புரட்சிப்பெண் குஷ்பு
குஷ்பு சமீபத்தில் "பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம்" என ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார், பொதுவாக புரட்சி பெண்கள் என்றும் பெண்ணியம் பேசுபவர்களும் கூறுபவர்கள் கற்பை பற்றி பேசும் போது அது என்ன கற்பு பெண்ணுக்கு மட்டும், ஆணுக்கில்லையா என்பார்கள்(என்பேன்), கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்பார்கள்(என்பேன்), தற்போது ஒரு படி மேலே போய் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம் என்கிறார் அது அவருடைய நிலை, அவருடைய கருத்து, அதில் தவறொன்றுமில்லை தான் அவர் விதிவிலக்காக(exceptional) இருப்பவர், அதை சகஜம் என்று கூறி பொதுமைபடுத்தியதால் தான் இத்தனை எதிர்ப்போ என்னவோ!!!
எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!
இத்தனை நாட்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டிய தமிழ்ரசிகர்களின் மீது எனக்கு ஒரு விதமான ஏளனமான பார்வை இருந்தது, ஆனால் இப்படிப்பட்ட ஒரு புரட்சிப்பெண்ணிற்கு தான் கோவில் கட்டினார்கள் என்பதற்கு என் தமிழ் ரசிகர்களை பார்த்து பெருமிதம் கொள்கின்றேன்.
39 பின்னூட்டங்கள்:
//குஷ்பு சமீபத்தில் "பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம்" என ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார்,//
அவர் கூறியதில் எதுவும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு எழுந்த எதிர்ப்புகள்தான் சிரிப்பை வரவழைக்கின்றன. 'பண்பாட்டுக் காவலர்கள்' இன்னும் வளரும் பருவத்தைத் தாண்டவில்லையென்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது இது போன்ற ஒவ்வொரு நிகழ்விலும்.
குஷ்பு, அதற்கு முன் தஸ்லீமா போன்றவர்களை சரி காண்கிறவர்கள் இரண்டு வகை.
1). தான் 'ஒரு முற்போக்குவாதி' என்று காட்டிக்கொள்ள முடிகிறது என்று என்று எண்ணுபவர்கள்
2). முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண்ணின் கருத்தை வைத்து 'இஸ்லாமிய நெறி'யை இகழ்ந்துரைக்க ஒரு வாய்ப்பு என்று சரி காண்கிறவர்கள்.
இரண்டாமவர்களின் 'அரசியல்' தெரிந்தது தான்,
ஆனால் இந்த 'முதலாமவர்கள்' தன்னளவிலோ, தன் குடும்பத்தினர் அளவிலோ தான் சரியென நம்புவதை செயல்படுத்த முன்வராத நிலையில் அவர்களுடைய 'நயவஞ்சகம்' தான் வெளிப்படுகிறது.
AM I RIGHT?
குஷ்புவை இசுலாமியர் என்ற தளத்தில் வைத்து பேசுவது தேவையில்லாத ஒன்று, நியாயமற்றதும் கூட, குஷ்பு விடயத்தில் மதம் எங்குமே வரவில்லை என்பது என் கருத்து
குழலி சொல்வது சரியே.
ஆனால் இந்த பி.ஜே.பிக்காரர்கள் 'தமிழுணர்வால்' தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல
குஸ்பு, கல்யானத்திற்க்கு முன் பலருடன்..... ஆதாரத்தை வைத்து மிரட்டப்பட்டிருக்கலாம். அவ்வாறு வெளிச்சமாகும் பட்சத்தில் அல்பம் அம்பலமாகிவிட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக சுயசரித்தை வெளியிட்டு விட்டார் போலும்.
மனதில் உள்ளதை சொல்லி விட்டார் எத்தனை பெண்கள் சுத்தமாக உள்ளனர் அவர் சொல்லிவிட்டார் .
