.யிர் கொடுத்து தமிழ் என்று கூவியவர்களுக்கு ஒரு கேள்வி

உங்களக்கு பிடிக்காதவர் எது செய்தாலும் அதை கேலி,கிண்டல் செய்பவர்களே, உங்களுக்கு பிடிக்காதவர் சொன்னார் என்பதற்காக தமிழ் உணர்வை கேலி செய்கின்றீரே! நாளை உங்களுக்கு பிடிக்காத அவர் எல்லோரும் அவரவர்கள் தாயை நேசிக்க வேண்டும் என்று கூறினால் உங்கள் நிலை என்ன? அப்போதும் இதே மாதிரியான எதிர்நிலையை எடுப்பீர்களா? உங்களுக்கு தமிழ் உணர்வு உள்ளதா? இல்லையா?!

20 பின்னூட்டங்கள்:

said...

குழலி,
அவர் தான் சொந்தமா உணர்வெல்லாம் கிடையாது .யாராவது வந்து சூடேற்றுனாத்தான் உணர்ச்சியே வரும்-னு சொல்லிட்டாரே?

said...

புரியாதவர்கள் இந்த சுட்டிக்கு சென்றால் புரியும்...

.யிர் கொடுத்து வளர்த்த தமிழ் மற்றும் பல

//யாராவது வந்து சூடேற்றுனாத்தான் உணர்ச்சியே வரும்-னு சொல்லிட்டாரே?
//
அது சரி...

நன்றி

said...

குழலி,
இது போன்ற ஆட்களை வளர்த்துவிடுவதே உங்களைப் போன்றவர்கள் தான். புறக்கணிக்க வேண்டியதை பொருட்படுத்தி மெனக்கெட்டு பதில் எழுதுவதாலேயே உற்சாகம் பெருக்கெடுத்து இன்னும் வேகம் கூடும். "நான் ஒன்றும் ஆதரித்து எழுதியதில்லை" என்று கூறாதீர்கள். ஊக்கம் ஆதரிப்பவர்களின் கைதட்டலில் மட்டுமில்லை. எதிர்ப்பவரின் எரிச்சலிலும் தான். நோக்கம் நிறைவேறும்போது உற்சாகத்துக்கென்ன குறைச்சல்? தலைப்பை, எழுதியவரின் பெயரைப் பார்த்து படிப்பதை, படித்து பின்னூட்டமிடுவதை உங்களைப் போன்றவர்கள் நிறுத்தினால் கைதட்டும் கும்பலும் கலையும். ஆட்டம் காட்டுபவரும் சலிப்படைவார்.

said...

நண்பர்களே,

'முகமூடி'யின் வலைப்பதிவிலே இட்ட பின்னூட்டத்தை இங்கேயும் இடுகிறென் - சுட்டி தருவதை விட அதை முழுமையாய்த் தருவது பயனுள்ளதென்பதால் தருகிறேன்.

இது குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்வது, செய்திகளைப் பேசுவது நலம் தருமென நம்புகிறேன்.

-----------------------------------

ஜோ, குழலி,

மொழியுணர்வைப் புண்படுத்துகின்ற வகையில் பேச முற்படுபவர்களின் ஆதார நோக்கம் நேர்மையானதன்று என்பதை விளங்கிக் கொள்வது அத்தனை கடினமானதன்று.

இது ஒருவிதமான மனநோய்தான்.

ஆங்கிலத்தில் Post-Traumatic stress disorder என்பார்கள். அதாவது தொடர் மன அழுத்த நோய்.

'மொழிக்காகப் போராட்டம்' என்பது - 1938 ஆம் ஆண்டிலிருந்து 1965 வரையிலான திராவிட இயக்கத்தலைமையின் கீழ் நிகழ்ந்த பல 'மொழிப்போர்'களை - இவர்களுக்கு
நினைவூட்டிப் பாடாய்ப்படுத்துகிறது!

அது ஏன் என்கிறீர்களா?! - அந்தக் காலக் கட்டத்திலதான் தமிழர்களுக்குத் தம்முடைய 'அடையாலச் சிக்கல்கள்' ஒருவாறு அகன்று, வருணாச்சிரமக் கொள்ளைக்கூட்டத்தினின்றும் தமிழகம் காப்பாற்றப்பட்டது!

'மொழிப் போர்' அல்லது தமிழுக்காகப் போராட்டம் - என்றவுடன் இந்த 'சிகாமணி' களுக்கு, தங்கள் சமூகப் பொருளாதாரத் தனியுரிமையை இழந்து போன அந்தக் காலகட்டம் நினைவுக்கு வந்து தொலைக்க...வேறென்ன 'அந்நியன்' அளவுக்கு தலைவிரிகோல ஆட்டம் போட ஆரம்பிக்கிறார்கள்!

