல்லா IT புராஜெக்ட்டும் இப்படித்தானே இதில் என்ன பெரிய்ய புரட்சி அப்படினு சொல்றாங்க....

மக்கா இருடா உன் மேலாளர் கிட்ட போட்டு தரேன் உனக்கு இனி ஆறு மாசமெல்லாம் கிடையாது அரை மாசம் தான்னு யாரும் கெளம்பிடாதிங்கோ அப்பாலிக்கா நான் ப்ளாக் பக்கமே வரமுடியாம போய்விடும் (பெனாத்தல் சுரேஷ் குஜாலாயிடுவார்)

தேசிகன் வேதாளத்திற்கு மற்ற புரட்சியாளர்களைத் தெரியும் அதனால் அவங்க என்ன புரட்சி செய்தாங்கனு கேட்டு வேதாளத்தையே போட்டு தள்ளியாச்சி, ஆனா நம்ம பொரட்சியாளர்களை தெரியாதவங்ககிட்ட என்ன சொல்றது, அதனால் ஏதாவது பெரிய மனசு செஞ்சி இந்த பட்டத்தை நான் தக்கவைத்துக்கொள்ள எதுனா யோசனை இருந்தா சொல்லுங்க. நம்ம வலைப்பதிவர்களுக்கும் பட்டமளிப்புக்கும் அவ்வளவு நெருக்கமாச்சே அதான் இங்கே வந்து கேட்கிறேன்.

புரட்சி புரோகிராமர் என்பதை நான் காப்பிரைட் செய்துவைத்துள்ளதால் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது, மீறுபவர்கள் மீது கி.மு.32000 இ.பி.கே நூத்திமுப்பத்திரெண்டரையாவது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

19 பின்னூட்டங்கள்:

said...

//ஜப்பான் அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் //

;)

said...

புரட்சி புரோக்கிராமரே

இன்னும் புரோகிராம் எல்லாம் புதுசாத் தான் எழுதுறீங்களா? இந்த google --- CTRL+C --- CTRL+V எல்லாம் பண்ணா போதாதா???

;)))))

said...

குழலி
புரட்டாசி புரோக்கிராமர்
எழுத கை துடிக்குதே..
எழுதிவிடலாமா ?

said...

CTRL+C --- CTRL+V விட பெரிய கண்டுபிடிப்பு ஏதாவது கம்ப்யூட்டருள்ள இருக்கா?

டீ-கம்பைளராம், அப்வியூசிகேஷனாம்... ஜுஜுபி ..

said...

////ஜப்பான் அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் //

;)
//
தாசு உமக்கு இருக்குய்யா ஆப்பு, அது சரி தூங்காம என்ன செய்றீங்க இன்னும்.

நன்றி சத்யா எப்போ தமிழ்ல வலைபதியப்போறிங்க

//இன்னும் புரோகிராம் எல்லாம் புதுசாத் தான் எழுதுறீங்களா? இந்த google --- CTRL+C --- CTRL+V எல்லாம் பண்ணா போதாதா???

;)))))
//
ஹி ஹி கூகிள் ஆண்டவர் மட்டும் இல்லைனா எங்களுக்குலாம் வேலையே இல்லை...

//குழலி
புரட்டாசி புரோக்கிராமர்
எழுத கை துடிக்குதே..
எழுதிவிடலாமா ? //
அடடா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க...

said...

புரட்டு ப்ரோக்ராமர் ..;)

CTRL+C , CTRL+V , google- வச்சு ஒட்டிக்கினு பெரும்பேச்சு.. ம் ..

said...

இந்த ஜாவா பற்றி சொன்னதெல்லமே புரிஞ்சிரிச்சி. ஆனா, இத பொரட்சி விவகாரம்தான் புரியலைங்கோ. முடிவா உங்களை எப்டி கூப்டணும்னு சொல்லிடுங்கோ; அப்டிஅயே கூப்ட்றுவோம். சரியா?

said...

யோவ் குழலி,
முதல்ல புரட்சி புரோகிதர் -ன்னு வாசிச்சு தொலச்சுட்டேன்.

ஆமா! நானும் தான் புரோகிராமரா இருக்கேன் .ஆனா நீரு சொல்லுர எதுவும் புரியல ஓய்..அப்படி இருந்தும் இத்தனை நாள் குப்பை கொட்டியிருக்கேன் ..இத விட என்னையா புரட்சி வேண்டிக்கிடக்கு? பேசாம இந்த பட்டத்த எனக்கு குடுத்துடும் ..என்னது காப்பி ரைட் வாங்கிட்டீரா ? 'புரட்சி புராஜக் லீடர்' காலியாயா இருக்கான்னு கேட்டு சொல்லும்

said...

programmer aangila vaarththai. 'puratchi niralaalaru' idhu madhiri maathikonga.

adhukaaga mathavanga ellam puratchi panlennu solla kudadhu. ulagathile ellarum katantharaiyile, mannu tharayile ellam pambaram vitturukanga. yaaravadhu puratchi kalaignar madhiri thopulu mela pamparam vittrukangala?

said...

புரட்டாசி புரோக்கிராமர் இங்கே

said...