குஷ்பு ஒரு நடிகை, தங்கர்பச்சானை திட்டினார் என்பதை எல்லாம் மறந்து விட்டு பார்த்தால் அவர் கருத்தில் ஆட்சேபிக்கதக்கதோ கோஷம் போட்டு கண்டிக்கத்தக்கதோ எதுவும் இல்லை. அவர் எல்லா பெண்களையும் போய் உடல் உறவில் ஈடுபடச்சொல்லவில்லை. ஒரு பெண் அப்படி விரும்பி உடலுறவு கொள்ளும் உரிமையும் சுதந்திரமும் உண்டு என்று தான் சொல்லி இருக்கிறார். சனநாயக நாட்டில் இந்தக்கருத்தை சொல்லக்கூட உரிமை இல்லையா? என்னைக் கேட்டால் கற்பு என்ற concept-ல் நம்பிக்கை இல்லை. அப்படியே இருந்தாலும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். வாரா வாரம் யாராவது ஒரு திரைப்பட நட்சத்திரத்தை பற்றியே சண்டை பிடித்து பெரும்பாலானோர் வலை பதிவது சலிப்பூட்டுகிறது. ஆக்கப்பூர்வமான விடயங்களை எழுதுங்களேன்
What she said was western culture.I think western culture is far better than hypocratic indian culture.
எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!
Anna ithu than nethiyyadi.(paavam sunder.C)
மத, மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டதாக இந்த நிகழ்வைப் பார்க்க வேண்டும். வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் குஷ்பூ. அவர் பேசியதில் தவறில்லை என்று எனக்குத் தோன்றுகின்றது.
குழலி,
//குஷ்பு சமீபத்தில் "பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம்" என ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார்//
சகஜம் என்று பட்டும் சொல்லியிருந்தால் ஒன்றும் பெரிய தவறில்லை ..நீங்கள் இந்தியா டுடே தமிழ் பதிப்பு படித்தீர்களா தெரியவில்லை.அதில் அவர் "படித்த ஆண்கள் யாரும் தனக்கு வரும் மனைவி திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டிருக்கக்கூடாது என்று எதிர்பார்க்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார் .இது தான் நெருடுகிறது ..இன்னும் இந்த நிலை நம் நாட்டில் வந்து விடவில்லை என நம்புகிறேன்.
"படித்த ஆண்கள் யாரும் தனக்கு வரும் மனைவி திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டிருக்கக்கூடாது என்று எதிர்பார்க்க மாட்டார்கள்"
- இதனை ,அப்படி எதிர்பார்க்க முடியாத நிலைக்கு பெண்கள் போய்விட்டார்கள் என்று கூட பொருள் கொள்ளலாம் .அது தான் எதிர்ப்புக்கு காரணம் .அது போக ,'பெரும்பாலும்' என்ற வார்த்தையை அவர் செர்த்திருந்தால் பொதுமை படுத்தலை தவிர்த்திருக்கலாம் .'யாரும்' என்று வரும் போது ஒட்டு மொத்தமாக ஒருவர் கூட பாக்கியில்லாமல் எல்லோரும் என்று பொருள் வருகிறது.
ராகவன் சார்? இது கண்டிக்கத்தக்கதில்லயா?
//நீங்கள் இந்தியா டுடே தமிழ் பதிப்பு படித்தீர்களா தெரியவில்லை
//
இல்லை ஜோ இன்னும் படிக்கவில்லை, தமிழ்முரசில் தான் படித்தேன்...
எனக்கு என்ன வருத்தமென்றால் செக்ஸிலிருந்து செருப்புவரை, ஓட்டு போடுவதிலிருந்து சொந்த பிரச்சினைகள் வரை நடிகை,நடிகர்களிடம் கருத்து கேட்கும் பத்திரிக்கைகளையும் பொது மக்களையும் என்ன சொல்வது...
// அதில் அவர் "படித்த ஆண்கள் யாரும் தனக்கு வரும் மனைவி திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டிருக்கக்கூடாது என்று எதிர்பார்க்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார் .இது தான் நெருடுகிறது ..இன்னும் இந்த நிலை நம் நாட்டில் வந்து விடவில்லை என நம்புகிறேன். //
ஜோ. நீங்கள் அப்படி விரும்புகிறது தெரிகிறது. நீங்கள் மட்டுமல்ல. பெரும்பாலானவர்கள் அப்படித்தார் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.