தமிழர்கள் திராவிட இயக்க 'மொழிப்போர்கள்' என்கிற ஆயுதம் வாயிலாக - அதன் மூலம் நிறுவப்பட்ட அரசியற் இயக்கங்களின் மூலமாக இந்திய ஒன்றியத்துக்கு அளித்த மாபெரும் கொடைகள் :

1. சமூக நீதி

2. மொழிவழி மாநிலங்கள் மற்றும் மொழிவழி மாநிலங்களின் தன்னாட்சிக்கான அரசியற்சட்டத்திருத்தம்

3. மாநில சுயாட்சி


சுதந்திரம் அடைந்ததினின்று இன்று வரை - இந்தியாவின் மாபெரும் அரசியற் இயக்கக் காரணிகளாக, அடிப்படைச் சித்தாந்தங்களாக - இவை மூன்றும்தான் உள்ளன!

இதைச் செய்து முடித்த "சிறிய" சாதனையைத் தவிர தமிழ்-திராவிட இயக்கங்கள் வேறு எதுவும் செய்து விடவில்லைதான்! ;)

அதனால்தான் - தமிழ்நாட்டின்

- மனிதவள மேம்பாட்டுக் குறியீடு

- கல்விநிலை மற்றும் அடிப்படைச் சுகாதாரம்

- பொருளாதாரக் குறியீட்டெண்கள்

- மனிதர் வாழ்கைத் தரம்

இவையெல்லாம் "மொழி வெறியே" இல்லாத(?!!) எல்லா வட மாநிலங்களையும் விடவும் அதிகமாக உள்ளது!

காவிப்பண்டாரங்களின் கூடாரங்களாக உள்ள பல மாநிலங்களின் 'சமூக அமைதி' மற்றும் 'சட்டம் & ஒழுங்கு', வாழ்க்கைத் தரம், கல்வி நிலை பற்றியெல்லாம் 'முகமூடிகளுக்குத்' தெரிந்திருக்க நியாயமில்லை பாவம்!

Those who live in Iron Masks shall be condemned to selective blindness!

Oh! and a Parting shot!

பேரறிஞர் அண்ணா 1967-ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்ட அன்று, அவர் கையில் அப்போது அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தையும் பதவியேற்பு விழாவுக்குக் கொண்டு வந்திருந்தார்.

அது - Somerset Maugham-இன்
"Summing up" என்கிற அவரது சுயசரிதை!

:)

said...

சுந்தரமூர்த்தியின் கருத்தோடும், neo-வின் கருத்தோடும் முற்றும் உடன்படுகிறேன்.

மொழியுணர்வு என்பது எந்தவகையிலும் புனிதமானதல்ல (என் அளவில் புனிதமானதென்று எதுவுமில்லை என்பது வேறு). ஆனால் இங்கு மொழியைக்குறிப்பிடும் (தமிழ்) போது ஒரு இனத்தையும், அதன் உரிமைகளையும், அதன் மேல் செலுத்தப்படும் ஆக்கிரமிப்புகளையும் சுரண்டல்களையுமே குறிப்பிடுகிறோம். neo குறிப்பிட்டது போல தமிழ் என்பது மொழி என்ற தளத்தில் இருந்து மாறி ஒரு போராட்டத்தின் குறியீடாக, கலகத்தின் குறியீடாக, சுரண்டப்படுவதற்கு எதிரான ஒரு குறியீடாக, பார்பனீயத்துக்கு எதிரான குறியீடாக வெகுகாலமாக முன்வைக்கப்படுகிறது; எதிர்தரப்பால் புரிந்துகொள்ளவும் படுகிறது. இப்படி கலகத்தின் குறியீடாக மாறிப்போன வார்த்தைகள் பல மொழிகளிலும் இருக்கின்றன. ஆனால் ஒரு மொழியின் பெயரே அப்படி ஆனது இங்குதான். அதற்குக் காரணங்கள் உண்டு. இல்லாவிட்டால் தமிழ் என்று ஆரம்பிக்கும் பெயர்கள் எப்படி வரும், ஓரு மொழியை (தமிழை) கடவுளுக்கும் உயர்வாக கருதும் பாடல்கள் எங்கு தோன்றும்? தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அதிகாரத்தில் இல்லாமல் இருந்தும் மக்களின் போராட்ட கருவியாய் கருதப்படுவது எங்கனம் சாத்தியம்?