///////////////////
யோவ் குழலி,
முதல்ல புரட்சி புரோகிதர் -ன்னு வாசிச்சு தொலச்சுட்டேன்.
//////////////////

ஜோ நானும் தான்...
புரட்சி புரோகிதரா? இவரு யாரப்பத்தி எழுதியிருக்காருன்னு வந்து படிச்சு பாத்தாதான் தெரியுது. :-)

குழலி,
நான் கொஞ்சம் நாள் முன்னாடி ஒரு class எழுதினேன். அதிகமில்லை பிரதர் just பதினேழாயிரம் லைன் கோடு.(ஒரே ஒரு class including inner classes and excluding javadoc comments). அப்புறம் அதுல ஏதாவது debug குடுத்தா நம்ம கதி கந்தல்னு வேலையெ விட்டு அடுத்த கம்பெனிக்கு தாவிட்டேன்.( handover வாங்கினவன் இப்போ ஏர்வாடி பக்கம் சுத்திகிட்டு இருக்கிறதா காத்து வாக்குல சேதி வந்தது).
இப்படி நான் மட்டும் இல்ல. அனேகமா எல்லா ஜாவா பசங்களும் இப்படிதான் (இப்போ நான் ஒருத்தன் கிட்ட இருந்து handover வாங்கிட்டு அழுதுகிட்டு இருக்கேன் :-((( . ).

obfuscation எல்லாம் நம்ம ஜாவா வுக்கு தேவையில்ல :-)

அதுனால சும்மா இத வச்சு நீங்க புரட்சி பட்டம் வாங்குறத வன்மையாக கண்டிக்கிறேன் :-)

சரி இதுல ஒரு தொழில் ரகசியம் தெரியுமா. எவனும் handover வாங்க மாட்டான். அதுனால கம்பெனியும் உங்க கோட பாத்துகிரத்துக்காவது உங்கள நினச்சப்பல்லாம் தூக்க மாட்டாங்க :-)))) என்ன ஒரு சிக்கல் . jump அடிக்கும்போது கொஞ்சம் பிரச்சினையாகும்.

said...

//யோவ் குழலி,
முதல்ல புரட்சி புரோகிதர் -ன்னு வாசிச்சு தொலச்சுட்டேன்.
//
அப்படி போடு

//ஆமா! நானும் தான் புரோகிராமரா இருக்கேன் .ஆனா நீரு சொல்லுர எதுவும் புரியல ஓய்..அப்படி இருந்தும் இத்தனை நாள் குப்பை கொட்டியிருக்கேன் ..இத விட என்னையா புரட்சி வேண்டிக்கிடக்கு? பேசாம இந்த பட்டத்த எனக்கு குடுத்துடும் ..
//
அடடா இதுக்குமா போட்டி

//'புரட்சி புராஜக் லீடர்' காலியாயா இருக்கான்னு கேட்டு சொல்லும்
//
காலியாத்தான் இருக்கு சீக்கிரமா எடுத்துக்குங்க இல்லைனா வேற யாரும் காப்பிரைட் வாங்கிடப்போறாங்க

// முடிவா உங்களை எப்டி கூப்டணும்னு சொல்லிடுங்கோ; அப்டிஅயே கூப்ட்றுவோம். சரியா?
//
விடிய விடிய இராமாயணம் கேட்டுட்டு காலையில சீதைக்கு இராமன் யாருடானா சித்தப்பான்னு சொன்னானாம், அது மாதிரி கேட்கிறீங்களே...ஹி ஹி

//yaaravadhu puratchi kalaignar madhiri thopulu mela pamparam vittrukangala?
//
அடடா இது தெரியாம பாவம் தேசிகன் வேதாளம் மண்டை சுக்கு நூறா சிதறிடுச்சே, அது சரி நீங்க ஏன் அனானிமசா பினூட்டம் விட்டிருக்கீங்க உங்களுக்கும் ஏதேனும் பட்டம் கிடைச்சிடும்னு பயமா?

said...

அடடா இது தெரியாம பாவம் தேசிகன் வேதாளம் மண்டை சுக்கு நூறா சிதறிடுச்சே, அது சரி நீங்க ஏன் அனானிமசா பினூட்டம் விட்டிருக்கீங்க உங்களுக்கும் ஏதேனும் பட்டம் கிடைச்சிடும்னு பயமா?

puratchi pinnoottalar aagira muyarchidhan.

said...

//programmer aangila vaarththai. 'puratchi niralaalaru' idhu madhiri maathikonga.
//
எகனை மொகனையா இருக்கட்டுமேனுதான் வைத்தேன்.

//just பதினேழாயிரம் லைன் கோடு.(ஒரே ஒரு class including inner classes and excluding javadoc comments).
//
//handover வாங்கினவன் இப்போ ஏர்வாடி பக்கம் சுத்திகிட்டு இருக்கிறதா காத்து வாக்குல சேதி வந்தது
//
சோழநாடான் நீங்கதான் நெசமாவே புரட்சி புரோகிராமருங்கோ
//இப்போ நான் ஒருத்தன் கிட்ட இருந்து handover வாங்கிட்டு அழுதுகிட்டு இருக்கேன் :-(((
//
சரி அப்போ உங்களை சீக்கிரமா கீழ்பாக்கத்தில பார்க்கலாம், நம்ம பசங்க நிறையவே அங்க இருக்காங்களாமே?

said...

புரட்சி புரோக்கிராமரே !!
இந்த மாதிரியான உங்க பதிவ பாத்தா மிரட்சி தான் மிஞ்சுது.
ஒண்ணுமே விளங்கல.......

said...

///
சரி அப்போ உங்களை சீக்கிரமா கீழ்பாக்கத்தில பார்க்கலாம்////
anga java section la niranthara othukkeedu namakku undu ;-)

said...

Romba nalla irruku, enjoyed...

said...

ஐயா மாதிரி 'ங்கொய்யா'ன்னு பட்டம் கொடுத்திருக்கலாம். இல்லேன்னா இருக்கவே இருக்கு 'கணினிகுடிதாங்கி'. :)

said...

////புரட்சி புரோகிராமர் என்பதை நான் காப்பிரைட் செய்துவைத்துள்ளதால் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது, மீறுபவர்கள் மீது கி.மு.32000 இ.பி.கே நூத்திமுப்பத்திரெண்டரையாவது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.////

சூப்பர்...!!!! :)))))