தனக்கு வருகின்றவளை வெறும் இறுக்கத்திற்காகவும் சிறு தொலிக்காவும் எதிர் பார்க்கின்றவனை என்ன சொல்வது?
கன்னித்தனமை என்பதும் கற்பு என்பதும் காயலாங்கடையில் போட வேண்டிய சரக்குகள்.
தனிமனித ஒழுக்கம் என்பது முதற்கண் யாருக்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே. நம்மைச் சார்ந்தவர்களை அன்போடு நேசிப்பதே!
//கன்னித்தனமை என்பதும் கற்பு என்பதும் காயலாங்கடையில் போட வேண்டிய சரக்குகள்.
தனிமனித ஒழுக்கம் என்பது முதற்கண் யாருக்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே. நம்மைச் சார்ந்தவர்களை அன்போடு நேசிப்பதே!//
முழுவதுமாக உடன்படுகிறேன்.அது பற்றி குஷ்பு சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நான் இல்லை.
//ஜோ. நீங்கள் அப்படி விரும்புகிறது தெரிகிறது. நீங்கள் மட்டுமல்ல. பெரும்பாலானவர்கள் அப்படித்தார் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.//
ராகவன் சார், நான் விரும்புவது எப்படி அவ்வளவு தெளிவாக தெரிகிறது உங்களுக்கு ? நான் என்னுடைய கருத்தை சொல்லவில்லையே. பெரும்பாலோர் அப்படி எதிர்பார்க்காத நிலை இன்னும் வரவில்லை எனத்தான் சொன்னேன்.
அதெல்லாம் இருக்கட்டும்.
//இதனை ,அப்படி எதிர்பார்க்க முடியாத நிலைக்கு பெண்கள் போய்விட்டார்கள் என்று கூட பொருள் கொள்ளலாம் .அது தான் எதிர்ப்புக்கு காரணம் .அது போக ,'பெரும்பாலும்' என்ற வார்த்தையை அவர் செர்த்திருந்தால் பொதுமை படுத்தலை தவிர்த்திருக்கலாம் .'யாரும்' என்று வரும் போது ஒட்டு மொத்தமாக ஒருவர் கூட பாக்கியில்லாமல் எல்லோரும் என்று பொருள் வருகிறது.
ராகவன் சார்? இது கண்டிக்கத்தக்கதில்லயா?//
இதற்கு உங்கள் பதில் என்னவோ ?திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளாத பெண்களே இல்லை என்கிறீர்களா? அப்படி உடலுறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்று சொல்ல குஷ்ப்புவுக்கு எந்த அளவு உரிமையுண்டோ ,அதே அளவு அது நல்ல பண்பல்ல ,கேவலமானது என்று நினைப்பதற்கும் பலருக்கு உரிமையுள்ளது .பலர் அதை கடைபிடித்துமிருக்கிறார்கள் .அவர்களையும் தன்னோடு சேர்ந்த முற்போக்குவாதிகள் என்ற நினைப்பில் குஷ்பு சொல்லும் போது ,அதை கேவலமாக நினைப்பவர்களுக்கு கோபம் வரக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும் ?
கோபம் வரலாம். அவர்களுக்கு இதை விமர்சிக்க உரிமையும் இருக்கிறது. ஆனால் குஷ்புவின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி, சினிமாக் கிசுகிசுக்களில் வந்தவற்றை வைத்து (அவை உண்மையோ பொய்யோ) தனிப்பட அப்பெண்ணைத் தாக்குவது எவ்வகையில் நியாயம். சிலர் மட்டுமே அந்தக்கூற்றின் பின்னாலுள்ள யதார்த்தத்தையும் நியாயத்தையும் பார்த்துக் கருத்துச் சொல்லினர்.
அக்கருத்து தவறென்று பட்டாலும்கூட (அப்படிப் படுபவர்களுக்கு) அதன்பின்னாலுள்ள நியாயத்தைப் புறம்தள்ள முடியாதென்பது உறைக்கவில்லையோ.