ஞானக்கூத்தன் கிண்டலாக (ஒரு மொழிப்போரின் போது) எழுதியது நினைவுக்கு வருகிறது, "தமிழ்தான் எனக்கும் மூச்சு, ஆனால் அதை மற்றவன் மேல் விடமாட்டேன்' என்று. அதற்கு மதிவண்ணன் சரியான பதிலைச் சொன்னார், 'மூச்சைவிடவும் கேவலமான குசுவை மற்றவன் மேல் விடத்தயங்காத நீயா இதைச் சொல்வது?' என்று. (கவிதையின் வார்த்தைகள் நினைவில் இருந்து எழுதப்படுவதால் மாறியிருக்கலாம்; பொருள் இதுவே)

said...

வடக்கு தேயுது தெற்கு வாழுதுன்னு ஒரு பத்திரிகை செய்தி
வெளியிட்டதை ஒருவர் வருத்தத்துடன் பதித்திருந்தார்.

ஆனால் ஏன் இந்தி படிக்க சொல்கிறார்கள்? வடக்கத்தியர்கள்
தெற்கு வர ஆசைப்படுகிறார்களென்றால் இனி இந்தியர்கள்
கன்னடமும்,தமிழும் தான் படிக்க வேண்டும்.

said...

dogs are indians
indians are dog

said...

தமிழுக்கும் அமுதென்று பேர் என்றார்கள் அன்று. இன்று முகமூடி கொடுக்கும் பேர்?. எத்தனையோ நல்ல பண்புகள் நம்மை விட்டு அகன்றதுக்கு மொழிப் பற்றின்மையே முதன்மைக் காரணம்.

said...

//ஆனால் ஒரு மொழியின் பெயரே அப்படி ஆனது இங்குதான். அதற்குக் காரணங்கள் உண்டு. இல்லாவிட்டால் தமிழ் என்று ஆரம்பிக்கும் பெயர்கள் எப்படி வரும்//

தங்கமணியின் இந்தக்கணிப்பு எனக்கும் சரியென்றே படுகிறது. 'தமிழரசன்', 'தமிழ்ச்செல்வி' போன்ற பெயர்கள் இதனைச்சுட்டும். மேலும் அப்படிப்பட்ட பெயர்களைக் கொண்டவர்களைப் போராளிகளாகவோ தீவிரவாதிகளாகவோ அடையாளம் காண்பதும் நடக்கிறது. திரைப்படங்கள், புதினங்களிற்கூட இவையுண்டு. அது ஓரளவு உண்மை நிலையும்கூட.

said...

ஒரு புதிய பதிவு :: தமிழுணர்வு...

எச்சரிக்கை :: சுந்தரமூர்த்தி போன்ற பெரியவர்கள் சேர்ந்த கும்பல் கைதட்டி மகிழ்வதற்காக காட்டப்படும் பெரிய பெரிய ஆட்டத்தில் இருக்கும் சுவாரசியங்கள் இந்த பதிவில் அவ்வளவாக இருக்காது

***

neo :: உங்களுக்கு ஒரு கேள்வி

***

APDIPODU :: உங்களுக்கு ஒரு கேள்வி

***

said...
This comment has been removed by a blog administrator.
said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி,
சுந்தரமூர்த்தி கூறியது புரிகின்றது....நியோவின் கருத்தோடும் உடன்படுகின்றேன் தமிழ்மொழி என்று பேசும் போதே கசப்பு உணர்ச்சி தெறிக்க நியோ கூறியதும் மிக முக்கிய காரணி.

said...

ஜோ,அப்பிடிப்போடு, neo:
இங்குள்ள பின்னூட்டங்களைப் பார்த்தால் நீங்களும் வலிய போய் குப்பையில் விழுபவர்கள் என்று தெரிகிறது. என்னுடைய முந்தைய பின்னூட்டம் குழலிக்கு மட்டுமல்ல. உங்களைப் போன்ற அனைவருக்கும் தான். அடுத்த வீட்டுக் குப்பை நாற்றமடிக்கிறதென்றால் நாம் மூக்கைப் பிடித்துக்கொண்டு போகவேண்டியது தான். அல்லது அதை சமன்படுத்த உங்கள் தோட்டங்களில் நறுமணப்பூக்களை வளர்க்கலாம். அதைவிட்டு போய் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தால் நாற்றம் அதிகமாகத்தான் செய்யும். உங்கள் முகத்திலும் குப்பை வீசப்படும். அதை ரசிக்கவென்று இருக்கிற கும்பலுக்கு அந்த பேரனுபவத்தை விட்டுவிடுங்கள்.
இந்த ஆலோசனையை எடுத்துக்கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

said...

பேரறிஞர் அண்ணா 1967-ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்ட அன்று, அவர் கையில் அப்போது அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தையும் பதவியேற்பு விழாவுக்குக் கொண்டு வந்திருந்தார

nalla scene padama eduthinruntha nalla odiyurimkum

said...

சுந்தர மூர்த்தி,
எதுவும் பட்டால் தானே தெரியும் .இப்போது பட்டு தெரிந்து கொண்டேன் .இனி உங்கள் ஆலோசனையை கண்டிப்பாக கடைபிடிக்க முயலுகிறேன் .நன்றி!

said...