தங்கர் மன்னிப்புக் கேட்டதையையும் இதையும் எவ்வகையில் முடிச்சுப் போடுகிறீர்களென்பது தெரியவில்லை. இரண்டுமே வெவ்வேறு தளங்கள். தங்கரைக் கேள்விகேட்க குஷ்புவுக்கு உரிமை இருக்கிறது. இப்படிச் சொன்னதற்காக தங்கரைக் கேள்விகேட்க குஷ்புவுக்கு அருகதையில்லையென்பது வடிகட்டின .....தனம்.
குஷ்பு பொதுமைப்படுத்தியது பிடிக்காமலிருக்கலாம். அதுவொரு கோரிக்கை. அந்தத் தேவைக்கான வலியுறுத்தல் அவ்வளவுதான். அதற்காக அவர் சொன்ன கருத்தை வைத்துக் கருத்தாடுவீர்களா... அதைவிட்டுவிட்டு வேறெதைப்பற்றியோவெல்லாம் கதைத்துக் கொண்டு.....
குழலிக்கு,
குஷ்பு சொன்ன கருத்தைச்சொல்ல எந்த சமூக நிலையும் தேவையில்லை. எந்தப் பெண்ணுமோ ஆணுமோ இக்கருத்தைச் சொல்ல அருகதையுடையவர்கள். ஏனென்றால் இது முழுக்க முழுக்க சமூகம் சார்ந்த கருத்து. நடிகையிடம் கருத்துக் கேட்பது பற்றி உங்களுக்குச் சிக்கல்களிருக்கலாம். ஆனால் குறப்பிட்ட இந்தக் கருத்தைச் சொல்ல நடிகையோ அரசியல்வாதியோ, சாதாரண கூலித்தொழில் செய்யும் பெண்ணோ, ஆணோ என்று யார்வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஜோ, மன்னித்து விடுங்கள். நீங்கள் விரும்புவது என்று நான் சொன்னது பொதுவாகவே. விரைவாக மறுமொழி எழுதுகையில் ஏற்பட்ட பிழையாகக் கருதி மன்னிக்கவும்.
// முழுவதுமாக உடன்படுகிறேன்.அது பற்றி குஷ்பு சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நான் இல்லை. //
நிச்சயமாக. ஆனால் குஷ்பூ இதைப் பற்றிச் சொல்லக் கூடாது என்று சட்டமில்லையே. பத்திரிகையாளன் கேட்கையில் அவரது கருத்தைச் சொல்லியுள்ளார்.
//இதனை ,அப்படி எதிர்பார்க்க முடியாத நிலைக்கு பெண்கள் போய்விட்டார்கள் என்று கூட பொருள் கொள்ளலாம் .அது தான் எதிர்ப்புக்கு காரணம் .அது போக ,'பெரும்பாலும்' என்ற வார்த்தையை அவர் செர்த்திருந்தால் பொதுமை படுத்தலை தவிர்த்திருக்கலாம் .'யாரும்' என்று வரும் போது ஒட்டு மொத்தமாக ஒருவர் கூட பாக்கியில்லாமல் எல்லோரும் என்று பொருள் வருகிறது.
ராகவன் சார்? இது கண்டிக்கத்தக்கதில்லயா?//
ஜோ, போட்டி தமிழில் நடந்ததா இல்லை ஆங்கிலத்தில் நடந்ததா என்றே தெரியவில்லை. இவர் தமிழில் ஓரளவு நன்றாகப் பேசினாலும் நடுவில் வழக்கம் போல பேத்துவதும் உண்டு. அப்படி உளறினாரோ என்னவோ தெரியவில்லை.
மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அனைவரையும் பொதுவாகச் சொல்வது ஒவ்வாது என்பது உண்மைதான். ஆனால் இந்த வாய்ப்பை ஆணாதிக்கவாதிகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.
என்னிடம் இருப்பதெல்லாம் ஒரு கேள்விதான். குஷ்பூவின் பேச்சைத் தவறெனச் சொல்லும் அத்தனை ஆண்களும்......எத்தனை பெண்களை மனதால் உரித்துச் சிதைத்து மகிழ்ந்திருக்கின்றீர்கள். ஆனால் பெண்களுக்கு என்று வருகையில் பண்பாடும் கற்பும் நினைவிற்கு வந்து விடுகிறது. மனதால் கெடுவது பெரிதா? உடலால் கெடுவது பெரிதா?
மனதால் என்றால் இந்த உலகத்தில் ஒழுக்கமான ஆண்மகனே இல்லை. உடலால் என்றால்...தன்னுடைய மனத்தை மதிக்காத ஆணோடு பெண்கள் சேர்ந்து வாழ்வது இழிவிலும் இழிவு.
மேலும் எல்லாப் பெண்களும் அப்படித்தான் என்று குஷ்புவும் சொல்லவில்லை. ராகவனும் சொல்லவில்லையென்றுதான் எனக்குப் புரிகிறது.
//எல்லாப் பெண்களும் அப்படித்தான் என்று குஷ்புவும் சொல்லவில்லை
//
கொழுவி,
ஒரு இடைச்செருகல், தேவையில்லாமல் தங்கர் விடயத்தை இழுக்க எனக்கு மனசில்லை தான் இருந்தாலும் தங்கர் கூட எல்லா நடிகைகளும் என்று சொல்லவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன், அதற்காக அவர் சொன்னது சரியென நான் சொல்கிறேன் என யாராவது சிலம்பம் ஆட வந்துவிடப்போகிறார்களோ என பயமாக இருக்கின்றது எனக்கு :-(
நன்றி
//ஆனால் பெண்களுக்கு என்று வருகையில் பண்பாடும் கற்பும் நினைவிற்கு வந்து விடுகிறது.
//
இங்கு பேசும் யாரும் பெண்களுக்கு மட்டுமே கற்பு என்று பேசியதாக தெரியவில்லை... பிறகு நீங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் கற்பை பற்றி வலியுறுத்துவதாக புரிந்துகொள்கின்றீர்?
//மனதால் என்றால் இந்த உலகத்தில் ஒழுக்கமான ஆண்மகனே இல்லை.//
ரொம்ப சரி.
//உடலால் என்றால்...தன்னுடைய மனத்தை மதிக்காத ஆணோடு பெண்கள் சேர்ந்து வாழ்வது இழிவிலும் இழிவு.//
இது புரியவில்லை .மனத்தை மதிப்பது என்றால் எதை சொல்லுகிறீர்கள் ?.பாலுணர்வு எல்லோருக்கும் உள்ளது தான் .அந்த உணர்வினால் சில நேரம் மனம் ஈர்க்கப்படலாம்.இது ஒன்றும் மகா பாவமில்லை..அது உடல் சார்ந்த உணர்வு .எல்லோரும் உணர்வுகளை உடல்ரீதி உறவு மூலம் முடிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.அப்படிப் பட்ட ஆண்களில் பலர் உண்மையாகவே மனைவியை (மனத்தை) மதிப்பவர்களாக இருக்கலாம் .
பெண்களுக்கும் இந்த உணர்வுகள் இருக்கலாம் .அதனால் எல்லோரும் நினைப்பைத்தாண்டி உடல்ரீதியாக உறவு வைத்துக்க்கொள்வதில்லை .
ராகவன் சார்,
நாம் இருவரும் கிட்டத்தட்ட ஒத்த கருத்துக்களே கொண்டிருப்பதாக தோன்றுகிறது ..குஷ்புவின் பொதுமைப்படுத்தல் தான் எனக்கு நெருடுகிறது .
// இங்கு பேசும் யாரும் பெண்களுக்கு மட்டுமே கற்பு என்று பேசியதாக தெரியவில்லை... பிறகு நீங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் கற்பை பற்றி வலியுறுத்துவதாக புரிந்துகொள்கின்றீர்? //
குழலி, குஷ்பூவின் பேச்சை எதிர்க்கின்றவர்களின் முக்கிய ஆயுதமே கற்பு மானம் போன்றவைதான் என்பதற்காகச் சொன்னேன்.