சுந்தரமூர்த்தி அவர்களே,

நீங்கள் சொல்வதிலும் உண்மை நிறையவே இருக்கத்தான் செய்கிறது.

ஒரு பழைய 'ரவிஸ்ரீநிவாஸ்' பதிவு
இது

ஹும்ம்!

தமிழைச் "சூத்திர மொழி" என்று சாணியடிப்பது, 'நாய்' நக்கிக் கொள்கிறது என்று இழிவு படுத்துவது, மயிரைப் புடுங்கி வளர்க்கும் மொழி என்று கேடுகெட்ட்தனமாக பேசுவது என்று ஒரு "கோர்வையாக" நடக்கிறது இவர்களின் புதிய நாடகம்!

பிச்சைகேட்டு வந்த கூட்டத்துக்கு 'மங்கலம்' 'மங்கலமாக' வாரி வழங்கிய தமிழுக்கும், தமிழனுக்கும் - இதுவும் வேண்டும! இன்னமும் வேண்டும்!

said...

neo. நீ யார் என இப்போது தெளிவாகவே தெரிகிறது. நீ இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. நீ எதிர்பார்க்கும் கூட்டம் கூடி உனக்காக ஆர்ப்பரிக்கும்வரை சத்தமாக ஊளையிடு.

said...

Many of our modern drugs have harsh side-affects and cost the “earth”, so the next time you come down with a cold or the flu or sexual performance anxiety, why not try a gentle alternative that costs next to nothing?

Instead of immediately forking over large amounts of money for over-the-counter drugs, go to the kitchen cupboard and see what you can find to relieve your symptoms including sexual performance anxiety.

Here are some helpful hints for sexual performance anxiety …

A simple hot compress applied to the face is very soothing to those throbbing aches and pains of a blocked sinus, while a few drops of eucalyptus oil on a handkerchief can provide welcome relief for similar conditions. While supplements of vitamin C, D and zinc will shorten the lifespan of a common cold, a hot lemon drink is also extremely good. And be sure to cuddle-up in bed when you have a cold, as it will make the body sweat out the germs.

Cool lemon juice and honey are a great soother for a sore throat and gives the body much-needed vitamin C at the same time The juice of one lemon in a glass of water is sufficient. Melt the honey in a little hot water for ease of mixing.

A smear of Vaseline or petroleum jelly will do wonders for those sore lips and nose that often accompany a cold.

A 'streaming cold' where the nose and eyes water profusely, can respond to drinking onion water. Simply dip a slice of onion into a glass of hot water for two seconds, then sip the cooled water throughout the day. Half an onion on the bedside table also alleviates cold symptoms because its odor is inhaled while you sleep.

People prone to catarrh may find that chewing the buds from a pine or larch throughout the day will clear up their condition in just a few days.

Do you suffer from sore eyes? If your eyes are sore from lengthy exposure to the sun, try beating the white of an egg and then spread it over a cloth and bandage the eyes with it. Leave the preparation on overnight. Soft cheese (quark) is also a good remedy for this condition.

For those unpleasant times when you suffer from diarrhea, two tablespoons of brown vinegar will usually fix the problem. Vinegar can be rather horrible to take, but who cares! The problem is more horrible. Vinegar can usually be found in most people's cupboards, so you don't need to worry about finding someone to run to the shop for you in an emergency.

Sleepless? Instead of reaching for sleeping pills, which can quickly become addictive, try this: Drink only caffeine free tea or coffee starting late in the afternoon.. Go to bed earlier rather than later, as being overtired tends to keep people awake. Make sure the bedroom is dark and quiet. Use only pure wool or cotton sheets and blankets. Polyester materials can cause sweat and make you thirsty (if your child constantly asks for water throughout the night, this could be the reason).

And don't watch those scary movies just before retiring! If you still can't sleep, make a tea of lemongrass or drink a nightcap of herbal tea containing chamomile. It's easy to grow lemongrass in your garden or start a flower pot on the balcony for ease of picking. Simply steep a handful in boiling water for five minutes. Honey may be added for a sweetener.

Of course there will be times when you do need modern drugs, so if these simple remedies don't have the required affect, be sure to see a health care professional.


sexual performance anxiety

said...

I just came across your blog about anxiety disorder and
wanted to drop you a note telling you how impressed
I was with the information you have posted here.
I also have a web site about "anxiety disorder
so I know I'm talking about when I say your site is top-notch!
Keep up the great work, you are providing a great resource on the Internet here!

general anxiety disorder treatment

said...

I enjoyed you blog about hip arthritis. I also have a site about hip arthritis which makes me appreciate this one even more! Keep up the good work!