// ஆனால் குஷ்புவின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி, சினிமாக் கிசுகிசுக்களில் வந்தவற்றை வைத்து (அவை உண்மையோ பொய்யோ) தனிப்பட அப்பெண்ணைத் தாக்குவது எவ்வகையில் நியாயம். //
கொழுவி, இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இதைத்தான் தவறு என்கிறேன். ஒரு பெண்ணைத் தாக்குவது எவ்வளவு எளிதாகிப் போகிறது பாருங்கள்.
// பெண்களுக்கும் இந்த உணர்வுகள் இருக்கலாம் .அதனால் எல்லோரும் நினைப்பைத்தாண்டி உடல்ரீதியாக உறவு வைத்துக்க்கொள்வதில்லை . //
உண்மைதான் ஜோ. அந்த அளவிற்கு அவர்கள் அடிமைப்பட்டு அதிலேயே ஊறி அது மட்டுமே சரியென்ற நிலையில் இருக்கின்றார்க்கள்.
குஷ்பூ வெளிப்படையாகப் பேசியிருக்கின்றார். அவ்வளவே. உடனே ஆணாதிக்கவாதிகள் கிளம்பி விட்டார்கள்.
நீங்கள் சொல்வது போல, நாமிருவரும் ஒரே கருத்தைத்தான் சொல்கிறோம் என நினைக்கிறேன்.
அதெப்படிங்க அது !
தங்கர் ஒரு குறிப்பிட்ட கூட்டம் (நடிகை) பற்றி பேசும்போது நமக்கெல்லாம் பொத்துக்கொண்டு வருகிறது..
அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூச்சலிட தோன்றுகிறது .. மன்னிப்பு கேட்க வேண்டுமென அலறுகிறோம்.. ஆனால் குஷ்பு.. ஒட்டு மொத்த பெண் சமுதாயத்தை பற்றி ஒரு கேவலமான கருத்து சொல்லிய போதும்
அது அவர் கருத்து, அதிலொன்றும் தவறில்லை.. மனதை திறந்து பேசிகிறார்.. கோஷம் போட எதுவுமில்லை.. என்று சொல்கிறோம்..??
என்னவென்று புரியவில்லை..!!
டிஸ்கெளய்மர்: தங்கர் பேசியது தவறு என்று சொன்னவன் நான், அப்போது தையா தக்கா என்று குதித்த குஷ்புவின் வாயிலிருந்து உதித்த முத்தான கருத்தினையும் எதிர்க்கிறேன்..
கருத்து சுதந்திரம், தனிமனித விருப்பம் என்றெல்லாம் சொல்லும் நல்ல உள்ளங்களே..
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதால் .. ஒருவர் உங்களிடம் வந்து..
எனக்கு ஆசையாக இருக்கிறது .. நீங்க கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க... அப்படி வருவாங்கனு நெனைக்கிறேன்.. வருவாங்கனு கேள்விப்படேன்... ஒரு நாள் போதும்... ஒரு 3 மனி நேரம்...
இப்படி சொன்னா?? அவன் கருத்து சுதந்திரம் அது என்று இருப்பீங்களா??
////அதெப்படிங்க அது !
தங்கர் ஒரு குறிப்பிட்ட கூட்டம் (நடிகை) பற்றி பேசும்போது நமக்கெல்லாம் பொத்துக்கொண்டு வருகிறது..அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூச்சலிட தோன்றுகிறது .. மன்னிப்பு கேட்க வேண்டுமென அலறுகிறோம்.. ஆனால் குஷ்பு.. ஒட்டு மொத்த பெண் சமுதாயத்தை பற்றி ஒரு கேவலமான கருத்து சொல்லிய போதும் அது அவர் கருத்து, அதிலொன்றும் தவறில்லை.. மனதை திறந்து பேசிகிறார்.. கோஷம் போட எதுவுமில்லை.. என்று சொல்கிறோம்..??
என்னவென்று புரியவில்லை..!!///
வீ எம் சொன்ன இதை விட இதற்கு எனது பதிலை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை.
'இப்போது எங்கே போனார்கள் அம்மாக்களை இழுத்தவர்கள்' என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறேன்!
ஒருவேளை.... வேண்டாம்! கலிகாலம்டா சாமி!
எம்.கே.
கொமாரு உனக்கு நேரம் சரியில்ல... அம்புட்டுதான் சொல்லிட்டேன்
தங்கர் தவறு செய்திருந்தால் வழக்கு போட்டிருக்க வேண்டும். கட்ட பஞ்சாயத்து
செய்திருக்கக் கூடாது என்று சொன்ன ஜனநாயகவாதிகள் குஷ்புவின் மேல் வழக்கு
போடாமல் மகளிர் அணியை அனுப்பி மன்னிப்பு கேள் என்றூ கோஷம் போடச்
சொன்னது ஏன்? குஷ்பு மீது 'libel' வழக்கு தொடர்ந்திருக்கலாமே!
குஷ்பு பேட்டி கொடுத்ததற்கு விஜயகாந்த் ஏன் பதவி
விலக வேண்டும்?
எல்லாம் அரசியலய்யா அரசியல்!
பெண்கள் குறித்து ஆண்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை! கவலை!!பொறுப்பு!!!
படுப்பதை பற்றி குஷ்பு எப்படிக் கதைக்கலாம்? சானியா மிர்ஸாவின் பாவாடை எவ்வளவு மில்லிமீற்றர் கூட இருக்க வேண்டும்? என்று இந்த ஆண்களுக்கு தலை நிறையப் பிரச்சினைகள்.
ஆண் தனது அதிகாரத்தை தக்க வைக்கவும், பெண்ணை உடமையாய், அடிமையாய், தாசியாய் காலந்தோறும் வைத்திருக்கவும் கட்டியமைத்துள்ள கற்பிதம் நொருங்கிக்கொண்டு போவதைப் பார்த்து குலை நடுங்குகிறார்கள். தமது வழமையான தற்பாதுகாப்பு ஆயுதங்களான கற்பு, கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு தம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
துடித்துப் பதைத்து தங்கள் ஆண்குறிக்கு ஒளிவட்டம் போடும் இந்த ஆண்களைப் பார்த்து ஆத்திரப்படலாமா? ஆணியம் உடைத்து நொருக்கப்படுவதால் பயந்து நடுங்கி மூத்திரம் போகும் இந்த ஆண்களைப் பார்த்து கை தட்டிச் சிரிக்கலாமா?
- பொறுக்கி
karuannidhithan thamizarkalin pirathinidhinu maruthuvar solraarungo. idhu unga karpu logicle idikkaliya?
Kushboo has said her opinion.
Before looking whether its right or wrong, the way PMK and DalitPanthers respond are cowardly.
"சோழர்காலத்தில இருந்த மாதிரியா இன்னிக்கும் நம்ம பெண்கள் இருக்காங்க ? தமிழ் பெண்கள் கண்ணகி மாதிரி இரூந்தா நம்ம ஊர்ல தண்ணியேன் இல்லாம போவுது ? பெய்யென பெய்யணுமே ??"
அப்படீங்கறீங்க? ஆண்கள் மட்டும் கேவலனாக (இது எழுத்துப்பிழை அல்ல) சோழர்கள் காலத்திலிருந்தே இருக்கலாம். பெண்கள் மட்டும் அப்படியே இருக்கணும். அதுதானே ஆண்களுக்கு சௌகரியம்.
புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது கருத்தை பின்வரும் வலைப்பதிவில் பதித்துள்ளேன் "
http://kurumban.blogspot.com/2005/11/blog-post.html "
இந்திய ஜனநாயகத்தின் முக்கியத்தூண்களில் ஒன்றான ஊடகத் துறை மக்கள் விரோதமானது என்பது வெளிப்படையாத் தெரிந்த செய்தி. பாதிக்கப்பட்டவர்களின் கடைசிப்புகலிடமான நீதித்துறையும் நியாயமற்ற கூறுகளைத் தன்னிடத்தே கணிசமான அளவில் கொண்டிருக்கிறது என்பதும் அவ்வப்போது வெளிப்படுவதுண்டு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு ‘தடா’ போன்ற அடக்குமுறைச் சட்டங்களை இயற்றுவதில் உள்ள ஆர்வம், வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டதும் குஷ்புவை நீதிமன்றத்துக்கு வருமாறு ஒரு நீதிபதி ஆணையிட ஏதுவாக அமைந்ததுமான சட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் இருந்ததில்லை.
நீதிமன்றத்துக்குச் சென்று விளக்கம் தரவேண்டிய அளவுக்குக் குஷ்பு செய்த குற்றம்தான் என்ன?
நீதி நிலைக்கவேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அண்டை மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது, குஜராத் கலவர வழக்கு வேறு இடத்துக்குச் சென்றுள்ளது, சங்கராச்சாரியார்களின் வழக்குகளையும் அண்டை மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எனக்கென்னவோ இந்தியாவில் உள்ள எல்லா வழக்குகளையும் வேறு நாட்டுக்கே மாற்றிவிட்டால் நல்லது போலத் தோன்றுகிறது. அப்போதாவது ஒருவேளை சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கலாம்.
குஷ்பு எதிர்ப்பாளர்களைவிடச் சீர்திருத்தப்படாத சட்ட அமைப்பு ஜனநாயகத்துக்கு அதிக ஆபத்தானது.
****
மக்கள் உரிமையின் ஒட்டுமொத்த குத்தகையாளராகத் தன்னைக் கருதிக்கொண்டு நிருபமா ‘இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரையைப் படித்தால் அவரையும் அவரைப்போன்றவர்களையும் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை.
மனித உரிமைகள் அவர் வகுக்கும் எல்லைக்குள் அடங்கிவிடுவதில்லை. ஒரு நாடு என்னும் அமைப்பிலிருந்து விலகித் தனியாகப் பிரிய விரும்புவதும் அவர் கூறும் அதே மனித உரிமையைச் சேர்ந்ததுதான் என்பதை அவரும் அவர் சார்ந்த ‘இந்து’ இதழும் ஏன் உணர்வதில்லை? தனிநாடும் கோரும் ஈழத்தமிழர்களை ஏன் இவர்கள் மூர்க்கத்தனமாக எதிர்க்கிறார்கள்?
சிலருக்குக் ‘கற்பு’ சுதந்திரத்தின் எல்லையா இருந்தால் வேறு சிலருக்கு ‘மொழி’ எல்லையாக இருக்கிறது. இந்த எல்லைகளை உரசிப்பார்க்கும் உரிமைகள் மற்றவர்களுக்கு இல்லை என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களை எதிர்க்கும் நிருபமா போன்ற பலரோ ‘நாடு’ என்பதைத் தங்கள் எல்லையாக வைத்துக்கொண்டிருப்பதை உணவர்வதில்லை.
‘மொழி என்பது வெறும் தகவல் தொடர்புச் சாதனம்தான் அதற்குமேல் அதில் என்ன இருக்கிறது?’ என்று பரந்த மனதுடையவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒருவரிடம் ‘நாடு என்பது மக்கள் வாழ்வதற்குரிய இடம் மட்டும்தான் இதில் யார் எங்கிருந்தால் என்ன? விருப்பமில்லாதவர்கள் பிரிந்து செல்லட்டுமே’ என்று எதிர்க்கேள்வி கேட்டால் அப்போது தெரியும் அவரது மனதின் பரப்பு எவ்வளவு சுருங்கியதென்று.
கற்பைக் காக்ககாகவும் மொழியைக் காக்ககவும் கொலைகள் நடப்பதில்லை. ஆனால் நாட்டைக்காப்பதற்காக அரசின் முழு ஆதரவோடு நடக்கும் கொலைகள் அளவற்றவை. எனவே மக்கள் உரிமையின் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் எதிர்க்க வேண்டியது கற்பின் காவலர்களையோ மொழியின் காவலர்களையோ அல்ல. தேசக்காவலர்களை!
Post a Comment